நம்ம வேதா போதை பொருட்கள் குறித்து ஒரு பதிவு போட்டு இருந்தாங்க. அதற்கு ஒரு பதிவு அளவுக்கு பின்னூட்டம் டைப் பண்ணி போட்டுப்ப ப்ளாக்கர் ஒடியாந்து புடுங்கிட்டு போச்சு. சரி மீண்டும் அங்க பின்னூட்டமா இடுவதை விட இங்கு பதிவா போட்டால் இன்னும் விவாதம் விரிவடைந்தாலும் அடையலாம்(!!!) என்ற நம்பிக்கையில் இந்த பதிவு.
வேதா அவர்களின் பதிவு இங்கு.
அவர்கள் கூற வந்த கருத்து, அதற்கு அவர்கள் சொன்ன தீர்வு போன்றவற்றில் எனக்கு முழு உடன்பாடு இருந்தாலும், அவங்கள் சொன்ன சில விசயத்தில் எனக்கு நெறுடல் உண்டு. அவை
//ஆனால் போதை பொருட்களின் வரத்து சமீபகாலங்களில் அதிகரித்து விட்டது, காரணம் இளைஞர்களிடையே பணப்புழக்கம் அதிகரித்துவிட்டது.//
சமீபகாலம் என்பதும் தப்பு. இளைஞர்களிடையே ஏற்பட்ட பணப்புழக்கம் என்பது தப்பு.அதவும் இல்லாமல் இது சென்னையில் உள்ள பெரிய பள்ளிகளில் மட்டும் இது நடப்பது என்று சொல்வதும் தப்பு.
//அதுவும் தவிர தற்போது மிக வேகமாக பரவி மேற்கத்திய பார்ட்டி கலாச்சாரமும் இதற்கு காரணம், உலகமயமாக்கலின் காரணமாக ஊடுருவும் கலாச்சார மாற்றங்களில் நன்மைகளும் உண்டு,தீமைகளும் உண்டு. எதை நாம் எடுத்துக்கொள்வது என்பதில் தான் நம் வாழ்க்கையே அடங்கியுள்ளது. //
இந்த மேற்கத்திய பார்ட்டி கலாச்சாரத்தால் ஏற்படும் விளைவுகள் வேறு. அங்கு வரும் மக்கள் வேறு, அவர்களால் கையாளப்படும் போதை வகைகள் வேறு, அதை பற்றி பிறகு பாக்கலாம். பள்ளி, கல்லூரிகளை மட்டும் இப்பொழுது எடுத்துக் கொள்ளலாம்.
முன்பே சொன்ன மாதிரி சமீபகாலமாக எல்லாம் கிடையவே கிடையாதுங்க. ரொம்ப காலமா இருக்கு. வேண்டும் என்றால் சமீபகாலமாக வெளியில் தெரிய ஆரம்பித்து இருக்கின்றது என்று கூறலாம். இளைஞர்களிடையே ஏற்பட்ட பணப்புழக்கம் அதிகரித்து தான் காரணம் என்பதை ஒத்துக்க முடியாது. ஒரு கஞ்சா பொட்டலத்தின் விலை என்ன தெரியுமா? 7 ரூபாய் தான் நான் கல்லூரியில் படிக்கும் போது. ஒரு பொட்டலத்தை வைத்து 5,6 நபர்கள் உபயோகித்து இருப்பதை நான் பார்த்து இருக்கின்றேன். அதுவும் இல்லாமல் அவன் கஞ்சா அடித்து இருக்கின்றான் என்பதை கண்டு பிடிப்பதும் கஷ்டம். ஒரு வித மயக்கத்தில் அவர்கள் கல்லூரிக்கு வருவதும் உண்டு.
