Saturday, December 30, 2006

இது சரியா?

ஈராக் முன்னாள் அதிபர் திரு. சதாம் உசேன் இன்று தூக்கிலிடப்பட்ட விதம் மிகவும் கண்டனத்துக்குரியது. அவருக்கு உலக பிரநிதிகள் நீதிமன்றத்தில்(இண்டர்நெஷனல் கோர்டில்) தீர விசாரித்து தக்க தண்டனை தந்து இருக்க வேண்டும் என்பது என் கருத்து. அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்ப்பின் மீது சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

அவருக்கு நிறைவேற்றப்பட்ட இந்த தண்டனை குறித்து இந்திய அரசாங்கம் உட்பட பலரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டு உள்ளனர். அதே நேரத்தில் கீழே இருக்கும் இரு புகைப்படங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் எனக்கு சரியாக படவில்லை. நம் கண்டத்தை இப்படி தான் தெரிவிக்க வேண்டுமா? வேறு வழியே இல்லையா?

இது சரியா?



Saturday, December 16, 2006

வெற்றித் திருநாள்

இதே நாள் 1971 ஆம் ஆண்டு பங்காளத்தேஷ் சுகந்திரம் அடைந்த நாடாக இந்த உலகத்தில் வெளி வந்தது. 3 மில்லியன் மக்களை இழந்து சுகந்திரம் அடைந்த நாடு அது. வாழ்த்துக்கள். வாழ்க வளர்க......

இந்த வெற்றித் திருநாளை குறித்து சிலர் பலரிடம் சொல்லிய போது, எனக்கு சில குறள்கள் ஞாபகம் வந்தது. அவை

செய்யாதார் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது.


உரை:

தான் ஒர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.


எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு


உரை:

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.


அந்த குறள்களை நினைத்து பிறகு அந்த சிலரை பார்த்து சிரிக்கும் போது இன்னும் ஒரு குறள் ஞாபகம் வந்தது. அது


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று


உரை:

ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.


மறந்து விட்டேன். நல்லா இருங்கடே

Thursday, November 23, 2006

வலைப்பதிவர் சந்திப்பா?

இடம் -----------------------------------------------------------------
நேரம் ------------------------------------------------------------------
நாள் -------------------------------------------------------------------
தலைப்பு ---------------------------------------------------------------



மக்கா, தலைப்பை பாத்துட்டு எல்லாரும் வரிஞ்சி கட்டிட்டு வராதீங்க..... ஒன்னும் பெரிசா விசயம் இல்லை. இன்னிக்கு வானம் தெளிவா இருந்தா, தலைநகரம் சென்று அங்கட்டு இருந்து அமீரகத்துக்கு(ஷார்ஜா) செல்லலாம் என்று இருக்கேன்.(24.11.06) அப்படி அங்குட்டு போனா ஒரு நாலு, அஞ்சு நாள் இருப்பேன்.(28.11.06). உலககெல்லாம் நம்ம வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்த்தி கொண்டு இருக்காங்க.... நாமளும் அதில் எல்லாம் எப்ப கலந்துக்குறதுனு ரொம்ப நாள் ஒரு டவுட் இருந்துச்சு. அந்த டவுட் இந்த தடவை கீளியர் பண்ணலாம் என்று முடிவு எடுத்துட்டேன். ஆம் நண்பர்களே, நாமா அங்க சந்திக்கலாம். ஆனா யாரு எல்லாம் அங்க இருக்கீங்கனு எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்த வரை தம்பி, முத்துக் குமரன் இருக்காங்க. நிலவு நண்பன் இன்னும் இந்தியாவில் தான் இருக்காரு.

அங்குட்டு இருக்கும் நண்பர்கள் ஏதும் சந்திப்பு ஏற்பாடு செய்தால் ஒகே. நமக்கு இடம் ஏதும் அங்கு தெரியாது. போன் நம்பரை மெயிலுக்கோ இல்லை பின்னூட்டத்துக்கோ அனுப்பினால் நோட் பண்ணி அங்குட்டு வந்து அழைக்கிறேன்.

அப்படியே ஒருவேளை எல்லாரும் சந்தித்தால் எந்த தலைப்பில் பேசலாம், சண்டை போடலாம் என்பதை எல்லாம் நீங்களே முடிவு எடுத்துக்கோங்க... நான் ஒரு ஒரமா உர்கார்ந்து வேடிக்கை பாக்குறேன், ஒரு டீ இல்லாட்டி காபி அதுவும் இல்லாட்டி வேற எதையாச்சும் குடித்துக் கொண்டே........

நீ எல்லாம் ஒரு ஜல்லி அடிக்கும், மொக்கை போடும் பதிவர், உன்னை எல்லாம் சந்திக்கனுமா அப்படினு ஒரு கேள்வி எழலாம், அதில் தவறும் கிடையாது. ஆனா இதையே எல்லாரும் சொல்லி எஸ்கேப் ஆகக்கூடும் என்பதும் எனக்கு தெரியும். அதுக்கு தான் ஒரு ஆளை ஏற்கனவே புடிச்சுப் போட்டாச்சு (ஐடியா கொடுத்த கப்பி, நீ நல்லா இரு). அப்படி மாட்டுனா அந்த நல்லவன் வேற யாரும் இல்ல நம்ம தம்பி தான். அவரை மட்டுமாச்சும் கண்டுக்கீனு வந்துடுவேன். தம்பி நீங்க சொன்ன "மேட்டரு" எல்லாம் ரெடி தானே...... அவரை மட்டும் சந்திதால் அது வலைப்பதிவர் சந்திப்பு ஆகி விடுமா என்று தெரியல, அதனால தான் தலைப்பில் ஒரு கேள்விக்குறி........

அப்பால வரட்டா...........

Tuesday, November 07, 2006

நட்சத்திர வாரம்!

என்னடா இவன் போன வாரம் தானே தமிழ்மணம் நட்சத்திரமா இருந்தான், இப்ப என்ன நட்சத்திரம் வாரம் தலைப்பு போட்டு பதிவு போடுறானே தானே யோசிக்கிறீங்க. அது ஒன்னும் இல்லங்க. போன வாரம் அதாவது நட்சத்திர வாரத்தில் போட்ட பதிவுகளை பற்றி ஒரு பதிவு போடலாம் என்று எழுந்த எண்ணத்திலும், நன்றி கூவும் பொருட்டும் இந்த பதிவு.

பல நாட்களுக்கு முன்பே நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டதை நமக்கு தெரிவித்து இருந்தாலும் வழக்கம் போல கடைசி நேரத்தில் பாத்துக்கலாம் என்ற சோம்பேறித்தனத்தால் ஒரு பதிவு கூட எழுதி வைக்க வில்லை. எல்லா பதிவுகளுமே வழக்கம் போல சூட சூட டைப் பண்ணி போட்டது தான். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய தமிழ்மணத்திற்கும் என்னை நட்சத்திரமாக தேர்ந்து எடுத்த மதி கந்தசாமிக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

1.
மெய்யாலுமா - வழக்கம் போல ஜல்லியடித்த பதிவு. நட்சத்திர அறிமுக பதிவு அது. வராத பெருந்தலைகள் எல்லாம் வந்து நம்மளை வாழ்த்திட்டு போனாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஒரு சில நபர்கள் இதுக்கு மட்டும் தான் வந்தாங்க. அதுவும் கொஞ்சம் சந்தோஷமா இருந்துச்சு.

2.
உள்கட்டமைப்பு - தானியங்கி(அல்லது ப்ரீபேய்டு) மின்சாரத்தை பற்றிய பதிவு. பல நாள் பாத்தது தான் என்றாலும் அன்று தீடிரென்று இதை பதிவாக போடலாம், அதே சமயத்தில் இதை நம் நாட்டில் எந்த மாதிரி செயல்படுத்தலாம் என்று யோசித்து போட்டப்பட்ட பதிவு அது. பின்னூட்டங்களில் நல்ல கருத்து பரிமாற்றம் இருந்ததாக நம்ம குமரன் சொன்னது மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது.இருந்தாலும் இந்த பதிவின் முதல் வரியில் இருந்த ஒரு வரி சிலரை உறுத்தியதாக சொன்னார்கள். ஒருவர் சற்றே மேல் போய் கேப்டன் பட டயலாக் மாதிரி இருக்குனு சொல்லிட்டார். அந்த வரிகள் போடுவதற்கு காரணமாக இருந்தது பதிவு இது. இந்த பதிவை சமீபத்தில் தான் பார்க்க நேர்ந்தது. பார்த்தவுடன் அதை குறித்து பதிவு போடலாம் என்று இருந்தேன். பிறகு இது போல பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல், என்ன பிரச்சனை என்றே தெரியாமல் மொட்டை தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சு போடுவது இங்கு ஒன்றும் புதுசு இல்லை என்று விட்டு விட்டேன். பல வருடங்களுக்கு முன்பு எடுத்த படங்களை வைத்து இன்றைய நிலை, அங்கு இப்பொழுது என்ன நடக்கிறது என்பதை எல்லாம் தெரியாமல் சொல்ல வேண்டும் என்பதற்காக பல பின்னூட்டங்கள், அதிலும் குறிப்பிட்ட சில பின்னூட்டங்களை கண்ட பிறகு இந்த வரிகள் என் பதிவில் சேர்க்கப்பட்டது.

3.
சினிமா விமர்சனம் - நாம் பார்த்து கஷ்டப்பட்ட படங்களை பற்றிய பதிவு அது. என்னடா எப்ப பாத்தாலும் 4 படங்களுக்கு சேர்த்து விமர்சனம் எழுதுகிறேன் என்று தம்பி வருத்தப்பட்டார். மதுமிதா போடவில்லை என்று வெட்டி வருத்தப்பட்டார். இந்த பதிவு ரொம்பவே சுமார் என்று நம் நண்பர்கள் சொன்னாங்க. அது உண்மை தான் போல.... இந்த பதிவு போட்ட போது தமிழ்மணத்தில் வெளியீட முடியவில்லை.

4.
வண்ணக் கோலங்கள் - பல நாள் நான் எடுத்து புகைப்படங்களை பதிவாக போட வேண்டும் என்று எண்ணியதை தொடர்ந்து போட்ட பதிவு. பல நல்ல விமர்சனங்களை உள்வாங்கி கொண்டேன். நானே எதிர்பாக்காத அளவுக்கு பலர் வந்து இருந்தனர். இந்த துறையை பற்றி நல்ல அறிவுரைகளை வழங்கினார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னால் பிடிக்க முடியாத மின்னலை நம்ம கைப்புள்ள போட்டு அசத்தி விட்டார்.

5.
அறுசுவை - சரி நாமலும் ஒரு சமையல் பதிவு போடுவோமே என்று போட்ட பதிவு. நல்ல ரெஸ்பான்ஸ். அறுசுவையை பார்த்து நம்ம வெட்டி கேசரி செய்து சாப்பிட்டு இருக்கார். நல்லா இருந்தது என்று அவரு பக்கத்து வீட்டுக்காரங்களே சொன்னாங்களாம். ஆனா பாருங்க அவரு ஒரு சோதனை முயற்சியாக தான் அவங்களுக்கு முதலில் கொடுத்தார் என்று உண்மை எனக்கு மட்டும் தான் தெரியும். இது போல தம்பி கூட முயற்சி பண்ண போவதாக கேள்வி, பாக்கலாம். இதனால் நம் சமையல் குறிப்பு தொடர்ந்து வரும்.

6,
கண்ணி வெடி - 1 - தொடராக ஆரம்பித்தது. தொடர முடியாமல் போய் விட்டது. நான் நட்சத்திரமாக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த பதிவு என்று எண்ணுகிறேன். அதனால் தான் இதை ஒரு மீள்ப்பதிவாக போட்டேன். தொடர்ந்து எழுத உள்ளேன். இந்த பதிவு போட்ட தினத்தில் இருந்து பிளாக்கர் சொதப்ப தொடங்கி விட்டது. பின்னூட்டங்கள் போட முடியவில்லை என்று பல மெயில்கள். என்ன பிரச்சனை என்று பார்க்க கூட முடியாதப்படி வேலைப் பளு வேற.

7.
திருநாகை அழகியார் - ஆன்மிகம் இல்லாமல் நட்சத்திர வாரமா என்று எண்ணி போட்ட பதிவு இது. குறிப்பாக குமரன், எஸ்.கே, ஜி.ரா, தி.ரா.ச, கீதா போன்ற ஆன்மிக செம்மல்களை குறி வைத்து போட்ட பதிவு இது. குமரன் மற்றும் கீதா தான் உள்ளேன் ஐயா போட்டார்கள். மற்றவர்களுக்கு என்ன வேலையோ? தொடர்ந்து இது போல பதிவுகளும் அவ்வபோது தொடரும். குமரனுக்காவே பாசுரங்கள் போடப்படும். நம்ம ரவி ஒரு பாசுரம் போட்டு இருந்தார். அவருக்கு என் நன்றி. இந்த பதிவும் பிளாக்கர் சொதப்பி விட்டது. பதிவு போட்டு அது காணாமல் போய் மீண்டும் பதிவாக போடும்ப்படி ஆனது.

8.
திருநாகை பெருமாள் கோவில் படங்கள் - இந்த நாளில் வேற ஒரு பதிவு போடலாம் என்று இருந்த நான் திரு. குமார் அவர்கள் அனுப்பிய படங்களை பார்த்த பிறகு அதையே ஒரு பதிவாக போடலாம் என்று போட்ட பதிவு. எம் பெருமான் படமும், அக்கோவிலின் பிற படங்களை போட்டு இருந்தேன். இந்த பதிவு போட உதவியாக இருந்த குமார் மற்றும் பாபுவுக்கும் என் நன்றி.

போன வாரத்தில் என்னால் முடிந்த அளவு நன்றாக செய்த திருப்தி உள்ளது. மொத்ததில் எனக்கு நம்ம ராமநாதன் சொன்ன மாதிரி, நல்ல அவியலாகப்பட்டது. அது சரியா தவறானு நீங்க தான் சொல்லனும்.

இது போக எனக்கு வழக்கம் போல பின்னூட்டங்கள் மூலம் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. அதிலும் சிலர் ரொம்பவே பாச மழையில் நனைய வைத்து விட்டார்கள். நான் நட்சத்திரம் ஆனதற்கு என்னை விட அதிகம் மகிழ்ந்த சங்கப் பெருமக்களுக்கும், நண்பர்களுக்கும், கூகிள் டாக்ல மெசெஜ் போட்டு கலக்கி அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள். இது போக என்னை தனியாக மெயிலில் அழைத்து வாழ்த்து கூறிய அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி.

கடைசியாக நம்ம ராயல் ராம். இவரு தான் நம்மை தாரை தப்பட்டையுடன் வரவேற்றார். நன்றி சொல்லி ஒரு பதிவு போட சொன்னதும் அவரு தான். அவருக்கு என் அன்பு கலந்த பண்பு கலந்த மரியாதை கலந்த இன்னும் என்ன என்ன கலக்கனுமோ எல்லாத்தையும் கலந்த நன்றிகள். ராயல் இது போதும்ல... ரொம்ப கூவுனா நல்லா இருக்காது.

