Thursday, November 02, 2006

அறுசுவை

தலைப்பு "அறுசுவை" னு வச்சாச்சு. அதுக்கு தகுந்த மாதிரி ஏதும் மேட்டர கண்டிப்பாக எழுதனும். ஆனா நம்ம செய்த சமையல் என்னிக்கு அறுசுவையோடு இருந்து இருக்கு. அதனால் அதை முதலில் எழுதாமல், தலைப்புக்கு தகுந்த மாதிரி ஒரு விசயத்தை சொல்லிட்டு நம்ம மேட்டருக்கு போயிடலாம்.

நம்ம வலைப்பதிவு முகப்பில் இடது கை பக்கம் "அறுசுவை" அப்படிங்குற ஐகான் பாத்து இருப்பீங்க. சிலர் வலைப்பக்கத்திலும் இந்த பெயரை நான் உபயோகித்து இருப்பேன். அந்த அறுசுவையை பற்றி சில வரிகள்....

"முற்றிலும் சமையல் குறித்த முதல் தமிழ் இணையத்தளமாய், கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக அறுசுவை இயங்கி கொண்டு உள்ளது . இந்த தளம் முழுக்க முழுக்க உணவு சம்பந்தமான தகவல்களைத் தருவதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது. உணவு சம்பந்தமாக இந்ததளத்தில் கிடைக்காத தகவல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து தகவல்களையும் முழுமையான அளவிற்கு தருவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு அதில் ஒரளவும் வெற்றி பெற்று உள்ளார்கள். அனைத்து வகையான குறிப்புகளை சரியாக வரிசைப்படுத்தி நமக்கு வேண்டிய உணவு வகைக்கான குறிப்புகளை உடனே கிடைக்கும் படி செய்து உள்ளது மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சில பக்கங்கள்:

கூட்டாஞ்சோறு - பல சமையல் வல்லுனர்களின் குறிப்புகள் உள்ள பக்கம்
மன்றம் - பல வகையான தலைப்புகள் கொடுத்து ஒரு உரையாடற் களமாக உள்ள பக்கம்
ஆரோக்கியம் - உடல் ஆரோக்கியத்துக்கு உணவின் பங்கை குறித்து விளக்கும் பக்கம்
யாரும் சமைக்கலாம் - படத்துடன் உணவை சமைப்பது எப்படி என்று விளக்கும் பக்கம்

மொத்ததில் இந்த வலைத்தளம் என்னை போல உறவையும் நல்ல உணவையும் பிரிந்து வாழும் மக்களுக்கு பயன் தருமாறு உள்ளது. எங்களுக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் இது ஒரு நல்ல பயன் தரும் வலைத்தளமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் இங்கு அந்த தளத்தை பற்றி எழுதி உள்ளேன். ஒரு முறை போய் பாத்துட்டு வாங்க, உங்களுக்கே பிடிக்கும்.

ஒகே இப்ப நம்ம மேட்டருக்கு போலாம்.

என்ன மேட்டருனா, படத்துடன் கூடிய ஒரு சமையல் குறிப்பு தான் இன்னிக்கு மேட்டரு.

சமையல் குறிப்போட பெயர் என்ன வேணுமோ அதை நீங்களே வச்சுக்கலாம். இதுக்கு உண்மையிலே என்ன பெயருனு தெரிஞ்சவங்க சொல்லாம். இல்லாட்டி அப்பால நான் சொல்லுறேன்.

முதல் எத்தனை பேர் இருக்கோம் என்பதை பாத்துக்கோனும். அளவுக்கு இல்ல யாரு யாரு என்ன என்ன வேலை செய்வதுனு முடிவு பண்ண. அளவு எல்லாம் ஒரு மேட்டரே எவ்வளவு பொருள் இருக்கோ அதை வச்சு மேனேஜ் பண்ணிக்கனும். தேவையான பொருட்கள் - கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், உருளைகிழங்கு, எண்ணெய் இன்ன பிற...
செயல் விளக்கம்:


படத்தில் இருப்பது போல் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணி விட்டு நல்லா பிசையனும். இது கொஞ்சம் கஷ்டமான வேலை. அதுனால இந்த வேலைய அடுத்தவன் கிட்ட தள்ளி விட்டுட்டுங்க.

படத்தில் இருப்பது போல வெங்காயம், பச்சை மிளகாய நல்லா பொடியா வெட்டிங்கோங்க. இது கண்ணுல கண்ணீர் வர மேட்டர். அதனால இதையும் தள்ளி விட்டுட்டுங்க.

படத்தில் இருப்பது போல உருளைகிழங்கை நன்கு வேக வைத்து உரித்து மசித்து கொள்ளவும். இதை சூடாகாக இருக்கும் உரித்தால் கையே சுடும், அதனால் இதுவும் நமக்கு வேண்டாம்.


