Wednesday, May 31, 2006

கட்டாய தமிழ்!

இன்று சட்டசபையில் தமிழ் மொழியை 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக்க சட்ட மசோதவை தாக்கல் செய்து அதை நிறைவேற்றி உள்ளார்கள். இது மிகவும் வரவேறக்கதக்கது. அதை குறித்த செய்தி குறிப்பு கிழே,

2006-07 கல்வியாண்டில் இருந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்குவது என்றும் பினவரும் வடிவமைப்பை அறிமுகம் செய்வதெனவும் கருதப்பட்டுள்ளது.

பகுதி 1 - தமிழ்(கட்டாயம்)

பகுதி 2 - ஆங்கிலம்(கட்டாயம்)

பகுதி 3 - கணிதம், அறிவியல், சமூக அறிவியல் முதலான பிற பாடங்கள்

பகுதி 4 - தமிழ் அல்லாத ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிராத மாணவர்கள் அவர்த்தம் தாய் மொழியை ஒரு விருப்ப பாடமாக கற்கலாம்.

அரசு ஆழ்ந்த பரிசீலனைக்கும், ஆய்வுக்கும் பின்பு இந்த ஆண்டில் இருந்து படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடங்களில் ஒன்றாக கற்பதற்கு வகை செய்வதற்கென இச்சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

அனைத்து பள்ளிகளில் மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகளும், மாநில நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளி உள்பட அனைத்து தனியார் பள்ளிகளும், மாநில அரசு நிதி உதவி பெறாத சிறுபான்மையினர் பள்ளி உள்பட அனைத்து மழலையர், தொடக்கபள்ளி, மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் கீழ்த்திசைப் பள்ளிகளும் இதில் அடங்கும் என அந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவில் என் கருத்துகளை பதிவு செய்வதற்கு முன்பாகவே, ஆங்கிலம் வேண்டாமா, இந்தி தெரியாமல் தமிழ் நாட்டிலே முடங்க போகின்றாயா என பல பின்னூட்டங்கள் வந்து உள்ளது. அதற்கு பதில் அளிப்பதற்கு முன்பு, இந்த சட்ட பற்றி என் கருத்துகளையும் பிற கருத்துகளையும் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

முதலில் இந்த சட்டம் அமல்படுத்தியதற்கு முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் அவரின் அரசுக்கும் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றேன்.

அந்த சட்ட மசோதவுடன் பின்வருவனற்றையும் அமல்படுத்த வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

இதுவரை தமிழை முதல் பாடமாக படிக்காத மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது தான் முறையாக இருக்கும்(குறைந்தபட்சம் 9ஆம் மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு)

தமிழ் பாடத் திட்டத்தை எளிமை படுத்த வேண்டும்.

தமிழ் மொழியை படிப்பதற்கு ஒரு ஆர்வம் உண்டாக்கும் விதமாக இருக்க வேண்டும்.

பிற மொழிகளும் பயில வாய்ப்பு அளிக்க வேண்டும்.

தமிழ் மொழிகளில் ஆர்வம் ஏற்படும் வண்ணம் பல Work Shop நடத்த வேண்டும்.

பல போட்டிகள் நடத்தி அவர்களின் தமிழ் திறமையை வெளிக் கொண்டு வர வேண்டும்.

தமிழ் மணத்தில் தமிழ் படிப்பதை குறித்து, இந்தி தெரியாமல் இருப்பதற்கு வெட்கபட வேண்டும், இந்தி படிக்காதால் அவமானப்பட்டோம் என பல பதிவுகள் வந்து உள்ளது. இந்த பதிவின் மூலம் தமிழ் மற்றும் இந்தி குறித்த என் கருத்துகளை இந்த பதிவுல் பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன்.

தமிழ் மொழியை இங்கு கட்டாயமாகாமல் வேறு எங்கு கட்டாயம் ஆக்குவது.

ஆங்கில மொழியை இலக்கண தவறாக பேசினால் வெட்கபடும் நாம், தமிழ் இலக்கணம் கற்று கொள்ளாமால் இருப்பதற்கு என்றாவது வெட்கபட்டு, குறைந்தபட்சம் யோசித்து இருக்கின்றோமா?

இந்தி மொழி பயிலமால் இருப்பதற்கு வெட்கபட வேண்டிய அவசியம் இல்லை. என்னை பல நாட்டவர்கள் இந்தி தெரியாதா என கேட்டால், தெரியாது என வெட்கபடாமல் கூறுவேன். எதற்காக வெட்கபட வேண்டும். அது ஒன்றும் என் தாய்மொழி அல்லவே. என் தாய்மொழி தவிர மற்ற மொழிகளை கற்பதும், மறுப்பதும் என் தனிப்பட்ட விருப்பம். அதில் தலையீட யாருக்கும் எந்த ஒரு முகாந்திரம் கிடையாது.ஆனால் தாய் மொழி கற்காமல் வெறும் பேச்சு மொழியாக நிறுத்தி கொள்ளவது சரியல்ல.நம் பெற்ற தாயை மறுப்பதும், தாய் மொழியை கற்க மறுப்பதும் கிட்டதட்ட ஒன்று தான்.

முதலில் தமிழர்கள் ஒருவருக்கு ஒருவர் பிற மொழிகளில் பேசுவதை தவிர்க்க வேண்டுகிறேன். இங்கு பீட்டர் விட்டு ஒன்றும் பெரிதாக சாதிக்க போவது ஒன்றும் இல்லை. போலி வேஷம் போடுவதை தவிர்க்க முயலுங்கள். அவர் அவர்களின் தாய் மொழி தான் அவர்களின் கலாச்சாரத்தின் முதல் வெளிப்பாடு. உங்கள் அடையாளங்களை தொலைத்து அடுத்தவர்களின் அடையாளத்தை மூகமுடியாக அணிய முயல்வது ஏன்?

