Monday, October 30, 2006

நட்சத்திரம் - மெய்யாலுமா?

வணக்கம், வணக்கம்.

என்னங்க சொல்லுறீங்க !!!!!!!

நானா மெய்யாலுமா? யம்மா இருக்காதும்மா. நீங்க வேற யாரையோ நினைச்சு என்கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க போல.

ஆமாம் நான் தான் சிவா

அப்ப நான் தானா?

இல்லங்க இங்கன ஏகப்பட்ட சிவாகள் இருக்காங்க, அட்ரஸ் மாத்தி வந்து இருக்க போறீங்க,

நாகை சிவா தானா !

ஆங் புரிஞ்சி போச்சுங்க இப்ப, சின்ன பையன் தானேனு விளையாடுறீங்களா?

இல்லையா......

நான் எப்படிங்க அங்க எல்லாம், சே... சே... இருக்காது. நான் சும்மா கொசுவையும், சிட்டுக்குருவியையும் வச்சு பொழப்ப ஒட்டிக்கிட்டு இருக்கேன். நமக்கு எல்லாம் அந்த குடுப்பினை கிடைக்காது. வேணுமுனா யாருக்காச்சும் வால் நட்சத்திரமாக இருக்கலாம்.

இல்லையா, உண்மையாக தான் சொல்லுறீங்களா.....

நம்பலாமா?

நம்பி தான் ஆகனுமா, ஆகா இந்த நேரம் பார்த்து பக்கத்தில் எவனும் இல்லையே, இருந்தா அவன கிள்ளி பார்த்து கனவா இல்ல நனவா கன்பார்ம் பண்ணிடலாம். யோவ் ஜார்ஜ், புடின், பிளேயர் எங்கய்யா போனீங்க நீங்க எல்லாம்......

அவங்களை எல்லாம் கூப்பிட வேண்டாமா.... ஏன்

நனவு தானா....

இது என்னடா தமிழ்மணத்திற்கு வந்த சோதனை !!!

இதை தான் குப்பையும் ஒரு நாள் கோபுரத்தில் ஏறும் என்பார்களோ?

சரி ஏதோ காற்று கொஞ்சம் பலமா அடிச்சி கோபுரத்தில் ஏறியாச்சு, அடுத்த காற்று அடிப்பதற்கு முன்பு என்ன என்ன உளறனமோ அதை எல்லாத்தையும் உளறிட்டு போயிறேன். அந்த உளறலை கேட்டு விட்டு ரொம்ப கோவப்படாம பார்த்து பக்குவமா வேப்பிலை அடிங்க. அதை விட்டு மாட்டுனாடா அனமாத்தா ஒரு ஆளுனு நினைச்சு எல்லாரும் சேர்ந்து கும்மி அடிச்சுட்டு போயிடாதீங்க. அப்புறம் எங்க தல கைப்பூ வ கூட்டி வந்து நியாயம் கேட்பேன் சொல்லிட்டேன்.

உலகத்தில் இருக்கும் எல்லா சாமிகளையும் வேண்டிக்கிட்டு இந்த வார முழுவதும் உங்களை தொல்லை பண்ணப் போகின்றேன்.

வந்து வாழ்த்திட்டு போங்க புண்ணியவான்களே....... எதுக்குனு கேட்குறீங்களா.... நட்சத்திரமாக தேர்ந்து எடுத்ததுக்கும் அதுவே 50 வது பதிவாக அமைந்தற்க்கும் தான்.

129 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//இது என்னடா தமிழ்மணத்திற்கு வந்த சோதனை !!!

இதை தான் குப்பையும் ஒரு நாள் கோபுரத்தில் ஏறும் என்பார்களோ?
//

சிவா..!
இதுக்கு பேருதான் தன்னடக்காமா ?
தமிழ்மண நட்சத்திர வாரத்தில் கலக்குங்க! வாழ்த்துக்கள் !
:)

ramachandranusha said...

தைரியமா ஆரம்பிங்க வாழ்த்துக்கள்

இலவசக்கொத்தனார் said...

50!
ஸ்டார்!
அடுத்து என்ன கெட்டி மேளம்தான்!!

இந்த வாரம் சூப்பர் வாரமாக இருக்கும். எனக்கு தெரியும். வாழ்த்துக்கள்!

இராம் said...

தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்...... நமது நட்சத்திர புலியை வரவேற்க.!!!!

Vajra said...

வாழ்த்துக்கள் நாகை சிவா அவர்களே...

ILA(a)இளா said...

என்ன கொடுமை இது சரவணன்!

மேலே இருக்கிறது சும்மானாச்சுக்கும்.

வாழ்த்துக்கள் புலி!
சங்கத்துல இருந்து இன்னொரு நட்சத்திரம்.

ஜொலிக்குது ஜொலி ஜொலிக்குது..
ஜொலிக்குது ஜொலி ஜொலிக்குது..

அதிகமா சன் மியூசிக் பார்த்தா இப்படிதான் பின்னூட்டம் போடத்தோணும்

நன்மனம் said...

புலி வருது.... புலி வருதுன்னாங்களே இது தானா.....

வாங்க தமிழ் புலி நாகை சிவா அவர்களே!!!!

நட்சத்திர வாழ்த்துக்கள்.

:-)

நாகை சிவா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கண்ணன்.

//சிவா..!
இதுக்கு பேருதான் தன்னடக்காமா ?//

உள்ளூர்க்காரனை இப்படி கிண்டல் பண்ணலாமா அண்ணன் :-(

Hariharan # 26491540 said...

