Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Tuesday, February 24, 2009

டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில்

விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்த போதும், விவேக் க்கு பத்மஸ்ரீ விருது கொடுத்த போதும் என்ன தோன்றியதோ அதே தான் எனக்கு இந்த விருது கொடுத்த போதும் தோன்றியது. அதிலும் விஜய் அந்த விழாவில் இளைஞர்கள் வெளிநாட்டிற்கு போகாமல் உள்நாட்டில் வேலை பாக்க வேண்டும் என சொன்னது போது கவுண்டரின் "புத்தி சொல்லுறாராம்" டயலாக் தான் ஞாபகம் வந்துச்சு. விவேக் பத்மஸ்ரீ வாங்கிட்டு என்னா சொல்லுறார் என்று பொறுத்து இருந்து பார்ப்போம். இந்த விருது கொடுப்பதற்கு எல்லாம் என்ன தான் அளவுகோளோ?

இப்ப எதுக்கு இந்த பழங்கதைனு கேட்குறீங்களா? நம்ம கீதா சாம்பசிவம் அவர்கள் நமக்கு ஏதோ பட்டு பூச்சி விருதுனு சொல்லி ஒரு வண்ணத்துபூச்சி விருது கொடுத்து இருக்காங்க. ஒரு சிட்டுக் குருவிக்கு கூட வழி இல்லாம இருக்கோம் என்று அவங்களுக்கும் தெரிந்துடுச்சோ என்னவோ? அது சரி கூல் ப்ளாக் னு நமக்கு ஏன் விருது கொடுத்தாங்க, ஒரே குழப்பமாகீதேனு அதுக்கு ஏதும் விளக்கம் கொடுத்து இருக்காங்களா என்று பார்த்தால் அவங்க இன்னும் குழப்பி வைக்குறாங்க.

"மூன்றாவதாக யாரென்றால் முதல்லேயே இவரைக் குறிப்பிட்டிருக்கணும். ஆனால் திடீர்னு வரார், திடீர்னு காணாமப் போறார். இப்போ இருக்கார்னு நினைக்கிறேன். சூடான் புலி இவரைத் தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம் வேண்டாம்னு நினைக்கிறேன்."

காரணம் வேணாம் னு சொன்னதால் அதை ரொம்ப கிளற வேணாம்னு விட்டுட்டு நம்ம கையில் இருந்து வேறு யாருக்கும் தள்ளி விடுனும் என்று சொல்லி இருக்காங்க. அதனால் நான் பரிந்துரைக்கும் 5 நபர்கள்

1. கைப்புள்ள - கூல் னு சொன்னவுடன் நம்ம நினைவுக்கு வந்தது இவர் தான். கூலான ப்ளாக் ஆனா செம சூடாவார் சில விசயங்களை கண்டு, ஆனாலும் கூலாக காட்டிப்பார்.

2. Raz - செம கூலானா ப்ளாக் & செம கூலானா ஆளு.

3. அபிஅப்பா - இவரும் அப்ப அப்ப சூடாவார் அப்புறம் தீபா வெட்கட் படத்தை பார்த்து கண்கள் பனிக்க இதயம் இனிக்கனு கூலா சுத்திக்கிட்டு இருப்பார்.

4. புதுகைத் தென்றல் - கீதா சாம்பசிவம் மாதிரி பதிவுகளாக அடுக்கிட்டு போறாங்க. பல விசயங்களை தொட்டு எழுதுறாங்க, எல்லாமே பாசிட்டிவ் அப்ரோச் சா எழுதுறாங்க.

5. வித்யா - உணவு, சினிமா, நக்கல் னு கலந்து கட்டு ரகளையாக எழுதிக்கிட்டு இருக்காங்க.

இம்புட்டு தாங்க. இவங்க எல்லாம் என்ன பண்ணனும் என்றால் விருதை வாங்கிகோங்க உங்க பதிவில் போட்டுக்கோங்க. அத்தோட இந்த விருதை முடிச்சுக்கலாம். இது போல முடிச்சு வைப்பதே நம்ம வேலையா இருக்கு. இந்த விருதை கண்டுப்பிடிச்ச ஆளை தான் தேடிக்கிட்டு இருக்கேன், வர்கார்ந்து யோசிச்சியா னு கேட்க தான்.

பி.கு: 5ல் 3 விருது பெண்களுக்கு கொடுத்து இருப்பது 33% இந்த ஆட்சியிலும் நாமம். வர தேர்தல் வாக்குறுதியில் அது இருக்கும், மிஸ் ஆகாம இருக்கானு அவர்கள் பார்க்கனும் என்று கேட்டுக் கொள்ள தான்.