இந்தி மொழி கற்காதால் நாங்க(தமிழ்மணத்தின் என் கருத்தோடு ஒத்து போகும் மற்ற வலைப்பதிவாளர்கள்) என்ன சிறுமைப்பட்டா விட்டோம். இந்தி தெரியாதா என ஏரளம் செய்பவர்களை கண்டு வெட்கப்படுவதை முதலில் நிறுத்துங்கள். எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

ஒரு முறை ஆப்கானிஸ்தான் ஒருவன் என்னிடம் இந்தியில் கேள்விகள் கேட்க நான் ஆங்கிலத்தில் பதில் அளித்து கொண்டு இருந்தேன். நீ ஏன் இந்தியில் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாய் என வினவினான். எனக்கு இந்தி தெரியாது எனக் கூறினேன். இந்தியன் நீ உனக்கு இந்தி தெரியாதா என கேட்டான். உடனே அருகில் இருந்த வட இந்தியன், அவன் முழு இந்தியன் கிடையாது, அரை இந்தியன் எனக் கூறினான். நான் பொறுமையாக இந்தி பேசினால் தான் இந்தியன் என நீ நினைத்தால் நான் ஒன்றும் பண்ண முடியாது. அதும் இல்லாமல் மொழியின் அளவை பொறுத்து என் தேசப்பற்றை வரையுருக்கும் உன் அறியாமையை நினைத்து வேதனைப்படுக்கின்றேன் என கூறினேன். பிறகு அன்று முழுக்க என்னிடம் அவன் வாய் திறக்கவில்லை.

மற்றோரு முறை இன்னொருவன், இந்திய நண்பர்களுடன் நடந்த ஒரு கலந்துரையாடலின் போது இந்தி தெரியாத நீ எல்லாம் இந்தியாவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என ஆவேசமான கூறினான். அவனை விட ஆவேசமாக இந்திய ரூபாயில் இருந்து இந்தியை தவிர மற்ற மொழிகளை அல்லது குறைந்தப்பட்சம் தமிழ் மொழியை நீக்கி விடு அன்றே நான் உட்பட அனைத்து தமிழர்களும் இந்தியாவை விட்டு வெளியேற்கின்றோம் என கூறினேன். அவன் பதில் ஏதும் சொல்லி இருப்பான் என நினைக்கின்றீர்கள்.

இது போன்ற எண்ணில் அடங்கா பல சம்பவங்கள், இவை அனைத்துக்கு பிறகும் கூட நான் இந்தி தெரியாதற்கு வருத்தப்பட்டதில்லை. வருத்த பட போவதுமில்லை. எனக்கு இந்தி கற்று கொள்ளவதற்கு என்று தோணுகிறதோ, அன்று நான் இந்தி கட்டாயம் கற்று கொள்வேன். அது என் சொந்த விருப்பமாக தான் இருக்கும்.அடுத்தவர்களுக்காக இருக்காது.

என் அனுபவங்களை ஏனோ இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள தோணியது. அதனால் இந்த பதிவில் இதை பதிவு செய்தேன். இந்த சட்ட மசோதாவிற்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்க்கள் என்ற நம்பிக்கையுடன் முடிக்கின்றேன்.

Friday, May 26, 2006

தவறு யாரு மீது?

இன்று சட்டபேரவையில் நடந்த நிகழ்வுகள் மிகுந்த வருத்துக்குறியது மற்றும் கண்டிக்கதக்கது. அ.தி.மு.க பலமான எதிர்கட்சி தான், அதுக்காக பலத்தை இப்படி காட்ட கூடாது. திருந்தவே மாட்டார்களா நம் மக்கள் பிரநிதிகள்?????????? தவறு யாரு மீது??

தவறான புள்ளி விபரத்தை தந்த பீட்டர் அல்போன்ஸ் மீதா?
அதை இடைமறித்து பேசிய அன்பழகன் மீதா?
உர்கார்ந்து கொண்டு நல்லா ஜால்ரா அடிக்கீறிங்க என கூறிய ஜெயகுமார் மீதா?
மைண்ட் யுவர் பிசின்ஸ் என கூறிய பீட்டர் அல்போன்ஸ் மீதா?
மைக்கை பிடுங்கி அடித்த கலைராஜன் மீதா?
முதல்வரை நோக்கி பாய்ந்த சேகர் பாபு மீதா?

சே. சே. இவங்க யாரு மீதும் தவறு கிடையாது.........
இவர்கள் அனைவரையும் ஒட்டு போட்டு தேர்ந்து எடுத்து தொகுதிக்கு(தமிழகத்திற்கு) ஏதாவது நண்மை செய்யவார்கள் என எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கின்றோம் பாருங்க, நம்ம மேல தாங்க எல்லா தப்பும்.
தவறு செய்து விட்டோம். தண்டனையாக இவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்து தான் ஆக வேண்டும்.

வல்லமை தாராயோ சிவசக்தி...............

Thursday, May 25, 2006

மது..... போட்டாச்சு! போட்டாச்சு!


நம்ம மதுமிதா ஏதோ நூல் ஆய்வு செய்கின்றாராம். அது போல நூல் ஆய்வு எல்லாம் நமக்கு வேலைக்கு ஆவாது, அவருக்கு இந்த பதிவு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருந்தாலே சந்தோஷம். வாழ்த்துக்கள் மதுமிதா!!!


