Tuesday, October 31, 2006

சினிமா விமர்சனங்கள்

கடந்த இரண்டு மூன்று வாரத்தில் மட்டும் பல திரைப்படங்கள் பாத்தேன். சும்மா ஒரு நாளில் மூன்று நான்கு திரைப்படங்கள் என்ற கணக்கில். அதில் நான் பார்த்த சில தமிழ் படங்களுக்கும் மட்டும் விமர்சனம் எழுதலாம் என்று தான் இந்த பதிவு.

வேட்டையாடு விளையாடு :

ஏற்கனவே நம் மக்கள் இந்த படத்தை பிரித்து மேய்ந்தால், இதை பற்றி பேசவே பயமா இருக்கு. அதனால் நான் கப்சிப். இருந்தாலும் ஒரு சின்ன மேட்டரு அத மட்டும் சொல்லிக்குறேனுங்கோ. யோவ் படம் எடுக்கும், டைரக்ட் பண்ணும் புண்ணியாவன்களே முகர்ஜி போன்ற ஒரு அழகான கவிதையை எல்லாம் ஒரு பாட்டோட காலி பண்ணுவதை நிறுத்துங்கய்யா ப்ளிஸ். வலிக்குது ரொம்பவே வலிக்குது......நாளை :

ரிச்சர்ட், நட்ராஜ், மதுமிதா, நாசர் மற்றும் பலர் நடித்து உள்ளார்கள். கதை ரொம்பவே சிம்பள் தாங்க. ஜஸ்டின்(ரிச்சர்ட்), நட்டு(நட்ராஜ்) இருவரும் சிறு வயதில் இருந்து நண்பர்கள். அவர்கள் அந்த ஊரின் தாதாவான நாயரிடம்(நாசர்) வளர்கின்றார்கள். நாசருக்காக எதையும் செய்கின்றார்கள். நாசரை இன்னொரு தாதாவின் (தணிகை - காதல் தண்டபாணி) தம்பி(பாலா சிங்) தவறாக பேசி விடுவதால் அந்த தம்பியை பாட்டிலால் குத்தி கொன்று விடுகின்றார்கள். இது கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் அவர்கள் இந்த கொலையை பற்றி ரொம்ப கேஸ்வலாக போனில் பேசுவதை வைத்து அவர்கள் கேரக்டரை புரிந்துக் கொள்ள முடிகின்றது. தணிகை இதுக்கு காரணமான ஜஸ்டின், நட்டுவை நாசரிடம் காவு கேட்கிறார். அந்த சமயத்தில் ஜஸ்டின் தம்பி நாயரிடம் இருந்து பிரிந்து அம்மாவிடம் வளரும் மகளை விரும்புகிறார். அந்த திருமணத்தை ஜஸ்டின், நட்டு நடத்தி வைப்பதால் அவர்கள் மேல் கோபம் கொண்டு நாசர் அவர்கள் இருவரையும் தணிகைக்காக காவு கொடுக்க முடிவு செய்து விடுகிறார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஜஸ்டின் போலீஸிடம் சிக்கி சிறைக்கு சென்று விடுகின்றார். நட்டுக்கு துப்பாக்கி குண்டு காலில் பாய்ந்து ஒரு கால் ஊனம் ஆகி விடுகின்றது.

மூன்று ஆண்டுகள் சிறையில் கழித்து வெளியே வரும் ஜஸ்டின் நட்டுவுடன் சேர்ந்து மீண்டும் அடியாள் தொழிலுக்கு போகாமல் ஒதுங்கி வாழ்கின்றார்கள். இதுக்கு நடுவில் ஜஸ்டினுக்கு மதுமிதா மேல் காதல். இவர் ஜெயிலில் இருந்து வெளியே வரும் வரை இவருக்காக காத்து இருக்கின்றார். இந்த சமயத்தில் ஒரு போலீஸ் கமிஷனர்(போஸ்) எண்டரி குடுக்குறார். எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவேன் அப்படினு அடிக்கடி டயலாக் பேசுகிறார். தணிகை ஆட்களுக்கு ஜஸ்டின் தம்பியுடன் மணல் கடத்தும் விசயத்தில் தகராறு வருகின்றது. இடையில் தாதா வாழ்வில் தனிமை ஏற்பட்டு நாசர் போய் சேர்ந்து விடுகின்றார். போலீஸ் கமிஷனரின் வார்த்தையை கேட்டு தணிகையின் ஆள் ஆதி ஜஸ்டினுக்கு குறி வைத்து குறி தவறாமல் மதுமிதாவை சுட்டு விடுகின்றார். உடனே கோவம் கொண்டு எழும் ஜஸ்டினும், நட்டுவும் எல்லாரையும் கொன்று தாங்களும் இறந்து போகின்றார்கள். படம் அம்புட்டு தான்.

தாதா கதை தான் என்றாலும் இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாக தான் உள்ளது. நல்ல திரைக்கதையமைப்பு. ஆரம்பத்தில் இருந்து சலிப்பு ஏற்படாத வண்ணம் படத்தை எடுத்து சென்று உள்ளார்கள். காமெடி டிராக் என்று தனித்து இல்லாமல் படத்தின் வசனத்தோடு இழைந்து வரும் மாதிரி உள்ளது நல்ல விசயம். எதை பற்றியும் கவலைப்படாத நண்பர்களாக ரிச்சடும், நட்ராஜ்ம் அருமையாக நடித்து உள்ளார்கள். சென்னை செந்தமிழ் தான் படம் முழுவதும். அதிலும் நட்டுவின் வசனங்கள் அருமை. லோக்கால சொல்லனும் என்றால் நல்லா கலாய்ச்சி இருக்காரு. இவர்கள் இளவரசுயிடம் ஐடியா கேட்கும் இடம், பொண்ணு பாக்க சொல்லி மாமா என்று சொல்லுவதும், தண்ணி அடிச்சு அலும்பு பண்ணுவதுமாக ரகளை பண்ணி உள்ளார்கள். இதில் நட்டு அடிக்கடி ஜஸ்டினிடன் "நீ சொன்னா சரி தான் மச்சி" போன்ற வசனங்கள் காட்சிக்கு இயல்பாக பொருந்தி வருகின்றது.

ரிச்சட்டு இப்ப தான் உருப்படியாக ஒரு படம் பண்ணி இருக்கார். நட்ராஜ் அறிமுகம் என்று சொல்கின்றார்கள். ஆனால் ரொம்பவே இயல்பான நடிப்பு. நல்ல எதிர்காலம் உள்ளது. நாசர் நாயராக வழக்கம் போல வாழ்ந்து உள்ளார். மற்ற அனைவருமே சரியாக அவர் அவர் கதாபாத்திரங்களில் பொருந்தி உள்ளார்கள். ஆதி என்று நாசரிடம் அடியாளாக இருக்கும் நபர் நல்ல ஒரு சகுனி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மதுமிதாவ பத்தி என்ன சொல்லுறது. அம்மணி பாக்க நல்லாவே இருக்காங்க. பவுடர மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணி அடிக்கலாம்.

கார்த்தி ராஜா இசை, மற்ற தாதா படங்களை போல் காது வலிக்கும் பிண்ணனி இசை இல்லாமல் இருப்பது ரொம்பவே நல்ல விசயம். இரண்டு, மூன்று பாடல்கள் கேட்கும்படி உள்ளது. அறிமுக இயக்குனர் உதயபானு, அவர் மேல் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார். மொத்ததில் இந்த படம் ஒரு தடவையாச்சும் பார்க்கலாம்.


தூத்துக்குடி :

இதுவும் ஒரு தாதா கூட்டத்தை பற்றிய படம் தான். தயாரிப்பாளர், டைரக்டர், ஹீரோ எல்லாம் ஒருவரே போல, ஹரி குமார். அதான் இம்புட்டு தைரியமா படம் எடுத்து இருக்கார் போல. ஒண்டுவதுக்கு கூட இடம் இல்லாத மஹா ஒரு அடாவடி போலீஸை அடித்து சிறைக்கு செல்கிறார். அங்கு அந்த ஏரியாவிலே பெரிய தாதாவான லிங்கம்(ரஹ்மான்) த்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை கொல்ல முயற்சி செய்கிறார். வெளிய வரும் லிங்கம் இவரையும் வெளியில் எடுத்து தன் ஆட்களை வைத்து கத்தியால் குத்துகிறார். உடனே ஹீரோ லிங்கத்தை பார்த்து பொட்டை என்று சொல்லி தைரியம் இருந்தால் என் உயிரை காப்பாற்றி என்னுடன் ஒண்டிக்கு வா என்று சவால் விடுகின்றார். ரஹ்மானும் உயிரை காப்பாற்றுகிறார். அதில் மனம் மாறி மஹா அவரிடமே அடியாளாக சேர்ந்து விடுகின்றார். பின் லிங்கம் அவ்வப்போது போலீஸ்க்கு தன் ஆட்களில் இருந்து ஒருவனை காவு குடுப்பது தவறு என்று அவருக்கு புரிய வைக்கிறார். நம்பிக்கை துரோகம் செய்யும் எஸ்.பி.யை நடு ரோடில் வைத்து வெட்டுகிறார். போலீஸ் கோபம் கொண்டு மஹாவை காவு கேட்கிறார்கள். லிங்கம் மறுத்து விட்டு தானே செல்கிறார். போலீஸார் மீண்டும் ஒரு சதி பண்ணி எல்லாரையும் கொல்கின்றார்கள்.

இந்த படத்தில் குறிபிட்ட சொல்ல வேண்டிய விசயம் ஒன்னு, படம் முழுவதும் அனைத்து கதாபாத்திரங்களும் தூத்துக்குடி லோக்கல் தமிழ் (நெல்லை தமிழ்) தான் பேசுகின்றார்கள். கேட்க நல்லா தான் இருக்கு. ஹீரோ ஹரி முகத்தில் எந்த ரியாக்சனும் காட்டாமல் நடித்து உள்ளார். தாதா லிங்கமாக ரஹ்மான் நடித்து உள்ளார். அவருக்கு அந்த பாத்திரம் கனச்சிதமாக பொருந்தி உள்ளது. அவரின் வசன உச்சரிப்பும் நல்லா இருக்கு. ஹீரோயினாக கார்த்திகா என்ற ஒரு புது முகம். தாவணி எல்லாம் போட்டு வந்து நம் மனம் கவர்கிறார். அம்புட்டு தான். அவர் படித்து ஆசிரியையாக வேலை பார்த்தாலும் ஒரு ரவடி தனக்கு செய்யும் உதவியை கண்டும், ஒரு முத்தத்துக்கும் அவரை மணக்கிறார். தமிழ் சினிமா வழக்கப்படி கடைசியில் உயிரையும் விடுகிறார்.

மற்றபடி குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் மஹாவின் நண்பராக வரும் ஒருவர் நடிப்பை சொல்லாம். வக்கீலாக வரும் நடிகரும் ஒகே. அவ்வளவு தான். இசை பிரவின் மணி - கருவா பையா என்ற பாட்டு ஹிட்னு சொன்னாங்க. சில தடவை கேட்டுப்பாத்தால் தான் தெரியும். உங்களுக்கு சிடியோ டிக்கட்டோ கிடைத்தால் வேற வேலை ஏதும் இல்லா விட்டால் இந்த படத்தை பாக்க யோசிக்கலாம்.

ஆச்சார்யா :

இதுவும் அடுத்து ஒரு தாதா கூட்டத்தை பற்றிய படம் தாங்க. பிராமண குடும்பத்தில் பிறந்த விக்னேஷ் சிறு வயதிலே பெற்றோர்களை இழந்து சமூகத்தால் வஞ்சிக்கபட்டு ஒன்றும் இல்லாமல் பிழைப்பு தேடி சென்னை வருகின்றார். இரவு பஸ் ஸ்டாப்பில் தன் பையை தவற விட்டதுடன் இல்லாமல் போலீஸாரால் சந்தேக கேஸில் அரஸ்ட் செய்யப்படுகின்றார். இவரை வெளியே போக சொல்லும் போது ஒண்ட இடம் இல்லாத காரணத்தால் போலீஸ் நிலையத்திலே சின்ன சின்ன வேலைகள் செய்துக் கொண்டு இருக்கிறார். ஒரு சமயத்தில் ஒரு கேஸிற்கு ஆள் ஏதும் கிடைக்காத காரணத்தால் எஸ்.ஐ.க்காக யதுநந்தன் - சாமி(விக்னேஷ்) சிறைக்கு செல்கிறார். அங்கு தன் பையை திருடிய கொக்கி (கஞ்சா கருப்பின்) பேச்சை கேட்டு சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு நார்த் மெட்ராஸ் மார்கெட் ஏரியா தாதாவான மாயாக்காவிடம் (வடிவுக்கரசி) போய் சேருகிறார். அனைத்து ஏரியாவுக்கும் பொது தாதாவாக தேவர் (நாசர்).

ஒரு தியேட்டர் விற்கும் பிரச்சனையில் இன்னொரு தாதாவுக்கும், மாயாக்காவுக்கும் சண்டை வருகிறது. தேவர் தீர்த்து வைக்கும் முன்பே பிரச்சனை முற்றி விடுகிறது. அந்த தாதாவால் மாயாக்கா கொல்லப்படுகின்றார். இதனால் வெகுண்ட சாமி அந்த தாதாவை கொல்கிறார். இதை தொடர்ந்து அது மிக பெரிய கேங் வாராக மாறுகின்றது. போலீஸ் கமிஷ்னராக(சரண்ராஜ்) வருபவர் தேவரிடம் சென்று நீங்கள் ஒதுங்கி கொள்ளுங்கள், நாங்கள் மற்றவர்களை பிடித்தோ கொன்றோ விடுகின்றோம் என்று சொல்ல தேவரும் ஒத்துக் கொள்கின்றார். இதனால் ஆத்திரம் அடையும் சாமி மற்றும் பிற தாதாக்கள் அப்ரூவராக மாறி தேவரை சிறையில் அடைக்க முயற்சி செய்கின்றார்கள். அதில் சாமி வெற்றியும் பெறுகின்றார். இதுக்கு நடுவில் சாமி ஒரு பொண்ணை காதலிக்கிறார். அந்த பொண்ணுக்கு போலீஸ் வேலை வாங்கி தருகிறார். இந்த படத்திலும் அந்த பொண்ணை கடைசியில் போட்டு தள்ளி விடுகின்றார்கள். யோவ்... உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாது. அது ஏன்னய்யா ஒரு பொண்ணை இப்படி அநியாயமா எல்லா படத்தில் கொலை செய்து விடுகின்றீர்கள். இதுக்கு ஒரு முடிவு கட்டுங்கய்யா.

இந்த படத்தில் ஒரே ஆறுதல் கஞ்சா கருப்பின் காமெடி. நாசரை இந்த படத்தில் வீண் அடித்து உள்ளார்கள். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக உள்ளது. ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படத்தை சும்மா சப்னு முடித்து உள்ளார்கள். மற்றப்படி சொல்ல ஒன்றும் இல்லை. இயக்குனர், பாலாவிடம் பயின்றவர் என்று சொன்னார்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். இசை ஸ்ரீகாந்த் தேவா... சொன்னா தான் தெரியுது. இந்த படத்தை காலத்தின் கட்டாயத்தால் காண நேர்ந்தால் என் பரிதாப நிலையை நீங்களே புரிஞ்சுப்பீங்க.

36 comments:

நாகை சிவா said...

தமிழ்மணத்தில் சேர்க்க முடியலங்கோ.....
:-((((((((

என்ன கொடுமை சார் இது....

இராம் said...

புலி,

ஓடிப்போன படத்துக்கு விமர்சனம் போட்டு வைச்சிருக்கே!!! ஆனாலும் மொத'படம்' சூப்பரு!!!

நாகை சிவா said...

//ஓடிப்போன படத்துக்கு விமர்சனம் போட்டு வைச்சிருக்கே!!!//

என்னப்பா பண்ணுறது. நமக்கு இப்ப தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. :(

//ஆனாலும் மொத'படம்' சூப்பரு!!!//

தெரியுமே, அத எல்லாம் போட்டா தான் வருவீங்கனு நல்லாவே தெரியும் எனக்கு....

cable sankar said...

என்ன சிவா படம் பார்த்து ரொம்ப நொந்து போயிட்டீங்க போலருக்கு. சரி இந்த மாதிரி வெகுஜன படங்களை விட்டு, www.shortfilmindia.com.ல உள்ள் சில குறும்படங்களை விமர்சியுங்கள். உங்கள் விமர்சனம் இம்மாதிரி குறும்படம் பற்றிய அவாவை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்கக படுகிறது.

நாமக்கல் சிபி said...

புலி,
மதுமிதா மேல உனக்கு என்ன கோபம்? அவுங்க படம் மட்டும் போடல :-(

கப்பி பய said...

ஆனாலும் ஓவர் தில்லுதான்...இந்த படத்தையெல்லாம் பார்த்திருக்கீங்க...

தூத்துகுடி, ஆச்சார்யா ரிலீஸ் ஆனதே நீங்க சொல்லி தான் தெரியுது ;)

தம்பி said...

நாளை - தப்பில்ல
தூத்துக்குடி - ஒழிஞ்சி போகுது விடு
ஆச்சார்யா - இதுதான் எனக்கு விளங்கல
என்னாத்துக்கு இந்த படம் எடுத்தாங்கன்னே தெரியலை, வேறும் தமிழ் பெயர்களையும், இயற்கையான லைட்டிங்கையும், பாலாவோட பின்னணியும் இருந்தா போதுமா?
இயற்கையா இருக்குதுன்னு எதவேணா பாக்க முடியுமா என்ன?

படம் வரதுக்கு முன்னாடியே ஓவர் பில்டப்பு வேற!

அட போப்பா!

ஏன்யா புலி!

திரை விமர்சனம்னு எழுதினாவே நாலஞ்சி படமா சேர்த்துதான் எழுதுவியா?

இதுக்கு முன்னாடியும் நாலு இங்கிலிஷ் படத்தை சேர்த்து எழுதினே!

ஒண்ணொன்னா எழுதினா பதிவுக்கயமைல யாராவது புடிச்சிட்டு போயிடுவாங்களோ!

Bharathi said...

Hi siva,indha pictures ellam partha,neenga puthu padam release pathi feedback sonna madhiri irukku.

துளசி கோபால் said...

எனக்கும், யாருக்கும் கிடைக்காத படங்களை மட்டுமே விமரிசனம் எழுதற வழக்கம் இருக்கு தெரியுமுல்லே?

இங்கே பாருங்களேன் நம்ம
ஆச்சார்யாவை

இப்பக்கூட 'இளவட்டம்'னு ஒண்ணு பார்த்து வச்சுருக்கேன். எழுதவா வேணாமான்னுதான் யோசனை:-)

வேதா said...

புலி என்ன இது ஒரு ரெண்டு நாள் லீவு போட்டா அதுக்குள்ள அடுத்தடுத்து போட்டு தாக்கிட்டீங்க?:) இந்த நாலு படங்களில் வே.வி மட்டும் பார்த்துருக்கேன், ஆச்சார்யா படத்துல ஒரு சோக பாட்டு விக்னேஷ் சின்ன வயசுல வர மாதிரி வரும் அது கேட்டீங்களா? வரிகள் நல்லா இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

தலைநகர் விட்டுட்டிங்களே சிவா.
கமலினிக்காக எவ்வளவு வருத்தம் உங்களுக்கு.
கண்டிப்பாக அடுத்தபடம் பாருங்க .
நல்ல ரோல் புக்காகி இருப்பதாக
ரேடியோவில சொன்னாங்க.

நாகை சிவா said...

//www.shortfilmindia.com.ல உள்ள் சில குறும்படங்களை விமர்சியுங்கள். உங்கள் விமர்சனம் இம்மாதிரி குறும்படம் பற்றிய அவாவை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்கக படுகிறது. //

நன்றி சங்கர். நேரம் அமையும் போது அந்த படங்களை பார்த்து என் விமர்சனத்தை பதிவு செய்கின்றேன்.

நாகை சிவா said...

//புலி,
மதுமிதா மேல உனக்கு என்ன கோபம்? அவுங்க படம் மட்டும் போடல :-( //

அந்த அம்மணி மேல எனக்கு என்ன கோபம். இதுக்கு எல்லாம் போய் வருத்தப்படலாம. தனியா அனுப்பி வைக்குறேன். போதுமா?

நாகை சிவா said...

//ஆனாலும் ஓவர் தில்லுதான்...இந்த படத்தையெல்லாம் பார்த்திருக்கீங்க...//

என்ன பண்ணுறது கப்பி, கத்தையா சி.டி. கொண்டு வந்து கொடுத்தாங்க. நானும் விதியேனு பல படங்கள் பார்த்தேன். அதிலும் ஒரு சில படங்கள் ஐய்யோ... தாங்கல

பெயர் சொல்லுறேன் கேளு

மது
கை வந்த கலை
தலைநகரம்
கண்ணாடி பூக்கள்
குஸ்தி
கேடி

இது போல இன்னும் ஏகப்பட்டது இருக்குப்பா...

நாகை சிவா said...

//படம் வரதுக்கு முன்னாடியே ஓவர் பில்டப்பு வேற!//

ஆமாம் தம்பிண்ணன், ஆரம்பத்தில் வரும் அந்த டிஸ்கி ரொம்பவே ஒவர்.

//திரை விமர்சனம்னு எழுதினாவே நாலஞ்சி படமா சேர்த்துதான் எழுதுவியா?//

புது படமா இருந்தா ஒரு படத்தை எழுதலாம். சரி நீங்க சொல்வதால் அடுத்த தபா ஒவ்வொரு படமா எழுதுறேன்.

நாகை சிவா said...

//Hi siva,indha pictures ellam partha,neenga puthu padam release pathi feedback sonna madhiri irukku. //

ஆமாங்க பாரதி, ஆனா இது புது படமா இல்ல சில மாதங்களுக்கு முன்பு வந்த படமானு தெரியல...

நாகை சிவா said...

//எனக்கும், யாருக்கும் கிடைக்காத படங்களை மட்டுமே விமரிசனம் எழுதற வழக்கம் இருக்கு தெரியுமுல்லே?//

தெரியுங்க. நாம் எல்லாம் யாரு... நம்ம திறமைய பத்தி இவங்களுக்கு எங்க தெரிய போகுது....

//இப்பக்கூட 'இளவட்டம்'னு ஒண்ணு பார்த்து வச்சுருக்கேன். எழுதவா வேணாமான்னுதான் யோசனை:-) //

பெயருக்கு ஏத்த மாதிரி படம் இருந்தா எழுதுங்க, இல்லாட்டி வேணாம்.

நாகை சிவா said...

//புலி என்ன இது ஒரு ரெண்டு நாள் லீவு போட்டா அதுக்குள்ள அடுத்தடுத்து போட்டு தாக்கிட்டீங்க?:)//

என்னங்க பண்ணுறது. குறைந்தப்பட்சம் ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட சொல்லி இருக்காங்க. அதான் :-(

//ஒரு சோக பாட்டு விக்னேஷ் சின்ன வயசுல வர மாதிரி வரும் அது கேட்டீங்களா? வரிகள் நல்லா இருக்கும். //

படம் பார்த்து நொந்ததில் பாடல்களை கவனிக்கவில்லை. கேட்டுவிட்டு சொல்கின்றேன், நமக்கும் சோகப்பாட்டு பிடிக்கும்.

நாகை சிவா said...

//தலைநகர் விட்டுட்டிங்களே சிவா.//

அந்த படத்தை பார்த்தேன். வடிவேலு காமெடி ஒன்னு தான் இல்லாட்டி....

//கமலினிக்காக எவ்வளவு வருத்தம் உங்களுக்கு.//

இருக்காதா பின்ன. ஒரே ஒரு பாட்டுக்கு தான் வந்தாங்க அவங்க...

//கண்டிப்பாக அடுத்தபடம் பாருங்க .
நல்ல ரோல் புக்காகி இருப்பதாக
ரேடியோவில சொன்னாங்க. //

ரொம்ப நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க... தாங்க்ஸ்...

ஆர்னால்டு said...

நட்சத்திரக் கடமையை மறந்து திரைப்படம் பார்த்துப் பொழுதைக் கழித்தாயே என்று கண்டனம் தெரிவிக்க இருந்த வேளையில் தம்பி நாகை சிவா அவர்கள் திரைப்பட விமர்சனங்களை நமக்கே நமக்காக எழுத விழைந்ததுதான் காரணம் என்று அறிந்து மகிழ்வுற்றேன்.

வாழ்க. வளர்க.

மார்லின் மன்றோ said...

அட! தமிழில் கூட நல்ல கதா நாயகிகள் இருப்பார்கள் போலிருக்கிறெதே.

படத்தை வெளியிட்டமைக்கு நன்றி நாகைத் தம்பி

G.Ragavan said...

வேட்டையாடு விளையாடு மட்டும் பாத்தேன். மத்ததெல்லாம் ம்ஹூம். தூத்துக்குடீன்னு பேரு இருந்துமே பாக்கலையே. அதென்ன தூத்துக்குடித் தமிழ நெல்லைத் தமிழ்னு எழுதுறது. ரெண்டுக்கும் வேறுபாடுக இருக்கு. அடிநாதம் ஒன்னாயிருந்தாலும் ராகம் வேறவேற.

கீதா சாம்பசிவம் said...

ஹிஹிஹி, எல்லாரும் வந்து பார்த்துட்டுப் போயிட்டாங்க, நம்மளும் வந்ததுக்கு ஒரு அத்தாட்சி, அவ்வளவு தான், சினிமா மாட்டர் கொஞ்சம் கஷ்டமா இருக்கு, பார்க்கலாம். வருதான்னு.

தம்பி said...

//என்ன பண்ணுறது கப்பி, கத்தையா சி.டி. கொண்டு வந்து கொடுத்தாங்க. நானும் விதியேனு பல படங்கள் பார்த்தேன். அதிலும் ஒரு சில படங்கள் ஐய்யோ... தாங்கல

பெயர் சொல்லுறேன் கேளு

மது
கை வந்த கலை
தலைநகரம்
கண்ணாடி பூக்கள்
குஸ்தி
கேடி//

அய்யோ கேடிய பாத்துட்டியா?
நல்ல வேளை நான் பாதிதான் பாத்தேன். முழுப்படத்தையும் பாத்தேன் டரியல் ஆகியிருப்பேன்.

கை வந்த கலை, சிலேட்டு தூக்கற வயசில சில்மிஷம் பண்றாங்கப்பா!

மத்ததெதுவும் பாக்க வாய்ப்பு கிடைக்கல, கிடைச்சாலும் பாக்கவே மாட்டேன்.

இலவசக்கொத்தனார் said...

//என்ன கொடுமை சார் இது....//

தப்பா சொல்லிட்டீங்களே. என்ன கொடுமை இது சரவணன் அப்படின்னு இல்ல சொல்லி இருக்கணும்?

நாகை சிவா said...

/தப்பா சொல்லிட்டீங்களே. என்ன கொடுமை இது சரவணன் அப்படின்னு இல்ல சொல்லி இருக்கணும்? //

இந்த பதிவுல நீங்க சொல்லுறதுக்கு இது ஒன்னு தான் இருக்கா கொத்துஸ்
:-(

நாகை சிவா said...

//அய்யோ கேடிய பாத்துட்டியா?
நல்ல வேளை நான் பாதிதான் பாத்தேன். முழுப்படத்தையும் பாத்தேன் டரியல் ஆகியிருப்பேன்.//

கேடி பாக்கல, மது னு ஒரு படம். நானும் பல நாளா பாக்குறேன். இன்னும் முத சிடியே முடிச்ச பாடு இல்ல. :-(

//கை வந்த கலை, சிலேட்டு தூக்கற வயசில சில்மிஷம் பண்றாங்கப்பா!//

ஆண்பாவம் படத்தோட இரண்டாவது பாகம் மாதிரி எடுத்து அந்த படத்தை கேவலபடுத்திட்டாங்க.... அந்த ஹீரோயின்....... தெய்வமே எங்கள நீ தான் காப்பாத்தனும்.

நாகை சிவா said...

//ஹிஹிஹி, எல்லாரும் வந்து பார்த்துட்டுப் போயிட்டாங்க, நம்மளும் வந்ததுக்கு ஒரு அத்தாட்சி,//

பரவாயில்லை. தினமும் வந்து பிரசண்ட் போட்டுட்டு போயிடுறீங்க...

:-)

ILA(a)இளா said...

பார்த்த முதல் நாளே, உன்னை பார்த்த முதல் நாளே,காட்சி பிழை போலே..
முதல் படம் சூப்பருப்பு.

நாகை சிவா said...

//அதென்ன தூத்துக்குடித் தமிழ நெல்லைத் தமிழ்னு எழுதுறது. ரெண்டுக்கும் வேறுபாடுக இருக்கு. அடிநாதம் ஒன்னாயிருந்தாலும் ராகம் வேறவேற. //

ஜி.ரா. ஏதோ தெரியாம சொல்லிப்புட்டேன். இதுக்கு எல்லாம் கோபப்படலாமா? நம்ம அந்த பக்கம் அடிக்கடி போனது கிடையாது. ஒரு 7, 8 தடவை தான் சென்று வந்து உள்ளேன். இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாக தான் பட்டது.
நீங்க சொன்ன பிறகு தான் புரியது.

அதிலும் பாருங்க, நமக்கு இந்த ராகம் எல்லாம் சரியா வராது....

எனினும் தகவலுக்கு நன்றி ரா.சொ.ரா.

நாகை சிவா said...

//அட! தமிழில் கூட நல்ல கதா நாயகிகள் இருப்பார்கள் போலிருக்கிறெதே. //

நல்ல கதாநாயகிகளா, இங்க எப்பவுமே எல்லாமே சூப்பர் நாயகிகள் தான். இதிலும் சில கவிதைகள் சூப்பரோ சூப்பர்.

நாகை சிவா said...

//அவர்கள் திரைப்பட விமர்சனங்களை நமக்கே நமக்காக எழுத விழைந்ததுதான் காரணம் என்று அறிந்து மகிழ்வுற்றேன்.//

சரி என்ன விடுங்க, நீங்க சினிமா விட்டுட்டு எங்க ஊர் ஆளுங்க மாதிரி அரசியலுக்கு போயிட்டீங்களே, வருமானம் அங்கயும் அதில் தான் அதிகமா?

நாகை சிவா said...

//பார்த்த முதல் நாளே, உன்னை பார்த்த முதல் நாளே,காட்சி பிழை போலே..
முதல் படம் சூப்பருப்பு. //

அதே அதே விவ்....

இந்த சூப்பரான படத்தில் இப்படி ஒரு பிழை நடக்கலாம் சொல்லுங்க...

நாமக்கல் சிபி said...

//அந்த அம்மணி மேல எனக்கு என்ன கோபம். இதுக்கு எல்லாம் போய் வருத்தப்படலாம. தனியா அனுப்பி வைக்குறேன். போதுமா?
//
புலி,
மீதி எல்லா படத்துக்கும் கீரோயின்ஸோட போட்டோ போட்டிருக்க... ஆனா மதுமிதா போட்டோமட்டும் போடலையேனு தான் கேட்டேன் ;)

நாகை சிவா said...

//புலி,
மீதி எல்லா படத்துக்கும் கீரோயின்ஸோட போட்டோ போட்டிருக்க... ஆனா மதுமிதா போட்டோமட்டும் போடலையேனு தான் கேட்டேன் ;) //

சரியான படம் கிடக்கல, அதுவும் இல்லாம அந்த நட்டு கேரக்டர் எனக்கு புடிச்சு இருந்துச்சு. அதான் அவரு படத்தை போட்டாச்சு.

இராமநாதன் said...

இவங்கதான் கமலினி முகர்ஜியா? நல்லாவே இருக்காங்களே.. கரெக்டான போட்டோவா பாத்து பிடிச்சு போட்ட புலியார் வாழ்க!

மத்தபடி நீங்க எழுதியிருக்கற படங்கள் ஒண்ணுகூட பார்க்கலை.

சினிமா தியேட்டர்லேயே குடியிருந்தா கூட இத்தன படம் இரண்டு மூணு நாள்ல பார்க்க முடியாதே? ஏதாவது சென்சார் போர்ட்ல வேலை செய்றீங்களா?