Saturday, June 30, 2007

உயிர் வாழனுமா? அரசியல் வேண்டாமய்யா...

கருப்பு கொடி காட்டுவதில் தொடங்கி
கல் வீச்சு
கொடும்பாவி எரிப்பு
ஆட்டோவில் வந்து அடிப்பது
உருட்டு கட்டையால் உருட்டி எடுப்பது
ஆசிட் வீசுவது
செருப்பால் அடிப்பது
பஸ்சை கொளுத்துவது
கை, கால் எடுப்பது
அரிவாளால் வெட்டுவது
போலீசாரை ஏவி விடுவது
பொய் வழக்கு போடுவது
கஞ்சா வழக்கு
ப.ஆபிஸ் கொளுத்துவது
கை ஏறி குண்டு வீசுவது

என்று நாள் ஒரு மேனியாக வளர்ச்சி அடைந்து இன்று

ரிமோட் குண்டுல வந்து நிக்குது...

வேணாமய்யா இந்த அரசியல் நமக்கு, ஒழுங்கா பொழப்ப பாத்தோமா, வெட்டி நியாயம் பேசி தேர்தல் அன்னிக்கு கிடைக்கும் விடுமுறை அனுபவிச்சோமா, ஒரு வீடு வாங்கினோமா,ஒரு கார் வாங்கினோமா, கேட்குற வரிய கட்டினோமா, புள்ள குட்டிகள படிக்க வைச்சோமம, அதுக்கு ஒரு கண்ணாலம் காட்சிய பாத்தோமா என்று வாழுற வழிய பாருங்கய்யா.....

காந்தி கூறியதை போல

தீயதை (அரசியல்) பேசாதே
தீயதை (அரசியல்) கேட்காதே
தீயதை (அரசியல்) பாக்காதே

38 comments:

ILA (a) இளா said...

முதல்வன்ல மணிவண்ணன் சொன்ன வசனம் தான் ஞாபகத்துக்கு வருது

நாகை சிவா said...

என்னாங்கண்ணா அது?

Geetha Sambasivam said...

யாருக்குச் சொல்லி இருக்கீங்கன்னு புரியலை, இருந்தாலும் நல்ல அறிவுரை தான்.
அது சரி, நான் தான் ஃப்ர்ஸ்டா? என்ன கொடுக்கப் போறீங்க, முதலில் வந்ததுக்கு? நல்ல சுடச் சுட அல்வா அனுப்புங்க! :P

Geetha Sambasivam said...

க்ர்ர்ர்ர்ர், இளா முந்திக்கிட்டாரே, எல்லாம் இந்தக் கூகிள் பண்ணிய சதி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நாகை சிவா said...

//யாருக்குச் சொல்லி இருக்கீங்கன்னு புரியலை, இருந்தாலும் நல்ல அறிவுரை தான்.//

இதுல தனியா குறிப்பிட்ட என்ன சொல்ல வேண்டியது கிடக்கு... எல்லாரும் தான்.. அவர் அவர்கள் பங்குக்கு... சும்மா அதிர வைக்குறாங்க...

நாகை சிவா said...

//க்ர்ர்ர்ர்ர், இளா முந்திக்கிட்டாரே, எல்லாம் இந்தக் கூகிள் பண்ணிய சதி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் //

கூகிள் பண்ணுவதையே தாங்க முடியலையே... இங்க நடக்கும் சதிய எல்லாம் பார்த்தா எப்படி இருக்கும்...

நாமக்கல் சிபி said...

இப்போ தேவையான நல்ல வரிகள்!

கவிதையா சொல்லி இருக்கீங்க!

என்ன பண்ண! நாட்டோட நிலைமை அப்படி மோசமா போயிகிட்டிருக்கு!

:(

கோவி.கண்ணன் said...

//என்று நாள் ஒரு மேனியாக வளர்ச்சி அடைந்து இன்று

ரிமோட் குண்டுல வந்து நிக்குது...//

மிக மோசமான செயல்.

:(

தமிழ்நாடே அதிருது.......

சும்மா அதிருதுல said...

அவங்க உயிர் வாழ இது தேவையா இருக்கே..:(

ALIF AHAMED said...

நாலு பேருக்கு நல்லதுனா நாலாயிரம் பேர கூட கொல்லலாம் அதுதான் அரசியல்

நாகை சிவா said...