படத்தில் இருப்பது போல வெட்டிய வெங்காயம், ப.மிளகாய், உ.கிழங்கு எல்லாத்தையும் ஒன்றாக போட்டு நன்கு பிசறி கொள்ளவும். பிசுறு இல்லாமல் நன்றாக மசிக்க வேண்டும். அதனால் இதுவும் நமக்கு சரிப்பட்டு வராது.


படத்தில் இருப்பது போல கோதுமை மாவை பெரிதாக உருட்டி முதலில் சிறிதாக தேய்த்து அதில் இந்த பிசைந்து வைத்த கிழங்கை வைக்கவும். இதை தேய்க்கம் போது வட்டமாக தேய்க்கனும். இது நமக்கு வராது, அதனால் இதுவும் இதை தேய்த்து முடிக்கும் வரை நாம் வர வேண்டாம்.

படத்தில் இருப்பது போல மூடி, உள்ளங்கையில் வைத்து தட்டிக் கொள்ளவும்.படத்தில் இருப்பது போல உள்ள வைத்த கிழங்கு வெளிய வந்து விடாமல் நல்லா வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.படத்தில் இருப்பது போல எண்ணெய் விட்டு இதை கல்லில் போடவும். அப்ப அப்ப திருப்பி போடுங்க அப்ப தான் கருகாமல் இருக்கும். நமக்கு வேற வேலை இருப்பதால் இதையும் அடுத்தவனிடம் கொடுத்து விடலாம்.


படத்தில் இருப்பது போல திருப்பி போடுவதில் வல்லவராக இருந்தால் அந்தரத்தில் திருப்பி போடுங்கள். இதை சரியாக போட்டோ எடுக்க என்னை மாதிரி பக்கத்தில் ஆள் இருந்தால் பண்ணுங்கள். இல்லாட்டி வீண் முயற்சி வேணாம்.


படத்தில் இருப்பது தான் பைனல் அவுட்புட்டு. மேல நெய் தடவினால் இன்னும் மணமாக இருக்கும். இப்ப தான் நம்ம தேவை ரொம்ப முக்கியம். அதனால இந்த வேலைய நம்ம பாத்தே ஆகனும். கிழங்கு பிசையும் போது கொஞ்சம் மிளகாய் தூள் போட்டு பிசைந்தால் இன்னும் நல்லா இருக்கும். இரண்டு சாப்பிட்டா போதுங்க அன்றைய பொழுதுக்கு வேறு தேவையில்லை.

முயற்சி செய்து பாருங்க, நல்லா இருந்தா சொல்லுங்க, மேற்கொண்டு பல சமையல் குறிப்புகள் போடுறேன். நல்லா இல்லாட்டி, அரசியல் (சமையல்) வாழ்வில் இது எல்லாம் சகஜம் என்று நினைச்சுக்கிட்டு என்ன மன்னிச்சு விட்டுட்டுங்க.

77 comments:

பெருசு said...

புலி, பசிச்சாலும் புல்லு பக்கமா போகாதுன்னு நெனச்சேன்.

ஏதோ சொல்கிறேன்னுட்டு சாப்பாடு போட்டு கலக்குறியே புலி.

பார்த்தவன் said...

//முயற்சி செய்து பாருங்க, நல்லா இருந்தா சொல்லுங்க, மேற்கொண்டு பல சமையல் குறிப்புகள் போடுறேன்//

என்னாது முயற்சி செஞ்சு பாக்குறதா?
கெட்ட பழக்கம் அது. ஆராச்சும் சுட்டு குடுத்தா சாப்பிடுவோம் இல்லாங்காட்டி புடுங்கி தின்னுவோம்

பார்க்காதவன் said...

நக்குல எச்சி ஊருதுய்யா!
கண்டிப்பா செஞ்சு பாக்குறேன்.
ச்சிச்சி செஞ்சத சாப்பிட்டு பாக்குறேன்.

சாப்பிட்டவன் said...

அந்த போட்டாவ பார்த்தாவே நல்லா இருக்கும்ணு தோணுது.

யோவ் நீயி சூடான்ல கஷ்டப்படறேனுல்ல நினைச்சுகிட்ட்டு இருக்கோம்!

இப்டி வகை வகையா சுட்டு திங்கறயா?

சாப்பிடாதவன் said...

அண்ணே புலி அண்ணே!!
சாப்பிட்டு அரை மணி நேரம் ஆச்சுண்ணே. ஏதாவது ஸ்னாக்ஸ் இருந்தா போடுங்கண்ணே!

பேருள்ள ஸ்னாக்ஸா போடுங்கண்ணே!

Syam said...

அட அட அட பங்கு பின்னி எடுத்திட்ட போ...இது தெரியாம எத்தனை நாளு எத்தனை பேரு கஷ்டபட்டிருக்காங்க... :-)

Syam said...

//முயற்சி செய்து பாருங்க//

சாப்பிடரது தான...இதுக்கு எல்லாம் எதுக்கு முயற்சி...நம்ம எப்பவும் அத மட்டும் தான பண்ணுவோம் :-)

தம்பி said...

புலி..