கல்லூரியில் தானே பள்ளியில் இல்லையே என்று சொன்னால் அங்கும் உண்டு, ஆனால் பள்ளியில் நான் படிக்கும் போது இவ்வளவு வெளிப்படையாகவும், பரவலாகவும் நடந்து நான் பார்த்தது இல்லை. எங்கள் ஊரில் உள்ள இன்னொரு பள்ளியில் எங்கள் வயது ஒத்த மாணவர்கள் பயன்படுத்துவதாக பேச்சு உண்டு. எங்கள் பள்ளி மாணவர்கள் அவர்களை கஞ்சா அடிக்கும் பசங்க தான்னடா நீங்கனு சொல்லி கிண்டல் அடிக்கும் அளவுக்கு.
இது போக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இந்த பான்பராக், மாணிக்சந்த், சூப்பர் பாக்கு, பிறகு ஏதோ இலையை கையில் வைத்து கசக்கி உதட்டுக்கு கீழ் வைத்து கொள்வது, நாக்குக்கு கீழ் அடக்கி கொள்வது, இன்னும் என்ன என்னமோ இருக்குங்க. இது எல்லாம் ஒரு பொட்டலத்தின் விலை ஐந்து ரூபாய்க்கு கீழ் தான். ஒரு பள்ளியிலோ, கல்லூரியிலோ படிக்கும் பசங்களுக்கு இந்த 5 ரூபாய் ஒரு பெரிய காசு கிடையாது. இது பசங்க கிட்ட மட்டும் தான் இருக்குனு நினைக்காதீங்க பெண்களிடமும் பரவலாக உண்டு. என்ன சகவீதம் கொஞ்சம் கம்மி. இந்த மேற்கூறியவைகள் அனைத்தும் எங்கள் ஊரின் நிலைமை. ஓரு நகரத்தில் இப்படி என்னும் போது மாநகரங்களில் எப்படி இருக்கும் என்று எண்ணி பாத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் கூறிய சென்னையில் உள்ள பணக்கார பள்ளிகள், நீங்கள் எந்த பள்ளியை மனதில் வைத்து சொன்னீர்கள் என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்த பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு சொல்லிட்டு அப்பீட்டு ஆயிக்குறேன்.
சென்னையில் இருந்து பூந்தமல்லி போகும் வழியில் அமைந்து உள்ள ஒரு போர்டிங் பள்ளியில் என் நண்பர் (பேஸ்கட் பால் டீம் சீனியர்)உடற்கல்வி ஆசிரியராக சில வருடங்கள் பணியாற்றி இருந்தார். அவர் கூறிய விசயம், அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பணம் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. ஒவ்வொரு முறை அவர்கள் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் போதும் எப்படி தான் சோதனை போட்டு உள் அனுப்பினாலும் அவர்களிடம் பணம் புழங்குமாம். சூ வை கிழித்து அதன் அடியில், கீழ் உள் ஆடைக்குள் வைத்து எப்படியாவது கொண்டு வந்து விடுவார்களாம்.

பிறகு அந்த பள்ளியில் வேலை பார்க்கும் வாட்ச்மேன், துப்புரவு பணியில் இருப்பர்கள் மூலம் சிகரெட் போன்றவைகள் பெற்று வந்தார்களாம். அதை கண்டுப்பிடித்த நிர்வாகம் ரைடு நடத்தி பணத்தை பறிமுதல் செய்து விட்டார்களாம். வேறு வழி இல்லாத மாணவர்கள் (10 ம் வகுப்பு) கெமிக்கல் லேப்பில் முயன்று ஒரு போதை பொருள் கண்டுப்பிடித்து (ஸ்பிர்ட் வாசம் தூக்கலா இருந்துச்சாம்) அதை பயன்ப்படுத்தி வந்து உள்ளார்கள். 9 வகுப்பு மாணவர்கள் அவர்களிடம் கேட்க இவர்கள் மறுக்க போட்டிக்கு 9 வகுப்பு மாணவர்கள் வேறு ஒன்றை புதுசா கண்டுப்பிடித்து பயன்படுத்தி உள்ளார்கள். கடைசியில் நிர்வாகம் இதை கண்டுப்பிடித்து சில மாணவர்களை வெளியில் அனுப்பி பிறகு தான் சரியாச்சாம்.
