Saturday, July 29, 2006

2 மேட்டர்!!!

மேட்டர் - 1

முரசொலித்த வெற்றி!!!

சங்கத்தில் இருப்பவர்களுக்கு சிரிக்க வைக்க மட்டும் தான் தெரியும், சிந்தித்து, யோசித்து கதைகள் எழுதி வெற்றிக் காண முடியாது என்று எள்ளி நகையாடிவர்கள் எங்கே? வந்து பாரு! எங்கள் சிங்கங்களின் வீரத்தை, தீரத்தை. இந்த வெற்றி ஆரம்பம் தான். இனி என்றுமே வெற்றி என்பதை முரசொலிக்க வந்து இருக்கும் முதல் வெற்றி. இத்துடன் சங்கத்து சிங்கங்ளை கண்டு ஏகத்தாளம் இடுவதை நிறுத்திக் கொள்ளவும். இல்லாவிட்டால் அடுத்து வரும் போட்டிகளில் தல கைப்பு, போர்வாள் தேவ், ஜொள்ளின் ஜொள்ளர் பாண்டி ஆகியோர்களும் களம் இறங்க வேண்டியது இருக்கும். இவர்களை கண்டு பிறகு பிற போட்டியாளர்கள் எல்லாம் போட்டியில் கலந்து கொள்ளாமல் பின்னங்கால் பிடறியில் பட ஒடினால் நாங்கள் பொறுப்பு இல்லை, இல்லவே இல்லை.

வெற்றி பெற்ற சிங்கங்கள் :

ஆற்றலரசி பொன்ஸ்


மூன்றாம் இடம் - சந்திரா அத்தை

விவசாயி இளா


நான்காம் இடம் - காலதேவனை வேண்டியப்படி

இடையில் இடறி விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத சிங்கங்கள்:

தளபதியார் நாமக்கல் சிபி





ஏழாம் இடம் - மரணம்

நாகை சிவா(நான் தான்)




பன்னிரண்டாம் இடம் - இதுவும் மரணம் தான்

இடைக்குறிப்பு - நமக்கு ஒட்டுப் போட்ட 16 நபர்களுக்கும் ரொம்ப தாங்கஸ். பதினெட்டுப் பட்டியும் வந்து ஒட்டும் போடும் என நினைத்தேன். இரண்டு பட்டி மிஸ் ஆகிடுச்சு. அவங்கிள ஒழுங்கு கமிட்டியில் கவனித்துக் கொள்கின்றேன். அந்த 16 நபர்களும் யாரு என்று சொல்லி என் வாக்குறுதியை நிறைவேற்ற வழி செய்யும்படி கேட்டுக் கொள்கின்றேன். பொதுவில்(பின்னூட்டத்தில்) சொல்லாம். அல்லது தனி மடலில் சொல்லாம்.

மேட்டர் - 2

சங்கத்தின் சிங்கங்கள் தல கைப்பூ, போர்வாள் தேவ், விவ் இளா, வில்ஸ் பாண்டி, தள சிபி, ஆற்றல் பொன்ஸ், ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்க எல்லாருக்கும் போஸ்டர் அடிக்கலாம் என்று தான் இருந்தேன். நம்ம ஆதிகேசவன் பண்ணிய கூத்தில் என்னால் என் சனநாயக கடமையை ஆற்ற முடியாமல் போயிற்று. எதிர்காலத்தில் சரியாக ஆற்றி விடுகின்றேன்.

Monday, July 24, 2006

வாழ்க சனநாயகம்!


இத படித்தவுடன், மண்ட காய்ச்சல் கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்ததுங்க.

நான் மிகவும் ரசித்து மனம் விட்டு சிரிக்க வைத்தவை - "இந்தியாவின் விடிவெள்ளி" மற்றும் "இலக்கணத்திற்கு இலக்கியமாய் வாழ்ந்து".

நல்லா இருங்கடா சாமி, நல்லா இருங்க.

வாழ்க சனநாயகம் - 2

Thursday, July 20, 2006

இதுவும் மரணம் தான்....






சந்தோஷமாக வானில் சொய்ங் என்று சிறகடித்து பறந்த என் மன்னவன், சிறிது இளைபாறுவதற்காக இந்த சண்டாளன் மேல் அமர, இந்த படுபாதகன் அவனின் ராட்ச கைகளால் என் தங்கத்தை ஒரே அடியில் அடித்து சாகடித்து விட்டானே. இவன் நல்லா இருப்பானா, இவனுக்கு நல்ல.............