வலை பதிவர் பெயர் : நாகை சிவா
வலைப்பூ பெயர் : ஏதோ சொல்கிறேன்!!!
சுட்டி(URL) : http://tsivaram.blogspot.com
ஊர் : அல் - பஷர், தார்ப்பூர் - இப்பொழுது வாசம் புரிவது(சொந்த ஊர் - மும்மதத்தின் சங்கமம் ஆன நாகப்பட்டிணம்)
நாடு : சூடான் - இப்பொழுது வாசம் புரிவது(சொந்த நாடு - புண்ணிய பூமி பாரதம்.
வலைப்பூ அறிமுகம் செய்தவர் : நண்பர் பாபு அவர்களின் வலை பக்கத்தின் மூலம் பத்ரியின் வலைப்பதிவுகள்
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம் : 01-02-2006
இது எத்தனையாவது பதிவு : 23
இப்பதிவின் சுட்டி : http://tsivaram.blogspot.com/2006/05/blog-post_25.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள் :எல்லாம் ஒரு மனதின் வடிக்காலுக்கு தான், அதுவும் இல்லாமல் தமிழில் எழுத வேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்றவும் கூட..
சந்தித்த அனுபவங்கள் : இது வரை சுகமே...... இனிமேலும் சுகமே!
கற்றவை : அனேகம்...
எழுத்தில் கிடைத்த சுகந்திரம் : மனதில் தோன்றுவது, மனதை பாதிப்பது என எதை பற்றி வேணுமாலும் எழுவதற்கு முடிகின்றது.
இனி செய்ய நினைப்பவை : சொல்லி செய்யாமல் இருப்பதற்கு பதில், சொல்லாமல் செய்ய ஆசைப்படுகின்றேன்.
உங்களை பற்றிய முழுமையான குறிப்பு : நாகையில் பிறந்து, வளர்ந்து, படித்து, சென்னையில் சில காலம் தொழில்நுட்பத்தையும், வாழ்க்கையையும் கற்று, ஒரு சில நல்லது, கெட்டதில் சொந்தகளையும் நண்பர்களையும் புரிந்து, கடந்து வருடம் முதல் 110 கோடி இந்தியர்களின் சார்பாக ஒரு சில இந்தியர்களில் நானும் ஒருவனாக ஐ.நா.விற்கு வேலை செய்து கொண்டு இருக்கின்றேன்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றை சேர்க்கலாம் : ஒன்றை மட்டும் கூற வேண்டுமா, அப்ப நன்றி தான் சொல்லனும்.....
வலைப்பதிவில் நுழைவதற்கு காரணமாக இருந்த பாபு அண்ணனுக்கும்,எழுவதற்கு ஆர்வமுட்டிய பத்ரிக்கும், முதல் பின்னூட்டம் இட்டு வரவேற்ற ரஜினி ராம்கிக்கும், பின்னூட்டங்கள் திரட்டுவதற்கு உதவி இதுவரை என் பதிவில் பின்னூட்டம் இடாத மாயவரத்தானுக்கும், புதிதாக வருபவர்களை வரவேற்று பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தியும், 13 மணி நேரம் ஆறி போன மசால் வடைக்கு ஒரு பதிவு போட்டு இப்படியும் பதிவுகள் போடலாம் என ஐடியா கொடுக்கும் துளசியக்காவுக்கும், வருத்த படாத வாலிபர்கள் சங்கம் நாகை மாவட்ட பதவி கொடுத்து கெளரவபடுத்திய தல கைப்புள்ளகும், மற்ற சங்க உறுப்பினர்களுக்கும், அவரின் பதிவில் பின்னூட்டம் இட்டால் தேடி வந்து பின்னூட்டம் விடும் கீதா சாம்பசிவம், மதுரை சால்னா ருசிப்பதற்கு கனடா கால்கரிக்கு கூப்பிடும் கால்கரி சிவா, நன்றாக எழுதி கொண்டு இருக்கும் போது திடீர் என்று நாய், பூனை, ஆந்தை பற்றி எல்லாம் கவிதை எழுதி என்னை குழப்பிய முகமூடி & குசும்பணாருக்கும், சுடானில் என் தனிமையை தவிர்க்க உதவிய, உதவும் இட்லி வடை, முத்து(தமிழினி), குழலி, தேவ், கோவி கண்ணன், பாஸ்டன் பாலா, சிங். ஜெயகுமார், செந்தழல் ரவி, அனுசுயா, சண்முகி, நிலவு நண்பன், உஷா, அருட்பெருங்கோ, குப்புசாமி செல்லமுத்து, தெக்கிகாட்டான், பாலபாரதி மற்ற அனைத்து தமிழ் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் நன்றி. நான் கிறுக்குவதையும் படித்து பெருமைப்படும் திரு,வேணு,செல்லஜனிக்கும், உற்ற நண்பர்களுக்கும் மற்ற அனைத்து நல்லூருக்கும், இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த மதுமிதாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Sunday, May 21, 2006

இந்தியா 2020வில்....

மக்களே! இன்று என் மின் அஞ்சலுக்கு வந்த சில புகைப்படங்களை இங்கே கொடுத்து உள்ளேன். இந்தியா 2020வில் இப்படி இருக்கும் என கூறுகின்றார்கள். இது கிராபிஸ் திருவிளையாடலா இல்லை உண்மையில் இப்படி ஏதும் திட்டம் இருக்கா என்று தெரியவில்லை. ஆனா புகைப்படங்களை கானும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு. தாமதமாக(2020) நடந்தாலும் திட்டம் நிறைவேற்றப்பட்டால் சரி. "BETTER LATE THAN NEVER" ஆனால் இதுல வருத்தம் என்னா தமிழ்நாட்டை பத்தி ஒரு புகைப்படம் கூட இல்லை. நம்ம பத்ரி கூறியதை போல தமிழகத்தில் 2010க்குள் மெட்ரோ ரயிலை சென்னையில் செயல்படுத்த வேண்டும். சென்னையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தமிழகம் முழுவதும் உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். சரி நம் தமிழகத்தை பத்தி பிறகு வேற ஒரு பதிவில் விரிவாக காணலாம்.

கனவுகள் (புகைப்படங்கள்) மெய்பட வேண்டும்..........வேண்டுவோம்!




























புகைப்படங்கள் குறிப்பு:
1 - மும்பை
2 - பெங்களூர்
3 - கொச்சின்
4 - கோவா

Thursday, May 18, 2006

சிறிது இளைப்பாறுங்கள்!



