Thursday, July 20, 2006

இதுவும் மரணம் தான்....


சந்தோஷமாக வானில் சொய்ங் என்று சிறகடித்து பறந்த என் மன்னவன், சிறிது இளைபாறுவதற்காக இந்த சண்டாளன் மேல் அமர, இந்த படுபாதகன் அவனின் ராட்ச கைகளால் என் தங்கத்தை ஒரே அடியில் அடித்து சாகடித்து விட்டானே. இவன் நல்லா இருப்பானா, இவனுக்கு நல்ல.............

டிஸ்கி: இத தேன்கூடு போட்டிக்கு அனுப்ப போறேன். எல்லா சனமும் வந்து மறக்காம ஒட்ட போட்டுட்டு போயிடு. நான் வெற்றி பெற்றால், ஒட்டு போட்ட அனைவருக்கும் ஒரு தொடைத்தட்டி வழங்க... ஆங் இது சரியா வராது. தொடைத்தட்டிக்காவே நம்மள ஜெயிக்க வச்சாலும் வைத்து விடுவீர்கள். அதனால் ஒட்டு போடும் ஒவ்வொருவருக்கும் 10 பின்னூட்டம்(அவர்கள் பதிவில்), ஒரு தனி பதிவு (என் பக்கத்தில்). அம்புட்டு தாம்ப்பா முடியும்.

75 comments:

நாகை சிவா said...

உனக்கு ஏன்டா இந்த வேண்டாத வேலைனு யாரும் கேட்பதற்கு முன்பு நானே சொல்லி விடுகின்றேன்.

இளவஞ்சி, மரணம் என்று தலைப்பு கொடுத்தாலும் கொடுத்தாரு, எல்லாம் புகுந்து விளையாடுகிட்டு இருக்காங்க. முதலிமல் கப்பி பய, லக்கி, ரமணி ஆகியோரின் படைப்புகளை படித்தேன். நல்லா இருந்துச்சு, மற்றபடி நம்மளை ஏதுவும் பண்ணல, கோவி கண்ணனின் படைப்பை படித்ததும் அவருக்கு பின்னூட்டம் இடும் போது சுனாமி ஞாபகம் வந்தது. சரி அது அடிக்கடி வருவது தானேனு, கண்டுக்கல, நம்ம இளா படைப்பை பார்த்துவும் யோசிக்க வைத்தது, அனுபவிக்க வைத்தது, நெகிழ வைத்தது. அப்புறம் நம்ம பொன்ஸ் படைப்பை பார்த்தேன்.
ஹும் உடைந்து விட்டேன். அவரின் கதைக்கும் என் வாழ்விலும் எந்த தொடர்பும் இல்லையென்றாலும் என் வீட்டில் ஏற்பட்ட ஒரு மரணத்தை அது மிக அழமாக கிளறி விட்டது. சரி இது சரிப்பட்டு வராது என்று இனி மரணம் தொடர்பான எந்த படைப்பையும் படிப்பது இல்லை என்று எதையும் படிக்கவில்லை.(டுபுக்கு மற்றும் ரவி விதிவிலக்கு)

சரி போட்டி என்ன ஆச்சுனும் இன்னிக்கு போய் தேன்கூட பாத்தா 76 பதிவு. ஆடிப் போயிட்டேன். சரி இம்புட்டு நபர்கள் எழுதி இருக்காங்க. நாம எப்ப தான் எழுதுவது என்று யோசித்து பார்த்தேன். நாம் என்னிக்குமே எழுத போவது இல்லை என்ற உண்மை புலப்பட்டது. நமக்கு தான் இந்த ஜல்லியடிப்பது தெரியுமே நினைச்சுகிட்டு, இங்க ஒரு மாதிரி ஜல்லியடிச்சு போட்டியில் கலந்துக்கிட்டாச்சு. வெற்றி தோல்வி முக்கியம் கிடையாது நமக்கு, போட்டியில் கலந்துக்குனும்., அம்புட்டுத் தான்.

ஒரு ஒட்டு நிச்சயமடி. அது நம்ம ஒட்டுத் தான்.....

நாகை சிவா said...
This comment has been removed by a blog administrator.
குமரன் (Kumaran) said...

என் வாக்கும் கட்டாயம் உண்டு. (நிச்சயம் தமிழ்ச் சொல் இல்லை. அதனால் கட்டாயம் என்ற தமிழ்ச் சொல்லைச் சொன்னேன்).

நான் வாக்களிப்பதால் நீங்கள் வாக்களித்த படி என் எல்லாப் பதிவுகளுக்கும் வந்து பின்னூட்டங்கள் இடவேண்டும். சரியா? :)

கோவி.கண்ணன் [GK] said...

//கோவி கண்ணனின் படைப்பை படித்ததும் அவருக்கு பின்னூட்டம் இடும் போது சுனாமி ஞாபகம் வந்தது. சரி அது அடிக்கடி வருவது தானேனு, கண்டுக்கல, நம்ம இளா படைப்பை பார்த்துவும் யோசிக்க வைத்தது, அனுபவிக்க வைத்தது, நெகிழ வைத்தது. //
உங்களை கட்டுரை விமர்சகர் ஆக்கியிருக்கிறார்களா ?