டிஸ்கி: இத தேன்கூடு போட்டிக்கு அனுப்ப போறேன். எல்லா சனமும் வந்து மறக்காம ஒட்ட போட்டுட்டு போயிடு. நான் வெற்றி பெற்றால், ஒட்டு போட்ட அனைவருக்கும் ஒரு தொடைத்தட்டி வழங்க... ஆங் இது சரியா வராது. தொடைத்தட்டிக்காவே நம்மள ஜெயிக்க வச்சாலும் வைத்து விடுவீர்கள். அதனால் ஒட்டு போடும் ஒவ்வொருவருக்கும் 10 பின்னூட்டம்(அவர்கள் பதிவில்), ஒரு தனி பதிவு (என் பக்கத்தில்). அம்புட்டு தாம்ப்பா முடியும்.

Tuesday, July 18, 2006

மீண்டும் சுனாமி - மரணம்

நேற்று மீண்டும் இந்தோனேசியாவை சுனாமி புரட்டி எடுத்து உள்ளது. சுனாமி இந்தியாவை தாக்கவில்லை என்று சந்தோஷப்படுவதா அல்லது அங்கு இறந்த 350 மேற்ப்பட்டவர்களுக்காக வருத்தப்படுவதா? ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

மீண்டும் சுனாமி என்று கேள்விப்பட்டதும், போன சுனாமியின் போது எனக்கு ஏற்ப்பட்ட மனவேதனைக்களும், வைரமுத்துவின் பாடலும் தான் நினைவுக்கு வந்தது. அந்த பாடலை கீழே கொடுத்து உள்ளேன்.

உயிர், உடமை இழந்தோர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-------------------------------------------------------------------------------

    ஏ கடலே!
    உன் கரையில் இது வரையில்
    கிளிஞ்சல்கள் தானே சேகரித்தோம்
    முதன்முதலாய்ப் பிணங்கள் பொறுக்கிறோம்

    ஏ கடலே!
    நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா!
    முதுமக்கள் தாழியா?

    நீ கலங்களின் மைதானமா?
    பிணங்களின் மயானமா?

    துக்கத்தை எங்களுக்குத் தந்துவிட்டு
    நீ ஏன் கறுப்பை அணிந்திருக்கிறாய்?

    உன் அலை
    எத்தனை விதவைகளின் வெள்ளைச்சேலை?

    நீ தேவதை இல்லையா
    பழிவாங்கும் பிசாசா?

    உன் மீன்களை நாங்கள்
    கூறுகட்டியதற்கா
    எங்கள் பிணங்களை நீ
    கூறுகட்டுகிறாய்?

    நீ அனுப்பியது
    சுனாமி அல்ல
    பிரளயத்தின் பினாமி

    பேய்ப்பசி உன்பசி
    பெரும்பசி

    குமரிக்கண்டம் கொண்டாய்
    கபாடபுரம் தின்றாய்
    பூம்புகார் உண்டாய்

    போதாதென்று
    உன் டினோசர் அலைகளை அனுப்பி
    எங்கள்
    பிஞ்சுக்குழந்தைகளின்
    பிள்ளைக்கறி கேட்கிறாய்

    அடக்கம் செய்ய ஆளிராதென்றா
    புதை மணுலுக்குள்
    புதைத்துவிட்டே போய்விட்டாய்?

    என்னபிழை செய்தோம்?
    ஏன் எம்மைப் பலி கொண்டாய்?

    சுமத்ராவை வென்றான்
    சோழமன்னன் ராஜராஜன்

    அந்தப் பழிதீர்க்கவா
    சுமத்ராவிலிருந்து சுனாமி அனுப்பிச்
    சோழநாடு கொண்டாய்?