தேர்தல் முடிந்து புது ஆட்சி அமைந்து சட்டசபையும் தொடங்கியாச்சு. நாள் ஒரு வண்ணம் பொழுது ஒரு வண்ணமும் இவங்க அடிக்கற கூத்து சட்டசபையில் அரங்ககேற போகுது. அதை எல்லாத்தையும் விடுங்க. பின்வரும் முகவரிகளுக்கு விஜயம் செய்யுங்கள். மனதை இளப்பாற வைத்து, மவூஸ் கொண்டு விளையாடுங்கள். வாய் விட்டு சிரிங்கள்.

முகவரிகள் உபயர் - வாணி ராஜ்குமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

இடைகுறிப்பு : அனைத்து முகவரியில் தோன்றும் படத்தில் மவூஸ் கொண்டு நகர்த்தவும்.

http://www.nobodyhere.com/toren.hier

http://www.sunbelt-software.com/stu/eye.htm

http://www.nobodyhere.com/justme/bed.here

http://www.swingthebaby.com/

http://andrius.esu.lt/10/go2.htm

http://img.tapuz.co.il/forums/8572800.swf

http://www.dayofbirth.co.uk/

http://www.moneyfactory.com/newmoney/flash/interactivebill/index.cfm

பின் குறிப்பு: இங்கு இருக்கும் படத்துக்கும், முகவரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சும்மா...............

Sunday, May 14, 2006

அன்னையர் தினமாம்!



நம் நாட்டிற்கு இது தேவையா, அவசியமா போன்ற கேள்விகளுக்கு நானும் என் ஆதரவை தெரிவிக்கின்றேன். அது என்ன தனியாக ஒரு தினம். நம் நாட்டை பொறுத்தவரை, குறைந்தபட்சம் என்னை பொறுத்தவரை தினம் தினம் அன்னையர் தினம் தான். சரி, அன்னையர் தினத்தில் நம்பிக்கை இல்லனு சொல்லியாச்சு, அப்புறம் எதுக்கு இந்த பதிவுனு யாரும் கேட்பதற்கு முன்பு நானே காரணத்தை சொல்லி விடுகின்றேன். இந்தியாவில் இருந்தாலும் சன் தொலைக்காட்சியில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு அன்னையரை போற்றலாம். சுடானில் சன் தொலைக்காட்சிக்கு வழி கிடையாது. அதுனால ஒரு பதிவு ஒன்னு போட்டு அன்னையரை போற்றலாம் என்பதற்காக தான் இந்த பதிவு.

என் அன்னை மற்றவர்களை பொருத்தவரைக்கும் ஒரு சதாரண(சராசரி) அம்மா தான். ஆனால் எனக்கு ஸ்பேஷல் தான். அப்படி என்ன ஸ்பேஷல்...

பின் தூங்கி முன் எழுர்ந்து, மற்றவர்களுக்கு முன்னால் எனக்கு படுக்கையறை காபி தருவதும்.,
சரியான நேரத்தில் சாப்பிட வரவில்லை என்றால் கைப்பேசியில் அழைப்பதும்.,
என் சகோதரன் கிண்டல் செய்தாலும் எனக்கு பிடித்த பதார்த்தங்களை செய்து கொடுப்பதும்.,
நான் வரும்வரை சாப்பிடாமல் காத்து இருப்பதும்.,
நாங்கள் திட்டினாலும் திருந்தாத சொந்தங்களுக்காக பரிந்து பேசுவதும், அவர்களுக்கு உதவி செய்து கடைசியில் கெட்ட பெயர் எடுப்பதும்.,
இன்னும் உலகம் புரியாமல் இருப்பதும்.,
இரவில் எவ்வளவு தாமதமாக வந்தாலும் விழித்து இருந்து கதவு திறந்து விட்டு சில திட்டுகளை உதிப்பதும்.,
எனக்காக மெகா சீரியலை விட்டுக் கொடுப்பதும்( இது ரொம்ப பெரிய விசயங்க, சில சமயம் தான்).,
எனக்காக தந்தையிடம் பரிந்துரை செய்து காரியத்தை நிறைவேற்றி தருவதும்.,
அவர்களுக்கு நான் வாங்கி கொடுத்த பொருட்களை மற்றவர்களிடம் பெருமையாக காட்டுவதும்.,
வெளியூர்/வெளிநாட்டில் இருந்து எப்பொழுது தொலைப்பேசியில் அழைத்தாலும் சாப்பிட்டாயா என முதலில் கேட்பது(சாப்பிடுரத வேறு எதுமே தெரியாதா என நான் பலமுறை கடிந்து கொண்டாலும் அவர்கள் மாற வில்லை)

இன்று தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட போது கூட என்ன சாப்பிட்டாய் என்று தான் முதலில் கேட்டார். என் தந்தை அன்னையர் தினத்தில் அன்னைக்கு என்ன விசேசம், என்ன பரிசு எனக் கேட்டார். நான் பதில் எதும் சொல்லவில்லை. என் அம்மாவிடம் அன்னையர் தின வாழ்த்துக்கள் எதும் கூறவில்லை. கூறவும் தோணவில்லை. அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும் நானே அவருக்கு ஒரு விலைமதிக்க முடியாத பரிசு என்றும், அவரே எனக்கு விலைமதிக்க முடியாத பரிசு என்றும். பின் என்ன தனியாக ஒரு பரிசு இந்த தினத்தில். உண்மைதானே?????? காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதை போல இந்த காக்கைக்கு(என் அம்மாவுக்கு) நான் பொன் குஞ்சு தான்.

