புதுசா ஒரு எட்டு போடும் விளையாட்டை பதிவுலகில ஆரம்பித்து இருக்காங்களாம். ஆரம்பித்த புண்ணியவான்/வாதி நல்லா இருக்கவும்! நாம் எல்லாம் எட்டு போடாமலே வாகன ஒட்டுனர் உரிமை வாங்கின ஆளு, அப்படிப்பட்ட நம்மள எட்டு போட தண்டோரா விக்கி, விழியன் உமாநாத், தலைவலி கீதா, ஆத்திகம் வி.எஸ்.கே, அழைத்து உள்ளார்கள், அவர்கள் அழைப்பை ஏற்று என்னுடைய தற்பெருமைகள்...
1, என்ன படிக்குறோம், எதுக்கு படிக்குறோம், என்ன பண்ணப் போறோம் என்ற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் வாழ்வை கண்டப்படி அனுபவித்து விட்டு கிடைத்த வாய்ப்புக்களில் சிலதை தவறு விட்டு மிஞ்சியதை வைத்து இன்று ஒரு சுமாரான நிலையில் இருப்பதே பெரிய சாதனை & பெருமை தான் கூடவே இப்பொழுது நான் பார்க்கும் வேலையை பெற்றது. மன அளவிலும், பொருள் அளவிலும், தொழில்நுட்ப அளவிலும் என்னை முழுதாக திருப்திப்படுத்தியது. இதை தாண்டி அடுத்த நிலைக்கு முயற்சி செய்கின்ற போதிலும் இங்கு வேலை செய்வதை, செய்ததை மிகவும் பெருமையான ஒரு விசயமாக என் வாழ்வில் இருக்கும்.
2, கல்லூரியில் சும்மா வம்புக்கு சண்டை போட்டு நாங்களும் மேடை ஏறுவோம் என்று மேடை நிகழ்ச்சி, பட்டிமன்றம், பேச்சுப் போட்டியில் கலந்து சில பரிசுகள் வாங்கியது, கல்லூரியில் எக்ஸ்னோரா ஆரம்பித்து அதன் தலைவராக ஆனது, அவ்வளவு சேட்டை பண்ணியும் சரியாக பட்டப்படிப்பை முடித்தது, சின்ன சின்ன சண்டைகள், ரவுண்ட் கட்டி கொட்டம் அடிச்சது என அப்படி, இப்படினு பெருமைப்பட்டுக்க ஏகப்பட்ட விசயங்கள் இருக்கு.
3,சென்னை அலுவகலத்தில் இருக்கும் போது த.நா. அரசின் ஒரு திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த கடலூர் மாவட்டத்தை தவிர மற்ற இடத்தில் முடித்து விட கடலூர் மாவட்டத்தில் முடித்து தர நி.இயக்குனர் என்னைக் கேட்டுக் கொள்ள மூன்றே நாளில் கடலூர் மாவட்டம் முழுவதும் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தே அதை முடித்துக் கொடுத்தது, அந்த கம்பெனியில் இருந்து வெளியேறும் போது உங்களால கம்பெனிக்கு நல்ல ரெவீன்யூ தான் என நி.இ. சொன்னது, நல்ல நண்பர்கள் மற்றும் அனுபவம் வெற்றது பெருமை தான்.
4, சொந்தமாக வண்டி வாங்கிய புதிதில் சென்னையில் இருந்து நாகைக்கு இரவில் பறந்தது. அந்த நேரத்தில் கி.க.சாலையில் சரியாக மின் விளக்குகள் கூட கிடையாது. இப்ப நினைச்சாலும் சும்மா ஜிவ்னு பெருமை தலைக்கு ஏறும். அதுக்காக நடுவில் நிக்க வைத்து கூடி கும்மி அடிச்சதை மறக்க முடியாது.
5, எந்த விசயமும் முழுதாக தெரியாமல் எல்லாத்தையும் கலந்துக் கட்டி பேசி, வேலைகளை கலந்து கட்டி செய்து Wise Man என்ற ஒரு இமேஜ்யை உருவாக்கி அதை இன்னும் ஒப்பேத்திக்கிட்டு இருப்பது.
6, பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது உன் சேர்க்கை சரியில்லை என்று ஆசிரியர்கள் கூறுவதை கேட்கும் போது நமக்கு அப்படியே ஒரு பெருமை பொங்கி வரும் பாருங்க... பசங்க கிட்ட சொல்லி பாருங்கடா உங்களால் தான் நான் கெட்டு போறேன் என்று சொல்ல, எல்லாத்துக்கும் முழு காரணமான ஒன்னயே இப்படிடா இவனுங்க நம்புறாங்க என பசங்க புலம்பவது, இருந்தாலும் எனக்கு மிக மகிழ்வான, நிறைவான பள்ளி, கல்லூரி வாழ்வை அளித்த அந்த நண்பர்களையும், பிறகு பல வாய்ப்புகளின் மூலம் பெற்ற நலம் விரும்பிகள் மற்றும் பிற நல்ல நண்பர்களை பெற்றது ஒர் பெருமை தான்
7, அடுத்தவர்களுக்கு உதவுகின்ற,எதையும் சாதரணமாக எடுத்துக் கொள்கிற, என்னையே ஊக்கப்படுத்தி கொள்கின்ற, செய்தை தவறை தவறாமல் ஒத்துக் கொள்கிற, அலட்சியமாக இருக்கின்ற, கேள்வி கேட்டுக் கொள்கின்ற, புத்திமதி சொல்கின்ற, மன்னிக்கின்ற ஆனால் அதை மறக்காத என என்னை சர்வமும் ஆட்டி படைக்கின்ற என் புத்தியும், மனதும் எனக்கு வாய்த்தது தான்.
8, இங்க System ஊத்திக்கிட்டு நாலு மூணு நாள நமக்கு தண்ணிக் காட்டிக்கிட்டு இருக்கும் இந்த வேளையிலும் நடுவில் கிடைத்த கேப்புல எட்டி நின்னு System a Monitor பண்ணிக்கிட்டே இந்த பதிவை போடுறேன் பாருங்க... அதும் இல்லாம நாம் கிறுக்குறதையும் வந்து படிச்சுட்டு அதுக்கு சில பின்னுட்டோமும் போடுறீங்க பாருங்க... எனக்கு ரொம்ப பெருமையா இருக்குங்க... (ரமணா கேப்டன் மாதிரி கண் சிவந்து கண்ணீர் அணை கட்டுதுங்க.. அவ்வ்வ்வ்வ்வ்)
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
ஆள் பிடிக்கிறது:
எப்பா பிழிந்து எடுக்கும் வேலைக்கு நடுவில் நான் எட்டு போட்டதக்கு காரணமே இப்ப விட்டா நாம கூப்பிடுவதுக்கு ஆள் கிடைக்காது என்பதால் தான்....
1, சி.வி.ஆர்
2, இம்சை அரசி
3, சச்சின் கோப்ஸ்
4, G3
5, அருண்குமார்
6, வேதா
7, அய்யனார்
8, உலகம் சுற்றும் வாலிபி
மக்கள்ஸ் நான் தான் ஒழுங்கா எழுதுல, அதுக்குனு நீங்களும் டீல்ல விட்டுட கூடாது... சும்மா அதிர அடிக்கனும் சொல்லிட்டேன்...

39 comments:
என்ன துர்கா.. சிரிப்புடன் நிறுத்திட்டீங்க..... இது புன்சிரிப்பா, இல்ல கேவலமா இருக்கு என்பதை வெளிப்படுத்தும் சிரிப்பா?
//இது புன்சிரிப்பா, //
:)
//இல்ல கேவலமா இருக்கு என்பதை வெளிப்படுத்தும் சிரிப்பா?//
:(
இன்னிக்கு என்ன ரொம்பவே அமைதியா இருக்கீங்க... புயலுக்கு முன் உள்ள அமைதியா இல்ல புயலுக்கு அப்புறம் உள்ள அமைதியானு தெரியலையே...
//இன்னிக்கு என்ன ரொம்பவே அமைதியா இருக்கீங்க... //
:))))
//புயலுக்கு முன் உள்ள அமைதியா//
:-O !!!!
