2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
விரிவான தகவலுக்கு
2008 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள்
11. சிறந்த நடிகை - சிறப்பு பரிசு : த்ரிஷா (அபியும் நானும்) - எ. கொ. ச.
19. சிறந்த உரையாடல் ஆசிரியர் : கலைஞர் மு. கருணாநிதி (உளியின் ஓசை) - நோ கமெண்ட்ஸ்
வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா - ஒரு விளம்பரம்...... !
Tuesday, September 29, 2009
வாழ்க சனநாயகம் - 7
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Tuesday, September 29, 2009
10
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் காமெடி, சினிமா, வாழ்க சனநாயகம்
Wednesday, March 25, 2009
கதம்பம்
இரு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. 80 வயதான ஒரு பெண்மணி பாலியல் பலாத்தாரத்துக்கு ஆளானார் என்று. சூடானில் டார்பூரில் அல்-பசர் என்ற இடத்தில் இந்த கொடுமை நடந்து உள்ளது. அந்த கொடுங்செயல் செய்தவன் யாரு என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை. உள்நாட்டிலே அகதியாக IDP(Internally Displaced Persons) முகாமில் வாழ்ந்து வருவதே மிக கொடுமையான விசயம், அதில் இது போன்று வன்முறைகளும் நடப்பது மிக மிக கொடுமையான விசயம். வக்கிரத்தின் உச்சம். அந்த மாதிரி ஆட்களை பிடித்து வயிற்றுக்கு கீழே சுடனும்.
போர்க்களங்களில் மட்டும் இல்லை எங்குமே மனிதம் மரித்து தான் போய் உள்ளது.
இந்திய பிரிமியர் லீக் (IPL) தென் ஆப்பிரிக்காவில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நமது கிரிக்கெட் வாரியத்துக்கு தான் தான் கிரிக்கெட் உலகின் கடவுள் என்ற நினைப்பு எப்போதுமே உண்டு. அந்த அளவு புகழும், அதிகாரமும் இருந்ததால் அப்படி ஒரு நினைப்பு. அந்த அளவுக்கு வளர்த்து விட்டது நம் மீடியாவும், ரசிகர்களும் தான். இதை பழம் தின்பது அவர்கள் தானே, அதான் அப்படி. ஐ.சி.சி. கண்களில் விரலை விட்டு ஆட்டியது. ICL க்கு அங்கீகாரம் அளிக்க எவ்வளவு முயற்சி செய்தும் ஏதுவும் நடக்கவில்லை, இவர்களிடம். பணமும், அதிகாரமும் இருந்த திமிரில் என்ன செய்கிறோம் என்றே உணராமல் இந்திய அரசாங்கத்திடமே மல்லு கட்டுகிறது. அதற்கு அரசியல் சாயமும் பூசியது. இது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நல்லதே இல்லை. காலம் வரும் போது ஆப்படிக்க படுவார்கள் என்பது நிச்சயம். IPL ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெறாமல் போவதற்கு பாதுகாப்புமின்மை என்ற காரணத்தை எல்லா மீடியாவும் முன் வைத்து கொண்டு இருக்கிறது. சுத்த அபத்தமாக இருக்கிறது. சிதம்பரத்தின் விளக்கம் திருப்தி அளிக்கும் விதமாகவே உள்ளது.
தேர்தல் திருவிழாவில் IPL திருவிழா இங்கு நடந்து இருந்தால் காணாமல் போய் இருக்கும்.
கச்சத்தீவை பிரச்சனையை மறுபடியும் நம்ம அரசியல்வாதிகள் கையில் எடுத்துட்டாங்க. தாரை வார்த்து கொடுத்துட்டீங்க னு ஒரு அறிக்கையும், 10 வருடத்தில் நீ என்ன கிழிச்சுனு, கொடுக்கும் போது கொடுக்க கூடாது என்று போதிய எதிர்ப்பை பதிவு செய்தாச்சு, அப்புறம் என்ன னு ஒரு அறிக்கையுமா.... ஐயா சாமிகளா, போதும்ய்யா உங்க வேஷம் எல்லாம். ஒவ்வொரு தடவை தேர்தல் நேரத்திலும் நாகையில் பிரச்சாரம் செய்யப்படும் முக்கிய விசயங்களில் கச்சத்தீவை மீட்போம் என்ற வாக்குறுதி இருக்கும். கேட்டு கேட்டு புளிச்சு போச்சு. ஈழ பிரச்சனை விட்டு கொஞ்சம் மேலே ஏறி வந்து இருக்கீங்க, தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் கொஞ்சம் மேலே ஏறி கிருஷ்ணா, காவேரி, பாலாறு னு வருவீங்க. நல்ல முன்னேற்றம் தான். தொடருங்க... கேட்டு தொலைக்க தான் நாங்க இருக்கோம்ல.
உங்களால் முடி்ந்தால் அங்க போகும் மீனவர்களை சுட்டு கொல்லாமல், அடித்து துன்புறுத்தாமல் இந்தியாவிடமே திருப்பி ஒப்படைப்பதுக்கு என்ன முயற்சி எடுக்க முடியுமோ அதை செய்ங்க.
போன வாரத்தில் ஒரே ஒரு படம் தான் பார்க்க முடிந்தது. வேலை பொளந்து கட்டிடுச்சு.
When a Stranger Calls (2006) - பள்ளியில் படிக்கும் ஒரு பெண் பேபி ஸிட்டராக (Baby-Sitter) இரவு நேரத்தில் ஒரு வீட்டிற்கு செல்ல, அங்கு அனானி அழைப்பு வருகிறது. அதை வைத்து படத்தை கொண்டு செல்கிறார்கள், தொடர் கொலை செய்யும் ஒரு கொலைக்காரன் அந்த வீட்டின் உள்ளே இருந்தே அந்த பெண்ணை மிரட்டுகிறான் என்று தெரிய வரும் போது பரபரப்பு ஜிவ்வுனு ஏறுது. வெறும் பிண்ணனி இசை மற்றும் ஒளிப்பதிவு(எடிட்டிங்) வைத்து ஒரு சிறந்த ஹாரர் படம் தர முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம். அந்த படத்தில் இடம் பெற்று உள்ள வீடு அற்புதமாக இருந்தது.
ஈழம் இனப்படுகொலை பிரச்சனை ICC க்கு எடுத்து சென்று உள்ளார்கள். தக்க விபரம் கிடைத்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நீண்ட இரவுக்கு பின் ஒரு விடியல் இருந்தே தீரும். நம்புவோமாக.
பள்ளி காலத்து தோழியை அதன் பிறகு சந்திக்காமல் பின்னொரு நாள் இணையத்தின் மூலம் சந்தித்து, இப்போ பதிவுலகிலும் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. ஆனா கவுஜையா (மட்டுமே) எழுதி தள்ளுறா, வாழ்த்தி வரவேற்கிறேன், அப்படியே நீங்களும் உங்க ஆதரவை கொடுங்க. பதிவு - சுயம் உணர்தல்
வருக! வருக! நல்லாட்சி தருக சீ.. நல்பதிவு இடுக
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Wednesday, March 25, 2009
36
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் Genocide, ICC, ஈழம், கதம்பம், கிரிக்கெட், சினிமா, சூடான்
Tuesday, March 17, 2009
கதம்பம்
நடிகர் ஒமக்குச்சி நரசிம்மன் போன வாரத்தில் மரணம் அடைந்தார். அவருடைய குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபவங்கள். சூரியன் படத்தில் கவுண்டருடன் அவர் வரும் பகுதி மிக அருமையாக அமைந்து இருக்கும். அதிலும் நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா என்ற டயலாக் செம பேமஸ். அதே படத்தில் ஜாங்க்கு ஜக்கு னு(தளபதி மியூசிக்) கவுண்டர் முன்னாடி ஒரு ஸ்டெப் போடுவார். அவரை பெரும்பாலும் பல படங்களில் நோயாளியாக தான் காட்டி வந்தார்கள். முதல்வன், ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் போன்ற படங்களில் அவரின் காமெடி குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது. அவர் தலைமுடியை கோதும் ஸ்டைலே தனி தான். அவர் ஆன்மா சாந்தியடைய பிராத்தனைகள்.
தேர்தல் வந்தா தான் எல்லா வேலையும் நடந்து முடியும் போல. நாகையில் அகல ரயில் பாதை போடுவதற்காக நாகையில் இருந்து அனைத்து ரயில்களையும் நிறுத்தி 4, 5 வருடங்கள் ஆச்சு. பிறகு திருவாரூரில் இருந்து பணிகள் முடிவடைந்து ரயில் விட துவங்கியும் பல வருடங்கள் ஆச்சு. ஆனால் நாகை டூ திருவாரூர் க்கு அகல ரயில் பாதை போட்டாங்க போட்டாங்க அம்மாம் வருசமா போட்டாங்க. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஒரு வழியா ரயில் நிலையத்தை திறந்துட்டாங்க. (பிப்ரவரி 28). வேளாங்கண்ணி ரயில் பாதை எந்த தேர்தல் நேரத்தில் முடியுமோ? ஏ.கே.எஸ். இதை ஒரு பெரிய விசயமா தேர்தல் பிரசாரத்தில் பேசுவார்.அதை விட்டால் சொல்லுற அளவுக்கு அண்ணன் என்ன செய்து இருக்கார் என்று அவர் சொன்னால் தான் தெரியும், சேது சமுத்திரம் திட்டத்தை சொல்லுவீங்களாண்ணா?அண்ணன் இந்த தடவை தேறிடுவீங்களா? கஷ்டம் தான்.
