Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, July 18, 2010

இந்திய ரூபாய் குறியீடு & இந்திய உலாவி

கடந்த வாரம் இந்திய அரசால் நமது ரூபாய் க்கு என்று புதிய குறியீட்டை ( ` ) அறிவித்து இருந்தார்கள். இன்னும் சில மாதங்களில் அந்த குறியீடு நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த குறியீட்டை வடிவமைத்தது ஒரு தமிழ் இளைஞர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த குறியீடு இந்தி எழுத்து போல் உள்ளது, கம்யூனிச சின்னம் போல் உள்ளது, ஆங்கில ஆர் எழுத்து போல் உள்ளது என பல குற்றசாட்டுகள் கிளம்பினாலும் எப்படியும் அந்த குறியீட்டை நாம் உபயோகப்படுத்தி தான் ஆகனும்.


தற்போது அந்த குறியீட்டை எப்படி பயன்படுத்துவது? தற்பொழது அதை நம் கீ-போர்ட் மூலம் பயன்படுத்த முடியாது. அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். அந்த குறையை போக்கும் வகையில் மங்களூரை சேர்ந்த Foradian Technologies என்ற நிறுவனம் Font மூலமாக அதை பயன்படுத்த ஏற்பாடு செய்து உள்ளார்கள். அதற்கு செய்ய வேண்டியது எல்லாம் - இந்த தளத்தில் சென்று Font யை தரையிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். பின் Control Panel சென்று Fonts யில் அதை Install செய்யவும்.

இந்த குறியீட்டை உபயோகப்படுத்த Word ல் சென்று Rupee Font யை தேர்ந்து எடுத்து TAB மேல் இருக்கும் கீ யை ( ` or ~ Key) அழுத்தினால் இந்த ( ` ) குறீயிடு நமக்கு கிடைக்கும்.

இந்த குறியீடு யூனிகோடு ல் சேர்க்கும் வரைக்கும் இதை பரவலாக பயன் படுத்த முடியாது என்பது தான் தற்போதைக்கு இதில் இருக்கும் குறை.


*******


சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட எபிக் பவுரசர் சில விசயங்களில் பட்டையை கிளப்புகிறது. நெருப்பு நரியின் பயன்பாடுகளை இந்தியப்படுத்தி உள்ளனர்.

இதில் கவர கூடிய ஒரு சிறப்பு அம்சமாக பிரைவேட் ஃபரவ்சிங் இருக்கிறது. அதை ஆக்டிவ் செய்தால் எந்த ஒரு தகவலையும் சேமித்து வைத்துக் கொள்ளாது. எனக்கு பிடித்த அம்சங்கள் இந்த பவரசரில் இருந்தப்படியே பல செய்தி நிறுவனங்களில் தலைப்பு செய்திகளை படித்துக் கொள்ளலாம். அதே போல் இந்திய மொழிகளில் சுலபமாக தட்டச்சு செய்யும் வசதியும் அதை அப்படியே காப்பி செய்து கொள்ளவும் முடிகிறது. இதில் இருக்கும் ஸ்கீன்ஸ் படு கலக்கல். மனிதர்கள், விலங்குங்கள், கலாசாரம், இசை என பல விதமான தலைப்புகளில் பல தீம்ஸ் கொடுத்து உள்ளார்கள். தீவிர சினிமா ரசிகர்களுக்கு சினிமா சம்பந்தப்பட்ட தீம்ஸ் ம் அரசியல் தொண்டர்களையும் கவரும் வண்ணம் அவர்கள் சார்ந்த கட்சிகளை பற்றிய தீம்ஸ் ம் உள்ளது. நம் தமிழ்நாட்டை பற்றியும் பல விதமான தீம்ஸ் கள் உள்ளனர். இந்த தீம்ஸ் களில் விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இளையராஜா போன்றவர்கள் விடுபட்ட போனது சற்றே நெருடல் எனக்கு.இன்னும் பல பல ஆப்ஷன்ங்கள் உள்ளனர். ஒவ்வொன்றையும் முயற்சி பாருங்கள். நம்ம தீம் வழக்கம் போல் புலி தான் :)

இந்த உலாவியை தரையிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.

பழகி பாருங்க, பிடிச்சா வச்சுங்கோங்க, இல்லனா தூக்கிடுங்க :)

Friday, June 11, 2010

என்னமோ போ !

நீ எப்பொழுதுமே
கொஞ்சி கொஞ்சி
தான் பேசுவாய்யோ?
அல்லது நீ
பேசுவதே எனக்கு
கொஞ்சவது போல்
இருக்கிறதா?

*******

இன்செண்ட் காபியை போல்
இன்செண்ட் சிரிப்பும்
இன்செண்ட் அழுகையையும்
காதலியிடமும் / மனைவியிடமும்
மட்டுமே சாத்தியம்.

*******

உன்னுடன் கதைக்க போகும்
சில நிமிடங்களுக்காக
மொழியின் உட்கூறு வரை
சென்று வார்த்தைகளை
யோசித்து சேமித்து
வைக்கின்றேன் - ஆனால்
உன்னுடன் கதைக்க தொடங்கிய
சில நொடித் துளிகளிலே
மொழிகள் மறந்து - மெளனமே
மொழியாக மாறும்
மர்மம் என்னவோ?

*******

Friday, March 05, 2010

மட்டையடி உற்சவம் - நாகை

பொங்கல் அன்று நாகை ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் கோவில் சென்ற போது நாளை மாலை மட்டையடி உற்சவம் உள்ளது தவறாமல் வந்து விடுங்கள் என்று கூற, ஏதோ ஒரு பதிவில் இதை பற்றி படித்தும், இது ஸ்ரீரங்கத்தில் மட்டும் தான் நடைபெறும் என்று நினைத்துக் கொண்டு இருந்ததும் ஞாபகத்தில் வந்தது. வீட்டில் இதை பற்றி கேட்கும் போது இவ்வளவு நாளாக இங்கு இருக்கிறாய், இது கூடவா தெரியாது என்று நம் அறியாமையை பதம் பார்த்த காரணத்தால் அதன் புராண கதையை கேட்க முடியாமல் போயிற்று. சரி எப்படியும் நாளை மாலை இந்த உற்சவத்தை தவறாமல் கண்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

இதை பற்றிய புராணக் கதை மிக தெளிவாக அறியாத காரணத்தால் எனக்கு தெரிந்தவற்றை மட்டும் இங்கு. துலக்க நாச்சியார் காண நம்பெருமாள் சென்ற காரணத்தால் கோவம் கொண்டு தாயார் மீண்டும் வீட்டின் உள்ளே அனுமதிக்க மறுப்பதே இந்த மட்டையடி உற்சவத்தின் சாரம்சம். வாழை மட்டை கொண்டு அடிக்கப்படுகிறது. அழ்வார் வந்து சாமாதனம் செய்வதாகவும் தெரிகிறது.

மாலை நான் சிறிது தாமாதமாக சென்ற காரணத்தால் முழுமையாக காண முடியவில்லை. படங்களும் சரியாக அமையவில்லை. சலனப்படம் சிறிதே எடுக்க முடிந்தது.

நம்பெருமாள் துலக்க நாச்சியாரை காண செல்லும் புகைப்படம்


கோவிலுக்குள் செல்ல முயலும் புகைப்படம்


மட்டையடி கொடுத்து வாயில் மூடப்படும் புகைப்படம்


தாயாரும், நம்பெருமாள் இணைந்து காட்சி கொடுக்கும் புகைப்படம்


மேலே உள்ள படத்தில் மட்டையடி உற்சவத்தை பற்றிய புராண கதையை கோவில் பட்டாச்சாரியார்கள் விளக்கும் காட்சியையும் காணலாம்.

சலனப்படம்



புராணங்கள் எப்படி இருந்தாலும், இந்த உற்சவத்தை கோவில் அங்கத்தினர்கள் நடத்திய பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது, அத்தனை அழகு. ஒரு ஒழுங்குடன், மிகவும் நேர்த்தியாக அமைந்தது இருந்தது. திருநாகை அழகியாருக்கு நடந்த இந்த உற்சவம் ஒரு அழகியல் நிகழ்வு என்பதால் தான் இந்த பதிவு.

ஸ்ரீரங்க மட்டையடி உற்சவத்தை பற்றி மாதவிபந்தலில் வந்த பதிவு.

Saturday, February 27, 2010

சிதறல்கள்

இந்த வருட ரயில்வே பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு பல திட்டங்கள் உள்ளதால் சிறந்த பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. திட்டங்கள் எல்லாம் சரி தான் ஆனால் அதை செயல்படுத்துவதில் தான் வேகத்தை காணாம். இந்த வருடம் மார்ச் மாதத்திற்குள் போன பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்ட புதிய ரயில், விரிவாக்கம் போன்றவை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்கள். இதற்கு மட்டும் இவ்வளவு கால தாமதம். ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் வரி மட்டும் உடனடியாக அமல்படுத்தப்பட்டது. என்னங்கடா நியாயம் இது.

*******

போன வருடம் எங்கள் ஊருக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு எர்ணாக்குளம் - திருச்சி விரைவு வண்டியை நாகூர் வரை நீட்டித்து இருந்தார்கள். இன்னும் வந்த பாடு இல்லை. மார்ச் இறுதி வரை பொறுத்து இருப்போம். இந்த வருடம் நாகூர் - காரைக்கால் ரெயில்வே திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் திட்டம் நிறைவேற இறைவனை பிராத்திப்பதை தவிர வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை. கூடிய மட்டும் சென்னைக்கு விரைந்து ரயிலை விட்டால் இந்த பகுதிக்கு வந்து போகும் பலரும் உங்களை வாழ்த்துவார்கள். கொஞ்சம் பாருங்கடா கண்ணா!

*******

போன வருடம் தனியார் வசமிடம் ரெயில்வே க்கு சொந்தமான இடங்களை லீஸ் க்கு விடுவதாக அறிவித்து இருந்தார்கள். இந்த வருடம் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்கிறார்கள். அதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் உண்டா? அப்படி இல்லை என்றால் போன வருடம் அறிவித்தப்படி லீஸ் க்கு விடப்பட்டதா? இந்த விபரங்களை எங்கு தெரிந்து கொள்வது. இணையத்தில் நான் தேடிய வரையில் எனக்கு ஏதும் கிட்ட வில்லை. விபரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

*******

இந்திய பட்ஜெட் டை பற்றி நேற்று நண்பர்களுடன் கலந்துரையாடும் போதும், பட்ஜெட் எல்லாம் எங்க நாட்டில் நல்லா தான் போடுவாங்க, அதில் 50 % ஆச்சும் குறித்த காலத்தில் நிறைவேற்றினால் எங்கள் நாட்டின் வளர்ச்சி நன்றாக இருக்கும், ஆனால் அது தான் நடப்பது இல்லை என்று சொன்னேன். நண்பர்கள் பலர், நீங்கள் எவ்வளவோ பரவாயில்லை திடமான அரசு என்று ஒன்று இருந்து, திட்டங்கள் போட்டு அதை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதை பற்றி கவலைப்பட்டு கொண்டு இருக்கின்றீர்கள். எங்கள் நிலைமை எல்லாம் படு மோசம் என்று சொன்னார்கள். சொன்னவர்கள் - பாகிஸ்தான், கென்யா, ஜிம்ப்பாவே. உண்மை !!! இக்கரைக்கு அக்கரை பச்சை!

*******

நேற்று மாலை வண்டியில் வரும் போது விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் ஒடிக் கொண்டு இருந்தது. ரூவாண்டன் நண்பன், இந்த பாடலுக்கு இசை ராமன் தானே என்று கேட்க, இல்லை எனக் கூறினேன். இல்லை இல்லை. இது அவன் இசை போல் தான் உள்ளது. A... R... R..A...M...A...N என்று உச்சரிக்க அப்பொழுது தான் எனக்கு புரிந்தது அவன் நம் ரஹ்மானை சொல்கின்றான் என்று. ரஹ்மானே தான் உனக்கு எப்படி தெரியும் என்றால் ஆஸ்கர், கிராமி அவார்ட்ஸ் வாங்கி இருக்கான், இவனை தெரியாதா எனக் கேட்க அப்பொழுது தான் அந்த விருதுகளுக்கு எந்த அளவு உலக அளவில் வீச்சு உள்ளது என்பதை அறிய முடிந்தது. பாடிக் கொண்டு இருந்த பாடல் - அன்பில் அவன். இந்த படத்தின் பாடல்களை காப்பி செய்து வாங்கி சென்றான். மற்ற படங்களை சி.டி. யில் போட்டு கேட்டு உள்ளான். (அவனை பொருத்தவரை ஆல்பம்) ஹும்ம்ம் Once again HATS OFF RAHMAN. சில பாடலகள் மட்டும் Close to Heart என்று சொல்ல முடியும், அது போல் இந்த படத்தில் வரும் மன்னிப்பாயா, அன்பில் அவன் இரண்டும் அந்த வகையில் உள்ளது.