புலியா இருந்தாலும் சும்மாச் சிங்கம் மாதிரி சீறிவாங்க இந்த வாரம் முழுதும் தமிழ்மணத்தில் பிரமாதமான பதிவுகள் போட்டு துருவநட்சத்திரமாக ஜொலித்து வலம் வாருங்கள் நாகை சிவா (எ) புலிச்சங்கத்துச்சிங்கமே!

நாகை சிவா said...

//தைரியமா ஆரம்பிங்க வாழ்த்துக்கள் //

வாங்க உஷா அக்கா, முதல் தடவை வறீங்க. இப்படி எதாச்சும் சந்தர்ப்பம் கிடைத்தால் வருவீங்க போல. சரி ஒரு சமையல் குறிப்பு இருக்கு. அதுக்கு மறக்காம வந்துடுங்க...

நாகை சிவா said...

//50!
ஸ்டார்!
அடுத்து என்ன கெட்டி மேளம்தான்!!//

கொத்துஸ், ஏன் இப்படி?
நம்ம பதிவை வீட்ல எல்லாம் படிக்குறாங்க. அதனால் பாத்து, உங்க சிஷ்ய புள்ள வாழ்க்கையில் நீங்களே விளையாடலாமா சொல்லுங்க.....

நாகை சிவா said...

//தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்...... நமது நட்சத்திர புலியை வரவேற்க.!!!! //

ராம்! அடியேன் ஒரு பொடியன். எனக்கு ஏன் வரவேற்பு எல்லாம். இது எல்லாம் நம் தல கைப்பூவிற்கு மட்டும் தான்....

நாகை சிவா said...

//வாழ்த்துக்கள் நாகை சிவா அவர்களே... //

நன்றி வஜ்ரா சங்கர்....

உங்க பதிவு பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு. சீக்கிரமே வரேன்.

முத்துகுமரன் said...

அன்பான நட்சத்திர வரவேற்புகள் சிவா. சிறப்பான பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

நாகை சிவா said...

//என்ன கொடுமை இது சரவணன்!

மேலே இருக்கிறது சும்மானாச்சுக்கும்.//

புரியுது....புரியுது....

//ஜொலிக்குது ஜொலி ஜொலிக்குது..
ஜொலிக்குது ஜொலி ஜொலிக்குது..//

என்னாது, சபீனா விளம்பரமா இல்ல விம் பார் விளம்பரமா?

நாகை சிவா said...

//புலி வருது.... புலி வருதுன்னாங்களே இது தானா.....

வாங்க தமிழ் புலி நாகை சிவா அவர்களே!!!!//

நன்மனம், இத தான் நான் முன்னாடியே சொன்னேன், கூடி கும்மிடாதீங்க என்று. தமிழ் புலி யா ...
நல்லா தான்ய்யா கிளப்புறீங்க....

வேதா said...

அட நம்ம தோஸ்து நட்சத்திரமாயிருக்காமுல கூடவே போனஸா 50வது பதிவாம், எல்லாரும் எங்க போய்டீங்க? நாட்டாமை தலையில் சீசீ தலைமையில் ஒரு விழா எடுத்துடலாம்:)
வாழ்த்துக்கள் சிவா:)

நாகை சிவா said...

//புலியா இருந்தாலும் சும்மாச் சிங்கம் மாதிரி சீறிவாங்க இந்த வாரம் முழுதும் தமிழ்மணத்தில் பிரமாதமான பதிவுகள் போட்டு துருவநட்சத்திரமாக ஜொலித்து வலம் வாருங்கள் நாகை சிவா (எ) புலிச்சங்கத்துச்சிங்கமே! //

ஹரி, வஞ்ச புகழ்ச்சி அணி உங்களுக்கு நல்லாவே வருது. முடிந்த அளவு நல்ல பதிவுகளாக போட முயல்கின்றேன்.

செந்தழல் ரவி said...

வாழ்த்துக்கள் !!! வாங்க சிவா !!!

படங்களோட நிறைய பதிவு போடுங்க !!! உங்க ஆபீஸ்ல நீங்க எப்படி பெஞ்சு தேச்சீங்கன்னு ப்ள்ள்ளேடு போடாம இருந்தா எனக்கு கொஞ்சம் சந்தோஷம் !!

கண்(ன்)னி வெடி பற்றி மேற்கொண்டு மேட்டர் சொல்லுங்க !!!

நாகை சிவா said...

//அன்பான நட்சத்திர வரவேற்புகள் சிவா. சிறப்பான பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் //

நன்றி முத்துக்குமரன். முடிந்த அளவு நல்ல ஒரு கலவையாக (கதம்பமாக) தர முயலுகின்றேன்.

நாகை சிவா said...

//நாட்டாமை தலையில் சீசீ தலைமையில் ஒரு விழா எடுத்துடலாம்:)//

என் தலையில் எடுக்காம இருந்தா சரி தான்.

வாழ்த்துக்களுக்கு நன்றி வேதா.

செந்தில் குமரன் said...

வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

//படங்களோட நிறைய பதிவு போடுங்க !!! //

படத்தோடு தானே போட்டா போச்சு.

//உங்க ஆபீஸ்ல நீங்க எப்படி பெஞ்சு தேச்சீங்கன்னு ப்ள்ள்ளேடு போடாம இருந்தா எனக்கு கொஞ்சம் சந்தோஷம் !!//

உங்க சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். பிளேடு போடாமல் எழுத முயற்சிக்கிறேன். ஆனாலும் ரவி இது வரைக்கும் நான் ஸ்கூல், கல்லூரியில் தான் பெஞ்சு தேச்சு இருக்கேன். ஆபிஸ்ல இது வரைக்கும் இல்ல. ஏன்னா இங்கன பெஞ்சு இல்ல அதான்...

