Wednesday, June 09, 2010
பி.சி.சி.ஐ. யின் அயோக்கித்தனம்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Wednesday, June 09, 2010
8
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் கண்டனம், கிரிக்கெட், விளையாட்டு
Thursday, June 03, 2010
ஆட்டம் தொடங்கியாச்சு - The Game is ON !
"கடுமையான" வேலைகளுக்கு நடுவில் பதிவுகள் படிக்கலாம் என்றால் பதிவரசியல், அரசவை கோமாளி என இம்சைகள் படுத்த, சினிமாவுக்கு போகலாம் என்றால் சுறா, சிங்கம், பெண் சிங்கம் என சுனாமியாய் சுழட்டி அடிக்க, கழுதை கிரிக்கெட்டாவது பாக்கலாம் என்றால் இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் சொதப்பல் ஆட்டத்தால் நொந்து நொடுல்ஸ் ஆகி, அந்து அவல் ஆகி இருக்கும் எனதருமை பதிவலக பெருமக்களே! அதை எல்லாம் சிறிது விட்டு தள்ளிட்டு மற்ற விளையாட்டுகளில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். பரபரப்பு, விறுவிறுப்பு, உற்சாகம், மகிழ்ச்சி, ஆரவாரம், உணர்ச்சி பிழம்பு, அழுகை என எதற்கும் பஞ்சம் இல்லாத சூட்டை கிளம்பும் ஆட்டங்களை ரசித்து மகிழுங்கள். இந்த மாதத்தில் (ஜுன்) பிரெஞ்ச் ஒபன் மற்றும் NBA போட்டிகள் தற்பொழுது நடைப்பெற்றுக் கொண்டு உள்ளது. விரைவில் கால்பந்து உலக கோப்பையும் தொடங்க உள்ளது.
அமெரிக்காவில் மிக பிரலமான கூடைப்பந்து அணிகளுக்கு இடையே வருடத்துக்கு ஒரு முறை (கிட்டதட்ட வருடம் முழுவதுமே) நடைபெறும் NBA போட்டிகளின் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. (இன்னும் சில மணித்துளிகளில்) 30 அணிகளில், 1000 த்துக்கும் அதிகமான ஆட்டங்களில் பல சுற்றுகளில் விளையாடி இன்று கூடைப்பந்தில் முடிச்சூடா சக்கரவத்திகளாக திகழும் பாஸ்டன் செல்டீக்ஸ் (Boston Celtics) அணியும் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் (Los Angeles Lakers)இறுதி போட்டியில் மோத தயாராக உள்ளார்கள்.

இது வரை நடைபெற்ற 64 இறுதி ஆட்டங்களில் பாஸ்டன் 20 முறையும் லாஸ் ஏஞ்சல்ஸ் 30 முறையும் தகுதி பெற்று உள்ளனர். இதில் பாஸ்டன் 17 முறையும் லாஸ் ஏஞ்சல்ஸ் 15 முறை சாம்பியன் பட்டங்களை வென்று உள்ளனர். இவ்விரு அணிகளும் இது வரை 11 முறை இறுதி ஆட்டங்களில் மோதி உள்ளனர். அதில் பாஸ்டன் 9 முறையும் லாஸ் ஏஞ்சல்ஸ் 2 முறையும் வென்று உள்ளனர். கடைசியாக 2008 ம் ஆண்டு நடந்த இறுதி போட்டியில் பாஸ்டன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதே சமயம் கடந்த வருட சாம்பியன்ஸ் (நடப்பு) லாஸ் ஏஞ்சல்ஸ் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


2008 ம் ஆண்டு விட்டதை இந்த வருடம் சரி கட்ட வேண்டும் என்றும் கோப்பையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியோடு லாஸ் ஏஞ்சல்ஸ்ம், மீண்டும் 2008 யில் நடந்ததை நடத்திக் காட்ட பாஸ்டனும் சிலிர்ப்புடன் உள்ளது.
Lakers பலம் Kobe Bryant யின் ஒன் மேன் ஷோ தான். எந்த விதமான இக்கட்டான சூழ்நிலையிலும் எவ்விதமான தடுப்புகளையும் உடைத்து கவுன்ட் பண்ணுவதில் தற்காலத்தில் இவருக்கு நிகர் இவரு தான். 3 பாயிண்ட் போடுவதில் வல்லவரான Fisher மற்றும் ஏதிராளியை தடுப்பதில் சிறந்தவரான Ron Artest போன்றவர்களுடன் Odom & Gasol ம் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள். கூடவே இந்த சீசனில் இவர்களின் தடுப்பு ஆட்டத்தின் தரம் அதிகரித்து உள்ளது. இவர்களின் பலவீனம் பெரும்பாலும் Kobe Bryant யே நம்பி இருப்பது. பெயிண்ட் க்கு வெளியில் இருந்து பாயிண்ட்கள் அதிகம் எடுக்காமல் இருப்பது என்பதையும் கூறலாம்.
Celtics பலம் அவர்களின் முன் வரிசை வீரர்கள் தான். Garnett, Pierce, Allen, Rondo என பட்டையை கிளப்பும் தரமான வீரர்கள். அதிலும் இந்த சீசனில் Rondo வின் ஆட்டத்தில் அனல் பறக்குகிறது. இவர்களின் பலமே தடுப்பு ஆட்டம் மற்றும் அனைவருமே ஸ்கோர் செய்வதுமே. அதிலும் & அபாயகரமானவர்கள். பலவீனம் என்றால் பெஞ்ச் ஆட்டக்காரர்கள் யாரும் பெரிதாக இதுவரை ஸ்கோர் பண்ணவில்லை.