*******

ரசித்தவை:

வா ங் கி க் கொ ள் வே ன்

by நெல்லை கண்ணன்

இருக்கின்ற விருதெல்லாம் எனக்கே தாரும்
எனை விட்டால் இதற்கெல்லாம் யார் தான் உள்ளார்
படுப்பதற்கு விருது எழுந்து நின்று
பார்ப்பதற்கு ஒரு விருது நாட்டை நன்கு
கெடுப்பதற்கு விருது மேலும் என்னவெல்லாம்
கிளர்ச்சி தரும் விருதுகளோ அவற்றையெல்லாம்
தடுப்பதற்கு யார் உள்ளார் யாரும் இல்லை
தந்து கொண்டே இரும் நானும் வாங்கிக் கொள்வேன்


Wednesday, June 10, 2009

அது ஏனோ?


எதற்கும் சஞ்சலப்படாத
மனசு கொட்டும் மழைக்கும்
ஜில்லிடும் காற்றுக்கும்
சூடான தேநீர், பஜ்ஜியுடன்
பழங்கதைகளை கதைக்க
நண்பனையும் தேடுவது ஏனோ?

Monday, May 11, 2009

கதம்பம்

தேர்தல் எங்கள் நாட்டில் தேசிய திருவிழா சொல்லிட்டு இங்க வந்தா மீடியாவில் மட்டும் தான் திருவிழா வா இருக்கு. தேர்தல் கமிஷன் கெடுபிடியால் தேர்தலுக்கான குறைந்தப்பட்ச அறிகுறி கூட இல்லாம இருக்கு ஊர். சுவர் விளம்பரம் இல்லை, பிட் நோட்டிஸ் இல்லை, தோரணம் இல்லை, கொடிகள் இல்லை, கட் அவுட் இல்லை, போஸ்டர் இல்லை, பேனர் இல்லை, டிஜிட்டல் பேனர் இல்லை. கிராமங்களில் மட்டும் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள். சென்னையில் கூட கொடி தோரணம் என்று களை கட்டுது. எங்க ஊர் தான் இப்படி(நான் பார்த்த வரையில்), ரொம்ப மோசம் சாமி, ஒரு விறுவிறுப்பே இல்லாம போச்சு. இரு முறை எம்.பி யாக இருந்த ஒரே ஊர்காரர்கள் ஆன செல்வராஜ் (கம்யூ) மற்றும் விஜயன் (திமுக) இருவரும் மல்லுக்கட்டுகிறார்கள்.

*******

தேர்தல் லோடு கோவில் திருவிழாவும் இங்கு. வழக்கம் போல் சிறப்பான முறையில் அமைந்தது. செடில் உற்சவத்திற்கு மக்கள் வழக்கம் போல் வரிசையில் வர மாட்டேன் என்று முண்டியடித்து அவர்களிடம் கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியது. நாம் வரிசையில் நின்றால் தான் ஒரு ஜீவன் இருப்பதே தெரியாத மாதிரி அல்லது ஒரு பேக்கு நிக்குறான் என்பது போல் நமக்கு முன்னால் போவார்கள், வரிசை ஒழுங்குப்படுத்தும் போதும் அப்படி தான் நினைப்பார்கள் போல். வரிசையில் நின்று வருவது என்பது ஏதோ ஒரு பாவச்செயல் என்பது போன்று நம் மக்கள் மனதில் பதிய காரணம் என்னவென்று தான் தெரியல. நாம் செய்வது தவறு என்பதே புரியவே மாட்டேங்குது.

*******

எந்த வங்கியின் அட்டையை வைத்தும் அனைத்து(எந்த) வங்கியின் ஏ.டி.எம். சேவையையும் பயன்படுத்தலாம் என்று சொன்னாலும் சொன்னார்கள். எல்லா எ.டி.எம். லையும் கூட்டம் அள்ளுது. ஆனா பணம் தான் வர மாட்டேங்குது. பாதி ஏ.டி.எம். முடி உள்ளது. மிஞ்சம் போதில் பணம் இல்லை இல்லை என்று துப்புது. இன்னும் சிலது பணம் எடுத்துக்கோ னு காசை பிடிச்சுக்கிட்டு Error Message குடுக்குது. சில நேரங்களில் பணம் மறுபடியும் நம் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. சில நேரங்களில் வங்கி கிளையில் புகார் பண்ணி தான் பெற வேண்டியது இருக்கு. மக்களுக்கு பயன் அளிக்கும் வழியில் ஒரு சேவையை அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது. அதை உரிய முறையில் அமல்படுத்தி இருக்க வேண்டும். உடனடியாக அமல்படுத்திய அதனால் இந்த பிரச்சனை என்று காரணம் கூற முடியாது. ஒரு வருடத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட திட்டம் இது. ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமல்ப்படுத்தப்பட்டதால் இப்படி நடக்குதோ என்னவோ.

*******

தொலைக்காட்சியில் விரும்பி பார்ப்பது விளம்பரங்கள் தான். கவர்ந்த விளம்பரங்கள் பல உள்ளன. அதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவும் போட்டும் இருக்கேன். இந்த தடவையும் சில விளம்பரங்கள் அட போட வைத்தது. இன்னும் சில அட சே னு சொல்ல வைத்தது. அதில் ஒன்று ஹமாம் விளம்பரம். ஒரு தாய் தன் குழந்தையிடன் போய் சோப் வாங்கிட்டு வா னு சொல்லிட்டு குழந்தை போன பிறகு அய்யோ எந்த சோப் னு சொல்லலையே, பரு வந்துடும், அழகு போயிடும், தன்னம்பிக்கையே போயிடும் னு பதறி வெளியே எல்லாம் ஒடி வீட்டுக்கு வந்து பாத்தா அந்த குழந்தை ஹமாம் சோப் தான் வாங்கி வந்து இருப்பது பார்த்து அமைதி அடைவது போன்று அமைந்த விளம்பரம். இதை விட கேவலமாக யோசிக்க முடியாது என்ற வகையில் அந்த விளம்பரம் அமைந்து உள்ளது என்பது என் கருத்து. அப்படியே வேற சோப் வாங்கி வந்தா அதை உபயோகப்படுத்தாமல் மாற்றி கொள்ள மாட்டார்களா? என்ன லாஜிக் ல அந்த விளம்பரம் வந்துச்சோ. அவர்களே வெளிச்சம். இது போன்ற சொதப்பல் விளம்பரங்கள் னு ஒரு போஸ்டே போடலாம் போல.

*******

Tuesday, March 17, 2009

கதம்பம்

நடிகர் ஒமக்குச்சி நரசிம்மன் போன வாரத்தில் மரணம் அடைந்தார். அவருடைய குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபவங்கள். சூரியன் படத்தில் கவுண்டருடன் அவர் வரும் பகுதி மிக அருமையாக அமைந்து இருக்கும். அதிலும் நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா என்ற டயலாக் செம பேமஸ். அதே படத்தில் ஜாங்க்கு ஜக்கு னு(தளபதி மியூசிக்) கவுண்டர் முன்னாடி ஒரு ஸ்டெப் போடுவார். அவரை பெரும்பாலும் பல படங்களில் நோயாளியாக தான் காட்டி வந்தார்கள். முதல்வன், ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் போன்ற படங்களில் அவரின் காமெடி குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது. அவர் தலைமுடியை கோதும் ஸ்டைலே தனி தான். அவர் ஆன்மா சாந்தியடைய பிராத்தனைகள்.

*******

தேர்தல் வந்தா தான் எல்லா வேலையும் நடந்து முடியும் போல. நாகையில் அகல ரயில் பாதை போடுவதற்காக நாகையில் இருந்து அனைத்து ரயில்களையும் நிறுத்தி 4, 5 வருடங்கள் ஆச்சு. பிறகு திருவாரூரில் இருந்து பணிகள் முடிவடைந்து ரயில் விட துவங்கியும் பல வருடங்கள் ஆச்சு. ஆனால் நாகை டூ திருவாரூர் க்கு அகல ரயில் பாதை போட்டாங்க போட்டாங்க அம்மாம் வருசமா போட்டாங்க. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஒரு வழியா ரயில் நிலையத்தை திறந்துட்டாங்க. (பிப்ரவரி 28). வேளாங்கண்ணி ரயில் பாதை எந்த தேர்தல் நேரத்தில் முடியுமோ? ஏ.கே.எஸ். இதை ஒரு பெரிய விசயமா தேர்தல் பிரசாரத்தில் பேசுவார்.அதை விட்டால் சொல்லுற அளவுக்கு அண்ணன் என்ன செய்து இருக்கார் என்று அவர் சொன்னால் தான் தெரியும், சேது சமுத்திரம் திட்டத்தை சொல்லுவீங்களாண்ணா?அண்ணன் இந்த தடவை தேறிடுவீங்களா? கஷ்டம் தான்.
*******

இந்த ஐ.சி.சி. பிரச்சனையில் சூடான் தலைநகரத்திலே சில நாட்கள் தங்க வேண்டியதாய் போச்சு. அந்த நேரத்தில் இணையமும் இல்லாத காரணத்தால் மறுபடியும் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பிச்சாச்சு. கவலைப்படாதீங்க விமர்சனம் எல்லாம் எழுத போற இல்லை. சும்மா போற போக்கில் ஒரு பார்வை அம்புட்டு தான்.

நான் கடவுள் (2009) - பாலா, கலைஞண்டா நீ, நீ தான் கலைஞன். இப்படி ஒரு படம் எடுக்க தமிழில் எந்த இயக்குனருக்கு திறமை இருக்கு அல்லது தைரியம் இருக்கு? கதை, அகோரி, அந்த கன்றாவி எல்லாத்தையும் விடுங்க. கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுப்பு ஒன்னு போதும்ய்யா. அவர்களை எல்லாம் தேர்ந்து எடுத்ததே பெரிய வேலை, அதில் அவர்கள் அவர்களிடம் வேலை வாங்கியது அதை விட சிறப்பு. இதற்கு எந்த அளவுக்கு ஹோம் வொர்க் பண்ணி இருக்கனும் என்பதை நினைக்குமே போதே பாலா மேல் மரியாதை தானாக வருகிறது. Hats off.

வெண்ணிலா கபடி குழு (2009) - இயல்பான படம். வசனங்கள் அருமை. அனைவரும் பொருந்தி நடித்து உள்ளார்கள். கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் வருத்தம். வேற மாதிரி முடித்து இருக்கலாம். பஸ்சை சைக்கிளால் முந்திய பிறகு ஒட்டுனர் பேசும் வசனம் சூப்பர். போற போக்குல மாநில போட்டிகளில் விளையாட விடுவது மட்டும் கொஞ்சம் ஒவர்.

Freedomland (2006) - Samuel Jackson நடிச்ச படம். நல்ல த்ரில்லர். வெள்ளை இனத்தை சேர்ந்த ஒரு குழந்தை காருடன் சேர்ந்து கடத்தப்பட்டதாக ஒரு பெண் புகார் கூற அந்த குழந்தையை தேடும் பொருட்டு கருப்பு இனத்தவர் வாழும் ஒரு ஏரியாவை முழுக்க தடை செய்து தேடுதல் வேட்டை நடக்குகிறது. ஆனால் அந்த பெண் பொய் கூறுகிறாள், அவள் தான் அந்த குழந்தையை ஏதோ செய்து விட்டாள் என்பது போல் காட்சிகளை நகர்த்தி அதன் நடுவில் Racism தொட்டும் படம் நகர்கிறது. எதிர்பாராத முடிவு. Jackson நடிப்பு அருமை. நேரம் கிடைத்தால் பார்க்கலாம்.

Nip/Tuck (2003) - அமெரிக்க டிவியில் வெளியான ஒரு மருத்துவ டிராமா. மொத்தம் 5 சிடி. (1 சிஸன் - 13 எபிசோட்) ஒவ்வொரு எபிசோட்டும் ஒரு தனி கதை. ஆனால் கதைத் தளம் ஒன்று தான். பிளாஸ்டிக் சர்ஜன்னா இரு மருத்துவர்கள் பற்றிய கதை. இதில் செக்ஸ் கொஞ்சம் அதிகம். ஆனால் நல்ல விறுவிறுப்பான தொடர். இது வரை 5 சிஸன் வந்து உள்ளது. 2011 வரை சிஸன் வரும். பல விருதுகளை இந்த தொடர் பெற்று உள்ளது. நம்மூரில் மெகா தொடர் எடுக்கும் புண்ணியவான்கள் இந்த தொடரை எல்லாம் பார்த்தால் நம் தொடர்களுக்கு விடிவு காலம் கிட்டினாலும் கிட்டும்.