// இல்ல புயலுக்கு அப்புறம் உள்ள அமைதியானு தெரியலையே... //
hehe...hahaha
இப்படிப்பட்ட பெருமைகள் எல்லாம் பெற்றிருக்கும் புலியை வெறும் Wise Man எனக்கூறி அவமானப் படுத்தாமல் மரியாதையாக Penny Wise Man என அழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி வணக்கம்.
:)))
துர்கா,அமைதி
ஆகிய இரு வார்த்தைகளையும் முதல் முறையாக ஒரே வரியில் கண்ட அதிர்ச்சியில் இருப்பதால் ஒரு மணி நேரம் பெர்மிஷன் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்!!
ஒரு மணி நேரம் கழித்து எனக்கு மயக்கம் தெளிந்தால் கட்டாயமாக வந்து பின்னூட்டமிடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.
நன்றி
அப்போ துர்கா அக்கா இன்னைக்கு ஃபுல்லா பேச மாட்டாங்களா??? அப்போ நாம இன்னைக்கு என்ன வேணும்னாலும் சொல்லலாம்??? அவிங்க எதுவும் பதிலே சொல்ல மாட்டாங்க!!
சரிதானே???
வாவ்!!! என்ன ஒரு சான்ஸூ!!! :-D
என்ன, கும்மி அடிக்க ஆள் பிடிக்கலையா? இல்லை இந்த மொக்கைக்கு யாருமே வர மாட்டேன்னு சொல்லிட்டாங்களா? 'எந்தவிஷயமும் தெரியாதுன்னு ஒத்துக்கிட்டதே சாதனை தானே? :P
//அப்போ துர்கா அக்கா இன்னைக்கு ஃபுல்லா பேச மாட்டாங்களா??? அப்போ நாம இன்னைக்கு என்ன வேணும்னாலும் சொல்லலாம்??? அவிங்க எதுவும் பதிலே சொல்ல மாட்டாங்க!!
சரிதானே???//
http://www.peterbernard.com/cards/irish.jpg
//ஒரு மணி நேரம் கழித்து எனக்கு மயக்கம் தெளிந்தால் கட்டாயமாக வந்து பின்னூட்டமிடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.
நன்றி
//
:)))
http://www.pacificislandbooks.com/JPEGS/Don't%20Come%20Back%200958244855.jpg
@துர்கா
அக்கா!!
தெரியாம சொல்லிட்டேன்!!
சின்ன தம்பியின் இந்த சிறு பிழையை மன்னித்து அருள்க!!! :-ஸ்
//அக்கா!!
தெரியாம சொல்லிட்டேன்!!
சின்ன தம்பியின் இந்த சிறு பிழையை மன்னித்து அருள்க!!! :-ஸ் //
http://www.multo.com/vlog/wp-content/uploads/2006/07/durga.jpg
:)
அன்பு சிவா,
என்ன நம்ம தலையில கட்டிட்டிங்க கடைசியாய் போட்டு கொஞ்சம் time கொடுத்ததுக்கு நன்றி.
வளச்சு வளச்சு ஒரே விஷயத்த சொன்ன மாதிரி ஒரு பீலிங்...
எட்டில் பிடித்தது ஏழு :D
இம்புட்டு நல்லவரா நீங்க??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))
என்ன வம்புல மாட்டி வுட்டுட்டீங்களே :-((
@துர்கா : போட்டோவுலியே சி.வி.ஆர்-அ இந்த போடு போடறீங்க?? அசத்துங்க :-))
எட்டு போட்டீங்களே! லைசண்ஸ் கிடைச்சதா புலி??
என்னது? சூடான்ல ஏழறை போட்டதான் லைசண்ஸ் கொடுப்பாங்களா? ஹீஹீ
siva nanru.valaipathivil thangalai sanathipathil.samayal potiyil nan oru naduvaraga santhithom oru naal.samaiyal valaipathivum arumai keep it up.