நான் அனைவரையும் கேட்டுக்கு கொள்ளவது என்வென்றால் தயவு செய்து உங்கள் பெற்றோர்களை விகுதி குறைவாக கூப்பிட வேண்டாம். என் நண்பர்களில் சிலரும் பெருநகரங்களில் பலரும் தன் பெற்றோர்களை வா, போ என விகுதி குறைவாக கூப்பிடுவதை காண முடிந்தது. நான் அவர்களிடம் வினவியதற்கு, இப்படி கூப்பிட்டால் தான் நெருக்கம் இருக்கின்றது என பதில் கிடைத்தது. நீ எப்படி கூப்பிடுவாய் என கேட்டதற்கு வாங்க, போங்க, என சொன்னேன். இப்படி கூறுவது உனக்கு சங்கடமாக இல்லை, வேற்று மனிதர்களை கூப்பிடுவது போல் தோன்றவில்லை என என்னையே கேள்வி கேட்கின்றார்கள். தவறு இவர்களிடம் இல்லை, இவர்கள் பெற்றோர்களிடம் தான். என்னை பொருத்தவரை எனக்கு அது மரியாதை குறைவாக தோணுகின்றது. என் தாத்தா இருந்துவரை மற்றவர்களிடம் என்னை பற்றி கூறும் போது அவர் வந்தார், போனார் என்று தான் கூறுவார்.
சிறிவர்களையே மரியாதையாக சொல்லும் போது, பெற்றோர்களை மரியாதையாக அழைப்பது தான் நன்றாக இருக்கும். அது தான் நம் பண்பாடு கூட. உங்களை பொருத்தவரை அது நெருக்கத்தின் அடையாளமாக இருந்தாலும் மற்றவர்கள் முன்பு கூறுவதையாவது தவிர்த்தால் நன்றாக இருக்கும்.

"வீட்டில் பெற்றவர்களுக்கு மரியாதை கொடுத்தால் தான் நாட்டில் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க தோணும்" என்பது என் கருத்து

தமிழ்நாட்டின் இன்றைய ரெமோ!!




ஹாய்! ஹாய்! ஐ'ம் ரெமோ


ஒலெய் ஒலெய் ஒலெய் யொ லெயொ
ஹாக்.. ஒலெய் ஒலெய் ஒலெய் யொ லெயொ

ரம்பொ சேய் யொகெ.. (rambo say yoke.. )

வாட் டூ சேய் யொகெ... (what to say yoke... )

இட்'ச் கானா ரொச்கின்.நூஊ..நூஊஊஊஒ. (it's gonna rockin.noooo..nooooooooo)
யானை சொந்தம் பேரு சொந்தம்...
ஒன் மார்க் டூ.... (one mark two.... )

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தில் முட்டுவொம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரம்பொ ரெமோ...

தூக்கத்தை தூரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கின்ற சண்டைகள் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்க்டோன் ரெமோ
ரைன்போ ரெமோ..

அல்ஜீப்ரா இவன் தேகம் அமிபாவாய் உருமாரும்
கிங்க் கோப்ரா இவன் வேகம் குயின் எல்லாம் தடுமாறும்..

ஆக் ஆக் ற் ஏ ம் ஓ ரெமோ ரெமோ ..ரோமியோ
ஆக் ஆக் ற் ஏ ம் ஓ ரெமோ ரெமோ ...ரோமியோ....................


போதுமுடா சாமி, இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம்.

தமிழ் பாடல்களை தட்டச்சு செய்யும் போது தான் தமிழ் பாடல்களில் தமிழை எந்த அளவுக்கு கொலை செய்து உள்ளார்கள் என்பது புலப்படுகிறது. இந்த பாடல் இதற்கு மிக சிறந்த உதாரணம்.

Saturday, May 13, 2006

ஜெ.ஜெ - U TOO......

நம் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் நேற்றைய பேட்டி சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று ஆகும். 1989 ஆம் நடந்த சம்பவங்களை இன்றைக்கும் கூறுவது பொறுத்தமானதாக இல்லை. வயது ஏற ஏற பக்குவம் அடைந்து வருகின்றேன் என்று நீங்கள் கூறுவதை நாங்கள் நம்புவது போல, அவர்களுக்கும் வயது ஏறி பக்குவம் அடைந்து இருப்பார்கள் என்று நம்புங்கள். கலைஞர், சபைக்கு வருவதில்லை என்று மேடை தோறும் பேசி விட்டு இப்பொழது நீங்களும் அதையே செய்வது முறையாகாது. அவரை போல நீங்களும் வருகை பதிவேட்டில் கையெழுத்து இட்டு சம்பளம் பெறும் எண்ணத்தில் உள்ளீர்க்களா? இந்த முறை தான் சட்டசபையில் பலமான எதிர்க்கட்சி உள்ளது. இதில் நீங்கள் கலந்து கொண்டு புள்ளி விபரங்களுடன்
கூடிய உங்கள் வாத திறமையை உபயோகப்படுத்தினீர்கள் என்றால் பல நல்ல விசயங்கள் நடப்பதற்க்கும், தீய விசயங்கள் தடுப்பதற்க்கும் ஏதுவாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டு அரசியலையை ஒரு நாகரீகமான நிலைமைக்கு எடுத்து சென்ற பெருமையை பெறுவீர்கள். ஆனால் இதை தாங்கள் செய்ய போவதில்லை. நீங்கள் தான் அவர்களை தனிப்பட்ட எதிரிகளாக கருதுகின்றீர்களே!

கடைசியாக நீங்கள் சபைக்கு செல்லாவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் கூறியது போல் இந்த சட்டசபை ஒரு வருடத்தில் கவிழ்கிறதோ அல்லது ஐந்து வருடங்களை முழுமையாக பூர்த்தி செய்கின்றாகளோ அதை பற்றி கவலைப்பட வேண்டாம். இந்த ஆட்சியை கலைப்பதற்கோ, மாற்று அரசு அமைப்பதற்கோ தயவு செய்து முயச்சிக்க வேண்டாம். அந்த அசிங்களையும் தமிழகத்திற்கு தயவு செய்து அறிமுகபடுத்த முனைய வேண்டாம் என்பதே தமிழக மக்களாகிய எங்களின் வேண்டுக்கோள்.பொருமையாக இருந்து அடுத்த முறை ஆட்சி அமைக்க வாழ்த்துக்கள்.