கடந்த முறை (2008) யில் தடுப்பு ஆட்டங்களில் மூலமும், பெயிண்ட் ஏரியாவிற்குள் நுழைய விடாமலும் Kobe Bryant க்கு அவர் சக வீரர்களிடம் இருந்து உதவி கிடைக்க விடாமல் தடுத்துமே Celtics சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்கள். இந்த வருடமும் கண்டிப்பாக அதே பாணி ஆட்டத்தை தான் விளையாடுவார்கள். ஆனால் இந்த முறை Fisher & Artest சில பாயிண்ட்கள் எடுத்து Kobe Bryant க்கு உதவி செய்தால் ஆட்டத்தின் போக்கே மாறும்.மொத்தத்தில் பாஸ்டன் அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக தெரிந்தாலும், எதையும் சாதித்துக் காட்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் அவ்வளவு சுலபமாக கோப்பையை விட்டுத் தர மாட்டார்கள். இந்த முறை எப்படியும் 7 ஆட்டங்களும் (Best of 7) நடைபெறும் என்று நினைக்கிறேன். Celtics யின் ஆட்ட யுத்தியும், Garnett டின் காட்டுமிராண்டித்தன ஆட்டமும் என்னை கவர்ந்தாலும் Kobe Bryant க்காக லாஸ் ஏஞ்சல்ஸ் Lakers வெற்றி பெற வேண்டும் என எதிர்பாக்குகிறேன்.
ஏது எப்படி இருந்தாலும் வேகம், விவேகம், விறுவிறுப்பு க்கு எந்த விதமான பஞ்சமும் கண்டிப்பாக இருக்காது. அதுக்கு நான் கியாரண்டி. தவற விடாமல் கண்டுக் களியுங்கள்.
Image Courtesy : NBA.com
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, June 03, 2010
11
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் NBA, கூடைப்பந்து, விளையாட்டு
Wednesday, April 14, 2010
தமிழ் புத்தாண்டு
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Wednesday, April 14, 2010
5
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Friday, March 05, 2010
மட்டையடி உற்சவம் - நாகை
பொங்கல் அன்று நாகை ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் கோவில் சென்ற போது நாளை மாலை மட்டையடி உற்சவம் உள்ளது தவறாமல் வந்து விடுங்கள் என்று கூற, ஏதோ ஒரு பதிவில் இதை பற்றி படித்தும், இது ஸ்ரீரங்கத்தில் மட்டும் தான் நடைபெறும் என்று நினைத்துக் கொண்டு இருந்ததும் ஞாபகத்தில் வந்தது. வீட்டில் இதை பற்றி கேட்கும் போது இவ்வளவு நாளாக இங்கு இருக்கிறாய், இது கூடவா தெரியாது என்று நம் அறியாமையை பதம் பார்த்த காரணத்தால் அதன் புராண கதையை கேட்க முடியாமல் போயிற்று. சரி எப்படியும் நாளை மாலை இந்த உற்சவத்தை தவறாமல் கண்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
இதை பற்றிய புராணக் கதை மிக தெளிவாக அறியாத காரணத்தால் எனக்கு தெரிந்தவற்றை மட்டும் இங்கு. துலக்க நாச்சியார் காண நம்பெருமாள் சென்ற காரணத்தால் கோவம் கொண்டு தாயார் மீண்டும் வீட்டின் உள்ளே அனுமதிக்க மறுப்பதே இந்த மட்டையடி உற்சவத்தின் சாரம்சம். வாழை மட்டை கொண்டு அடிக்கப்படுகிறது. அழ்வார் வந்து சாமாதனம் செய்வதாகவும் தெரிகிறது.
மாலை நான் சிறிது தாமாதமாக சென்ற காரணத்தால் முழுமையாக காண முடியவில்லை. படங்களும் சரியாக அமையவில்லை. சலனப்படம் சிறிதே எடுக்க முடிந்தது.
நம்பெருமாள் துலக்க நாச்சியாரை காண செல்லும் புகைப்படம்
கோவிலுக்குள் செல்ல முயலும் புகைப்படம்
மட்டையடி கொடுத்து வாயில் மூடப்படும் புகைப்படம்
தாயாரும், நம்பெருமாள் இணைந்து காட்சி கொடுக்கும் புகைப்படம்
மேலே உள்ள படத்தில் மட்டையடி உற்சவத்தை பற்றிய புராண கதையை கோவில் பட்டாச்சாரியார்கள் விளக்கும் காட்சியையும் காணலாம்.
சலனப்படம்
புராணங்கள் எப்படி இருந்தாலும், இந்த உற்சவத்தை கோவில் அங்கத்தினர்கள் நடத்திய பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது, அத்தனை அழகு. ஒரு ஒழுங்குடன், மிகவும் நேர்த்தியாக அமைந்தது இருந்தது. திருநாகை அழகியாருக்கு நடந்த இந்த உற்சவம் ஒரு அழகியல் நிகழ்வு என்பதால் தான் இந்த பதிவு.
ஸ்ரீரங்க மட்டையடி உற்சவத்தை பற்றி மாதவிபந்தலில் வந்த பதிவு.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Friday, March 05, 2010
7
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் அனுபவம், ஆன்மிகம், நாகை, நிகழ்வுகள்