Sunday, November 05, 2006

திருநாகை பெருமாள் கோவில் படங்கள்

நாகையில் ஸ்ரீ செளந்தராஜ பெருமாள் கோவிலை பற்றி போன பதிவில் பாத்தோம். இப்பதிவில் அக்கோவிலின் புகைப்படங்கள் சிலவற்றை காணலாம். படங்கள் எடுத்த திரு. பாபு அவர்களுக்கும் அந்த படத்தை எனக்கு கொடுத்து உதவிய திரு. குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எம்பெருமான்

திருமாது புவிமாதோடு திருநாகை அழகர்

ஸ்ரீ செளந்தரராஜப் பெருமாள் கோவில் வாயில்

வாயில் பக்கவாட்டு படம்

சொர்க்க வாசல் வழி

ராமர் பாதம்

துவார பாலகர்

Saturday, November 04, 2006

திருநாகை அழகியார்

நாகையை சுற்றி அனைத்து மதத்தையும் சார்ந்த பல கோவில்கள் உள்ளன. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கோவில்கள் - வேளாங்கண்ணி மாதா கோவில், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், செளந்தரராஜப் பெருமாள், எட்டுக்குடி முருகன், திருநள்ளாறு சனீஸ்வரன் போன்ற பல கோவில்களை சொல்லாம். என்னால் முடிந்த அளவு ஒவ்வொரு கோவிகளை பற்றியும் இங்கு தர முயற்சிக்கின்றேன். முதலில் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஸ்ரீ செளந்தரராஜப் பெருமாள் கோவிலை பற்றி காண்போம்.

சிறு குறிப்பு

மூலவர் : ஸ்ரீ செளந்தரராஜப் பெருமாள்
தாயார் : ஸ்ரீ செளந்தரவல்லி
உத்ஸ்வர் : நாகை அழகியார்
மூன்று கோலங்கள் : கிடந்தான், இருந்தான், நின்றான்
சிறப்பு அர்ச்சாமூர்த்திகள் : அஷ்டபுஜ நரசிம்மன், கருடன்
அமர்ந்தநிலை, பச்சைவண்ணன், பவழவண்ணன்
பூஜை : ஸ்ரீபாஞ்சராத்ரம் பாத்மசம்ஹிதை பிரகாரம்
விமானம் : பத்ரகோடி விமானம்
புஷ்கரணி : சாரபுஷ்கரணி செளந்தர்ய புஷ்கரணி
ஸ்தலவிருட்ஷம் : மாமரம்

நாககன்னிகைக்கும் சாலீசுக மகராஜனுக்கும், பெருமாள் கன்னிகாதானம் செய்து கொடுத்த ஸ்தலம்.


திவ்யதேசங்கள் நூற்றெட்டு ஆகும். இதில் சோழ நாட்டில் உள்ளவை நாற்பது தலங்கள். இந்த நாற்பதில் நாகை வட்டத்தில் அமைந்த உள்ளவை இரண்டு. ஒன்று நாகப்பட்டினத்திலும் மற்றது திருக்கண்ணங்குடியில் உள்ளது. இத்திருகோவில் நாகை புகைவண்டி நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது. பெருமாள் கோவிலுக்கு பஸ்நிறுத்தமும் உள்ளது.

கோவிலின் முகப்பில் ஒரு நாற்கால் மண்டபமும், அதனை அடுத்து தொண்ணூறு அடி உயரமுள்ள எழுநிலை கோபுரமும், விளங்க நாற்புறம் உயர்ந்த மதில்களும் உள்ளன. மேற்புற மதிலில் சிறு கோபுரத்துடன் கூடிய மேற்கு நோக்கிய வாயில் ஒன்று உள்ளது. மதில்களைச் சூழ நான்கு மாட வீதிகளும், இராஜ கோபுர வாயிலுக்கு நேரே நீண்டதொரு சன்னதித் தெருவும், நாற்புறமும் தேர் ஒடும் பெரிய வீதிகளும் பொருந்தியுள்ளன.

மேற்கூறிய இடம் தான் எங்களில் எவர்கீரின் ஸ்பாட். இந்த நாலு தெருவில் ஏதாவது ஒரு இடத்தில் தான் இருப்போம். கோவிலுக்கு எதிரில் இருக்கும் ராஜா டீ கடையும் நம்ம ஸ்பாட்டில் ஒன்று. நம்ம சக பதிவர் "வடவூர் குமார்" மடவிளாகம் என்று தன் பதிவிற்கு பெயர் வைத்ததும் இந்த கோவிலின் மடவிளாகத்தை குறிக்கும் பொருட்டு தான் என்று எண்ணுகின்றேன். என்ன குமார் அண்ணன் சரி தானே? இது போக இந்த பகுதியில் இருந்து வந்து இருக்கும் மற்ற சக பதிவர்கள் நாம் அனைவரும் அறிந்த "கிழக்கு பதிப்பகம்" பத்ரி மற்றும் நண்பர் "அறுசுவை" பாபு. கோவிலை சுற்றியுள்ள தெருகளில் தான் நாங்க சிறு வயதில் கிரிக்கெட், கிட்டிபுல், பம்பரம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவோம். தெருவில் இருக்கும் அனைவரின் சாபத்தையும் வாங்குவோம். ஹும் அது எல்லாம் ஒரு காலம். இன்றும் அங்கு நின்று சேட்டைகள் செய்தாலும் அந்த அறியா வயதில் செய்த சேட்டைகளே தனி தான். சரி சரி மீண்டும் கோவிலுக்கு போவோம்....

இக்கோவிலை சுற்றி ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோவில், ஸ்ரீ தேசிகர் கோவில், அனுமன் கோவில், அங்காள பரமேஸ்வரி கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், சர்ச் மதில் சுவற்றை ஒட்டி பவழக்காளி அம்மன் கோவிலும் உள்ளன.

கி.பி. 8 நூற்றாண்டில் திருமங்கையாழ்வார் எம்பெருமானை கண்டு வழிபட நாகை வந்தார், நின்ற கோலத்தில் உள்ள கருமாணிக்க கள்வனிடம் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தார். தான் ஒரு தலைவி நிலையை அடைந்து தலைமகனாகிய பெருமானிடம் காதல் பூண்டார். அக்காம நோய் பலவாறு தன்னை நலிய அதனால் அப்பெருமானை உருவெளிப்பாட்டில் கண்டு மயங்கிக் கூறியதாக அகத்துறை பாசுரங்கள் அமைந்த பதிகம் ஒன்று அருளியுள்ளார்.

இக்கோயிலில் புராணம் சிற்பம் சரித்திரம் ஆகிய நிலைகளில் காணத்தக்க உருவங்கள் பல உள்ளன. ஸ்ரீ பெருமான் மூலவராக நின்ற நிலையிலும், அரங்க பெருமான் எனக் கிடந்த நிலையிலும் கோவிந்தராஜனாக இருந்த நிலையிலும் ஆக முவகைக் கோலங்களில் கோவில் கொண்டுள்ளார். நாயக்கர் மண்டபத்தில் ஸ்ரீ பெருமாள் சன்னதிக்கு செல்லும் தேர்வாயிலின் இருபுறமும் திருவாசியுடன் கூடிய எட்டடி உயரமுள்ள இரு துவார பாலகர்களின் சுதை உருவங்கள் அரிய சிற்ப அழகு வாயந்தது. திரிபங்கி நிலையில் சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றை மூன்று கரங்களில் தாங்கிக் கொண்டு ஒரு கையால் காவல் முத்திரை காட்டிக் கொண்டு அமைதி தவழும் முகத்துடன் பல அணிகளைப் பூண்டு நிற்கும் இப்படைப்பு உருவம் பதினேழாம் நூற்றாண்டின் கலைப்படைப்பாகும். இது போன்ற பல சிற்பங்கள் இருந்தாலும் கட்டுரையின் நீளத்தை கருத்தில் கொண்டு அத்தோடு விடுகின்றேன். அடுத்த கட்டுரையில் இக்கோயிலில் நடைப்பெறும் பூஜைகள், விழாக்கள், கோவில் உள் இருக்கும் சன்னதிகளை பற்றி எழுதுகிறேன்.

எம்பெருமானை நாகை அழகியார் என்று அழைப்பார்கள். அந்த சற்றும் மிகை கிடையாது. ஒரு முறை எம்பெருமானை வந்து தரிசித்து பாருங்கள். அவன் அழகில் கண்டிப்பாக நீங்களும் மயங்கி விடுவீர்கள். வரும்போது நம்ம வீட்டுக்கும் ஒரு வருகை கொடுத்துட்டு போங்க.....

Friday, November 03, 2006

கண்ணி வெடி - 1

கண்ணி வெடி என்பது ஒரு வகையான வெடிக்குண்டு தான்.

முதலில் இதை ராணுவத்தில் தான் பயன்படுத்தினார்கள். இரண்டாம் உலக போரின் போது தான் இது பெரும் அளவில் பயன்படுத்த பட்டது. அதன் பிறகு வியட்னாம் போர், கொரியன் போர், முதல் வளைகுடா போன்ற போர்க்களின் வாயிலாக உலகத்தின் மூலை முடுக்கு எல்லாம் இது பரவி விட்டது. இன்று இந்த வெடிகள் பல நாட்டில் தயாரிக்கபடுகின்றது, இந்தியாவையும் சேர்த்து...

இந்தியா நான்கு போர்க்களில் கண்ணிவெடிகளை பயன்படுத்தி உள்ளது.1947-48, 1965 மற்றும் 1971 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், 1962யில் சீனாவிற்க்கு எதிராகவும் பயன்படுத்தி உள்ளது. கார்க்கில் போரின் போதும் பயன்படுத்த பட்டு இருக்கலாம். சரியாக விபரங்கள் கிடைக்கவில்லை. இந்திய ராணுவம் தன் உள்நாட்டு பிரச்சனைகளுக்காக ஒரு போதும் இந்த வகை குண்டுகளை பயன்படுத்தில்லை என தெரிவித்து உள்ளது.

எதற்காக இந்த வகையான வெடிக்குண்டுகள் உருவாகப்பட்டது என்று பார்க்கும் போது, எதிரிகளின் முன்னேற்றத்தை தடுக்கவும், இரவு நேரங்களில் எதிரிகள் தீடிரென்று தாக்குவதை தடுக்கவும், எதிரிகளின் வாகனங்களை அழிப்பதற்க்கும், பாதைகளை, நீர் ஆகாரங்களை துண்டிப்பதற்க்காகவும் தான் உருவாக்கபட்டது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் எதிராளிகளை செயல் இழக்க செய்யவும், அந்த தருமணத்தில் தாங்கள் சுகாரித்து கொள்வதற்கும். இந்த வகை குண்டுகளை தொடுவதன் மூலமும், அழுத்தம் கொடுப்பதுன் மூலமும், காந்த சக்தியின் மூலமும், ரிமோட் கொண்டு இயக்குவது மூலமும், டிரிப் வயர் மூலமும் வெடிக்க செய்யலாம்.

கண்ணி வெடிகளை ஒரு சிறந்த(முழுமையான) போர் வீரன் என்று சொல்வது உண்டு.

"The landmine is eternally prepared to take victims. It is the perfect solider."

- Nobel prize winner Mr. Jody Williams.


ஆனால் ஒரு இடத்தில் போர் நிறைவு பெற்றால் பெரும்பாலான போர் வீரர்கள் திரும்பி விடுவது உண்டு. ஆனால் இந்த கடமை வீரன்(கண்ணி வெடிகள்) தன் கடமையை 50 வருடங்கள் ஆனாலும் தவறாது செய்வதற்கு காத்து கொண்டு இருக்கும் என்பது தான் கசப்பான உண்மை.

கண்ணி வெடிகளில் இரு வகை உண்டு. ஆண்டி டேங்க் வெடிகள்(Anti-Tank Mines) மற்றும் ஆண்டி பர்ச்சனல் வெடிகள்(Anti-Personnel Mines). இவற்றை குறித்து விரிவாக பின்வரும் தொடர்களில் காணுவோம். ஆண்டி டேங்க் வெடிகள் தான் ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் உபயோகபடுத்தபட்டது. ஆனால் எதிராளிகள் இதை சுலபமாக கண்டுபிடித்து அகற்றிய காரணத்தால், இந்த ஆண்டி பர்ச்சனல் வகை வெடிகள் தயாரிக்கப்பட்டது. இந்த வெடிகள் முதலில் ராணுவ(போர்) வீரர்க்களை மட்டும் தான் குறி வைத்து வைக்கப்பட்டது. பின்னர் சிவிலியன் என்று அழைக்கப்படும் பொது மக்களையும், அவர்களின் நிலங்களையும் நோக்கி திரும்பி விட்டது. அவ்வாறு நோக்கம் மாறியதால் இந்த வெடி குண்டுகளை வைக்கும் போது கடைப்பிடிக்கும் சில விதிமுறைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டன.

----------------------------------------------------------------------------------
பொதுவான தகவல்கள்:
*தற்பொழுது உலகம் முழுவதும் 100 மில்லியன் கண்ணி வெடிகள் உள்ளன.

*1975 ஆண்டில் இருந்து 2005 வரை 1 மில்லியன் மக்கள் இந்த கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.( இறந்தவர்களையும் சேர்த்து)

*இந்த கண்ணி வெடிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் - ஆப்கானிஸ்தான்(உபயம் - சோவியத் யூனியன்), ஈராக்(உபயம் - பெரியண்ணன் அமெரிக்கா), கம்போடியா,அங்கோலா, புருண்டி, கொழும்பியா, நேபாளம்,ஸ்ரீலங்கா, சூடான்.........

*இந்தியாவில் பெரிய அளவில் கண்ணி வெடி பாதிப்புகள் கிடையாது. வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் கண்ணி வெடி பாதிப்பு ஒரு அளவுக்கு உண்டு.

*மேற் சொன்ன நாடுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் கம்போடியாவில் 35 % சகவீதத்துக்கு மேற்பட்ட நிலங்கள் கண்ணிவெடிகளால் நிறைந்து உள்ளது. *ஈராக் நிலவரம் கிட்டதட்ட அது போல் தான் உள்ளது.

*ஸ்ரீ லங்காவில் இன்னும் போர் நடந்து கொண்டு இருப்பதால் எந்த அளவுக்கு கண்ணி வெடிகள் உள்ளது என்பது இன்னும் ஒரு கேள்வி குறி தான்.

*ஒரு தரமான ஆண்டி பர்ச்சனல் வெடிகுண்டை ஒரு மூன்று டாலர் இருந்தால் செய்து விடலாம்.

*நிலத்தில் புதைத்த ஒரு கண்ணி வெடியை எடுப்பதற்க்கோ, செயல் இழக்க செய்வதற்க்கோ ஆகும் செலவு குறைந்தபட்சம் 1000 டாலர்.
----------------------------------------------------------------------------------

- சோகம் தொடரும்...
பின்குறிப்பு : இது ஒரு மீள் பதிவு. ஜுன் மாத கடைசியில் ஆரம்பித்த இந்த தொடரை ஒரு சில காரணங்களால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இனி தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணிய காரணத்தால், இதை மீண்டும் அனைவரின் கவனத்திற்கு கொண்டு வரும் பொருட்டு இதை ஒரு மீள் பதிவாக வெளியிடுகிறேன்.
ஒரு கண்ணி வெடியை எடுப்பதற்கு 1000 டாலர் மிகவும் அதிகம் என்று பலர் பின்னூட்டம் இட்டு இருந்தார்கள். அதற்கு விளக்கம் பின் வரும் தொடர்களில் கண்டிப்பாக எழுதுகின்றேன்.