//அவங்க உயிர் வாழ இது தேவையா இருக்கே..:( //

உயிர் வாழவா... இல்ல பதவி வாழவா?

நாகை சிவா said...

//நாலு பேருக்கு நல்லதுனா நாலாயிரம் பேர கூட கொல்லலாம் அதுதான் அரசியல் //

அந்த நாலாயிரத்துல நம்ம இல்லாம இருந்துக்க சொல்லுறேன் மின்னல்...

நாகை சிவா said...

சிபி, கண்ணன் என்னத்த சொல்ல...

காந்தியின் மூனு குரங்கு மாதிரி நம்மளும் மாறிடனும் போல..

அரசியல் பாக்காத, அரசியல் பேசாத, அரசியல் கேட்காத என்று...

மனதின் ஓசை said...

சிவா,
சரியாத்தான் சொல்லியிருக்க..

//அந்த நாலாயிரத்துல நம்ம இல்லாம இருந்துக்க சொல்லுறேன் மின்னல்... //

இந்த வரி இன்னும் தெளிவா சொல்லுது..

இன்னும் யாரும் உன்ன நாட்டு மேல அக்கரை இல்லாதவன், றுப்பில்லாதவன்னு சொல்லலியா?

நாட்ட விட நாட்டு மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கனும்.
(கடவுளுக்கு காணிக்கை போடறத விட கஷ்டப்படறவனுக்கு உதவறது பெட்டர் இல்லயா?)

எல்லாம் சரி. இது என்ன?
//கவிதையா சொல்லி இருக்கீங்க!// சிபிக்கு என்ன வாங்கி கொடுத்த?? :-)))

Santhosh said...

புலி என்ன மேட்டரு ஒண்ணுமே புரியலை.

Santhosh said...

பங்கு படிச்சிட்டேன்,
அடப்பாவிங்களா என்னமா முன்னேறுறாங்க. தலைவர்களுக்கு இணையான தொண்டர்கள்.

Unknown said...

நாகையாரே

உள்கட்சி சண்டைக்கே ரிமோட் குண்டுன்னா இன்னும் எதிர்கட்சியோட சண்டை வந்தா என்ன, என்ன நடக்க போகுதுன்னே தெரியலையே?:((((

In a lighter vein,

விஜயகாந்த் மாதிரி 'கதாநாயகர்கள்' ஆட்சிக்கு வர சரியான நேரம் தான் இது:)

அபி அப்பா said...

இதென்ன சிவா! மாயவரத்துல ரோடுன்னு ஒன்னே இல்ல 4 வருஷமா! ஆனா ஸைடுல பார்த்தா டிஜிடல் போர்டு வச்சுக்காதவனே இல்ல, பாவிங்க அந்த காசை போட்டு கொஞ்சம் கொஞ்சம் கிரவல் வாங்கி கொட்டினா கொஞ்சம் தைரியமா ரோட்டில நடக்கலாம். எல்லாத்துக்கும் காரணம் முன்னாடி ச.ம.உ வா இருந்த ஒரு......நல்லா வருது என்னான்னு சொல்றது அவனை....ம் வார்த்தை கண்டு பிடிச்சுட்டேன் அது சுஜாதா வசனம், படம் விக்ரம், ராக்கெட் காணாம போச்சுன்னு வி.கே.ராமசாமி(மந்திரி)கிட்ட ஆபீஸர் எல்லாம் சொல்லுவாங்க அப்போ மந்திரி பேசும் அந்த வார்த்தை தான் அந்த முன்னால் ச.ம.உ வை சொல்லனும். ச்சே த்தூஊஊஊஊ நாதாறி பசங்களா! அரசியலை அசிங்கம் பண்றானுங்க, இவனுங்கலால சிதம்பரம்/தயாநிதிமாறன் எல்லாருக்கும் கேவலம்! போங்கடா போய் விவசாயத்த பாருங்கடா!

நாமக்கல் சிபி said...

//சிபிக்கு என்ன வாங்கி கொடுத்த?? //

Cheque Already Rceived!

Unknown said...

என்னய்யா ரொம்பப் பொங்கியிருக்கே.... ம்ம்ம் நீ வச்ச பொங்கல் ஊருக்குள்ளே அம்புட்டு பேர் மனசுல்லயும் நெதம் பொங்கிட்டுத் தான் இருக்கு... :(

Bharani said...

romba correct....aana ellarume ippadi vilagita....eppathaan arasiyal ozhungaagum....