இயற்கை காட்சிகள நல்லா புடிக்கறியோ இல்லியோ இந்த மாதிரி பண்டங்கள ஜூப்பர புடிக்கறப்பா
அதுவூம் அவுட்புட் பாக்கும்போது கண்ணுல தண்ணியே வந்துருச்சிய்யா!

என்ன செலவானாலும் பரவாயில்ல சூடானுக்கு ஒரு டிக்கெட்ட போடுங்கடா!

சம்சா said...

//யல் குறிப்போட பெயர் என்ன வேணுமோ அதை நீங்களே வச்சுக்கலாம்//

என்னய கொஞ்சம் அப்டி இப்டி மாத்தி தட்டையா செஞ்சுட்டா இதுக்கு பேரு வேற ஆகிடுமா?

காப்பி ரைட்ஸ் வாங்கி வச்சிருக்கேன்.

வேணுமிண்ணா கும்ஸான்னு வச்சிக்கோ!

தம்பி said...

//படத்தில் இருப்பது தான் பைனல் அவுட்புட்டு. மேல நெய் தடவினால் இன்னும் மணமாக இருக்கும்.//

இந்த பாயிண்டுதான் ரொம்ம்ம்ப முக்கியம் இது இல்லாங்காட்டி அவ்ளோதான் மொத்த உழைப்பும் வேஸ்ட். நம்மள மாதிரி நாலு பேரு ஐடியா இல்லன்னா என்ன ஆவுறது?
அதுனாலதான் நம்ம பங்கு சாப்பிடும்போது கண்டிப்பா இருக்கணும்!

மயிலாடுதுறை சிவா said...

சூப்பர். புகைப் படங்கள் அருமை.

அடிக்கடி உங்கள் தளத்தில் பார்த்து கோழி உணவு வகைகள் செய்வது வழக்கம்.

வாழ்க உங்களது சாப்பாடு பணி!!!

மயிலாடுதுறை சிவா...

நாமக்கல் சிபி said...

இதுக்கு பேரு ஆலு பரட்டோவா இல்ல ஆலு சப்பாத்தியா?

போண்டா படத்த போட்டு வடனு ஏமாத்தின மாதிரி இதையும் வேற பேர் சொல்லி ஏமாத்திடாத :-)

கப்பி பய said...

இந்த சின்ன வயசுல இவ்வளவு திறமையா!! உன்னை நினைச்சு நான் ரொம்ப பெருமைபடறேன் புலி!!

ஆனா நமக்கு இந்த வேலையெல்லாம் ஒத்துவராது...என்னைப் பெத்தவங்க செஞ்ச புண்ணியத்துல நல்லா சூப்பரா சமைக்கற ரூம்மேட்டா சிக்கியிருக்கான்...அப்புறம் நாம எதுக்கு கஷ்டப்படனும் ;)

மு.கார்த்திகேயன் said...

ரொம்ப உபயோகமான பதிவு மாப்பி..

துளசி கோபால் said...

இதுக்குப் பேரு 'ஆலூ கா பர்த்தா'

உருளைக்கிழங்கு காரப் போளி.

வேலையைச் செய்யறதுக்கு ஆள் கிடைக்கலைன்னா பரவாயில்லை. அதான்
'கிச்சன் காட்ஜெட்' இருக்கே!
மாவு பிசைய : ஃபுட் ப்ரொஸ்ஸசர்
வெங்காயம் & ப. மிளகாய் வெட்ட: அதே ஃபுட் ப்ரொஸ்ஸசர் ச்சோப்பர் ப்ளேடு
போட்டாப் போச்சு.
உருளை வேக வைக்க: மைக்ரோவேவ் அவன்
அதை மசிக்க, பொட்டேடோ மேஷர்
சப்பாத்தி உருட்ட: சப்பாத்தி ப்ரெஸ்ஸர்
அதைச் சுட்டு எடுக்க : இப்ப மார்கெட்டுலே புதுசா வந்துருக்கற சப்பாத்தி மேக்கர்.

ஆச்சா..........

இப்ப தின்னறதுக்கு மட்டும் நான்:-)))) ஸ்ஸ்ஸு.... வேலை செஞ்சு செஞ்சு டயர்டா
இருக்கு. இப்ப உண்ட மயக்கம் வேற.

கண்ணைக் கட்டுது, அப்புறம் பார்க்கலாம்.

Arunkumar said...

paakave superaa irukku !!!
arumayana description.

kandippa try pannitu solren :)

வடுவூர் குமார் said...

"படத்தில் இருப்பது போல முடி"


எனக்கு "முடி" என்று தெரிகிறது.ஒரு கொக்கியை போட்டு "மூடி" ஆக்கிருங்க.இல்லை கையில் உள்ள முடியில் ஏதோ விஷயம் இருக்கிறமாதிரி ஆகிவிட போகிறது!!
இதை நான் எப்போதோ சாப்பிட்டு இருக்கேன்.கொஞ்சம் ஹெவியாக இருக்கும்.
ஒரு சப்பாத்தியிலேயே வயறு ஃபுல்.