இத என்னனுங்க சொல்லுறது...
49 comments:
சிவா.. இந்த போதை பழக்கம் மிக கொடுமையானது. தன்னை அறியாமலேயே தன்னை தொலைத்து விட வைக்கும் இது மிக அபாயகரமானது.. அதுவும் சிறு வயதில்....
வேதா பதிவ இன்னும் படிக்கல.. கொஞ்சம் ஆணி புடுங்க வேண்டியதும் இருக்கு.. இப்பொதைக்கு present saar மட்டும்..மீண்டும் நாளை வரேன்..
//இங்கு பதிவா போட்டால் இன்னும் விவாதம் விரிவடைந்தாலும் அடையலாம்(!!!) //
விரிவடைகிறதா விரிசல் அடைகிறதா?
//இது போக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இந்த பான்பராக், மாணிக்சந்த், சூப்பர் பாக்கு, பிறகு ஏதோ இலையை கையில் வைத்து கசக்கி உதட்டுக்கு கீழ் வைத்து கொள்வது, நாக்குக்கு கீழ் அடக்கி கொள்வது, இன்னும் என்ன என்னமோ இருக்குங்க. இது எல்லாம் ஒரு பொட்டலத்தின் விலை ஐந்து ரூபாய்க்கு கீழ் தான். //
விலையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க? உங்களுக்கும் பழக்கமோ?
//வேறு வழி இல்லாத மாணவர்கள் (10 ம் வகுப்பு) கெமிக்கல் லேப்பில் முயன்று ஒரு போதை பொருள் கண்டுப்பிடித்து (ஸ்பிர்ட் வாசம் தூக்கலா இருந்துச்சாம்) அதை பயன்ப்படுத்தி வந்து உள்ளார்கள்//
ரொம்ப வெவரமான பயபுள்ளைங்களா இருக்காங்களே!!!!
//விலையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க? உங்களுக்கும் பழக்கமோ? //
அட அநியாய ஆபிஸர்களா?
பசி மயக்கத்தில் இருக்கேன், புல் கட்டு கட்டிட்டு வந்து பேசுறேன்....
சைட்டுல இதையும் சாப்பிட்டுவிட்டுதானே வர போறீங்க???
புலி! நாங்க படிக்கும் போது 2 ரூபாய்தான்.(உடனே என்னய சித்தப்பு அப்டீன்னு கூப்பிடகூடாது):-)
//வேறு வழி இல்லாத மாணவர்கள் (10 ம் வகுப்பு) கெமிக்கல் லேப்பில் முயன்று ஒரு போதை பொருள் கண்டுப்பிடித்து (ஸ்பிர்ட் வாசம் தூக்கலா இருந்துச்சாம்) அதை பயன்ப்படுத்தி வந்து உள்ளார்கள்//
நல்ல ஆராய்சி!!
சிவா, இந்தப் போதை பழக்கம் பிடித்தால் விடாதே.
பெற்றவர்கள் கதி என்ன ஆகும்.
நீங்க சொல்றது போல எம்பதுகளிலேயே ஆரம்பமானது இந்தப் போதை மருந்து விஷயம்.
என்னுடன் கல்லூரியில் படித்த சில நண்பர்கள் கஞ்சா அடித்துவிட்டு வந்திருப்பதாக சிலர் சொல்லக் கேள்வி,
ஆனால் என் கண்முன்னாடியே வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது தண்ணி அடித்தவன் உண்டு(ஏண்டானு கேட்டா ஒரு பந்தாவிற்க்காகவாம்),
பள்ளிப் பருவத்தில் என் சக நண்பன் ஒருவன் hans மற்றும் ganesh ஆகிய போதை வஸ்துக்களை(கைகளில் கசக்கி நாக்கின் அடியில் வத்துக் கொள்ளுவது)பயன்படுத்துவான்,நாமளும் போட்ட என்னனு ஒரு நாள் வாங்கி கசக்கி போட்டதுல மயக்கம் போட்டது தான் மிச்சம், அதோட சரி,மற்றபடி தாங்கள் சொல்லுவது போல் பள்ளிப் பருவத்தில் அதிகப் படியான போதை (கஞ்சா) பயன்படுத்தப் படுவதை நான் பார்த்ததில்லை,
அன்புடன்...
