Showing posts with label அழகு. Show all posts
Showing posts with label அழகு. Show all posts

Monday, April 16, 2007

அழகோ அழகுகள்!!!

என் பார்வையில் அழகை பற்றி எழுத சொல்லி வல்லியம்மாவும், வெட்டியும் அழைத்து உள்ளார்கள். நம்ம ஜியும் கூப்பிட்டதா பேச்சு. அழகை பற்றி முதல் பதிவு போட்டவுடன் எது அழகு என்று யோசித்ததில் நாம் என்றும் சூச்ச்....சூ என்றும் சொல்லும் கவுஜு எனக்கே வந்துச்சுனா பாத்துக்கோங்களேன். நான் அழகை பற்றி பேச ஆரம்பித்தால் ஆர்பரிக்கும் கடல் அலையில் ஆரம்பித்து ஸ்டெபியின் குதிரை வாலை பிடித்து நேதாஜியின் பேச்சு வரைக்கும் போகும். அதனால் நம்ம கொத்துஸ் கொடுத்த ஆறு அழகையையே நானும் என் பார்வையில் கூற முற்படுகிறேன்.

1, முகம்

எல்லா முகமும் ஒரு வகையில் அழகு தான். சில முகங்களை வாழ்வில் மீண்டும் சந்திக்க மாட்டோமா என்ற ஏக்கம் எனக்கு உண்டு. அதில் கன்னுக்குட்டியும் உண்டு கன்னியரும் உண்டு. நான் என்றும் ரசிக்கும் சில முகங்கள்.

எம்.எஸ். - நிறைவாழ்வு என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்வது. இவரின் "குறை ஒன்றும் இல்லை" பாடலை கேட்டாலே இவர்களின் சாந்தமான முகம் தான் முதலில் நினைவுக்கு வரும்.

சுபாஷ் - நேதாஜியை பெரும்பாலும் ராணுவ உடையில் பார்த்து தான் நமக்கு பழக்கம். அந்த உடையில் அவர் படத்தை காணும் போதே ஒரு மிடுக்கு தெரியும். அவரின் மிடுக்கையே மிஞ்ச வைத்து என்னை ரசிக்க வைத்த முகம் இந்த முகம்.

இது போக பல முகங்கள் - ரமணர், குழந்தை கிருஷ்ணர், அரவிந்தர்/மதர், தெரசா, நாகை அழகியார் என்று பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.

2, இடம்

பிடித்த இடம், ரசித்த இடம் என ஏகப்பட்ட இடங்கள் இருந்தாலும் என்றும் மனதிற்கு அழகான இடம் என்றால் நாகையில் இருக்கும் என் பழைய வீடு மற்றும் புது வீடும் தான். பல விதமான அனுபவங்களை தந்த இடங்கள் அவை. வீட்டை விட்டு பார்த்தால் நாகை கடற்கரை - யாரும் அற்ற இரவில் தனிமையில் யோசிப்பது அல்லது உற்ற தோழர்களுடன் அமர்ந்து உப்புக் காற்று முகத்தில் அறைய நடிகை ஜோவில் ஆரம்பித்து மைக்கெல் ஜோர்டன் வரை பேசுவது இருக்கே.... ஆஹா.... அது போக நாகை புதிய பஸ் நிறுத்தம் - பல வகையான மனிதர்களை காணலாம், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், குல தெய்வ கோவில், கல்லூரி கட்டை சுவர், பள்ளி கூடைப்பந்து மைதானம், பாண்டி கடற்கரை, நைல் நதி - உகாண்டா, ஹைத்தியில் என் அறை பால்கனி என இதற்குக்கும் ஒரு பெரிய பட்டியல் நீளுகிறது.