இது என்ன தமிழ்நாட்டின் சாபமா? முதல்வராக இருந்தால் மட்டுமே சபைக்கு வருவேன் என நம் தலைவர்கள் கூறுவது. விஜயகாந்த் அது போல ஏதும் கூறவில்லை. அதுவரைக்கும் பரவாயில்லை. அப்படி வர மறுப்பவர்கள் தன் பதவியை ராஜினாமா செய்வது தான் முறையாக இருக்கும்.

Saturday, May 06, 2006

தமிழக காங்கிரஸ்காரர்களே!

தமிழக காங்கிரஸ் பெயரை கேட்டாலே சிறிது காலமாக பத்திக் கொண்டு வருகிறது. என்னை பொறுத்து வரை தமிழகத்தில் காங்கிரஸ்க்கு ஒட்டு கேட்டு வருகின்றவர்களை துரத்தி துரத்தி அடிக்க வேண்டும். எத்துனையோ கேடு கெட்ட அரசியல் கட்சி இருக்கும் போது இப் புனித தேசத்திற்கு சுகந்திரம் வாங்கி கொடுத்த காங்கிரஸ் மேல் மட்டும் ஏன் தனிப்பட்ட கோபம் எனக் கேட்கிறிர்களா? அதுக்கு காரணம் இருக்கின்றது...

சுகந்திரம் வாங்கி கொடுத்த கட்சினு இன்னும் எவ்வளவு காலத்துக்கு இதை சொல்லியே காலத்தை ஒட்டுவது? உங்களின் தவறான கொள்ளைகளால் தானே தம்மாதுண்டு நாடு முதற் கொண்டு நம்மளை எல்லாம் நம்மை சீண்டி பார்த்துக் கொண்டு இருக்கிறது. தமிழக தேர்தலை விட்டு பழங்கதை ஏன் எனக் கேட்பது புரிகிறது.

இந்தி மொழியை புறவழியில் தமிழகத்தில் நுழைக்க பார்த்து, திராவிட கட்சிகளை வளர விட்டதற்கும் அவர்கள் பிரச்சினை, ரகளை செய்த போது அவர்களை அடக்க தவறியதுக்கும் முதல் அடி. அன்னிகே ஒழுங்கா அவர்களை கவனித்து இருந்தால் இன்று தமிழகத்தில் இலவசம் என்ற பெயரில் தமிழனை பிச்சைக்காரனாக்க முயற்ச்சி செய்து கொண்டு இருக்க மாட்டார்கள். அதுக்காக இரண்டாவது அடி. இனி கூற போகும் காரணங்களுக்கு அடியோ அடி தான்.
இடைகுறிப்பு: மொழி போர் தியாகிகளை கொச்சைப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.

காவேரியில் சூப்ரிம் கோர்டே தண்ணீர் திறந்து விட சொல்லியும் கர்நாடக காங்கிரஸ் தலைமையில் ஆன அரசு தண்ணீர் தர மறுத்த போது நீங்கள் எல்லாம் XXX(முடியை) புடுங்கி கொண்டு இருந்தீர்களா? அப்ப கோர்ட்டு சொன்ன தீர்ப்பு தவறா? அப்புறம் ஏதுக்கு அந்த கருமம். அது முதல்ல இழுத்து முடுர வழி பாரு. இத கேட்டா இது இரு மாநிலங்கள் இடையான sensitive பிரச்சனை, எடுத்தோம் கவுத்தோம் என செய்ய முடியாது என சப்பை கட்டு
கட்டுவீர்க்கள். இன்னும் எத்தனை வருடம் தான் இதயே கூற போகின்றீர்கள்?

முல்லை பெரியார் அணையை உயர்த்த கூடாது என கேரளா சட்டசபையில் தீர்மானம் போடுகிறார்க்கள். இங்க இருக்குற ஒரு XXXனும் ஒரு வார்த்தை பேசலை. அதுக் கூட பரவாயில்லை, தமிழக அரசால் பயங்கரவாதி என கூறப்பட்ட ஒருவனை விடுதலை செய்யுமாறு தீர்மானம் போடுகிறார்கள், அதுக்காவது எவனாச்சும் வாய துரந்தானா. அதுவும் இல்லை.

வாக்காளா பெருமக்களே சிறிதே சிந்தித்து பாருங்கள், சில மாதங்கள் முன்பு வரை கேரளா, கர்நாடகம், ஆந்திரா வில் இவர்கள் ஆட்சி தான், மத்தியிலும் இவர்கள் ஆட்சி தான். தமிழகத்தின் வாழ்வதாரா பிரச்சனையான காவேரி, கிருஷ்ணா, முல்லை பெரியார் அணை பிரச்சினைகளை தீர்த்து விட்டு வந்து ஒட்டு கேட்டு இருக்கலாமே. அப்படி செய்து இருந்தால் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனிதது ஆட்சியை பிடித்து இருக்கலாமே. அதை எல்லாம் செய்ய அவர்களுக்கு எங்கு நேரம் இருக்கிறது. தன் கட்சிகுள்ளே ஒருவன் காலை ஒருவன் வாருவதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை.

