வழக்கம் போல் இந்த வருடமும் நம் ப்ளாக் நட்புகள் பாச மழையை பொழிந்து இன்ப வெள்ளத்தில் மிதக்க வைத்து விட்டார்கள். அதிலும் போன வருடத்தில் இருந்து அவ்வளவாக எழுதுவது இல்லை. போன வருடம் ஊரில் இருந்ததால் ப்ளாக் மக்கள் ஞாபகம் வச்சு வாழ்த்தினாங்க, இந்த வருடம் அவ்வளவாக கண்டுக்க மாட்டங்க என்று நினைச்சேன். ஆனால் அதை பொய்பித்து காட்டும் விதமாக கலக்கிட்டாங்க.
அதிலும் ஒன்னு இல்ல இரண்டு இல்ல மூணுங்க - பிறந்தநாள் வாழ்த்து பதிவு (ரொம்பவே ஒவரா தான் எனக்கே படுது) ஒருத்துனுக்கு ஒரு வயசு ஏறுது என்பதில் என்ன ஒரு ஆனந்த சந்தோசம் பாருங்க இந்த மக்களுக்கு.
1, சங்கத்து சிங்கம் ராயல் ராம் - கவுஜை நாயகன் என்பதை நிருபித்து உள்ளார் நம்ம ராயலு.
2. பிரவாகம் காயத்ரி - என்னிடம் கேட்டு இருந்தா கூட இப்படி பதில் சொல்லி இருப்பேனோ என்பது சந்தேகம் தான்.
3. என்னமோ போ Raz - ஒவர் நக்கல் ஆகிடுச்சு. அன்புத் தோழி அதனால் மன்னிச்சாச்சு.
உங்க மூவருக்கும் உடனடியாக நன்றி சொல்ல முடியவில்லை. ICC பிரச்சனையால் அன்னிக்கு இணையம் பக்கம் வர முடியல. அதனால் தான் ஒரு போஸ்ட் போட்டு நன்றி நவில்றேன்.
அதிலும் காயத்ரி பதிவுல இருந்த அந்த வீடியோவை பாத்துட்டு உண்மையிலே அசந்துட்டேன். அதை உருவாக்க உதவிய ராம், கானா பிரபா, கே4கே அண்ணாச்சி, காயத்ரி இவங்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.
அது போக ஆர்குட், பேஸ்புக், கைப்பேசி, மின் அஞ்சல், SMS, பின்னூட்டம், (இ)வாழ்த்து அட்டை என பலவழிகளிலும் வாழ்த்திய அம்புட்டு சனத்துக்கும் மிக்க நன்றி. __/\__
இப்போ தனக்கு தானே சொறிந்து கொள்ளும் திட்டத்தின் கீழ் ஒரு அறிவிப்பு (அப்ப மேலே உள்ளது... உச்ச்ச்ச்ச் கண்டுக்கப்பிடாது)
மார்ச் 7 வுடன் இந்த பதிவை ஆரம்பிச்சு 3 வருசம் முடிஞ்சு 4வது வருடம் ஆரம்பம் ஆச்சு. இது வரைக்கும் பெரிசா எழுதிடல. இனிமேலும் பெரிசா ஏதும் எழுதிட போறது இல்ல. ஆனாலும் தொடர்ந்து எழுதுவோம் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு தாரீர்.
என்னோட இம்சைக்கு காரணமாக அமைந்த அந்த மூவரை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்து விரும்புகிறேன். அறுசுவை பாபு, ப்த்ரி, ரஜினி ராம்கி.
இதற்கு உங்கள் வாழ்த்துக்களும், வசவுகளும் வரவேற்கப்படுகின்றன.
Wednesday, March 11, 2009
நன்றி நவில்தல்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Wednesday, March 11, 2009
41
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் நன்றி, புலி, வலைப்பதிவு, வாழ்த்து, விளம்பரம்
Tuesday, February 24, 2009
டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில்
விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்த போதும், விவேக் க்கு பத்மஸ்ரீ விருது கொடுத்த போதும் என்ன தோன்றியதோ அதே தான் எனக்கு இந்த விருது கொடுத்த போதும் தோன்றியது. அதிலும் விஜய் அந்த விழாவில் இளைஞர்கள் வெளிநாட்டிற்கு போகாமல் உள்நாட்டில் வேலை பாக்க வேண்டும் என சொன்னது போது கவுண்டரின் "புத்தி சொல்லுறாராம்" டயலாக் தான் ஞாபகம் வந்துச்சு. விவேக் பத்மஸ்ரீ வாங்கிட்டு என்னா சொல்லுறார் என்று பொறுத்து இருந்து பார்ப்போம். இந்த விருது கொடுப்பதற்கு எல்லாம் என்ன தான் அளவுகோளோ?