3. நிகழ்வு

அக்காவின் திருமணம், அக்கா பையன் வரவு சொல்லாம். இதில் அக்கா பையன் பிறக்கும் போது நான் பாண்டியில் இருந்தேன், மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள் என்று செய்திக் கேட்டவுடன் புறப்பட தயார் ஆனேன். டெலிவரிக்கு குறிப்பிட்ட நேரம் குறைவாக இருந்ததால் திட்டத்தை கைவிட்டுட்டு கடற்கரை சென்று 5 நிமிடத்திற்கு ஒரு முறை தந்தைக்கும், தம்பிக்கு மாற்றி போன் அடித்த போது ஏற்பட்ட ஒரு பரபரப்பு, குழந்தை பிறந்த செய்தி கேட்ட பிறகு பெற்ற மகிழ்ச்சி. சரி காலையில் ஊருக்கு போகலாம் என்று நினைத்து படுத்து தூக்கம் வராமல் நடுராத்திரியில் ஊருக்கு கிளம்பி 4 மணிக்கு மருத்துவமனைக்கு போக வேண்டும், உள்ள விட மாட்டாங்கடா சொன்ன தந்தையுடன் ஒரு ஜாலி சண்டை போட்டு ஐந்து மணிக்கு நம்ம மாப்ஸ்ச பார்த்த நேரம் இருக்கு பாருங்க, அதாங்க அழகு. அது போக அன்று எனக்கு பிறந்த நாள், எனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் இந்த செய்தியை சொல்லி இரட்டை மகிழ்ச்சி வேற.

4, குறும்பு

என்ன பாத்தா குறும்பு செய்றவன் மாதிரியாங்க இருக்கு. நான் ரொம்பவே அப்பாவிங்க. கல்லூரியில் படிக்கும்(???) போது என்.ஐ.ஐ.டி. க்கும் போய் கிட்டு இருந்தோம். அங்கு நமக்கு கிளாஸ் எடுக்கும் ஒரு மேடம் ரொம்பவே தோஸ்த், ஒரு 3,4 வயசு தான் வித்தியாசம். நம்ம கெட்ட பழக்கம் என்னான நம்ம நெருங்கிய தோஸ்துங்க பேக்கை நொண்டுவது. அது ஏன்னென்றால் ஆரம்பித்துல் இருந்து கோ-எட் படிச்சாச்சா, அப்படியே பழகி போச்சு. (அந்த பழக்கம் இப்ப இல்லனு சொன்னா நம்பனும்). பெரும்பாலும் சாக்லெட் கிடைக்கும், ஒரு நாள் அவரின் அழகிய புகைப்படம் நம்ம கையில் கிடைத்தது. ஒரு நாள் அவங்கிட்ட போய் மேடம், நான் ஒரு பொண்ண லவ் பண்ணுறேன், அவ இல்லாம் என் வாழ்க்கையே இல்லைனு சொல்லி இத்தனை நாள் நாம் பார்த்த நோட் பண்ணி வச்சு இருந்த அத்தனை சினிமா டயலாக்கையும் சொல்லி அவங்களை நம்ப வைத்தேன். அவங்களும் நம்பி உனக்கு என்ன உதவி வேணுமானலும் சொல்லு செய்ய நான் தயார், அது போக அப்ப அப்ப அட்வைஸ் வேற. போட்டோ காட்டுனு பல முறை கேட்டும் பார்த்தா பொறாமை படுவீங்கனு கையில் வைத்துக் கொண்டே போக்கு காட்டிக்கிட்டு வந்தேன். ஒரு நாள் அவங்க கிட்ட போய் மேடம் அந்த பொண்ண தூக்கலாம் முடிவு பண்ணிட்டேன், என்ன சொல்லுறீங்க கேட்டேன், அவங்க வீட்டுல என்ன சொல்லுவாங்க அவங்க கேட்க, அவங்க அப்பா, அம்மா, தம்பி அத்தனை பேரையும் சமாளிக்க நான் ரெடி, அந்த பொண்ணு மட்டும் ஒகே சொன்னா போதும் சொல்ல, அதுக்கு நான் பண்ணனும் சொல்லு கேட்க, ஒகே சொல்லுங்க னு சொன்னேன். ஒன்னும் புரியலனு அவங்க விழிக்க, நான் ரொம்ப சீரியஸா போட்டோவ காட்டினா விழந்து விழந்து இல்ல குனிஞ்சு குனிஞ்சு சிரிக்குறாங்க. அவங்களை கூப்பிட வந்த தம்பிக்கிட்ட சொல்ல அவனும் சிரிக்குறான், டேய், இது சீரியஸ்டா, டேய் இது சீரியஸ்டா கவுண்டமணி மாதிரி எல்லாம் சவுண்டு விட்டேன், ஆனா காமெடி ஆனது தான் மிச்சம். சச்சின் கதையை எல்லாம் சொல்லியும் கூட வேலைக்கு ஆகல. சில வருடங்கள் கழித்து அவர் திருமணம் பத்திரிக்கை கொடுக்கும் போது கூட கேட்டேன், ஹும் வேலைக்கு ஆகல.