Thursday, November 02, 2006

அறுசுவை

தலைப்பு "அறுசுவை" னு வச்சாச்சு. அதுக்கு தகுந்த மாதிரி ஏதும் மேட்டர கண்டிப்பாக எழுதனும். ஆனா நம்ம செய்த சமையல் என்னிக்கு அறுசுவையோடு இருந்து இருக்கு. அதனால் அதை முதலில் எழுதாமல், தலைப்புக்கு தகுந்த மாதிரி ஒரு விசயத்தை சொல்லிட்டு நம்ம மேட்டருக்கு போயிடலாம்.

நம்ம வலைப்பதிவு முகப்பில் இடது கை பக்கம் "அறுசுவை" அப்படிங்குற ஐகான் பாத்து இருப்பீங்க. சிலர் வலைப்பக்கத்திலும் இந்த பெயரை நான் உபயோகித்து இருப்பேன். அந்த அறுசுவையை பற்றி சில வரிகள்....

"முற்றிலும் சமையல் குறித்த முதல் தமிழ் இணையத்தளமாய், கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக அறுசுவை இயங்கி கொண்டு உள்ளது . இந்த தளம் முழுக்க முழுக்க உணவு சம்பந்தமான தகவல்களைத் தருவதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது. உணவு சம்பந்தமாக இந்ததளத்தில் கிடைக்காத தகவல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து தகவல்களையும் முழுமையான அளவிற்கு தருவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு அதில் ஒரளவும் வெற்றி பெற்று உள்ளார்கள். அனைத்து வகையான குறிப்புகளை சரியாக வரிசைப்படுத்தி நமக்கு வேண்டிய உணவு வகைக்கான குறிப்புகளை உடனே கிடைக்கும் படி செய்து உள்ளது மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சில பக்கங்கள்:

கூட்டாஞ்சோறு - பல சமையல் வல்லுனர்களின் குறிப்புகள் உள்ள பக்கம்
மன்றம் - பல வகையான தலைப்புகள் கொடுத்து ஒரு உரையாடற் களமாக உள்ள பக்கம்
ஆரோக்கியம் - உடல் ஆரோக்கியத்துக்கு உணவின் பங்கை குறித்து விளக்கும் பக்கம்
யாரும் சமைக்கலாம் - படத்துடன் உணவை சமைப்பது எப்படி என்று விளக்கும் பக்கம்

மொத்ததில் இந்த வலைத்தளம் என்னை போல உறவையும் நல்ல உணவையும் பிரிந்து வாழும் மக்களுக்கு பயன் தருமாறு உள்ளது. எங்களுக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் இது ஒரு நல்ல பயன் தரும் வலைத்தளமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் இங்கு அந்த தளத்தை பற்றி எழுதி உள்ளேன். ஒரு முறை போய் பாத்துட்டு வாங்க, உங்களுக்கே பிடிக்கும்.

ஒகே இப்ப நம்ம மேட்டருக்கு போலாம்.

என்ன மேட்டருனா, படத்துடன் கூடிய ஒரு சமையல் குறிப்பு தான் இன்னிக்கு மேட்டரு.

சமையல் குறிப்போட பெயர் என்ன வேணுமோ அதை நீங்களே வச்சுக்கலாம். இதுக்கு உண்மையிலே என்ன பெயருனு தெரிஞ்சவங்க சொல்லாம். இல்லாட்டி அப்பால நான் சொல்லுறேன்.

முதல் எத்தனை பேர் இருக்கோம் என்பதை பாத்துக்கோனும். அளவுக்கு இல்ல யாரு யாரு என்ன என்ன வேலை செய்வதுனு முடிவு பண்ண. அளவு எல்லாம் ஒரு மேட்டரே எவ்வளவு பொருள் இருக்கோ அதை வச்சு மேனேஜ் பண்ணிக்கனும். தேவையான பொருட்கள் - கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், உருளைகிழங்கு, எண்ணெய் இன்ன பிற...
செயல் விளக்கம்:


படத்தில் இருப்பது போல் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணி விட்டு நல்லா பிசையனும். இது கொஞ்சம் கஷ்டமான வேலை. அதுனால இந்த வேலைய அடுத்தவன் கிட்ட தள்ளி விட்டுட்டுங்க.

படத்தில் இருப்பது போல வெங்காயம், பச்சை மிளகாய நல்லா பொடியா வெட்டிங்கோங்க. இது கண்ணுல கண்ணீர் வர மேட்டர். அதனால இதையும் தள்ளி விட்டுட்டுங்க.

படத்தில் இருப்பது போல உருளைகிழங்கை நன்கு வேக வைத்து உரித்து மசித்து கொள்ளவும். இதை சூடாகாக இருக்கும் உரித்தால் கையே சுடும், அதனால் இதுவும் நமக்கு வேண்டாம்.


படத்தில் இருப்பது போல வெட்டிய வெங்காயம், ப.மிளகாய், உ.கிழங்கு எல்லாத்தையும் ஒன்றாக போட்டு நன்கு பிசறி கொள்ளவும். பிசுறு இல்லாமல் நன்றாக மசிக்க வேண்டும். அதனால் இதுவும் நமக்கு சரிப்பட்டு வராது.


படத்தில் இருப்பது போல கோதுமை மாவை பெரிதாக உருட்டி முதலில் சிறிதாக தேய்த்து அதில் இந்த பிசைந்து வைத்த கிழங்கை வைக்கவும். இதை தேய்க்கம் போது வட்டமாக தேய்க்கனும். இது நமக்கு வராது, அதனால் இதுவும் இதை தேய்த்து முடிக்கும் வரை நாம் வர வேண்டாம்.

படத்தில் இருப்பது போல மூடி, உள்ளங்கையில் வைத்து தட்டிக் கொள்ளவும்.



படத்தில் இருப்பது போல உள்ள வைத்த கிழங்கு வெளிய வந்து விடாமல் நல்லா வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.



படத்தில் இருப்பது போல எண்ணெய் விட்டு இதை கல்லில் போடவும். அப்ப அப்ப திருப்பி போடுங்க அப்ப தான் கருகாமல் இருக்கும். நமக்கு வேற வேலை இருப்பதால் இதையும் அடுத்தவனிடம் கொடுத்து விடலாம்.


படத்தில் இருப்பது போல திருப்பி போடுவதில் வல்லவராக இருந்தால் அந்தரத்தில் திருப்பி போடுங்கள். இதை சரியாக போட்டோ எடுக்க என்னை மாதிரி பக்கத்தில் ஆள் இருந்தால் பண்ணுங்கள். இல்லாட்டி வீண் முயற்சி வேணாம்.


படத்தில் இருப்பது தான் பைனல் அவுட்புட்டு. மேல நெய் தடவினால் இன்னும் மணமாக இருக்கும். இப்ப தான் நம்ம தேவை ரொம்ப முக்கியம். அதனால இந்த வேலைய நம்ம பாத்தே ஆகனும். கிழங்கு பிசையும் போது கொஞ்சம் மிளகாய் தூள் போட்டு பிசைந்தால் இன்னும் நல்லா இருக்கும். இரண்டு சாப்பிட்டா போதுங்க அன்றைய பொழுதுக்கு வேறு தேவையில்லை.

முயற்சி செய்து பாருங்க, நல்லா இருந்தா சொல்லுங்க, மேற்கொண்டு பல சமையல் குறிப்புகள் போடுறேன். நல்லா இல்லாட்டி, அரசியல் (சமையல்) வாழ்வில் இது எல்லாம் சகஜம் என்று நினைச்சுக்கிட்டு என்ன மன்னிச்சு விட்டுட்டுங்க.

Wednesday, November 01, 2006

வண்ணக் கோலங்கள்

நமக்கு இந்த கலைத் தாகம் கொஞ்சம் உண்டுங்க. அதிலும் இந்த போட்டோகிராப்பி (சரியா படிக்கவும், ஸ்டெபி கிராப் இல்ல)மேல் ஒரு தனி ஈர்ப்பு உண்டு. அதை முறையாக கற்று கொண்டதும் கிடையாது. அதற்கு முயற்சி செய்ததும் கிடையாது. நான் போட்டோவிற்கு நிற்பதை விடவும் எடுக்க தான் அதிகம் ஆசைப்படுவேன். எந்த டப்பா கேமராவா இருந்தாலும் அதை கையில் வைத்து இருந்தால் நம்மளை ஒரு பெரிய ரேஞ்சல திங்க் பண்ணி பாத்துப்பேன். கல்லூரி முடிந்த சென்னையில் குப்பை கொட்டிக் கொண்டு இருந்த போது இந்த மேட்டரை எல்லாம் மறந்து ஒழுங்கா பொழப்ப பாத்துக்கிட்டு இருந்தேன். போன வருடம் ஹைத்தி போய் சோனி சைபர் சாட் 7.2 கேமரா வாங்கினவுடன் மறுபடியும் கிறுக்கு புத்தி வந்துடுச்சு. அந்த பொட்டிய வச்சு நம்ம திறமைய(???) என்னமா காட்டி இருக்கேனு கீழே இருக்கும் புகைப்படங்களை பாருங்க. சிலது நிக்கான் பொட்டியில் புடிச்சது.

எனக்கு பெரும்பாலும் மனிதர்களை எடுப்பதை விட வானம் நித்தம் நித்தம் காட்டும் வண்ணக் கோலங்களை எடுப்பதில் தான் ஆனந்தம் அதிகம். பாருங்க எப்படி இருக்குனு, பாத்துட்டு அப்படியே ஒரு வார்த்தையும் சொல்லிட்டு போங்க. ஏன் கேட்குறேனா.... இந்த பேசிக் மாடல் கேமராவ விட்டு அடுத்த லெவலான இண்டர்மிடியட் கேமரா (நிக்கானில்) வாங்கலாம் என்று இருக்கேன். உன் லட்சணம் இதுலே தெரியுதுனு சொல்லிட்டிங்க வைங்க, அந்த கேமரா பொட்டி வாங்கும் எண்ணத்தை கொஞ்சம் நிறுத்தி வைப்பவன்ல, அதுக்கு தான்.

இடைக்குறிப்பு : அனைத்து புகைப்படங்களையும், அந்த அந்த புகைப்படத்தின் மேல் க்ளிக் பண்ணினால் தனி ஜன்னலில் பெரிதுப்படுத்தி பார்க்கலாம்.

அந்திமாலை பொழுது, சூரியன் விடை பெறும் நேரம். இடம் : ஹைத்தி, தங்கி இருந்த ஹோட்டல் பால்கனியில் இருந்து புடிச்சது. பொட்டி - நிக்கான்.

சூரியன் தன் கடமையை செய்ய வெளி வந்த காலை பொழுது. இடம் : ஹைத்தி, உணவகத்தில் ரொட்டிக்காக(பிரட்) காத்து இருந்த நேரத்தில் புடித்தது. பொட்டி - சோனி

நான் என் கடமையை செய்ய ஹெலிகாப்டரில் போன மதிய பொழுது. இடம் : ஹைத்தி, வானில் இருந்து பிராக்கு பார்த்துக் கொண்டே புடிச்சது. பொட்டி - நிக்கான்

மீண்டும் ஒரு மயக்கும் மாலை பொழுது. இடம் : ஹைத்தி, அறையின் சன்னல் வழியாக ஜும் பண்ணி புடிச்சது. பொட்டி - நிக்கான்

வார விடுமுறையை அனுபவிக்க சென்ற பகல் பொழுது. இடம் : ஹைத்தி, தனித்து அமர்ந்து லபாடி பீச்ல புடிச்சது. பொட்டி - நிக்கான்

வண்ணக்கோலங்கள் காட்டிய மாலை பொழுது. இடம் : ஹைத்தி, மாடியில் உலாத்தி கொண்டு இருக்கும் போது சட்னு பாத்து பட்னு புடிச்சது. பொட்டி - நிக்கான்

உலக அதிசயத்தை அண்ணாந்து பார்த்த மாலை பொழுது. இடம் : பாரீஸ், டாக்சியில் இருந்து அவரத்தில் புடிச்சது. பொட்டி - சோனி

இந்தியன் மாபியா துள்ளி விளையாண்ட மாலை பொழுது. இடம் : பாரீஸ், ஈஃபில் டவரை பாத்துட்டு திரும்பும் போது நம்ம பசங்க ஆடிய ஆட்டத்தை புடிச்சது. பொட்டி - சோனி


கனவு புகைப்படமான மின்னலை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற முயற்சித்த இருள் கவ்விய இரவு பொழுது. இடம் : சூடான், மின்னல் அடிக்கடி மின்னுவதை முழுமையாக பிடிக்க முடியாமல் ஆறுதலுக்கு புடிச்சது. பொட்டி - சோனி

மணல் புயலை புகைப்படம் எடுத்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒடிய மாலை பொழுது. இடம் : சூடான், மணல் புயலை பிடிக்க ஒடிய நம்மை மழை துரத்த தொடங்கிய போது புடிச்சது. பொட்டி - சோனி

Tuesday, October 31, 2006

சினிமா விமர்சனங்கள்

கடந்த இரண்டு மூன்று வாரத்தில் மட்டும் பல திரைப்படங்கள் பாத்தேன். சும்மா ஒரு நாளில் மூன்று நான்கு திரைப்படங்கள் என்ற கணக்கில். அதில் நான் பார்த்த சில தமிழ் படங்களுக்கும் மட்டும் விமர்சனம் எழுதலாம் என்று தான் இந்த பதிவு.

வேட்டையாடு விளையாடு :

ஏற்கனவே நம் மக்கள் இந்த படத்தை பிரித்து மேய்ந்தால், இதை பற்றி பேசவே பயமா இருக்கு. அதனால் நான் கப்சிப். இருந்தாலும் ஒரு சின்ன மேட்டரு அத மட்டும் சொல்லிக்குறேனுங்கோ. யோவ் படம் எடுக்கும், டைரக்ட் பண்ணும் புண்ணியாவன்களே முகர்ஜி போன்ற ஒரு அழகான கவிதையை எல்லாம் ஒரு பாட்டோட காலி பண்ணுவதை நிறுத்துங்கய்யா ப்ளிஸ். வலிக்குது ரொம்பவே வலிக்குது......



நாளை :

ரிச்சர்ட், நட்ராஜ், மதுமிதா, நாசர் மற்றும் பலர் நடித்து உள்ளார்கள். கதை ரொம்பவே சிம்பள் தாங்க. ஜஸ்டின்(ரிச்சர்ட்), நட்டு(நட்ராஜ்) இருவரும் சிறு வயதில் இருந்து நண்பர்கள். அவர்கள் அந்த ஊரின் தாதாவான நாயரிடம்(நாசர்) வளர்கின்றார்கள். நாசருக்காக எதையும் செய்கின்றார்கள். நாசரை இன்னொரு தாதாவின் (தணிகை - காதல் தண்டபாணி) தம்பி(பாலா சிங்) தவறாக பேசி விடுவதால் அந்த தம்பியை பாட்டிலால் குத்தி கொன்று விடுகின்றார்கள். இது கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் அவர்கள் இந்த கொலையை பற்றி ரொம்ப கேஸ்வலாக போனில் பேசுவதை வைத்து அவர்கள் கேரக்டரை புரிந்துக் கொள்ள முடிகின்றது. தணிகை இதுக்கு காரணமான ஜஸ்டின், நட்டுவை நாசரிடம் காவு கேட்கிறார். அந்த சமயத்தில் ஜஸ்டின் தம்பி நாயரிடம் இருந்து பிரிந்து அம்மாவிடம் வளரும் மகளை விரும்புகிறார். அந்த திருமணத்தை ஜஸ்டின், நட்டு நடத்தி வைப்பதால் அவர்கள் மேல் கோபம் கொண்டு நாசர் அவர்கள் இருவரையும் தணிகைக்காக காவு கொடுக்க முடிவு செய்து விடுகிறார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஜஸ்டின் போலீஸிடம் சிக்கி சிறைக்கு சென்று விடுகின்றார். நட்டுக்கு துப்பாக்கி குண்டு காலில் பாய்ந்து ஒரு கால் ஊனம் ஆகி விடுகின்றது.