ஈழபாரதி said...

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்.

பொன்ஸ்~~Poorna said...

கலக்குங்க சிவா... வாழ்த்துக்கள்..

மணியன் said...

ஐம்பதை எட்டியதிற்கும் நட்சத்திரமாக மின்னுவதற்கும் வாழ்த்துக்கள் !! இந்த வாரம் இனிய வாரமே!

மனதின் ஓசை said...

////இது என்னடா தமிழ்மணத்திற்கு வந்த சோதனை !!!//

:-)

புலி.. கலக்கலாக ஜொலிக்க வாழ்த்துக்கள்..

நாகை சிவா said...

ஈழபாரதி, குமரன் எண்ணம்!

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

அழகு said...

வேப்பிலை அடிக்கலாம்னு வந்து பார்த்தா, ஏற்கனவே நெறைய பேர் அடிச்சிருக்காங்க!

சரி, வந்ததுக்கு ஒரு குத்து மட்டும் குத்தி வப்போம்.


இன்னும் ஆறு நாளு இருக்கில்ல ...

நாகை சிவா said...

நன்றி பொன்ஸ். கலக்கவா கலங்கவா என்று இருக்கேன்.

நன்றி மணியன், வாழ்த்துக்களுக்கும், ஊக்கமான வார்த்தைகளுக்கும்.

நாகை சிவா said...

//:-)

புலி.. கலக்கலாக ஜொலிக்க வாழ்த்துக்கள்.. //

நன்றி ஹமீது. இருந்தாலும் ஒரு ஸ்மைலிய போட்டு காமெடி பண்ணிடல நீர். இருக்கட்டும் இருக்கட்டும்....

நாகை சிவா said...

//வேப்பிலை அடிக்கலாம்னு வந்து பார்த்தா, ஏற்கனவே நெறைய பேர் அடிச்சிருக்காங்க!//

எங்க அழகு, அழகு என்று ஒரு அழகான பெயர் வைத்துக் கொண்டு இப்படி பயமுத்தலாமா... சின்ன பையங்க நான்..... பாத்து....

ramachandranusha said...

அடப்பாவி, எனக்காக சமையல் குறிப்பா? நானே சங்கடமான சமையலை மறக்க, இலக்கியம் படைத்துக்க்கொண்டு இருக்கிறேன்,
என்னைப் பார்த்து இப்படி சொல்ல.. இதெல்லாம் நல்லா இல்லே.. ஆமாம் .. இரு, இரு கண்ணை துடைத்துக் கொள்கிறேன்...( எங்கும் ஸ்மைலி இல்லை , நோட் இட்)

பூங்குழலி said...

வாழ்த்துக்கள்..

வல்லிசிம்ஹன் said...

நிறைய நகைச்சுவை எதிர்பார்க்கிறோம்.

வாழ்த்துகள் சிவா,.

நாகை சிவா said...

//அடப்பாவி, எனக்காக சமையல் குறிப்பா? நானே சங்கடமான சமையலை மறக்க, இலக்கியம் படைத்துக்க்கொண்டு இருக்கிறேன்,//

அடடே சமையல் குறிப்பு உங்களுக்கு இல்லங்க. நாங்க பண்ணிய ஒரு உணவு வகைய பதிவா போடலாம் என்று உள்ளேன். இன்னும் பெட்டரா செய்ய ஐடியா குடுப்பீங்க என்பதுக்கு தான் உங்களை பாத்து சொல்ல சொன்னேன்..... நீங்க இலக்கியமே படைக்கும் போது சமையல் எல்லாம் உங்களுக்கு கால் தூசு இல்லையா?

உங்களுக்கும் சேர்த்து நான் ஸ்மைலி போடுறேன்.
:)))))))))))))))
:))))))))))))))

நாகை சிவா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி பூங்குழலி.

நன்றி வல்லி, நகைச்சுவை பதிவா? இது வரை யோசிக்க வில்லை. நேரம் அமைந்தால் அதையும் போட்டு விடுவோம்.

இராம் said...

//ராம்! அடியேன் ஒரு பொடியன். எனக்கு ஏன் வரவேற்பு எல்லாம். இது எல்லாம் நம் தல கைப்பூவிற்கு மட்டும் தான்.... //


சரி பொடி புலி.... ;-) எங்கே நம்ம தல, சீக்கிரம் அவருடைய தலைமையில் பெரிய பாரட்டு விழா நடத்திடுவோம் உனக்கு..... :-)))

மஞ்சூர் ராசா said...

நட்சத்திரமே, நட்சத்திரமே
நாகையில் பிறந்த நட்சத்திரமே
வாழ்த்தை சொல்லும் நேரத்திலெ
நாலு நல்ல பதிவை தரணும்
சொல்லிப்புட்டேன்.
நாலு பேரு அதெ பாராட்டணும்
நன்மையே உண்டாகட்டும்
ஆமா
வாழ்த்திப்புட்டேன்.

வடுவூர் குமார் said...

நாகை சிவா
கலக்குங்க! வாழ்த்துகள்.
நாகப்பட்டினத்தில் இருந்து அடுத்தது யாருப்பா?

Samudra said...

பிரசண்ட் சார். :)

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அடிச்சு ஆடுங்கப்பூ.. வாழ்த்துக்கள்

தேவ் | Dev said...

டுவிங்க்ள் டுவிங்க்ள் லிட்டில் ஸ்டார்.. நம்ம டைகர் இப்போ தமிழ்மணத்து ஸ்டார்...