சரவணன்.
உண்மையில் இது நமக்குப் பழக்கம் இல்லாத மேட்டர். நம்ம நண்பர்கள் எல்லாம் வெளியூர் கல்லூரிகளில் படிக்கும் பொழுது இது சர்வ சாதாரணம் என்ற ரேஞ்சில் பேசுவார்கள். அதனால் இது சமீபத்திய ட்ரெண்ட் இல்லை என்பதுதான் என் எண்ணமும்.
பள்ளியில் படிக்கும் போது அசமஞ்சமாக இருந்துவிட்டேன்.இதெல்லாம் ஒன்றும் தெரியவில்லை.
எப்போதும் ஏதோ ஒரு கோவிலின் வாசலில் உட்கார்ந்துகொண்டு போகும் வரும் மாமிகளை கிண்டல் செய்து கொண்டிருந்த கானா பிள்ளை ஏன் அப்படி என்பது பின்னாளில் தெரிந்தது.
பாலியில் 2 வது மாடியில் 3ம் வருட மாணவர்கள் மற்றும் முதல் வருட (வீட்டில் இருந்து விடுபட்ட குஷி?)மாணவர்களும் கஞ்சா எடுத்தது நினைவு இருக்கு.எவனோ "அந்த ஐயர் பையனை விடுடா" என்று சொன்னதால் தப்பித்தேன்.நான் பங்குக்கு வந்துவிடுவேனோ என்று பயந்து சொன்னானோ என்னவோ!!
கஞ்சா அடிச்சவன ஈசியா கண்டுபிடிச்சிடலாம் புலி, காரணமே இல்லாம சிரிச்சிட்டு இருப்பான், யானைதீனி தின்னுவான், அசிங்கமா திட்டுனாலும் ஒண்ணுமே நடக்காதவன் மாதிரி இருப்பானுங்க.
நீ சொல்ற மாதிரியே கஞ்சா வாங்கறதுக்கு ரொம்ப கஷ்டபடவே தேவையில்ல ஊருக்கு நாலு பேர் விக்கிறானுங்க. இன்னைக்கு நேத்து நடக்குற வியாபாரமில்ல இது பலவருஷமா நடக்கறதுதான். சொல்லப்போனா கஞ்சா அடிக்கிறது எல்லாம் ஓல்டு பேஷனாகி போச்சு.
புதுசு புதுசா கண்டுபிடிச்சி அடிக்கறாங்க.
ஸ்னேக் பைட்,
பெப்ஸில என்னவோ ஒரு மாத்திரைய கலந்து அடிச்சா போதை கன்னா பின்னான்னு வருமாம. நான் படித்த பெரம்பலூர் கல்லுரிக்கு அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்ல இது தாராளமா மருத்துவரின் சீட்டு இல்லாமலேயே கிடைக்கும். முன்பு ஒருமுறை கூட ஜூனியர் விகடன்ல கவர்ஸ்டோரியா வந்துச்சி.
பெற்றோர்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனிக்காமல் இருப்பதுதான் இதற்கு காரணம்.
கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகள் மற்றொரு காரணம்.
(பெரம்பலூர்ல மதுவிலக்கு போலிஸ் அலுவலகத்துக்கு பக்கத்துலதான் கஞ்சா விக்கிற இடம் இருக்குன்னு குழந்தைய கேட்டா கூட சொல்லும்)
\\முன்பே சொன்ன மாதிரி சமீபகாலமாக எல்லாம் கிடையவே கிடையாதுங்க. ரொம்ப காலமா இருக்கு.\\
உண்மை தான் சிவா. எங்கள் பள்ளிக்கூடத்து வாசலிலேயே இதை எல்லாம் விப்பானுங்க.