Fahrenheit 9/11 (2004) - செப்டம்பர் 11 தொடர்ந்து ஆப்கான், ஈராக் போர் பற்றியும் அமெரிக்க அதிபர் புஷ் பற்றியும் ஒரு செமையான அலசல் இந்த படம். Michael Moore இயக்கி இருக்கும் இந்த டாக்குமெண்டரி படம் உண்மையான ஜனநாயக நாட்டின் ஒரு குடிமகனுக்கு இருக்கும் உரிமையை(சுகந்திரத்தை) வெளிக்காட்டுகிறது. படத்தில் உள்ள விசயங்கள் ஒரளவு அனைவருக்கும் தெரிந்த விசயம் தான் அதை சில ஆதாரங்களுடன் அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் அளித்து உள்ளார். அந்த படத்தை பார்த்து புஷ்யை பற்றி யோசிக்க விடாமல், நம்மால் நம் நாட்டில் இது போல் ஒரு படம் எடுத்த முடியுமா என்ற கேள்வி தான் மேலோங்கி இருந்தது. கருத்து கணிப்பு & நீதிமன்ற தீர்ப்புக்கே எரிப்பு நடவடிக்கையில் இறங்கும் கழக கண்மணிகள் இருக்கும் நாட்டில் அடக்கி வாசிப்பது தான் தேகத்துக்கு நல்லதுனு பட்டது.
*******

போன பதிவை பாத்துட்டு அவங்க கவிதையை(???) என்னோடு பதிவில் போட்டாலே ஆச்சுனு வந்த தொடர் மிரட்டலை தொடர்ந்து இந்த கவிதை இங்கு பதிவிடப்படுகிறது.

லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும்
புன்னகையுடன் ரசிப்பது நிலவை தான்
சிரித்து பேச நண்பர்கள் பலர் இருந்தாலும்
மனதில் எண்ணி மகிழ்வது உனை தான்!

இதை எனக்கு அனுப்பிவுடன் நான் கொடுத்த கமெண்ட்,

பின்னி பெடல் எடுத்துட்ட... ஒத்துக்குறேன்.. நீ ஒரு கேடி.. சீ லேடி வாலி என்பதை. (கவிதை எழுத தெரியுமானு கேட்டது ஒரு குத்தமா? )
*******

Wednesday, January 14, 2009

பொங்கலோ பொங்கல் 2009

















Sunday, December 28, 2008

மும்பை தாக்குதலை தொடர்ந்து...

அவந்திகாவின் தொடர் அழைப்பை ஏற்று இந்த பதிவு. ஏற்கனவே இரண்டு மூன்று பதிவுகளில் இதை பற்றி பேசிய காரணத்தினால் இந்த விசயத்தை பற்றி மேற்க்கொண்டு ஏதும் எழுத வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். இருந்த போதிலும் ஒரு இளைய உள்ளத்திற்கு தேசத்தின் மீது இருக்கும் மதிப்பும் மரியாதையும் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் என் கருத்துக்களை பதிவு செய்கிறேன். Better Late than Never என்ற அளவுகோளின் படி.

அவந்திகா கொடுத்த தலைப்பை புலம்பலாக மாற்றிய பெருமை முத்துலெட்சுமியை சாரும். அதை தொடர்ந்து எல்லாமே புலம்பல் பதிவாக அமைந்து விட்டது(நான் பார்த்த வரை)ஏதும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் புலம்பலாக மாறி இருக்கலாம் என்று எண்ணுகிறேன். அவந்திகா தன்னுடைய பதிவில் regarding the incompetency and selfishness of our politicians என்ற வாதத்தை பதிவு செய்து உள்ளார். இதில் சுயநலம் என்ற பதத்திற்கு கண்டிப்பாக மாற்றுக் கருத்து கிடையாது. ஒட்டு பொறுக்கி அரசியல் நடத்தும் நம் அரசியல்வாதிகளிடம் சுயநலம் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. திறமையின்மை என்ற வாதத்தோடு தான் ஒத்து போகவில்லை. சிவராஜ் பாட்டில், ப்ரதீபா பாட்டில் போன்ற சில அல்லகைகளை தவிர்த்து பார்த்தால் மிக சிறந்த அதிகாரிகள் துணையுடன் கூடிய அறிவுசார்ந்த அரசியல் தலைவர்கள் அநேனகம் நம் நாட்டில். ஆனால் அரசாங்கத்தை வழி நடத்தி செல்ல வேண்டியதை தவிர்த்து மற்ற எல்லா வேலைகளையும் மிக சரியாக செய்து கொண்டு இருப்பது தான் நம்முடைய துர்பாக்கியம்.

மும்பை தாக்குதலை தொடர்ந்து நம் அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகளை கண்டிப்பாக பாராட்டி ஆக வேண்டும். குறிப்பாக வெளியுறத்துறை, இந்த பிரச்சனையை மிக அழகாகவும் அழுத்தமாகவும் உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற விதம் மிக நேர்த்தி. பாகிஸ்தானை கை காட்டியதோடு நம் வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக மற்ற நாடுகளை குரல் கொடுக்க வைத்தது. ஐ.நா. சபையிலும் சரியான வாதங்களை எடுத்து வைத்ததோடு இல்லாமல் பகிரங்கமாகவே பாக் மீது குற்றம் சாட்டியது. அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக அந்நாட்டின் ஒரு அமைப்பை எந்த ஒரு கேள்விகளும் இன்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் தடை செய்ய வைத்தது. இதை எல்லாம் கண்டு உண்மையாகவே பாகிஸ்தான் பயந்து தான் போனது, என்ன செய்வது என்று முழிக்க வேண்டிய கட்டாயம் பாக். அரசிற்கு. எங்களை ஒரேடியாக குற்றவாளி கூண்டில் ஏற்றாதீர்கள் இது நியாயம் இல்லை. இந்த பிரச்சனையை ஐ.நா. தலையீட்டு விசாரிக்க வேண்டும் என்ற பாக். கதறலை ஐ.நா. கண்டுக் கொள்ளவில்லை. எத்தனை முறை கேள்வி எழுப்பியும் இதில் தலையீட எண்ணம் இல்லை என்ற ஒற்ற பதில் தான் கிடைத்தது.

உலக அளவில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்க்கொண்ட அதே நேரத்தில் எல்லையில் தன் படைகளை குவித்தும் பாக். வான் வெளியில் தாக்குதல் விமானங்களை பறக்க விட்டும் அந்த நாட்டிற்கு மிக கடுமையான எச்சரிக்கை செய்தியை அனுப்பியும் உள்ளது. போர் தொடுக்காமல் ஏன் இந்த பம்மாத்து வேலை என்ற கேள்வி எழுலாம். இந்த பம்மாத்து வேலை தான் மிக சிறந்த ராஜத்தந்திரம் என்பது என் எண்ணம். இதற்கு தகுந்த பலன் தான் சர்தாரியின் தற்சமய பேச்சுகள் எல்லாம். இறங்கி வர வேண்டிய கால கட்டாயம் பாக்.னுக்கு பத்ரியின் இந்த பதிவை படியுங்கள், சில விபரங்கள் புரியலாம். இது போன்ற செயல்களை அமெரிக்கா ரசிக்கவில்லை என்பது வேறு விசயம். இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில் பாக். ஆப்கானில் இருந்து படைகளை வாபஸ் பெற்று இந்திய எல்லையில் குவிக்கும் காரணத்தால் நேட்டோ படைகளுக்கு பெறும் இழப்பு ஏற்படும் என்ற பயத்தின் வெளிப்பாடு தான் அது.

இந்தியா இத்தோடு நிறுத்தி விட கூடாது. இந்தியாவில் நடந்த தாக்குதலுக்கு பாக் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ யின் பங்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு போதிய ஆதாரங்களை உலக அரங்கில் எடுத்து வைக்க வேண்டும். மீண்டும் இது போன்ற தாக்குதல் ஏதும் இந்தியா மீது நடந்தால் குறிப்பிட்ட இலக்குகளை குறி வைத்து நாம் போர் கொடுக்கலாம். அதற்கு உலக நாடுகளின் ஆதரவும் நமக்கு இருக்கும்.ஏற்கனவே பாக் னுக்கு உள்நாட்டில் பல உள்நாட்டு பிரச்சனைகள், பல குண்டுவெடிப்புகள் இதில் இது போன்ற உலக நாடுகளின் கண்டிப்பும் தொடர்ந்தால் இரு நாடுகளுக்குமே விமோசனம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதில் குறிப்பிட்ட சொல்ல வேண்டிய மற்றொரு விசயம் இஸ்ரேலை சிறிது தூரத்திலே நிறுத்தி வைத்தது. இஸ்ரேல் இந்த விவகாரத்தில் எல்லா விதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது என்று தெரிவித்தும் நாம் மறுத்து விட்டோம். இதுவும் சரியான நடவடிக்கை தான். இஸ்ரேலை ஒரு குறிப்பிட்ட அளவோடு நிறுத்தி வைப்பது தான் நல்லது. அவர்கள் என்றுமே முழுக்க நம்பக் கூடிய நண்பர்கள் கிடையாது.

உலக அளவில் சரியான நடவடிக்கைகளை எடுத்த இந்தியா உள்துறை அளவில் இன்னும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இன்னும் தீவிரமான மற்றும் அதிரடி நடவடிக்கைகள் தேவை. இது போன்ற பயங்கரவாதம் செயல்களுக்கு கண்டிப்பாக உள்நாட்டு மக்களின் உதவி இல்லாமல் ஏதுவுமே செய்ய முடியாது. அந்த உதவிகளை தடுக்க என்ன என்ன நடவடிக்கைகளை தேவையோ அத்தனையையும் எந்த ஒரு மதக் குறிக்கீடும் இல்லாமல் உடனே செயல்படுத்த வேண்டும். இது போன்று அசம்பாவிதங்கள் நடக்க நேர்ந்தால் அதை சந்திக்கும் அளவுக்கு நம் காவலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் உயர்ந்த தரத்தில், நவீன தொழில்நுட்பத்தோடு தருவித்து தர வேண்டும். தேச நலனை ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டால் மற்ற விவகாரங்களுக்கு செவி அளிக்க தேவை இருக்காது. அதை விட்டு ஒட்டு போயிடும், கூட்டணி போயிடும், ஆட்சி போயிடும் னு பாத்த பழைய குருடி கதவை திருடி கதை தான்.

நம் மக்களும் நிறைய மாற வேண்டியது உள்ளது. அதை பட்டியலிட நேரமில்லை. சுருங்க கூறனும் என்றால் தனி மனித ஒழுக்கம், எவன் செத்தா என்ன என் பொழுப்பு நடந்தால் சரி என்ற எண்ணத்தை தவிர்த்து தேசம் ன்னா என்ன? ஒரு குடிமகனின் கடமை என்ன? தேச நலன் என்றால் என்ன? போன்றவற்றை நினைவில் கொண்டு நினைவில் இல்லா விட்டால் மீண்டும் பழைய சமூக அறிவியல் புத்தகத்தை புரட்டி பாத்தோ கூகிள் ஆண்டவரை துணைக்கு அழைத்தோ தெரிந்துக் கொள்ளவது நலம். அவன் செய்யல, இவன் செய்யல எனக்கு மட்டும் தான் இது எல்லாம் பொருந்துமா போன்ற விதாண்டவாத கேள்விகளை தவிர்த்து நாம் நம் கடமையை ஒழுங்கா செய்வோம், அடுத்தவன் தானா செய்வான் அல்லது அவனையும் செய்ய வைக்க என்ன வழி என்பதை பற்றி யோசிக்கலாம், ஆனா முதலில் நாம் தொடங்க வேண்டும்.

இந்த தொடரை கைப்புள்ள தொடர்ந்தால் மகிழ்வேன்.

Thursday, December 04, 2008

Gender Based Violence (டைரிக் குறிப்பு - 3)

சில நாட்களுக்கு முன்பு அலுவலக வேலையாக அலைந்து கொண்டு இருக்கும் போது Gender Affairs பிரிவில் இருக்கும் பாகிஸ்தான் நண்பரை எதிர்கொள்ள, என்ன சிவா நீ வெள்ளை ரிப்பன் இல்லாமல் இருக்க எனக் கேட்க, என்ன விசயம் னு கேட்க, கையில் ஓரு பேப்பரை திணிக்க அதில் உள்ள மேட்டரு கீழே.

16 days of activism against Gender Based Violence
This year marks the 18th annual 16 Days of Activism Against Gender
based Violence Campaign (Campaign originated from the first Women's Global Leadership Institute sponsored by the Center for Women's Global Leadership in 1991). The Campaign links issues concerning violence against women, gender and sexual based violence and human rights and emphasizes that all forms of violense, whether perpetrated in the public or private sphere, are a violation of human rights. The dates chosen for the campaign symbolically indicate this link : November 25 markes International day Against Women (officially declared by UN in 1999) and December 10 is International Human Rights Day. The sixteen-day period also hightlights other significant dates, including December 1 (World Aids Day) and December 6 (the anniversary of the Montreal Massacre).

Wearing a white ribbon is a personal pledge to never commit, condone or remain silent about violence against woment and girls.