    காணும் கரைதோறும்
    கட்டுமரங்கள் காணோம்
    குழவிகளும் காணொம்
    கிழவிகளும் காணோம்
    தேசப் படத்தில் சில கிராமங்கள் காணோம்

    பிணங்களை அடையாளம் காட்டப்
    பெற்றவளைத் தேடினோம்
    அவள் பிணத்தையே காணோம்

    மரணத்தின் மீதே
    மரியாதை போய்விட்டது
    பறவைகள்
    மொத்தமாய் வந்தால் அழகு
    மரணம் தனியே வந்தால் அழகு
    மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
    சுத்தமாய் மரியாதையில்லை

    அழுதது போதும்
    எழுவோம்
    அந்த
    மொத்தப் பிணக்குழியில்
    நம் கண்ணீரையும் புதைத்து விடுவோம்

    இயற்கையின் சவாலில்
    அழிவுண்டால் விலங்கு

    இயற்கையின் சவாலை
    எதிர்க்கொண்டால் மனிதன்

    நாம் மனிதர்க்கள்
    எதிர்க்கொள்வோம்

    மீண்டும் கடலே
    மீன்பிடிக்க வருவோம்

    ஆனால்
    உனக்குள் அஸ்திகரைக்க
    ஒருபோதும் வர மாட்டோம்

    -வைரமுத்து

-------------------------------------------------------------------------------
ஒலி வடிவில் கேட்பதற்கு இங்கு சுட்டவும்.
தரையிறக்கம் செய்து தான் கேட்க வேண்டும்.
User Name : tamil_blog
Password : tamilblog
-------------------------------------------------------------------------------
திரு. கோவி.கண்ணனின் சுனாமி குறித்த கவிதையை இங்கு காணலாம்.

Saturday, July 15, 2006

4 - சினிமா விமர்சனம்!

என்னடா இவனும் சினிமா விமர்சனத்தில் இறங்கிட்டானேனு பாக்காதீங்க, விதி யாரை விடுது. இந்த வாரத்தில் 4 ஆங்கில படமும், ஒரு இந்தி படமும் பார்க்கும்படி நேர்ந்தது. அதனால் யாம் பெற்ற இன்பம்(துன்பம்) பெறுக இவ்வையகம் என்று விமர்சனத்தில் இறங்கியாச்சு. பங்காளி சந்தோஷ் ஆங்கில படமா என்று அதிர்ச்சி அடையாதே. அதுல ஒரு பெரிய மேட்டரே இருக்கு. இந்த வாரம் ஆரம்பத்தில் மனித உரிமை துறையில் உள்ள இருவர் நம்ம துறைக்கு வந்தார்கள். அதுல ஒன்னு நம்ம ஆந்திராவை சேர்ந்தவர், இன்னவொன்னு அமெரிக்க பெண்மணி. சும்மா வெட்டிப்பேச்சு பேசிகிட்டு இருக்கும் போது பேச்சு அப்படியே பேச்சுவாக்குல சினிமா நோக்கி திரும்பிடுச்சு. அந்த அம்மணி சும்மா இல்லாம நீ அமெரிக்க படம் எல்லாம் பாப்பியானு கேட்க, நானும் ஒரு ஆர்வக் கோளாறால் என்ன இப்படி கேட்டீங்க, ஒரு படம் விட மாட்டமுல என பெரும்பேச்சு பேச போக, அப்ப பார்த்திலே உனக்கு பிடிச்ச படத்தை எல்லாம் சொல்லுனு கேட்டுச்சு. ஆஹா, தேடி போய் சொந்த செலவுல சூன்யத்த கேட்டு வாங்கிட்டோமேனு (நன்றி-வாத்தி இளவஞ்சி) மனதுக்குள் இஷ்ட தெய்வத்த எல்லாம் வேண்டிக்கிட்டு ஒரு நாலு அஞ்சு பேமஸ் ஆன படத்தின் பெயர எடுத்து விட்டேன். ஹும்... ஹும் எல்லாத்தையும் கேட்டுகிட்டு, என் கிட்ட நிறைய சி.டி. இருக்கு, வேணுமுனா சொல்லு தரறேன் சொல்ல, நம்மளே மொழிப் பெயர்ப்பாளர் வச்சுக்கிட்டு ஆங்கில படம் பாக்குற ஆளு, இந்த ஊருல மொழிப் பெயர்ப்பாளருக்கு எங்க போயி அலையுறது, இது என்னடா வம்பா போச்சுனு, இல்ல பரவாயில்ல இப்ப எல்லாம் நான் தமிழ் படம் மட்டும் தான் பாக்குறதுனு சொல்லி அப்படியே எஸ்கேப் ஆக பாத்தேன். விடுவானா நம்ம பக்கத்து மாநிலத்துக்காரன், Henry, (அந்த அம்மணி பெயருப்பா) இவனுக்கு ஆங்கிலப்படம்னா உசிருனு ஒரு பிட்ட போட்டுட்டான். அதுவும் அப்படியானு ஒரு ஆச்சரியக்குறிய வார்த்தையில போட்டுட்டு போயி ஒரு சி.டி. கொண்டு வந்து கொடுத்துட்டு சிவா, இதில் இருக்கும் படம் உனக்கு மிகவும் பிடிக்கும்னு சொல்லிட்டு, பாத்துட்டு உன் விமர்சனத்த சொல்லுனு சொல்லிட்டு போடுச்சு. சி.டி.ய பாத்தவுடன் மனசுக்குள் ஒரு சின்ன சந்தோஷம், அது டி.வி.டி. அப்ப சரி, சப்-டைட்டில எழுத்துக் கூட்டு படிச்சு இதில் இருக்கும் படத்துக்கு விமர்சனத்த சொல்லி தப்பிச்சுடலாம் நினைத்துக் கொண்டேன், அதுக்கும் ஒரு ஆப்பு இருப்பது தெரியாமல்......