இந்த ஐ.சி.சி. பிரச்சனையில் சூடான் தலைநகரத்திலே சில நாட்கள் தங்க வேண்டியதாய் போச்சு. அந்த நேரத்தில் இணையமும் இல்லாத காரணத்தால் மறுபடியும் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பிச்சாச்சு. கவலைப்படாதீங்க விமர்சனம் எல்லாம் எழுத போற இல்லை. சும்மா போற போக்கில் ஒரு பார்வை அம்புட்டு தான்.
நான் கடவுள் (2009) - பாலா, கலைஞண்டா நீ, நீ தான் கலைஞன். இப்படி ஒரு படம் எடுக்க தமிழில் எந்த இயக்குனருக்கு திறமை இருக்கு அல்லது தைரியம் இருக்கு? கதை, அகோரி, அந்த கன்றாவி எல்லாத்தையும் விடுங்க. கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுப்பு ஒன்னு போதும்ய்யா. அவர்களை எல்லாம் தேர்ந்து எடுத்ததே பெரிய வேலை, அதில் அவர்கள் அவர்களிடம் வேலை வாங்கியது அதை விட சிறப்பு. இதற்கு எந்த அளவுக்கு ஹோம் வொர்க் பண்ணி இருக்கனும் என்பதை நினைக்குமே போதே பாலா மேல் மரியாதை தானாக வருகிறது. Hats off.
வெண்ணிலா கபடி குழு (2009) - இயல்பான படம். வசனங்கள் அருமை. அனைவரும் பொருந்தி நடித்து உள்ளார்கள். கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் வருத்தம். வேற மாதிரி முடித்து இருக்கலாம். பஸ்சை சைக்கிளால் முந்திய பிறகு ஒட்டுனர் பேசும் வசனம் சூப்பர். போற போக்குல மாநில போட்டிகளில் விளையாட விடுவது மட்டும் கொஞ்சம் ஒவர்.
Freedomland (2006) - Samuel Jackson நடிச்ச படம். நல்ல த்ரில்லர். வெள்ளை இனத்தை சேர்ந்த ஒரு குழந்தை காருடன் சேர்ந்து கடத்தப்பட்டதாக ஒரு பெண் புகார் கூற அந்த குழந்தையை தேடும் பொருட்டு கருப்பு இனத்தவர் வாழும் ஒரு ஏரியாவை முழுக்க தடை செய்து தேடுதல் வேட்டை நடக்குகிறது. ஆனால் அந்த பெண் பொய் கூறுகிறாள், அவள் தான் அந்த குழந்தையை ஏதோ செய்து விட்டாள் என்பது போல் காட்சிகளை நகர்த்தி அதன் நடுவில் Racism தொட்டும் படம் நகர்கிறது. எதிர்பாராத முடிவு. Jackson நடிப்பு அருமை. நேரம் கிடைத்தால் பார்க்கலாம்.
Nip/Tuck (2003) - அமெரிக்க டிவியில் வெளியான ஒரு மருத்துவ டிராமா. மொத்தம் 5 சிடி. (1 சிஸன் - 13 எபிசோட்) ஒவ்வொரு எபிசோட்டும் ஒரு தனி கதை. ஆனால் கதைத் தளம் ஒன்று தான். பிளாஸ்டிக் சர்ஜன்னா இரு மருத்துவர்கள் பற்றிய கதை. இதில் செக்ஸ் கொஞ்சம் அதிகம். ஆனால் நல்ல விறுவிறுப்பான தொடர். இது வரை 5 சிஸன் வந்து உள்ளது. 2011 வரை சிஸன் வரும். பல விருதுகளை இந்த தொடர் பெற்று உள்ளது. நம்மூரில் மெகா தொடர் எடுக்கும் புண்ணியவான்கள் இந்த தொடரை எல்லாம் பார்த்தால் நம் தொடர்களுக்கு விடிவு காலம் கிட்டினாலும் கிட்டும்.
Fahrenheit 9/11 (2004) - செப்டம்பர் 11 தொடர்ந்து ஆப்கான், ஈராக் போர் பற்றியும் அமெரிக்க அதிபர் புஷ் பற்றியும் ஒரு செமையான அலசல் இந்த படம். Michael Moore இயக்கி இருக்கும் இந்த டாக்குமெண்டரி படம் உண்மையான ஜனநாயக நாட்டின் ஒரு குடிமகனுக்கு இருக்கும் உரிமையை(சுகந்திரத்தை) வெளிக்காட்டுகிறது. படத்தில் உள்ள விசயங்கள் ஒரளவு அனைவருக்கும் தெரிந்த விசயம் தான் அதை சில ஆதாரங்களுடன் அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் அளித்து உள்ளார். அந்த படத்தை பார்த்து புஷ்யை பற்றி யோசிக்க விடாமல், நம்மால் நம் நாட்டில் இது போல் ஒரு படம் எடுத்த முடியுமா என்ற கேள்வி தான் மேலோங்கி இருந்தது. கருத்து கணிப்பு & நீதிமன்ற தீர்ப்புக்கே எரிப்பு நடவடிக்கையில் இறங்கும் கழக கண்மணிகள் இருக்கும் நாட்டில் அடக்கி வாசிப்பது தான் தேகத்துக்கு நல்லதுனு பட்டது.
போன பதிவை பாத்துட்டு அவங்க கவிதையை(???) என்னோடு பதிவில் போட்டாலே ஆச்சுனு வந்த தொடர் மிரட்டலை தொடர்ந்து இந்த கவிதை இங்கு பதிவிடப்படுகிறது.
லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும்
புன்னகையுடன் ரசிப்பது நிலவை தான்
சிரித்து பேச நண்பர்கள் பலர் இருந்தாலும்
மனதில் எண்ணி மகிழ்வது உனை தான்!
இதை எனக்கு அனுப்பிவுடன் நான் கொடுத்த கமெண்ட்,
பின்னி பெடல் எடுத்துட்ட... ஒத்துக்குறேன்.. நீ ஒரு கேடி.. சீ லேடி வாலி என்பதை. (கவிதை எழுத தெரியுமானு கேட்டது ஒரு குத்தமா? )
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Tuesday, March 17, 2009
38
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Thursday, November 13, 2008
சினிமா
சங்கிலி பதிவிட அழைத்த சங்கத்து சிங்கங்கள் தல கைப்புள்ளைக்கும், அண்ணன் வெட்டிகாருக்கும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு நேரா கேள்விக்கு போகலாம்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
நல்ல கேள்வி ஆனா பதில் தான் தெரியல. நினைவு தெரிந்துனா Mr.பாரத். அதுல என்னத்த உணர்ந்தேன் என்பதை இப்ப உணர முடியல. நாகையில் அப்ப மூன்று திரையரங்கம் தான். சிறுவயதில் அடிக்கடி சினிமா சென்ற ஞாபகம் இருக்கு. அப்பா வோடு சென்றது ரொம்பவே கம்மி தான். கடைசியாக நாங்கள் இருவரும் சேர்ந்த பார்த்த படம் என்றால் Iron Leg (15 வருசம் இருக்கும்) அம்மாவோடும் கம்மி தான், ஆயுத எழுத்து (அக்கா திருமணம் முடிந்த பிறகு பார்த்த படம்) இரண்டுமே பாண்டியில் (முதலாவது ஆனந்தா அடுத்து ஸ்ரீராமன், இரண்டு அரங்கமும் இப்ப இல்லை:) )
நம்மை சினிமாவுக்கு அடிமைப்படுத்திய பெருமை என் மச்சானுங்களுக்கு தான் சேரும், அவர்கள் நாகை வந்தாலும், நான் தேவகோட்டை சென்றாலும் சினிமா பார்ப்பதும், ஹோட்டலில் சாப்பிடுவதும் மட்டும் தான் வேலை. பள்ளிக் காலங்களில் பாண்டிக்கு செல்லும் போது எல்லாம் அடிக்கடி வீட்டில் சொல்லிவிட்டு சினிமாவுக்கு செல்வது உண்டு. 11ம் வகுப்பில் இருந்து தான் கட் அடித்து சினிமா பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. முதல் படம் - இந்தியன். அதன் பிறகு எந்த படமாக இருந்தாலும் விடுவது இல்லை. அதிலும் குறிப்பாக தெலுங்கு டப்பிங் (சாய்க்குமார், ராஜ்சேகர், வெங்கடேஷ், சிரஞ்சீவி எங்கள் ஆஸ்தான நாயகர்கள்) மற்றும் ஆங்கில டப்பிங் படங்கள் தான் (ஜெட் லீ). அதுவும் போக வீட்டிற்கு அருகில் வீடியோ கடை இருந்ததால் அனைத்து படங்களையும் ஒசியில் கண்டு ரசித்தது உண்டு.
கல்லூரி சென்ற பிறகு திரையரங்கில் பதிவேடு வைக்கும் அளவுக்கு நம்ம சினிமா மோகம் இருந்தது. சினிமா பார்ப்பதை பெருமையாக நினைக்காமல் கடமையாக நினைத்த காலம் அது. ஊர் ஊராக சென்ற சினிமா பார்த்த பருவம். படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் அதை பெருந்தன்மையாக தாங்கிய பருவமும் கூட.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
ராமன் தேடிய சீதை & ஏகன். முதல் படம் ஆரம்பத்தில் சேரனின் நடிப்பை கண்டு வாங்கடா போயிடலாம் என்றேன், பசங்க வரல. பிறகு மருத்துவமனை காட்சியை கண்டு பசங்க கூப்பிட நான் போகலையே (பழிக்கு பழி). ஏகன் பற்றி என்னத்த சொல்ல, ராஜு சுந்தரம் தன் நடனத்தை தொடர்வது நல்லது. அஜித் முடிந்த அளவு ஆடி இருக்கார்ல?