ஒரு சின்ன சந்தேகம், Gender Based Violence னு சொல்லிட்டு பெண்களை மட்டும் குறிப்பிட்டு உறுதிமொழி இருக்கே. ஏன் இந்த ஒரவஞ்சனை நான் பொங்க, நீ கேட்பது நியாயம் தான் ஆனாலும் கேளுனு சில கதைகளை எடுத்து விட்டான். அவன் கூறிய பதிலில் எனக்கு திருப்தி இல்லை. விவாதம் முற்றியதும், வேலை அதிகம் இருப்பதால் நம் இரவு உரையாடலின் போது வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிட்டு ரிப்பனை அணிவதும் அணியாததும் உன் விருப்பம் என்று கூறி ரிப்பனையும் ஊசியையும் கொடுத்துட்டு அவன் எஸ்கேப்.

பெண் உரிமையை பற்றி பேச புதுசா ஏதும் இல்லை. ஏற்கனவே வாங்கிய MCP பட்டம் போதும். ஆண் பெண் பேதம் இல்லை அனைவரும் சமம் என போர்க்கொடி தூக்கும் பல பெண்கள், பெண் என்பதால் மட்டும் கிடைக்கும் ஒரு சலுகைகளை பெற்றுக் கொள்ள தான் முயல்கிறார்கள். அது தவறா இல்லையா என்ற விவாதம் தேவையில்லை. அவர் அவர்கள் எண்ணங்கள் அவரவர்களுக்கே. சொல்வதால் மட்டும் ஏதுவும் மாறிட போவது இல்லை. தானாக உணர்ந்து மனம் மாற்றம் அடைவது தான் பயன் அளிக்கும்.

பெண்களுக்கு அநீதி ஏற்பட்டு விட்ட கூடாது என்று இயற்றப்பட்ட சட்டங்களை தங்களின் சுயலாபங்களுக்காகவும், ஆண்களை மிரட்டுவதற்காகவும் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது என்பது என் எண்ணம். உண்மையில் அநீதியில் அல்லல் பெறும் பெண்கள் அதே நிலையில் தான் இருக்கிறார்கள். அவர்களை இந்த சட்டம் சென்று அடையவில்லை. அதை செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அதை பற்றி அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்வதும் இல்லை. இது நம் நாட்டில் மட்டும் நடப்பது இல்லை. உலகம் முழுவதும் இது தான் நிலைமை. ஏதாவது ஒரு விசயத்தை செய்யும் போது அது பெண்களுக்கு பிடிக்காமல் போனாலும், முக்கியமாக அவர்கள் ஏதாவது கேட்டு வரும் போது முடியாது அல்லது இல்லை என்று கூறினால் போதும் அவர்கள் வைக்கும் முதல் வாதமே நான் பெண் என்பதால் தான் நீ இல்லை, முடியாது என்று கூறுகின்றாய் என்று தான் பெரும்பாலும் ஆரம்பிப்பார்கள். இன்னமும் அதான் தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. (என்னளவில்)

மொத்ததில் பெண்களுக்கு பெண் உரிமை பற்றி சரியான புரிதல் இல்லை என்பது என் வாதம். பெண்களுக்கே இல்லாத போது இது வரை அவர்களை அடக்கியே பழகி வந்த ஆண்களுக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சுத்த அறிவிலித்தனமாக எனக்கு படுகிறது.

நிற்க. மேலே சொன்னவை எல்லாம் சரியாகப்பட்டாலும் நம் நாட்டின் சில இடங்களிலும், ஹத்தி, உகாண்டா, சூடான் (டார்பூர்) போன்ற இடங்களில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகளும், பாலியல் கொடுமைகளும் மிக அதிகம். அங்கே ஆண்களும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள், அதை இல்லை என்று மறுக்க முடியாது ஆனாலும் சகவீதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தான் அதிகம். ஒவ்வொரு 30 நிமிடத்தில் இந்தியாவில் ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு(பெரும்பாலும் கற்பழிப்பு) ஆளாகிறாள். சூடானில் (டார்பூர்) இன்னும் கொடுமை ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு பெண் / குழந்தை என்ற அளவில் உள்ளது. அதை எல்லாம் கணக்கில் கொண்டு நான் அந்த வெள்ளை ரிப்பனை அணிந்து என் ஆதரவையும் உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டேன்.


அதே வேளையில் கல்லூரியில் நடந்த ஒரு சம்பவமும் ஞாபகத்துக்கு வருகிறது. 2000ம் ஆண்டு என்று நினைக்கிறேன், மார்ச் 8 ஆம் அன்று கல்லூரியில் பெண்கள் தின விழா எடுக்கப்பட்டது. அதற்காக கல்லூரியில் உள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியயைகள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஆஹா நமக்கு எல்லாம் கண்கொள்ளா காட்சி தான் என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்த எங்களை ஒரு அறிக்கை கடுப்பேத்தியது. அது அந்த விழாவிற்கு பெண்களுக்கு மட்டும் தான் அனுமதி என்று. என்ன கொடுமை இது என்று அதை மீற எவ்வளவோ முயற்சி செய்து அதற்கு அவர்கள் டவுன் ஹாலில் கதவை அடைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த கருப்பு ரிப்பன் அணிந்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம்.

காலம் மாறுகிறது. காட்சியும் மாறுகிறது. பல வருடங்களுக்கு முன் வேதவாக்காக தெரிந்த பல விசயங்கள் இன்று படு அபத்தமாக தெரிகின்றது. கருப்பு கொடி இன்று வெள்ளை கொடியாக மாறி உள்ளது.

பின்குறிப்பு : Montreal Massacre பற்றி அறிய ஆர்வமாக இருந்தால் இந்த லிங்கை தொடரவும்.

Tuesday, December 02, 2008

டைரிக் குறிப்பு - 2 (இந்திய அரசியல்)

மகாராஷ்ட்ரா துணை முதல்வர் ராஜினாமா, உள்துறை அமைச்சர் ராஜினாமா, ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவியேற்பு என இந்திய அரசு பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கின்றது. இருந்த போதிலும் இந்தியா இன்னும் பல முக்கிய மற்றும் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும். முக்கியமாக தேசிய பாதுகாப்பிலும், பதில் நடவடிக்கை, உளவுத் துறை போன்ற விசயத்தில். பொறுத்து இருந்து பார்ப்போம்.

*****

இந்தியாவில் மும்பையில் நடைப்பெற்ற சம்பவத்துக்கு யாரு காரணம் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய அரசு உள்ளது. ஆனால் அதுக்குள் இங்கு மக்கள், எல்லை தாண்டிய தீவிரவாதிகள், பாக் ஆதரவு தீவிரவாதிகள் என்று ஒரு பக்கமும், முஸ்லீம் பயங்கரவாதிகள் என மறுபுறமும், இந்துத்வா வே இதை செய்து இருக்கலாம் என ஒரு பிரிவினரும் குரல் எழுப்ப தொடங்கி விட்டார்கள். அதில் நம் பதிவர்களும் அடக்கம். மக்கா இதை எவன் செய்து இருந்தாலும் எந்த மண்ணாங்கட்டி மதமாக இருந்தாலும் சரி இதுக்கு துணையாக இருந்த அத்தனை பெயரையும் பிடித்து தூக்கில் இட வேண்டும் என்பதே எங்களை போன்றோரின் எண்ணம். அதை விடுத்து இந்த பிணந்தின்னி அரசியலை தொடராதீர்கள்.
*****

இங்கு இப்படி என்றால் பாகிஸ்தானில் அரசில் இருந்து மக்கள் வரை எதற்கெடுத்தாலும் இந்தியா பாகிஸ்தானை குறை கூறுவது சரி அல்ல, ஆதாரத்தை காட்டுங்கள் என அறிக்கை விடுவதும், ஆங்காங்கே கண்டன ஆர்பாட்டம் ஊர்வலம் நடப்பதுமாக உள்ளது. ஆனால் இந்தியாவின் மீது ஏவப்படும் ப்ராக்ஸி வார்(போர்) க்கு பாகிஸ்தான் தான் பின்புலமாக திகழ்கின்றது என்பது உலக அறிந்த உண்மை. ஆப்கானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ தான் காரணம் என்று அமெரிக்காவே குற்றம் சாட்டி உள்ளது என்பதும் இங்கு குறிப்பிட்ட காண வேண்டிய விசயம். பாகிஸ்தான் என்று கூறுவதால் ஒட்டு மொத்த பாகிஸ்தானையும் குறை கூறுவதாக அர்த்தம் இல்லை. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதம் அமைப்பை தான் இந்தியா குற்றம் சாட்டுவதாக என் எண்ணம்.
*****

மும்பை பயங்கரம் முடிவுக்கு வந்த அடுத்த நாளே கராச்சியில் நடைபெற்ற கலவரத்தில் 16 நபர்கள் இறந்தும், 40 க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தும் உள்ளனர். இதில் இந்தியாவின் கை இருக்கலாம் என அங்கு உள்ள மக்கள் அச்சம் எழுப்பி உள்ளனர். இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் வாய்ப்பு உள்ளாதாகவும்,அதை முன்னிட்டு ஆப்கான் எல்லையில் இருந்து 1 லட்சம் படை வீரர்களை விலகி இந்திய எல்லையில் நிறுத்த இருப்பதாக செய்தி. இது போதாது என்று நேட்டோ படைகளுக்கு அளிக்கும் ஆதரவை விலகி கொள்ளா விட்டால் தலிபான் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. உண்மையில் பாகிஸ்தான் மிகவும் இக்கட்டான நிலைமையில் உள்ளது. ஒரே ஆறுதல் நம் புல்தடுக்கி பயில்வான் அரசு இது வரைக்கும் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் எண்ணத்திலோ பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் நுழைந்து பிடிப்பது போன்ற எந்த ஒரு எண்ணத்திலும் இல்லை என்பதே.
*****

உலகமே பற்றி எரிந்தாலும் சரி, எவன் எக்கெடு கெட்டு போனாலும் சரி நம் அரசியல் நடந்தா சரி என்று இருக்கும் நம் தமிழக அரசியல் தலைவர்கள். சில நாள் வரை இலங்கை பிரச்சனை இப்பொழுது அருந்ததி பிரச்சனை. நல்லா இருங்கடே. உங்க பொழுப்பு நல்லாவே நடக்குது.
*****

நாகை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை மிக கடுமையாக தாக்கிய நிஷா (பெயர் நல்லா இருக்கு) நாகை அதன் சுற்று வட்டாரங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை என்பதை கேட்க நல்லாவே இல்லை. திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் பகுதிகளிலும் சீர்காழி பகுதிகளிலும் சிறிய வாகனங்கள் போக முடியாத அளவுக்கு இன்னும் நிலைமை நீடிக்கிறது. ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரணம் அளிக்கப்படும் என்று ஆறுதல் அளித்து உள்ளார். எவன் ஆட்சிக்கு வந்தாலும் நிவாரணம் அளிப்பதில் தான் குறியாக இருக்கானே தவிர அடிப்படை வசதிகளை மேம்படுத்த யாரும் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனம். பணம் ஒட்டாக மாறும் வரை இதே நிலைமை தான் நீடிக்கும்.
*****

மழை இந்த கொட்டோ கொட்டு என்று கொட்டி உள்ளது. ஆனாலும் அடுத்த வருடம் வழக்கம் போல் தண்ணீருக்கு அடுத்த மாநிலங்களிடம் கை ஏந்தி கொண்டு தான் இருக்க போகிறோம். அவ்வளவு தண்ணீரும் வீணாக கடலில் கலப்பதை தடுத்து குறைந்தபட்சம் கடலோர நகரங்களில் ஆவது சில தடுப்புணைகளை உருவாக்கலாம். சிந்திப்பார்களா? சென்னையில் நிலைமை இன்னும் மோசம். ஏரி, குளங்களில் உள்ள ஆக்கரமிப்பை அகற்றியும், வடிக்காலை ஒழுங்குப்படுத்துவதையும் தவிர்த்து வேறு வழி இல்லை.
*****

குடும்ப சண்டைகளை விலக்கி, தமிழன தலைவராக நிலைநிறுத்திக் கொள்ள தொடர்ந்து எழுதும் அறிக்கைகளை, கடிதங்களை நிறுத்தி தமிழக மேம்பாட்டிற்கு ஏதாவது உபயோகமாக செய்தால் புண்ணியமாக போகும் நமக்கு எல்லாம். எதிர்கட்சியும் எல்லாத்துக்கு நொண்டி நாட்டியம் ஆடாமல் உள்கட்சியை பலப்படுத்துவது போன்ற நடவடிக்கையில் இறங்கலாம்.
*****

இந்திய குண்டுவெடிப்பை தொடர்ந்து ஐ.நா. தன் கண்டத்தை பதிவு செய்து இருந்தது. அதை தொடர்ந்து ஐ.நா.விடம் எழுப்பட்ட கேள்விக்கு தொட்டும் தொடாமலும் தான் பதில் அளித்து உள்ளது. அதன் விபரம்

Question: In view of this weekend’s events in India, in which there is tension between India and Pakistan which has arisen, is the Secretary-General going to intervene at some point in time to caution, I mean some sort of, I mean talks between India and Pakistan, you know, to lessen the tension that has arisen over there?