ஜொள்ளுப்பாண்டி said...

என்ன சும்மா நிக்குறீங்க ?? அடிச்சு பட்டையக்கெளப்புங்க சிவா :)))

துளசி கோபால் said...

ஆஹா...... கொஞ்ச நாளா ஆளைக் காணோமேன்னு பார்த்தேன்.
பதுங்குனது இப்படிப் பாயறதுக்கா?:-)))


வாங்க . ம்ம்ம் (ஆ)ரம்பமாகட்டும் கச்சேரி.

கைப்புள்ள said...

//வந்து வாழ்த்திட்டு போங்க புண்ணியவான்களே....... எதுக்குனு கேட்குறீங்களா.... நட்சத்திரமாக தேர்ந்து எடுத்ததுக்கும் அதுவே 50 வது பதிவாக அமைந்தற்க்கும் தான். //

அப்படியா? அடிச்சு தூள் கெளப்பு என் செல்வமே!

நாகை சிவா said...

//சரி பொடி புலி.... ;-) எங்கே நம்ம தல, சீக்கிரம் அவருடைய தலைமையில் பெரிய பாரட்டு விழா நடத்திடுவோம் உனக்கு..... :-))) //

ஒரு வார்த்தை சொன்னா போதும், அத அப்படியே பிடிச்சுப்பீங்களே.... சரி நீ நடத்து ராசா. உன்ன அப்பால கண்டுக்குறேன்

நாகை சிவா said...

//நட்சத்திரமே, நட்சத்திரமே
நாகையில் பிறந்த நட்சத்திரமே
வாழ்த்தை சொல்லும் நேரத்திலெ
நாலு நல்ல பதிவை தரணும்
சொல்லிப்புட்டேன்.
நாலு பேரு அதெ பாராட்டணும்
நன்மையே உண்டாகட்டும்
ஆமா
வாழ்த்திப்புட்டேன். //

ராசா, என்ன இது. இப்படி எல்லாம் சொன்னா அப்புறம் நான் ரொம்ப பீல் பண்ண ஆரம்பித்து விடுவேன்.
பதிவை நானு போடுகிறேன். நீங்க வந்து சொல்லுங்க அது நல்ல பதிவா இல்லையா என்று....
உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி மஞ்சூர்

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் நட்சத்திரமே

முத்து(தமிழினி) said...

வாழ்த்துக்கள்

கீதா சாம்பசிவம் said...

இதைத்தானா சஸ்பென்ஸா வச்சிருந்தீங்க? யூகிக்கவே முடியலை. நான் ரொம்ப லேட் போலிருக்கு. எல்லாரும் வந்து வாழ்த்திட்டுப் போயிட்டாங்க! என்னுடைய வாழ்த்துக்களும் உங்களுக்கு என்னிக்குமே உண்டு. மிகச் சிறந்த பதிவுகளை எதிர்பார்க்கிறேன். புலி பதுங்குறது பாயறதுக்குத் தான்னு நான் தான் சொல்லிட்டே இருந்தேனே! :D
50-வது பதிவுக்கும் வாழ்த்துக்கள்.

சின்னக்குட்டி said...

நட்சத்திரத்துக்கு இந்த சின்னக்குட்டியின் வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி said...

அடடா! லேட்டாத்தான் பார்த்தேன் நாகையாரே!

50 + ஸ்டார், ஆஹா....
ஸ்டார்ட் மியூசிக்...............

வாழ்த்துக்கள்.

(கும்மி அடிக்க வேற அழைப்பு கொடுத்திருக்கீங்க....ம்..நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்...)

எம்.ஜி.ஆர் said...

ரத்தத்தின் ரத்தமே, உடன் பிறப்பே,
இன்றைய தினம் தமிழ்மணத்தின் நட்சத்திரமாக நீ தோன்றியிருப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாயின் பெருமிதத்தை தாயுள்ளத்தோடு நானும் கொண்டு பேருவகையோடு வாழ்த்துகிறேன்.

வாழ்க. வளர்க.

கருணாநிதி said...

கழக உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்த வேளையில்
விண்மீனாய் நீ விண்ணில் ஜொலிக்கக்கண்டேன்.

அவ்வப்போது சந்தித்து அரவணைத்துக் கொண்டாடாமல் போனாலும் என் நெஞ்சோடு என்றென்றும் வாழும் வைரம் அல்லவா நீ!

வாழ்த்துகிறேன். வெற்றி நடை போட!

கேப்டன் said...

தமிழ் மணத்துல மொத்தம் ஆயிரத்து சொச்சம் பேரு எழுதறாங்க! படிக்கறவங்க பல்லாயிரம் பேரு!
அதுல கமெண்ட் போடறவங்க சில ஆயிரம் பேரு! கமெண்ட் போடாதவங்க சில ஆயிரம் பேரு!

சீரியஸான பதிவுகளை விரும்பறவங்க சில பேரு! நகைச் சுவையான விஷயங்களை விரும்பறவங்க சில பேரு!
எதை எழுதினாலும் படிக்கறவங்க சில பேரு!

இப்படி தினம் தினம் பல்லாயிரம் பேரு எழுதி, படிக்குற தளத்துல இதுவரை நட்சத்திரம் ஆனவங்க 82 பேரு!

என்னோட வாழ்த்துக்கள். தொகுதில எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு! வர்ட்டா! அய்ங்க்!

ஜார்ஜ் புஷ் said...