மூன்று ஆண்டுகள் சிறையில் கழித்து வெளியே வரும் ஜஸ்டின் நட்டுவுடன் சேர்ந்து மீண்டும் அடியாள் தொழிலுக்கு போகாமல் ஒதுங்கி வாழ்கின்றார்கள். இதுக்கு நடுவில் ஜஸ்டினுக்கு மதுமிதா மேல் காதல். இவர் ஜெயிலில் இருந்து வெளியே வரும் வரை இவருக்காக காத்து இருக்கின்றார். இந்த சமயத்தில் ஒரு போலீஸ் கமிஷனர்(போஸ்) எண்டரி குடுக்குறார். எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவேன் அப்படினு அடிக்கடி டயலாக் பேசுகிறார். தணிகை ஆட்களுக்கு ஜஸ்டின் தம்பியுடன் மணல் கடத்தும் விசயத்தில் தகராறு வருகின்றது. இடையில் தாதா வாழ்வில் தனிமை ஏற்பட்டு நாசர் போய் சேர்ந்து விடுகின்றார். போலீஸ் கமிஷனரின் வார்த்தையை கேட்டு தணிகையின் ஆள் ஆதி ஜஸ்டினுக்கு குறி வைத்து குறி தவறாமல் மதுமிதாவை சுட்டு விடுகின்றார். உடனே கோவம் கொண்டு எழும் ஜஸ்டினும், நட்டுவும் எல்லாரையும் கொன்று தாங்களும் இறந்து போகின்றார்கள். படம் அம்புட்டு தான்.

தாதா கதை தான் என்றாலும் இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாக தான் உள்ளது. நல்ல திரைக்கதையமைப்பு. ஆரம்பத்தில் இருந்து சலிப்பு ஏற்படாத வண்ணம் படத்தை எடுத்து சென்று உள்ளார்கள். காமெடி டிராக் என்று தனித்து இல்லாமல் படத்தின் வசனத்தோடு இழைந்து வரும் மாதிரி உள்ளது நல்ல விசயம். எதை பற்றியும் கவலைப்படாத நண்பர்களாக ரிச்சடும், நட்ராஜ்ம் அருமையாக நடித்து உள்ளார்கள். சென்னை செந்தமிழ் தான் படம் முழுவதும். அதிலும் நட்டுவின் வசனங்கள் அருமை. லோக்கால சொல்லனும் என்றால் நல்லா கலாய்ச்சி இருக்காரு. இவர்கள் இளவரசுயிடம் ஐடியா கேட்கும் இடம், பொண்ணு பாக்க சொல்லி மாமா என்று சொல்லுவதும், தண்ணி அடிச்சு அலும்பு பண்ணுவதுமாக ரகளை பண்ணி உள்ளார்கள். இதில் நட்டு அடிக்கடி ஜஸ்டினிடன் "நீ சொன்னா சரி தான் மச்சி" போன்ற வசனங்கள் காட்சிக்கு இயல்பாக பொருந்தி வருகின்றது.

ரிச்சட்டு இப்ப தான் உருப்படியாக ஒரு படம் பண்ணி இருக்கார். நட்ராஜ் அறிமுகம் என்று சொல்கின்றார்கள். ஆனால் ரொம்பவே இயல்பான நடிப்பு. நல்ல எதிர்காலம் உள்ளது. நாசர் நாயராக வழக்கம் போல வாழ்ந்து உள்ளார். மற்ற அனைவருமே சரியாக அவர் அவர் கதாபாத்திரங்களில் பொருந்தி உள்ளார்கள். ஆதி என்று நாசரிடம் அடியாளாக இருக்கும் நபர் நல்ல ஒரு சகுனி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மதுமிதாவ பத்தி என்ன சொல்லுறது. அம்மணி பாக்க நல்லாவே இருக்காங்க. பவுடர மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணி அடிக்கலாம்.

கார்த்தி ராஜா இசை, மற்ற தாதா படங்களை போல் காது வலிக்கும் பிண்ணனி இசை இல்லாமல் இருப்பது ரொம்பவே நல்ல விசயம். இரண்டு, மூன்று பாடல்கள் கேட்கும்படி உள்ளது. அறிமுக இயக்குனர் உதயபானு, அவர் மேல் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார். மொத்ததில் இந்த படம் ஒரு தடவையாச்சும் பார்க்கலாம்.


தூத்துக்குடி :

இதுவும் ஒரு தாதா கூட்டத்தை பற்றிய படம் தான். தயாரிப்பாளர், டைரக்டர், ஹீரோ எல்லாம் ஒருவரே போல, ஹரி குமார். அதான் இம்புட்டு தைரியமா படம் எடுத்து இருக்கார் போல. ஒண்டுவதுக்கு கூட இடம் இல்லாத மஹா ஒரு அடாவடி போலீஸை அடித்து சிறைக்கு செல்கிறார். அங்கு அந்த ஏரியாவிலே பெரிய தாதாவான லிங்கம்(ரஹ்மான்) த்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை கொல்ல முயற்சி செய்கிறார். வெளிய வரும் லிங்கம் இவரையும் வெளியில் எடுத்து தன் ஆட்களை வைத்து கத்தியால் குத்துகிறார். உடனே ஹீரோ லிங்கத்தை பார்த்து பொட்டை என்று சொல்லி தைரியம் இருந்தால் என் உயிரை காப்பாற்றி என்னுடன் ஒண்டிக்கு வா என்று சவால் விடுகின்றார். ரஹ்மானும் உயிரை காப்பாற்றுகிறார். அதில் மனம் மாறி மஹா அவரிடமே அடியாளாக சேர்ந்து விடுகின்றார். பின் லிங்கம் அவ்வப்போது போலீஸ்க்கு தன் ஆட்களில் இருந்து ஒருவனை காவு குடுப்பது தவறு என்று அவருக்கு புரிய வைக்கிறார். நம்பிக்கை துரோகம் செய்யும் எஸ்.பி.யை நடு ரோடில் வைத்து வெட்டுகிறார். போலீஸ் கோபம் கொண்டு மஹாவை காவு கேட்கிறார்கள். லிங்கம் மறுத்து விட்டு தானே செல்கிறார். போலீஸார் மீண்டும் ஒரு சதி பண்ணி எல்லாரையும் கொல்கின்றார்கள்.

இந்த படத்தில் குறிபிட்ட சொல்ல வேண்டிய விசயம் ஒன்னு, படம் முழுவதும் அனைத்து கதாபாத்திரங்களும் தூத்துக்குடி லோக்கல் தமிழ் (நெல்லை தமிழ்) தான் பேசுகின்றார்கள். கேட்க நல்லா தான் இருக்கு. ஹீரோ ஹரி முகத்தில் எந்த ரியாக்சனும் காட்டாமல் நடித்து உள்ளார். தாதா லிங்கமாக ரஹ்மான் நடித்து உள்ளார். அவருக்கு அந்த பாத்திரம் கனச்சிதமாக பொருந்தி உள்ளது. அவரின் வசன உச்சரிப்பும் நல்லா இருக்கு. ஹீரோயினாக கார்த்திகா என்ற ஒரு புது முகம். தாவணி எல்லாம் போட்டு வந்து நம் மனம் கவர்கிறார். அம்புட்டு தான். அவர் படித்து ஆசிரியையாக வேலை பார்த்தாலும் ஒரு ரவடி தனக்கு செய்யும் உதவியை கண்டும், ஒரு முத்தத்துக்கும் அவரை மணக்கிறார். தமிழ் சினிமா வழக்கப்படி கடைசியில் உயிரையும் விடுகிறார்.

மற்றபடி குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் மஹாவின் நண்பராக வரும் ஒருவர் நடிப்பை சொல்லாம். வக்கீலாக வரும் நடிகரும் ஒகே. அவ்வளவு தான். இசை பிரவின் மணி - கருவா பையா என்ற பாட்டு ஹிட்னு சொன்னாங்க. சில தடவை கேட்டுப்பாத்தால் தான் தெரியும். உங்களுக்கு சிடியோ டிக்கட்டோ கிடைத்தால் வேற வேலை ஏதும் இல்லா விட்டால் இந்த படத்தை பாக்க யோசிக்கலாம்.

ஆச்சார்யா :

இதுவும் அடுத்து ஒரு தாதா கூட்டத்தை பற்றிய படம் தாங்க. பிராமண குடும்பத்தில் பிறந்த விக்னேஷ் சிறு வயதிலே பெற்றோர்களை இழந்து சமூகத்தால் வஞ்சிக்கபட்டு ஒன்றும் இல்லாமல் பிழைப்பு தேடி சென்னை வருகின்றார். இரவு பஸ் ஸ்டாப்பில் தன் பையை தவற விட்டதுடன் இல்லாமல் போலீஸாரால் சந்தேக கேஸில் அரஸ்ட் செய்யப்படுகின்றார். இவரை வெளியே போக சொல்லும் போது ஒண்ட இடம் இல்லாத காரணத்தால் போலீஸ் நிலையத்திலே சின்ன சின்ன வேலைகள் செய்துக் கொண்டு இருக்கிறார். ஒரு சமயத்தில் ஒரு கேஸிற்கு ஆள் ஏதும் கிடைக்காத காரணத்தால் எஸ்.ஐ.க்காக யதுநந்தன் - சாமி(விக்னேஷ்) சிறைக்கு செல்கிறார். அங்கு தன் பையை திருடிய கொக்கி (கஞ்சா கருப்பின்) பேச்சை கேட்டு சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு நார்த் மெட்ராஸ் மார்கெட் ஏரியா தாதாவான மாயாக்காவிடம் (வடிவுக்கரசி) போய் சேருகிறார். அனைத்து ஏரியாவுக்கும் பொது தாதாவாக தேவர் (நாசர்).

ஒரு தியேட்டர் விற்கும் பிரச்சனையில் இன்னொரு தாதாவுக்கும், மாயாக்காவுக்கும் சண்டை வருகிறது. தேவர் தீர்த்து வைக்கும் முன்பே பிரச்சனை முற்றி விடுகிறது. அந்த தாதாவால் மாயாக்கா கொல்லப்படுகின்றார். இதனால் வெகுண்ட சாமி அந்த தாதாவை கொல்கிறார். இதை தொடர்ந்து அது மிக பெரிய கேங் வாராக மாறுகின்றது. போலீஸ் கமிஷ்னராக(சரண்ராஜ்) வருபவர் தேவரிடம் சென்று நீங்கள் ஒதுங்கி கொள்ளுங்கள், நாங்கள் மற்றவர்களை பிடித்தோ கொன்றோ விடுகின்றோம் என்று சொல்ல தேவரும் ஒத்துக் கொள்கின்றார். இதனால் ஆத்திரம் அடையும் சாமி மற்றும் பிற தாதாக்கள் அப்ரூவராக மாறி தேவரை சிறையில் அடைக்க முயற்சி செய்கின்றார்கள். அதில் சாமி வெற்றியும் பெறுகின்றார். இதுக்கு நடுவில் சாமி ஒரு பொண்ணை காதலிக்கிறார். அந்த பொண்ணுக்கு போலீஸ் வேலை வாங்கி தருகிறார். இந்த படத்திலும் அந்த பொண்ணை கடைசியில் போட்டு தள்ளி விடுகின்றார்கள். யோவ்... உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாது. அது ஏன்னய்யா ஒரு பொண்ணை இப்படி அநியாயமா எல்லா படத்தில் கொலை செய்து விடுகின்றீர்கள். இதுக்கு ஒரு முடிவு கட்டுங்கய்யா.

இந்த படத்தில் ஒரே ஆறுதல் கஞ்சா கருப்பின் காமெடி. நாசரை இந்த படத்தில் வீண் அடித்து உள்ளார்கள். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக உள்ளது. ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படத்தை சும்மா சப்னு முடித்து உள்ளார்கள். மற்றப்படி சொல்ல ஒன்றும் இல்லை. இயக்குனர், பாலாவிடம் பயின்றவர் என்று சொன்னார்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். இசை ஸ்ரீகாந்த் தேவா... சொன்னா தான் தெரியுது. இந்த படத்தை காலத்தின் கட்டாயத்தால் காண நேர்ந்தால் என் பரிதாப நிலையை நீங்களே புரிஞ்சுப்பீங்க.

Monday, October 30, 2006

உள்கட்டமைப்பு!

இந்தியா ஒரு வல்லரசாக வேண்டும் என்ற கலாமின் கனவு எனக்கும் உண்டு. இந்த கனவுக்காக என்னை யாரும் செருப்பால் அடிப்பதாக இருந்தாலும் நான் வாங்கி கொள்ள தயார். இப்பொழுது இருக்கும் மக்கள் தொகையாலும், இளைஞர் படையாலும் அதற்கான சாத்தியம் நிறையவே உள்ளது என்பது என் எண்ணம். சரி இப்ப நாம வல்லரசு ஆவதை விட்டு விடுவோம். இன்றைய தேதிக்கு நம் நாட்டில் உடனடியாக செய்ய வேண்டிய விசயங்களில் ஒன்று, நாட்டின் உட்கட்டமைப்பு(Infrastructure). இந்த உட்கட்டமைப்பு என்பதில் குடிநீர், சாலைகள், பாலங்கள், மின்சார வசதி, தொலைத் தொடர்பு வசதி, போக்குவரத்து வசதி போன்ற பலவற்றைகளை சொல்லாம்.

நான் பார்த்த வளர்ந்த நாடுகளை விட்டு விடலாம். தற்சமயம் நான் இருக்கும் சூடானில் தலைநகரம் மட்டும் தான் வாழ்வதற்கு தகுந்த நகரம் என்று சொல்லாம். மற்ற நகரங்கள் எல்லாம் சராசரிக்கும் கீழ் தான். அடிப்படை வசதிகள் என்றாலே என்னவென்று தெரியாத அளவுக்கு மோசம். (பல மாநிலத்தின் தலைநகரங்கள்) அப்படிபட்ட சூடானிலே அடிக்கடி தடைப்படும் மின்சார சேவையை முழுவதும் தானியங்கி படுத்தி உள்ளார்கள். இதை ஏன் நம் நாட்டில் இன்னும் செயல் படுத்தவில்லை(எனக்கு தெரிந்த வரை) என்ற ஆச்சரியம் எனக்கு அடிக்கடி ஏற்படுவது உண்டு. அந்த சேவையை இங்கு எப்படி செயல்படுத்துகின்றார்கள் என்பதை சுருக்கமாக காணலாம்.


ஒவ்வொரு வீட்டிலும் பக்கத்தில் படத்தில் உள்ளது போன்ற ஒரு
கருவியை பொருத்தி உள்ளார்கள். அதன் அவுட் புட் வீட்டிற்குள் வரும் மெயினில் இணைத்து உள்ளார்கள். அந்த கருவிக்கு ஒரு எண் நிர்ணயித்து ஒரு அட்டை வழங்கி உள்ளார்கள். நமக்கு எப்பொழுது மின்சாரம் தேவை உள்ளதோ அப்பொழுது மின்சார அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்பு எண் சொல்லி நமக்கு தேவையான அளவு மின்சாரத்தை யூனிட் அளவுகளில் நாம் வாங்கி கொள்ளலாம்.