Deputy Spokesperson: The Secretary-General, as you know, was one of the first to express his strong condemnation of these attacks, as well as his sympathy and solidarity with the Government and people of India. That solidarity extends to other nations who lost citizens in these heinous attacks. He reiterates his strong condemnation today. He also joins in the call, by Indian authorities, for full cooperation, by all concerned both inside and outside the country, with their investigation.

Question: What will he do, you know, to, because there are indications that India may, in an act of reprisal, attack? Pakistan fears it may attack Pakistan, because although it says it has nothing to do with those non-state actors, but still the responsibility is being pinned on Pakistan. What does the Secretary-General plan to do about that?

Deputy Spokesperson: I just read to you what the Secretary-General has said on the subject.

Question: Yes, following up on the India-Pakistan situation, the Pakistan Ambassador sent a letter to the Secretary-General yesterday. Does he have any comments on it?

Deputy Spokesperson: I have to follow up on the receipt of the letter. I am not aware of a receipt of a letter from Pakistan.
*****

Tuesday, November 18, 2008

டைரிக் குறிப்பு - 1

தீபாவளிக்கு ஊருக்கு செல்லாம் என்று முடிவு எடுத்த அன்றே டிக்கெட் புக் பண்ணி அடுத்த நாளே கிளம்பினேன். ஊரில் யாருக்கும் முன்கூட்டியே சொல்லாமல் ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கலாம் என்று முடிவு எடுத்த காரணத்தால் யாரிடம் தெரிவிக்காமல் நான் இருந்த இடத்தில் இருந்து தலைநகரத்துக்கு பயணமானேன். அன்று இரவு மலேசிய தமிழர் அளித்த விருந்தில் உண்டு மகிழ்ந்து அடுத்த நாள் நண்பர்களை சந்தித்து ஏர்போர்ட் க்கு கிளம்பும் நேரத்தில் வண்டி மக்கர் செய்ய, அதை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்கிறேன் பேர்வழி என்று ஒருவனின் கையை நசுக்கி பின் அடுத்த வண்டியில் இருந்து ஒயர் போட்டு ஸ்டார்ட் பண்ணி ஏர்போர்ட்க்கு அரக்க பறக்க சென்று செக்-இன் செய்வதுக்குள் ஒரு வழி ஆகி விட்டது. இந்த கடைசி நேர பரபரப்பை என்று தான் தவிர்க்க போறேனோ?

*****

சார்ஜா விமான நிலையத்தில் உடனடியாக Transit Visa வாங்கி வெளியே செல்லலாம் என்ற எண்ணத்தை தவிடுபொடி ஆக்கினார்கள் அங்கு இருந்த மக்கள். 4 மணி நேரம் ஆகும் என்று கூறி வியாழன் இரவு அதனால் இன்னும் தாமதமாக ஆகும் என்று இழுத்து அடித்து, பிறகு சண்டை பிடித்து விசா வாங்க 11 மணி நேரம் ஆனது.(இதுக்கு எங்க ஊர் தேவலை) அதுக்கு மேல என்னத்த வெளியே போய் வந்து அடுத்த பிளைட் பிடிப்பது. இருந்தாலும் ஒரு நண்பரை மட்டும் சந்தித்து மறுபடியும் சென்னைக்கு பயணம். (Transit Visa சார்ஜாவிற்கு செல்வதற்கு முன்பே வாங்குவது நலம். )
*****

சென்னையில் மழை பொழந்து கட்டுது என்ற அறிவிப்புடன் பிளைட் புறப்பட்டது, என்னடா இது வம்பா இருக்கு என்று சென்னையில் இறங்கினால் மிக மெலிதான தூறல் மட்டும் தான். சென்னை விமான நிலையம் கோயம்பேடு மார்க்கெட் விட மோசமாக இருந்தது அன்று. பெங்களூரில் இருந்து 3 மணிக்கு எல்லாம் வந்து விடுகிறேன் என்ற சொன்ன நண்பன் 7 மணிக்கு தான் வந்தான். சார்ஜாவிலும் சென்னையிலும் தேவுடு காக்கனும் என்று விதி இருந்து இருக்கும் போல. அவன் வந்ததும் அந்த தூறலும் நின்னு போச்சு.
*****

Coffee Day ல காபி குடித்து விட்டு(நான் மட்டும் தான் அவன் ஒரு சிப் போடு நிறுத்திடான், அதுவே 110 ரூபாய்)அப்படியே பொறுமையாக கிளம்பி பாண்டி சென்று அங்கு ஒரு 2, 3 மணி நேரம் செலவழித்து விட்டு மதியம் உணவு சிதம்பரத்தில் சாப்பிடும் போது தான் மொபைலை சார்ஜ் ல போட்டேன். அடுத்த 5 நிமிடத்தில் தந்தையிடன் இருந்து அழைப்பு. அதிர்ச்சி நம்ம கொடுக்கலாம் என்று பார்த்தால் அவர்கள் நமக்கு கொடுக்குறாங்களே என்று எடுத்தால் பாசமோ பாசம் அம்புட்டு பாசத்தை கொட்டிப்புட்டாங்க. சொல்லாம வந்ததுக்கு. இதுக்கு எல்லாம் யார் காரணம் என்று பார்த்தால் நண்பன் என்கிற பெயரில் இருக்குற எதிரி தான். என் மொபைல் எடுக்கல என்பதால் வீட்டிற்கு அடிச்சு இருக்கான். அதை வைத்து அப்படியே மோப்பம் பிடித்து நம்மளையும் பிடித்து விட்டார்கள் வீட்டில்.
*****

அதை தொடர்ந்து பல அழைப்புகள் நண்பர்களிடம், டேய் நான் அழுதுடுவேன் என்ற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க. 45 நாட்களில் ஊருக்கு மறுபடியும் வருகிறேன் என்ற ஒரே காரணத்தை வைத்து வேலையை விட்டுட்டு வந்துட்டேன் என்ற புரளியும் சேர்ந்து கிளம்பிடுச்சு. இப்ப உலகம் இருக்குற நிலைமையில் அதை எல்லாம் செய்வோமா என்ன என்று சொன்னாலும் கேட்கல...
*****

அப்படியே வெட்டி அரட்டையுடன் பொறுமையாக வண்டி ஒட்டிக் இல்லை நடத்திக் கொண்டே சீர்காழி சாலையில் சென்றோம். "என்னிக்கு தாண்டா அந்த சாலைக்கு விடிவு காலம் கிடைக்கும்" என்ற ரொம்பவே பேசி பார்த்தோம். இப்போதைக்கு விமோசனம் இல்லை என்பது மட்டும் முடிவாச்சு. தரங்கம்பாடியில் கடற்கரையை ஒட்டி இருக்கும் ஒரு பங்களாவில் டீ குடிக்க சென்றால் வாசலில் இருந்து உள்ளே ஆர்டர் எடுக்கும் வரை 4 பேர் டீ 40ரூபாய் என்பதை பறைசாற்றினார்கள். என்னத்த சொல்ல, வேணுமா காசை முன்னாடியே கொடுத்து விடுகிறோம் என்று சொன்ன பிறகு தான் நம்பின மாதிரி இருந்துச்சு. எங்க தோற்றம் அப்படி இருந்துச்சோ? இருக்கும். நாகை அடைந்து நண்பனை பஸ் ஏத்தி விட்டு வீட்டுக்கு போகும் போது மணி 7.
*****

இரண்டு வருடங்களுக்கு பிறகு தீபாவளிக்கு ஊரில். வழக்கம் போல லேட்டாவே குளித்து (அதிகாலை என்பது எல்லாம் தாத்தாவோடு போச்சு) கோவிலுக்கு சென்று வந்து, சிறப்பு நிகழ்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சம் பாத்து, இனிப்புகளை பறிமாறிக் கொண்டு, I will call Police போன்ற நச்சல் பிடுங்கல் இல்லாமல் ஏராளமான வெடிகளுடன் மிக சிறப்பாகவே போச்சு. நண்பர்களும் ஒன்று சேர்ந்து எங்கள் வீட்டில் முதலில் வெடித்து பிறகு அவர்கள் வீட்டில் என்று நேரம் மிக வேகமாகவும் மகிழ்வாகவும் ஒடியது. அதிலும் கூடுதலாக எங்கள் தாத்தா காலத்தில் வீட்டில் வேலை செய்த லட்சுமிம்மா, தீபாவளி அன்று வீட்டிற்கு வர அன்று மாலையில் அவர்களையும் கூட்டு கொண்டு அம்மாவுடன் அவர்கள் கூடி இருக்கும் சுனாமி வீடுக்கு சென்று வந்தது மிகுந்த மகிழ்ச்சி. எங்களை விட லட்சுமிம்மாவிற்கு ரொம்பவே மகிழ்ச்சி.
*****

4 வருடங்களுக்கு பிறகு மிகவும் நெருக்கமான பல கல்லூரி நண்பர்களை சந்திக்க முடிந்தது இந்த வருடம். 10 வருடங்களுக்கு பிறகு பள்ளி நண்பர்கள் பலரும் எங்கள் வீட்டில் ஒன்று கூடினோம். பழைய நட்புகளை சந்திப்பதில் இருக்கும் சுகமே தனி சுகம் தான். அரைத்த அதே மாவை மறுபடியும் அரைப்பதில் அப்படி என்ன தான் சுகமே நமக்கு. அதிலும் பாருங்க நம்ம பசங்க எனக்கு ஆப்பு அடிச்சுட்டாங்க. இந்த சந்திப்புடன் சேர்ந்து என்னுடைய நிச்சயதாம்பூலம் என்று சொல்லி வரல என்று சொன்ன நண்பர்களையும் வர வைத்தார்கள். நான் என்னனு சொல்லி சமாளிக்க. தீபாவளிக்கு ஊருக்கு வந்தது ஒரு குற்றமாடா? Every Dog has its own day.
*****

நான் போய் இருந்த நேரம் தீபாவளி நேரம் என்பதால் மின் வெட்டு இல்லை. ஆற்காட்டார் வாழ்க. இது இப்படியே தொடருமா????????? இப்பொழுது 2 மணி நேரம் மின் வெட்டு என்று வீட்டில் சொன்னார்கள்.
*****

போன தடவை போலவே இந்த தடவையும் பல இடங்களில் போராட்டம். போன தடவை மின் வெட்டு, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலைகள். இந்த தடவை இலங்கை பிரச்சனை. பெரிதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த வில்லை என்னுள். நாகையில் இலங்கை ராணுவத்தால் மீனவர்கள் கொல்லப்படும் போது எல்லாம் இது போன்ற போராட்டத்தை பார்த்தே வளர்ந்த காரணத்தால் இருக்கலாம். முடிவு தான் இது வரை கிடைக்கவில்லை. அரசியல் செய்பவர்களுக்கு இது அடிக்கடி கை கொடுக்கும் விசயம். இந்த தடவை ராஜினமா என்று எல்லாம் பேசி ஒரு வேலை செய்துடுவாங்களோ னு நான் கூட கொஞ்சம் நம்பிட்டேன். சே.. எவ்வளவு பெரிய மடத்தனம். நான் திருந்தவே மாட்டேன். நல்லா இருங்கடா.
*****

காந்தியை பற்றி ஏதாவது ஒரு விமர்சனத்தை வைத்தால் எப்படி நம் தேசப்பத்தியை குறி வைப்பார்களோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் விடுதலை புலிகளை பற்றி ஒரு வார்த்தை தவறாக கூறினாலே தமிழன விரோதி என்ற பட்டம் கிடைக்கிறது. இது நல்லதுக்கு இல்ல சாமிகளா.
*****

தமிழனுக்கு இந்த தடவை தொலைக்காட்சி மூலம் சரியான கொண்டாட்டம் தான். சினிமா கலைஞர்களின் இலங்கை பிரச்சனை போராட்டம், ரஜினியின் ரசிகர்கள் சந்திப்புனு நல்லா போகுதுடா பொழுது. இந்த தடவை தான் ரஜினி தெளிவா பேசினா மாதிரி எனக்கு பட்டது ஆனா அதுக்கு உல்டாவா தான் மத்தவங்க சொன்னாங்க. அப்பால ஒபாமா. அமெரிக்காவில் கூட இந்த அளவுக்கு மீடியாவில் அலசி இருப்பார்களா என்று தெரியவில்லை. இங்கு அலசி பிழிந்து காய போட்டு விட்டார்கள். மீடியாவுக்கு நல்ல கொண்டாட்டம் தான்.
*****

கத்திப்பாரா மேம்பாலத்தை பாத்து அப்பாடா ஒரு வழியா முடிச்சிங்களேனு தோன்றியது. மீனம்பாக்கம், பாடி மேம்பாலமும் விரைவில் முடியும் என்ற நம்பிக்கை வந்து இருக்கு. பின்ன அடுத்த வருசம் தேர்தல் வருதுல. என்னத்துக்கு தான் திட்ட கால அளவு எல்லாம் வைக்குறாங்களோ, எல்லாத்துக்கு இனிமேல் 5 வருசம் என்று பொதுவாக வைத்து விடலாம். நம்ம அலுவலகத்திலும் இருக்காங்களே 1 வாரத்தில் செய்யனும், 1 மாதத்தில் செய்யனும் உயிர எடுக்குறாங்க. முடிக்காம அவனுங்களுக்கு விளக்கம் சொல்லுறதுக்கு பதில் சோறு தண்ணி இல்லாம வேலை முடிச்சிடலாம். ஹும்ம்ம் அதுக்கு எல்லாம் "பாலு" யோகம் வேணும்.
*****