\\இந்த பான்பராக், மாணிக்சந்த், சூப்பர் பாக்கு, பிறகு ஏதோ இலையை கையில் வைத்து கசக்கி உதட்டுக்கு கீழ் வைத்து கொள்வது, நாக்குக்கு கீழ் அடக்கி கொள்வது, இன்னும் என்ன என்னமோ இருக்குங்க.\\
120 பீடா, மாவான்னு இன்னும் பேரு தெரிதா பலது இருக்கு. காலங்காத்தால இந்த பெப்சி, இல்லைன்னா 7up வெறும் வயித்துல குடிப்பானுங்க... போதையா இருக்குமாம்.
\\ தம்பி said...
கஞ்சா அடிச்சவன ஈசியா கண்டுபிடிச்சிடலாம் புலி, காரணமே இல்லாம சிரிச்சிட்டு இருப்பான், யானைதீனி தின்னுவான், அசிங்கமா திட்டுனாலும் ஒண்ணுமே நடக்காதவன் மாதிரி இருப்பானுங்க.\\
தம்பி நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டிங்க ;-))) என் கல்லூரியில் ஓரு நேபாளி பையன் இருந்தான். அவன் கிளாசுக்கு வந்ததே வெறும் ஒரு மாசம் தான். எப்ப பார்த்தாலும் கஞ்சா அடிச்சுட்டு சுத்திக்கிட்டு தான் இருப்பான். பயப்புள்ள கடைசியில செத்தே போச்சு ;-(
\\ இத என்னனுங்க சொல்லுறது...\\
ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை.....அது அது தானே திருந்துனா தான் உண்டு.
\\விலையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க? உங்களுக்கும் பழக்கமோ?\\
என்ன கொடுமை இது சரவணா? ;-)))
சமீபத்துல ஒரு தம்பதியினரிடம் இக்கால குழந்தை வளர்ப்பு பற்றி பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. இருவரும் வேலைக்கு செல்பவர்கள். ஒரு guilty conscious அவங்களுக்கு; தன் மகனை ஒழுங்கா கவனிக்க முடியலன்னு. அத compensate பண்ண காசு கொடுக்குறது. நான் படிக்கும் காலத்தில் நாலணா கெடச்சா, கொண்டாட்டமா இருக்கும். இவங்க அவன் கண்ணில் படுமாறு பணம் வைப்பது. அவன் எடுக்கிறான்னு தெரிஞ்சும் கண்டுக்காம விட்டது, இப்போ பையன் குடிக்கு அடிமையாகிட்டான்னு மனநல மருத்துவரிடம் கூட்டிச் செல்கின்றனர். பையனுக்கு வயது 13 என்று கேட்டதும் ஆடிப் போயிட்டேன்.
சிவா..
//சமீபகாலம் என்பதும் தப்பு. இளைஞர்களிடையே ஏற்பட்ட பணப்புழக்கம் என்பது தப்பு.அதவும் இல்லாமல் இது சென்னையில் உள்ள பெரிய பள்ளிகளில் மட்டும் இது நடப்பது என்று சொல்வதும் தப்பு.
//
இது ரொம்ப காலமாவே நடந்துகிட்டு இருக்குன்றது உண்மைதான்.. ஆனால் சமீப காலங்களில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. வெளியில் தெரிய ஆரம்பித்து வருகிறது. கூடவே அதனாலென்ன பெரிய தப்பா என்னங்கற எண்ணமும் வளர்ந்து வருகிறது..இதுதான் பெரிய பிரச்சினை.
என் பிரண்ட்கிட்ட இருந்து வந்த மடலின் ஒரு பகுதியை இங்கே கொடுக்கிறேன்.
When we were teenagers itself half the values and morals had gone out of the window, now this new generation is going to be so much more well educated, well informed and probably much more less cultured and less moraled.