அந்த டி.வி.டி.யில் இருந்த படங்கள் - தி ரிங்க், தி அதர்ஸ், ப்பனிக் ரூம், போன் பூத். இந்த படத்த எல்லாம் ஒரு வழியா தட்டுத் தடுமாறி பாத்து கதைய ஒரு மாதிரி புரிஞ்சுகிட்டத கிழ கொட்டுறேன்.

தி ரிங்க (The Ring) - இந்த படத்துக்கு அவ்வளவா பிரச்சனை இல்லங்க, ஏன்னா நம்ம "அரணி பரணி பாடி வரும் தாமிரபரணியின், தவப்புதல்வன்" சிங்கம் டுபுக்கு இந்த படத்தின் விமர்சனத்தை எழுதி விட்டார். இருந்தாலும் நான் பார்த்து புரிந்தது இங்கு - ஒரு டேப்(வீடியோ கேசட்) இருக்குப்பா, அத பாத்தவங்க எல்லாம் அத பார்த்த ஏழாவது நாள் இறந்து விடுகின்றார்கள். இறந்த ஒரு பெண்ணின் உறவினர், அதாம்ப்பா கதாநாயகி அந்த டேப்பை பாக்குறாங்க, அதப் பார்த்தவுடன் ஒரு போன் வருது, இன்னும் ஏழு நாள் தான் என்று. அதில் இருந்து ஒவ்வொரு நாளா ஏழு நாள் வரை கதைப் போகுது. இந்த ஏழு நாள்ல அவங்க என்னவெல்லாம் கண்டுப்பிடிக்கிறாங்க என்பது தான் கதை. நடுவில் இந்த டேப்பை அவங்க பையனும், நண்பரும் வேற பாத்து விடுகின்றார்கள். இந்த படத்தின் + பாயிண்டா ஒளிப்பதிவையும், ஒலிப்பதிவையும் சொல்லாம். இரண்டையும் வைத்து பார்ப்பவர்க்களை மிரட்டி உள்ளார்கள். படத்தின் கதாநாயகி அம்மணி நல்லா நடிச்சு இருக்குப்பா. கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம். இதுக்கு இன்னவொரு பார்ட்ட வேற வந்து உள்ளதாம். பார்த்தவர்கள் சொல்லாம்.