மாயவரத்துக்கு இரு முறை பயணம், காரைக்காலுக்கு இரு முறை பயணம், திருவாரூர், வேளாங்கண்ணி க்கு ஒரு முறை பயணம், நண்பர்களுடன் கப்பலுக்கு
ஒரு பயணம்(கடல் பயணம் என்றுமே இனிமை தான்) என்று நாகையில் இருந்த நாட்கள் மிக வேகமாகவே சென்றது. ஊருக்கு செல்லும் தேதி நெருங்க பாண்டியில் ஒரு நாள் இருந்து வங்கியில் ஒரு கையெழுத்து வாங்கி கொடுத்து சென்னைக்கு பயணம். (அந்த ஒத்த கையெத்த எத்தன நாளா போட்டானுங்க) இங்கு இருக்கும் மக்கள் கொடுத்த லிஸ்டில் இருப்பதை வாங்கவே ஒரு நாள் ஒடியது. அதிலும் Debonair புக் எல்லாம் ரொம்பவே ஒவர். என்ன பண்ண. அடுத்த நாள் சில நண்பர்களை சந்தித்து விட்டு சென்னையில் விண்ணப்பித்து இருந்த விசாவிற்கான ரசீதை பெற்றுக் கொண்டு சார்ஜாவிற்கு பயணம். சென்னையில் அருளின் அருள் மட்டும் கிடைக்கவே இல்லை.
*****

சார்ஜாவில் விசாவை 10 நிமிடத்தில் பெற்றுக் கொண்டு 2 மணி நேரத்தில் அக்கா வீட்டை அடைந்து விட்டேன். மாப்பிள்ளையுடன் ஒரு நாள் செலவழித்து சூடானுக்கு அடுத்த நாள் அதிகாலையில் வந்து ஒரு நாள் ஒய்வு எடுத்து பணியிடத்திற்கும் திரும்பியாச்சு. அடுத்த நாளே நம்ம தல கேட்டான் பாருங்க ஒரு கேள்வி. அடுத்து எப்ப ஊருக்கு போகலாம் என்று இருக்க என்று சொல்லு அதுக்கு தகுந்த மாதிரி நான் என் விடுப்பை மாத்திக்குறேன் என்று. ரொம்ப நல்லவனுங்களா இருக்கானுங்க........
*****

(அக்டோபர் 23 - நவம்பர் 9)

Monday, November 05, 2007

புலி கதை / காதல் / கேள்வி - 3 இன் ஒன்

மகாஜனங்களே வணக்கம்.

இன்னிக்கு நம்ம சுயபுராணம் தான். புராணம் என்றாலும் இது உண்மையிலே நடந்த சம்பவம் தான். கற்பனை காவியம் அல்ல. இன்னிக்கு நம்ம சுய புராணத்தில் காண்டம் எல்லாம் பிரிக்கல. நேரா பள்ளி வாழ்க்கைக்கு போறோம், சரியா?

நேருவில் படிக்கும் வரை வெறும் சிவாவாக இருந்த என்னை சி.எஸ்.ஐ யில் 6 ஆம் வகுப்பு சேர்ந்த பிறகு இன்சியல் போட்டு கூப்பிட ஆரம்பித்தார்கள். T என்ற இன்சியலை வைத்து Tension சிவா னு அழைக்க ஆரம்பித்தார்கள். அப்ப தலையில், முதுகில் தொட்டால் லைட்டா கோவம் வரும், அதான். பெயர் நல்லா இருந்தாலும் நெகடிவ்வா இருக்கேனு யோசிச்சு அந்த சமயத்தில் வந்த நம்ம தலைவர், சிவா படத்தில் டைகர் னு சொல்ல ஆஹா நம்ம பெயரும் சிவா நம்ம தேசிய விலங்கு டைகர் அந்த பெயரை தலைவரே வச்சிக்கிட்டார், அதன் முதல் எழுத்தும் T தான் பல விதங்களில் யோசித்து ( அந்த வயசுலே என்ன மாதிரி எல்லாம் யோசிச்சு இருக்கேன் பாருங்க) டைகர் சிவா னு கூப்பிடுங்கடானு நம்ம பசங்க கிட்ட சொல்ல அவங்களும் சில நாள் கூப்பிட்டாங்க. நாமளும் நோட், புக் இன்ன பிற பேப்பர்களிலும் டைகர் சிவா னு எழுத ஆரம்பிக்க தொடங்கியதில் இருந்து நமக்கும் இந்த புலிக்கும் உறவு ஸ்டார்ட் ஆச்சுங்க.

அதன் பிறகு வீட்டில் வளர்க்க தொடங்கிய முதல் நாய்க்கு டைகர் பெயர் வச்சி மகிழ்ந்து கொண்டேன். எட்டாவது வரும் பெயர மாத்திட்டாங்க. என்ன என்னவோ பெயர் எல்லாம் வச்சி கடைசியில் அரிசினு கூப்பிட்ட தொடங்க அது இன்னிய வரைக்கும் பள்ளி நட்பு வட்டாரங்களில் தொடருது. நமக்கும் கொஞ்சம் கொஞ்சமா இந்த டைகர் மறந்து போச்சு. பட்னு பாத்தா 10வது படிக்கும் போது ஆங்கிலத்தில் தி டைகர் என்று ஒரு பாடல் பாடமா இருந்துச்சு. அதை மிக அழகாக நடத்திய நம்ம ஆசிரியர் ரிச்சர்ட்சன் மறுபடியும் இந்த புலி மேல் இருந்த ஆர்வத்தை கிளறி விட்டுட்டார். வீட்டில் எல்லாம் புலி படத்ததின் போஸ்டர் வாங்கி ஒட்டி இருந்தேன். தேர்வில் அந்த பாடலை பற்றி எந்த கேள்வியையும் விடாமல் பதில் அளித்து விடுவேன்.

வில்லியம் பிளேக் எழுதிய அந்த பாடல்

The Tiger - William Blake

Tiger Tiger. burning bright,
In the forests of the night;
What immortal hand or eye.
Could frame thy fearful symmetry?

In what distant deeps or skies.
Burnt the fire of thine eyes?
On what wings dare he aspire?
What the hand, dare seize the fire?

And what shoulder, & what art,
Could twist the sinews of thy heart?
And when thy heart began to beat.
What dread hand? & whatdread feet?

What the hammer? what the chain,
In what furnace was thy brain?
What the anvil? what dread grasp.
Dare its deadly terrors clasp?

When the stars threw down their spears
And watered heaven with their tears:
Did he smile His work to see?
Did he who made the lamb make thee?

Tiger Tiger burning bright,
In the forests of the night:
What immortal hand or eye,
Dare frame thy fearful symmetry?

கல்லூரியில் சேர்ந்த பிறகு நமக்கு பல பெயர் வைக்கும் படலங்கள் நடந்து கடைசியில் 8 Guys மற்றும் அஞ்சு என்ற பெயர் நிலைத்து விட்டது. இன்னிக்கும் கல்லூரி நட்புகளிடம் இது தான் பெயர். புலிக்குட்டி என்று வேற ஒருத்தன் இருந்தான் எங்கள் கூட்டத்திலே, அதனால் புலி கல்லூரியில் மிஸ் ஆயிடுச்சு. அந்த நேரத்தில் நம்ம தோஸ்து ஒருத்தன் வண்டி வாங்க, அப்ப எல்லாம் வண்டியில் ஏதாச்சும் ஸ்டிக்கர் ஒட்டுவது தான் ஃபேஷன். அவன் என்னைய கேட்க விடுதலை புலிகளின் சின்னத்தை போட்டு "தொட்டவனை விட்டதில்லை" னு ஸ்டிக்கர் ஒட்டி விட்டேன். ஒட்டின ஒரே மாசத்தில் புலிகளை பற்றி பேசினாலே பொடானு சட்டம் கொண்டு வந்துட்டாங்க. அலறி அடிச்சு ஒடியாந்தான். ஒன்னும் பயப்படாத மச்சினு ஒரு மாதிரி தேத்தி அனுப்பியது தனிக் கதை.

அப்படி போயிக்கிட்டு இருந்த நம்ம புலி ஆர்வம், பதிவுலகம் வந்த பிறகு கன்னாபின்னானு பத்திக்கிச்சு. நம்ம படத்தை போட்டு தான் முதலில் பதிவு எழுத ஆரம்பிச்சேன். அதை பாத்து எனக்கே போர் அடிக்க வேற எந்த படம் போடலாம் என்று யோசித்தவுடன் பட்னு புலி நினைவுக்கு வர சட்னு போட்டாச்சு. அன்னில இருந்து இன்னிய வரைக்கும் அந்த படம் இருக்கு. கூடவே ஆர்குட், ஜி டாக், யாஹு னு எங்கும் புலிப்படம் தான். அதோட ஒரு படி மேல போய் இப்ப புலியையே டெம்பிளேட்டாக மாத்தியாச்சு. நல்லா இருக்கா.

பதிவுலகம் வந்த பிறகு சிவா, நாகை சிவாவாக மாறி நாகை புலியாகி இப்ப வெறும் புலி ஆகிட்டேன். எங்குட்டு போனாலும் ரொம்ப பாசமா எல்லாம் புலி புலி னு கூப்பிடுறாங்க. ஆக மனுசனா மதிப்பது இல்லை என்பது வேற விசயம். அதிலும் ஒரு வலைப்பதிவர் அவர் வனவிலங்கு சரணாலயத்துக்கு போயிட்டு வந்ததும் இல்லாம அங்கன பிடிச்ச புலி படத்தை எல்லாம் எனக்கு மெயில் பண்ணி பாசத்தை கொட்டிட்டார். அத்தோட விட்டு இருந்தால் பரவாயில்லை. கூடவே சிங்கத்தை விட பல விதத்தில் உயர்ந்தது புலி. பின் ஏன் புலியை விட்டுட்டு சிங்கத்தை எல்லாரும் காட்டு ராஜா, விலங்குகளின் அரசன் என்று சொல்லுறாங்கனு ஒரு கேள்வி கனைய வீச வந்தது வில்லங்கம்.

நம்ம அறிவுக்கு எட்டின வரைக்கும் சிங்கத்தை விட புலி எந்த விதத்திலும் குறைந்தது இல்லை, இன்னும் சொல்ல போனால் புலி தான் சிங்கத்தை விட திறமை வாய்ந்தது, காட்டுல மட்டும் இல்லை நாட்டிலும் கூட. அப்புறம் ஏன் இப்படி தோணுச்சு. அதுவும் போக ஆப்பிரிக்க நாட்டவர்களை கேட்டால் அவர்கள் புலியும் இல்லை சிங்கமும் இல்லை யானை தான் விலங்களின் அரசன், காட்டு ராஜானு சொல்ல மண்ட காய்ந்து போச்சு.

இதுக்கு எப்படி தான் விடை கண்டுபிடிப்பதுனு யோசிச்சு நம்ம விக்கி பசங்க கிட்ட கேட்டா சொல்லிட போறாங்கனு, அதில் உள்ள முக்கியமான இருவரிடம் கேட்க போக வந்துச்சு அடுத்த வினை. இரண்டில் எது பெருசு, ஏன் புலிய விட்டுட்டு சிங்கத்தை காட்டு ராஜானு சொல்லுறாங்கனு கேட்க, அவங்க கேள்விய திரிச்சு ஏதுக்கு பெரிசுனு ஒரு பெரிய விவாதமே நடத்தி என்னய நோகடிச்சதும் இல்லாம, என்ன நீ இம்புட்டு வெள்ளந்தியா இருக்கனு கிண்டல் வேறு. அதுக்கு அப்புறமும் அவங்க கிட்ட சாட்ட நான் என்ன லூசா. உடனே எஸ்கேப் ஆயிட்டேன்.

அதனால் மக்களே, இதுக்கு நீங்களே ஒரு முடிவு சொல்லுங்க. சிங்கமா.. புலியா. விக்கியில் இருக்கும் மற்ற பதிவர்கள் உதவினாலும் சரி.

டிஸ்கி : இது நம்மளோட சதம் அடிக்கும் பதிவு. அவன் அவன் 400, 500 னு சிங்கிளா அடிச்சுக்கிட்டு சைலண்டா இருக்காங்க, இதுல உனக்கு சதம் அடிச்சது பெரிய விசயம்னா. ஆமாம் என்பது தான் என் பதில், கூடவே எல்லாம் ஒரு விளம்பரம் தான்.

Friday, June 22, 2007

எட்டி நின்று போட்ட ஒரு எட்டு...