லொடுக்கு said...

ஆட்டொ அனுப்புனா அங்கேயும் அதிரும்ல! :)

Anonymous said...

onnum purialiye... :-/ yen indha thideer arivurai? illai unga thalaivar rajiniku solringla?? :-/

-kodi

நாகை சிவா said...

//இன்னும் யாரும் உன்ன நாட்டு மேல அக்கரை இல்லாதவன், றுப்பில்லாதவன்னு சொல்லலியா? //

அது எல்லாம் சொல்லாம இருப்பாங்களா, அதை எல்லாம் எப்பவோ சொல்லியாச்சு... வெளிநாட்டுல வேலைக்கு வந்தப்பவே....

//நாட்ட விட நாட்டு மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கனும்.//

சரியான வார்த்தை. நம்மால் இயன்றதை செய்வோம்...

//சிபிக்கு என்ன வாங்கி கொடுத்த?? :-))) //

அவரை பாத்தா உங்களுக்கு வாங்கிட்டு கூவற ஆள் மாதிரியா இருக்கு...

நாகை சிவா said...

//அடப்பாவிங்களா என்னமா முன்னேறுறாங்க. தலைவர்களுக்கு இணையான தொண்டர்கள். //

சமத்துவத்த கடைப்பிடிக்குறாங்க பங்கு...

சரி, நாம நம்ம பொழப்ப பாப்போம்....

நாகை சிவா said...

//நாட்டுல நல்லவனா இருந்தாலும் வெடி வைக்கறாங்க கெட்டவனா இருந்தாலும் வெடி வைக்கறாங்க :(
என்ன பண்றது?:( //

மிருகம் பாதி, மனிதம் பாதி அப்படிங்குற மாதிரி, நல்லவனாவும் இல்லாம, கெட்டவனாவும் இல்லாம என்னவா இருக்கோம் என்பதே தெரியாத மாதிரி இருக்களேன்....

நாகை சிவா said...

//உள்கட்சி சண்டைக்கே ரிமோட் குண்டுன்னா இன்னும் எதிர்கட்சியோட சண்டை வந்தா என்ன, என்ன நடக்க போகுதுன்னே தெரியலையே?:((((//

ஏதுவும் நல்லதுக்கு இல்லைனு மட்டும் தெளிவா புரியுது செல்வன்.

விஜயகாந்த் வளர்ச்சி நல்லா தான் இருக்கு... போக போக பாக்கலாம்...

"மாதிரி" என்ற வார்த்தையில் ஏதும் உள்குத்து இல்லல....

நாகை சிவா said...

//இதென்ன சிவா! மாயவரத்துல ரோடுன்னு ஒன்னே இல்ல 4 வருஷமா! ஆனா ஸைடுல பார்த்தா டிஜிடல் போர்டு வச்சுக்காதவனே இல்ல, பாவிங்க அந்த காசை போட்டு கொஞ்சம் கொஞ்சம் கிரவல் வாங்கி கொட்டினா கொஞ்சம் தைரியமா ரோட்டில நடக்கலாம். //

சரி தான் தொல்ஸ்... அதிலும் இந்த பேருந்து நிலையத்துக்கு ஒரு வழி பிறக்கும் என்று(நாகை, திருவாரூர் போகும் பேருந்து நிலையம்) நானும் கடந்த 7, 8 வருசமா பாக்குறேன்...ஹுக்கும் சான்சே இல்ல... என்னத்த சொல்ல...

இன்னும் அந்த காவேரி ஆறு போர்டு இருக்கா... எட்டி பார்த்தா குப்பை கொட்டு இருக்குமே....

அப்படி என்ன ஜெ.வீ. மேல கோவம்... எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான்...

நாகை சிவா said...

//Cheque Already Rceived! //

பவுன்ஸ் ஆனா நான் பொறுப்பு இல்ல... ;-)

நாகை சிவா said...

//என்னய்யா ரொம்பப் பொங்கியிருக்கே.... ம்ம்ம் நீ வச்ச பொங்கல் ஊருக்குள்ளே அம்புட்டு பேர் மனசுல்லயும் நெதம் பொங்கிட்டுத் தான் இருக்கு... :( //

எவ்வளவு தான்ண்ணன், தண்ணி தண்ணி ஊத்தி ஆற வைக்குறது சொல்லுங்க....