தம்பி நாகை சிவா அவர்களுக்கு,

அமெரிக்காவின் பாதுகாப்பு பிரச்சினை, பொருளாதார வளர்ச்சி, அடிப்படை கட்டமைபு வளர்ச்சிகள், பிற நாடுகளுடன் உலக மயமாக்கல் பேச்சு வார்த்தை போன்ற என்ணிலடங்கா வேலைகட்கு மத்தியிலும் தமிழ் மணத்தின் நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

விஜய டி.ஆர் said...

அடிச்சாக்கா ஒரு பீரு!
அகப்பட்டா ஒரு ஸ்டாரு!
மப்பு தெளிய கொஞ்சம் மோரு!
நாகையார் இல்லாட்டா கொஞ்சம் போரு!
வாழ்த்துறது டி.ஆரு!

ஏய்! டண்டனக்கா! ஏய்! டணக்குடக்கா!

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்கள் நாகை சிவா

கப்பி பய said...

கலக்குங்க சிவா..வாழ்த்துக்கள்!!

தம்பி said...

நட்சத்திர புலியாருக்கு ஆப்புகள் சாரி வாழ்த்துகள். இந்த வாரம் கலகலப்பா இருக்கணும் புலி.

சுந்தர்.சி படத்துல வர்ற கலியாண வூடு மாதிரி களை கட்டணும் சரியா!

Sivabalan said...

நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

//நாகை சிவா
கலக்குங்க! வாழ்த்துகள்.
நாகப்பட்டினத்தில் இருந்து அடுத்தது யாருப்பா? //

உங்களை தொடர்ந்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்காங்க. அடுத்து யாரு வராங்கனு பாப்போம். அனேகமா நம்ம கோவி. கண்ணனாக தான் இருக்கும்.

நாகை சிவா said...

//பிரசண்ட் சார். :) //

சமுத்ரா, நோட் பண்ணியாச்சு. கட் அடிக்காம வரனும் என்ன. ஒரு வாரம் தானே... :))))))

நாமக்கல் சிபி said...

//இல்லங்க இங்கன ஏகப்பட்ட சிவாகள் இருக்காங்க, அட்ரஸ் மாத்தி வந்து இருக்க போறீங்க,
//

நானும் புதுசுல ரொம்ப குழம்பிடுவேன்... வேற யாரோனு நெனச்சி உன் பதிவெல்லாம் படிச்சேனா பாத்துக்கோயேன் ;)

சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் :-)

நாமக்கல் சிபி said...

//இதை தான் குப்பையும் ஒரு நாள் கோபுரத்தில் ஏறும் என்பார்களோ?//

புலி,
இருந்தாலும் உனக்கு இவ்வளவு தன்னடக்கம் கூடாது :-)

நாமக்கல் சிபி said...

//நட்சத்திரமாக தேர்ந்து எடுத்ததுக்கும் அதுவே 50 வது பதிவாக அமைந்தற்க்கும் தான்//

ஐம்பது பதிவிலே நட்சத்திரமா...
வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி said...
This comment has been removed by a blog administrator.
சந்தோஷ் aka Santhosh said...

புலி,
கலக்கிட்டே போம்மா.. அடிச்சி ஆடு பங்காளி. தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்.. கலக்கு மச்சி.

நாகை சிவா said...

பாலபாரதி, பாண்டி - அடிச்சு தானே ஆடணும் ஆடிடுவோம்....

நாகை சிவா said...

//டுவிங்க்ள் டுவிங்க்ள் லிட்டில் ஸ்டார்.. நம்ம டைகர் இப்போ தமிழ்மணத்து ஸ்டார்... //

என்ன போர்வாள், என்ன போய் சிம்பு கூட எல்லாம் கம்பேர் பண்ணிக்கிட்டு, நான் அவ்வளவு ஒவரா பேசுறேன் .....

நாகை சிவா said...

//ஆஹா...... கொஞ்ச நாளா ஆளைக் காணோமேன்னு பார்த்தேன்.
பதுங்குனது இப்படிப் பாயறதுக்கா?:-)//

அடடா, பதுங்குனது வேலை பளு காரணமாக. நீங்க வேற இப்படி ஆரம்பித்து வீடாதீங்க....

வாழ்த்துக்கு நன்றி துளசியக்கா

நாகை சிவா said...

//அப்படியா? அடிச்சு தூள் கெளப்பு என் செல்வமே! //

நான் தூள் கிளப்புறது இருக்கட்டும். அது என்ன செல்வமே.... அப்பால கடன் ஏதும் கேட்கும் ஐடியால இருக்கீயா....

Syam said...

ஒட்டியாச்சு ஒட்டியாச்சு ஒயிட் ஹவுஸ் செவுத்தலயே வாழ்த்து போஸ்டர் அடிச்சு ஒட்டியாச்சு.... :-)

நாகை சிவா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கானா பிரபா மற்றும் முத்து(தமிழினி) அவர்களே!!!

Syam said...

50 வது பதிவு...
நட்டசத்திர பதிவர்...

கலக்கறே பங்காளி...வாழ்த்துக்கள்...அடிச்சு ஆடு :-)

கால்கரி சிவா said...

வாழ்த்துக்கள். ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும் நல்லதொரு வாரமாக அமையட்ட்டும்

கால்கரி சிவா said...

வாழ்த்துக்கள். ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும் நல்லதொரு வாரமாக அமையட்ட்டும்

நாகை சிவா said...

//என்னுடைய வாழ்த்துக்களும் உங்களுக்கு என்னிக்குமே உண்டு. மிகச் சிறந்த பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.//

உங்கள மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் எனக்கு என்றும் உண்டு என்பது எனக்கு தெரியாதா என்ன?