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தமிழ் - தில்லுமுல்லு & கோவில், ஆங்கிலம் - He Got Game - சூடானில் தங்கி இருக்கும் அறையில். தில்லுமுல்லு எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. அப்படி இருந்த ரஜினியை இப்படி ஆக்கிடானுங்களே என்று வாசு மேல நல்லாவே கோவம் வருது. கோவில் - சிம்பு இந்த படத்தில் நடித்த மாதிரியே வாய் அடக்கமா நடித்தால் எவ்வளவு நல்லா இருக்கும். He Got Game - Denzel Washington & Ray Allen நடிச்ச படம். நல்ல படம். நேரம் இருந்தால், கூடைப்பந்து பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம்.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
நாம தான் சினிமாவை விமர்சனம் என்ற பெயரில் தாக்கிக்கிட்டு இருக்கோம். அது எங்க நம்மள தாக்குவது. நினைவில் இருக்கும் சில படங்கள் என்று எடுத்துக் கொண்டால் நின்றுக் கொண்டே பார்த்த ஒரே படமான மன்னன், டிக்கெட் கிடைக்காமல் காத்து இருந்து அடுத்த காட்சி பார்த்த படையப்பா(காரைக்காலில்),கல்லூரியே திரண்டு சென்று பார்த்த காதலர் தினம், எத்தனை தடவை பார்த்தோம் என்று கணக்கு இல்லாத படையப்பா(நாகையில்), ஊர் ஊராக சென்று பார்த்த அலைபாயுதே, ஃபைக்ல 4 நபர்கள் சென்று பார்த்த சாமி(திருவாரூர்), கார் எடுத்து சென்று பார்த்த பத்ரி(மாயவரம்) அடித்து பிடித்து டிக்கெட் எடுத்த பார்த்த காதல் தேசம்(பாண்டி) 2 நாளில் நாகையில் இருந்து எடுத்த விட்டார்கள் என்று திருச்சிக்கு சென்று பார்த்த கன்னத்தில் முத்தமிட்டால், சும்மா போய் பார்ப்போம் என்று சென்று மிரண்ட சேது, தேர்வை அவசர அவசரமான முடித்து விட்டு சென்ற ஆய்த எழுத்து, முதல் தடவை பார்த்தப்ப ஏன் இந்த படம் நமக்கு பிடிக்கல என எண்ண வைத்த அன்பே சிவம், திரை அரங்கில் தான் காண வேண்டும் எனக் காத்து இருந்து கண்ட சிவாஜி, இது போல இன்னும் ஏகப்பட்ட மறக்க முடியாத படங்கள் இருக்கு.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
கழுதை நம்மள என்னத்த தாக்க போகுது. சினிமா வந்தா பாத்தோமா அதை பத்தி நண்பர்களுடன் பேசினோமா அடுத்த வேலைய பாக்க போனாமனு இருக்குற ஆளு நான். அதுனால பெருசா எதுவும் நம்மள தாக்கல. இருந்தாலும் ஆளு ஆளுக்கு பஞ்ச் டயலாக் மூலமா சக நடிகர்களை வம்புக்கு இழுப்பது, இமேஜ் என்ற வட்டத்தில் அடைப்பட்டுக் கொள்வது, எல்லாத்துக்கும் ரஜினியை ஊறுகாய் போல் தொட்டுக் கொள்வது, எதாச்சும் பேசனும் என்பதுக்காக அதிகப்படியா பேசுவது(தமிழன் உருப்புடுவானா....), சினிமா வை வைத்து அரசியல் பண்ணுவது,அந்த பெயர வைக்காத இந்த பெயர வைக்காதனு... இது எல்லாம் எப்படா நிறுத்துவீங்க என்று இருக்கு.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
கமல், மணித்ரத்னம், ஷங்கர், P.C ஸ்ரீராம் படங்களில் இருக்கும் தொழில்நுட்பங்களை தெரிந்துக் கொண்டு படம் பார்க்கும் ஆவல் உண்டு. என்னை கவர்ந்தது என்றால் கறுப்பு ரோஜா என்ற படத்தில் தான் முதல் முதலாக DTS(இந்தியாவில்) அறிமுகப்படுத்த பட்டது என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் அது ஒரு வித்தியாசமான அனுபவமாகப்பட்டது.
6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இல்லையா பின்ன. சினிமா இல்லாத தமிழ் இதழ்கள் ரொம்பவே கம்மி ஆச்சே.
7.தமிழ்ச்சினிமா இசை?
என் தனிமை நேரத்து தோழன் தமிழ்ச்சினிமா இசை. அதிலும் என்றும் ராஜா தான். எல்லா இசையும் கேட்பது உண்டு.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
பெரும்பாலும் ஆங்கில படங்கள், அரிதாக ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்கள். கவர்ந்த படங்கள் என்று சொன்னால் Brave Heart, Forest Gump, Pirates of Carribean, Phone Bhooth, The Rock, The Last king of Scotland, Blood Diamond......
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை. நண்பர்கள் சிலர் சினிமா துறையில் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களிடம் கதை கேட்பதோடு சரி. தொடர்ந்து தமிழ் சினிமா பாத்துக்கிட்டு வரேன், அது தொடர்ந்தாலே போதும்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நல்லா தான் இருக்கும். பாலா, அமீர்,வெங்கட் பிரபு, லிங்குசாமி, வெற்றிமாறன் போன்றோர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். அது போக ஹீரோ வழிப்பாட்டு பாடல், புரட்சி தளபதி, சின்ன இளைய தளபதி போன்ற அடைமொழி, கவர்ச்சி வேறு ஆபாசம் வேறுனு ஜல்லி அடிச்சுட்டு மார்புக் கோட்டையும், தொப்புளையும் Closeup வைப்பது போன்றவற்றை தவிர்க்கலாம் கூடவே தாலி செண்டிமெண்ட்டும் வேண்டாம் தாலியை தூக்கி ஏறியுற K.B. சிந்தனைகளும் வேண்டாமே.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ரொம்ப சந்தோஷம். விட்டு போன மற்றும் பழைய நல்ல படங்களை பார்க்கலாம். அதை தான் இப்ப செய்துக்கிட்டு இருக்கேன் என்பது வேற விசயம். ஊடகங்களால் எனக்கு எந்த பாதிப்பது இருக்காது. ஆனால் தமிழ் சினிமா இல்லை என்றால் ஊடகங்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு இருக்கும். தமிழ் சினிமாவை வைத்து அரசியல் செய்துக் கொண்டு இருக்கும் தலைவர்கள் வேறு துறையை தேட வேண்டியது இருக்கும். வருங்கால முதல்வரே என போஸ்டர் அடித்தே பிழைப்பை ஒட்டும் நபர்கள் பாதிக்கப்படுவார்கள். சினிமாவே இல்லாட்டினா சினிமா விருது வழங்கும் விழாவும் இருக்காது, அய்யோ நம் தமிழக அமைச்சரவை ரொம்பவே பாதிக்கப்படுமே.
12. தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஒரு புடலைங்காவும் ஆகாது. என்ன தமிழ் தொலைக்காட்சியில் சினிமா சம்பந்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லாமல் அவனால் சுகந்திர, குடியரசு, தீபாவளி, ரம்ஜான், பொங்கல் தினங்களை போற்ற முடியாது. அது ஒன்னு தான் வருத்தம்.
கலைத்துறையில் இருந்து இத்தனை முதல்வர்களை உருவாக்கிய நாம் சினிமா இல்லாமலா, நடக்குற கதையா எதாச்சும் இருந்தா சொல்லுங்கப்பா.
ஆட்டத்தை இத்தோடு முடிச்சுப்போம்.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, November 13, 2008
23
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் சினிமா, தொடர் விளையாட்டு
Wednesday, January 16, 2008
"மிரட்டும்"- காளை
ஒரு தடவை பட்டா தாண்டா உங்களுக்கு எல்லாம் புரியும் என்று சொல்லுவாங்க. பல தடவையும் பட்டு புரிய மாட்டேங்குதே அதுக்கு என்ன பண்ண.

சொல்லுறவன் ஆயிரம் சொல்லுவான் உனக்கு எங்கடா போச்சு அறிவுனு கேட்பாங்க. அது அப்ப புரியல. ஒரு வேளை ப்ளான் பண்ணி கூட்டிட்டு போயிட்டாங்களோ?

G.V. பிரகாஷ் இசை, மசாலா இயக்குனர் தருண் கோபி, சந்தானம் காமெடி, ஹீரோயின் வேதிகா, ஒரு பாட்டுக்கு நிலா எக்ஸ்ட்ராவா சங்கீதா வேற னு சொல்லி மிரட்ட வந்த காளை படத்துக்கு கூட்டி போய் மிரண்டு போக வச்சுட்டாங்க.
சிங்கம் மாதிரி சீறிக்கிட்டு காளை படம் பாக்க போய் கேரளாவுக்கு போற அடி மாட்டு ரேஞ்சுக்கு வெளிவர வேண்டியதா போச்சு.
பாத்து சூதனமா இருந்துக்கோங்க ஜனங்களா!