புதுசா ஒரு எட்டு போடும் விளையாட்டை பதிவுலகில ஆரம்பித்து இருக்காங்களாம். ஆரம்பித்த புண்ணியவான்/வாதி நல்லா இருக்கவும்! நாம் எல்லாம் எட்டு போடாமலே வாகன ஒட்டுனர் உரிமை வாங்கின ஆளு, அப்படிப்பட்ட நம்மள எட்டு போட தண்டோரா விக்கி, விழியன் உமாநாத், தலைவலி கீதா, ஆத்திகம் வி.எஸ்.கே, அழைத்து உள்ளார்கள், அவர்கள் அழைப்பை ஏற்று என்னுடைய தற்பெருமைகள்...

1, என்ன படிக்குறோம், எதுக்கு படிக்குறோம், என்ன பண்ணப் போறோம் என்ற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் வாழ்வை கண்டப்படி அனுபவித்து விட்டு கிடைத்த வாய்ப்புக்களில் சிலதை தவறு விட்டு மிஞ்சியதை வைத்து இன்று ஒரு சுமாரான நிலையில் இருப்பதே பெரிய சாதனை & பெருமை தான் கூடவே இப்பொழுது நான் பார்க்கும் வேலையை பெற்றது. மன அளவிலும், பொருள் அளவிலும், தொழில்நுட்ப அளவிலும் என்னை முழுதாக திருப்திப்படுத்தியது. இதை தாண்டி அடுத்த நிலைக்கு முயற்சி செய்கின்ற போதிலும் இங்கு வேலை செய்வதை, செய்ததை மிகவும் பெருமையான ஒரு விசயமாக என் வாழ்வில் இருக்கும்.

2, கல்லூரியில் சும்மா வம்புக்கு சண்டை போட்டு நாங்களும் மேடை ஏறுவோம் என்று மேடை நிகழ்ச்சி, பட்டிமன்றம், பேச்சுப் போட்டியில் கலந்து சில பரிசுகள் வாங்கியது, கல்லூரியில் எக்ஸ்னோரா ஆரம்பித்து அதன் தலைவராக ஆனது, அவ்வளவு சேட்டை பண்ணியும் சரியாக பட்டப்படிப்பை முடித்தது, சின்ன சின்ன சண்டைகள், ரவுண்ட் கட்டி கொட்டம் அடிச்சது என அப்படி, இப்படினு பெருமைப்பட்டுக்க ஏகப்பட்ட விசயங்கள் இருக்கு.

3,சென்னை அலுவகலத்தில் இருக்கும் போது த.நா. அரசின் ஒரு திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த கடலூர் மாவட்டத்தை தவிர மற்ற இடத்தில் முடித்து விட கடலூர் மாவட்டத்தில் முடித்து தர நி.இயக்குனர் என்னைக் கேட்டுக் கொள்ள மூன்றே நாளில் கடலூர் மாவட்டம் முழுவதும் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தே அதை முடித்துக் கொடுத்தது, அந்த கம்பெனியில் இருந்து வெளியேறும் போது உங்களால கம்பெனிக்கு நல்ல ரெவீன்யூ தான் என நி.இ. சொன்னது, நல்ல நண்பர்கள் மற்றும் அனுபவம் வெற்றது பெருமை தான்.

4, சொந்தமாக வண்டி வாங்கிய புதிதில் சென்னையில் இருந்து நாகைக்கு இரவில் பறந்தது. அந்த நேரத்தில் கி.க.சாலையில் சரியாக மின் விளக்குகள் கூட கிடையாது. இப்ப நினைச்சாலும் சும்மா ஜிவ்னு பெருமை தலைக்கு ஏறும். அதுக்காக நடுவில் நிக்க வைத்து கூடி கும்மி அடிச்சதை மறக்க முடியாது.

5, எந்த விசயமும் முழுதாக தெரியாமல் எல்லாத்தையும் கலந்துக் கட்டி பேசி, வேலைகளை கலந்து கட்டி செய்து Wise Man என்ற ஒரு இமேஜ்யை உருவாக்கி அதை இன்னும் ஒப்பேத்திக்கிட்டு இருப்பது.

6, பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது உன் சேர்க்கை சரியில்லை என்று ஆசிரியர்கள் கூறுவதை கேட்கும் போது நமக்கு அப்படியே ஒரு பெருமை பொங்கி வரும் பாருங்க... பசங்க கிட்ட சொல்லி பாருங்கடா உங்களால் தான் நான் கெட்டு போறேன் என்று சொல்ல, எல்லாத்துக்கும் முழு காரணமான ஒன்னயே இப்படிடா இவனுங்க நம்புறாங்க என பசங்க புலம்பவது, இருந்தாலும் எனக்கு மிக மகிழ்வான, நிறைவான பள்ளி, கல்லூரி வாழ்வை அளித்த அந்த நண்பர்களையும், பிறகு பல வாய்ப்புகளின் மூலம் பெற்ற நலம் விரும்பிகள் மற்றும் பிற நல்ல நண்பர்களை பெற்றது ஒர் பெருமை தான்

7, அடுத்தவர்களுக்கு உதவுகின்ற,எதையும் சாதரணமாக எடுத்துக் கொள்கிற, என்னையே ஊக்கப்படுத்தி கொள்கின்ற, செய்தை தவறை தவறாமல் ஒத்துக் கொள்கிற, அலட்சியமாக இருக்கின்ற, கேள்வி கேட்டுக் கொள்கின்ற, புத்திமதி சொல்கின்ற, மன்னிக்கின்ற ஆனால் அதை மறக்காத என என்னை சர்வமும் ஆட்டி படைக்கின்ற என் புத்தியும், மனதும் எனக்கு வாய்த்தது தான்.

8, இங்க System ஊத்திக்கிட்டு நாலு மூணு நாள நமக்கு தண்ணிக் காட்டிக்கிட்டு இருக்கும் இந்த வேளையிலும் நடுவில் கிடைத்த கேப்புல எட்டி நின்னு System a Monitor பண்ணிக்கிட்டே இந்த பதிவை போடுறேன் பாருங்க... அதும் இல்லாம நாம் கிறுக்குறதையும் வந்து படிச்சுட்டு அதுக்கு சில பின்னுட்டோமும் போடுறீங்க பாருங்க... எனக்கு ரொம்ப பெருமையா இருக்குங்க... (ரமணா கேப்டன் மாதிரி கண் சிவந்து கண்ணீர் அணை கட்டுதுங்க.. அவ்வ்வ்வ்வ்வ்)

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

ஆள் பிடிக்கிறது:

எப்பா பிழிந்து எடுக்கும் வேலைக்கு நடுவில் நான் எட்டு போட்டதக்கு காரணமே இப்ப விட்டா நாம கூப்பிடுவதுக்கு ஆள் கிடைக்காது என்பதால் தான்....

1, சி.வி.ஆர்
2, இம்சை அரசி
3, சச்சின் கோப்ஸ்
4, G3
5, அருண்குமார்
6, வேதா
7, அய்யனார்
8, உலகம் சுற்றும் வாலிபி

மக்கள்ஸ் நான் தான் ஒழுங்கா எழுதுல, அதுக்குனு நீங்களும் டீல்ல விட்டுட கூடாது... சும்மா அதிர அடிக்கனும் சொல்லிட்டேன்...

Monday, March 12, 2007

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

இடம்: நாகை எங்க வீடு
நாள் : இரண்டரை ஆண்டுகள் முன்பு எந்த நாளாக இருந்தாலும்
நேரம் : காலை 11.30

நான் : அம்மா டிபன் எடுத்து வைங்கம்மா

அம்மா : ஏண்டா, காலையில் எழுந்ததே 9 மணி அப்பவே சாப்பாட்டு இருக்கலாம்ல, வெளியில் போயிட்டு 11.30 வந்து காலை சாப்பாடு சாப்பிட்டா மத்தியானம் எப்படா சாப்புடுவ, அதும் இல்லாம உனக்கு சாப்பாடு வைப்பேனா, இல்ல மத்தியான சாப்பாடு செய்வேனா?

நான் : எனக்கு வச்சுட்டு அப்புறம் சமைங்க, மத்தியான சாப்பாட்டு 3, 4 மணிக்கு சாப்பிட்டா போகுது

அம்மா : 3, 4 மணிக்கு சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு டா ஆகும்.

நான் : அம்மா, வாழ்வதற்காக சாப்பிடனும், சாப்பிடுவதற்காக வாழக் கூடாது.

அம்மா : அப்படிடா சொல்லுவ, எங்கயாச்சும் போய் காய்ஞ்ச தாண்டா தெரியும்.

நான் : சரி சரி வைங்க மணியாகுது, பசங்க அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க

(சுட சுட ஆப்பம், தேய்காய் பால் பறிமாறப்படுகின்றது.)

நான் : ஏம்மா, போதும்மா

அம்மா : இத ஒன்னு வச்சுக்கடா

நான் : ஏம்மா, போதும்மா சொன்னா கேட்கவே மாட்டீங்களாம்மா, எப்ப பாத்தாலும் இத தாம்மா செய்வீங்க நீங்க.

அம்மா : டேய், இந்த ஒன்னு மட்டும் சாப்பிட்டுட்டு போடா, டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நான் : போயிட்டு வரேன்ம்ம்ம்ம்ம்ம்மா

அம்மா : டேய், மத்தியானம் சீக்கிரம் சாப்பிட வந்துடு

நான் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரீஈஈஈஈஈஇ

நேரம் : மதியம் 3.30

நான் : மம்மிமீஈஈஈஈஈ

அம்மா : புள்ளையாட நீ.... உன்ன சீக்கிரம் வாடா சொன்னா 3.30 மணிக்கு வர.......

நான் : ஏம்மா, மாசத்துக்கு நாலைஞ்சு தடவை தான் நான் ஊருக்கு வரேன், அதுக்கே இப்படி சலிச்சுக்குறீங்களே..... நீங்க சாப்பிட்டீங்களா..

அம்மா : ம்ம்ம்ம் உனக்காக இவ்வளவு நேரம் பாத்துட்டு இப்ப தான் சாப்பிட்டு கொஞ்ச நேரம் படுக்கலாம்னு படுத்தேன், நீ வந்துட்ட

நான் : சரி சரி, பசிக்குது, வைங்கம்மா

அம்மா : சரி, டைனிங் டேபிள்க்கு வாடா

நான் : அம்மா, இங்க கொண்டு வாங்கம்மா

அம்மா : டேய், அவ்வளத்தையும் தூக்கிட்டு வரனும்டா, அங்க வந்து 10 நிமிசம் சாப்பிட்டு வந்து இந்த டிவிய பாத்தா என்ன?

நான் : நான் டிவி பாக்குறதே, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான், அதுவும் உங்களுக்கு பொறுக்காதே, போட்டு எடுத்துட்டு வாங்கம்மா

(சிக்கன் குழம்பு, இறால் வறுவல் பறிமாறப்படுகின்றது)

நான் : ஏம்மா, சிக்கன் வாங்கிட்டு இறால் வேற ஏம்மா. சரி இறால் வச்சிங்களே, ரசம் வச்சிங்களா...

அம்மா : ஹ்ம் வச்சு இருக்கு. முட்டை வேணுமா என்ன?

நான் : நான் என்ன வேணாம்னா சொல்ல போறேன்...

அம்மா : அந்த முட்டையில் அப்படி என்னதான் இருக்கும்டோ உனக்கு?

நான் : ஏம்மா, நானா கேட்டேன், நீங்க கேட்டதால் கொடுங்கனு சொன்னேன். நீங்களே கேட்டுட்டு என்னய குறை சொல்லுங்க?

அம்மா : இந்தாடா இறால் இன்னும் கொஞ்சம் வச்சுக்கோ

தம்பி : ம்ம்ம் ஊட்டி விடுங்கம்மா, பச்ச குழந்தை பாருங்க அவன், அந்த கட்டு கட்டிக்கிட்டு இருக்கான். அவன் வந்தா மட்டும் தாம்மா நீங்க இப்படி வகை வகையா சமைக்கிறீங்க

அம்மா : ஆமாம்டா உனக்கு நான் சமைச்சு போட்டதே இல்ல பாரு

நான் : அம்மா, அவன் கிடக்குறாம்மா, நீங்க ரசத்தை ஊத்துங்க... என்னமா ரசத்தில் உப்பு அதிகமா இருக்கு, இவ்வளவு வருசம் சமைக்குறீங்க, இன்னும் உங்களுக்கு உப்பு சரியா போட தெரிய மாட்டேங்குது.

அம்மா : டேய், நாங்க எல்லாரும் சாப்பிட்டோம் சரியா தான் இருந்துச்சு. உனக்கு மட்டும் அதிகமா இருக்கும்டா. சரி இன்னும் கொஞ்சம் சாதம் போட்டு மோர் ஊத்திக்கோ...