போன் பூத்(Phone Booth) - இந்த தலைப்பு தான் படத்தின் கதையே. ஆமாப்பா, ஒரு போன் பூத்க்குள்ளயே படத்த எடுத்து முடிச்சுட்டாங்க. கதாநாயகன்(கல்யாணம் ஆன) ஒரு ப்பளிக் போன் பூத்துக்கு வந்து தன் காதலிக்கு போன் பண்ணிட்டு திரும்பும் போது, போன் ரிங்க் அடிக்குது, இவர் போன எடுத்தா, போனில் ஒரு குரல் இவர் பெயர சொல்லி கூப்பிட்டுது, அது மட்டும் இல்லாமல் இவனின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்று விடாமல் கூறுகின்றது அந்த குரல். மேலும் அந்த குரல் தான் சொல்லும்படி அவன் செய்யாவிட்டால் அவனை கொன்று விடுவதாக மிரட்டுகிறது. இவன் மிரண்டு போயி யாரு என்னனு கேட்டுக் கொண்டு இருக்கும் போது, வெளியே ஒருவன் போன் பூத்தில் வெகு நேரமாக இவனே பேசிக் கொண்டு மற்றவர்களை(பொண்ணுங்கள) போன் பேச விட மாட்டேன் என்கின்றானே என்று சண்டைக்கு வருகின்றான். அவனை மறுமுனையில் இருக்கும் அந்த குரல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுகின்றது. சுற்றி இருக்கும் அனைவரும் கதாநாயகன் தான் கொலைச் செய்தான் என்று நினைக்கின்றார்கள். அந்த குரல் நீ போனை கட் செய்தால் உன்னையும் கொன்று விடுவேன் என்று மறுபடியும் மிரட்டுகின்றது. அதற்குள் போலிஸ் வர, கதாநாயகனின் மனைவி, காதலி, பத்திக்கையாளர்க்கள் எல்லாம் வந்து விடுகின்றார்கள். ஆனால் அந்த குரல் விடாமல் அவனை மிரட்டிக் கொண்டே இருக்கின்றது. கடைசியில் போலிஸின் உதவியுடன் அவன் எப்படி தப்பிக்கின்றான் என்பது தான் கதை. இந்த படத்தின் திரைக்கதையை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். ஒன்றரை மணி நேரக் கதையை ஒரு போன் பூத்தை சுற்றியும், இருவருக்கும் இடையான உரையாடலை கொண்டுமே போர் அடிக்காமல் படத்தை கொண்டு சென்று இருக்கின்றார்கள். படத்தின் கதாநாயகன் மிக அருமையாக அனைத்து விதமான உணர்ச்சிகளையும் காட்டி உள்ளார். அந்த குரல் உண்மையிலே மிரட்டும் குரல் தான். இது போன்று ஒரு படம் தமிழில் வர வேண்டும்.

தி அதர்ஸ்(The Others) - இது கொஞ்சம் வித்தியாசமான படம். கணவன் போரில் இறந்து விட்டான் என்று நம்பும் மனைவி தன் இரு குழந்தைகளுடன் ஒரு வீட்டில் வாழ்ந்து வருகின்றார். அந்த குழந்தைகளால் ஒரு விளக்கின் ஒளியை தவிர பிரகாசமான ஒளியை பாத்தால் இறந்து விடக்கூடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அதனால் வீடு முழுவதும் வெளிச்சம் உள்ளே வராதாவாறு தீரை சீலைக் கொண்டு மூடி வைத்து உள்ளார். அந்த வீட்டில் புதிகாக மூன்று வேலையாட்கள் சேருகின்றார்கள். அந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தை அடிக்கடி ஒரு சிலரை பார்ப்பதற்காக தன் தாயிடம் கூறுகின்றது. அதை நம்பாத தாய் ஒரு சமயத்தில் தானும் அதுப் போல உணர்க்கின்றாள். அவளுக்கு இந்த பேய், பிசாசுகளின் மேல் நம்பிக்கை இல்லாதால், இது வேற யாருடைய சதி என்று நினைக்கின்றாள். ஒரு நாள் தீடிரென்று வீட்டில் இருந்த அனைத்து திரைசீலைகளும் காணாமல் போகின்றது. தீரைச்சீலைகள் இல்லாததை கண்டு குழந்தைகள் அலற, ஒரு போர்வையால் அவர்க்களை போர்த்தி, வீட்டின் வேலைக்காரர்க்கள் மேல் சந்தேகப்பட்டு அவர்களை வேலையை விட்டு அனப்புகின்றாள். அன்று இரவு, அந்த வேலையாட்கள் மூவரும் வீட்டை நோக்கி வருகின்றார்கள், கதாநாயகி அவர்களை பிசாசுகள் என்று நினைத்து குழந்தைகளை ஒரு இடத்தில் ஒளிந்து கொள்ள கூறி விட்டு அவர்களை நோக்கி துப்பாக்கியால் சூடுகின்றாள், பின் வாசல் கதவை அடைத்து விட்டு, மாடிக்கு வருகின்றாள். அங்கு ஒரு ஐந்து நபர்கள் அமர்ந்து ஒரு முக்கியமான விசயத்தை குறித்து விவாதித்து கொண்டு இருக்கின்றார்கள். அது என்ன என்பது தான் சஸ்பென்ஸ். யாருமே ஊகிக்க முடியாத ஒரு கதை என்று சொல்லாம். அனைவருமே மிக அருமையாக நடித்து உள்ளார்கள். கொடுரமான பேய் முகம், ரத்தம் போன்றவைகள் இல்லாமல் படத்தை மிக அருமையாக நகர்த்தி இருக்கின்றார்கள். ஒளிப்பதிவை மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