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Wednesday, January 16, 2008
28
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Thursday, December 20, 2007
கல்லூரி - என் பார்வையில்
ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் கதாநாயகியை தவிர்த்து புதுமுகங்களை கொண்டு வெளி வந்துள்ள படம் கல்லூரி.
+ ஷங்கர், பாலாஜி சக்திவேல் கூட்டணியில் மீண்டும் ஒரு வெற்றிப்படம், எந்த ஒரு மசாலாத்தனம் இல்லாத படம். நம்பி குடும்பத்தினர் உடன் செல்லாம்.
+ பழைய கதையாக இருந்தாலும் அனைத்து இயக்குனர்களும் தொட்ட கல்லூரி களமாக இருந்த போதிலும் தன் திரைக்கதையின் மூலம் ஒரு புதிய விதயத்தை கொடுத்து உள்ளார் இயக்குனர்.
+ பெரும்பாலும் புதுமுகங்களா இருந்த போதிலும் காதல் படத்தை போலவே பல கதாபாத்திரங்கள் நம்மை கவருகின்றது. முக்கியமாக நாயகனின் தங்கை, நாயகனின் தோழர், தோழியர்கள்.
+ கல்லூரி கலாட்டக்களின் மூலம் நம் கல்லூரி வாழ்வை நினைத்து பார்க்க வைப்பது.
+ காதலா, நட்பா என பதிவுலகில் தற்சமயம் அடிக்கப்பட்டு கொண்டு இருக்கும் ஜல்லியை தானும் அடிக்காமல் நட்பில் இருந்து வரும் காதலை யதாத்தமாக சொல்லி இருக்கிறார்.
+ படத்தின் முதல் பாடல் ரசிக்க வைத்தது. அதே போல் இன்னும் இரு பாடல்கள் முதல் முறை கேட்கும் போதே கவர்ந்தது. எப்.எம். தயவில் இந்த படத்தின் பாடல்கள் ஹிட் ஆகி இருக்கும் என்று எண்ணுகிறேன்.
+ சண்டை, வில்லன் என படத்தை திசை திருப்பாமல் ஒரே கோட்டில் எடுத்து சென்றது.
+ கதாநாயகன், கதாநாயகி இருவரும் அவர்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகைப்படுத்தாமல் நடித்து இருப்பது.
+ காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் ரொம்பவே இயல்பாக கொண்டு சென்று இருப்பது.
- படத்தின் முடிவு. நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுக்க முடிவு செய்து திரைகதை அமைத்தது போல் படம் முடிந்த பிறகு யோசிக்க வைப்பதால் அவ்வளவு மெனக்கட்டு அமைத்த திரைகதையின் மேல் ஒரு மரியாதை வர மறுக்கிறது.
- முடிவை தவிர்த்து படத்தில் ஒரு பெரிய சுவாரச்சியம் இல்லை. இயல்பாக நகர்கின்ற போதிலும் அந்த உணர்வு ஏற்படுகிறது. கத்திரியை சரியாக போட்டு இருக்கலாமோ?
- நட்பை குறித்த படம் என்ற போதிலும் நட்பு நட்பு என்று கூறி சில இடங்களில் நெஞ்சை நக்கி விடுகிறார்.
- தாம்னாவை ரொம்பவே அழ விட்டுட்டாரோ? பல காட்சிகளில் கண்கள் சிவந்து கிளசிரின் ரொம்ப ஊத்திட்டாங்களோ என்று தோன்ற வைக்கிறது.
- நம் கல்லூரி வாழ்வை நினைத்து பார்த்த வைத்த இயக்குனர் இதை நம் கல்லூரியுடன் ஒப்பீட்டு பார்க்கும் விசயத்தில் சிறிதே ஏமாற்றம் தர வைத்தது.
மொத்ததில் கல்லூரி ஒரு நல்ல படம். காண வேண்டிய படமும் கூட. அதற்காக தமிழ் சினிமாவை புரட்டி போட வந்த படம் அப்படி இப்படினு ஏத்தி விட்டு பருத்தி வீரனை வம்புக்கு இழுப்பது எல்லாம் ரொம்பவே ஒவரா தான் படுது. பாலாஜி சக்திவேல் இதை விட நல்ல படங்களை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரை ஊசுப்பேத்தி இது போன்ற படங்களையை தொடர்ந்து எடுக்க வைக்காமல் சாமுராய் போன்ற படங்களை இன்னும் மிக சிறப்பாக கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, December 20, 2007
31
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Monday, April 23, 2007
முனி - சனியா?
கொடுத்த வாக்கை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் தன் சேரி மக்களின் ஆதரவோடு தண்டபாணியை எம்.எல்.ஏ. ஆக்குகின்றார் ராஜ்கிரண். இவன் மக்களிடம் செல்வாக்கு பெற்று விட்டான் இவனை இப்படியே விட்டால் அடுத்த எலெக்சனில் நம்மையே வென்று விடுவான் என்று கருதி ராஜ்கிரனையும் அவர் மகளையும் கொன்று விடுகிறார். ஊர் மக்களிடமும் ராஜ்கிரன் பணத்தை எடுத்துக் கொண்டு ஒடி விட்டார் என்று கூறி அவர்களை நம்ப வைக்கின்றார். சாயங்காலம் 6 மணிக்கு மேல் இருட்டை கண்டாலே பயப்படும் லாரன்ஸ் உடலில் ராஜ்கிரன் ஆவியாக புகுந்து தண்டபாணி & கோ வை கொன்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி லாரன்ஸ் உடலில் இருந்து வெளியேறுகிறார். நான் ரொம்ப சுலபமா சொல்லிட்டேன், ஆனா கதையை அங்கு அங்கு சுத்தி நம்மள சுத்த வச்சுடுறாங்க.லாரன்ஸ் முதலில் பயந்தப்பிள்ளையாக நன்றாகவே நடித்து இருக்கிறார். அவரின் வாய்ஸ் மாடுலேஷன் தான் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. பின் ராஜ்கிரன் ஆவி அவர் உடம்பில் ஏறியவுடன் ஆவேசமாக நடித்து உள்ளார். வழக்கம் போல ரொம்ப அருமையாகவே டான்ஸ் ஆடி உள்ளார்.
ராஜ்கிரன், வழக்கம் போல் தொடைக்கு மேல் ஏத்தி கட்டிய லுங்கி, களைந்த தலைமுடி, முறுக்கிய மீசை, சிவந்த கண்கள், கொஞ்சம் ஒவர் ஆக்டிங், பாசத்தின் பிறப்பிடம், கூறு கட்டி அட்டிக்கும் சாப்பாடு என்று கனசச்சிதமாக அவர் பாத்திரத்தை செய்து உள்ளார்.

வேதிகா, ஹீரோயின் ஜோ சாயல்ல இருக்காங்க, நல்லாவே இருக்காங்க பார்க்க, பாட்டுக்கு டான்ஸ் நல்லா ஆடுறாங்க. நடிக்க தெரியுமா அப்படினு யாரு கேட்க கூடாது. அதை பற்றி நமக்கு என்ன கவலை.
இவர்கள் போக வினுசக்கரவத்தி, கோவை சரளா கொடுத்த பாத்திரத்தை சரியா செய்து இருக்காங்க. அதுவும் சரளாவின் அய்யய என்ற அடிக்கடி கூறுவது ரசிக்கும் படி உள்ளது. தண்டபாணி தான் வில்லன், அண்ணாத்த வர வர ஒரே மாதிரி நடிக்குறீங்க. போர் அடிக்க வைக்குறீங்க. இது போக இரு மந்திரவாதிகள் ஒருவர் நாசர், இன்னொருவர் ராகுல். ரொம்ப படுத்தவில்லை நம்மை.
இந்த காலத்தில் பேய் கதையா என்பதை ஒதுக்கி விட்டு பார்த்தால், இந்த படத்தை ஒரு நல்ல திரில்லராகவோ இல்லை முழு நீள காமெடியாகவோ எடுத்து இருக்கலாம். இரண்டையும் கலக்கி தரலாம் என்று நினைத்து சொதப்பி இருக்காங்க. நடிகராக, டான்ஸ்ராக இந்த படத்தில் ஜொலித்த லாரான்ஸ் இயக்கத்தில் சிறிதே கோட்டை விட்டு விட்டார். காமெடியராக வரும் வடிவேலு ஜெராக்ஸ் சிரிப்புக்கு பிறகு கோபத்தை வர வைக்கிறார். ஒரு நடிகரின் ஜெராக்ஸ் நாடக மேடைக்கு உதவும், வெள்ளித்திரைக்கு உதவாது என்பதை புரிந்துக் கொள்ள ஏனோ நம் கோடம்பாக்கம் நினைக்க தவறுகிறது.
இசை பரத்வாஜ், மிகுந்த ஏமாற்றம். வரேண்டா முனி அப்படிங்குர ஒரு குத்து பாட்டு கொஞ்சம் பரவாயில்லை. மற்ற பாடலகள் எல்லாம் மனதில் நிற்க ரொம்பவே சிரம்மாக இருக்கு.ஒளிப்பதிவு சற்றே ஆறுதல் தருகிறது.
எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் ஒரளவு ரசிக்கலாம். மொத்ததில் முனி சனி அல்ல
அடுத்த திரைப்பட விமர்சனம் - இலக்கணம்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, April 23, 2007
61
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Friday, March 30, 2007
திருமகன் - பொறுமையை சோதிக்க
கதை என்னனு கேட்குறீங்களா, ரொம்ப தாங்க தமாஸ் உங்களுக்கு, 2.30 முழுசா வர்கார்ந்து பார்த்த எனக்கே தெரியல, என் பதிவ 2 நிமிசம் படிச்சுட்டு கத கேட்குறிங்களே, இது நியாயம். ஒரே ஒரு விசயம் தான் எனக்கு இந்த படத்தில் புரிந்தது - 4 கதாநாயகிகள் சூர்யாவை துரத்தி துரத்தி லவ்வுறாங்க. இவரு மீராவை லவ்வுறார். கடைசியில் தந்தை சொன்ன பொண்ணை கட்டிக்குறார்.புரியாத விசயம் - அவரை போய் ஏன் லவ்வுறாங்க என்பது தான். இந்த படத்தில் ஒரு சூப்பர் செண்டிமெண்ட் - தாயத்துடன் கூடிய அரணாக் கொடி. எப்படி தான் இப்படி எல்லாம் திங்க் பண்ண முடியுதோ?
சரி, நமக்கு படம் தான் புரியல, எதாச்சும் விமர்சனத்தை படித்தாவது உங்களுக்கு கதை சொல்லி விடலாம் என்று தேடியதில் கிடைத்தவை
குமுதம் : திருமகன் - வக்கிர மகன்
கல்கி : இயக்குனர் ரத்னகுமாரோடு முதல் படம். பாரதிராஜா கூடவே இருந்ததால மண் வாசனைப் படம் தந்ததுல தப்பில்ல. ஆனா, தரமா தரணுமா இல்லையா?
நான் சொல்ல விரும்புவது : சூர்யா, நல்லாவே என் பொறுமையை சோதிச்சது இந்த திருமகன், அடுத்த சோதனையாக நான் வியாபாரி பார்க்க ரெடி, ஆனால் அந்த படத்தில் நீங்க உங்க சொந்த குரலில் பேச மாட்டேன் என்று எனக்கு வாக்கு கொடுக்கனும்.
இந்த படத்தை பலர் தடுத்தும் மீறிக் கொண்டு பார்த்து எப்படி இன்னும் தெளிவா இருக்கேன் என்று கேட்பவர்களுக்கு, இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் "Will Smith" நடித்த "The Hitch" படத்தை பார்த்து என்னை தேற்றிக் கொண்டேன்.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Friday, March 30, 2007
46
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Thursday, February 22, 2007
"பொறி"யில் சிக்கிய Xலி!!!
அம்புட்டு தான் சொல்ல முடியும். அப்பால் ஒரு மேட்டரு. ஒன்னு தாடி வளங்க. இல்லாட்டி அந்த நீளமான கிரிதாவை எடுத்து விடுங்க. தாங்கல சாமி. பெரியார் பக்தனா வந்து அவருக்கு சூடம் எல்லாம் காட்டுறார். தேவையில்லாம பெரியார் சிலை ஞாபகம் எல்லாம் எனக்கு வந்து தொலைக்குது, ஏன் வம்பு ஆள விடுங்க.
ம் குளுமையா இருக்கு. இதுக்காக நான் நன்றி எல்லாம் சொல்ல முடியாது. நீ தான் சொல்லி இருக்கியே இது மாதிரி சின்ன சின்ன உதவிக்கு எல்லாம் நன்றி எதிர்பாக்க கூடாதுனு, அதான். அது போகட்டும், இந்த படத்துல பல காட்சிகளில் தம்பி, தம்பினு ஜீவாவை கூப்பிடுற. தீடிர்னு அவர லவ் பண்ணுற. அது எப்படி. என்னமோ போ. நல்லா இரு.
டைரக்டருனு படத்தின் காட்சியமைப்பை பார்த்தாலே தெரிந்து விடுகின்றது. அதே போல் ஹீரோ ஹீரோயின் சண்டை, டப்பாங்குத்து பாடல்கள், மன்மத ராசாவை போன்ற ஒரு பாடல், அதே மெட்டு, அதே டான்ஸ் யப்பா தாங்கல சாமி. நல்ல கதைக்கரு கிடைத்தும் திரைக்கதை, காட்சியமைப்பில் இப்படி கோட்டை விட்டதும் இல்லாமல் எங்களையும் இப்படி பொறியில் சிக்க வச்சுட்டிங்களே.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, February 22, 2007
39
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Tuesday, October 31, 2006
சினிமா விமர்சனங்கள்
வேட்டையாடு விளையாடு :

ஏற்கனவே நம் மக்கள் இந்த படத்தை பிரித்து மேய்ந்தால், இதை பற்றி பேசவே பயமா இருக்கு. அதனால் நான் கப்சிப். இருந்தாலும் ஒரு சின்ன மேட்டரு அத மட்டும் சொல்லிக்குறேனுங்கோ. யோவ் படம் எடுக்கும், டைரக்ட் பண்ணும் புண்ணியாவன்களே முகர்ஜி போன்ற ஒரு அழகான கவிதையை எல்லாம் ஒரு பாட்டோட காலி பண்ணுவதை நிறுத்துங்கய்யா ப்ளிஸ். வலிக்குது ரொம்பவே வலிக்குது......
நாளை :
ரிச்சர்ட், நட்ராஜ், மதுமிதா, நாசர் மற்றும் பலர் நடித்து உள்ளார்கள். கதை ரொம்பவே சிம்பள் தாங்க. ஜஸ்டின்(ரிச்சர்ட்), நட்டு(நட்ராஜ்) இருவரும் சிறு வயதில் இருந்து நண்பர்கள். அவர்கள் அந்த ஊரின் தாதாவான நாயரிடம்(நாசர்) வளர்கின்றார்கள். நாசருக்காக எதையும் செய்கின்றார்கள். நாசரை இன்னொரு தாதாவின் (தணிகை - காதல் தண்டபாணி)
தம்பி(பாலா சிங்) தவறாக பேசி விடுவதால் அந்த தம்பியை பாட்டிலால் குத்தி கொன்று விடுகின்றார்கள். இது கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் அவர்கள் இந்த கொலையை பற்றி ரொம்ப கேஸ்வலாக போனில் பேசுவதை வைத்து அவர்கள் கேரக்டரை புரிந்துக் கொள்ள முடிகின்றது. தணிகை இதுக்கு காரணமான ஜஸ்டின், நட்டுவை நாசரிடம் காவு கேட்கிறார். அந்த சமயத்தில் ஜஸ்டின் தம்பி நாயரிடம் இருந்து பிரிந்து அம்மாவிடம் வளரும் மகளை விரும்புகிறார். அந்த திருமணத்தை ஜஸ்டின், நட்டு நடத்தி வைப்பதால் அவர்கள் மேல் கோபம் கொண்டு நாசர் அவர்கள் இருவரையும் தணிகைக்காக காவு கொடுக்க முடிவு செய்து விடுகிறார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஜஸ்டின் போலீஸிடம் சிக்கி சிறைக்கு சென்று விடுகின்றார். நட்டுக்கு துப்பாக்கி குண்டு காலில் பாய்ந்து ஒரு கால் ஊனம் ஆகி விடுகின்றது.மூன்று ஆண்டுகள் சிறையில் கழித்து வெளியே வரும் ஜஸ்டின் நட்டுவுடன் சேர்ந்து மீண்டும் அடியாள் தொழிலுக்கு போகாமல் ஒதுங்கி வாழ்கின்றார்கள். இதுக்கு நடுவில் ஜஸ்டினுக்கு மதுமிதா மேல் காதல். இவர் ஜெயிலில் இருந்து வெளியே வரும் வரை இவருக்காக காத்து இருக்கின்றார். இந்த சமயத்தில் ஒரு போலீஸ் கமிஷனர்(போஸ்) எண்டரி குடுக்குறார். எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவேன் அப்படினு அடிக்கடி டயலாக் பேசுகிறார். தணிகை ஆட்களுக்கு ஜஸ்டின் தம்பியுடன் மணல் கடத்தும் விசயத்தில் தகராறு வருகின்றது. இடையில் தாதா வாழ்வில் தனிமை ஏற்பட்டு நாசர் போய் சேர்ந்து விடுகின்றார். போலீஸ் கமிஷனரின் வார்த்தையை கேட்டு தணிகையின் ஆள் ஆதி ஜஸ்டினுக்கு குறி வைத்து குறி தவறாமல் மதுமிதாவை சுட்டு விடுகின்றார். உடனே கோவம் கொண்டு எழும் ஜஸ்டினும், நட்டுவும் எல்லாரையும் கொன்று தாங்களும் இறந்து போகின்றார்கள். படம் அம்புட்டு தான்.
தாதா கதை தான் என்றாலும் இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாக தான் உள்ளது. நல்ல திரைக்கதையமைப்பு. ஆரம்பத்தில் இருந்து சலிப்பு ஏற்படாத வண்ணம் படத்தை எடுத்து சென்று உள்ளார்கள். காமெடி டிராக் என்று தனித்து இல்லாமல் படத்தின் வசனத்தோடு இழைந்து வரும் மாதிரி உள்ளது நல்ல விசயம். எதை பற்றியும் கவலைப்படாத நண்பர்களாக ரிச்சடும், நட்ராஜ்ம் அருமையாக நடித்து உள்ளார்கள். சென்னை செந்தமிழ் தான் படம் முழுவதும். அதிலும் நட்டுவின் வசனங்கள் அருமை. லோக்கால சொல்லனும் என்றால் நல்லா கலாய்ச்சி இருக்காரு. இவர்கள் இளவரசுயிடம் ஐடியா கேட்கும் இடம், பொண்ணு பாக்க சொல்லி மாமா என்று சொல்லுவதும், தண்ணி அடிச்சு அலும்பு பண்ணுவதுமாக ரகளை பண்ணி உள்ளார்கள். இதில் நட்டு அடிக்கடி ஜஸ்டினிடன் "நீ சொன்னா சரி தான் மச்சி" போன்ற வசனங்கள் காட்சிக்கு இயல்பாக பொருந்தி வருகின்றது.
