Sunday, April 30, 2006

நாகை நெல்லுக்கடை ஸ்ரீ மாரியம்மன்



இந்தியாவில் இருந்த வரை ஒரு முறை கூட இத்திருவிழாவை தவற விட்டதில்லை. எங்கு இருந்தாலும், எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் வந்து விடுவேன். போன வருடமும், இந்த வருடமும் அயல்நாட்டில் இருப்பதால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக என்னால் திருவிழாவில் பங்கேற்க முடியவில்லை. இதில் வருத்தம் தான். தீபாவளி, பொங்கல் எவ்வளவு முக்கியமோ அது போல அவர், அவர்களின் சொந்த ஊர் திருவிழாக்களும் முக்கியம் தான். அதில் இருக்கும் ஆனந்தமே தனி தான். இவ்விழாக்களின் போது மனதில் தோன்றும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.

பல்லாயிரகணக்கான மைல்கள் தள்ளி இருந்தாலும் மனது என்னவோ திருவிழாவை பற்றி தான் நினைத்துக் கொண்டு இருந்தது. அதிலும் இன்று நம்ம மாப்பிள்ளை செல்வன் நீரஜ்சனை செடில் வைத்து உள்ளார்கள். வீட்டிற்கு தொலைப்பேசியில் அழைத்து தேர் நிலையை அடைந்து விட்டதா? எனக் கேட்ட பிறகு தான் மனம் சிறிது அமைதி அடைந்து. நம்ம மாப்பிள்ளையும் செடில் ஏறும் போது அழுதும் இறங்கும் போது சிரித்தும் மறுபடியும் ஏற வேண்டும் என அடம் பிடித்து உள்ளார். தொலைப்பேசியில் கேட்கும் போதே மனத்திரையில் காட்சிகள் ஒடியது. மனம் மகிழ்ச்சி அடைந்தது. இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் தானே நம் வாழ்வின் உற்சாக டானிக்.

ஆகா இவன் ஒவரா அறுவைய போட ஆரம்பிச்சிட்டான் யாரும் சொல்லுறத்துக்கு முன்னால் நானே ஜகா வாங்கிறேன்.

இன்று பிறந்த நாள் காணும் புதுவை திரு. அரவிந்த் யாதவ் அவர்க்களுக்கு இந்த வலைப்பதிவின் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.அவரை பற்றி சுருக்கமாக - சொந்தத்தில் உள்ள நண்பர்களில் ஒருவர். விரிவாக எதிர்க்காலத்தில்.

நாகை நெல்லுக்கடை ஸ்ரீ மாரியம்மன் அருளால் எல்லூரும் எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ வேண்டுகிறேன்.


அன்புடன்,
நாகை சிவா

Saturday, April 22, 2006

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்


முன்னுரை : இந்த பதிவு ராஜ்குமாரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் எழதப்படவில்லை.

கடந்த வாரம் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்கள் இயற்கை எய்தினார். தமிழகத்தில் பிறந்து கன்னட திரைபட உலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர். தாதாசாகேப் பால்கே விருது உட்பட பல விருதுகளை குவித்தவர். அனைத்துக்கும் மேலாக தன் கண்களை தானம் செய்து இருவருக்கு ஒளி கொடுத்தவர்.

ஆனால் இவரின் இறுதி சடங்கின் போது நடந்த கலவரங்கள் அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுவனாக அமைந்து விட்டது.

அவரின் இறப்புக்கு பின் கர்நாடகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளில் சில

* கலவரத்தில் இறந்தவர்கள் - 8 நபர்கள்
* காயம் அடைந்தவர்கள் - 245 நபர்க்கள்
* பதிவு செய்யப்பட்ட வழக்குகள் - 41
* கைது செய்யப்பட்டவர்கள் - 581 நபர்கள்
* தீக்கரையானவை - 6 லாரிகள், 12 பஸ்கள், 20 கார்கள், 3 ஆட்டோகள், 54 இரு சக்கர வாகனங்கள், 3 பெட் ரோல் பங்குகள்
*காவல்துறையின் 7 வேன் கள், 3 கார்கள், இரண்டு குவாலிஸ் கார்கள், 5 ஜீப்கள், நான்கு இரு சக்கர வாகனங்கள்.
* மதிப்பீடபட்ட சேதம் - 100 கோடி.
* உலக அளவில் பெங்களூர் நகரத்திற்கு ஏற்பட்ட அவபெயர்.
* இவை அனைத்தின் காரணமாக எதிர்க்காலத்தில் ஏற்பட போகும் பாதிப்புகள் எவ்வளவோ?

யார் இந்த ராஜ்குமார்? எவ்வாறு இறந்தார்?