ஒரு கணம் யோசித்து பாருங்கள், இந்த கர்மவீரர்கள் என்னிக்காவது மக்கள் பிரச்சினைக்காக போரட்டம் நடத்தி, அதை நிறைவேத்த கூறி டில்லி சென்று இருக்கிறார்களா? இங்கு ஒருவர் மாநில தலைவர் ஆன மறுநிமிடம் அவரை மாற்ற சொல்லி 10 தலைவர்கள் டில்லிக்கு காவடி தூக்கிடு கிளம்பிடுவாங்க. இவங்க கட்சி ஆபிஸ்க்கு போனால் வேட்டியை உருவது, அடிதடி, உருட்டுகட்டை என தமிழ் சினிமாவை மிஞ்சுர காட்சிகள் எல்லாத்தையும் காணலாம். அது விடுங்க டில்லி இருந்து வர எவனாச்சும் அவன் கட்சி ஆபிஸ்க்கு போறானா? எல்லா பயலும் அறிவாலயத்துக்கு போறான்.
அங்கு போயி மக்கள் பிரச்சனையை பத்தியா பேசுறான், தன் பதவியை காப்பாத்திக்கவோ, காரியம் சாதிக்கவோ தானே போறான்.
மானியத்தை ஒழித்தால் தான் இந்தியாவை வரும்காலத்தில் காப்பாற்ற முடியும் என பாராளுமன்றத்தில் முழங்கி விட்டு தமிழகத்தில் அரிசி 2 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என்கிறார், இலவச டி,வி.யும் சாத்தியம் என் கிறார் ஒரு மத்திய அமைச்சர். நல்லாவே குத்துறிங்க, காதுல இரத்தம் சொட்ட சொட்ட................ ஐயா, மந்திரியாரே! மானியம் கூட தர வேண்டாம், பெட் ரொல், டீசல், கெரசின் விலையை உயர்த்தாமல் இருந்தாலே உங்களுக்கு புண்ணியமாக போகும்.
தமிழக காங்கிரஸ்காரர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!
தன்மானத்துடன் செயல் படுங்கள், தமிழக மக்களுக்கு தேவையானவற்றை செயல்படுத்த துவங்குகள். தண்ணீர் பிரச்சனையை கூடி பேசி முடிவுக்கு கொண்டு வாருங்கள். கூட்டணி வைத்து திராவிட கட்சிகளை மேலும் வளர்த்து விடாதீர்கள். இதை எல்லாம் செய்தால் கூடிய விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. உண்மையிலே திராவிட கட்சிகளை பார்த்து பார்த்து வெறுத்து உள்ளோம். வாய்ப்பை தவற விடாதீர்கள். ஆனால் இதை எல்லாம் செய்வீர்களா என்பது தான் மிக பெரிய ?

Friday, May 05, 2006

காரணம் கிடைத்துவிட்டது டோய்!!!

பா.ஜ தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? என்ற காரணத்திற்கு கருணாநிதி இன்று பி.டி.ஐ. நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது -

" ராஜாவை கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்துமாறு கேட்டதற்கு, ராஜா தலித் என்பதால் அவர்கள்(பா.ஜ.க) மறுத்து விட்டார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே தே.ஜ. கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது."

ஐயா, திருகுவளையாரே, எவ்வளவு சீக்கிரமாக காரணம் கண்டு பிடித்து விட்டீர்க்கள். இதை சொல்ல உங்களுக்கு 3 வருடம் தேவைப்பட்டு இருக்கிறது. ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த தலித்துக்கும் கேபினட் அந்தஸ்து பதவி தரவில்லையா? சொல்லுற காரணத்த கொஞ்சம் பொருந்துற மாதிரி சொல்லங்க முத்தமிழ் அறிஞரே! தமிழன் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் துரத்தி வந்து காது குத்துறிங்களே!

மற்றோரு பேட்டியில், ஸ்டாலின் செய்த தவறு(பலவீனம்) ஒரு கீழ்சாதிக்கு தந்தைக்கு மகனாக பிறந்தது எனவும் சொல்லியுள்ளீர். ஸ்டாலின் சாதியின் பெயரால் எந்த கொடுமைக்கு ஆளாக்கபட்டார் என்றும் சொன்னீங்கனா நல்லா இருக்கும். மலம் அள்ளீனாரா? இரட்டை குவளையின் முறையில் பாதிக்கபட்டாரா?

மற்றோரு பேட்டியில் பிராமணர்கள் தான் ஜெயலலிதா ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கிறார்கள், இன்னும் பிராமணர்கள் தமிழகத்தில் வலுவாக உள்ளார்கள் என கூறியுள்ளீர், பிறகு அவர்களை மீறி மூன்று முறை ஆட்சி பொருப்பை தாங்கள் ஏற்றது எப்படி? அப்பொழது எல்லாம் பிராமணர்கள் தமிழ்நாட்டில் இல்லையா?

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் சாதியின் பெயரை சொல்லி அரசியல் செய்வீர்கள். வயது ஆகியும் உங்கள் ஈன புத்தி உங்களை வீட்டு போகவில்லையே. போகும் காலத்திலாவது எதாவது நன்மை செய்யுங்கள் என உங்களை கேட்கவில்லை, பிரச்சனை ஏதும் பண்ணாமல் இருந்தாலே போதும். அதுவே தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெரிய சேவையாக இருக்கும்.


என்ன இருந்தாலும் ஆயிரம் சொல்லுங்க, சாதி மற்றும் மதத்தின் பெயரால் அரசியல் செய்வதற்கு தமிழகத்தில் மட்டும் இல்லை, இந்த உலகத்தில் கருணாநிதியை மிஞ்சுவதற்கு வேறு எவரும் கிடையாது.!!

Thursday, May 04, 2006

நல்லா சொன்னார்!

தமிழகத்தில் காங்கிரசுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வைக்கவில்லை, அ.தி.மு.க அரசை அகற்ற தி.மு.க.வுடன் தான் கூட்டணி வைத்துள்ளது.

காங்கிரஸ் பங்கு வகிக்கும் தி.மு.க., கூட்டணியில் மா. கம்யூனிஸ்ட் தொகுதி உடன்பாடு வைத்துள்ளது. காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை.

கேரளாவில் காங்கிரசை எதிர்க்கிறோம். தமிழகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்துள்ளோம்.

இது அரசியல் ஆதாயம் தேடும் சம்பவம் இல்லை.