Anonymous said...

Hello, Nice Post... tempting to eat...i never made one like this..This name is ALO PARATHA..My husband always asked me to make this since he had this in our friends home...Ur Step by Step preparation method is very helpful for me..Thanks and glad to see more arusuvai from u...

ILA(a)இளா said...

வடக்கத்திய சாப்பாடா? அதுவும் ரொட்டியா? பார்க்கிறோம்யா, நல்லா வரலே, அப்புறம் .....

இராம் said...

\\நல்லா இல்லாட்டி, அரசியல் (சமையல்) வாழ்வில் இது எல்லாம் சகஜம் என்று நினைச்சுக்கிட்டு என்ன மன்னிச்சு விட்டுட்டுங்க. \\

புலி, உன்னை மன்னிச்சு விட்டுச்சாச்சு போ.... :-)))

viji said...

Hai,
நீங்க சமையல்ல இன்னொரு நளமஹாராஜா போல இருக்கு. படமும் செயல் விளக்கமும் அருமை. இதுக்கு 'ஆலு பரோட்டா'னு பேர் வைக்கலாமுனு நினைக்கிறேன்

Anonymous said...

முக்கியமான ஒன்ன விட்டுட்டிங்களே
சிவா சூடா சாப்பிடறதுக்கு முன் கொஞ்சம் வெண்ணெய் போட்டு ஊறுகாய் தொட்டுக்க வச்சுக்குட்டு சாப்பிட்டா அட அட!!!!
jv

வேதா said...

ஆகா சமையல் குறிப்போட நிறுத்திக் கொள்ளாமல் ஸ்டெப் பை ஸ்டெப் புகைப்படத்துடன் கூடிய டெமோ சூப்பர்:) இதே சமையல் குறிப்பை இரண்டு நாள் முன்னாடி தான் ஜெயா டிவியில் பார்த்தேன், செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்:)

நாமக்கல் சிபி said...

அட! சமையலிலும் கலக்கறீங்க நாகையாரே!

மல்லிகா பத்ரிநாத் said...

சூப்பரான டிஷ்! சாப்பிட நல்லா இருக்கும். ஒண்ணும் தேவை இல்லை!

ஆதித்யா said...

பரவாயில்லை தலை! கலக்கறீங்களே!

கீதா சாம்பசிவம் said...

முதல்லே வந்துட்டேன்னு நினைக்கிறேன், ஆலு பரோட்டா சாப்பிட, தொட்டுக்க ஒண்ணுமே இல்லையே, தயிர்(வெங்காயம் சேர்த்து) இல்லாட்டி, சனா, அல்லது ஊறுகாய் வேணுமே? பார்க்கவே நல்லா இருக்கு. உங்க வருங்கால மனைவிக்கு என்னோட வாழ்த்துக்கள். :D

பரவை முனியம்மா said...

ஏ! சிங்கம் போல திங்கப் போறான் எங்க பேராண்டி! அவனை தடுக்கப்போறவன் படுக்கப் போறான் உதையிலதாண்டி!

ஏ! தில்லாலங்கடி சாங்கு! நீ திருப்பிப் போட்டு வாங்கு!

தாமு said...

இதே ரோட்டியை மண் அடுப்புல வெச்சி சுக்காவா சுட்டும் சாப்பிடலாம். எண்ணெய்/நெய் இல்லாம கொலஸ்ட்ரால் கம்மியா உடம்புக்கும் ஆரோக்யமா இருக்கும்.

செந்தழல் ரவி said...

///என்னால் வீழ்ந்தவன் இது வரை ஒருவனும் கிடையாது.////

இப்படி போட்டிருக்கீங்க அறி(று)முகத்தில..

இந்த அறுசுவையை செய்து சாப்பிட்டுவிட்டு விழுந்த ஆளை இங்கே பாரும்..

செந்தழல் ரவி said...

ஹை, முதல் பின்னூட்டம் என்னோடது.

கப்பி பய said...

ஒரு டவுட்டு...

கோதுமை மாவை தேய்த்து அதுக்குள்ள உருளைக்கிழங்கு மசியலை வைத்து மறுபடியும் இன்னொரு முறை தேய்க்கறதுக்கு பதிலா..முதல்லயே இந்த மசியலை கோதுமை மாவுடன் மிக்ஸ் பண்ணி ஒரே முறை தேய்ச்சா போதாதா???

நாமக்கல் சிபி said...

//கோதுமை மாவை தேய்த்து அதுக்குள்ள உருளைக்கிழங்கு மசியலை வைத்து மறுபடியும் இன்னொரு முறை தேய்க்கறதுக்கு பதிலா..முதல்லயே இந்த மசியலை கோதுமை மாவுடன் மிக்ஸ் பண்ணி ஒரே முறை தேய்ச்சா போதாதா??? //
!கப்பி,
கலக்கிட்ட போ!!!