அதற்கு ஒரு சின்ன ரசீது கொடுகின்றார்கள். அதில் இருக்கும் குறியீட்டு எண்ணை வீட்டில் இருக்கும் கருவியில் அதில் இருக்கும் பட்டன்களை கொண்டு உள் செலுத்தினால், அது எந்த அளவுக்கு நாம் மின்சார யூனிட் வாங்கி இருந்தோமோ அதை திரையில் காட்டும். பின் அதில் இருந்து மின்சாரம் நம் பயன்பாட்டை பொருத்து குறைந்து கொண்டே வரும். மின்சார யூனிட்கள் முற்றிலும் முடிந்த பிறகு நாம் மறுபடியும் பணம் செலுத்தி வாங்கி கொள்ள வேண்டியது தான்.


இதற்கு மாதம் ஒரு குறிப்பிட்ட ஒரு தொகை வாடகையாக
பெற்றுக் கொள்கின்றார்கள். பழைய பாக்கி ஏதும் இருந்தால் அதையும் குறிப்பிட்ட மாத இடைவேளையில் சரியான அளவில் பங்கீட்டு செய்து வசூலித்து விடுகின்றார்கள். இங்கு குறிப்பிட்ட சொல்ல வேண்டிய இன்னொரு விசயம், முதல் 100 யூனிட்கள் வரை ஒரு விகிதம். மேற்கொண்டு போகும் யூனிட்களுக்கு இன்னொரு விதிகம் என்றும் வகைப்படுத்தி உள்ளார்கள்.


இதை நம் தமிழகத்தில் அமல் படுத்தினால் ஏற்படும் சில சாதகங்கள் :

* மாதம் மாதம் மின்சார பணம் கட்ட வேண்டிய தேதிக்குள் கட்ட வேண்டும் என்ற நிலை இருக்காது
* உங்களுக்கு தேவைப்பட்ட அளவு மின்சாரத்தை முன்கூட்டி பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்
* மின்சார பாக்கி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
* மீட்டர் கணக்கு எடுக்க வேண்டும் என்ற நிலை கிடையாது
* இலவச மின்சாரம் குடுப்பது என்றாலும் மாதத்திற்கு இவ்வளவு என குறிப்பிட்ட யூனிட்களை கொடுக்கலாம்.
* திருட்டு மின்சாரத்தை பெரும் அளவு குறைக்கலாம்.

இதை எப்படி அமல்படுத்துவது, ஏற்கனவே இருக்கும் மின்சார மீட்டர் அனைத்தையும் மாற்றுவது என்பது உடனடியாக நடக்கும் காரியாம என்றால கண்டிப்பாக இல்லை தான். இதை சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தலாம். புதிதாக வீடு கட்ட பெறும் ஒரு ஏரியா, ஒரு பெரிய அலுவலக வளாகம் அல்லது ஒரு கிராமத்தையோ நகரத்தையோ தேர்ந்து எடுத்து அங்கு பரிசோதனை முயற்சி செய்து பார்க்கலாம். இந்த கருவிகளை யாரு செய்வது என்பது எல்லாம் நம் நாட்டில் தற்சமயம் ஒரு பொருட்டே கிடையாது. இது மாதிரி வேண்டும் என்றால் நாம் கேட்ட விலையை விட குறைந்த விலைக்கு செய்து கொடுக்கும் திறமையும், ஆட் பலமும் நம் நாட்டில் உள்ளது.


இந்த திட்டத்தில் எந்த குறையும் கிடையாதா, இதை தவறாக பயன்படுத்த முடியாது என்று கேட்டால் கண்டிப்பாக இருக்கும், அதை சரி செய்ய வேண்டும். நானே அந்த கருவிக்கு முன்னால் வரும் வயரை கட் பண்ணி செக் பண்ணனும் என்று இருந்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக செய்ய முடியவில்லை. அதுவும் இல்லாமல் அவ்வளவு சுலபமாக இருக்காது என்பதும் என் எண்ணம். நானே இப்படினா, காளை மாட்டிலும் பால் கறக்கும் ஆட்கள் நம்ம ஆட்கள். ஒரு பொருளை உருவாக்க சிந்திக்கும் மக்களை விட அதை எப்படி மிஸ்யூஸ் பண்ணலாம் என்று கிரிமினல் மூளையுடன் யோசிக்கும் மக்கள் தான் அதிகம். அவர்களையும் கணக்கில் கொண்டு இந்த கருவிகளை உருவாக்க வேண்டும். உதாரணமாக இதை கிட்டதட்ட ஒரு ப்ரி பேய்டு செல் போன் போன்று கொண்டு வரலாம்.

ஒவ்வொரு கருவிகளுக்கும் ஒரு யூனிக் நம்பர் அசைன் பண்ணலாம், ஏரியா, ஊர் வைத்து அவைகளை பிரிக்கலாம் அல்லது மின்சார நிலையத்தை வைத்தும் பிரிக்கலாம். இதை செய்தாலே பாதி வேலை முடிந்தது. காசு இருக்கும் வரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். முடிந்து விட்டால் நோ சர்வீஸ். மின்சார ப்ரி பேய்டு அட்டைகளை பல இடங்களில் கிடைக்கும் படி செய்யலாம். நாம் செல்போனை கடையில் கொடுத்து ரீ சார்ஜ் செய்வது போல் இதை செய்வது சற்று கடினம். கார்டு வாங்கி வந்து நம்மாளக செய்யவது சற்று சுலபம். அந்த ரீ சார்ஜ் கார்டில் எவ்வளவு சார்ஜ் பிடித்தம் செய்ய வேண்டுமோ அதை பிடித்தம் செய்து பாக்கி காசுக்கு யூனிட் கொடுக்கலாம்.


செல்போனில் எப்படி மாதம் மாதம் ஒரு சில குறிப்பிட்ட சேவைகளுக்கு கட்டணம் தானாக குறைந்து விடுமோ அது போல மாத வாடகையை தானாக குறையும் படி செய்து விடலாம். இந்த வகை அட்டைகளை எல்லா இடங்களிலும் கிடைக்கும் படி செய்யலாம். முன்பு மீட்டர் கணக்கு எடுக்க வந்த நபர்களை இந்த அட்டைகளை குடுத்து பணம் வாங்கி வர வைக்கலாம்.

இவ்வளவு தாங்க எனக்கு தோன்றியது. தீடிரென்று தோணியது, அப்படியே எழுதியாச்சு. இன்னும் சற்று வர்கார்ந்து யோசித்தால் இன்னும் கொஞ்சம் சுலபமான வழி புலப்படலாம். ஆனால் இது போன்ற சேவைகள் நம் நாட்டில் எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக தொடங்க பெறுகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லதுங்க.

நட்சத்திரம் - மெய்யாலுமா?

வணக்கம், வணக்கம்.

என்னங்க சொல்லுறீங்க !!!!!!!

நானா மெய்யாலுமா? யம்மா இருக்காதும்மா. நீங்க வேற யாரையோ நினைச்சு என்கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க போல.

ஆமாம் நான் தான் சிவா

அப்ப நான் தானா?

இல்லங்க இங்கன ஏகப்பட்ட சிவாகள் இருக்காங்க, அட்ரஸ் மாத்தி வந்து இருக்க போறீங்க,

நாகை சிவா தானா !

ஆங் புரிஞ்சி போச்சுங்க இப்ப, சின்ன பையன் தானேனு விளையாடுறீங்களா?

இல்லையா......

நான் எப்படிங்க அங்க எல்லாம், சே... சே... இருக்காது. நான் சும்மா கொசுவையும், சிட்டுக்குருவியையும் வச்சு பொழப்ப ஒட்டிக்கிட்டு இருக்கேன். நமக்கு எல்லாம் அந்த குடுப்பினை கிடைக்காது. வேணுமுனா யாருக்காச்சும் வால் நட்சத்திரமாக இருக்கலாம்.

இல்லையா, உண்மையாக தான் சொல்லுறீங்களா.....

நம்பலாமா?

நம்பி தான் ஆகனுமா, ஆகா இந்த நேரம் பார்த்து பக்கத்தில் எவனும் இல்லையே, இருந்தா அவன கிள்ளி பார்த்து கனவா இல்ல நனவா கன்பார்ம் பண்ணிடலாம். யோவ் ஜார்ஜ், புடின், பிளேயர் எங்கய்யா போனீங்க நீங்க எல்லாம்......

அவங்களை எல்லாம் கூப்பிட வேண்டாமா.... ஏன்

நனவு தானா....

இது என்னடா தமிழ்மணத்திற்கு வந்த சோதனை !!!

இதை தான் குப்பையும் ஒரு நாள் கோபுரத்தில் ஏறும் என்பார்களோ?

சரி ஏதோ காற்று கொஞ்சம் பலமா அடிச்சி கோபுரத்தில் ஏறியாச்சு, அடுத்த காற்று அடிப்பதற்கு முன்பு என்ன என்ன உளறனமோ அதை எல்லாத்தையும் உளறிட்டு போயிறேன். அந்த உளறலை கேட்டு விட்டு ரொம்ப கோவப்படாம பார்த்து பக்குவமா வேப்பிலை அடிங்க. அதை விட்டு மாட்டுனாடா அனமாத்தா ஒரு ஆளுனு நினைச்சு எல்லாரும் சேர்ந்து கும்மி அடிச்சுட்டு போயிடாதீங்க. அப்புறம் எங்க தல கைப்பூ வ கூட்டி வந்து நியாயம் கேட்பேன் சொல்லிட்டேன்.

உலகத்தில் இருக்கும் எல்லா சாமிகளையும் வேண்டிக்கிட்டு இந்த வார முழுவதும் உங்களை தொல்லை பண்ணப் போகின்றேன்.

வந்து வாழ்த்திட்டு போங்க புண்ணியவான்களே....... எதுக்குனு கேட்குறீங்களா.... நட்சத்திரமாக தேர்ந்து எடுத்ததுக்கும் அதுவே 50 வது பதிவாக அமைந்தற்க்கும் தான்.

Friday, October 27, 2006

கவுண்டரின் லொள்ளு - 2

மேஜிக் : இது வரை நீங்கள் பார்த்து காட்சிகளில்

கவுண்டர் : நிறுத்து மாப்ளே, ஹயேய் ஸ்டாப் இட்...டேய் மாஜிக், இது எல்லாம் ஒரு வித்தனு மேட போட்டு ஒன்னு தெரியாத அப்பாவி ஜனங்களை ஏமாத்திக்கிட்டு இருக்கியா

மேஜிக் : தம்பி, தொழில் நடக்கும் இடத்தில் இந்த மாதிரி வந்து கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்காதப்பா

கவுண்டர் : ஆமாம் இவரு பெரிய போர்ட் கம்பெனி நடத்துறார், இவருக்கிட்ட வந்து நாங்க கலாட்டா பண்ணுறோம், டேய் மாஜிக் நீ வேண்ணா இந்த ஏமாந்த ஜனங்களை மறுபடி மறுபடியும் ஏமாத்திக்கிட்டு இருக்கலாம். ஆனா எங்கள மாதிரி கிளேவர்ஸ்க்கிட்ட உங்க ஆட்டம் எல்லாம் நடக்காது பாவா.

மேஜிக் : இவ்வளவு பேசுறீயே, என்ன மாதிரி காசு மழை வரவழைக்க வேண்டும். ஒரு காசு போட்டு இரண்டு காசு வர வை பாக்கலாம்.

கவுண்டர் : ஆஹா ஹா, வெரி சிம்பிள், அம்மி குத்தவதுக்கு சிற்பி எதற்கு? இந்த மாதிரி வேலை எல்லாம் என் மாப்பிள்ளை டாடா பிர்லா, மாப்பிள்ளை இந்தா இத மேல சுத்தி விடு

கார்த்திக் : மாம்ஸ், அவங்க ஏதோ மேஜிக் கத்து வச்சுக்கிட்டு இத எல்லாம் பண்ணுறாங்க, என்னால அத எல்லாம் முடியாது

கவுண்டர் : மாப்பிள்ளை உன் பவர் உனக்கு தெரியாது, நீ சுண்டி விடு
கார்த்திக் : அட என்னால பண்ண முடியாது மாம்ஸ்
கவுண்டர் : யோவ் அதான் பண்ண முடியாதுனு சொல்லுறார்ல, அப்புறம் ஏன்ய்யா நிக்குறீங்க. எல்லாம் போங்கய்யா

ஒருவர் : என்ன விளையாடுறீங்களா, எங்கள மாதிரி வேல வெட்டி இல்லாதவங்களுக்கு இது ஒன்னு தான் எண்டர்டெயின்மெண்ட். அவன் செய்யுறது புடிக்கலனா நீங்க செய்யுங்க

கவுண்டர் : ஏய், அவனையும் செய்ய விட மாட்டோம், நாங்களும் செய்ய மாட்டோம், இந்த கேப்புல ஒடிப் போயிடு. ஏன்னடா பொரடிய சொறியுற

ஒருவர் : டாய், இப்ப காசு சுண்டி போடனும், எதாச்சும் வரணும், நாங்க எல்லாம் வேடிக்கை பாக்கனும்

கவுண்டர் : அண்ணா கொஞ்சம் கைய எடுங்கண்ணா...மாப்பிள்ளை இப்ப உன் மாமனோட உசுர அவன் கையில, பேசமா காசு சுண்டி போடு

கார்த்திக் : ஏதுவும் வராதே

கவுண்டர் :வராதுனு எனக்கும் தெரியும். நீ மேல சுண்டி விடு, எல்லாரும் அண்ணாந்து பாத்துக்கிட்டு இருப்பாங்க, நம்ம காலுக்குள்ள புகுந்து ஒடி போயிடலாம்

கார்த்திக் : உங்களோட,.... சரி போட்டு தொலைக்குறேன்.
**********

ஒருவர் : ஆங், எல்லாம் திருப்தியா சாப்பிடுங்க...மாப்ளே, நீங்க நல்லா சாப்பிடுங்க

கவுண்டர் : போடா டேய் போடா, பொண்ணு வீட்டுக்காரனாம், புளியாங்கொட்டை தலையன். மாப்பிள, நீ சாப்பிடு

விவேக் : இந்த பழம் இருக்கு பாரு பழம்

கார்த்திக் : உங்களுக்கே இது நல்லா இருக்கா, நிச்சயதார்த்தை நிறுத்த போறேன் சொல்லிட்டு, இப்படி பாத்தி கட்டி சாப்பிடுறீங்களே, உங்கள போயி நம்புன பாருங்க என்ன சொல்லனும்.

விவேக் : சக்தி, ரொம்ப டென்ஷன் ஆவாது, நாங்க பிரச்சனையே சாப்பிட்டில் இருந்து தானே ஆரம்பிக்க போறோம்.