சிறந்த பதிவா.......

நாகை சிவா said...

//நட்சத்திரத்துக்கு இந்த சின்னக்குட்டியின் வாழ்த்துக்கள் //

சின்ன பையனுக்கு வாழ்த்துக் கூறிய சின்னக்குட்டிக்கு என் நன்றிகள்

நாகை சிவா said...

//கும்மி அடிக்க வேற அழைப்பு கொடுத்திருக்கீங்க....ம்..நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்... //

தளபதியாரே! ரொம்ப கும்மிடாதீங்க ப்ளிஸ்....

நாகை சிவா said...

//தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாயின் பெருமிதத்தை தாயுள்ளத்தோடு நானும் கொண்டு பேருவகையோடு வாழ்த்துகிறேன்.//

புரட்சி தலைவா, உன் வாழ்த்தை பெற என்ன தவம் செய்தேனோ....

செல்வன் வரல, ஆனா நீங்க வந்துட்டீங்க.... அது போதும்...

நாகை சிவா said...

//அவ்வப்போது சந்தித்து அரவணைத்துக் கொண்டாடாமல் போனாலும் என் நெஞ்சோடு என்றென்றும் வாழும் வைரம் அல்லவா நீ!//

லக்கி லுக்கே வந்து வாழ்த்தியது போல் உள்ளது.....

நாகை சிவா said...

//இப்படி தினம் தினம் பல்லாயிரம் பேரு எழுதி, படிக்குற தளத்துல இதுவரை நட்சத்திரம் ஆனவங்க 82 பேரு! //

என்ன சேர்த்து 82 ஆ, இல்ல நான் 83னா. இப்படிப்பா இதை எல்லாம் வர்கார்ந்து கணக்கு எடுக்குறீங்க....

எஸ்.கே., வராத குறையும் போச்சு

நாகை சிவா said...

//ஜார்ஜ் புஷ் said...
தம்பி நாகை சிவா அவர்களுக்கு,//

அண்ணன் ஜார்ஜ் அண்ணன், உங்கள கனவா இல்ல நனவானு கிள்ளி பாக்க தான் கூப்பிட்டேன். நீங்க இப்படி எல்லாம் பேசி என்ன வம்புல மாட்டி வீடாதீங்க....

நாகை சிவா said...

//அடிச்சாக்கா ஒரு பீரு!
அகப்பட்டா ஒரு ஸ்டாரு!
மப்பு தெளிய கொஞ்சம் மோரு!
நாகையார் இல்லாட்டா கொஞ்சம் போரு!
வாழ்த்துறது டி.ஆரு!//

பாட்டு சூப்பர், இதில் நாகையார் ரொம்பவே ஒவர் டி.ஆர். சார்.

நாகை சிவா said...

கலக்க சொன்ன கப்பிக்கும், வாழ்த்து சொன்ன குமரனுக்கும் மிக்க நன்றி.

மலைநாடான் said...

நாகை சிவா!

உங்கள் நட்சத்திரவாரத்திற்கு வாழ்த்துக்கள்

சரவணன் said...

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

//நட்சத்திர புலியாருக்கு ஆப்புகள் சாரி வாழ்த்துகள். இந்த வாரம் கலகலப்பா இருக்கணும் புலி.//

தம்பிண்ணன், நீங்க பாட்டுக்கு ஆப்ப அள்ளி வீசிட்டு போயீடாதீங்க... சின்ன பையன் நான்....

//சுந்தர்.சி படத்துல வர்ற கலியாண வூடு மாதிரி களை கட்டணும் சரியா! //

பாக்கலாம். நீங்கள் எல்லாம் நம்ம வூட்டாண்ட வந்தாலே அப்படி தானே இருக்கும் :)

நாகை சிவா said...

//ஒட்டியாச்சு ஒட்டியாச்சு ஒயிட் ஹவுஸ் செவுத்தலயே வாழ்த்து போஸ்டர் அடிச்சு ஒட்டியாச்சு.. :-) //

அதானே பார்த்தேன். எங்கடா நம்ம பங்கு இன்னும் காணாம்....

செல்வன் said...

நாகையாரே

வாழ்த்துக்கள். அமெரிக்க நேரம் நள்ளிரவில் நட்சத்திரமாக உலா வந்திருக்கிறீர்கள்.(நட்சத்திரம் நள்ளிரவில் தானே ஜொலிக்கும் என்கிறீர்களா?:-) காலையில் தமிழ்மணத்தை பார்த்ததும் தான் நம்ம நாகையார் தான் இவ்வார நட்சத்திரம் என தெரிந்து கொண்டேன். எப்படியோ லேட்டாக வாழ்த்தினாலும் லேட்டஸ்டாக வாழ்த்தி விடுகிறேன்.

மிக கலக்கலான வாரத்தை அள்ளித்தர வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

//நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் //

நன்றி சிவபாலன், மாயவரம் சரவணன் மற்றும் மலை நாடன் அவர்களே...

நாகை சிவா said...

//நானும் புதுசுல ரொம்ப குழம்பிடுவேன்... வேற யாரோனு நெனச்சி உன் பதிவெல்லாம் படிச்சேனா பாத்துக்கோயேன் ;)//

வெட்டி பரவாயில்ல, நீயாச்சும் உண்மைய சொன்னியே....

//புலி,
இருந்தாலும் உனக்கு இவ்வளவு தன்னடக்கம் கூடாது :-) //

எல்லாம் உன்கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான் வெட்டி....

நாகை சிவா said...