அது சரி உங்க உகாண்டவிலும் கொசுத் தொல்லையா ?

இது பதிவா ? அல்லது சிறிய இடைவெளி கொசு(றா) ?

கைப்புள்ள said...

புலி சிவனாண்டி,
எனக்கு வெள்ளை டப்பாவுக்குள்ள ஒரு செவப்பு எக்ஸ் அதே மாதிரி அதுக்குக் கீழே இன்னொரு வெள்ளை டப்பா இன்னுமொரு செவப்பு எக்ஸ். அட அதுக்கும் கீழே இன்னொரு வெள்ளை டப்பா இன்னுமொரு எக்ஸ் தெரியுது. எவ்வளோ முயற்சி பண்ணியும் என்ன சொல்லிருக்கேங்கிற மேட்டர் தெரியவே இல்லை. எதுனா பண்ணு நைனா.

நாகை சிவா said...

//என் வாக்கும் கட்டாயம் உண்டு.//
நன்றி. அப்ப இரண்டு ஒட்டுச்சா ;)

//நான் வாக்களிப்பதால் நீங்கள் வாக்களித்த படி என் எல்லாப் பதிவுகளுக்கும் வந்து பின்னூட்டங்கள் இடவேண்டும். சரியா? :) //
ஜெயிச்சா 10 குமரன் சார், தோற்றால் 5 தான். ஆனா எப்படியும் பின்னூட்டம் உண்டு உங்களுக்கு. உங்களுக்கு போனஸ் பின்னூட்டமும் உண்டு.

நாகை சிவா said...

//உங்களை கட்டுரை விமர்சகர் ஆக்கியிருக்கிறார்களா ?//
ஐய்யோ, அது எல்லாம் இல்ல.
கொஞ்சம் பீல் பண்ண விட மாட்டீங்களே!

//உங்க உகாண்டவிலும் கொசுத் தொல்லையா ?//
உகாண்டாவில் கொசுத் தொல்லை இருக்கா இல்லாயானு எனக்கு தெரியல, வேணுமுனா கப்பி பயல கேட்டு சொல்லுறேன். ஏலேய் கப்பி எங்கன இருக்க நீ, அண்ணன் கேட்குறார்ல சீக்கிரம் வந்து சொல்லு.

//இது பதிவா ? அல்லது சிறிய இடைவெளி கொசு(றா) ? //
அது பார்ப்பவர்கள் கண்ணோட்டத்தை பொறுத்து, அவர்கள் எப்படி வேண்டும் என்றாலு எடுத்துக் கொள்ளலாம்.
:)))

கைப்புள்ள said...

//அது சரி உங்க உகாண்டவிலும் கொசுத் தொல்லையா?//

புலி!
இப்ப உகாண்டாலியா மேயறே? சூடான் சிட்டுக்குருவிகளைப் பாத்து பாட்டு படிச்சதால அங்கேருந்து உன்னைய தெரத்திட்டாங்களா? உகாண்டால இருந்த இடி அமீன்ங்கிற பய மனுசக்கறி தின்னவன்பா...அந்த ஊர்ல இருக்குறே...கவனமா இருந்துக்க.

செந்தழல் ரவி said...

சும்மா மொக்கை போடுறதுக்கு எல்லாம் வாக்கு போட்டா - முக்கு முக்குனு முக்கி கதை எழுதுனவங்க எல்லாம் லூசாயிடுவாங்க இல்லையா - ( என்னையும் சேர்த்து ஹி ஹி)..

நாகை சிவா said...

//எவ்வளோ முயற்சி பண்ணியும் என்ன சொல்லிருக்கேங்கிற மேட்டர் தெரியவே இல்லை. எதுனா பண்ணு நைனா. //
தல, உனக்காக பயங்கர ரிஸ்க் எடுத்து நீ சொன்ன மேட்டர முடிச்சுட்டேன். பார்த்துட்டு வந்து உன் பதில சொல்லிட்டு போ என்னா?

நாகை சிவா said...

//இப்ப உகாண்டாலியா மேயறே? சூடான் சிட்டுக்குருவிகளைப் பாத்து பாட்டு படிச்சதால அங்கேருந்து உன்னைய தெரத்திட்டாங்களா?//
இல்ல தல, இன்னும் சூடான்ல தான் சுத்திக்கிட்டு இருக்கேன். நம்மள அவ்வளவு சீக்கிரமா தொரத்திட முடியுமா என்ன?

//உகாண்டால இருந்த இடி அமீன்ங்கிற பய மனுசக்கறி தின்னவன்பா...அந்த ஊர்ல இருக்குறே...கவனமா இருந்துக்க. //
உகாண்டாவுக்கு போலாம் என்று ஒரு ஐடியா இருந்துச்சு, நீ சொன்னத்துக்கு அப்புறம் அதை மறுபரீசிலனை செய்யனும் நினைக்கிறேன்.