கார்த்திக் : ஆஹா நீங்க என்ன பண்ண போறீங்கனு எனக்கு தெரியாதா, சாப்பாடு நல்லா இல்லனு சொல்ல போறீங்க, அவங்க பிரியாணிய கொண்டு வந்து கொட்டோ கொட்டுனு கொட்ட போறாங்க. நீங்களும் மூக்கு பிடிக்க தின்னுட்டு கவுந்துடிச்சு தூங்க போறீங்க, விவஸ்த கெட்டவங்களா

கவுண்டர் : மாப்பிள, டிஸ்பிளின் மெயிண்டன் பண்ணு, இந்த மாதிரி எல்லாம் பேசாத, எனக்கு பிடிக்காது , அது எல்லாம் நடக்க போற கல்யாணத்துல தான் நாங்க அது எல்லாம் பண்ணுவோம். நடக்காத கல்யாணத்துல நாங்க அப்படி பண்ண மாட்டோம். உன் மாமனோட டேலண்ட்ட பாரு, பிரதர் மேட்டரு ஏடு

கார்த்திக் : மாமா என்னா இது

கவுண்டர் : சோத்துல கல்

கார்த்திக் : ஐயோ

கவுண்டர் : யாருடா பொண்ணு வீட்டுக்காரன் வாடா

ஒருவர் : ஏனுங்க நான் தானுங்க

கவுண்டர் : என்னடா சோத்துல கல்லு

ஒருவர் : ஆங், சோத்துல சின்ன கல்லு வரும் பாத்து இருக்கேன், கேள்விப்பட்டு இருக்கேன், இவ்வளவோ பெரிய கல்லு எப்படிங்க வந்துச்சு

கவுண்டர் : என்ன கேட்டா, அப்ப நான் கீழ இருந்து எடுத்து வச்சேனா
விவேக் : இல்ல நான் தான் இங்க இருந்து எடுத்துக் கொடுத்தேனா

கவுண்டர் : இல்ல அத வாங்கி அத நடுசோத்துல வச்சேனா

ஒருவர் : இல்ல இவ்வளவு பெரிய கல்லு எப்படி தட்டு பட்டுச்சு

கவுண்டர் : என்னடா கிறுத்தனமா கேள்வி கேட்குற, சோத்த நான் பிசையும் போது விரல்ல அடிப்பட்டுச்சுடா. கம் டூ த பாயிண்ட், இன்னிக்கு சோத்துல கல் போட்ட நீங்க, நாளைக்கு என் மாப்பிள்ளை தூங்கும் போது தலைல கல்ல போட மாட்டீங்கறது என்ன கியாரண்டி.

கார்த்திக் : ஆமாம்மா எனக்கு பயமா இருக்கு, வாங்க எல்லாரும் போகலாம்.

கவுண்டர் : சோ நிச்சயதார்த்தம் கேன்சல், மாப்பிள்ள வீட்டுக்காரங்க எல்லாம் ஏந்துறீங்கடா...

ஒருவர் : ஆஹாஹா...ஆஹாஹா...இல்ல மாப்பிள வீட்டுக்காரங்க குறும்புக்காரங்க சொல்லி இருக்காங்க, இவ்வளவு தமாசு
பண்ணுவீங்க தெரியாதுங்க, தாமாசுனு தாமாசு தான்

கவுண்டர் : டேய் சிரிக்காதடா சிரியஸ்டா இது

ஒருவர் : அட போங்க நீங்க வேற

கவுண்டர் : டேய் சண்டைக்கு வாடா என் கூட

ஒருவர் : என்ன போங்க தமாஷ்

கவுண்டர் : டேய் சண்டைக்கு வாடா

ஒருவர் : அட எப்பவும் தமாஷ் தானா

கவுண்டர் : டேய் சண்டைக்கு வாடா

ஒருவர் : என்ன விளையாட்டு இது

கவுண்டர் : டேய் யாராச்சும் பொண்ணு வீட்டுக்காரங்க என் கூட சண்டைக்கு வாங்கடா...சண்டக்கு வாங்கடா...டேய்......

**********

கவுண்டர் : டேய் திரும்புடா, என்னடா ஸ்டைலு ஸ்டைலு ஸ்டைலு...யார பாத்துடா என்ன வார்த்தைடா பேசுறுடா

விவேக் : ஹலோ என்ன சொல்லுறான் இவன்

கவுண்டர் : ஒன்னுமே பேச மாட்டேங்குறான் கல்லுளி நாய் மாதிரி

விவேக் : டேய் அண்ணன் கேட்குறாரு, குத்து மதிப்பாச்சும் ஏதும் சொல்லேன் டா, சொல்டா, சொல்டா

கவுண்டர் : சொல்ல மாட்டான் டா இவன், சொல்ல மாட்டான் டா இவன்

ஒருவர் : ஏய் ஏய் ஏன் அடிக்குறீங்க , இவன் என்ன செஞ்சான்

கவுண்டர் : யோவ், இந்த ஊருக்குள்ளே நான் மானஸ்தன், தர்மஸ்தன், என்ன பார்த்த அந்த வார்த்தைய கேட்டுபுட்டான் டா

ஒருவர் : என்ன தம்பி விளையாடுறீங்களா

விவேக் : யாரு விளையாடுற

கவுண்டர் : டேய் விளையாட்டு என்னடா விளையாட்டு இவன் டா பேசுனான்
ஒருவர் : அவன் பிறவிலே ஊமை, அவன் பேசுறான் சொன்னா யாராச்சும் நம்புவாங்களா

கவுண்டர் : ஹே ஹே , ஒ ஒ ஒக் ஒ உ உ ஊமையாம் ஹோ ஹோ...அய்யயோ உ உ உ ஒ ஒ ஒ
**********

கவுண்டர் : அய்யா, கத்திரிக்காய தொட்டா கூட கன்னி போயிடும்
புடலங்காயா தொட்டா கூட புட்டுக்கிட்டு போயிடும்
வெண்டைக்காயா தொட்டா கூட வெம்பி போயிடும்
சுண்டைக்காய தொட்டா கூட சுண்டி போயிடும்.

எங்கயாவது கோழி முட்டையிட்டு கொசு அடைக்காக்குமா
இல்ல கொசு தான் முட்டையிட்டு கோழி அடைக்காக்குமா

விவேக் : பிரதர் எதுக்கு இதை எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க

கவுண்டர் : என்ன பேசுறது தெரியாமா தாண்டா இதை எல்லாம் பேசிக்கிட்டு இருக்கேன்.

**********

Thursday, October 26, 2006

கவுண்டரின் லொள்ளு - 1

ஐயாம் சக்திவேல், எயித்து ஸ்டாண்ட்ர்ட், ராஜக்கபாளையம் உயர்நிலைப்பள்ளி.
ஐயாம் குண்டலக்கேசி, செண்ட் ஸ்டாண்ட்ர்ட், அவ்வையார் ஆரம்ப பாடசாலை..... இருப்பா டிகிரி சொல்ல விட மாட்டேங்குற

**********

அவன் சீவுறேன், சீவுறேன் சொல்லுறானே அது யார தெரியுமா
யார
நம்ம இரண்டு பெயர தான். இதான் லாஸ்ட் சான்ஸ், வா ஒடிப் போயிடலாம்
அட இதுக்கு எல்லாம் போயி பயந்துக்கிட்டு, அவன் அவன் காதலுக்காக உயிர விடுறான்
யப்பா உன் காதலுக்கு நீ உயிர விடுப்பா, கூட வந்த பாவத்துக்கு நான் ஏன் உயிர விடனும்
நீங்க தானா என் மாமா
யப்பா மண்ணுக்காக செத்தா ஒரு மரியாதை இருக்கும், பொண்ணுக்காக செத்தா ரொம்ப கேவலம்ப்பா
நான் பாத்துக்குறேன்
நீ தான் வரவன் போறவன எல்லாம் பாக்குறிய, ஒன்னும் செய்ய மாட்டீங்கிறீயே

மாப்புள, உன்க்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும்
அத எல்லாம் அப்புறம் சொல்லுங்க
மாப்புள, என் லைப்புல ஒரு இளந்தென்றல் கிராஸ் ஆயிடுச்சு
அது ஆகட்டும், நான் முதல இங்க
மாப்புள, என்ன ஒரு பொண்ணு லவ் பண்ணுறா
இந்த வயசிலா
அட எனக்கு என்ன இருநாறு, மூன்னூறா? உன்ன விட ஒரு இரண்டு வயசு கூட
மாம்ஸ்
சரி, சரி, காதல்ல இது எல்லாம் சகஜம்ப்பா
அத எல்லாம் இருக்கட்டும், என் ஜம்போ போயிடுச்சு
அது போகட்டும், நீ வா, வந்து என் செளத் இந்தியன் டயானாவ பாரு
எங்க உங்க டயானா
நான் இங்க தான் மாப்புள மீட் பண்ணுனேன்.
வாட் ஏ ப்பியுட்டி, யங் கேள், இவ தான் என் கனவு பன்னி சீ கன்னி
மாப், ஏய், இது தான் இவன்க்கிட்ட இருக்கும் கெட்ட பழக்கம், கூடவே ஒட்டிக்கிட்டு இருப்பான், தீடிருனு கிராஸ் ஆயி போயிடுவான்
ஹாய், ஐ கம்ய்யா

மாப்புள, என்ன பாதில உட்டுட்டு வந்துட்ட
நான் அது, ஜம்போ ஜம்போ
யோவ் எங்க ஜம்புறது
மாம்ஸ், எனக்கே ஒரு எப்பவோ ஒரு தடவை தான் ஐ லவ் யூ சொல்ல தைரியம் வருது. நீங்க நடுவுல வந்து டிஸ்டப் பண்ணுறீங்க
யோவ், எனக்கும் எப்பவோ ஒரு தடவை தான்ய்யா பொண்ணு கிடைக்குது, என் செளத் இந்தியன் டயானா வந்து ஒரு தடவை பாத்துட்டு வந்துடு, அப்புறம் என் லவ் நான் அவளுக்கு டெலிகேஸ்ட் பண்ணிக்குறேன்

அது எல்லாம் முடியாது, என் ஜம்போ
ஹும் ஹும். இங்க பாரு, உன்னால என் காதல் வாழ்க்கை அழிஞ்சதுனு கெட்ட பெயருக்கு நீ ஆளாகாத, டேய் நிறுத்துடா என்ன பிரச்சனை நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கோம், இடையில லபக்கு லபக்குனு முழுங்கிட்டு இருக்கீயே. அது என்னடா ஒருத்தனுக்கு இவ்வளவு அப்பளம் தேவையா, கேளுடா
ஏய் இனிமே எந்த கல்யாணத்துக்கு போனாலும் சத்தியமா நான் சாப்பிட மாட்டேன்ய்யா
டேய் சாப்பிட மாட்டேனு சோத்த எங்கடா எடுத்துட்டு போற, வச்சுட்டு போடா
மாம்ஸ், இப்ப நான் என்ன தான் பண்ணனும்.
என் லவ் டெவலப் பண்னனும்
சரி வாங்க
வா

மாம்ஸ் மீட் மை டயானா
ஆ எங்அ
ஐய்யயோ, மாம்ஸ் என்னது இது. இத எல்லாம் அத்தையா ஏத்துக்க முடியாது
மாப்பிள, அதையும் இதையும் பேசி என் லவ்வ கெடுத்துடாத மாப்பிள. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பொண்ணு கிடைச்சி இருக்கு. லவ் பண்ணி இருக்கேன். ப்ளிஷ், எஸ்யூகிஸ் மீ. கொஞ்சம் வெயிட் பண்ணுய்யா, நான் ரொமான்ஸ் பண்ணிட்டு வந்துடுறேன். ஹாய் டய், டய், வெயிட், வெயிட்ய்யா..
ஹாய் டயா

ஹாய்
ஹாய் வாட்ஸ் யூவர் நேம்
மை நேம் இஸ் குண்டலக்கேசி, யூவர் நேம் ப்ளிஸ்
மந்தாயிகினி
ஸ்வீட் நேம்
15 வருஷமா இந்த காளைய அடக்கி கல்ல தூக்குறவர தான் நான் கல்யாணம் பண்ணிக்கனும் வைராக்கியமா இருந்தேன்.
இந்தன வருஷத்துக்கு அப்புறம் இன்னிக்கு தான் ஒரு பெரிய மாவீரன சந்திச்சு இருக்கேன்.
இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஐ லவ் யூ
ஐ த்ரீ லவ் யூ

மாப்பிள
யார்டா நாயே
மாப்பிள
யார்டா நீ
பொண்ணுடோ அண்ணன், மாப்பிள மாப்பிள என் தங்கச்சி தேடிக்கிட்டு இருந்த அந்த மாவீரன் நீங்க தானா. நீங்க யாரு என்னனு விபரமா சொன்னா, முறையா பேசி கல்யாணத்த முடிச்சிடலாம்
என்ன பத்தி எங்க ஊர்ல வந்து கேட்டு பாருடா
எந்த ஊரு
வெள்ளாங்க கோவில்டா
வெள்ளாங்க கோவிலா, எந்த குடும்பம்
வீரமுத்து கவுண்டர் குடும்பம்டா
ஆங், வீர முத்து கவுண்டர் குடும்பமா?

டேய் எதுக்குடா சட்டைய பிடிக்குற
கல்யாணத்த நிறுத்த வந்த பங்காளி வீட்டு பசங்க நீங்க தான்
யெஸ்டா, நோடா
டேய் நம்ம தேடிக்கிட்டு இருந்த பங்காளி வீட்டு பசங்க இங்க தான் இருக்காங்க, சீக்கிரம் வாங்கடா, கத்தி, கடப்பரை எல்லாம் எடுத்துட்டு வாங்கடா

ஐய்யோ, மாப்புள நாம தான் பங்காளி வீட்டு பசங்கனு இந்த பண்ணாடைகளுக்கு தெரிஞ்சு போச்சுப்பா
டேய் என்ன சிரிக்குற
மாப்புள ஏன்ய்யா ஒடுற
ஐய்யயோ, உன்க்கிட்ட உண்டான கெட்டப் பழக்கம் இதான்ய்யா. கரெக்டா லாக்கர்ல மாட்டி விட்டுட்டு எஸ்கேப் ஆயிடுவேய்யா. சரி நான் சமாளிக்குறேன்

கைய எடுடா,
எதுக்குடா
எடுடா சொல்லுறேன்
சொல்டா
சொல்றேன் டா
சொல்டா
சொல்றேன் டா, இப்ப புடிடா பாக்கலாம்
**********

Monday, October 23, 2006

தீபாவளி கொண்டாட்டம்!

இந்த தீபாவளிக்கு முன்பு வரை தீபாவளி அன்று ஊரில் இல்லாமல் இருந்தது இல்லை(தாத்தா மறைந்த வருடத்தை தவிர). இந்த வருடம் ஊருக்கு போக முடியாது என்று தெரிந்தவுடன் மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அப்புறம் சிலதை பெற சிலதை இழப்பது தானே வாழ்க்கை(தத்துவம் நல்லா இருக்குல) என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லி மனதை தேற்றிக் கொண்டேன். இதுக்கு நடுவில் நம் வீட்டிற்கு போன் பண்ணும் போது எல்லாம் புது துணி எடுத்துட்டியானு ஒரே குடைச்சல். நானும் புது துணி ஒன்னுக்கு தான் இங்க குறைச்சல்னு சொல்லிட்டேன். வியாழக்கிழமை அன்னிக்கு காலையில தலைநகரத்தில் இருக்கும் நம்ம பய போன் பண்ணி என்ன சிவா, இந்த தடவை தீபாவளிக்கு வீட்டுக்கு போக முடியாம போச்சேனு பீல் பண்ணி நம்மளையும் பீல் பண்ண வச்சுட்டான். டேய், பேசாம நீ இங்க வாடா நாம் எதாச்சும் பண்ணலாம் அவனை கூப்பிட்டேன், அது சரியா வராது நீங்க இங்க வாங்க நான் மத்த பசங்களையும் கூப்பிடுறேன் சொல்ல, இதுவும் நல்ல ஐடியாவே இருக்குனு உடனே கிளம்பியாச்சு. வியாழன் இரவு அங்க போயிட்டு அடுத்த நாள் சமைக்க வேண்டியது எல்லாம் வாங்கிட்டு, நல்லா சாப்பிட்டுட்டு தூங்கியாச்சு.