//வாழ்த்துக்கள். ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும் நல்லதொரு வாரமாக அமையட்ட்டும் //

எங்கடா இன்னும் நம்ம அண்ணனை காணாம் பாத்தேன்....

அது என்ன ம்ம்ம்ம்ம் இழுத்து இருக்கீங்க... சரி சரி எனக்கு புரியுது...

நாகை சிவா said...

//எப்படியோ லேட்டாக வாழ்த்தினாலும் லேட்டஸ்டாக வாழ்த்தி விடுகிறேன்.//

நீங்க எப்ப வந்தாலும் வருவதே போது செல்வன்.... நன்றிகள் பல...

நாகை சிவா said...

//புலி,
கலக்கிட்டே போம்மா.. அடிச்சி ஆடு பங்காளி. தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்.. கலக்கு மச்சி. //

வா பங்கு.... ஆடிடுவோம்....

ஓகை said...

நாகை சிவாவுக்கு ஓகையின் நல்வாழ்த்து.

வைரமுத்து said...

தமிழ்மணத்தின் நட்சத்திரமே!
வாசக உள்ளங்களின் எண்ணச் சித்திரமே!
அவையடக்கம் வேண்டியதுதான்!
அவையச்சம்தான் ஆகாது!

நிமிர்ந்து உட்கார்!
நேர்கொண்ட பார்வை வீசு!
புருவமத்தியில் கவனத்தை நிறுத்து!
நட்சத்திரப் பதிவுகளை கவிதைகளாக்கு!
கவலைப் படாதே!
நீ எழுதும் எவையும் கவிதை என்றே ஏற்றுக் கொள்வோம்!

வாழ்த்துக்கள்! தொடர்க! உம் பதிவுகள்!

வேலுப்பிள்ளை பிரபாகரன் said...

புலி எழுந்தாலும் விழுந்தாலும் தமிழீழமே எம் உயிர் மூச்சு.

அத‌ற்கு உறுதுணையாய் நிற்கும் உங்க‌ள் ப‌திவுக்கு வாழ்த்துகள்!

புலியின் பெருமையை உல‌குக்கு உண‌ர்த்தும் உங்க‌ள‌து சேவைக்கு என் சிர‌வ‌ண‌க்க‌ம் ‍- ப‌ட‌த்துக்கும் சேர்த்து.

நூறடியுங்கள், ஆனால் பி.க.தனம் வேண்டாம்.

வாழ்க‌ த‌மிழீழ‌ம், வெல்க‌ புலி!

G.Ragavan said...

வாழ்த்துகள் சிவா. இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள்.

Queen said...

சிவா,எனக்கு தலையும் புரியல வாலும் புரியல. என்ன நட்சத்திரம், எதை பத்தி பேசுறீங்க எல்லாரும்?

ஜோ / Joe said...

வாழ்த்துக்கள் நாகை சிவா!

மு.கார்த்திகேயன் said...

வாழ்த்துக்கள் மாப்பி.. வாழ்க வளர்க!!!

நாகை சிவா said...

//ஐம்பது பதிவிலே நட்சத்திரமா...
வாழ்த்துக்கள்!!!//

ஆமாம் வெட்டி, எனக்கும் இதுனால ரொம்பவே டவுட்டா இருந்துச்சு. தமிழ்மணம் முகப்பில் நம்ம பெயர பார்த்த பிறகு தான், ஆங் உண்மை தான் போலனு ஒரு நம்பிக்கை வந்துச்சு.

நாகை சிவா said...

ராகவன், ஒகை, ஜோ.. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

சாலமன் பாப்பைய்யா said...

ரொம்ப சந்தோஷம்யா!

ரொம்ப நல்லா எழுதறவங்க சீக்கிரமா ஸ்டார் ஆனதுல ஒண்ணும் ஆச்சரியம் இல்லைய்யா!

தொடர்ந்து இப்படியே எழுதய்யா!

படையப்பா said...

வெற்றிக்கொடிகட்டு மலைகளை முட்டும் வரைமுட்டு
லட்சியம் எட்டும் வரையெட்டு
படையெடு படையப்பா
கைதட்டும் ஒலி பட்டு
நீ விடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டைப்பிளவுற்று
உடைபடும் படையப்பா
வெட்டுக்கிளியல்ல
நீ ஒரு வெட்டும் புலியென்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு
நடையெடு படையப்பா
மிக்கத்துணிவுண்டு
இளைஞர்கள் பக்கத்துணையுண்டு
உடன் வர மக்கட் படையுண்டு
முடிவெடு படையப்பா...(வாழ்க்கையில்)

வாழ்த்துக்கள்.

உதயமூர்த்தி said...

உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி...

வின்னர் கைப்புள்ளை said...

என்ன இது சின்னப் புள்ளைத்தனமா!

அண்ணன் நான் ஸ்டாருன்னு மெயில் போட்டா உடனே நம்பாம ஏன் இப்படி அழிச்சாட்டியம் பண்ணுறே!

தம்பீ! நான் கிழிச்ச கோட்டைத் தாண்டப் பிடாது சொல்லிட்டேன்!

இப்படியே இந்த வாரம் முழுக்க இங்கணயே சமர்த்தா இரு! அண்ணன் உனக்கு குச்சி முட்டாயும், குடை ரொட்டியும் வாங்கிட்டு வர்றேன் சரியா!

அப்துல் கலாம் said...

உறங்காமல் விழித்தபடியே கனவு காண் நாகை சிவா என்னும் இளைஞனே!

இந்திய அரசு வல்லரசாய், வலிமையன பாரதமாய் உன் முன்னே இருக்கும்!