சிவா, போதை பள்ளிகளில், கல்லூரிகளில் மிக எளிதாக கிடைக்கறது.
என் மகன் படிக்கும் பள்ளியில் இது போன்று கண்டுபிடிக்கப்பட்டு, ஆசிரியர்கள் இப்போது மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
ஒரு நாள் பள்ளிக்கு வரவில்லை என்றாலும் கூட வீட்டுக்கு போன் மூலம் அழைத்து, எங்களுக்கு தெரிந்து அவன் வீட்டில் இருக்கிறானா?.. இல்லையா என்று கண்கானிக்கிறார்கள்.
நிச்சயமான காரணங்கள்
1. அதிகமான பணப்புழக்கம்
2. கூடா நட்பு
3. பெற்றோர்களின் கவனகுறைவும், கண்கானிப்பும் இல்லாமல் இருப்பது
4. தனிமை
5. ஏமாற்றங்களினால் ஏற்படும் தடுமாற்றம்.(எந்தவித காரணமாகவும் இருக்கலாம்)
மொத்தத்தில், பெற்றோர்களால், கவனித்து வளர்க்கப்படும் குழந்தைகளிடம் இந்த பழக்கம் இருப்பதில்லை.
என்ன நம்ம ஸ்கூல் ஹாஸ்டல்ல படிக்கும் போது தெரியாம பணம் கடத்தி வந்து...வாட்ச்மேன் மூலமா முட்டை பரோட்டா வாங்கி சாப்பிட்டோம்...இப்போ எல்லாம் டெக்னால்ஜி இம்புரூவ்டு...பசங்க ஸ்காட்ச் வாங்கி அடிப்பாய்ங்க போல
:-)
//தன்னை அறியாமலேயே தன்னை தொலைத்து விட வைக்கும் இது மிக அபாயகரமானது.. //
சுயக் கட்டுப்பாடு இல்லாட்டி ரொம்பவே கஷ்டம் ஹமீது....
//விரிவடைகிறதா விரிசல் அடைகிறதா? //
அது வரவங்களை பொருத்து,ஏதுக்கும் தயார்...
//விலையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க? உங்களுக்கும் பழக்கமோ? //
பாஸ்சன் விலைக் கூட தான் தெரியும், அதுக்குனு பழக்கமா கேட்பீங்களா, என்ன இது சின்னப்புள்ளத்தனமா!
//ரொம்ப வெவரமான பயபுள்ளைங்களா இருக்காங்களே!!!! //
நீங்க கூட பெரிய ஆராய்ச்சியாளர் கேள்விப்பட்டேன், உங்க அனுபவத்தை கொஞ்சம் சொல்ல முடியுமா???
//சைட்டுல இதையும் சாப்பிட்டுவிட்டுதானே வர போறீங்க??? //
உங்க அராஜகத்துக்கு வர வர அளவே இல்லாம போகுது!!!!
//புலி! நாங்க படிக்கும் போது 2 ரூபாய்தான்.(உடனே என்னய சித்தப்பு அப்டீன்னு கூப்பிடகூடாது):-) //
அப்படியா.... சே..சே... உங்கள போய் சித்தப்புனு கூப்பிடுவேனா, பெரியப்பு தான் நீங்க.... ;-)
//நல்ல ஆராய்சி!! //
எதிர்காலத்தில் நல்லா வருவானுங்க பசங்க!!!
//இந்தப் போதை பழக்கம் பிடித்தால் விடாதே.
பெற்றவர்கள் கதி என்ன ஆகும்.//
ஆமாங்க வல்லி, விளையாட்டாய் ஆரம்பித்து இதில் சிக்கி கொண்டவர்கள் தான் அதிகம்.
//என் கண்முன்னாடியே வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது தண்ணி அடித்தவன் உண்டு(ஏண்டானு கேட்டா ஒரு பந்தாவிற்க்காகவாம்),//
ஏது எதில் பந்தா விடுவது என்றே விவஸ்தை இல்லாம போச்சு, நம்ம பயபுள்ளைகளுக்கு!!!!