கைப்புள்ள said...

ஏய்! புலி! ஆலூ பரோட்டா கூட சாப்புடுவியா நீயு? சரி! படத்துல இருக்கற மாதிரின்னு தின்னற படத்தையே போடலையே ஏன்?
:)

நாகை சிவா said...

//புலி, பசிச்சாலும் புல்லு பக்கமா போகாதுன்னு நெனச்சேன்.//

ஆஹா பெருசு எல்லாம் நம்ம வீட்டு பக்கமா?????

"புல்"லு பக்கம் போக மாட்டேன். சாப்பாடு பக்கம் கண்டிப்பா போவேன்.
;-)

நாகை சிவா said...

//என்னாது முயற்சி செஞ்சு பாக்குறதா?
கெட்ட பழக்கம் அது. ஆராச்சும் சுட்டு குடுத்தா சாப்பிடுவோம் இல்லாங்காட்டி புடுங்கி தின்னுவோம் //

ராசா அது எல்லாம் ஊரில் இருக்கும் போது. இங்கயும் பல சமயங்களில் அப்படி தான், சில சமயம் இது மாதிரி செய்து தான் ஆகனும்.

நாகை சிவா said...

//நக்குல எச்சி ஊருதுய்யா!
கண்டிப்பா செஞ்சு பாக்குறேன்.
ச்சிச்சி செஞ்சத சாப்பிட்டு பாக்குறேன். //

எப்படியோ சாப்பிட்டு பாருங்க. :-)

நாகை சிவா said...

//யோவ் நீயி சூடான்ல கஷ்டப்படறேனுல்ல நினைச்சுகிட்ட்டு இருக்கோம்!

இப்டி வகை வகையா சுட்டு திங்கறயா//

எங்க இப்படி ஒரு கொலை வெறி. இது ஏதோ வார விடுமுறையில் நல்ல முட்ல இருந்தா செய்யுறது. அதுவும் பொறுக்கவில்லையா உங்களுக்கு...

நாகை சிவா said...

//அண்ணே புலி அண்ணே!!
சாப்பிட்டு அரை மணி நேரம் ஆச்சுண்ணே. ஏதாவது ஸ்னாக்ஸ் இருந்தா போடுங்கண்ணே!

பேருள்ள ஸ்னாக்ஸா போடுங்கண்ணே! //

ஆஹா, இப்படி ஒரு வரவேற்பா நம்ம பதிவுக்கு. சீக்கிரம் அடுத்த குறிப்ப போட்டு விடுகிறேன்.

நாகை சிவா said...

//அட அட அட பங்கு பின்னி எடுத்திட்ட போ...இது தெரியாம எத்தனை நாளு எத்தனை பேரு கஷ்டபட்டிருக்காங்க... :-) //

அதான் இப்ப வந்துட்டோம்ல, கஷ்டத்தை போக்கு, இனி என்றுமே இன்பம் தான்.

//சாப்பிடரது தான...இதுக்கு எல்லாம் எதுக்கு முயற்சி...நம்ம எப்பவும் அத மட்டும் தான பண்ணுவோம் :-) //

சரி தான் பங்கு. இருந்தாலும் நம்ம வெட்டி மாதிரி ஆளுங்க அதுக்கு கூட சோம்பேறித் தனம் படுறாங்க.

நாகை சிவா said...

//இயற்கை காட்சிகள நல்லா புடிக்கறியோ இல்லியோ இந்த மாதிரி பண்டங்கள ஜூப்பர புடிக்கறப்பா
அதுவூம் அவுட்புட் பாக்கும்போது கண்ணுல தண்ணியே வந்துருச்சிய்யா!//

பாத்து அண்ணன், கன்னா பின்னானு தண்ணி வந்து அங்க இருக்குற பாலைவனத்த எல்லாம் சோலைவனம் ஆகிட போகுது. அப்புறம் பெட்ரோல் கிடைக்காது சொல்லிட்டேன்.

//என்ன செலவானாலும் பரவாயில்ல சூடானுக்கு ஒரு டிக்கெட்ட போடுங்கடா! //

உனக்கு பக்கம் தான். சீக்கிரமே வா இல்லாட்டி நான் அங்கனு வரேன் சீக்கிரம்.

நாகை சிவா said...

//என்னய கொஞ்சம் அப்டி இப்டி மாத்தி தட்டையா செஞ்சுட்டா இதுக்கு பேரு வேற ஆகிடுமா?//

ஆஹா, கிளம்பிட்டானுங்கய்யா, கிளம்பிட்டானுங்க....

கும்ஸா வேணாம், ஏற்கனவே நான் அம்சா மேட்டருல மாட்டிக்கிட்டு முழிக்குறேன். இது வேறா?

நாகை சிவா said...