ஆஹா. அருமை, பெருமை எல்லாம் நல்லா இருக்கு. உங்களை மாதிரி ஒரூ சாதனை நாயகனை எதிரியா வெச்சு இருக்கிறத நினைச்சா பெருமையா இருக்கு, ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//எட்டி நின்று போட்ட ஒரு எட்டு...//
கால் வலிக்கப்போவுது..உக்காந்துக்கங்க :))
//இப்படிப்பட்ட பெருமைகள் எல்லாம் பெற்றிருக்கும் புலியை வெறும் Wise Man எனக்கூறி அவமானப் படுத்தாமல் மரியாதையாக Penny Wise Man என அழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.//
உள்குத்து இல்லாம ஏந்த பின்னூட்டாமும் போட மாட்டேன் என்கிறீர்கள்.... :-((
//அப்போ துர்கா அக்கா இன்னைக்கு ஃபுல்லா பேச மாட்டாங்களா??? //
ஃபுல் எல்லாம் தாங்குது அவங்களுக்கு.... மூடியை மோந்து பாத்தாலே அவங்க எல்லாம் பிளாட் ஆயிடுவாங்க...
//துர்கா,அமைதி
ஆகிய இரு வார்த்தைகளையும் முதல் முறையாக ஒரே வரியில் கண்ட அதிர்ச்சியில் இருப்பதால் ஒரு மணி நேரம் பெர்மிஷன் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்!!//
எனக்கும் அதே நிலைமை தான், காரணம் அப்பால தான் தெரிந்தது....
//'எந்தவிஷயமும் தெரியாதுன்னு ஒத்துக்கிட்டதே சாதனை தானே? :P //
இல்லையா பின்ன... அதை சொல்லவும் ஒரு தைரியம் வேணும்ல....
//@துர்கா
அக்கா!!
தெரியாம சொல்லிட்டேன்!!
சின்ன தம்பியின் இந்த சிறு பிழையை மன்னித்து அருள்க!!! :-ஸ் //
என்ன ராசா. இப்படி ஒரு U டர்ன போட்ட.... உன்னய நான் பெரிய லெவலுக்குல திங்க் பண்ணி இருந்தேன்....
துர்கா.. படம் காட்டி எங்க ஆள அரள வச்சுட்டீங்கள... அவரும் காட்டுவார் பாருங்க படம் ஒரு நாள், அன்னிக்கு தெரியும் அவர் பவரு...
//அப்ப என்ன 11 போட்டீங்களா?:)//
காருக்கு வண்டிய ஸ்டார்ட் பண்ணி நாம் 1 கியர் போட்டு மூவ் பண்ணியத பார்த்து, தம்பி ஒன்னும் வீட்டுல ஏதும் அவசர வேலை இருந்தா பாத்துட்டு வாங்க, ஒன்னும் அவசரம் இல்ல, வண்டிய அப்படி ஒரமா நிறுத்துங்க சொல்ல... நிறுத்தியாச்சு.....
டூ வீலர் ஸ்டார்ட் பண்ணி கியர் கூட போடல கையெழுத்து போடவது நமக்கு தெரிய, அதன் பிறகு வண்டிய நகர்த்த நான் என்ன லூசா சொல்லுங்க... ;-)
//ஆகா படிக்கற காலத்திலேயே இப்டி தான் திரிஞ்சீங்களா?:) //
இப்படி தான் எப்பவும்... என்னிக்கும் ஒரே மாதிரி இருக்கனும்ல... இது தப்பா என்ன?
///சூடா இருக்காமா இல்ல சூப்பா இருக்குமா என்பதை திங்கள் அன்று வந்து காணுங்கள். /
திங்கட்கிழமை எந்த பதிவு போடற வேலையுமில்ல அதனால கண்டிப்பா வந்து படிக்கிறேன் :) //
அங்க பதில் போட்டாச்சு, போய் படிக்கலாம்....
//உங்க பதிவை படிக்கற நாங்க தான் இந்த ரியாக்ஷன் கொடுக்கணும் :)//
இப்படி எல்லாம் சொல்ல கூடாது... ஐ'ம் யூர் பெஸ்ட் பிரண்ட்....
//நீங்க சொல்லியிருக்கற 7வது பாயிண்ட் எனக்கும் பொருந்தும் நான் அதை அப்டியே copy paste பண்ணிக்கறேன் :)//
சொந்தமா திங்க் பண்ணனும் சொல்லிட்டேன்....
//அன்பு சிவா,
என்ன நம்ம தலையில கட்டிட்டிங்க கடைசியாய் போட்டு கொஞ்சம் time கொடுத்ததுக்கு நன்றி. //
உ.சு.வா.
எண் வரிசை என்பது எல்லாம் கணக்கு கிடையாது... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எழுதுங்க....