5, பரிசு

இந்த மேட்டருல நான் கொஞ்சம் குறும்பு பண்ணுவேன்ங்க. காமெடியான வாழ்த்து அட்டை வாங்குவது, வித்தியாசமான பரிசு வாங்கி தருவது, இல்ல நண்பனை கடைக்கு பரிசு வாங்கி தரேன் என்று கூப்பிட்டு போய் மச்சி எது வேணுமானும் வாங்கிகோ பட்ஜெட் 10 ரூபாய் என்பது, நானே உனக்கு ஒரு மிக பெரிய பரிசு இதை விட வேற என்ன வேணும் என்பது, வாழ்த்து அட்டை வழங்கும் போது ரொம்பவே யோசித்து, பெறுபவர்கள் ரசித்து பார்க்கும்படி வாங்குவேன். நம்ம பசங்க எல்லாம் கிப்ட் இல்ல கார்ட் வாங்க நம்மள தான் கூப்பிடுவாங்கனா பாத்துக்கோங்களேன். குடுக்கின்ற பரிசு ஏதாக வேண்டுமானலும் இருக்கலாம் ஆனால் பரிசு அவர்கள் மனதை தொடுவது மாதிரி குறைந்தப்பட்சம் ஒரு புன்சிரிப்பை வர வைக்கும் மாதிரி இருக்க வேண்டும். அது போன்று நான் கொடுத்த பரிசும் அனேகம், பெற்ற பரிசும் அனேகம். இரண்டு வருடங்களுக்கு மேலாக நான் தினமும் பார்க்கும் பரிசு இது, ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அழகா தெரியும் பரிசு.

6, இல்லாத அழகு

தனி மனித ஒழுக்கம். இது நம் மக்கள் கிட்ட ரொம்பவே வளரனும் என்பது என் விருப்பம்.(நான் உட்பட). இது எந்த விசயத்தில் வேண்டுமானுலும் இருக்கலாம். ஏதாவது ஒரு விசயத்தில் நான் இனிமேல் ஒழுக்கமாக நடந்து கொள்வேன், எக்காரணம் கொண்டும் மீற மாட்டேன் என்ற உறுதியுடன் ஒரு காரியத்தில் ஒழுக்கமாக இருக்க ஆரம்பித்தால் சில நாள் கழித்து அது பழகி விடும். கண்டிப்பாக மீற மாட்டோம், பிறகு வேற ஒரு விசயத்தை எடுத்துக் கொள்ளலாம். உ.தா. ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுப்பது, சிக்னலை மதிப்பது, அடுத்தவர்களுக்கு மரியாதை குடுப்பது(முக்கியமாக பெற்றோர்க்கு), தவறாமல் ஒட்டு போடுவது, குப்பையை குப்பை தொட்டியில் கொட்டுவது, வருமான வரி கட்டுவது, பெற்ற கடனை திரும்ப செலுத்துவது, அடுத்தவர்களின் நம்பிக்கையை புண்படுத்தாமல் இருப்பது, சமுதாய வேறுபாடு பார்க்காமல் இருப்பது, மொபைல் போனை தியேட்டர், கோவில், மீட்டிங், மருத்துவமனையில் நிறுத்தி / சைல்ண்டில் போடுவது போன்று எவையாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏதாவது செய்யனும். செய்தாகவே வேண்டும் என் சமுதாயம் நம் சமுதாயம் உயர்வடைய.



நான் அழைக்கும் அழகான மூவர்

1, மருத்துவத்துறையின் விடிவெள்ளி சின்னய்யா டாக்டா இராமனாதன்
2, அஞ்சாநெஞ்சன் டாலர் செல்வன்
3, கொள்ளை சுனாமி லக்கிலுக்
தேவ் அழைத்து உள்ளார், அதனால்
4,கொலைவெறி படை தலைவர் செந்தழல் ரவி