ரிச்சட்டு இப்ப தான் உருப்படியாக ஒரு படம் பண்ணி இருக்கார். நட்ராஜ் அறிமுகம் என்று சொல்கின்றார்கள். ஆனால் ரொம்பவே இயல்பான நடிப்பு. நல்ல எதிர்காலம் உள்ளது. நாசர் நாயராக வழக்கம் போல வாழ்ந்து உள்ளார். மற்ற அனைவருமே சரியாக அவர் அவர் கதாபாத்திரங்களில் பொருந்தி உள்ளார்கள். ஆதி என்று நாசரிடம் அடியாளாக இருக்கும் நபர் நல்ல ஒரு சகுனி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மதுமிதாவ பத்தி என்ன சொல்லுறது. அம்மணி பாக்க நல்லாவே இருக்காங்க. பவுடர மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணி அடிக்கலாம்.
கார்த்தி ராஜா இசை, மற்ற தாதா படங்களை போல் காது வலிக்கும் பிண்ணனி இசை இல்லாமல் இருப்பது ரொம்பவே நல்ல விசயம். இரண்டு, மூன்று பாடல்கள் கேட்கும்படி உள்ளது. அறிமுக இயக்குனர் உதயபானு, அவர் மேல் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார். மொத்ததில் இந்த படம் ஒரு தடவையாச்சும் பார்க்கலாம்.
தூத்துக்குடி :
இதுவும் ஒரு தாதா கூட்டத்தை பற்றிய படம் தான். தயாரிப்பாளர், டைரக்டர், ஹீரோ எல்லாம் ஒருவரே போல, ஹரி குமார்
. அதான் இம்புட்டு தைரியமா படம் எடுத்து இருக்கார் போல. ஒண்டுவதுக்கு கூட இடம் இல்லாத மஹா ஒரு அடாவடி போலீஸை அடித்து சிறைக்கு செல்கிறார். அங்கு அந்த ஏரியாவிலே பெரிய தாதாவான லிங்கம்(ரஹ்மான்) த்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை கொல்ல முயற்சி செய்கிறார். வெளிய வரும் லிங்கம் இவரையும் வெளியில் எடுத்து தன் ஆட்களை வைத்து கத்தியால் குத்துகிறார். உடனே ஹீரோ லிங்கத்தை பார்த்து பொட்டை என்று சொல்லி தைரியம் இருந்தால் என் உயிரை காப்பாற்றி என்னுடன் ஒண்டிக்கு வா என்று சவால் விடுகின்றார். ரஹ்மானும் உயிரை காப்பாற்றுகிறார். அதில் மனம் மாறி மஹா அவரிடமே அடியாளாக சேர்ந்து விடுகின்றார். பின் லிங்கம் அவ்வப்போது போலீஸ்க்கு தன் ஆட்களில் இருந்து ஒருவனை காவு குடுப்பது தவறு என்று அவருக்கு புரிய வைக்கிறார். நம்பிக்கை துரோகம் செய்யும் எஸ்.பி.யை நடு ரோடில் வைத்து வெட்டுகிறார். போலீஸ் கோபம் கொண்டு மஹாவை காவு கேட்கிறார்கள். லிங்கம் மறுத்து விட்டு தானே செல்கிறார். போலீஸார் மீண்டும் ஒரு சதி பண்ணி எல்லாரையும் கொல்கின்றார்கள்.இந்த படத்தில் குறிபிட்ட சொல்ல வேண்டிய விசயம் ஒன்னு, படம் முழுவதும் அனைத்து கதாபாத்திரங்களும் தூத்துக்குடி லோக்கல் தமிழ் (நெல்லை தமிழ்) தான் பேசுகின்றார்கள். கேட்க நல்லா தான் இருக்கு. ஹீரோ ஹரி முகத்தில் எந்த ரியாக்சனும் காட்டாமல் நடித்து உள்ளார். தாதா லிங்கமாக ரஹ்மான் நடித்து உள்ளார். அவருக்கு அந்த பாத்திரம் கனச்சிதமாக பொருந்தி உள்ளது. அவரின் வசன உச்சரிப்பும் நல்லா இருக்கு. ஹீரோயினாக கார்த்திகா என்ற ஒரு புது முகம். தாவணி எல்லாம் போட்டு வந்து நம் மனம் கவர்கிறார். அம்புட்டு தான். அவர் படித்து ஆசிரியையாக வேலை பார்த்தாலும் ஒரு ரவடி தனக்கு செய்யும் உதவியை கண்டும், ஒரு முத்தத்துக்கும் அவரை மணக்கிறார். தமிழ் சினிமா வழக்கப்படி கடைசியில் உயிரையும் விடுகிறார்.
மற்றபடி குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் மஹாவின் நண்பராக வரும் ஒருவர் நடிப்பை சொல்லாம். வக்கீலாக வரும் நடிகரும் ஒகே. அவ்வளவு தான். இசை பிரவின் மணி - கருவா பையா என்ற பாட்டு ஹிட்னு சொன்னாங்க. சில தடவை கேட்டுப்பாத்தால் தான் தெரியும். உங்களுக்கு சிடியோ டிக்கட்டோ கிடைத்தால் வேற வேலை ஏதும் இல்லா விட்டால் இந்த படத்தை பாக்க யோசிக்கலாம்.
ஆச்சார்யா :
இதுவும் அடுத்து ஒரு தாதா கூட்டத்தை பற்றிய படம் தாங்க. பிராமண குடும்பத்தில் பிறந்த விக்னேஷ் சிறு வயதிலே பெற்றோர்களை இழந்து சமூகத்தால் வஞ்சிக்கபட்டு ஒன்றும் இல்லாமல் பிழைப்பு தேடி சென்னை வருகின்றார். இரவு பஸ் ஸ்டாப்பில் தன் பையை தவற விட்டதுடன் இல்லாமல் போலீஸாரால் சந்தேக கேஸில்
அரஸ்ட் செய்யப்படுகின்றார். இவரை வெளியே போக சொல்லும் போது ஒண்ட இடம் இல்லாத காரணத்தால் போலீஸ் நிலையத்திலே சின்ன சின்ன வேலைகள் செய்துக் கொண்டு இருக்கிறார். ஒரு சமயத்தில் ஒரு கேஸிற்கு ஆள் ஏதும் கிடைக்காத காரணத்தால் எஸ்.ஐ.க்காக யதுநந்தன் - சாமி(விக்னேஷ்) சிறைக்கு செல்கிறார். அங்கு தன் பையை திருடிய கொக்கி (கஞ்சா கருப்பின்) பேச்சை கேட்டு சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு நார்த் மெட்ராஸ் மார்கெட் ஏரியா தாதாவான மாயாக்காவிடம் (வடிவுக்கரசி) போய் சேருகிறார். அனைத்து ஏரியாவுக்கும் பொது தாதாவாக தேவர் (நாசர்). ஒரு தியேட்டர் விற்கும் பிரச்சனையில் இன்னொரு தாதாவுக்கும், மாயாக்காவுக்கும் சண்டை வருகிறது. தேவர் தீர்த்து வைக்கும் முன்பே பிரச்சனை முற்றி விடுகிறது. அந்த தாதாவால் மாயாக்கா கொல்லப்படுகின்றார். இதனால் வெகுண்ட சாமி அந்த தாதாவை கொல்கிறார். இதை தொடர்ந்து அது மிக பெரிய கேங் வாராக மாறுகின்றது. போலீஸ் கமிஷ்னராக(சரண்ராஜ்) வருபவர் தேவரிடம் சென்று நீங்கள் ஒதுங்கி கொள்ளுங்கள், நாங்கள் மற்றவர்களை பிடித்தோ கொன்றோ விடுகின்றோம் என்று சொல்ல தேவரும் ஒத்துக் கொள்கின்றார். இதனால் ஆத்திரம் அடையும் சாமி மற்றும் பிற தாதாக்கள் அப்ரூவராக மாறி தேவரை சிறையில் அடைக்க முயற்சி செய்கின்றார்கள். அதில் சாமி வெற்றியும் பெறுகின்றார். இதுக்கு நடுவில் சாமி ஒரு பொண்ணை காதலிக்கிறார். அந்த பொண்ணுக்கு போலீஸ் வேலை வாங்கி தருகிறார். இந்த படத்திலும் அந்த பொண்ணை கடைசியில் போட்டு தள்ளி விடுகின்றார்கள். யோவ்... உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாது. அது ஏன்னய்யா ஒரு பொண்ணை இப்படி அநியாயமா எல்லா படத்தில் கொலை செய்து விடுகின்றீர்கள். இதுக்கு ஒரு முடிவு கட்டுங்கய்யா.
