Thursday, December 20, 2007

கல்லூரி - என் பார்வையில்

ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் கதாநாயகியை தவிர்த்து புதுமுகங்களை கொண்டு வெளி வந்துள்ள படம் கல்லூரி.

+ ஷங்கர், பாலாஜி சக்திவேல் கூட்டணியில் மீண்டும் ஒரு வெற்றிப்படம், எந்த ஒரு மசாலாத்தனம் இல்லாத படம். நம்பி குடும்பத்தினர் உடன் செல்லாம்.

+ பழைய கதையாக இருந்தாலும் அனைத்து இயக்குனர்களும் தொட்ட கல்லூரி களமாக இருந்த போதிலும் தன் திரைக்கதையின் மூலம் ஒரு புதிய விதயத்தை கொடுத்து உள்ளார் இயக்குனர்.

+ பெரும்பாலும் புதுமுகங்களா இருந்த போதிலும் காதல் படத்தை போலவே பல கதாபாத்திரங்கள் நம்மை கவருகின்றது. முக்கியமாக நாயகனின் தங்கை, நாயகனின் தோழர், தோழியர்கள்.

+ கல்லூரி கலாட்டக்களின் மூலம் நம் கல்லூரி வாழ்வை நினைத்து பார்க்க வைப்பது.

+ காதலா, நட்பா என பதிவுலகில் தற்சமயம் அடிக்கப்பட்டு கொண்டு இருக்கும் ஜல்லியை தானும் அடிக்காமல் நட்பில் இருந்து வரும் காதலை யதாத்தமாக சொல்லி இருக்கிறார்.

+ படத்தின் முதல் பாடல் ரசிக்க வைத்தது. அதே போல் இன்னும் இரு பாடல்கள் முதல் முறை கேட்கும் போதே கவர்ந்தது. எப்.எம். தயவில் இந்த படத்தின் பாடல்கள் ஹிட் ஆகி இருக்கும் என்று எண்ணுகிறேன்.

+ சண்டை, வில்லன் என படத்தை திசை திருப்பாமல் ஒரே கோட்டில் எடுத்து சென்றது.

+ கதாநாயகன், கதாநாயகி இருவரும் அவர்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகைப்படுத்தாமல் நடித்து இருப்பது.

+ காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் ரொம்பவே இயல்பாக கொண்டு சென்று இருப்பது.


- படத்தின் முடிவு. நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுக்க முடிவு செய்து திரைகதை அமைத்தது போல் படம் முடிந்த பிறகு யோசிக்க வைப்பதால் அவ்வளவு மெனக்கட்டு அமைத்த திரைகதையின் மேல் ஒரு மரியாதை வர மறுக்கிறது.

- முடிவை தவிர்த்து படத்தில் ஒரு பெரிய சுவாரச்சியம் இல்லை. இயல்பாக நகர்கின்ற போதிலும் அந்த உணர்வு ஏற்படுகிறது. கத்திரியை சரியாக போட்டு இருக்கலாமோ?

- நட்பை குறித்த படம் என்ற போதிலும் நட்பு நட்பு என்று கூறி சில இடங்களில் நெஞ்சை நக்கி விடுகிறார்.

- தாம்னாவை ரொம்பவே அழ விட்டுட்டாரோ? பல காட்சிகளில் கண்கள் சிவந்து கிளசிரின் ரொம்ப ஊத்திட்டாங்களோ என்று தோன்ற வைக்கிறது.

- நம் கல்லூரி வாழ்வை நினைத்து பார்த்த வைத்த இயக்குனர் இதை நம் கல்லூரியுடன் ஒப்பீட்டு பார்க்கும் விசயத்தில் சிறிதே ஏமாற்றம் தர வைத்தது.

மொத்ததில் கல்லூரி ஒரு நல்ல படம். காண வேண்டிய படமும் கூட. அதற்காக தமிழ் சினிமாவை புரட்டி போட வந்த படம் அப்படி இப்படினு ஏத்தி விட்டு பருத்தி வீரனை வம்புக்கு இழுப்பது எல்லாம் ரொம்பவே ஒவரா தான் படுது. பாலாஜி சக்திவேல் இதை விட நல்ல படங்களை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரை ஊசுப்பேத்தி இது போன்ற படங்களையை தொடர்ந்து எடுக்க வைக்காமல் சாமுராய் போன்ற படங்களை இன்னும் மிக சிறப்பாக கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.

Saturday, December 15, 2007

பாலைவன பூக்கள்









Posted by Picasa




Posted by Picasa




Posted by Picasa








Posted by Picasa


குறிப்பு : படங்களை பெரிதுபடுத்தி பார்க்க படத்தின் மேல் க்ளிக்கவும்.

Friday, November 30, 2007

யுவதிகளின் எதிர்பார்ப்பு - இளைஞர்கள் கவனிக்க



நோ கமெண்ட்ஸ்!



சில சந்தேகங்கள் மட்டுமே


  • மீண்டும் மீசையை பெரிசு ஆக்கிடவா?


  • குறுந்தாடி வைக்கவா?