//உண்மையில் இது நமக்குப் பழக்கம் இல்லாத மேட்டர்.//
ஒத்துக்குறேன் கொத்துஸ்.
//நம்ம நண்பர்கள் எல்லாம் வெளியூர் கல்லூரிகளில் படிக்கும் பொழுது இது சர்வ சாதாரணம் என்ற ரேஞ்சில் பேசுவார்கள்.//
அது உண்மையும் கூட...
எலேய் புலி, பட்டய கிளப்பற.
வேதா விடாதீங்க.
(இன்னும் சூடு பிடிக்கலையே?)
நா பெரியப்புவா புலி:-))
//பாலியில் 2 வது மாடியில் 3ம் வருட மாணவர்கள் மற்றும் முதல் வருட (வீட்டில் இருந்து விடுபட்ட குஷி?)மாணவர்களும் கஞ்சா எடுத்தது நினைவு இருக்கு//
சில வருடங்களுக்கு முன்பு வரை அங்கு மிக அமோகமாக கிடைக்கும் குமார். இப்ப கொஞ்சம் பரவாயில்லை, அவ்வளவா கிடையாதுனு கேள்விப்பட்டேன்.
//என்னடா புலி பின்னூட்டம் போடாம பதுங்கிடுச்சேன்னு பார்த்தா இங்க பதிவே போட்டாச்சா? இதோ படிச்சுட்டு வரேன்:) //
எங்குட்டு பதுங்குற, எல்லாம் பாலைவனமால இருக்கு...
//மொத்தத்தில் நான் சொல்ல வந்தது என்னவென்றால் சமீப காலமாக தான் மிகவும் இள வயதிலேயே இளைஞர்களிடம் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது//
மொத்தத்தில் நான் சொல்ல வருவது என்னவென்றால் பணப்புழக்கத்திற்கு இந்த விசயத்துக்கு சம்பந்தம் இல்லை என்பது தான்.
//எனவே சரியான வழிக்காட்டுதல் இல்லாத இந்த காலக்கட்டத்தில் இந்த வயதினரிடையே அதிகரித்துள்ளது என்பது உண்மை தான் //
வழிக்காட்டுதல் இல்லாதது என்பது உண்மை தான். இந்த காலத்தில் நடப்பது அதிகமாக வெளியில் தெரிய ஆரம்பித்து இருக்கின்றது என்பது உண்மை தான்.
//இத தான் கொடுமைன்னு சொல்றது, முடிஞ்ச வரைக்கும் நமக்கு தெரிந்தவர்களாவது இதில் மாட்டிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை //
ரொம்பவே அட்வான்ஸா இருக்காங்க... இப்ப உள்ள தலைமுறை...
//கஞ்சா அடிச்சவன ஈசியா கண்டுபிடிச்சிடலாம் புலி,//
நமக்கு அந்த அளவுக்கு திறமை பாத்தாது தம்பி!
//பெரம்பலூர்ல மதுவிலக்கு போலிஸ் அலுவலகத்துக்கு பக்கத்துலதான் கஞ்சா விக்கிற இடம் இருக்குன்னு குழந்தைய கேட்டா கூட சொல்லும்) //
மது விலக்கு போலிஸ்சார் தானே, போதை தடுப்பு பிரிவு இல்லை அதான் கண்டுக்காம இருக்காங்க போல...
//எங்கள் பள்ளிக்கூடத்து வாசலிலேயே இதை எல்லாம் விப்பானுங்க. //
ராயபுரம் தானே, இது ரொம்ப சகஜம் ஆச்சே.
//காலங்காத்தால இந்த பெப்சி, இல்லைன்னா 7up வெறும் வயித்துல குடிப்பானுங்க... போதையா இருக்குமாம். //
அதுல ஒரு மாத்திரைய போட்டு குடிப்பானுங்க... நாங்க வாய் கொப்பளிக்க தான் இதை பயன்படுத்துவோம்.