வெள்ளிக்கிழமை நாம எப்படி தீபாவளி கொண்டாடுவது என்று திட்டம் வகுக்கும் படலம் ஆரம்பித்தது. பசங்க ஆளுக்கு ஒன்னா சொல்லிக்கிட்டு இருந்தாங்க, நாம நாட்டாமை மாதிரி நடுவில் புகுந்து புது துணி எடுக்குறோம், சுழியம், வடை, பாயசத்துடன் செய்து சாப்பிடுறோம், மத்த பசங்களை போயி பாக்குறோம். இது இந்த நாட்டாமை தீர்ப்பு எவனும் தீர்ப்ப மாத்த சொல்லக்கூடாது, வண்டிய உடுங்கடா டிரஸ் எடுக்க போவோம் சொல்லிட்டேன். டிரஸ் எடுக்க போனா ஒரு கடை கூட இல்ல. என்னடானு பாத்தா நைட் எட்டு மணிக்கு மேல தான் திறப்பாங்க சொல்லிட்டானுங்க. சரினு மத்த தமிழ் பசங்களை பாக்கலாம் போயி எல்லா மக்களையும் பார்த்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம் என்பதை விட நல்லா சாப்பிட்டோம். அப்பால போயி டிரஸ் எடுத்துட்டு மறுபடியும் போய் மத்த பசங்களை பார்த்துட்டு தீபாவளிக்கு அவர் அவர்கள் ஊரில் அடித்த கூத்துக்களை எல்லாம் சொல்லி மகிழ்ந்தோம். வீட்டிற்கு வர மணி 2.30 ஆச்சு.

தீபாவளி அன்று நல்லா தூங்கிட்டு இருக்கும் போது அதிகாலையில்(7.20) இல்ல இல்ல நடு ராத்திரினு கூட சொல்லாம் நம்ம கைப்பேசி தூது வருமா தூது வருமா சவுண்டு விட எடுத்து பாத்தா வேற யாரு, இந்த புண்ணியவான பெற்ற மகான்கள் தான். அவங்கிட்ட வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொண்டு நம் பணியை தொடர முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கும் போது நம்ம பய வந்து ஒரு அதிமுக்கியமான கேள்விய கேட்டான். சிவா, தலைக்கு எண்ணெய் வைக்கனும், உன்கிட்ட நல்லெண்ணெய், அரப்பு, சீயக்காய் எல்லாம் வச்சு இருக்கியானு கேட்டான். டேய், நல்ல நாள் அதுமா என்ன கொலைக்காரனா ஆக்காம ஒடிப் போயிடுனு சொல்லிட்டு விட்ட பணிய தொடர போன சமயத்தில் வேற ஒருத்தன் காபியுடன் வந்தான். படுக்கை காபி கொடுக்கும், நீ வாழ்க உன் குடும்பம் வாழ்கனு சொல்லிட்டு காபி கொடுடா கேட்க போயி பல் தேய்ச்சுட்டு வாங்குறான். டேய் எங்க இருந்துடா வறீங்க நீங்க எல்லாம், போயி என்ன என்ன பண்ண சொன்னேனூ அத பண்ணுங்கடா சொல்லிட்டு காபிய குடிச்சு முடிச்சுட்டு சேம் ஜாப்பை தொடர போகலாம்னா வந்தான்ய்யா மறுபடியும் சிவா தலைக்கு எண்ணெய் வைக்கனும் என்பது சாஸ்த்திரம். அத பண்ணாட்டி அப்புறம் என்ன தீபாவளினு கேட்க சரி நம்ம பய ரொம்ப தான் பீல் பண்ணுறான் சொல்லிட்டு நீ ஒன்னு பண்ணு, சமையல் அறையில் இருக்கும் கார்ன் ஆயிலையோ இல்ல தேங்காய் எண்ணெய்யோ எடுத்து தேச்சுக்கோ எந்த எண்ணெயா இருந்தாலும் மனதில் இறைவனை நினைத்துட்டு தேச்சா அது நல்லெண்ணெய் தான் என்று ஒரு சூப்பர் தத்துவம் + ஐடியா கொடுத்தேன். அவன் தேங்காய் எண்ணெய எடுத்துக்கிட்டு வந்து கேட்டான் பாருங்க அடுத்து ஒரு கேள்வி, மாப்ஸ் நான் நிற்கிற இடத்தில் இருந்து கிழக்கு பக்கம் ஏதுனு சொல்லுனான். மவனே சொல்லிட்டு அடுத்த வார்த்தை சொல்லங்காட்டியும், நம்ம முகம் போன போக்கை பாத்துட்டு ஏதும் கேட்காம ஒடி போயிட்டான். ஒரு வழியா எல்லாரும் குளிச்சு முடிச்சுட்டு புது துணி எல்லாம் போட்டு சாமிக்கிட்ட ஒரு பேரம் நடத்தி முடிச்சுட்டு வந்து பாத்தா வடையையும் காணாம், சுழியத்தையும் காணாம். டேய் என்னங்கடா எதையும் காணாம் கேட்டா, நீ வடைக்கும், சுழியத்துக்கும் தேவையான எதையும் வாங்கல அப்புறம் எப்படினு நம்மளையே எதிர் கேள்வி கேட்குறானுங்க. சரி இது இப்ப வேலைக்கு ஆகாதுனு வச்ச தோசைய சாப்பிட்டுட்டு, ஒன்னும் பிரச்சனை இல்ல நாம அந்த வடை, சுழியம் மேட்டர கொஞ்ச நேரத்துக்கு போஸ்ட் போன் பண்ணிக்கலாம் என்று சொல்லிட்டு மற்ற பசங்களை பார்க்க போயிட்டு அப்படியே வடை, பாயாசம் வைப்பதுக்கு தேவையான மேட்டரையும் வாங்கி கொடுத்துட்டு நம்ம பசங்க கிட்ட எதை எப்படி செய்யனும் என்பதை சொல்லிட்டு நாம் எஸ் ஆயிட்டோம். நம் அலுவலக மக்களை பார்க்க. வெல்லம் கிடைக்கல அதுனால சுழியம் கேன்சல்.

ஆனாலும் நம்ம பசங்க கெட்டிக்கார பசங்க, என்ன சொன்னமோ அதை கரேட்டா பண்ணி இருந்தாங்க, சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், பாயாசம் என்று சூப்பரா பண்ணி இருந்தானுங்க. வடை என்னடா ஆச்சுனு கேட்டா மிக்ஸ்சில மாவு ஒடிக்கிட்டு இருக்குனூங்க. சரினுட்டு சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிட்டு நம் நாட்டு மக்களுக்கு போன் பண்ண மறுபடியும் எஸ் ஆயிட்டேன். போன கொஞ்ச நேரத்தில் நம்ம பய போன் பண்ணி வடை போடுவதில் கொஞ்சம் சிக்கலா இருக்கு வந்து சீக்கிரம் தீர்த்து வைப்புனு கேட்க, சிக்கல் என்னும் ஊருக்கு பக்கத்தில் இருந்து வரும் நமக்கே சிக்கல் சவால் விடுவதானு போயி என்னனு கேட்டா, வடை தட்ட வர மாட்டேங்குதுனாங்க, ஒத்துங்கடா சொல்லிட்டு வீராப்பா நானும் வடைய தட்ட முயற்சி செய்து பார்த்தேன். ஒன்னும் சரியா வரல, சரி நம்ம அம்மாவுக்கு போன் பண்ணி என்ன பண்ணலாம் என்று கேட்போம் திங்க் பண்ணும் போதே வடைய போண்டா ஆக்கிட்டா என்னனு ஒரு சின்ன சின்னதா புடிச்சி போட்டா சூப்பர வந்துச்சு. சரி எல்லா மாவையும் அது மாதிரி போட்டு எடுத்தேன். வடைக்கு தேங்காய் சட்னி வச்சு சாப்பிட்டா சூப்பரா இருக்கும்னு பக்கத்தில் நின்னு வேடிக்கை பாத்துட்டு இருந்த பய சொல்ல, தேங்காய் இங்க கிடைக்காது இருந்தாலும் நீ சட்னிக்கு ஆசைப்பட்டுட்ட அதனால் வெங்காயம், தக்காளி எடுத்து வெட்டுனு அவனுக்கு ஒரு வேல கொடுத்து சட்னியும் ரெடி பண்ணியாச்சு.

நம்ம மற்ற பசங்களும் நம்ம வீட்டுக்கு வர அவங்களுக்கு வடை, பாயசம் கொடுக்க அதில் ஒருத்தன் வடை பார்த்துட்டு என்ன இது சிக்கன் 65 மாதிரி இருக்குனு கேட்டுட்டான். அவன் தலைய தட்டி சாப்பிட்டா வடை மாதிரி இருக்குல பேசமா சாப்பிட்டு கிளம்புனு சொல்லி போய் மற்ற பசங்களை பாக்க போயி இருந்தாம்.














சும்மா சொல்லக்கூடாது எல்லாம் பய புள்ளங்களும் பாச மழையில் நம்மள நணைய வச்சுட்டானுங்க. அதுவும் ஒரு வீட்டில் மத்தாப்பு வேற வச்சு இருந்தாங்க, அதை கொளுத்தி வெடி மேட்டரையும் சால்வ் பண்ணியாச்சு. அதன் பிறகு ஒரு மால் சென்று ஷாப்பிங் பண்ணிட்டு (பார்த்துட்டு இது தான் சரியா இருக்கும்) அங்க இருக்கும் பவுலிங், பில்லியட்ஸ் எல்லாம் நம்ம பசங்க விளையாட அதையும் வேடிக்கை பாத்துட்டு, ஐஸ்கீரிம் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு அதை சர்வ் பண்ணுன பொண்ண மறுபடியும் கூப்பிட்டு நீங்க கொடுத்த ஐஸ்கீரிம் சாப்பிட்டு தலைவலி வந்துடுச்சு அதனால் நல்லா காபியா ஒன்னு கொடுங்க சொல்லி வாங்கி குடிச்சுட்டு ஒரு வழியா 2 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். அப்புறம் எங்க தூங்குறது, பசங்களோடு மறுபடியும் கதை அடிச்சுட்டு, படம் பாத்துட்டு காலையில் 7 மணிக்கு செக் இன் போயி நின்னு நம்ம இடத்துக்கும் வந்து சேர்ந்தாச்சு.

என்ன தான் இந்த தடவை தீபாவளியை கொஞ்சம் மகிழ்ச்சியாக நண்பர்களுடன் கொண்டாடி இருந்தாலும், நம்ம ஊர்ல இல்லயே என்ற ஏக்கம் ஒரு ஒரமாக இருக்க தான் செய்தது.

Sunday, October 15, 2006

வாழ்த்துக்கள் கலாம்!

நம் பாரத்தின் தற்போதைய முதல் குடிமகனும், சாதிக்க துடிக்கும் இன்றைய இளைஞர்களின் கனவு நாயகனும், வாழும் வழிகாட்டியுமாகி திரு. அப்துல் காலம் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.



அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் இருந்து அவரின் வைர வரிகள் சில

இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே, உங்களுடைய நம்பிக்கைகளும், கனவுகளும், இலட்சியங்களும் தர்க்கப்படும் போது அந்த சிதைவுகளிடையே தேடிப்பாருங்கள். இடிபபடுக்களுக்குள்ளே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும். பயணம் தொடர்வதற்கு...

*******

துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் இன்று ஹீரோக்கள், ஜீரோக்கள் என்ற ஒரே வித்தியாசம் உள்ளது. ஒரு பக்கம் இருநூறு முந்நூறு ஹீரோக்களின் ஆதிக்கம். இன்னொருபக்கம் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கும் 96 கோடி மக்கள்! இது மாற்றப்பட வேண்டிய நிலவரம்

*******

என்னைப் பொறுத்தவரை அறிவியல் மார்க்கம் என்பது மனதுக்குள் மெல்லத் தவழ்ந்து வரும் தென்றல் போன்றது. எனக்கு எப்போதுமே ஆன்மீக மேம்பாட்டிற்கும் தன்னிலை அறிதலுக்கும் அறிவியலும் ஒரு மார்க்கமாகத் தோன்றுகிறது.

*******

பிரச்சினைகளுக்கு முடிவுகளை காண முடியாமல் எந்தக் காரியத்தையும் இழுத்துக்கொண்டே போவது நமது வாழ்க்கையாகிவிட்டது. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பது தான் பிரச்சனை. பிரச்சனையில் தான் உள்ளார்ந்த துணிச்சலையும் ஞானத்தையும் வெளிப்படுத்த முடியும்.

*******

நீண்ட நாள் முழுவதும் கணத்திறகு கணம் நேர்மையாய், துணிவாய், உண்மையாய் உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்.

*******

வெற்றிகரமான சாதனைக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம், ஆக்கப்பூர்வமான சிந்தனை, கற்பனைக் கண்ணோட்டம் மற்றும் நம்பிக்கை.

*******

வாழ்க்கையில் சந்தோஷம், நிறைவு, வெற்றி எல்லாமே சரியான முடிவுகளை, வெற்றிகரமான முடிவுகளை தேர்ந்தெடுப்பதை பொறுத்தே கிடைக்கின்றன.

*******

எப்படிப்பட்ட ஏழையாக இருந்தாலும் சரி புறக்கணிக்கப்பட்டவராக அல்லது எளியவராக இருந்தாலும் சரி, யாருக்கும் விரக்தி மனப்பான்மை வந்து விடக்கூடாது என்பதைத் தான் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

*******

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி வெறுவதற்கான சிறந்த வழி என்பதை நினைவுப்படுத்திக் கொண்டேன். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான எல்லா ஆதாரங்களும் மனதுக்குள் மறைந்துள்ளன. உணர்வு நிலையில் உறைந்து கிடைக்கும் சிந்தனைகள் வெளிக்கிளர்ந்து செழித்தோங்கி நிஜமாவதற்கான வாய்ப்பு கிடைத்தால் வெற்றி மீது வெற்றி வந்து சேரும். இறைவன் நமது மனதிலும், ஆளுமைத் பணியிலும் அயரா வலிமையும், திறமையும் சேர்த்துப் படைத்திருக்கிறான். இந்த ஆற்றலை அடையாளம் கண்டு கொண்டு வெளிப்படுத்திக் கொள்வதற்கு கை கொடுக்கிறது பிரார்த்தனை.

*******

Monday, October 09, 2006

செல்லம்

நம்ம வெட்டிப்பயலின் இந்த பதிவை படித்தவுடன் நம்ம ஆளு ஞாபகம் வந்துச்சு.அடுத்து மணி என்கிற ஒரு பைரவர் புண்ணியத்தால் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும் நம்ம ராயல் ராமின் இந்த பதிவை படித்தவுடன் சரி நாமளும் நம்ம செல்லத்தை பற்றி ஒரு பதிவை போடலாம் என்று எண்ணத்தில் போட்ட பதிவு.