//இந்த பாயிண்டுதான் ரொம்ம்ம்ப முக்கியம் இது இல்லாங்காட்டி அவ்ளோதான் மொத்த உழைப்பும் வேஸ்ட். நம்மள மாதிரி நாலு பேரு ஐடியா இல்லன்னா என்ன ஆவுறது?//

தம்பிண்ணன், சரியா புடிச்ச பாரு மேட்டர. நம்ம பக்கத்தில் இல்லாட்டி சரியாவே செய்ய மாட்டானுங்க. அப்ப அப்ப நம்ம கொடுக்குற டிப்ஸால தான் பைனல் அவுட்புட் நல்லா ருசியா வரும்.

நாகை சிவா said...

//சூப்பர். புகைப் படங்கள் அருமை.

அடிக்கடி உங்கள் தளத்தில் பார்த்து கோழி உணவு வகைகள் செய்வது வழக்கம்.

வாழ்க உங்களது சாப்பாடு பணி!!!//

வணக்கம் சிவா. இந்த தளம் திரு. பாபு அவர்களுடையது. நாம் அப்ப அப்ப அவர் கூட போய் ஒசி சாப்பாடு சாப்பிடுவது. அம்புட்டு தான். வேற ஏதும் கிடையாது.

நாகை சிவா said...

//இதுக்கு பேரு ஆலு பரட்டோவா இல்ல ஆலு சப்பாத்தியா?//

ஆலு புரோட்டா தான் வெட்டி.

//போண்டா படத்த போட்டு வடனு ஏமாத்தின மாதிரி இதையும் வேற பேர் சொல்லி ஏமாத்திடாத :-) //

யோவ் அநியாயம் பண்ணுறீங்கய்யா?
அது வடை தான்ய்யா. உங்க சேட்டைக்கு ஒரு அளவே இல்லாம போகுது..... இது நல்லதுக்கு இல்ல... சொல்லிட்டேன்...

நாகை சிவா said...

//இந்த சின்ன வயசுல இவ்வளவு திறமையா!! உன்னை நினைச்சு நான் ரொம்ப பெருமைபடறேன் புலி!!//

கப்பி, இதுல எந்த உள்குத்தும் இல்லல. ஏன்னா உங்களை எல்லாம் நம்ப முடியாது....

//என்னைப் பெத்தவங்க செஞ்ச புண்ணியத்துல நல்லா சூப்பரா சமைக்கற ரூம்மேட்டா சிக்கியிருக்கான்...அப்புறம் நாம எதுக்கு கஷ்டப்படனும் ;) //

கப்பி, இங்கயும் அதே தான். இருந்தாலும் அப்ப அப்ப நம்ம பிரசன்ஸ் காட்டனும் இல்லாட்டி மதிக்க மாட்டானுங்க பாரு அதான்.

நாகை சிவா said...

//ரொம்ப உபயோகமான பதிவு மாப்பி.. //

மெய்யாலும் தானே சொல்லுற மாப்பி....

நாகை சிவா said...

//இதுக்குப் பேரு 'ஆலூ கா பர்த்தா'

உருளைக்கிழங்கு காரப் போளி.//

இதுக்கு இப்படி ஒரு பெயரும் இருக்கா?

//இப்ப தின்னறதுக்கு மட்டும் நான்:-)))) ஸ்ஸ்ஸு.... வேலை செஞ்சு செஞ்சு டயர்டா
இருக்கு. இப்ப உண்ட மயக்கம் வேற.//

யக்கா நீங்க எங்கள விட பெரிய ஆளு போல இருக்கு. சாப்பிட்டே டயர் ஆகி விடுங்கிங்க போல

நாகை சிவா said...

//paakave superaa irukku !!!
arumayana description.

kandippa try pannitu solren :) //

பண்ணி பாத்துட்டு சொல்லுங்க அருண். ஆனா உண்மைய சொல்லுங்க....

நாகை சிவா said...

//இதை நான் எப்போதோ சாப்பிட்டு இருக்கேன்.கொஞ்சம் ஹெவியாக இருக்கும்.
ஒரு சப்பாத்தியிலேயே வயறு ஃபுல். //

ஆமாம் அண்ணன், இது கொஞ்சம் ஹெவி தான். நமக்கு இரண்டு தாங்கும்.

தவறு சரி செய்யப்பட்டது. நன்றி.

மஞ்சூர் ராசா said...

வெங்காயாத்தையும், பச்சைமிளகாயையும் தாளித்து பிறகு உருளைக்கிழங்குடன் கலந்தால் இன்னும் சுவையாக இருக்கும். கூட சிறு இஞ்சி, கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.

நாகை சிவா said...

//வெங்காயாத்தையும், பச்சைமிளகாயையும் தாளித்து பிறகு உருளைக்கிழங்குடன் கலந்தால் இன்னும் சுவையாக இருக்கும். கூட சிறு இஞ்சி, கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். //

ஆம் மஞ்சூர். சிறிது மிளாகாய் தூள், சிறிது மஞ்சள் தூள் சேர்ப்போம். கடைசியில் சிறிது வெங்காயம், ப.மிளகாய், கடுகு, பொடி செய்த ஜீரகம் போடுவதும் உண்டு.