நாகை சிவா said...

//romba correct....aana ellarume ippadi vilagita....eppathaan arasiyal ozhungaagum.... //

பரணி, அதை சரி பண்ண போய் உயிர விடுவதை விட... இல்ல நாமளும அந்த குட்டையில் விழுவதை விட... நம்மால் முடிந்ததை நம் ஊர் மக்களுக்கு செய்ய ஆரம்பித்தாலே மாற்றம் வரும் என்று நினைக்க தோணுது....

நாகை சிவா said...

//ஆட்டொ அனுப்புனா அங்கேயும் அதிரும்ல! :) //

ஆட்டோ அனுப்பாமலே அதிர்ந்து கிட்டு தான் இருக்கு, இதுல ஆட்டோ வேறையா... ஏண்ணன்... இந்த கொல வெறி....

நாகை சிவா said...

//onnum purialiye... :-/ yen indha thideer arivurai? illai unga thalaivar rajiniku solringla?? :-/

-kodi //

கொடி உங்களுக்கே புரியலை.... நீங்க சமைப்பதில் பிஸியா இருந்து இருப்பீங்க... அப்படியே இருங்க.. இதை தெரிஞ்சா மனசு தான் கஷ்டப்படும்... ப்ரீயா விடுங்க...

dubukudisciple said...

ennaga idu???
etho solrennu arasiyal ellam solli irukeenga??
ethavathu ul kuthu iruka?

நாகை சிவா said...

//ennaga idu???
etho solrennu arasiyal ellam solli irukeenga??
ethavathu ul kuthu iruka? //

உள்குத்து தெரிஞ்சா உள்குத்து இருக்குனு அர்த்தம்.

உள்குத்து ஏதும் தெரியாட்டி உள்குத்து ஏதும் இல்லனு அர்த்தம்.

இது மாடர்ன் ஆர்ட் மாதிரி பார்க்குறவங்க ஐ மீன் படிக்குறவங்க கண்ணோடத்தை பொறுத்தது.... ;-)

Unknown said...

hi frndz i'm hasim new visitor

நாகை சிவா said...

வாங்க நாணா...

நீங்க வருவதற்கு நான் கொடுத்து வச்சு இருக்க வேண்டும்...

(எப்படி எல்லாம் உன்ன வரவேற்க இருக்க வேண்டி இருக்கு பாரு, இது எல்லாம் கால கொடுமை)

Divya said...

சிவா,
நீங்கள் கூறியிருப்பது போல் அரசியல் வன்முறை நிறைந்ததாகத் தான் இருக்கிறது, மறுக்க முடியாத உண்மை அது!

\\வேணாமய்யா இந்த அரசியல் நமக்கு, ஒழுங்கா பொழப்ப பாத்தோமா, வெட்டி நியாயம் பேசி தேர்தல் அன்னிக்கு கிடைக்கும் விடுமுறை அனுபவிச்சோமா, ஒரு வீடு வாங்கினோமா,ஒரு கார் வாங்கினோமா, கேட்குற வரிய கட்டினோமா, புள்ள குட்டிகள படிக்க வைச்சோமம, அதுக்கு ஒரு கண்ணாலம் காட்சிய பாத்தோமா என்று வாழுற வழிய பாருங்கய்யா.....\\

இப்படி படித்த்வர்கள் எல்லாம் தன்னலத்துடன் இருப்பதால் தான் , அரசியல் சாக்கடையாக உள்ளது,

தேர்தல் அன்று கூட, ஓட்டு போடாமல், அந்நாளை விடுமுறையாக கழிப்பது ஒரு இந்திய குடிமகனுக்கு அழகல்ல.

நாம் ஒருவர் ஓட்டு போடுவதால் , அரசியலே மாறிவிடப்போகிறதா என் நீங்கள் கேட்கலாம்......

'சிறு துளி பெருவெள்ளம்' என்பது போல், ஒவ்வொருவராக நாம் முயற்ச்சி எடுத்து, என் ஓட்டுரிமையை பயன் படுத்த ஆரம்பித்தால் நிச்சயம் ஒருநாள் அரசியல் மாறும்.

நாம் ஒதுங்கி கொண்டு,தேர்தலை புறக்கனித்துவிட்டு இப்படி நியாயம் பேசுது சரியல்ல என்பது என் கருத்து.