//வளச்சு வளச்சு ஒரே விஷயத்த சொன்ன மாதிரி ஒரு பீலிங்...//
ஏஸ், நானே மேட்டரு எல்லாம் ஏதோ எழுதி இருக்கேன்,அதை நீங்க வேற வந்து நொண்டனுமா?
//எட்டில் பிடித்தது ஏழு :D //
அது மெய்யான மேட்டரு தான். ஏழு நமக்கு என்னிக்கு லக்கி ....
//இம்புட்டு நல்லவரா நீங்க??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))//
நான் ரொம்பவே நல்லவன்....
//என்ன வம்புல மாட்டி வுட்டுட்டீங்களே :-(( //
வம்புல மாட்டுற ஆளா நீங்க...
//எட்டு போட்டீங்களே! லைசண்ஸ் கிடைச்சதா புலி?? //
எட்டு போடாமா லைசன்ஸ் வாங்கியதை ஏற்கனவே சொல்லியாச்சு, பாத்துக்கோங்க...
//என்னது? சூடான்ல ஏழறை போட்டதான் லைசண்ஸ் கொடுப்பாங்களா? ஹீஹீ //
இங்க வாங்காட்டியும் உண்மையிலே ஏழரை ஆயிடுச்சு..... அதுக்கு தலைக்கீழா நின்னு தண்ணி குடிப்பதே சுலபம் போல.... ஆனா எப்படியோ வாங்கிட்டோம்ல....
//SurveySan said...
:) //
இதுல ஏதும் உள்ககுத்து இல்லல....
//siva nanru.valaipathivil thangalai sanathipathil.samayal potiyil nan oru naduvaraga santhithom oru naal.samaiyal valaipathivum arumai keep it up. //
பத்மா, உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி... நீங்க நாகையில் நடந்த சமையல் போட்டிக்கு நடுவராக வந்து இருந்தீர்களா... அல்லது பாபுவை நான் என்று தவறாக நினைத்து விட்டீர்கள்... ஏதுவாயினும் முதல் வருகைக்கு நன்றி, தொடர்ந்து வரவும்.
//ஆஹா. அருமை, பெருமை எல்லாம் நல்லா இருக்கு. உங்களை மாதிரி ஒரூ சாதனை நாயகனை எதிரியா வெச்சு இருக்கிறத நினைச்சா பெருமையா இருக்கு, ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //
எதிரியா.... அப்படி இருந்தா தான் ரொம்ப சந்தோஷப்படுவேனே... நண்பனாக இல்ல வந்து வாய்த்து வீட்டீர்கள்...
இறைவா.... என்னை இளா போன்ற நண்பர்களிடம் இருந்து காப்பாத்து... எதிர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.
////எட்டி நின்று போட்ட ஒரு எட்டு...//
கால் வலிக்கப்போவுது..உக்காந்துக்கங்க :)) //
உத்தரவு எஜமான்...
///எட்டு போடாமலே வாகன ஒட்டுனர் உரிமை வாங்கின ஆளு///
.. அதனால தான் இதுவோ..
/////சென்னையில் இருந்து நாகைக்கு இரவில் பறந்தது////...
ஒருவேளே விமான லைசென்ஸ் வாங்கியிருந்தா.. ஒழுந்த ரோட்டிலே ஓட்டியிருப்பீங்களோ..:-?
//ஒருவேளே விமான லைசென்ஸ் வாங்கியிருந்தா.. ஒழுந்த ரோட்டிலே ஓட்டியிருப்பீங்களோ..:-? //
மாட்டேங்க...விமானம் போற அளவுக்கு எந்த பெரிய சாலையும் தமிழ்நாட்டுல இல்ல... நாலு வழி சாலையில் முயற்சி பண்ணி பாக்கலாம், ஆனா அதிலும் திருப்ப எல்லாம் கஷ்டம்... அதுக்கு பேசாம வானத்தில் ஒட்டிட்டு போயிடலாம்...
ஹெலி வேணும்னா டிரை பண்ணி பாக்கலாம். ஒரு ஹெலி வாங்கி குடுங்க...
;(
அன்பு மகன் சிவா,
அளித்த பனியை முடித்து விட்டேன்.
Post a Comment