நாகை சிவா said...

//My husband always asked me to make this since he had this in our friends home...Ur Step by Step preparation method is very helpful for me..Thanks and glad to see more arusuvai from u... //

பெயர தெரியாதவங்களுக்கு. இதை சீக்கிரமே உங்க நல்ல பாதிக்கு செய்து கொடுத்து அசத்துங்க.....

அறுசுவை தானே தொடர்ந்து போடுவோம்...:-))))

நாகை சிவா said...

//வடக்கத்திய சாப்பாடா? அதுவும் ரொட்டியா? பார்க்கிறோம்யா, நல்லா வரலே, அப்புறம் ..... //

நல்லா வரும்ய்யா, நீர் செஞ்சு பாரும்

தம்பி said...

//கும்ஸா வேணாம், ஏற்கனவே நான் அம்சா மேட்டருல மாட்டிக்கிட்டு முழிக்குறேன். இது வேறா? //

அந்த அம்சா மேட்டரு நீங்கதானா?

ஓஹோ!!!

சரி சரி...

இருக்குட்டும்

பெரிய மனுசன்னா அப்படிதான் இருக்கும்!!

நாகை சிவா said...

//பெரிய மனுசன்னா அப்படிதான் இருக்கும்!! //

பெரிய மனுசன் மாதிரி நடக்குய்யா. நான் ஒன்னு சொன்னா நீ ஒன்னு எடுத்துக்குறியே.... உன்னை எல்லாம்... சரி விடு... பழகி தொலச்சாச்சு...

நாகை சிவா said...

//புலி, உன்னை மன்னிச்சு விட்டுச்சாச்சு போ.... :-))) //

ராயல், இது எல்லாம் உனக்கே ஒவரா தெரியல. உன்ன அப்பால டீல் பண்ணிக்குறேன் ராசா...

நாகை சிவா said...

//நீங்க சமையல்ல இன்னொரு நளமஹாராஜா போல இருக்கு. //

அட அது எல்லாம் இல்லங்க. இப்ப தான் ஆரம்பித்து இருக்கோம்.

நாகை சிவா said...

//சிவா சூடா சாப்பிடறதுக்கு முன் கொஞ்சம் வெண்ணெய் போட்டு ஊறுகாய் தொட்டுக்க வச்சுக்குட்டு சாப்பிட்டா அட அட!!!!//

நெய் போடுவோம் ஒகே. உறுகாய் டிரை பண்ணியது இல்ல. அதையும் முயற்சி செய்து பாத்துட்டா போச்சு.

நாகை சிவா said...

//ஆகா சமையல் குறிப்போட நிறுத்திக் கொள்ளாமல் ஸ்டெப் பை ஸ்டெப் புகைப்படத்துடன் கூடிய டெமோ சூப்பர்:) //

நன்றிங்க வேதா....

//இதே சமையல் குறிப்பை இரண்டு நாள் முன்னாடி தான் ஜெயா டிவியில் பார்த்தேன், செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்:) //

ஜெயா டிவியில் போடுவதற்கு முன்பே நாங்க செய்து பார்த்து விட்டோம். நான் சொன்ன மாதிரி செய்து பார்த்து விட்டு கூறுங்கள் எப்படி இருக்குனு....

நாகை சிவா said...

//அட! சமையலிலும் கலக்கறீங்க நாகையாரே! //

உங்க அளவுக்கு இல்லாட்டியும் உங்க நண்பர் நான் அதுல ஒரு சதவீதமாகவது கலக்க வேண்டாமா சொல்லுங்க தள.

நாகை சிவா said...

//சூப்பரான டிஷ்! சாப்பிட நல்லா இருக்கும். ஒண்ணும் தேவை இல்லை//

மல்லிகாவிடம் இருந்து நமக்கு பாராட்டா, ஆஹா .....

நாகை சிவா said...

//பரவாயில்லை தலை! கலக்கறீங்களே! //

நன்றிங்க ஆதி. நீங்க யாருங்க

நாகை சிவா said...

//பார்க்கவே நல்லா இருக்கு. உங்க வருங்கால மனைவிக்கு என்னோட வாழ்த்துக்கள். :D //

ஏனுங்க இது உங்களுகே நல்லா இருக்கா, நான் இப்ப செய்ததுக்கு ஏதுக்கு எனக்கு வர போற மனைவிக்கு வாழ்த்து சொல்லுறீங்க... என்னமோ போங்க....

நாகை சிவா said...

//ஏ! சிங்கம் போல திங்கப் போறான் எங்க பேராண்டி! அவனை தடுக்கப்போறவன் படுக்கப் போறான் உதையிலதாண்டி!

ஏ! தில்லாலங்கடி சாங்கு! நீ திருப்பிப் போட்டு வாங்கு! //

ஹெய் கும்தலாக்கா கும்மா
கலக்குறீங்க போங்க....

நாகை சிவா said...