ப்பனிக் ரூம் - Panic Room - ஒரு வீட்டிற்கு சமீபமாக விவாகரத்து பெற்ற ஒரு தாய் தன் மகளுடன் குடியேறுகின்றார். அன்று இரவே அந்த வீட்டில் இருக்கும் 22 மில்லியன் டாலர் மதிப்பு உள்ள பத்திரத்தை எடுப்பதற்கு மூன்று நபர்கள் வருகின்றார்கள். அவர்கள் வீட்டில் நுழைந்ததை அறிந்த தாய், தன் மகளுடன் சென்று ஒரு பாதுகாப்பான அறையில் ஒளிந்துக் கொள்கிறாள். அந்த அறையில் தான் அந்த பத்திரம் உள்ளது. அந்த அறை மிகுந்த பாதுக்காப்பான அறை, அந்த அறையில் நுழைவதற்கு அந்த நபர்கள் செய்யும் முயற்சிகளும், இடையில் அவர்கள்குள்ளே ஏற்படும் பிரச்சனை, இந்த நபர்களிடம் இருந்து தப்பிப்பதற்கு அந்த தாய் எடுக்கும் முயற்சிகள் என்று படத்தை மிகவும் விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கின்றார்கள். அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்று ஆவலை தூண்டும்படி இருப்பது இந்த படத்தின் திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி என்று கூறலாம். இதுவும் பார்க்க கூடிய ரகத்தை சேர்ந்த படம் தாங்க.

அம்புட்டுத் தாங்க,மேல சொன்ன ஆப்பு என்னனா, நான் பார்த்த நாலு படத்தில தி அதர்ஸ் படத்துக்கு மட்டும் தாங்க சப்-டைட்டில் இருந்தது. மற்ற படத்துக்கு இல்லங்க. ஏதோ தட்டுத் தடுமாறி ஒரு மாதிரி புரிஞ்சி நான் இந்த விமர்சனத்தை எழுதி இருக்கேன். எங்க எங்க தப்பு பண்ணி இருக்கேன் என்று இந்த படத்தை எல்லாம் (புரிஞ்சி) பாத்தவங்க, கொஞ்சம் கதைய சொல்லி இந்த தம்பியின் மானத்தை காப்பாத்துங்க செல்லங்களா....

Monday, July 10, 2006

ஏய் குருவி! சிட்டுக் குருவி...

ஏய் குருவி!
குருவி, குருவி.,

ஏய் குருவி!
சிட்டுக் குருவி!


உன் ஜோடிக் எங்க அத கூட்டிக்குட்டு,
எங்க வீட்டத்துல வந்து கூடு கட்டு
பொல்லாத வீடு, கட்டு பொன்னான கூடு

இப்ப பொண்டாட்டி இல்லை, வந்து என் கூட பாடு ...
ஏய் குருவி!


சிட்டுக் குருவி! ஏய்ய குருவி!
அய்யா, உள்ளத்தில நல்ல அன்பு இருக்கு
ஆனா வீட்டுக்குள்ள கொஞ்சம் வம்பு இருக்கு

பொண்டாட்டிக்காரி என்னானு பார்ப்பா,
வந்து உன் கூட்டப் பார்த்தா
கொடக் கூலிக் கேட்ப்பா,
ஏய் குருவி, சிட்டுக் குருவி


ஏய் எவடி, அடியே எவடி
ஏய், எவடி அது....

