ஏதும் மக்கள் பிரச்சனைக்கு போராடி உயிர் விட்டாரா?
எவராலும் தாக்கப்பட்டு இறந்தாரா?

தன் தள்ளாத வயதில் நோய்வாய்பட்டு இறந்து உள்ளார்.

அவர் ஒன்றும் சுகந்திர போராட்ட தியாகியுமில்லை, மக்கள் பிரச்சனைக்காக போரடியவரும் இல்லை. ஒரு சாதரண சினிமா நடிகர். இன்னும் சொல்ல போனால் மொழியின் பெயரால் பிரிவினை ஏற்படுத்தியவர். தன் தொழில் சம்பந்தமாக இருமுறை போரட்டம் நடத்தியவர். அனைவருக்கும் பொதுவாக இருக்கு வேண்டிய நடிகர், தமிழகத்திற்கு காவேரி தண்ணீர் கொடுக்க கூடாது என பேரணி நடத்தியவர். ஒரு சராசிரி மனிதனாக தான் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து தன் 77ஆம் வயதில் காலம் ஆகியுள்ளார்.

"அண்ணவரு" இந்த நாட்டிற்க்கு செய்தது "என்ன(வரு)"?

அவருக்குகாக இவ்வளவு கலவரம் நடந்தது மிகவும் வருத்துக்குரியது.
நம் அரசியல்வாதிகள் இதிலும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி அரசியல் நடத்துவது நகைப்புகுரியது.

இறுதியாக, என்று தான் நம் மக்கள் சினிமா கலைஞர்களை கடவுளாகவோ, வழிகாட்டியாகவோ காணாமல் நம் கனவுகளின் பிம்பமாக காண போகின்றார்களோ?

Friday, April 14, 2006

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

உலக தமிழர் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்!

Sunday, April 09, 2006

சிவாஜி பன்ச் டையலாக்(Sivaji Punch Dialog)




Tuesday, April 04, 2006

தியாகமா??? நாடகமா???

தினமலரில் வெளியான செய்தி கட்டுரை உங்கள் பார்வைக்கு, அதற்கு முன் என்னுள் எழந்த சில கேள்விகள்!

1, ஜெயாபச்சன் பதவி பறிக்கபட்டவுடன், உடனடியாக தன் பதவியை ராஜினாமா செய்யாமல், காலம் கடத்தியது ஏன்?
2, இரண்டு பதவியில் ஏதாவது ஒரு பதவியை மட்டும் ராஜினாமா செய்யாதது ஏன்?
3, உண்மையில் இந்த ராஜினாமா தியாகம் என்றால், மறுபடியும் தேர்தலில் நிற்பது ஏன்?
4, கடைசியாக ஆனால் முக்கியமாக, இந்த நாடகத்திற்காக, நாடாளுமன்றத்தை எந்த அலுவல்களும் இல்லை என்று ஒத்திவைத்தது ஏன்?விவாதிபதற்கான மக்கள் பிரச்சனை ஏதும் இல்லையா?

http://www.dinamalar.com/2006april02/fpnews4.asp

தன் வினை தன்னை சுடும். தயவு செய்து தியாகம் என்ற வார்த்தையை கொச்சைபடுத்தாதீர்க்கள்.

Sunday, April 02, 2006

உலக இரட்சகர்!




தற்பொழது நடந்து கொண்டு இருக்கும் 10ஆம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் பாடத்தில் உலக இரட்சகர் யார் என்று கேள்வி கேட்க பட்டதாக தினமலர் மூலம் படிக்க நேர்ந்தது. அதற்கு விடைகளாக 1, சிவன் 2, ஏசு 3, திருமால் என கொடுக்கபட்டு இவற்றில் ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்டு உள்ளார்க்கள். இது வன்மையாக கண்டிக்க பட வேண்டியது. இது மாணவர்க்களிடம் மத வேற்றுமை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஏசு காவியம் போன்ற கிறிஸ்துவ பாடத்தில் இருந்து இந்த கேள்வி கேட்க பட்டு இருந்தாலும் விடைகளில் இந்து கடவுள் ஆன சிவன் மற்றும் திருமால் சேர்க்கபட்டது மிகவும் தவறு. இந்து மதத்தை பொறுத்தவரை திருமால் தான் உலகத்தை காப்பவர்(இரட்சகர்). அதனால் மத உணர்வை புண்படுத்தும் படியான கேள்விகளை தவிர்ப்பது நன்று.இதை கேள்வி தாள் தயாரிப்பவர்க்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கல்வி இயக்குனரகமும் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
இது மாதிரியான தவறுகள் எந்த காரணமாகவும் மறுபடியும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.