வாழ்த்துக்கள்!

நட்சத்திரக் கனவுகளுக்காக!

லைலா said...

மை ஹார்ட்லி கங்ராஜுலேஸன்ஸ்!

சிம்ரன் said...

வாழ்த்துக்கள் நாகை சிவா!

கலக்குங்க! படிக்க ஆவலா இர்க்கோம்!

நமீதா said...

நல்லதா குத்துப் பாட்டு பதிவு ஒண்ணை எதிர்பார்க்கிறேன் உங்க நட்சத்திர வாரத்துலே.

குஷ்பூ said...

நட்சத்திர வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு ஜாக்பாட்!

நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொல்லுங்கள்(!?)

கோபிகா said...

உங்க பதிவுகளைப் படிச்சிதான் எனக்கு தமிழ் படிக்கா ஆசை வந்தல்லோ!

வாழ்த்துக்கள்!

த்ரிஷா said...

அப்படிப் போடு! போடு!
நல்ல பதிவாப் போடு! தன்னால!

அசின் said...

ஸ்டாராக ஆகிட்டிங்கோ!
சூப்பர் பதிவா போட்டுடுங்கோ!

நாகை சிவா said...

//சிவா,எனக்கு தலையும் புரியல வாலும் புரியல. என்ன நட்சத்திரம், எதை பத்தி பேசுறீங்க எல்லாரும்? //

அது ஒன்னும் பெரிசா இல்லங்க. கிழே இருக்கும் இரு சுட்டிகளை சென்று பாருங்கள். உங்களுக்கே தெரியும்.

http://www.thamizmanam.com

href="http://www.thamizmanam.com/star_post.php"

கங்குலி said...

ஹல்லோ! நான் தானுங்க கங்குலி,
(இப்பவெல்லாம் இப்படித்தான் அறிமுகப் படுத்த வேண்டி இருக்கு)

நட்சத்திரமாயிட்டீங்க! வாழ்த்துக்கள்!
இந்த நேரத்துல நீங்க சொன்னா நிச்சயமா கேப்பாங்க! எனக்கு நிஜமாவே கிரிக்கெட் விளையாடத் தெரியும். என்னையும் சேர்த்துக்கச் சொல்றீங்களா?

டெண்டுல்கர் said...

வாழ்த்துக்கள் சிவா!

நான் 100 அடிப்பேன்னெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது! அப்புறம் இந்தியா ஜெயிக்கறது சந்தேகம். (இல்லாட்டி மட்டும் ஜெயிக்கிறா மாதிரிதான்னு யாரு அங்க முணகுறது?)

அதனாலே ஒரே ஒரு கமெண்ட் மட்டும் போடறேன். ஓ.கே வா?

டிராவிட் said...

எனக்கு அதிரடியா அடிச்சி விளையாடுறது பிடிக்காது!

நிதானமா தினமும் ஒரு பதிவு போடுங்க! ஒரு பதிவு கூட போடலைன்னாலும் பரவாயில்லை!

ஒரு வாரமும் ஃபீல்டுல இருக்கணும். அவ்வளவுதான்!

சேவாக் said...

வாழ்த்துக்கள் சிவா!

தினமும் ஒரு பதிவு எல்லாம் சரிப்பட்டு வராது! வந்தமா! முதல் நாளே ஒரு பத்து பதிவு போட்டமா! நடையக் கட்டிகிட்டே இருக்கணும்! அவ்வளவுதான்! இதுதான் நம்ம பாலிஸி!

பதான் said...

மெயின் பிளேயர்ஸெல்லாம் விளையாட மாட்டாங்க! எல்லாப் பொறுப்பையும் நம்ம தலைல கட்டிடுவாங்க!

ஆனாலும் அடிச்சி விளையாடணும்னா எப்படி?

சரி! வந்த வேலையை விட்டுட்டு புலம்பறேன் பாருங்க!

உங்களுக்கு வாழ்த்துக்கள்!

ஹர்பஜன் சிங்க் said...

தினமும் தூஸ்ரா பதிவா போடுங்க!
இல்லாட்டி போட்ட பதிவையே திருப்பி போடுங்க!
வாழ்த்துக்கள்!

அம்பானி said...

தொழில் துறையில் புதிய நுட்பங்களைக் கொண்டுவரணும்! அதே மாதிரிதான் பல புதிய விஷயங்களா எழுதுங்க!

வாழ்த்துக்கள்!

சத்யராஜ் said...

என்னம்மா கண்ணு!

ஸ்டாராயிட்டயாமே! நல்லா ஷோக்கா எழுதுப்பா!

அப்புறம் அந்த தகடு மேட்டர் மறக்காம எழுது! தகடு! தகடு!

Anonymous said...

வாழ்த்துக்கள்!!!!

கலக்குங்க!!!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

கைப்புள்ள said...

என்னப்பா! ஒரு இண்டர்நேஷனல் பெர்சனாலிடி ஸ்டார் ஆகியிருக்காரு? வெறும் இந்தியன் கிரிக்கெட் டீமும் சில நடிகர்களும், சொற்ப பிரபலங்களும் மட்டும் வாழ்த்து சொன்னா ஆச்சா? வெஸ்ட் இண்டீஸ் டீம், தமிழ்நாடு கரகாட்ட டீமு, சுடான் பெண்கள் ஜிம்நாஸ்டிக்ஸ் டீமு...இவுங்கள்லாம் எங்கப் போனாங்க? சே! வர வர நாட்டுல மக்களுக்குப் பொறுப்பே இல்ல!