இப்ப எதுக்கு இந்த பழங்கதைனு கேட்குறீங்களா? நம்ம கீதா சாம்பசிவம் அவர்கள் நமக்கு ஏதோ பட்டு பூச்சி விருதுனு சொல்லி ஒரு வண்ணத்துபூச்சி விருது கொடுத்து இருக்காங்க. ஒரு சிட்டுக் குருவிக்கு கூட வழி இல்லாம இருக்கோம் என்று அவங்களுக்கும் தெரிந்துடுச்சோ என்னவோ? அது சரி கூல் ப்ளாக் னு நமக்கு ஏன் விருது கொடுத்தாங்க, ஒரே குழப்பமாகீதேனு அதுக்கு ஏதும் விளக்கம்
கொடுத்து இருக்காங்களா என்று பார்த்தால் அவங்க இன்னும் குழப்பி வைக்குறாங்க.
"மூன்றாவதாக யாரென்றால் முதல்லேயே இவரைக் குறிப்பிட்டிருக்கணும். ஆனால் திடீர்னு வரார், திடீர்னு காணாமப் போறார். இப்போ இருக்கார்னு நினைக்கிறேன். சூடான் புலி இவரைத் தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம் வேண்டாம்னு நினைக்கிறேன்."
காரணம் வேணாம் னு சொன்னதால் அதை ரொம்ப கிளற வேணாம்னு விட்டுட்டு நம்ம கையில் இருந்து வேறு யாருக்கும் தள்ளி விடுனும் என்று சொல்லி இருக்காங்க. அதனால் நான் பரிந்துரைக்கும் 5 நபர்கள்
1. கைப்புள்ள - கூல் னு சொன்னவுடன் நம்ம நினைவுக்கு வந்தது இவர் தான். கூலான ப்ளாக் ஆனா செம சூடாவார் சில விசயங்களை கண்டு, ஆனாலும் கூலாக காட்டிப்பார்.
2. Raz - செம கூலானா ப்ளாக் & செம கூலானா ஆளு.
3. அபிஅப்பா - இவரும் அப்ப அப்ப சூடாவார் அப்புறம் தீபா வெட்கட் படத்தை பார்த்து கண்கள் பனிக்க இதயம் இனிக்கனு கூலா சுத்திக்கிட்டு இருப்பார்.
4. புதுகைத் தென்றல் - கீதா சாம்பசிவம் மாதிரி பதிவுகளாக அடுக்கிட்டு போறாங்க. பல விசயங்களை தொட்டு எழுதுறாங்க, எல்லாமே பாசிட்டிவ் அப்ரோச் சா எழுதுறாங்க.
5. வித்யா - உணவு, சினிமா, நக்கல் னு கலந்து கட்டு ரகளையாக எழுதிக்கிட்டு இருக்காங்க.
இம்புட்டு தாங்க. இவங்க எல்லாம் என்ன பண்ணனும் என்றால் விருதை வாங்கிகோங்க உங்க பதிவில் போட்டுக்கோங்க. அத்தோட இந்த விருதை முடிச்சுக்கலாம். இது போல முடிச்சு வைப்பதே நம்ம வேலையா இருக்கு. இந்த விருதை கண்டுப்பிடிச்ச ஆளை தான் தேடிக்கிட்டு இருக்கேன், வர்கார்ந்து யோசிச்சியா னு கேட்க தான்.
பி.கு: 5ல் 3 விருது பெண்களுக்கு கொடுத்து இருப்பது 33% இந்த ஆட்சியிலும் நாமம். வர தேர்தல் வாக்குறுதியில் அது இருக்கும், மிஸ் ஆகாம இருக்கானு அவர்கள் பார்க்கனும் என்று கேட்டுக் கொள்ள தான்.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Tuesday, February 24, 2009
33
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் கொடுமை, தொடர், வலைப்பதிவு, விருது
Monday, January 08, 2007
இது உண்மையாங்க?
இந்திய மொழிகளில் அதிக வலைப்பதிவர்களைக் கொண்ட மொழி தமிழ் என்று தயங்காமல் சொல்லலாம். இலக்கியம், அரசியல், தொழில்நுட்பம், சமூகம் என பல துறைகளைப் பற்றியும் இங்கே அடிதடியுடன் விவாதிக்கிறார்கள். நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் படிக்க முடியாத பல சுவாரஸ்யமான படைப்புகள் வலைபதிவுகளில் படிக்கக் கிடைக்கின்றன. ஆனால், இதையே மேடையாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் சமூக விரோத, வகுப்புவாத சிந்தனைகளைப் பரப்பும் கும்பலும் தமிழ் இலக்கிய உலகில் காணப்படும் குழு மனப்பான்மையும் இங்கேயும் உண்டு. மாற்றுக் கருத்துச் சொல்பவர்கள் ஆபாசமாகத் திட்டுவது பரஸ்பர ஷொட்டுகளும் இங்கே சகஜம்.
இந்த வார இந்தியா டூடே இதழில் "கலக்கல் வருடம் - புதிய சிந்தனைகள்" என்ற பகுதியில் "விரியும் விவாத வெளி" என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டவை தான் நீங்கள் மேலே பொட்டியில் பார்த்தது. அது உண்மை தானே?
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, January 08, 2007
25
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் தமிழ், வலைப்பதிவு