திருவாய் மலர்ந்து நம்மை கிச்சு கிச்சு முட்டியவர் :

திருமதி. பிருந்தா கராத் (மா.கம்யூ பொலிட் பீரோ உறுப்பினர்)

Wednesday, May 03, 2006

பிணந்திண்ணி அரசியல்



இன்பத்தமிழன் தி.மு.க வில் நேற்று இணைந்த செய்தியை படிக்கவே வேதனையாக இருந்தது என்பதை விட மிகவும் ஆத்திர அடைய வைத்தது. தனக்கு இந்த தேர்தலில் போட்டி இட இடம் கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக அவர் கட்சி மாறினார் என்றாலும் இந்த கேடு கெட்ட அரசியவாதிகளின் வழக்கமாக செயல் தானே என எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் அவர் கூறி இருக்கும் காரணம் தான் என்னை அதிர்ச்சி அடைய செய்தது. அவர் கூறி காரணம்

"அ.தி.மு.க.வில் இருந்தவரை அடிமை போல் நடத்தினார்க்கள். தன் தந்தை தாமரைக்கனிக்கு இறுதி சடங்கு கூட செய்யவிடவில்லை. சர்வாதிகாரர் ஆன ஜெயலலிதா நான் வேண்டுமா இல்லை உன் தந்தை வேண்டுமா எனக் கேட்டார். அவர் தந்தைக்கு எதிராக ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசியல் செய்ய நிர்ப்பந்திக்க பட்டார்."

என்னயா யார் காதுல பூ சுத்துரிங்க. எங்கள எல்லாம் கேண பய என நினைத்து விட்டிர்க்களா? நான் வேண்டுமா, தந்தை வேண்டுமா எனக் கேட்ட போது எனக்கு இரத்தமும், சதையும் கொடுத்த என் தந்தை தான் வேண்டும் எனக் கூற வேண்டியது தானே. உன் சுய புத்தி அப்பொழுது எங்க போச்சு. தந்தையை எதிர்த்து தானே போன தடவை தேர்த்தலில் போட்டியிட்டு வெற்றி அடைந்தீர்க்கள். தன் தந்தையின் பெயரை இன்சியலாக போடுவது பாவம் எனக் கூறியது நீங்கள் தானே, இல்லை இதுவும் ஜெயலலிதா சொல்லிக் கொடுத்து சொன்னீர்க்களா? இப்படி எல்லாம் செய்யாவிட்டால் கொன்று விடுவேன் என மிரட்டினார்க்கள் எனக் கூற போகின்றீர்க்களா? பெத்த அப்பனை எதிர்ப்பதற்கு பதில் இறப்பதே மேல் எனக் கூறி இருக்க வேண்டியது தானே. பெத்த தன் தந்தையின் பிணத்தின் மேல் வர்கார்ந்து பதிவிக்காக பிணந்திண்ணி அரசியல் நடத்தி விட்டு இன்று தி.மு.க.வில் இணைந்து உள்ளார். போன நாடாளுமன்ற தேர்த்தலில் நீங்கள் தி.மு.க வேட்பாளருக்கு எதிராக ஆடிய ஆட்டத்திற்கு தி.மு.க.விடம் விளக்கம் கொடுத்து விட்டிர்க்களா?

பெற்ற தந்தைக்கும், அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த கட்சிக்கும் விசுவாசம் இல்லாமல் இன்று வேறு கட்சியில் இணைந்து உள்ளார். அங்கே ஆவது தொடர்ந்து இருக்க வாழ்த்துவோம்!

இன்பதமிழா வாழ்க! வளர்க! உன் அரசியல் சேவை தொடர்க!

இந்த தேர்தலின் போது இவ்வளவு கேவலமாக, கீழ்தரமாக, மட்டகரமாக தமிழக அரசியல் போகும் என கனவிலும் நினைத்ததில்லை. உருபடியான ஏதாவது ஒரு கட்சி இங்க இருக்கா?

தனக்கு எல்லாரும் அடிமையாக இருக்கனும் என்று ஒரு கட்சி.

தன் குடும்ப மட்டும் தான் நல்லா இருக்கனும் என்று ஒரு கட்சி.

இந்த தடவை எப்படியும் சட்டசபையில் நுழைந்து விட வேண்டும் என்று ஒரு கட்சி

டில்லிக்கு காவடி தூக்கி அடுத்தவன் வேட்டியை உருவதற்காக ஒரு கட்சி

தன் பேத்தியை டில்லி கான்வெண்டில் படிக்க வைத்து இங்கு தமிழ் என முழங்கும் சாதிக்கட்சி.

நேற்று கட்சி தொடங்கி இன்று கோட்டையை பிடிக்க கனவு கானும் ஒரு கட்சி.
ரஷ்யாவில் மழை பெய்தால் இந்தியாவில் குடை பிடித்து ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு சித்தாந்தம் பேசும் இரு கட்சி.

அது போக மழையில் முளைத்த காளான் போல் பல கட்சிகள் தேர்தலின் போது தலைக்காட்டி உள்ளன.

(இதுல டில்லி காவடி பார்ட்டிகளை துரத்தி துரத்தி அடிக்கனும், அவர்க்களை பற்றி விரைவில் ஒரு பதிவு.)

என்னையா குறைச்சல் உங்களூக்கு? அரசியல்வாதி என்றால் எதையும் செய்யலாமா? உங்களுக்கு எல்லாம் மனட்சாட்சி என்பதே கிடையாதா? எப்படியா உங்களுக்கு எல்லாம் தூக்கம் வருகிறது. சாப்பிடும் சாப்பாடு ஜீரணம் ஆகுதா?எங்கடா அப்பா எங்கள இந்த கண்றாவிய எல்லாம் காண வைக்கிறிங்க. எப்படா தேர்தல் முடியும் என்று இருக்கிறது. போதுமடா சாமி உங்கள நம்பினது போதும், உங்கள ஒரு வார்த்தை தப்பா சொல்லுற அயல்நாட்டவர்களை நார் நாராக கிழித்து வக்காலத்து வாங்கியதும் போதும். ஆள விடுங்கடா சாமி.

வேதனையுடன்
நாகை சிவா