Monday, January 15, 2007
பொங்கலோ பொங்கல்
சொன்னது நாகை சிவா என்னிக்குனா Monday, January 15, 2007 31 பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Monday, January 08, 2007
இது உண்மையாங்க?
இந்திய மொழிகளில் அதிக வலைப்பதிவர்களைக் கொண்ட மொழி தமிழ் என்று தயங்காமல் சொல்லலாம். இலக்கியம், அரசியல், தொழில்நுட்பம், சமூகம் என பல துறைகளைப் பற்றியும் இங்கே அடிதடியுடன் விவாதிக்கிறார்கள். நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் படிக்க முடியாத பல சுவாரஸ்யமான படைப்புகள் வலைபதிவுகளில் படிக்கக் கிடைக்கின்றன. ஆனால், இதையே மேடையாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் சமூக விரோத, வகுப்புவாத சிந்தனைகளைப் பரப்பும் கும்பலும் தமிழ் இலக்கிய உலகில் காணப்படும் குழு மனப்பான்மையும் இங்கேயும் உண்டு. மாற்றுக் கருத்துச் சொல்பவர்கள் ஆபாசமாகத் திட்டுவது பரஸ்பர ஷொட்டுகளும் இங்கே சகஜம்.
இந்த வார இந்தியா டூடே இதழில் "கலக்கல் வருடம் - புதிய சிந்தனைகள்" என்ற பகுதியில் "விரியும் விவாத வெளி" என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டவை தான் நீங்கள் மேலே பொட்டியில் பார்த்தது. அது உண்மை தானே?
சொன்னது நாகை சிவா என்னிக்குனா Monday, January 08, 2007 25 பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் தமிழ், வலைப்பதிவு
Friday, January 05, 2007
சொர்க்கம் சொர்க்கம் தான்...
ஹேய்ய்ய்ய்ய்ய்ய் தந்தன தந்தன
தந்தா
சொர்க்கமே என்றாலும் அதுநம் ஊர்ர போல வருமா
அட எந்நாடு என்றாலும் அதுநம் நாட்டுக்கு ஈடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும் அது
நம் ஊர்ர போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது
நம் நாட்டுக்கு ஈடாகுமா
இதுனால் நான் என்ன சொல்ல வரேன்னா, நான் இப்ப சொர்க்கத்தில் இருக்கேனுங்கோ...
இந்தியா வந்து 10 நாளாச்சு மக்கா, சில பல காரணங்களால் முன்பே தெரிவிக்க முடியவில்லை. திரும்ப எப்ப போறேன் என்று கேட்டு என்னை யாரும் அழ விடக்கூடாது சொல்லிட்டேன். ஆனாலும் நம் தொல்லை தாங்க முடியாமல் சீக்கிரமே துரத்திடுவாங்க என்பது மட்டும் நிச்சயம்.
என் தொல்லையை தாங்கி கொள்ளும் அளவு மனோபலமும், பொறுமையும் உள்ளவர்கள் என்னை கைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம். என் எண் - 98941 16732.
அப்பால நான் ஜகா வாங்கிக்குறேன் மக்கா.
சொன்னது நாகை சிவா என்னிக்குனா Friday, January 05, 2007 6 பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Subscribe to:
Posts (Atom)