இந்த படத்தில் ஒரே ஆறுதல் கஞ்சா கருப்பின் காமெடி. நாசரை இந்த படத்தில் வீண் அடித்து உள்ளார்கள். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக உள்ளது. ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படத்தை சும்மா சப்னு முடித்து உள்ளார்கள். மற்றப்படி சொல்ல ஒன்றும் இல்லை. இயக்குனர், பாலாவிடம் பயின்றவர் என்று சொன்னார்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். இசை ஸ்ரீகாந்த் தேவா... சொன்னா தான் தெரியுது. இந்த படத்தை காலத்தின் கட்டாயத்தால் காண நேர்ந்தால் என் பரிதாப நிலையை நீங்களே புரிஞ்சுப்பீங்க.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Tuesday, October 31, 2006
35
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் சினிமா, தமிழ், நட்சத்திரம், விமர்சனம்
Friday, October 27, 2006
கவுண்டரின் லொள்ளு - 2
கவுண்டர் : நிறுத்து மாப்ளே, ஹயேய் ஸ்டாப் இட்...டேய் மாஜிக், இது எல்லாம் ஒரு வித்தனு மேட போட்டு ஒன்னு தெரியாத அப்பாவி ஜனங்களை ஏமாத்திக்கிட்டு இருக்கியா
மேஜிக் : தம்பி, தொழில் நடக்கும் இடத்தில் இந்த மாதிரி வந்து கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்காதப்பா
கவுண்டர் : ஆமாம் இவரு பெரிய போர்ட் கம்பெனி நடத்துறார், இவருக்கிட்ட வந்து நாங்க கலாட்டா பண்ணுறோம், டேய் மாஜிக் நீ வேண்ணா இந்த ஏமாந்த ஜனங்களை மறுபடி மறுபடியும் ஏமாத்திக்கிட்டு இருக்கலாம். ஆனா எங்கள மாதிரி கிளேவர்ஸ்க்கிட்ட உங்க ஆட்டம் எல்லாம் நடக்காது பாவா.
மேஜிக் : இவ்வளவு பேசுறீயே, என்ன மாதிரி காசு மழை வரவழைக்க வேண்டும். ஒரு காசு போட்டு இரண்டு காசு வர வை பாக்கலாம்.
கவுண்டர் : ஆஹா ஹா, வெரி சிம்பிள், அம்மி குத்தவதுக்கு சிற்பி எதற்கு? இந்த மாதிரி வேலை எல்லாம் என் மாப்பிள்ளை டாடா பிர்லா, மாப்பிள்ளை இந்தா இத மேல சுத்தி விடு
கார்த்திக் : மாம்ஸ், அவங்க ஏதோ மேஜிக் கத்து வச்சுக்கிட்டு இத எல்லாம் பண்ணுறாங்க, என்னால அத எல்லாம் முடியாது
கவுண்டர் : மாப்பிள்ளை உன் பவர் உனக்கு தெரியாது, நீ சுண்டி விடு
கார்த்திக் : அட என்னால பண்ண முடியாது மாம்ஸ்
ஒருவர் : என்ன விளையாடுறீங்களா, எங்கள மாதிரி வேல வெட்டி இல்லாதவங்களுக்கு இது ஒன்னு தான் எண்டர்டெயின்மெண்ட். அவன் செய்யுறது புடிக்கலனா நீங்க செய்யுங்க
கவுண்டர் : ஏய், அவனையும் செய்ய விட மாட்டோம், நாங்களும் செய்ய மாட்டோம், இந்த கேப்புல ஒடிப் போயிடு. ஏன்னடா பொரடிய சொறியுற
ஒருவர் : டாய், இப்ப காசு சுண்டி போடனும், எதாச்சும் வரணும், நாங்க எல்லாம் வேடிக்கை பாக்கனும்
கவுண்டர் : அண்ணா கொஞ்சம் கைய எடுங்கண்ணா...மாப்பிள்ளை இப்ப உன் மாமனோட உசுர அவன் கையில, பேசமா காசு சுண்டி போடு
கார்த்திக் : ஏதுவும் வராதே
கவுண்டர் :வராதுனு எனக்கும் தெரியும். நீ மேல சுண்டி விடு, எல்லாரும் அண்ணாந்து பாத்துக்கிட்டு இருப்பாங்க, நம்ம காலுக்குள்ள புகுந்து ஒடி போயிடலாம்
கார்த்திக் : உங்களோட,.... சரி போட்டு தொலைக்குறேன்.
ஒருவர் : ஆங், எல்லாம் திருப்தியா சாப்பிடுங்க...மாப்ளே, நீங்க நல்லா சாப்பிடுங்க
கவுண்டர் : போடா டேய் போடா, பொண்ணு வீட்டுக்காரனாம், புளியாங்கொட்டை தலையன். மாப்பிள, நீ சாப்பிடு
விவேக் : இந்த பழம் இருக்கு பாரு பழம்
கார்த்திக் : உங்களுக்கே இது நல்லா இருக்கா, நிச்சயதார்த்தை நிறுத்த போறேன் சொல்லிட்டு, இப்படி பாத்தி கட்டி சாப்பிடுறீங்களே, உங்கள போயி நம்புன பாருங்க என்ன சொல்லனும்.
விவேக் : சக்தி, ரொம்ப டென்ஷன் ஆவாது, நாங்க பிரச்சனையே சாப்பிட்டில் இருந்து தானே ஆரம்பிக்க போறோம்.
கார்த்திக் : ஆஹா நீங்க என்ன பண்ண போறீங்கனு எனக்கு தெரியாதா, சாப்பாடு நல்லா இல்லனு சொல்ல போறீங்க, அவங்க பிரியாணிய கொண்டு வந்து கொட்டோ கொட்டுனு கொட்ட போறாங்க. நீங்களும் மூக்கு பிடிக்க தின்னுட்டு கவுந்துடிச்சு தூங்க போறீங்க, விவஸ்த கெட்டவங்களா
கவுண்டர் : மாப்பிள, டிஸ்பிளின் மெயிண்டன் பண்ணு, இந்த மாதிரி எல்லாம் பேசாத, எனக்கு பிடிக்காது , அது எல்லாம் நடக்க போற கல்யாணத்துல தான் நாங்க அது எல்லாம் பண்ணுவோம். நடக்காத கல்யாணத்துல நாங்க அப்படி பண்ண மாட்டோம். உன் மாமனோட டேலண்ட்ட பாரு, பிரதர் மேட்டரு ஏடு

கார்த்திக் : மாமா என்னா இது
கவுண்டர் : சோத்துல கல்
கார்த்திக் : ஐயோ
கவுண்டர் : யாருடா பொண்ணு வீட்டுக்காரன் வாடா
ஒருவர் : ஏனுங்க நான் தானுங்க
கவுண்டர் : என்னடா சோத்துல கல்லு
ஒருவர் : ஆங், சோத்துல சின்ன கல்லு வரும் பாத்து இருக்கேன், கேள்விப்பட்டு இருக்கேன், இவ்வளவோ பெரிய கல்லு எப்படிங்க வந்துச்சு
கவுண்டர் : என்ன கேட்டா, அப்ப நான் கீழ இருந்து எடுத்து வச்சேனா
விவேக் : இல்ல நான் தான் இங்க இருந்து எடுத்துக் கொடுத்தேனா
கவுண்டர் : இல்ல அத வாங்கி அத நடுசோத்துல வச்சேனா
ஒருவர் : இல்ல இவ்வளவு பெரிய கல்லு எப்படி தட்டு பட்டுச்சு
கவுண்டர் : என்னடா கிறுத்தனமா கேள்வி கேட்குற, சோத்த நான் பிசையும் போது விரல்ல அடிப்பட்டுச்சுடா. கம் டூ த பாயிண்ட், இன்னிக்கு சோத்துல கல் போட்ட நீங்க, நாளைக்கு என் மாப்பிள்ளை தூங்கும் போது தலைல கல்ல போட மாட்டீங்கறது என்ன கியாரண்டி.
கார்த்திக் : ஆமாம்மா எனக்கு பயமா இருக்கு, வாங்க எல்லாரும் போகலாம்.
கவுண்டர் : சோ நிச்சயதார்த்தம் கேன்சல், மாப்பிள்ள வீட்டுக்காரங்க எல்லாம் ஏந்துறீங்கடா...
ஒருவர் : ஆஹாஹா...ஆஹாஹா...இல்ல மாப்பிள வீட்டுக்காரங்க குறும்புக்காரங்க சொல்லி இருக்காங்க, இவ்வளவு தமாசு
கவுண்டர் : டேய் சிரிக்காதடா சிரியஸ்டா இது
ஒருவர் : அட போங்க நீங்க வேற
கவுண்டர் : டேய் சண்டைக்கு வாடா என் கூட
ஒருவர் : என்ன போங்க தமாஷ்
கவுண்டர் : டேய் சண்டைக்கு வாடா
ஒருவர் : அட எப்பவும் தமாஷ் தானா
கவுண்டர் : டேய் சண்டைக்கு வாடா
ஒருவர் : என்ன விளையாட்டு இது
கவுண்டர் : டேய் யாராச்சும் பொண்ணு வீட்டுக்காரங்க என் கூட சண்டைக்கு வாங்கடா...சண்டக்கு வாங்கடா...டேய்......
