தலைப்பு "அறுசுவை" னு வச்சாச்சு. அதுக்கு தகுந்த மாதிரி ஏதும் மேட்டர கண்டிப்பாக எழுதனும். ஆனா நம்ம செய்த சமையல் என்னிக்கு அறுசுவையோடு இருந்து இருக்கு. அதனால் அதை முதலில் எழுதாமல், தலைப்புக்கு தகுந்த மாதிரி ஒரு விசயத்தை சொல்லிட்டு நம்ம மேட்டருக்கு போயிடலாம்.
நம்ம வலைப்பதிவு முகப்பில் இடது கை பக்கம் "அறுசுவை" அப்படிங்குற ஐகான் பாத்து இருப்பீங்க. சிலர் வலைப்பக்கத்திலும் இந்த பெயரை நான் உபயோகித்து இருப்பேன். அந்த அறுசுவையை பற்றி சில வரிகள்....
"முற்றிலும் சமையல் குறித்த முதல் தமிழ் இணையத்தளமாய், கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக அறுசுவை இயங்கி கொண்டு உள்ளது . இந்த தளம் முழுக்க முழுக்க உணவு சம்பந்தமான தகவல்களைத் தருவதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது. உணவு சம்பந்தமாக இந்ததளத்தில் கிடைக்காத தகவல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து தகவல்களையும் முழுமையான அளவிற்கு தருவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு அதில் ஒரளவும் வெற்றி பெற்று உள்ளார்கள். அனைத்து வகையான குறிப்புகளை சரியாக வரிசைப்படுத்தி நமக்கு வேண்டிய உணவு வகைக்கான குறிப்புகளை உடனே கிடைக்கும் படி செய்து உள்ளது மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சில பக்கங்கள்:
கூட்டாஞ்சோறு - பல சமையல் வல்லுனர்களின் குறிப்புகள் உள்ள பக்கம்
மன்றம் - பல வகையான தலைப்புகள் கொடுத்து ஒரு உரையாடற் களமாக உள்ள பக்கம்
ஆரோக்கியம் - உடல் ஆரோக்கியத்துக்கு உணவின் பங்கை குறித்து விளக்கும் பக்கம்
யாரும் சமைக்கலாம் - படத்துடன் உணவை சமைப்பது எப்படி என்று விளக்கும் பக்கம்
மொத்ததில் இந்த வலைத்தளம் என்னை போல உறவையும் நல்ல உணவையும் பிரிந்து வாழும் மக்களுக்கு பயன் தருமாறு உள்ளது. எங்களுக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் இது ஒரு நல்ல பயன் தரும் வலைத்தளமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் இங்கு அந்த தளத்தை பற்றி எழுதி உள்ளேன். ஒரு முறை போய் பாத்துட்டு வாங்க, உங்களுக்கே பிடிக்கும்.
ஒகே இப்ப நம்ம மேட்டருக்கு போலாம்.
என்ன மேட்டருனா, படத்துடன் கூடிய ஒரு சமையல் குறிப்பு தான் இன்னிக்கு மேட்டரு.
சமையல் குறிப்போட பெயர் என்ன வேணுமோ அதை நீங்களே வச்சுக்கலாம். இதுக்கு உண்மையிலே என்ன பெயருனு தெரிஞ்சவங்க சொல்லாம். இல்லாட்டி அப்பால நான் சொல்லுறேன்.
முதல் எத்தனை பேர் இருக்கோம் என்பதை பாத்துக்கோனும். அளவுக்கு இல்ல யாரு யாரு என்ன என்ன வேலை செய்வதுனு முடிவு பண்ண. அளவு எல்லாம் ஒரு மேட்டரே எவ்வளவு பொருள் இருக்கோ அதை வச்சு மேனேஜ் பண்ணிக்கனும். தேவையான பொருட்கள் - கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், உருளைகிழங்கு, எண்ணெய் இன்ன பிற...

செயல் விளக்கம்:
படத்தில் இருப்பது போல் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணி விட்டு நல்லா பிசையனும். இது கொஞ்சம் கஷ்டமான வேலை. அதுனால இந்த வேலைய அடுத்தவன் கிட்ட தள்ளி விட்டுட்டுங்க.
படத்தில் இருப்பது போல வெங்காயம், பச்சை மிளகாய நல்லா பொடியா வெட்டிங்கோங்க. இது கண்ணுல கண்ணீர் வர மேட்டர். அதனால இதையும் தள்ளி விட்டுட்டுங்க.
படத்தில் இருப்பது போல உருளைகிழங்கை நன்கு வேக வைத்து உரித்து மசித்து கொள்ளவும். இதை சூடாகாக இருக்கும் உரித்தால் கையே சுடும், அதனால் இதுவும் நமக்கு வேண்டாம்.
படத்தில் இருப்பது போல வெட்டிய வெங்காயம், ப.மிளகாய், உ.கிழங்கு எல்லாத்தையும் ஒன்றாக போட்டு நன்கு பிசறி கொள்ளவும். பிசுறு இல்லாமல் நன்றாக மசிக்க வேண்டும். அதனால் இதுவும் நமக்கு சரிப்பட்டு வராது.
படத்தில் இருப்பது போல கோதுமை மாவை பெரிதாக உருட்டி முதலில் சிறிதாக தேய்த்து அதில் இந்த பிசைந்து வைத்த கிழங்கை வைக்கவும். இதை தேய்க்கம் போது வட்டமாக தேய்க்கனும். இது நமக்கு வராது, அதனால் இதுவும் இதை தேய்த்து முடிக்கும் வரை நாம் வர வேண்டாம்.படத்தில் இருப்பது போல மூடி, உள்ளங்கையில் வைத்து தட்டிக் கொள்ளவும்.
படத்தில் இருப்பது போல உள்ள வைத்த கிழங்கு வெளிய வந்து விடாமல் நல்லா வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
படத்தில் இருப்பது போல எண்ணெய் விட்டு இதை கல்லில் போடவும். அப்ப அப்ப திருப்பி போடுங்க அப்ப தான் கருகாமல் இருக்கும். நமக்கு வேற வேலை இருப்பதால் இதையும் அடுத்தவனிடம் கொடுத்து விடலாம்.
படத்தில் இருப்பது போல திருப்பி போடுவதில் வல்லவராக இருந்தால் அந்தரத்தில் திருப்பி போடுங்கள். இதை சரியாக போட்டோ எடுக்க என்னை மாதிரி பக்கத்தில் ஆள் இருந்தால் பண்ணுங்கள். இல்லாட்டி வீண் முயற்சி வேணாம்.
படத்தில் இருப்பது தான் பைனல் அவுட்புட்டு. மேல நெய் தடவினால் இன்னும் மணமாக இருக்கும். இப்ப தான் நம்ம தேவை ரொம்ப முக்கியம். அதனால இந்த வேலைய நம்ம பாத்தே ஆகனும். கிழங்கு பிசையும் போது கொஞ்சம் மிளகாய் தூள் போட்டு பிசைந்தால் இன்னும் நல்லா இருக்கும். இரண்டு சாப்பிட்டா போதுங்க அன்றைய பொழுதுக்கு வேறு தேவையில்லை.முயற்சி செய்து பாருங்க, நல்லா இருந்தா சொல்லுங்க, மேற்கொண்டு பல சமையல் குறிப்புகள் போடுறேன். நல்லா இல்லாட்டி, அரசியல் (சமையல்) வாழ்வில் இது எல்லாம் சகஜம் என்று நினைச்சுக்கிட்டு என்ன மன்னிச்சு விட்டுட்டுங்க.