நான் : மோரா! வேணாம். போதும்

நேரம் :இரவு 10.00

நான் : வெளிய போறேன், சீக்கிரம் சாப்பாடு போடுங்க

அம்மா : இத்தன மணிக்கு மேல எங்கடா போற? தோசை தான் இரு ஊத்துறேன்.

நான் : தோசையா, என்னமா நீங்க, சாதம் வைக்க கூடாதா?

அம்மா : எனக்கு என்னடா தெரியும், நீ வீட்டுக்கு சாப்பிட வருவீயா இல்ல வெளியில் சாப்பிட்டு வருவீயானு, சாதம் வைச்சு நீ வராட்டி வேஸ்டா போயிடும் தான் வைக்கல.

அப்பா : ஏண்டி, அவனுக்கு சாதம் கொஞ்சம் வச்சி இருக்கலாம்ல, நீயும் இப்படி தாண்டி பண்ணுவ

அம்மா : உடனே, என்ன சொல்லிடுவீங்களே? இப்ப தோசை சாப்பிட்டா என்ன ஆயிட போகுது.

நான் : சரி, சரி விடுங்க, நான் வெளியில் சாப்பிட்டுக்குறேன். வரேன்ம்மா

அம்மா : 1 மணிக்கு வந்து நிக்காம சீக்கிரமா வந்துடு.........

நான் : ம்ம்ம்ம்ம் பாக்கலாம்.

இடம் : சூடான் நேரம் : கடந்த வெள்ளி, அதிகாலை 11.00

VHF ரேடியாவில் கால் வருகின்றது

நான் : F.Q. 8.1.1 தான் விசயத்தை சொல்லு

எதிர்முனை : இண்டர் மிஷன் நெட்வொர்க் ல பிரச்சனை, கொஞ்சம் வந்துட்டு போனா நல்லா இருக்கும்.

நான் : அட என்னய்யா, வெள்ளிக்கிழமை காலாங்காத்தாலே தொல்லை பண்ணுறீங்க, சரி இரு ஒரு அரை மணி நேரத்தில் வரேன்.

ப.பெண் : சிவா, பிரேட் இருக்கு, சாப்பிட்டு போ.

நான் : பிரட்டா, எனக்கு உடம்பு எல்லாம் நல்லா தான் இருக்கு. மத்தியானம் வந்து சாப்பிடுக்குறேன். மதியம் என்ன?

ப.பெண் : சாப்பாத்தி, பர்த்தா.

நான் : சரி, ஒகே.

ஆபிஸ்ல எப்பவும் போல கடமையில் முழ்கிட்டோம்.

நேரம் : மாலை 4.25, நம்ம மொபைல் பாடுது

நான் : சொல்லுங்க தாப்பா

எதிர்முனை : எங்க இருக்க, நாங்க எல்லாம் கிரவுண்டுக்கு வந்தாச்சு. பேட், ஸ்டம்பு எல்லாம் உன் வண்டியில் தான் இருக்கு.

நான் : இன்னும் 10 நிமிசத்தில் அங்க இருப்பேன். (மனதிற்க்குள் இன்னிக்கு சாப்பாட்டு போச்சுடா)

நேரம் : மாலை 7.00 ,மொபைல் பாடுது

நான் : சொல்லு மச்சி என்ன விசயம்

எதிர்மனை : மச்சி பிஸியா இல்லாட்டினா இங்க வந்துட்டு போயேன், நம்ம XXXXX பத்தி ஒரு மேட்டரு பேசனும்.

நான் : கிரவுண்டல இருக்கேன் மச்சி. ஒரு 15 நிமிசத்தில் அங்க இருப்பேன்.

எதிர்முனை : இன்னிக்கு இங்க பீப், உனக்கு வேற எதாச்சும் சமைக்கட்டுமா?

நான் : பீப்பா! இல்ல மச்சி, கசகசனு இருக்கு, குளிச்சுட்டு சாப்பிட்டா தான் சரியா வரும். அதனால் எனக்கு வேணாம்.

நேரம் : இரவு 9.30

கோயல்: வா, சாப்பிட்டு வந்துட்டியா, இல்ல இங்க தானா

நான் : இல்ல இங்க தான், காலையில் இருந்து சாப்பிடல, இரு குளிச்சுட்டு பிரஷா வரேன்

கோயல் : போ, போ உனக்காக தான் நாங்களும் வெயிட்டிங்

(மனதுக்குள், இதில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கே, சே..சே... இவனுக்கு இது எல்லாம் தெரியாது) சிறிது நேரம் பிறகு

நான் : வாங்க, சாப்பிடலாம்

கோயல் : நீ சாப்பிடு, நாங்க அப்புறம் சாப்பிடுறோம்.

நான் : என்னடா இது புதுசா இருக்கு. எட்டு மணிக்கே சட்டிய எம்டி ஆக்கிடுவாங்க, இன்னிக்கு என்ன ஆச்சு பசங்களுக்கு..

திறந்து பாத்தால், குண்டு அரிசியும்(எகிப்து அரிசி, நம் கேரளா அரிசி விட பெரிசா இருக்கும்), தால்லும் இருந்துச்சு.

நான் : யாரு இந்த அரிசிய சமைக்க சொன்னது. வர வர இந்த பொண்ணு பண்ணுறது நல்லாவே இல்ல. வேற வழி இல்ல, இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணுறேன். அட பாவிங்களா, தால் என்னடா இவ்வளவு உப்பு.

கோயல் : அதான், நாங்க சாப்பிடாம வர்கார்ந்து இருக்கோம். பிரட் இருக்கு சாப்பிடுறீயா, முட்டை பொறித்து தரேன்.

நான் : டேய், நான் புலி, பசித்தாலும் வீக் எண்ட்ல பிரட் சாப்பிட மாட்டேன். வேற எதாச்சும் செய்ய வேண்டியது தானே.

கோயல் : டயர்டா இருந்துச்சு. அதான் முடியல.

நான் : நமக்கும் அதே கதி தான், நீ முட்டைய ஒத்து, இதுக்கு ஒரு வழி வச்சு இருக்கேன்

ப்ரிட்ஜில் இருந்து தயிர், ஊறுகாய் வெளி வருகின்றது. விதி ய நொந்து தயிர் சாதம் சாப்பிடுறேன்.

பழமொழி : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

நம்ம கருத்து : நல்லாவே விளையுதுடோய்.... மாப்பு கேட்டுகுறேன் மம்மி, மாப்பு

Monday, January 15, 2007

பொங்கலோ பொங்கல்





Friday, January 05, 2007

சொர்க்கம் சொர்க்கம் தான்...

ஹேய்ய்ய்ய்ய்ய்ய் தந்தன தந்தன
தந்தா

சொர்க்கமே என்றாலும் அது
நம் ஊர்ர போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது
நம் நாட்டுக்கு ஈடாகுமா

பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா

சொர்க்கமே என்றாலும் அது
நம் ஊர்ர போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது
நம் நாட்டுக்கு ஈடாகுமா
இதுனால் நான் என்ன சொல்ல வரேன்னா, நான் இப்ப சொர்க்கத்தில் இருக்கேனுங்கோ...

இந்தியா வந்து 10 நாளாச்சு மக்கா, சில பல காரணங்களால் முன்பே தெரிவிக்க முடியவில்லை. திரும்ப எப்ப போறேன் என்று கேட்டு என்னை யாரும் அழ விடக்கூடாது சொல்லிட்டேன். ஆனாலும் நம் தொல்லை தாங்க முடியாமல் சீக்கிரமே துரத்திடுவாங்க என்பது மட்டும் நிச்சயம்.

என் தொல்லையை தாங்கி கொள்ளும் அளவு மனோபலமும், பொறுமையும் உள்ளவர்கள் என்னை கைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம். என் எண் - 98941 16732.

அப்பால நான் ஜகா வாங்கிக்குறேன் மக்கா.

Saturday, December 30, 2006

இது சரியா?

ஈராக் முன்னாள் அதிபர் திரு. சதாம் உசேன் இன்று தூக்கிலிடப்பட்ட விதம் மிகவும் கண்டனத்துக்குரியது. அவருக்கு உலக பிரநிதிகள் நீதிமன்றத்தில்(இண்டர்நெஷனல் கோர்டில்) தீர விசாரித்து தக்க தண்டனை தந்து இருக்க வேண்டும் என்பது என் கருத்து. அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்ப்பின் மீது சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

அவருக்கு நிறைவேற்றப்பட்ட இந்த தண்டனை குறித்து இந்திய அரசாங்கம் உட்பட பலரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டு உள்ளனர். அதே நேரத்தில் கீழே இருக்கும் இரு புகைப்படங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் எனக்கு சரியாக படவில்லை. நம் கண்டத்தை இப்படி தான் தெரிவிக்க வேண்டுமா? வேறு வழியே இல்லையா?

இது சரியா?



Saturday, December 16, 2006

வெற்றித் திருநாள்

இதே நாள் 1971 ஆம் ஆண்டு பங்காளத்தேஷ் சுகந்திரம் அடைந்த நாடாக இந்த உலகத்தில் வெளி வந்தது. 3 மில்லியன் மக்களை இழந்து சுகந்திரம் அடைந்த நாடு அது. வாழ்த்துக்கள். வாழ்க வளர்க......

இந்த வெற்றித் திருநாளை குறித்து சிலர் பலரிடம் சொல்லிய போது, எனக்கு சில குறள்கள் ஞாபகம் வந்தது. அவை

செய்யாதார் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது.


உரை:

தான் ஒர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.


எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு


உரை:

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.


அந்த குறள்களை நினைத்து பிறகு அந்த சிலரை பார்த்து சிரிக்கும் போது இன்னும் ஒரு குறள் ஞாபகம் வந்தது. அது


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று


உரை:

ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.


மறந்து விட்டேன். நல்லா இருங்கடே

Monday, October 30, 2006

நட்சத்திரம் - மெய்யாலுமா?

வணக்கம், வணக்கம்.

என்னங்க சொல்லுறீங்க !!!!!!!

நானா மெய்யாலுமா? யம்மா இருக்காதும்மா. நீங்க வேற யாரையோ நினைச்சு என்கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க போல.

ஆமாம் நான் தான் சிவா

அப்ப நான் தானா?

இல்லங்க இங்கன ஏகப்பட்ட சிவாகள் இருக்காங்க, அட்ரஸ் மாத்தி வந்து இருக்க போறீங்க,

நாகை சிவா தானா !

ஆங் புரிஞ்சி போச்சுங்க இப்ப, சின்ன பையன் தானேனு விளையாடுறீங்களா?

இல்லையா......

நான் எப்படிங்க அங்க எல்லாம், சே... சே... இருக்காது. நான் சும்மா கொசுவையும், சிட்டுக்குருவியையும் வச்சு பொழப்ப ஒட்டிக்கிட்டு இருக்கேன். நமக்கு எல்லாம் அந்த குடுப்பினை கிடைக்காது. வேணுமுனா யாருக்காச்சும் வால் நட்சத்திரமாக இருக்கலாம்.

இல்லையா, உண்மையாக தான் சொல்லுறீங்களா.....

நம்பலாமா?

நம்பி தான் ஆகனுமா, ஆகா இந்த நேரம் பார்த்து பக்கத்தில் எவனும் இல்லையே, இருந்தா அவன கிள்ளி பார்த்து கனவா இல்ல நனவா கன்பார்ம் பண்ணிடலாம். யோவ் ஜார்ஜ், புடின், பிளேயர் எங்கய்யா போனீங்க நீங்க எல்லாம்......

அவங்களை எல்லாம் கூப்பிட வேண்டாமா.... ஏன்

நனவு தானா....

இது என்னடா தமிழ்மணத்திற்கு வந்த சோதனை !!!

இதை தான் குப்பையும் ஒரு நாள் கோபுரத்தில் ஏறும் என்பார்களோ?

சரி ஏதோ காற்று கொஞ்சம் பலமா அடிச்சி கோபுரத்தில் ஏறியாச்சு, அடுத்த காற்று அடிப்பதற்கு முன்பு என்ன என்ன உளறனமோ அதை எல்லாத்தையும் உளறிட்டு போயிறேன். அந்த உளறலை கேட்டு விட்டு ரொம்ப கோவப்படாம பார்த்து பக்குவமா வேப்பிலை அடிங்க. அதை விட்டு மாட்டுனாடா அனமாத்தா ஒரு ஆளுனு நினைச்சு எல்லாரும் சேர்ந்து கும்மி அடிச்சுட்டு போயிடாதீங்க. அப்புறம் எங்க தல கைப்பூ வ கூட்டி வந்து நியாயம் கேட்பேன் சொல்லிட்டேன்.

உலகத்தில் இருக்கும் எல்லா சாமிகளையும் வேண்டிக்கிட்டு இந்த வார முழுவதும் உங்களை தொல்லை பண்ணப் போகின்றேன்.

வந்து வாழ்த்திட்டு போங்க புண்ணியவான்களே....... எதுக்குனு கேட்குறீங்களா.... நட்சத்திரமாக தேர்ந்து எடுத்ததுக்கும் அதுவே 50 வது பதிவாக அமைந்தற்க்கும் தான்.