**********
கவுண்டர் : டேய் திரும்புடா, என்னடா ஸ்டைலு ஸ்டைலு ஸ்டைலு...யார பாத்துடா என்ன வார்த்தைடா பேசுறுடா
விவேக் : ஹலோ என்ன சொல்லுறான் இவன்
கவுண்டர் : ஒன்னுமே பேச மாட்டேங்குறான் கல்லுளி நாய் மாதிரி
விவேக் : டேய் அண்ணன் கேட்குறாரு, குத்து மதிப்பாச்சும் ஏதும் சொல்லேன் டா, சொல்டா, சொல்டா
கவுண்டர் : சொல்ல மாட்டான் டா இவன், சொல்ல மாட்டான் டா இவன்
ஒருவர் : ஏய் ஏய் ஏன் அடிக்குறீங்க , இவன் என்ன செஞ்சான்
கவுண்டர் : யோவ், இந்த ஊருக்குள்ளே நான் மானஸ்தன், தர்மஸ்தன், என்ன பார்த்த அந்த வார்த்தைய கேட்டுபுட்டான் டா
ஒருவர் : என்ன தம்பி விளையாடுறீங்களா
விவேக் : யாரு விளையாடுற
கவுண்டர் : டேய் விளையாட்டு என்னடா விளையாட்டு இவன் டா பேசுனான்
கவுண்டர் : ஹே ஹே , ஒ ஒ ஒக் ஒ உ உ ஊமையாம் ஹோ ஹோ...அய்யயோ உ உ உ ஒ ஒ ஒ
கவுண்டர் : அய்யா, கத்திரிக்காய தொட்டா கூட கன்னி போயிடும்
புடலங்காயா தொட்டா கூட புட்டுக்கிட்டு போயிடும்
வெண்டைக்காயா தொட்டா கூட வெம்பி போயிடும்
சுண்டைக்காய தொட்டா கூட சுண்டி போயிடும்.
எங்கயாவது கோழி முட்டையிட்டு கொசு அடைக்காக்குமா
இல்ல கொசு தான் முட்டையிட்டு கோழி அடைக்காக்குமா
விவேக் : பிரதர் எதுக்கு இதை எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க
கவுண்டர் : என்ன பேசுறது தெரியாமா தாண்டா இதை எல்லாம் பேசிக்கிட்டு இருக்கேன்.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Friday, October 27, 2006
31
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Thursday, October 26, 2006
கவுண்டரின் லொள்ளு - 1
ஐயாம் குண்டலக்கேசி, செண்ட் ஸ்டாண்ட்ர்ட், அவ்வையார் ஆரம்ப பாடசாலை..... இருப்பா டிகிரி சொல்ல விட மாட்டேங்குற
அவன் சீவுறேன், சீவுறேன் சொல்லுறானே அது யார தெரியுமா
யார
நம்ம இரண்டு பெயர தான். இதான் லாஸ்ட் சான்ஸ், வா ஒடிப் போயிடலாம்
அட இதுக்கு எல்லாம் போயி பயந்துக்கிட்டு, அவன் அவன் காதலுக்காக உயிர விடுறான்
யப்பா உன் காதலுக்கு நீ உயிர விடுப்பா, கூட வந்த பாவத்துக்கு நான் ஏன் உயிர விடனும்
நீங்க தானா என் மாமா
யப்பா மண்ணுக்காக செத்தா ஒரு மரியாதை இருக்கும், பொண்ணுக்காக செத்தா ரொம்ப கேவலம்ப்பா
நான் பாத்துக்குறேன்
நீ தான் வரவன் போறவன எல்லாம் பாக்குறிய, ஒன்னும் செய்ய மாட்டீங்கிறீயே
மாப்புள, உன்க்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும்
அத எல்லாம் அப்புறம் சொல்லுங்க
மாப்புள, என் லைப்புல ஒரு இளந்தென்றல் கிராஸ் ஆயிடுச்சு
அது ஆகட்டும், நான் முதல இங்க
மாப்புள, என்ன ஒரு பொண்ணு லவ் பண்ணுறா
இந்த வயசிலா
அட எனக்கு என்ன இருநாறு, மூன்னூறா? உன்ன விட ஒரு இரண்டு வயசு கூட
மாம்ஸ்
சரி, சரி, காதல்ல இது எல்லாம் சகஜம்ப்பா
அத எல்லாம் இருக்கட்டும், என் ஜம்போ போயிடுச்சு
அது போகட்டும், நீ வா, வந்து என் செளத் இந்தியன் டயானாவ பாரு
நான் இங்க தான் மாப்புள மீட் பண்ணுனேன்.
வாட் ஏ ப்பியுட்டி, யங் கேள், இவ தான் என் கனவு பன்னி சீ கன்னி
மாப், ஏய், இது தான் இவன்க்கிட்ட இருக்கும் கெட்ட பழக்கம், கூடவே ஒட்டிக்கிட்டு இருப்பான், தீடிருனு கிராஸ் ஆயி போயிடுவான்
ஹாய், ஐ கம்ய்யா
மாப்புள, என்ன பாதில உட்டுட்டு வந்துட்ட
நான் அது, ஜம்போ ஜம்போ
யோவ் எங்க ஜம்புறது
மாம்ஸ், எனக்கே ஒரு எப்பவோ ஒரு தடவை தான் ஐ லவ் யூ சொல்ல தைரியம் வருது. நீங்க நடுவுல வந்து டிஸ்டப் பண்ணுறீங்க
யோவ், எனக்கும் எப்பவோ ஒரு தடவை தான்ய்யா பொண்ணு கிடைக்குது, என் செளத் இந்தியன் டயானா வந்து ஒரு தடவை பாத்துட்டு வந்துடு, அப்புறம் என் லவ் நான் அவளுக்கு டெலிகேஸ்ட் பண்ணிக்குறேன்
அது எல்லாம் முடியாது, என் ஜம்போ
ஹும் ஹும். இங்க பாரு, உன்னால என் காதல் வாழ்க்கை அழிஞ்சதுனு கெட்ட பெயருக்கு நீ ஆளாகாத, டேய் நிறுத்துடா என்ன பிரச்சனை நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கோம், இடையில லபக்கு லபக்குனு முழுங்கிட்டு இருக்கீயே. அது என்னடா ஒருத்தனுக்கு இவ்வளவு அப்பளம் தேவையா, கேளுடா
ஏய் இனிமே எந்த கல்யாணத்துக்கு போனாலும் சத்தியமா நான் சாப்பிட மாட்டேன்ய்யா
டேய் சாப்பிட மாட்டேனு சோத்த எங்கடா எடுத்துட்டு போற, வச்சுட்டு போடா
மாம்ஸ், இப்ப நான் என்ன தான் பண்ணனும்.
என் லவ் டெவலப் பண்னனும்
சரி வாங்க
வா
மாம்ஸ் மீட் மை டயானா
ஆ எங்அ
ஐய்யயோ, மாம்ஸ் என்னது இது. இத எல்லாம் அத்தையா ஏத்துக்க முடியாது
மாப்பிள, அதையும் இதையும் பேசி என் லவ்வ கெடுத்துடாத மாப்பிள. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பொண்ணு கிடைச்சி இருக்கு. லவ் பண்ணி இருக்கேன். ப்ளிஷ், எஸ்யூகிஸ் மீ. கொஞ்சம் வெயிட் பண்ணுய்யா, நான் ரொமான்ஸ் பண்ணிட்டு வந்துடுறேன். ஹாய் டய், டய், வெயிட், வெயிட்ய்யா..
ஹாய்
ஹாய் வாட்ஸ் யூவர் நேம்
மை நேம் இஸ் குண்டலக்கேசி, யூவர் நேம் ப்ளிஸ்
மந்தாயிகினி
ஸ்வீட் நேம்
15 வருஷமா இந்த காளைய அடக்கி கல்ல தூக்குறவர தான் நான் கல்யாணம் பண்ணிக்கனும் வைராக்கியமா இருந்தேன்.
இந்தன வருஷத்துக்கு அப்புறம் இன்னிக்கு தான் ஒரு பெரிய மாவீரன சந்திச்சு இருக்கேன்.
இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஐ லவ் யூ
ஐ த்ரீ லவ் யூ
மாப்பிள
யார்டா நாயே
மாப்பிள
யார்டா நீ
பொண்ணுடோ அண்ணன், மாப்பிள மாப்பிள என் தங்கச்சி தேடிக்கிட்டு இருந்த அந்த மாவீரன் நீங்க தானா. நீங்க யாரு என்னனு விபரமா சொன்னா, முறையா பேசி கல்யாணத்த முடிச்சிடலாம்
என்ன பத்தி எங்க ஊர்ல வந்து கேட்டு பாருடா
எந்த ஊரு
வெள்ளாங்க கோவில்டா
வெள்ளாங்க கோவிலா, எந்த குடும்பம்
வீரமுத்து கவுண்டர் குடும்பம்டா
ஆங், வீர முத்து கவுண்டர் குடும்பமா?
டேய் எதுக்குடா சட்டைய பிடிக்குற
கல்யாணத்த நிறுத்த வந்த பங்காளி வீட்டு பசங்க நீங்க தான்
யெஸ்டா, நோடா
டேய் நம்ம தேடிக்கிட்டு இருந்த பங்காளி வீட்டு பசங்க இங்க தான் இருக்காங்க, சீக்கிரம் வாங்கடா, கத்தி, கடப்பரை எல்லாம் எடுத்துட்டு வாங்கடா
ஐய்யோ, மாப்புள நாம தான் பங்காளி வீட்டு பசங்கனு இந்த பண்ணாடைகளுக்கு தெரிஞ்சு போச்சுப்பா
டேய் என்ன சிரிக்குற
மாப்புள ஏன்ய்யா ஒடுற
ஐய்யயோ, உன்க்கிட்ட உண்டான கெட்டப் பழக்கம் இதான்ய்யா. கரெக்டா லாக்கர்ல மாட்டி விட்டுட்டு எஸ்கேப் ஆயிடுவேய்யா. சரி நான் சமாளிக்குறேன்
கைய எடுடா,
எதுக்குடா
எடுடா சொல்லுறேன்
சொல்டா
சொல்றேன் டா
சொல்டா
சொல்றேன் டா, இப்ப புடிடா பாக்கலாம்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, October 26, 2006
45
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா

