Monday, October 30, 2006

உள்கட்டமைப்பு!

இந்தியா ஒரு வல்லரசாக வேண்டும் என்ற கலாமின் கனவு எனக்கும் உண்டு. இந்த கனவுக்காக என்னை யாரும் செருப்பால் அடிப்பதாக இருந்தாலும் நான் வாங்கி கொள்ள தயார். இப்பொழுது இருக்கும் மக்கள் தொகையாலும், இளைஞர் படையாலும் அதற்கான சாத்தியம் நிறையவே உள்ளது என்பது என் எண்ணம். சரி இப்ப நாம வல்லரசு ஆவதை விட்டு விடுவோம். இன்றைய தேதிக்கு நம் நாட்டில் உடனடியாக செய்ய வேண்டிய விசயங்களில் ஒன்று, நாட்டின் உட்கட்டமைப்பு(Infrastructure). இந்த உட்கட்டமைப்பு என்பதில் குடிநீர், சாலைகள், பாலங்கள், மின்சார வசதி, தொலைத் தொடர்பு வசதி, போக்குவரத்து வசதி போன்ற பலவற்றைகளை சொல்லாம்.

நான் பார்த்த வளர்ந்த நாடுகளை விட்டு விடலாம். தற்சமயம் நான் இருக்கும் சூடானில் தலைநகரம் மட்டும் தான் வாழ்வதற்கு தகுந்த நகரம் என்று சொல்லாம். மற்ற நகரங்கள் எல்லாம் சராசரிக்கும் கீழ் தான். அடிப்படை வசதிகள் என்றாலே என்னவென்று தெரியாத அளவுக்கு மோசம். (பல மாநிலத்தின் தலைநகரங்கள்) அப்படிபட்ட சூடானிலே அடிக்கடி தடைப்படும் மின்சார சேவையை முழுவதும் தானியங்கி படுத்தி உள்ளார்கள். இதை ஏன் நம் நாட்டில் இன்னும் செயல் படுத்தவில்லை(எனக்கு தெரிந்த வரை) என்ற ஆச்சரியம் எனக்கு அடிக்கடி ஏற்படுவது உண்டு. அந்த சேவையை இங்கு எப்படி செயல்படுத்துகின்றார்கள் என்பதை சுருக்கமாக காணலாம்.


ஒவ்வொரு வீட்டிலும் பக்கத்தில் படத்தில் உள்ளது போன்ற ஒரு
கருவியை பொருத்தி உள்ளார்கள். அதன் அவுட் புட் வீட்டிற்குள் வரும் மெயினில் இணைத்து உள்ளார்கள். அந்த கருவிக்கு ஒரு எண் நிர்ணயித்து ஒரு அட்டை வழங்கி உள்ளார்கள். நமக்கு எப்பொழுது மின்சாரம் தேவை உள்ளதோ அப்பொழுது மின்சார அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்பு எண் சொல்லி நமக்கு தேவையான அளவு மின்சாரத்தை யூனிட் அளவுகளில் நாம் வாங்கி கொள்ளலாம்.


அதற்கு ஒரு சின்ன ரசீது கொடுகின்றார்கள். அதில் இருக்கும் குறியீட்டு எண்ணை வீட்டில் இருக்கும் கருவியில் அதில் இருக்கும் பட்டன்களை கொண்டு உள் செலுத்தினால், அது எந்த அளவுக்கு நாம் மின்சார யூனிட் வாங்கி இருந்தோமோ அதை திரையில் காட்டும். பின் அதில் இருந்து மின்சாரம் நம் பயன்பாட்டை பொருத்து குறைந்து கொண்டே வரும். மின்சார யூனிட்கள் முற்றிலும் முடிந்த பிறகு நாம் மறுபடியும் பணம் செலுத்தி வாங்கி கொள்ள வேண்டியது தான்.


இதற்கு மாதம் ஒரு குறிப்பிட்ட ஒரு தொகை வாடகையாக
பெற்றுக் கொள்கின்றார்கள். பழைய பாக்கி ஏதும் இருந்தால் அதையும் குறிப்பிட்ட மாத இடைவேளையில் சரியான அளவில் பங்கீட்டு செய்து வசூலித்து விடுகின்றார்கள். இங்கு குறிப்பிட்ட சொல்ல வேண்டிய இன்னொரு விசயம், முதல் 100 யூனிட்கள் வரை ஒரு விகிதம். மேற்கொண்டு போகும் யூனிட்களுக்கு இன்னொரு விதிகம் என்றும் வகைப்படுத்தி உள்ளார்கள்.


இதை நம் தமிழகத்தில் அமல் படுத்தினால் ஏற்படும் சில சாதகங்கள் :

* மாதம் மாதம் மின்சார பணம் கட்ட வேண்டிய தேதிக்குள் கட்ட வேண்டும் என்ற நிலை இருக்காது
* உங்களுக்கு தேவைப்பட்ட அளவு மின்சாரத்தை முன்கூட்டி பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்
* மின்சார பாக்கி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
* மீட்டர் கணக்கு எடுக்க வேண்டும் என்ற நிலை கிடையாது
* இலவச மின்சாரம் குடுப்பது என்றாலும் மாதத்திற்கு இவ்வளவு என குறிப்பிட்ட யூனிட்களை கொடுக்கலாம்.
* திருட்டு மின்சாரத்தை பெரும் அளவு குறைக்கலாம்.

இதை எப்படி அமல்படுத்துவது, ஏற்கனவே இருக்கும் மின்சார மீட்டர் அனைத்தையும் மாற்றுவது என்பது உடனடியாக நடக்கும் காரியாம என்றால கண்டிப்பாக இல்லை தான். இதை சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தலாம். புதிதாக வீடு கட்ட பெறும் ஒரு ஏரியா, ஒரு பெரிய அலுவலக வளாகம் அல்லது ஒரு கிராமத்தையோ நகரத்தையோ தேர்ந்து எடுத்து அங்கு பரிசோதனை முயற்சி செய்து பார்க்கலாம். இந்த கருவிகளை யாரு செய்வது என்பது எல்லாம் நம் நாட்டில் தற்சமயம் ஒரு பொருட்டே கிடையாது. இது மாதிரி வேண்டும் என்றால் நாம் கேட்ட விலையை விட குறைந்த விலைக்கு செய்து கொடுக்கும் திறமையும், ஆட் பலமும் நம் நாட்டில் உள்ளது.


இந்த திட்டத்தில் எந்த குறையும் கிடையாதா, இதை தவறாக பயன்படுத்த முடியாது என்று கேட்டால் கண்டிப்பாக இருக்கும், அதை சரி செய்ய வேண்டும். நானே அந்த கருவிக்கு முன்னால் வரும் வயரை கட் பண்ணி செக் பண்ணனும் என்று இருந்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக செய்ய முடியவில்லை. அதுவும் இல்லாமல் அவ்வளவு சுலபமாக இருக்காது என்பதும் என் எண்ணம். நானே இப்படினா, காளை மாட்டிலும் பால் கறக்கும் ஆட்கள் நம்ம ஆட்கள். ஒரு பொருளை உருவாக்க சிந்திக்கும் மக்களை விட அதை எப்படி மிஸ்யூஸ் பண்ணலாம் என்று கிரிமினல் மூளையுடன் யோசிக்கும் மக்கள் தான் அதிகம். அவர்களையும் கணக்கில் கொண்டு இந்த கருவிகளை உருவாக்க வேண்டும். உதாரணமாக இதை கிட்டதட்ட ஒரு ப்ரி பேய்டு செல் போன் போன்று கொண்டு வரலாம்.

ஒவ்வொரு கருவிகளுக்கும் ஒரு யூனிக் நம்பர் அசைன் பண்ணலாம், ஏரியா, ஊர் வைத்து அவைகளை பிரிக்கலாம் அல்லது மின்சார நிலையத்தை வைத்தும் பிரிக்கலாம். இதை செய்தாலே பாதி வேலை முடிந்தது. காசு இருக்கும் வரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். முடிந்து விட்டால் நோ சர்வீஸ். மின்சார ப்ரி பேய்டு அட்டைகளை பல இடங்களில் கிடைக்கும் படி செய்யலாம். நாம் செல்போனை கடையில் கொடுத்து ரீ சார்ஜ் செய்வது போல் இதை செய்வது சற்று கடினம். கார்டு வாங்கி வந்து நம்மாளக செய்யவது சற்று சுலபம். அந்த ரீ சார்ஜ் கார்டில் எவ்வளவு சார்ஜ் பிடித்தம் செய்ய வேண்டுமோ அதை பிடித்தம் செய்து பாக்கி காசுக்கு யூனிட் கொடுக்கலாம்.


செல்போனில் எப்படி மாதம் மாதம் ஒரு சில குறிப்பிட்ட சேவைகளுக்கு கட்டணம் தானாக குறைந்து விடுமோ அது போல மாத வாடகையை தானாக குறையும் படி செய்து விடலாம். இந்த வகை அட்டைகளை எல்லா இடங்களிலும் கிடைக்கும் படி செய்யலாம். முன்பு மீட்டர் கணக்கு எடுக்க வந்த நபர்களை இந்த அட்டைகளை குடுத்து பணம் வாங்கி வர வைக்கலாம்.

இவ்வளவு தாங்க எனக்கு தோன்றியது. தீடிரென்று தோணியது, அப்படியே எழுதியாச்சு. இன்னும் சற்று வர்கார்ந்து யோசித்தால் இன்னும் கொஞ்சம் சுலபமான வழி புலப்படலாம். ஆனால் இது போன்ற சேவைகள் நம் நாட்டில் எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக தொடங்க பெறுகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லதுங்க.

54 comments:

இராம் said...

//இன்றைய தேதிக்கு நம் நாட்டில் உடனடியாக செய்ய வேண்டிய விசயங்களில் ஒன்று, நாட்டின் உட்கட்டமைப்பு(Infrastructure). இந்த உட்கட்டமைப்பு என்பதில் குடிநீர், சாலைகள், பாலங்கள், மின்சார வசதி, தொலைத் தொடர்பு வசதி, போக்குவரத்து வசதி போன்ற பலவற்றைகளை சொல்லாம்.//


சிவா,

அருமையான கருத்துக்கள்.... இந்த உட்கட்டமைப்பு தன்னிறவு ஆகிக்கொள்ள சில காலங்கள் பிடிக்கலாம். அதற்கு தடையாக அரசியல்,பொருளாதாரமின்னு பல காரணிகள் இருக்கின்றன.

நம்நாட்டிலிலும் நடக்குமென்ற நம்பிக்கை இருக்கு.

நம்பிக்கை தானே வாழ்க்கை!!!!

பதிவிற்கு வாழ்த்துக்கள்.

ஒன்றுமில்லை said...

விஞ்சான வளர்ச்சி கொண்டு அடிப்படை கட்டுமானங்களின் நிர்வாகத்தையையும், பயனீட்டையும் மேம்படுத்துதல் வாழ்க்கை தர உயர்வுக்கு அவசியமான ஒன்றாகும்..

நல்ல பதிவு சிவா

செல்வன் said...

சிவா

நம்மூரில் இதற்கு முதல் தடை மின்வாரிய ஊழியர்களிடமிருந்து தான் வரும். இதற்கு முன் ஆந்திராவிலும், உபியிலும் மின்வாரியத்தை தனி கார்ப்பரேஷ்னாக்கியதற்கே ஸ்ட்ரைக் செய்தார்கள். தற்போது வங்கிபணிகளை அவுட்சோர்சிங் செய்வதை எதிர்த்தும் ஸ்ட்ரைக் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவிலும் இதே போல் தான் தானியங்கி முறையில் மின்கணக்கை எடுக்கிறார்கள்.மின்சாரம், தண்ணீர் ஆகிய அனைத்துக்கும் எத்தனை பயன்படுத்துகிறோம் என்ற கணக்கு சரியாக கணக்கிடப்பட்டு அதற்கான பில் மாதமாதம் சரியாக வந்துவிடும்.மீட்டர் எல்லாம் பொருத்தவில்லை.

இதை எல்லாம் விட அந்த அலுவலகங்களுக்கு போனால் நமக்கு நல்ல மரியாதை தந்து கனிவாக பேசுவார்கள்.நம்மூர் அரசு அலுவலக்ங்களில் நாயை நடத்துவது போல் தான் வாடிக்கையாளரை நடத்துவார்கள்.அரசு அலுவலகங்களை சீர்திருத்தாமல் முன்னேற்றத்தை பற்றி இந்தியா யோசிக்கவே முடியாது என தோன்றுகிறது.

செல்வன் said...

சிவா

நம்மூரில் இதற்கு முதல் தடை மின்வாரிய ஊழியர்களிடமிருந்து தான் வரும். இதற்கு முன் ஆந்திராவிலும், உபியிலும் மின்வாரியத்தை தனி கார்ப்பரேஷ்னாக்கியதற்கே ஸ்ட்ரைக் செய்தார்கள். தற்போது வங்கிபணிகளை அவுட்சோர்சிங் செய்வதை எதிர்த்தும் ஸ்ட்ரைக் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவிலும் இதே போல் தான் தானியங்கி முறையில் மின்கணக்கை எடுக்கிறார்கள்.மின்சாரம், தண்ணீர் ஆகிய அனைத்துக்கும் எத்தனை பயன்படுத்துகிறோம் என்ற கணக்கு சரியாக கணக்கிடப்பட்டு அதற்கான பில் மாதமாதம் சரியாக வந்துவிடும்.மீட்டர் எல்லாம் பொருத்தவில்லை.

இதை எல்லாம் விட அந்த அலுவலகங்களுக்கு போனால் நமக்கு நல்ல மரியாதை தந்து கனிவாக பேசுவார்கள்.நம்மூர் அரசு அலுவலக்ங்களில் நாயை நடத்துவது போல் தான் வாடிக்கையாளரை நடத்துவார்கள்.அரசு அலுவலகங்களை சீர்திருத்தாமல் முன்னேற்றத்தை பற்றி இந்தியா யோசிக்கவே முடியாது என தோன்றுகிறது.

செல்வன் said...

சிவா

நம்மூரில் இதற்கு முதல் தடை மின்வாரிய ஊழியர்களிடமிருந்து தான் வரும். இதற்கு முன் ஆந்திராவிலும், உபியிலும் மின்வாரியத்தை தனி கார்ப்பரேஷ்னாக்கியதற்கே ஸ்ட்ரைக் செய்தார்கள். தற்போது வங்கிபணிகளை அவுட்சோர்சிங் செய்வதை எதிர்த்தும் ஸ்ட்ரைக் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவிலும் இதே போல் தான் தானியங்கி முறையில் மின்கணக்கை எடுக்கிறார்கள்.மின்சாரம், தண்ணீர் ஆகிய அனைத்துக்கும் எத்தனை பயன்படுத்துகிறோம் என்ற கணக்கு சரியாக கணக்கிடப்பட்டு அதற்கான பில் மாதமாதம் சரியாக வந்துவிடும்.மீட்டர் எல்லாம் பொருத்தவில்லை.

இதை எல்லாம் விட அந்த அலுவலகங்களுக்கு போனால் நமக்கு நல்ல மரியாதை தந்து கனிவாக பேசுவார்கள்.நம்மூர் அரசு அலுவலக்ங்களில் நாயை நடத்துவது போல் தான் வாடிக்கையாளரை நடத்துவார்கள்.அரசு அலுவலகங்களை சீர்திருத்தாமல் முன்னேற்றத்தை பற்றி இந்தியா யோசிக்கவே முடியாது என தோன்றுகிறது.

தம்பி said...

அட புதுசா இருக்கே!

தமிழ்நாட்டில் தாராளமாக முயற்சித்து பார்க்கலாம்!

கோவி.கண்ணன் [GK] said...

சிவா...!

நல்ல பதிவு !

மின்சாரம் தடைபடுவதால் தான் நம்ம நாட்டின் ஜெனத் தொகை அதிகரிக்கிறதா சொல்கிறார்களே !

அதுபற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா ?
:))))

அரசியல்வாதி said...

நீ பாட்டுக்கு வேலைக்குப் போன எடத்துலே வேலைவெட்டி இல்லாம உக்காந்துகிட்டுப் பதிவு போடுவே. அந்த மாதிரி முட்டாள் யோசனைங்களை இங்கே செயல் படுத்த விட்டுடுவோமா?

அப்புறம் நாங்க கட்சி மாநாடு, பொதுக் கூட்டம் போடும்போது கொக்கி போட்டு எடுக்கறது ... அப்புறம், பந்தலுக்குப் பக்கத்துல இளிச்சவாயன் எவனிடமாவது அடாவடி பண்ணி அவன் கணக்குல கனக்-ஷன் போடுறது எல்லாம் இல்லாமயில்ல போயிடும்.


தம்பி, நாங்க என்ன கேனையனுங்களா?

(அரசியல்வாதி சார்பாக) அழகு.

நாமக்கல் சிபி said...

நல்ல பதிவு சிவா!

சரியான உள்கட்டமைப்பும் , அநாவசிய பணிச் சுமையும் அரசின் கவனிப்புக்கு வந்துவிட்டாலே நாடு பாதி தன்னிறைவு அடையும்!

இலவசக்கொத்தனார் said...

சிவா,

கட்டமைப்பு (இது போதாதோ? அது என்ன உட்கட்டமைப்பு?) பற்றிய தங்கள் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடுதான். ஆனால் செல்வன் கூறுவது போல் இதற்கு எதிர்ப்புகள் அதிகம் வரும். அதையும் மீறி மாற்றங்கள் கொண்டு வரும் அளவிற்கு இன்றைக்கு நாட்டில் முதுகெலும்பிருக்கும் கட்சியாக எதுவும் தெரியவில்லை.

அது மட்டுமில்லாது, இன்றைக்கு நிறைவேற்றப்படும் பல பிராஜெக்ட்டுகள் நேற்றைய தேவைகளை பூர்த்தி செய்யவே போதுமானதாக இல்லை. இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகளின் தேவைகளை மனதில் வைத்து செயல்படவேண்டும்.

அதற்கான தொழில்நூட்பம் மற்றும் முதலீடு நம்மிடையே இல்லையென்றால் அது கிடைக்குமிடத்திலிருந்து கொண்டு வரத் தயக்கம் இருக்கக்கூடாது.

இது இல்லாமல் வெறும் அடிக்கல் நாட்டு விழாவுடன் முடிந்து போகும் திட்டங்களே இன்று அதிகம் இருக்கிறது. இந்த விழாச் செலவினங்களையும் அதன் பின் வரும் விளம்பரச் செலவினங்களையும் குறைத்து, திட்டங்களை சரிவரச் செய்தால் நல்ல முன்னேற்றம் கிட்டும்.

Queen said...

நம்ம அரசியல்வாதிங்க எப்போடா ஏதாவது புது project கிடைக்கும், அதை வைத்து சம்பாதிக்கலாம்னு அலையும் போது, இந்த மாதிரி ஒரு லட்டு project கிடைச்சா, குஷியா implement பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. Anyways, நீங்க சொல்லி இருக்கிற இந்த முறை ரொம்ப உபயோகமானதாக தான் தெரியுது. ஆனா இதெல்லாம் அனுபவிக்க குடுத்து வச்சிருக்கனும்.

Syam said...

பங்காளி இப்போதைக்கு உள்ளேன் ஐயா...அப்பாலிக்கா வரேன்.. :-)

SK said...

மிக அருமையான பதிவு, னட்சத்திர நாயகரே!

அப்படியே, அந்த முதல் வரி யில் இருக்கும் எ.பி.ஐ திருத்தினால் நுழைந்ததும் உறுத்தாமல் இருக்கும்!

நன்றி.

நன்மனம் said...

நல்ல தகவல் பதிவு.

இதற்கு முக்கிய முதலீடு, இதை அமல் படுத்துவதால் எனக்கு எவ்வளவு "மறைமுக" நன்மை என்ற எண்ணம் இல்லாத செயல் படுத்துபவர்கள்.

தனியார் நிறுவனங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல் பட மாட்டார்கள் என்று அவர்களை நாம் தூரத்தில் இருந்து தான் பார்க்கிறோம் ஆனால் அதிலும் மக்களுக்கு "மறைமுக" நன்மைகள் இருக்கிறது என்பதை உணர / ஒத்துக்கொள்ள மக்கள் மறுக்கிறார்கள், அதே சமயம் மற்றவர்கள் (அரசியல் வியாதிகள் என்று நேராக சொல்ல வேண்டியது தானே) செய்யும் தீமைகள் நேரடியாக தெரிந்தால் கூட "இதெல்லாம் சகஜமப்பா" என்று அதை பற்றி பேசுவதையே தவிர்க்கிறோம்.

உள்கட்டமைப்பை வாழும் தரத்திற்க்கு (உலக தரத்திற்க்கு கூட இல்லை) கொண்டு வருவதற்க்கு அரசு/தனியாரின் கூட்டு முயற்சியால் விரைவாக செயல் படுத்த முடியும் என்பது உண்மை.

அது நடக்க உண்மையாக நடந்து கொள்வார்கள் என்று நம்புவோமாக.

வடுவூர் குமார் said...

சிவா
"உள்ளமைப்பு முன்னேற்றம்"-இதை தவிர இப்போதைய தேவை வேறெதுவும் இல்லை.மழையில் சென்னையை மிக சமீபத்தில் பார்த்தால் கொஞ்சம் பளிச்சின்னு தெரியும்.

பொன்ஸ்~~Poorna said...

நல்ல யோசனை சிவா.. முதல் பத்தியில் பதிவுக்குத் தொடர்பில்லாத சில "provoking" வாக்கியங்கள் பதிவின் சீரியஸ்னஸைக் குறைப்பது போல் இருப்பதாகத் தோன்றுகிறது :(

நீங்கள் சொல்லி இருப்பதை வைத்துப் பார்த்தாலே இது ஒரு ப்ரீ பெய்ட் கார்ட் மாதிரி தானே இருக்கு.. இன்னுமும் இதை ப்ரீபெய்ட் கார்டு மாதிரி நம்மூரில் கொண்டு வரலாம்னா? சரியா புரியலை!

இந்த மாதிரி ஒரு கருவியை நம்ம ஊரின் குடிசைகளிலோ வயல்வெளிகளோ பொருத்த முடியுமா என்ன? அடிக்கடி மழை, வெயில் படக் கூடிய இடங்களுக்கும் வசதியானதாக ஆக்கிப் பின்னரே பயன்படுத்த வேண்டும்..

Hariharan # 26491540 said...

ரொம்ப நல்ல விஷயம் சிவா. அடிக்கடி வீட்டில் இல்லாமல் வெளியிடங்கள் போவோர்க்கு இணைப்புத்துண்டிப்பு என்ற தொந்திரவும் இருக்காது.

அரசியல் வாதிகளின் பொதுக்கூட்டத்திற்கு கொக்கி போடமுடியாதது, மின்வாரிய ஊழியர்தேவை /சார்பு மிகக்குறைவாக்கிவிடும் நிதர்சன உண்மைகள் இத்திட்டம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளத் தடையாக அமையும்!

செந்தில் குமரன் said...

உங்கள் பதிவின் இரண்டாம் பகுதிக்கு கொஞ்சம் சம்பந்தமில்லாதது முதல் பகுதிக்கு சம்பந்தம் உடையது.

அறிவியல் கண்டுபிடிப்புகளை வைத்து நம் நாட்டின் கட்டமைப்பை உயர்த்துவதன் மூலம் நாம் வளர்ச்சி அடையும் முன் தனி மனித ஒழுக்கம் என்பது அதிகரிக்க வேண்டும். குப்பைத் தொட்டிகள் பக்கத்தில் இருந்தும் வேறு இடத்தில் குப்பை போடுவது, ரோட்டில் எச்சில் துப்புவது, அரசாங்கத்தை எப்படி ஏமாற்றி வருமான வரி கட்டாமல் தப்பிக்கலாம் என்று யோசிக்காமல் வருமான வரி ஒழுங்காக செலுத்துவது, போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிப்பது(ஒரு ஆவணமும் இல்லாமல் சென்று போலிஸில் சிக்கி அபராதம் செலுத்தாமல் லஞ்சம் கொடுத்து பின் போலீஸைத் திட்டுவது) போன்றவைகள் குறைந்து தனி மனித ஒழுக்கம் என்பது அதிகரிக்க வேண்டும்.

அறிவியல் வளர்ச்சிகள் மூலம் கட்டமைப்பை மேம்படுத்துவது சுலபம் மனிதர்கள் மற்றவர் மேல் குற்றம் குறை சொல்லி விட்டு அதைக் காரணமாக வைத்து ஒழுக்கமில்லாமல் இருப்பதை சரி படுத்தி தனி மனித ஒழுக்கத்தை அதிகரிப்பதே தான் ஒரு இந்தியாவை பேரரசு என்ற அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல அறிவியல் வளர்ச்சிகள் எப்பொழுது வேண்டுமானாலும் செயலுக்கு கொண்டு வர முடியும்.

கொஞ்சம் வித்தியாசமான உங்கள் பார்வையில் இருந்து மாறுபட்டு சொல்லி இருக்கிறேன்.

Samudra said...

உட்கட்டமைப்புக்கு முதல் எதிரியே இந்திய அரசு ஊழியர்கள் தான் சிவா.

விமான் நிலையத்தை நவீனபடுத்தலாம் என்றாலும் சண்டை, வங்கிகளை நவீனபடுத்தலாம் என்றாலும் சண்டை...சில ஆயிரம் ஊழியர்கள் சொகுசாக உட்கார்ந்து தயிர்சாதம் சாப்பிட ஒரு நாடே அதனால் பாதிக்கபடவேண்டியதுள்ளது.

சுதந்திரம் வாங்கி 50 ஆண்டுகள் கழித்து தான் நல்ல சாலைகள் போட வேண்டும் என்று நமது மக்களுக்கு தோன்றியது!!!!

இப்போது தான் உருப்படியான தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து கொண்டு இருக்கிறார்கள். இதெல்லாம் பத்தாது.

நீங்கள் எடுத்துக்காட்டிய உதாரனம் சூப்பர். அதே போல கழிவரைகளில் கூட தொழில்நுட்பம் நமது உதவிக்கு வருகிறது.....

மற்ற நாடுகள் முன்னேறிய போது அவைகளுக்கு உதவ இத்தனை தொழில்நுட்பமும், மனித வளமும் கிடைக்கவில்லை...ஆனால் நமக்கு அவை உள்ளது...சரியாக பயன்படுத்த வேண்டும்.

Samudra said...

குமரன் என்னம் சொன்னதும் சரிதான்.

குப்பைபோடுபவர்களை நிற்க வைத்து நாலு சாத்து சாத்தினால் தான் புத்திவரும் என்றால் அதையும் செய்ய அரசு சட்டம் போட வேண்டும். :))

சுத்தமாக இருக்க கூட இந்தியனை கட்டாயபடுத்த வேண்டிய நிலை..ஹும்.

Samudra said...

//ஆனா இதெல்லாம் அனுபவிக்க குடுத்து வச்சிருக்கனும்.
//

"பெரிதினும் பெரிது கேள்."
Every Indian deserves the best.

DEMAND for it.

நாகை சிவா said...

//முதல் பத்தியில் பதிவுக்குத் தொடர்பில்லாத சில "provoking" வாக்கியங்கள் பதிவின் சீரியஸ்னஸைக் குறைப்பது போல் இருப்பதாகத் தோன்றுகிறது :(//

ஒத்துக்குறேன் பொன்ஸ், ஒரு பதிவில் இந்த வாக்கியங்கள் படிக்க நேர்ந்தது. அந்த பதிவுக்கு ஒரு பதில் போட வேண்டும் என்று இருந்தேன். இன்னும் முடியவில்லை. விரைவில் போட முயற்சிக்கின்றேன். ஆனால் உங்களை போன்ற நண்பர்களிடம் அந்த வரிகளை போட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.

//இன்னுமும் இதை ப்ரீபெய்ட் கார்டு மாதிரி நம்மூரில் கொண்டு வரலாம்னா? சரியா புரியலை!//

அது ப்ரீபெய்ட் என்பது சரி தான். நம்மூர் செல்போன் ப்ரீபெய்ட் கார்ட் போல சுலபமாக கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று சொல்ல வருகின்றேன். மின்சார அலுவலகத்துக்கு தான் போய் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் போய் விடும் பாருங்க....செல்போன் மாதிரி ஒரே நெட்வொர்க ஆக கொண்டு வர தேவையில்லை. அந்த அளவுக்கு செலவு செய்ய வேண்டாம் என்பதும் என் எண்ணம்.

//இந்த மாதிரி ஒரு கருவியை நம்ம ஊரின் குடிசைகளிலோ வயல்வெளிகளோ பொருத்த முடியுமா என்ன? அடிக்கடி மழை, வெயில்//

நான் இருக்கும் இடத்தை விடவா இந்தியாவில் அதிகம் வெயில் அடித்து விட போகிறது. இங்கு அடிக்கடி மணல் புயலும் அடிக்கும். இதுக்கே இது தாங்குது. ஆனாலும் நீங்கள் சொன்னது ஒரு சரியான பாயிண்ட் தான். நாங்கள் எங்கள் இண்டர்னல் செல்போனுக்கான அண்டனாவை ஒரு கவரிங் போக்ஸ் போட்டு மூடுவோம். அதை மிக உயரமான டவர்களில் நிறுவுவோம். அது போல இதுக்கும் செய்யலாம். அதுவும் இல்லாமல் இதை மீட்டருக்கு பதில் தானே பயன்படுத்த போகிறோம். மீட்டரை எப்படி பாதுக்காகின்றார்களோ அது போல இதையும் செய்யலாம்.

நாகை சிவா said...

//நம்நாட்டிலிலும் நடக்குமென்ற நம்பிக்கை இருக்கு.

நம்பிக்கை தானே வாழ்க்கை!!!!//

கண்டிப்பாக ராம். இது நடக்கும், நடக்க வேண்டும். இப்பொழுது அமைந்த உள்ள சந்தர்ப்பம் போல மீண்டும் ஒரு சந்தர்ப்பம் நமக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை.

நாகை சிவா said...

//வாழ்க்கை தர உயர்வுக்கு அவசியமான ஒன்றாகும்..//

தனிமனித வாழ்வு உயர்ந்தால் நாடும் தானாகவே உயரும். சில கேள்விகள் உங்க பெயரே வித்தியாசமாக உள்ளது...

நாகை சிவா said...

//அரசு அலுவலகங்களை சீர்திருத்தாமல் முன்னேற்றத்தை பற்றி இந்தியா யோசிக்கவே முடியாது என தோன்றுகிறது. //

சத்தியமான வார்த்தைகள் செல்வன். அரசு இயந்திரம் ஒழுங்காக வேலை செய்யாதற்கு பாதி காரணம் அரசியல் வியாதிகள் என்றால் மீதி காரணம் பல அரசு ஊழியர்கள்.

நீங்கள் சொல்வது போன்று மின்வாரியத்திடம் இருந்து தான் முதல் எதிர்ப்பு வரும். அதையும் மீறி இதை செயல்படுத்த நல்ல அரசு தேவை நமக்கு. இது நமக்காக இல்லாவிட்டாலும் வருங்கால சமுதாயத்துகாக ஆவது.

viji said...

அன்புள்ள நண்பபரே,
உங்களுடைய பதிவும் அதில் நீங்கள் கூறியுள்ள கருத்துகளும் வளரும் இந்தியாவிற்கு மிக முக்கியமானவை. வரவேற்கிறேன். ஒரு மின் பொறியாளன் என்ற முறையில் சில கருத்துகளை முன் வைக்க விரும்புகிறேன்.
உங்களால் சொல்லப்பட்ட முறை இந்தியாவில் இல்லை என்பதில் முற்றிலும் உன்மை இல்லை. ஒரே நாளில் பழைய மீட்டரை மாற்றிவிட்டு புது முறைக்கு மாற முடியாது. இது எதோ சினிமாவில் வரும் கிராபிக்ஸ் போல அல்ல.சில இடங்களில் இது உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த வலைத்தலத்தை பார்க்கவும்.
http://www.blonnet.com/2005/02/15/stories/2005021502530200.htm

மேலும் இ-பில்லிங் வசதி கூட இந்தியாவில் உள்ளது. கீழே உள்ள லிங்க்கை பார்வையிடவும்.
http://www.msebindia.com/consumer/ebillnew.shtm

இந்திய மின்துரையை குறை கூறுவதை விட்டு விட்டு அவர்க்ள் அளிக்கும் சேவைகளை முதலில் பாரட்டுங்கள். அடுத்தவரை நோக்கி ஒரு விரலை நீட்டி குறை கூறும் போது நம்மை நோக்கி மூன்று விரல்கள் நீண்டுள்ளது. அவைகள் நீங்கள் உங்களது கடமைகளை இந்தியாவிற்கு சறியாகச் செய்தீர்க்ளா? என்கின்றன........

கீதா சாம்பசிவம் said...

நீங்க சொல்ற விஷயம் எல்லாம் எங்களுக்கு எப்போ வரும்? அதெல்லாம் சொல்லவே முடியாது. எதிலும் தாமதம் தானே நமக்குப் பழக்கம். உங்க யோசனை அருமை. திரு/திருமதி. விஜி சொல்லி இருப்பதையும் பார்க்க வேண்டும். ஆகவே தப்பு 2 பக்கத்துலேயும் இருக்கு.அப்புறம் முதல் பாராவிலே பொன்ஸ் சொன்ன மாதிரி ஏதோ எழுதினதை நீக்கிட்டீங்க போல் இருக்கு, எனக்கு ஒண்ணும் தப்பாத் தெரியலையே?

Raji said...

Siva,

Ramba naal kalichu unga valai padhivu pakkam vandhirukiraen..

Arumayana karuthukkal.

Kudos to Sudan for their efforts!

நாகை சிவா said...

விஜி,
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. ஆனால் உங்கள் துறையை பற்றிய செய்தி என்பதால் நான் கூறியதை சரியாக உள்வாங்கி கொள்ளாமல் பதில் போட்டு வீட்டீர்கள். எனக்கு தெரிந்து வரை, புரிந்த வரை உங்களுக்கு விளக்கம் தருகின்றேன்.

//உங்களால் சொல்லப்பட்ட முறை இந்தியாவில் இல்லை என்பதில் முற்றிலும் உன்மை இல்லை.//

"எனக்கு தெரிந்த வரை" என்று முன்பே கூறி விட்டேன். இருந்தாலும் தவறுக்கு வருந்துகிறேன். தமிழகத்தில் இன்னும் இல்லை என்பது உங்கள் சுட்டியை காணும் போது தெரிகின்றது.

//ஒரே நாளில் பழைய மீட்டரை மாற்றிவிட்டு புது முறைக்கு மாற முடியாது. இது எதோ சினிமாவில் வரும் கிராபிக்ஸ் போல அல்ல.//

நான் அது போல நான் சொல்வே இல்லையே. படிப்படியாக பரிசோதனை முயற்சியாக செய்யலாம் என்று தான் சொல்லி இருந்தேன்.
7 வது பத்தியை மறுபடியும் படிக்கவும்.

//இந்திய மின்துரையை குறை கூறுவதை விட்டு விட்டு அவர்க்ள் அளிக்கும் சேவைகளை முதலில் பாரட்டுங்கள். //

நான் இந்திய மின் துறையை ஒரு இடத்தில் கூட குறை கூறி ஏதுவும் சொல்லவில்லையே. நீங்களாக அப்படி பொருள் கொள்ளும் அளவு என் பதிவில் தவறு ஏதும் உள்ளதா? என் ஆதங்கம் மின் துறை இன்னும் வளர்ச்சி பாதையில் போக வேண்டும் என்பது தான்.

சேவையை பாராட்டுவதை பற்றி பல மாறுபட்ட கருத்துக்களும், பல உடன்பட்ட கருத்துக்களும் உள்ளது. அதை பற்றி இங்கு விவாதம் புரிவது என் நோக்கம் இல்லை. பண்ணலாம் என்றாலும் நான் தயார்.


//அடுத்தவரை நோக்கி ஒரு விரலை நீட்டி குறை கூறும் போது நம்மை நோக்கி மூன்று விரல்கள் நீண்டுள்ளது. அவைகள் நீங்கள் உங்களது கடமைகளை இந்தியாவிற்கு சறியாகச் செய்தீர்க்ளா? என்கின்றன........ //

நான் இங்கு பதிவில் யாரையும் குறை சொல்லவில்லை. நீங்கள் செல்வன் அவர்களின் பின்னூட்டத்தையும், அதற்கு நான் அளித்த பதிலையும் வைத்து இந்த வார்த்தையை சொல்கின்றீர்களா என்று தெரியவில்லை.

இருந்தாலும் நான் என் கடமையை இது வரை சரியாக செய்து வந்ததாக தான் எனக்கு தெரிகின்றது. இந்தியாவில் இருந்த வரை ஒரு முறை தவறாமல் ஒட்டு போட்டதில் இருந்து பலவற்றிலும் .... இந்த இடத்தில் நான் எல்லாவற்றிலும் சொல்லாதற்கு காரணம், சில சமயங்களில் சந்தர்ப்பவசத்தாலும், சூழ்நிலைகளாலும் சிறு தவறுகள் இழைத்து இருக்கலாம்.

அந்த மூன்று விரல்கள் எதை சரியாக செய்தாயா என்று கேட்கின்றது என்பதை நீங்கள் கேட்டால் எனக்கு தெரிந்தவற்றை விளக்க தயாராக உள்ளேன்.

இப்பொழுது நீங்கள் கொடுத்த சுட்டிகளை பற்றி.

1, இது ரிலையன்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை பற்றியது. கண்டிப்பாக பாராட்ட பட வேண்டிய விசயம் தான். அவர்கள் ஜி.எஸ்.எம். டெக்லானிஜியை வைத்து செய்கின்றார்கள். அது நான் கூறிய இந்த திட்டத்தை விட பல மடங்கு முன்னேறிய திட்டம். அதை செயல்படுத்த பொருளாதர தேவைகளும், அதை செயல்படுத்த கால தாமதம் ஆகலாம். அந்த அளவுக்கு செய்வதாக இருந்தால் சந்தோஷம் தான். வளர்ச்சி அடைய வேண்டும் என்பது தானே என் எண்ணம். அது எந்த வகையாக இருந்தாலும் சரி தான்.

2, இ-பில்லிங்க பத்தி நான் பேசவே இல்லையே..... இருந்தாலும் இதுவும் சந்தோஷமான மற்றும் வரவேற்கப்பட விசயம் தான். வாழ்த்துக்கள்.

தகவலுக்கு நன்றி

அதிரைக்காரன் said...

சிவா! நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்!!

சூடானில் இருப்பதாகச் சொல்லும் மின்சார வழங்கி (?) சாதனம் அருமையான யோசனை! (ரீசார்ஜ் அட்டையை வெறுங்கையால் தொட்டால் சாக் அடிக்குமாமே! (ஹி..ஹி...வேறு எப்படி பின்னூட்டக் கயமைத் தனம் பண்ணுவதாம்?)

நாகை சிவா said...

//ஆகவே தப்பு 2 பக்கத்துலேயும் இருக்கு.//

நான் இங்க யார் பக்கம் தப்புனே பேச வரல. வளர்ச்சி பாதையில் போவதற்கு ஒர் வழி தெரிஞ்சது சொன்னேன். மற்றவை ஏதும் தற்சமயம் என் கையில் இல்லை.

//முதல் பாராவிலே பொன்ஸ் சொன்ன மாதிரி ஏதோ எழுதினதை நீக்கிட்டீங்க போல் இருக்கு, எனக்கு ஒண்ணும் தப்பாத் தெரியலையே? //

இல்லை இன்னும் இருக்கு. அதை நீக்கவில்லை. தெரிந்தே போட்டதால் நீக்க தோன்றவில்லை.

கப்பி பய said...

அருமையான பதிவு சிவா!

நன்றி!

நாகை சிவா said...

//அட புதுசா இருக்கே!

தமிழ்நாட்டில் தாராளமாக முயற்சித்து பார்க்கலாம்! //

புதுசு எல்லாம் இல்ல தம்பி. இன்னும் நம் ஊரில் செயல்படுத்துல... சீக்கிரமே பண்ண வேண்டும் என்பது தான் என் ஆசை.

நாகை சிவா said...

//மின்சாரம் தடைபடுவதால் தான் நம்ம நாட்டின் ஜெனத் தொகை அதிகரிக்கிறதா சொல்கிறார்களே !

அதுபற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா ?//

இது ஒரு மேட்டரு இருக்கா. சத்தியமா இதை பற்றி எனக்கு ஏதும் தெரியாது கண்ணன். இன்னும் அறியா சிறுவன் தானே நான்...

நாகை சிவா said...

//நீ பாட்டுக்கு வேலைக்குப் போன எடத்துலே வேலைவெட்டி இல்லாம உக்காந்துகிட்டுப் பதிவு போடுவே. அந்த மாதிரி முட்டாள் யோசனைங்களை இங்கே செயல் படுத்த விட்டுடுவோமா?//

அது சரி.... உண்மைய தான் சொல்லுறீங்க.

//தம்பி, நாங்க என்ன கேனையனுங்களா?//

சத்தியமா இல்லைங்கண்ணா, கேனையனுங்க நாங்க தான்.

இது தவிர வேறு என்னத்த சொல்ல...

நாகை சிவா said...

//சரியான உள்கட்டமைப்பும் , அநாவசிய பணிச் சுமையும் அரசின் கவனிப்புக்கு வந்துவிட்டாலே நாடு பாதி தன்னிறைவு அடையும்! //

உண்மை தான் தளபதியாரே! உள்கட்டமைப்பு சரியாக இருந்தால் விலை ஏற்றத்தை கூட ஒரு வகையில் கட்டுப்படுத்தலாம்.

குமரன் (Kumaran) said...

நல்ல பயனுள்ள கட்டுரை சிவா. பதிவை நேற்றே படித்தேன். இன்று பின்னூட்டங்களையும் படித்தேன். நல்ல கருத்துப் பரிமாற்றங்கள்.

நாகை சிவா said...

//நம்ம அரசியல்வாதிங்க எப்போடா ஏதாவது புது project கிடைக்கும், அதை வைத்து சம்பாதிக்கலாம்னு அலையும் போது, இந்த மாதிரி ஒரு லட்டு project கிடைச்சா, குஷியா implement பண்ண ஆரம்பிச்சிடுவாங்க.//

எப்படியோ ஆரம்பித்தால் சரி தான்.

சுயநலத்துடன் கூடிய பொது நலன் என்றுக் கூட சொல்லாம்.

viji said...

உங்களது உடனடி பதிலுக்கு நன்றி.
இந்த பதிவில் உள்ள கருத்தை தமிழக மின்வாரியதிற்கான உங்கள் யோசனையாக எடுத்துக் கொண்டால், இதை நடைமுறைப் படுத்த ஆகும் செலவு , காலம் , இவை பற்றிய நிறைய ஆய்வுகள் நடைபெருகின்றன. E-metering விரைவில் வரும்.

//நான் இந்திய மின் துறையை ஒரு இடத்தில் கூட குறை கூறி ஏதுவும் சொல்லவில்லையே. நீங்களாக அப்படி பொருள் கொள்ளும் அளவு என் பதிவில் தவறு ஏதும் உள்ளதா? என் ஆதங்கம் மின் துறை இன்னும் வளர்ச்சி பாதையில் போக வேண்டும் என்பது தான்.//
உங்கள் பதிவில் நீங்கள் குறை கூறவில்லை . ஆனால் பின்னூட்டமிடும் அன்பர்கள் அதைத்தான் சொல்லி உள்ளார்கள்,(for eg like அரசு ஊழியர்கள் உள்கட்டமைப்புக்கு எதிரிகள்.. ) அவ்வாறு சொல்கிறார்கள்.

//இருந்தாலும் நான் என் கடமையை இது வரை சரியாக செய்து வந்ததாக தான் எனக்கு தெரிகின்றது.//
எனது கருத்து சிவா என்கிற தனி மனிதன் சரியாக கடமைகளை செய்யவில்லை என்பது அல்ல.

//அடுத்தவரை நோக்கி ஒரு விரலை நீட்டி குறை கூறும் போது நம்மை நோக்கி மூன்று விரல்கள் நீண்டுள்ளது. அவைகள் நீங்கள் உங்களது கடமைகளை இந்தியாவிற்கு சறியாகச் செய்தீர்க்ளா? என்கின்றன........ //

இந்த கேள்வி உங்களை தனிப்பட்ட முறையில் குறை கூற எழுப்ப படவில்லை.
இந்தியாவில் அது இல்லை, இது இல்லை என கூப்பாடு ஒரு சராசரி இந்தியனை நோக்கி கேட்கப்பட்டது.
உங்களை புண்படுத்தி இருந்தால் மறந்து விடுங்கள்

// கடைசியா ஒன்று.. "திரு/திருமதி. விஜி சொல்லி இருப்பதையும் பார்க்க " னு ஒருத்தங்க சொல்லி இருந்தங்க நான் திரு விஜயகுமார் தாங்க.//

நாகை சிவா said...

// இதை நடைமுறைப் படுத்த ஆகும் செலவு , காலம் , இவை பற்றிய நிறைய ஆய்வுகள் நடைபெருகின்றன. E-metering விரைவில் வரும். //

அதுவே எனது ஆசையும் கூட விஜி.

//ஆனால் பின்னூட்டமிடும் அன்பர்கள் அதைத்தான் சொல்லி உள்ளார்கள்,(for eg like அரசு ஊழியர்கள் உள்கட்டமைப்புக்கு எதிரிகள்.. ) அவ்வாறு சொல்கிறார்கள்.//

அந்த கருத்தை முற்றிலும் மறுப்பதற்க்கு இல்லை. ஒரேடியாக அவர்களை குறை குறை கூறவும் முடியாது என்பது என் கருத்து.

என் தந்தை ஒரு அரசு ஊழியர். நான் அரசு ஊழியர்களிடம் மூன்று ஆண்டுகள் பணி புரிந்து உள்ளேன். பல என்பதை விட எல்லா அரசு அலுவலகங்களும் சென்று வந்து உள்ளேன்.(என் அலுவலக ரீதியாக). இவற்றை வைத்து நானும் அவர்கள் மேல் ஒரு கருத்து வைத்து உள்ளேன். கண்டிப்பாக அது உங்களுடன் மாறுப்பட்டு தான் இருக்கும் என்றும் எண்ணுகின்றேன்.

//இந்தியாவில் அது இல்லை, இது இல்லை என கூப்பாடு ஒரு சராசரி இந்தியனை நோக்கி கேட்கப்பட்டது.//

இல்லை என்று கூப்பாடு போடும் கூட்டத்தில் நான் இல்லை. இதை செய்யலாம், அதை செய்யலாம் என்று சிந்திக்கும் கூட்டத்தில் உள்ளேன். கண்டிப்பாக ஒரு நாள் என்னால் முடிந்தவற்றை இப்பொழுது செய்து கொண்டு தான் இருக்கிறேன். எதிர்காலத்தில் விரிவாகவும் செய்வேன்.

//உங்களை புண்படுத்தி இருந்தால் மறந்து விடுங்கள்//

இதில் புண்பட, வருத்தப்பட ஏதுவும் இல்லை. விவாதம் ஆரோக்கியமாக இருக்கின்றது என்று குமரனே சொல்லி உள்ளார். அதை விட வேறு என்ன வேணும்.

மீண்டும் உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.

Arunkumar said...

romba nalla thagaval. sudanla implement pannirkaangana paaratta vendiya vishayam.

"Etho solkiren" nu sollitu neraya nalladu solreenga !!! romba nallavara irukeenga :)

//misuse panra criminals adigam//
romba correct. idaan inraya nilamai...

approm, neram kedacha namma kadai pakkam vanga

நாகை சிவா said...

//இது இல்லாமல் வெறும் அடிக்கல் நாட்டு விழாவுடன் முடிந்து போகும் திட்டங்களே இன்று அதிகம் இருக்கிறது. இந்த விழாச் செலவினங்களையும் அதன் பின் வரும் விளம்பரச் செலவினங்களையும் குறைத்து, திட்டங்களை சரிவரச் செய்தால் நல்ல முன்னேற்றம் கிட்டும். //

ரொம்ப சரி கொத்துஸ், தினம் ஒரு திட்டம் அறிவிக்குறாங்க. ஆனா அதில் எத்தனை செயல்படுத்தப்பட்டது என்பது தான் மிக பெரிய கேள்விக்குறி.

//அது மட்டுமில்லாது, இன்றைக்கு நிறைவேற்றப்படும் பல பிராஜெக்ட்டுகள் நேற்றைய தேவைகளை பூர்த்தி செய்யவே போதுமானதாக இல்லை. இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகளின் தேவைகளை மனதில் வைத்து செயல்படவேண்டும். //

தொலை நோக்கு பார்வை இல்லாமல் இருப்பது தான் நம்மிடம் இருக்கும் மிக பெரிய முட்டாள்த்தனம்.

நாகை சிவா said...

//பங்காளி இப்போதைக்கு உள்ளேன் ஐயா...அப்பாலிக்கா வரேன்.. :-) //

என்ன பங்கு, அடிக்கடி ஒடிப் போயிடற... என்ன மேட்டரு...

நாகை சிவா said...

//மிக அருமையான பதிவு, நட்சத்திர நாயகரே!//

நன்றி எஸ்.கே.,

//அப்படியே, அந்த முதல் வரி யில் இருக்கும் எ.பி.ஐ திருத்தினால் நுழைந்ததும் உறுத்தாமல் இருக்கும்!//

சரி செய்யப்பட்டது. தகவலுக்கு நன்றி

நாகை சிவா said...

//தனியார் நிறுவனங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல் பட மாட்டார்கள் என்று அவர்களை நாம் தூரத்தில் இருந்து தான் பார்க்கிறோம்//

நன்மனம் இது உண்மை தான். ஆனால் தற்சமயம் இது மாறிக் கொண்டு வருகின்றது. தனியாரிடமே குடுத்து இத்தனை வருடங்கள் என்று குத்தகைக்கு கொடுத்து பின் அரசிடம் ஒப்படைக்க சொல்லாம். அரசுக்கு இதனால் லாபம் தான். மக்கள் நஷ்டம் அடையா வண்ணம், அரசு கண்காணிக்க வேண்டும்.

நாகை சிவா said...

//"உள்ளமைப்பு முன்னேற்றம்"-இதை தவிர இப்போதைய தேவை வேறெதுவும் இல்லை.மழையில் சென்னையை மிக சமீபத்தில் பார்த்தால் கொஞ்சம் பளிச்சின்னு தெரியும். //

மிக சரி, குமார். சென்னை மழையில் நீங்களும் சிக்கி கொண்டீர்களா?

நாகை சிவா said...

//அரசியல் வாதிகளின் பொதுக்கூட்டத்திற்கு கொக்கி போடமுடியாதது, மின்வாரிய ஊழியர்தேவை /சார்பு மிகக்குறைவாக்கிவிடும் நிதர்சன உண்மைகள் இத்திட்டம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளத் தடையாக அமையும்//

வேற வழி இல்லை ஹரி. இவ்வளவு நாள் தாமதப்படுத்தியது போதும். நம் எதிர்காலத்திற்காக இதை செய்து தான் ஆக வேண்டும், எந்த தடைகளையும் தாண்டி....

aaruran said...

e யோவ் ஆற்காடு வீராசாமி உன்னை தேடிக்கொண்டு இறுக்கிறாராம். மின்வாரிய சங்கங்கள் எல்லாம் உன்னை டின் கட்ட காத்திறுக்கு....

மிக நல்ல பதிவு

ஆரூரான்

நாகை சிவா said...

//e யோவ் ஆற்காடு வீராசாமி உன்னை தேடிக்கொண்டு இறுக்கிறாராம். மின்வாரிய சங்கங்கள் எல்லாம் உன்னை டின் கட்ட காத்திறுக்கு....//

அட அதுக்கு எல்லாம் அவருக்கு நேரம் இருக்கா, நான் என்னமோ அவருக்கு அறிக்கை விட மட்டும் தான் நேரம் இருக்கு என்று நினைத்து இருந்தேன்.

நீங்க என்ன திருவாரூரா.... உங்க பெயரை வச்சு கேட்குறேன்.

நாகை சிவா said...

//அறிவியல் கண்டுபிடிப்புகளை வைத்து நம் நாட்டின் கட்டமைப்பை உயர்த்துவதன் மூலம் நாம் வளர்ச்சி அடையும் முன் தனி மனித ஒழுக்கம் என்பது அதிகரிக்க வேண்டும்.//

குமரன் எண்ணம், முற்றிலும் ஒத்துக் கொள்கின்றேன். இதைக் குறித்து கூட ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன். தனி மனித ஒழுக்கம் தான் ஒரு சமுதாயத்தை உயர்வடைய செய்யும். அதே சமயத்தில் அதை சரி செய்து விட்டு தான் இதை செய்ய வேண்டும் என்று சொல்வது சரியாக இருக்காது. இதை ஒரு புறம் செய்துக் கொண்டே, அதை மேம்படுத்தவும் நாம் முயற்சிக்க வேண்டும். முதலில் மக்களுக்கு சுய அறிவு இருக்க வேண்டும். சட்டத்தில் இருக்கும் ஒட்டைகளை முடிந்த அளவு அடைக்க வேண்டும்.

பள்ளிக் குழந்தைகளிடம் வெறும் பாடத்தை மட்டும் திணிக்காமல் இது போன்ற சமூக விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். அவர்களை வைத்து அவர்கள் பெற்றோர்களையும் மாற்ற முயல வேண்டும். இது போல பலவற்றை செய்ய வேண்டும்.

சுருக்கமாக சொன்னால் இந்தியா தன்னை தானே ஒரு சுயபரிசோதனை செய்ய வேண்டிய காலம் இது.

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி குமரன்.

நாகை சிவா said...

//மற்ற நாடுகள் முன்னேறிய போது அவைகளுக்கு உதவ இத்தனை தொழில்நுட்பமும், மனித வளமும் கிடைக்கவில்லை...ஆனால் நமக்கு அவை உள்ளது...சரியாக பயன்படுத்த வேண்டும். //

சமுத்ரா என் கருத்தும் இது தான். இதை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

//இப்போது தான் உருப்படியான தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து கொண்டு இருக்கிறார்கள். இதெல்லாம் பத்தாது.//

கண்டிப்பாக இது பாராட்டப்பட வேண்டிய விசயம். ஆனால் வேகம் பத்தாது. விரைவாக செய்ய வேண்டும்.

இராமநாதன் said...

ஹூம். நல்ல ஐடியாதான்.

இதே போல தண்ணீர், மின்சாரம் எல்லாமே இருந்தால் அரசு ஊழியர்களிடமிருந்து தப்பித்து நாம் நிம்மதியாக இருக்கலாம்.

அப்படியே இந்த மீட்டருக்கு சூடு வெச்சா வேகமா ஓடுமா? இல்ல ஐஸ் பொட்டில கழட்டி வச்சோம்னா குறைச்சலா ஓடுமான்னு முதல்ல சொல்லு வாத்யாரே!

நாகை சிவா said...

//அப்படியே இந்த மீட்டருக்கு சூடு வெச்சா வேகமா ஓடுமா? இல்ல ஐஸ் பொட்டில கழட்டி வச்சோம்னா குறைச்சலா ஓடுமான்னு முதல்ல சொல்லு வாத்யாரே! //

இன்னும் இது ஏதும் செய்து பாக்கல. பாத்துட்டு சொல்லுறேன் தலைவா!

tarik@technologist.com said...

this is time to stop the dreaming,will start the action.


very good pbl...keepit up

tnks
Tariq