மேட்டரு என்னான,சில வருடங்களுக்கு முன்பு வரை நம் வீடுகளில் அதிக அளவில் காணப்பட்ட சிட்டுக்குருவிகளை இப்பொழுது முன் போல் காண முடிவதில்லை. அழிந்து வரும் பறவை இனத்தில் அதுவும் சேர்ந்து விட்டதாக எங்கோ படித்த ஞாபகம். இங்கு தற்சமயம் நான் உள்ள வீட்டிற்கு வந்த நாளில் இருந்து காலை வேளைகளில் குருவியாரின் குரலை மட்டும் அடிக்கடிக் கேட்க முடிந்தது. நேற்று தான் தரிசனம் கிடைத்தது. உடனே புகைப்படமாக பிடித்து வைத்துக் கொண்டேன். குருவியாரின் குரலைக் கேட்டும் போது எல்லாம் எங்கள் பழைய வீட்டு(நாகையில்) மாடி அறையில் குருவியார் கட்டிய கூடுகள் எல்லாம் ஞாபகத்துக்கு வருகின்றது. ஹம்....

குருவி என்றாலே ராக தேவனின் இசையில் முதல் மரியாதை படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல் தான் உடனடியாக நினனவுக்கு வரும். அதனால் அந்த பாடல் மேலே, நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

Tuesday, July 04, 2006

சிந்தனைத் துளிகள்!

"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, ஆன்மீகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது."

"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்."

"பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஒயாது சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பது தான்."

"'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்."

"மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களை விடவும் உயர்ந்தவன். மனிதனை விட உயர்ந்தவர் யாருமே இல்லை."

"தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன".

"உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான்."


"தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும்."

"எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லா தேவைகளையும் எல்லா துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது."

"முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி பிறகு உனக்குத் தானாக வந்து சேரும்."

"பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம்".

"கண்டனக் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்".

"அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே. ஏனெனில் அது அவனுடைய பாதை, உன்னுடையது அல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து விட்டாயானால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை; கைகளைக் குவித்த வண்ணம் சரணடைந்து விடு. பாதையின் வேகமே உன்னை உனது லட்சியத்தில் சேர்த்து விடும்."


இன்று சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்.

தொடர்புடைய பதிவுகள்:

சிவபாலன் - சு.வி. - ஒலிப்பேழை

Sunday, July 02, 2006

கவுத்துடாங்களே! கவுத்துடாங்களே!


வேற யாரு எல்லாம் நம்ம பிரேசில் கால்பந்தாட்ட அணி தான். படுபாவி பயல்க. இவங்க ஆட்டத்தை பார்த்து தூக்கம் கெட்டது தான் மிச்சம். ஆனாலும் சும்மா சொல்ல கூடாது, நேற்று நடந்த இரண்டு ஆட்டத்திலும் சூடு ரொம்பவே அதிகம். முதல் கால் இறுதி போட்டியில் இங்கிலாந்து மண்ணை கவ்வியது. அடுத்த கால் இறுதியில் பிரேசில் மண்ணை கவ்வியது. பிரான்ஸ்சின் ஜிடேன் உண்மையிலே ஒரு கலக்கு கலக்கி விட்டார். நம்ம பிரேசில் மக்களை பற்றி என்ன சொல்வது, ஒரு பய கூட நம்ம மானத்தை காப்பாற்றுப்படி ஆடவில்லை. அப்படி என்னத்த மானமுன் கேட்கின்றீர்களா, இந்த தடவை பிரேசிலுக்கு தான் கோப்பைனு நான் ரொம்பவே பெரும் பேச்சு பேசிகிட்டு இருந்தேன். இப்ப வாயை திறக்க முடியாதப்படி செய்து விட்டார்களே என்ற ஆதங்கம் தான். அதிலும் நம்ம கூட இருக்க ஒரு பய நேற்று என்னை ரொம்ப ஒவராவே கலாய்த்து விட்டான். அவனுக்கு பிரான்ஸ் அணியை பிடிக்காது, இருந்தாலும் நேற்றைய பிரேசில் எதிரான போட்டியில் பிரான்ஸ்க்கு சப்போட் பண்ணினான், ஏன் என்றால் போன போட்டியில் பிரேசில் காணாவை தோற்கடித்து விட்டதாம். அதனால் இந்த போட்டியில் பிரான்ஸ்க்கு சப்போட் பண்ணுறானாம்.