  • காதில் கடுக்கன் போடவா?


  • கொஞ்சம் தடி ஆகவா?


  • இன்னும் உசரமாக வளரவா?


  • நீளமா முடி வளர்கவா?


  • ஐ.ஐ.டி, என்.ஐ.டி யில் சேர்ந்து படிக்கவா?


  • எம்.பி.ஏ. சேரவா?


  • சாப்ட்வேர் ல சேரவா?

இல்லை மேற்சொன்ன எல்லாத்தையும் செய்யவா? முடியுமா? நடக்குமா?

Wednesday, November 28, 2007

தமிழை நேசிக்க வைப்பார்களா?

இன்று வடவூர் குமார் மற்றும் இட்லி வடையின் பதிவுகளை பார்க்க நேர்ந்த பிறகு எழுத தோன்றிய பதிவு இது.

தமிழை செம்மொழி ஆக்கி விட்டோம், தமிழை கட்டாயப்பாடமாக்கி விட்டோம் இனி தமிழுக்கு என்றுமே வளர்ச்சி மட்டும் தான் என்று நம் அரசியல் தலைவர்களின் தேர்தல் அறிக்கைகளிலும் மேடைப் பேச்சுக்களிலும் பார்த்து இருக்கலாம். அதை செய்தது நாங்கள் தான், திட்டத்தை முதலில் கொண்டு வந்தது நாங்கள் என்று அதிலும் சண்டையிட்டு நாம் பார்த்து இருக்கிறோம். தமிழகத்தில் இருக்கும் அனனவரும் கண்டிப்பாக தமிழில் தான் படிக்க வைக்க வேண்டும் என முழக்கிட்டு விட்டு தன் பேத்திய வேற மொழியில் படிக்க வைத்து பிரச்சனை பெரிதான பிறகு அந்த பள்ளியில் தமிழையும் ஒரு பாடமாக சேர்க்க வைத்த கதையும் நமக்கு தெரியும். அது எல்லாம் அரசியல், நமக்கு தேவையில்லாத விசயமும் கூட.

செம்மொழி என மார்தட்டிக் கொள்ளும் நம் மொழியை ராஜ்யசபாவில் பேச முடியவில்லை. காரணம், மொழி பெயர்ப்பாளர் இல்லை. இந்த பிரச்சனைக்கு பல மாதங்கள் ஆகியும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. அதை குறித்து ராஜ்யசபாவில் பேசுவதையே பூனைக்கு மணிய கட்டிய பழமொழியுடம் உதாரணப்படுத்த வேண்டிய நிலைமையில் உள்ளது என்றால் இதுக்கு எங்கே போய் முட்டிக் கொள்வது. அதை பற்றிய இட்லிவடையின் பதிவை படிக்க இங்கு செல்லவும்.

அது ஒரு பக்கம் இருக்கு, இன்று தமிழில் தொடர்ந்து பலர் எழுதுவதற்கு பதிவுலகமும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதற்கு நாம் எல்லாமே ஒரு உதாரணம் தான். இதே போல் வரும் சமுதாயமும் இருக்குமா? அவர்களில் பலரை(சிலரை) பொறுத்த வரை தமிழ் ஒரு பேச்சு மொழியாக மட்டும் தான் இருக்கிறது என்பது கண்க்கூடான உண்மை. அதை மாற்ற அரசாங்கமோ, தமிழ் வளர்ச்சி துறை, செம்மொழிக்கான துறையோ ஏதும் திட்டம் வைத்து செயல்ப்படுத்துகிறதா என்று எனக்கு தெரியலை. தெரிந்தவர்கள் கூறலாம்.

அப்படி ஏதும் இல்லை என்றால் சிங்கையில் செயல்படுத்துவதை போன்ற திட்டங்களையும் நம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவது மிக சிறந்த வழியாக எனக்கு படுகின்றது. "வாசிப்பை நேசிப்போம்" என்ற பெயர்யிட்டு தமிழ் மொழியை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் அதிகப்படுத்திக் கொண்டு வருகின்றார்கள். முதலில் 48 பள்ளிகள் ஆரம்பித்து, இந்த திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து மேலும் 100 பள்ளிகளில் செயல்படுத்து உள்ளார்கள். அந்த திட்டத்தை பற்றியும் அதில் பயன்பெற்ற மாணவிகளின் பேச்சும் அடங்கிய வீடியோ கிளிப்


இந்த வீடியோவை வடவூர் குமார் அவர்கள் பதிவாக இட்டு உள்ளார்.

இதே போன்ற திட்டத்தை நம் அரசு மாநகராட்சிகளில் தொடங்கி எல்லா இடங்களில் செயல்படுத்த முன்வர வேண்டும் என்பது என் விருப்பம்.

தமிழை எங்கள் சுவாசம் என மேடைக்கு மேடை கூறிக் கொள்ளும் நம் மக்கள்பிரநிதிகள் வருங்கால சமுதாயத்தை தமிழை வாசிக்கவும், நேசிக்கவும் வைப்பார்களா?