படத்தில் இருக்கும் சார் பெயர் பிளாக்கி, செல்லமா கருப்பா. 6 வயசு ஆகுது. நம்ம வீட்டிலே எல்லாருக்கும் செல்லம்னா இவரு தான். அதிலும் நமக்கும் நம்ம தம்பிக்கும் இவரு ரொம்பவே செல்லம். சாரு ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தால் கூட அடுத்த நாள் சாப்பாடு அவருக்கு ஊட்டி விடப்படும். இதுவே நமக்கு வச்சுக்குங்க இஷ்டம்னா சாப்பிடு கஷ்டமா இருந்தா போயிக்கிட்டே இருனு சொல்லுவாங்க. அவரும் எங்க வீட்டில் உள்ள எல்லார் மேலயும் பிரியமா இருந்தாலும் நம்ம மேல ரொம்பவே பிரியமா இருப்பாரு. நாம என்ன சொன்னாலும் கேட்பாரு, இல்ல கேட்குற மாதிரி நடிப்பார். இப்பவும் ஒவ்வொரு தடவை வீட்டிற்கு போன் பண்ணும் அவரை விசாரிக்காமல் இருப்பது இல்லை.

இவருக்கு பிடித்தது : நாங்கள் எல்லாரும் வீட்டில் இருந்தால் ரொம்பவே குஷி ஆகி விடுவார். எல்லாரையும் வம்புக்கு இழுப்பார், வீட்டுக்குள் கன்னா பின்னாவென்று ஒடி எதையாவது தள்ளி விட்டு ஏக ரகளை பண்ணுவார். எங்களுடன் டூ வீலரில் முன்னாடி நின்றுக் கொண்டு போவது. அதுவும் நைட் எவ்வளவு லேட்டா வந்தாலும் நமக்காக காத்துக் கொண்டு இருப்பாரு, சில சமயம் நாம எஸ்கேப் ஆக பாத்தாலும் தொடைய பிராண்டி ஒரு மிகவும் பாவமான லுக் கொடுத்து நம்மளை பாவப்பட வைத்து ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு தான் விடுவார்.

இவருக்கு பிடிக்காது : குழந்தைகள், தயிர் சாதம், வீட்டில் இருந்து எந்த பொருளும் வெளியே போகக் கூடாது, அவர் விளையாட்டு பொருளை யாரும் எடுக்கக் கூடாது. இவரை யாரும் கட்ட போட சொல்லக் கூடாது, அவரை கைய நீட்டி தீட்டக் கூடாது, இவரை வீட்டில் விட்டு அனைவரும் ஒரே சமயத்தில் வெளியே போகக் கூடாது. மற்ற விலங்கினங்கள் வீட்டிற்குள் நுழையக் கூடாது.

இவரிடம் பிடித்தது : அவர் தட்டை தவிர மற்ற தட்டில் இருப்பதை நாம் சொல்லாமல் எதையும் எடுக்க மாட்டார். நானும் என் தம்பியும் வீட்டில் இருந்தால் மற்றவர்களை ரொம்பவே வம்பு பண்ணி எங்களிடம் வந்து பதுங்கி கொள்வார். ரொம்ப குஷி ஆகி விட்டால் அதன் வாலை கவ்விக் கொண்டு அசுர தனமாக தனக்கு தானே சுற்றிக் கொள்வார். ஏதாவது வில்லத்தனம் பண்ணி விட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி முகத்தை பாவமாக வைத்துக் கொள்வது.

இவரிடம் பிடிக்காதது : குழந்தைகளை கண்டால் பயங்கரமாக கோவப்படுவார். வீதியில் போகும் அனைவரையும் வம்புக்கு இழுப்பது, குரைப்பது. சமயம் கிடைக்கும் போது வீதிக்கு ஓடி அந்த தெருவையே ஒரு வழி பண்ணுவது, மற்ற உயிர் இனங்களை வம்புக்கு இழுப்பது. அதிலும் கன்னுக்குட்டி சைல இருக்குற மற்ற நாய்கள் மேல் எல்லாம் போய் பொத்து பொத்து விழும், இதை பிடிக்க போகும் நமக்கு சப்த நாடியும் அடங்கி போயிடும், ஆஹா நமக்கு இன்னிக்கு அரை கிலோ கறி போச்சுட்டானு நினைச்சுப்பேன். ஆனா பாருங்க, நம் ஆளு சைஸ்ல சிறிசா இருந்தாலும் நம்ம ஏரியாவில பெரிய தாதா போல, எல்லாம் துஷ்டனை கண்டால் தூர போ என்ற பழமொழிக்கு ஏற்ப எஸ்கேப் ஆயிடும். நமக்கும் அப்பாடானு இருக்கும்.

எங்கடா வெட்டிப்பயல் பதிவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லனு பாக்குறீங்களா, அது வேற ஒன்னும் இல்ல நாம சென்னையில் இருந்து வாரம் வாரம் ஊருக்கு போகும் போது அவருக்காக அவருக்காவே மட்டும்
"டைகர் பிஸ்கேட்" வாங்கி கொண்டு போவது வழக்கம். சில சமயங்களில் மறந்தாலும் கூட வீட்டிற்கு நுழைந்தவுடன் அவரை பார்த்தவுடன் மீண்டும் கடைக்கு உடனடியாக சென்று அவருக்கு வாங்கி கொடுப்பது வழக்கம். நம்ம ஆளும் டைகர் பிஸ்கேட்டை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்.

Monday, October 02, 2006

வந்துட்டுடோம்ல!

என் இனிய தமிழ் மக்களே! உங்களின் பாசத்திற்க்கும், அன்பிற்க்கும் உரிய நாகை சிவா பேசுகின்றேன். கடந்த ஒரு மாதம் காலமாக தமிழ் பதிவுலகில் என் கடமையை ஆற்ற முடியாமல் போனதற்கான காரணத்துடன் உங்கள் முன் வந்து உள்ளேன். சங்க திண்ணையில் அமர்ந்து களப்பணி ஆற்றி கொண்டு இருந்த இந்த சிறுவனை காலம் படுத்திப்பாட்டை வார்த்தைகளில் வடித்து உள்ளேன். உங்களை சற்றே ஆசுவாசுப்படுத்திக் கொண்டு படிக்க வாருங்கள்.

மிகவும் நல்லவிதமாக போய் கொண்டு இருந்த என் பதிவுலக வாழ்க்கையில் திடிரென்று ஒரு தொய்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இங்கன இருக்கும் சக அலுவலர்கள் எல்லாரும் சேர்ந்து கூட்டம் போட்டு சதி ஆலோசனை எல்லாம் பண்ணி, தலை நகரத்தில் இருப்பவர்களாலே முடியவில்லையாம் நீ வந்தா தான் முடியுமாம் என்று என்னை தலை நகரத்திற்கு அனுப்பி வைத்து விட்டார்கள். நான் கெஞ்சி பார்த்தேன், கதறி பார்த்தேன். என்னை விட்டு விடுங்கள் என்று, ஆனால் அந்த கல் நெஞ்காரர்கள் நான் கதறியதை கண்டுக் கொள்ளாமல் என்னை ஒரு சிறப்பு விமானத்தில் ஏற்றி தலை நகரத்திற்கு அனுப்பி விட்டார்கள். தலை நகரத்திற்கு செல்லும் போது தான் யோசித்து பார்த்தேன், நாம இம்புட்டு கெஞ்சியும், மிஞ்சியும் இவனுங்க ஏன் கண்டு கொள்ளவில்லை என்று, அப்புறம் தான் தெரிஞ்சது, நான் தமிழில் கதறி இருக்கேன். அதான் அந்த படுபாவி பயல்களுக்கு புரியல. என்ன கொடுமைய்யா இது? சரி ஆனது ஆச்சு தலைநகரத்தை ஒரு கை பார்த்து விடுவது என்று நானும் மனதை ஒருவாறு தேற்றிக் கொண்டு பயணம் செய்தேன்.

நாம போன நேரம் முடிய வேண்டிய வேலைகள் எல்லாம் சீக்கிரம் முடிந்து விட, ஆஹா இனிமேல் நாம் வழக்கம் போல தமிழ்ச் சேவை புரியலாம் என்று ரவுண்ட் நெக் டிசர்ட்டில் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டு நம்ம டூட்டி ஸ்டேஷனுக்கு வந்தால் வேற எவனையும் அனுப்பாமல் எங்க தலயே நேரா விமான நிலையம் வந்து ரொம்ப டயடா இருப்ப அதனால் நேரா வீட்டில் போயி ஓய்வு எடு என்று சொல்லி வீட்டில் விட்டார். ஆஹா இந்த ஆளும் திருந்திட்டானே என்று டபுள் மகிழ்ச்சியுடன் வீட்டில் ரெஸ்ட் எடுத்து அடுத்த நாள் ஆபிஸ்க்கு போனால் வச்சான்யா பெரிய ஆப்பா....


சிவா நாளைக்கு நீ அந்த செக்டாருக்கு போற, என்ன என்ன தேவையோ அத எடுத்துக்கோ. அங்க போன பிறகு உனக்கு என்ன வேணும் என்பதை சொல்லு நான் அனுப்பி வைக்குறேன் என்று ஒரு குண்டை போட்டான். அட பாவி மக்கா நான் M.O.P எல்லாம் தயார் பண்ணல, Security Clearance வாங்கல அப்புறம் எப்படினு அவனை மடக்க பார்த்தேன். எல்லாத்தையும் மிகவும் முக்கியமான பணி என்று போட்டு நான் தயார் பண்ணிட்டேன், நீ கிளம்ப வேண்டியது மட்டும் தான் பாக்கினு அவன் என்னய மடக்கிட்டான். சரி இதுக்கு மேல என்ன பண்ணுறது என்று என் விதியை நானே நொந்துக் கொண்டு அந்த இடத்திற்கு சென்று விட்ட எல்லா வேலையும் முடிச்சுட்டு வந்தேன். இப்படி அலுவல வேலைகள் நம்மளை ஒரு வழி பண்ணினா, அடுத்தது வேற என்ன, அதே தான். அது சும்மா இருக்குமா......

இது வரைக்கும் எந்த பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனை எல்லாத்தையும் ஏண்டா இவன்கிட்ட பிரச்சனை வச்சுக்கிட்டோம் என்று பீல் பண்ணும்படி பிரச்சனைகளை பிரிச்சு மேஞ்சுக்கிட்டு திரிச்சோம். அதான் எல்லா பிரச்சனை சேர்ந்து இவன எங்க அடிச்சா வலிக்கும் என்பதை தெரிந்து அங்கன அடிச்சு நம்மளை ரொம்பவே படுத்தி எடுத்து விட்டது. சரி வாழ்க்கை என்றால் இது எல்லாம் இருக்க தானே செய்யும். சரி அத்த விடுங்க.......

நாம இல்லாம தமிழ்மணமே தவிர்ச்சு போயி இருக்கும் என்று வந்து பார்த்தா ஹுக்கும் ஒன்னும் இல்ல. அவ்வளவா யாரும் கண்டுக்கல, அதசரி நாம அப்படி என்னத்த எழுதி சாதிச்சுப்புட்டோம், நம்மள கண்டுக்குறதுக்குனு நானும் பெரிசா ஏதும் பீல் பண்ணல....... தமிழ்மணமத்தை ஒரு சுற்று சுற்றி வந்ததில் அப்படி ஒன்னும் சூடா இல்லை. நம்ம மக்கள் எல்லாம் திருந்தி விட்டார்கள் என்ன? திரு. பத்ரி அவர்களின் பதிவின் மூலம் "ஒரு மாலை, ஒரு தேநீர், ஒரு புத்தகம்", வித்லோகா புத்தகக்கடை மற்றும் அப்புசாமி - சீதாப்பாட்டி ஜோடியை காமிக்ஸ் வடிவில் கொண்டு வர எண்ணம் போன்றவைகளை படித்த போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துக்கள் பத்ரி மற்றும் கிழக்கு பதிப்பகம் டீம்.

நம்மள காணாம பின்னூட்டத்தில், தனி மெயிலில் நம்மளை விசாரித்து நம்மளை பாச மழையில் நனைய வச்ச நம்ம பங்காளி ஷாம், சங்க தலைவலி சீ தலைவி கீதா, சங்கத்து சிங்கங்கள் அதிலும் நம்ம போர்வாள் தேவ், சோக்கா ஒரு வார்த்தை யூஸ் பண்ணி இருந்தான்ய்யா, அத என்னாது , ஆங் "What's up Dude?".... நோட் பண்ணி வச்சுக்கிட்டேன். நாமளும் யார்கிட்டையாச்சும் யூஸ் பண்ணுவோம்ல. இது போக நம்மள பெஞ்ச் மேல ஏத்துவேன் என்ற மிரட்டிய பொற்கொடிக்கும், ராஜீக்கும், கோவி. கண்ணன் மற்ற எல்லாருக்கும் என் டாங்கஸ்.

நம்ம கப்பி பய நமக்கு நன்றி சொல்லி ஒரு பதிவு போட்டு இருக்காரு. தாங்க்ஸ்ப்பா. ஆனால் இந்த அண்ணனை நீயும் அந்த ராயல் ராமும் கண்டுல. பயபுள்ளைகளா உங்களை அப்புறமா டீல் பண்ணிக்குறேன். அப்புறம் நம்ம வேதாவும் நன்றி சொல்லி ஒரு பதிவு போட்டு உள்ளார்கள். ஆனா பாருங்க அதற்கு ஒரு பின்னூட்டம் கூட இல்லை. வந்த பின்னூட்டத்தை அவங்க வெளியீடவில்லையா, இல்ல பின்னூட்டமே வரவில்லைய்யா ஒன்னும் புரியல சாமி.

இது எல்லாம் போக நாம பதிவுலகிற்க்கு வராம இருந்த இந்த ஒரு மாத காலத்தில், என்னையை ரொம்பவே படுத்தி எடுத்த ஒரு பதிவரை பற்றி சொல்லாமல் இருந்தால் என் பிஞ்சு மனசு தாங்காது. அந்த பதிவர் நமக்கு மெயில் அனுப்புறாங்க பாருங்க, பண்ணாட்டு கம்பெனியில் வேலை பார்க்கும் நபர்களிடன் விவாகரத்து அதிகமாக உள்ளதாம் ஜாக்கிரதை என்று, ஏனுங்க ஒரு க.பி.கழகத்தை சேர்ந்தவனுக்கு அனுப்புற மெயிலாங்க அது. அது மட்டுமா நாங்க எல்லாம் சேர்ந்து மிகவும் அருமையான கவிதை என்று முடிவு கூறிய நம்ம வே.வி. நாயகியின் சில படங்களை அனுப்பி சுமாரான கவிதை என்று தலைப்பு கொடுத்து வெறுப்பேத்துறாங்க. அது போக கேட்பரீஸ் சாக்லெட் சாப்பிடாத, தண்ணி குடிக்காத என்று பல மெயில் அனுப்பி நம்மள ரொம்பவே தொல்லை பண்ணுறாங்கப்பா அவங்க. இந்த தொல்லையிலும் ஒரு நல்லது இருக்கு, எப்படியும் வாரத்தில் ஒரு தடவையாச்சும் சில பல நல்ல பிகர்களின் படங்களை அனுப்பி நம்மளை கூல் பண்ணி விடுகின்றார்கள். இது தொடர வேண்டும் என்ற காரணத்திற்க்காக அவர் பெயரை சொல்லாமல் விடுகின்றேன்.

ஆஹா ரொம்ப பெரிசா போயிக்கிட்டு இருக்கே, அதனால் இத்தோட முடிச்சிப்போம். ஆகவே மக்களே, மறுபடியும் உங்கள் நாகை சிவா ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாருங்கோ......... வழக்கம் போல் அடிச்சி ஆடப்படும்............