பிரான்ஸ் வெற்றி பெற்றதும் பிரான்ஸ்யில் இருப்பவன் கூட இவன் கத்திய அளவுக்கு கத்தி இருக்கமாட்டார்க்கள். அஞ்சலி படத்தில் வரும் டயலாக் போல, பேசு சிவா, பேசு சிவா உயிர எடுத்துட்டான். என்னடா இவன் அலம்பலுக்கு அளவே இல்லாமல் போயிகிட்டு இருக்குதுனு நானும் பொறுமையாக இருந்தேன். போட்டியை பார்த்து முடித்த பிறகு வீட்டுக்கு செல்லும் போது அந்த நாதாரி முன் சீட்டில் வர்க்காந்தது. சீட் பெல்ட போடுடா என்று மரியாதையா தான் சொன்னேன். நம்ம தல கைப்பூ மாதிரி, நாங்க எல்லாம் என்னிக்கு சீட் பெல்ட் போட்டு இருக்கோம். நீ ரோட்ட பாத்து வண்டிய ஒட்டுனு கைப்பூ ஸ்டைலில் சொன்னான்.(எனக்கு அப்படி தான்
கேட்டது). அந்த பயல நானும் நேற்று காலையில் இருந்து நாலு, ஐந்து தடவை வண்டி ஒட்டும் போது எல்லாம் சீட் பெல்ட போடுனு சொல்லிகிட்டே இருந்தேன். பய புள்ள காலையில் இருந்து கேட்கல, ஆனால் இரவு ஏற்கனவே பிரேசில் தோற்றுவிட்டதே என்ற கடுப்பு வேற, மவனே நீ இதுவரைக்கு கைப்பூ பற்றி கேள்விபட்டதே இல்ல, நீயே அவரு வாய்ஸ்ல பேசும் போதும், பொழுதனைக்கும் அவருக்கு எப்படி ஆப்பு வைப்பதுனு யோசிகிட்டு திரியற எனக்கு எம்புட்டு இருக்குமுனு நினைச்சிகிட்டு உனக்கு வைக்கிறண்டி இன்னிக்கு ஆப்புனு, ஏதும் பேசமா வண்டிய ஒட்டினேன். பய நல்லா பவ்யமா சீட்ட பின்னுக்கு தள்ளி, காலை டாஸ்போட்டில் முட்டு கொடுத்து , கையை தலைக்கு பின்னாடி வைச்சிகிட்டு சுகமா வர்கார்ந்து இருந்தான். அதுல அப்ப அப்ப சீட்டி வேற. தீடிரென்று நம்ம மண்டைக்குள் ஒரு பல்பு எரிந்தது. கமல் போல் தலையில் இரண்டு கொம்பு வேற முளைத்தது.உடனே ஆக்ஸ்லேட்ரை மேல் ஏறி நிற்காத குறையாக மிதித்தேன். எல்லாம் அந்த ரோட்டியில் ஒரு பெரிய வேகத்தடை இருப்பது தெரிந்து தான். வேகத்தடைக்கு மிக அருகில் வந்து நச்சு என்று பிரேக்கை மிதித்தேன். பய புள்ள வண்டிக்குள்ளயே ஒரு சின்ன குடிக்கரணம் அடித்தான். அடிச்சு முடித்துட்டு என்னை பார்த்தான், நான் பாவமாக முகத்தை வைத்து கொண்டு அவனை பார்த்தேன், ஏதும் கேட்காமல் சீட் பெல்டை போட்டு கொண்டு புள்ள மாதிரி வர்க்கார்ந்து வந்தான். எனக்கு ஒரு சின்ன சந்தோஷம், அவ்வளவே! பய வீட்டுக்கு வந்தும் வாயை துரக்கலை.

இன்று காலை வண்டியை எடுக்கும் போது, பின் சீட்டில் போயி அமர்ந்து கொண்டான். என்னடா, எப்பவும் முன்னாடி தானே வர்க்காருவே, இன்னிக்கு என்ன, வந்து முன்னாடி வர்க்கார் என்று சொன்னேன். பய நம்மள கையேடுத்து கும்பிட்டு, நீ வண்டி ஒட்டும் போது நான் முன் சீட்டில் வர்க்காரவும் மாட்டேன், உன் கிட்ட இனிமேல் வாய் குடுக்கவும் மாட்டேன் சொல்லிட்டு, சீட் பெல்ட போடுகிட்டான். அப்பாடா இன்னிக்கு ஆபிஸ்ல இவனின் பெரும் பேச்சு தொல்லை இருக்காதுனு எனக்கு நிம்மதியா போச்சு, அதானே நமக்கும் வேணும் :)