//கஞ்சா அடிச்சுட்டு சுத்திக்கிட்டு தான் இருப்பான். பயப்புள்ள கடைசியில செத்தே போச்சு ;-( //
சரியான நேரத்தில் கண்டுப்பிடித்து கவுன்சிலிங் கொடுக்கா விட்டால் அதோ கதி தான்!
//ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை.....அது அது தானே திருந்துனா தான் உண்டு. //
அவன் அவன் திருந்தினா உண்டு.. சரியா சொன்ன கோபி.... திருத்த முயற்சி தான் நாம் செய்ய முடியும். செய்ய வேண்டியது அவனுங்க தானே!
//என்ன கொடுமை இது சரவணா? ;-))) //
அநியாய ஆபிசர்களா இருக்காங்கப்பா....
//பையனுக்கு வயது 13 என்று கேட்டதும் ஆடிப் போயிட்டேன். //
இது ரொம்ப கொடுமைங்க... இருவரும் வேலைக்கு செல்வதாக இருந்தாலும் குறிப்பிட்ட சில நேரத்தை வாரத்தில் ஒதுக்கி குழந்தைகளுடன் செலவிட வேண்டும்...
//When we were teenagers itself half the values and morals had gone out of the window, now this new generation is going to be so much more well educated, well informed and probably much more less cultured and less moraled. //
100 த்துக்கு 100 உண்மை.
மறுக்க முடியாத சோகம்!
//1. அதிகமான பணப்புழக்கம்
2. கூடா நட்பு
3. பெற்றோர்களின் கவனகுறைவும், கண்கானிப்பும் இல்லாமல் இருப்பது
4. தனிமை
5. ஏமாற்றங்களினால் ஏற்படும் தடுமாற்றம்.(எந்தவித காரணமாகவும் இருக்கலாம்)//
இவ்வளவு தெளிவா நீங்க சொன்ன பிறகு நான் சொல்ல என்ன இருக்கு!!!
//என்ன நம்ம ஸ்கூல் ஹாஸ்டல்ல படிக்கும் போது தெரியாம பணம் கடத்தி வந்து...வாட்ச்மேன் மூலமா முட்டை பரோட்டா வாங்கி சாப்பிட்டோம்...//
சாப்பிடுவேன் என்று சொல்லு பங்கு, என்னையும் ஏன் இழுக்குற....
//இப்போ எல்லாம் டெக்னால்ஜி இம்புரூவ்டு...பசங்க ஸ்காட்ச் வாங்கி அடிப்பாய்ங்க போல //
என்னத்த சொல்லு, நம்மள விட பல அடி தாண்டி பாயுறாங்க....
//எலேய் புலி, பட்டய கிளப்பற.
வேதா விடாதீங்க.
(இன்னும் சூடு பிடிக்கலையே?) //
எங்க... நம்ம சொன்ன எல்லாரும் ஒத்துக்குறாங்க... சண்டை போட வர மாட்டேங்குறாங்க....
//நா பெரியப்புவா புலி:-)) //
ஆமாம், அதில் என்ன அப்படி ஒரு சந்தோஷம் உங்களூக்கு, சிரிப்பான் எல்லாம் போட்டு இருக்கீங்க....
Hello, remembering me? Nice post. mmmmmmm, Veda is also correct in her point and you also. But definitely western culture is to be blamed for this. I know so many incidents connecting to this. but could not able to write them.
//Nice post. mmmmmmm, Veda is also correct in her point and you also. But definitely western culture is to be blamed for this. I know so many incidents connecting to this. but could not able to write them. //
பாதி பாதினு சொல்லுறீங்க. நீங்க என்ன சொல்ல வறீங்க என்பது புரியுது...
yenna koduma sir ithu........
yenna koduma sir ithu....
yarum itha kandudarathe ila....
Post a Comment