//எண்ணெய்/நெய் இல்லாம கொலஸ்ட்ரால் கம்மியா உடம்புக்கும் ஆரோக்யமா இருக்கும். //

நெய் இல்லாட்டி நல்ல டேஸ்ட் இருக்க மாட்டேங்குது. முடிந்த அளவு கம்மியாக தான் உபயோகப்படுத்துகிறோம்.

நாகை சிவா said...

//இப்படி போட்டிருக்கீங்க அறி(று)முகத்தில..//

அறுப்பது நமக்கு என்ன புதுசா. எல்லாம் உங்கள மாதிரி தான் ;-)

//இந்த அறுசுவையை செய்து சாப்பிட்டுவிட்டு விழுந்த ஆளை இங்கே பாரும்.. //

உண்ட மயக்கத்தில் விழுந்த மாதிரி இருக்கு... :-)

நாகை சிவா said...

//ஹை, முதல் பின்னூட்டம் என்னோடது. //

சாரிப்பா, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
:-))))

நாகை சிவா said...

//கோதுமை மாவை தேய்த்து அதுக்குள்ள உருளைக்கிழங்கு மசியலை வைத்து மறுபடியும் இன்னொரு முறை தேய்க்கறதுக்கு பதிலா..முதல்லயே இந்த மசியலை கோதுமை மாவுடன் மிக்ஸ் பண்ணி ஒரே முறை தேய்ச்சா போதாதா??? //

கப்பி, சமையல்ல இது அ னா, ஆவனா வில் இருந்து ஆரம்பிக்கனும். இரண்டையும் ஒன்னா மிக்ஸ் பண்ணினா வேக வச்சி தான் சாப்பிடனும், இது போல கல்லில் போட்டு சாப்பிட முடியாது....

நாகை சிவா said...

//!கப்பி,
கலக்கிட்ட போ!!! //

கப்பி கேட்ட ஒரு கே.....த்தனமான கேள்விக்கு இப்படி ஒரு கைத் தட்டலா. நல்லா இருக்கு. ரொம்பவே நல்லா இருக்கு.

நாகை சிவா said...

//ஆலூ பரோட்டா கூட சாப்புடுவியா நீயு? சரி!//

அத ஏன் இவ்வளவு சந்தேகமா கேட்குற?

// படத்துல இருக்கற மாதிரின்னு தின்னற படத்தையே போடலையே ஏன்?//

நீ பொறமைப்படுவே, அதுனால தான் போடல ;-)

செந்தழல் ரவி said...

சூப்பர்...சாப்ட பிறகு தானே பதிவு போட்டீங்க !!!

இராம் said...

//ராயல், இது எல்லாம் உனக்கே ஒவரா தெரியல. உன்ன அப்பால டீல் பண்ணிக்குறேன் ராசா... //

ஓவரா என்னா ஓவரு.... கிரிக்கெட்லே சொல்லுவாய்ங்கேலே அதுவா?????

என்னா டீல் அதெ சொல்லு... எதானச்சிம் கைமாத்தி விடணுமா....????

கப்பி பய said...

//கப்பி, சமையல்ல இது அ னா, ஆவனா வில் இருந்து ஆரம்பிக்கனும். இரண்டையும் ஒன்னா மிக்ஸ் பண்ணினா வேக வச்சி தான் சாப்பிடனும், இது போல கல்லில் போட்டு சாப்பிட முடியாது....//

ஏன் கல்லுல போட முடியாது?? விளக்கம் பத்தாது...

பதில் தெரியலைன்னா தெரியலன்னு ஒத்துக்கனும்..அதை விட்டுட்டு கே..தனம், மு..தனம்னெல்லாம் சொல்றது அ.வே..தனம் ;))

நாகை சிவா said...

//சூப்பர்...சாப்ட பிறகு தானே பதிவு போட்டீங்க !!! //

ஆமாம். ரவி உள்குத்து புரியுது. :-)

நாகை சிவா said...

//ஓவரா என்னா ஓவரு.... கிரிக்கெட்லே சொல்லுவாய்ங்கேலே அதுவா?????//

உனக்கு கிரிக்கெட்டில் சொல்லும் ஒவர் மட்டும் தான் தெரியுமா??????

//என்னா டீல் அதெ சொல்லு... எதானச்சிம் கைமாத்தி விடணுமா....???? //

ஆமாம் ரெடியா சொல்லு ;-)

நாகை சிவா said...

//ஏன் கல்லுல போட முடியாது?? விளக்கம் பத்தாது...//

அடங்க வென்று, சம்சா உள்ள இருக்குற மசாலாவா சம்சா உள்ள வச்சி எண்ணெய்யில் போட்டு எடுத்தா தான் அது சம்சா மாதிரி வரும். மாவையும் மசாலாவையும் ஒன்னா போட்டு எண்ணெய்யில் போட்டா என்னாகும். அது போல தான் இதுவும். நான் அ.வே. தான். கப்பி சார் நீங்க மு. வே. தானே..... கொஞ்சம் யோசிங்க