கப்பி, ராமை கூப்பிடுவதற்கு பதில் உன்ன கூப்பிட்டுட்டேன். மேல விழுந்து குதறி விடாத என்ன?

நாகை சிவா said...

//சும்மா மொக்கை போடுறதுக்கு எல்லாம் வாக்கு போட்டா - முக்கு முக்குனு முக்கி கதை எழுதுனவங்க எல்லாம் லூசாயிடுவாங்க இல்லையா//
உன்ன இப்ப யாராச்சும் இத எல்லாம் கேட்டாங்களா, ஒட்டு போட வேண்டாமும் வாய முடிக்குட்டு சும்மா கம்முனு கிடக்க வேண்டியது தானே. ஏன் இப்படி சபையில் உண்மையை சொல்லி மானத்த வாங்குற....

பொன்ஸ்~~Poorna said...

சிவா,
//உடைந்து விட்டேன். அவரின் கதைக்கும் என் வாழ்விலும் எந்த தொடர்பும் இல்லையென்றாலும் என் வீட்டில் ஏற்பட்ட ஒரு மரணத்தை அது மிக அழமாக கிளறி விட்டது//
இப்படி ஆய்டுச்சா?!! இது தெரியாம நான் உங்களைத் தனியா வேற கூப்பிட்டுப் படிக்கச் சொன்னேனே!! சரி, அதுக்குப் பரிகாரமா, இந்தக் கதையைப் படிங்க.. உங்கள் கவலை விலகும்.. கொஞ்சம் லைட்டாய்டுவீங்க :)

10 பின்னூட்டங்கள் என்பது அத்தனை இன்ட்ரெஸ்டிங்காக இல்லாததால், கொத்தனாருக்கே விட்டுக் கொடுத்திடறேன்.. எனக்குப் போட வேண்டிய பத்தையும் கொத்ஸுக்கே, கொடுக்கவும் ;)

சந்தோஷ் aka Santhosh said...

ஆகா சிவா,
இதுல ஏகப்பட்ட உள்குத்து இருக்கும் போல இருக்கே.. நாம் படிச்ச(எங்க படிச்சே பாத்தேன்) கதையில் இதுதான் ரொம்ப சின்னதா இருந்தது.. ஓட்டு எங்க போயி போடுவது சொன்னா போட்டுடுவேன்(பொன்ஸுக்கு போட்டியா எப்படி எல்லாம் ஓட்டு கேட்குறாங்க பாருங்கப்பா ஒரு பெரிய மந்திரி சபையே வெளியே இருக்கு போல.)

நாகை சிவா said...

//இப்படி ஆய்டுச்சா?!! இது தெரியாம நான் உங்களைத் தனியா வேற கூப்பிட்டுப் படிக்கச் சொன்னேனே!!//
இல்லயே, நம்மல நீங்க கூப்பிடவில்லை. நம்ம பிரசன்ஸ் அங்கன இருக்காதே.....

//உங்கள் கவலை விலகும்.. கொஞ்சம் லைட்டாய்டுவீங்க :)//
அது எல்லாம் அப்பவே சரியாடுச்சி. அந்த கதையையும் படித்தேன். நல்லா இருந்துச்சு.

//10 பின்னூட்டங்கள் என்பது அத்தனை இன்ட்ரெஸ்டிங்காக இல்லாததால், கொத்தனாருக்கே விட்டுக் கொடுத்திடறேன்..//
10 ரொம்ப கம்மியாக இருக்கா, வேணுமுனா ஒரு 100 பின்னூட்டமுனு சொல்லவா. இதுல் எதுக்கு தேவையில்லாம கொத்தஸ்ச வம்புக்கு இழுக்குறீங்க.

//எனக்குப் போட வேண்டிய பத்தையும் கொத்ஸுக்கே, கொடுக்கவும் ;) //
ஒஹோ..... அப்ப உங்க ஒட்டு நமக்கு உண்டா. அப்ப சரி, மூனுனாச்சு.

கப்பி பய said...

//சந்தோஷமாக வானில் சொய்ங் என்று சிறகடித்து பறந்த என் மன்னவன்//

எல்லாம் சரி..அது ஆண் கொசு தான்னு எப்படிய்யா கண்டுபுடிச்ச???

//கப்பி பயல கேட்டு சொல்லுறேன். ஏலேய் கப்பி எங்கன இருக்க நீ, அண்ணன் கேட்குறார்ல சீக்கிரம் வந்து சொல்லு.
//
வந்துட்டேன் செல்லம்...
யப்பா..இது உருகுவேப்பா..இங்க மனுச கறி இல்ல..வெறும் பன்னி கறி தான்...


//கப்பி, ராமை கூப்பிடுவதற்கு பதில் உன்ன கூப்பிட்டுட்டேன். மேல விழுந்து குதறி விடாத என்ன? //

உர்ர்ர்ர்ர்.....

//கப்பி பய, லக்கி, ரமணி ஆகியோரின் படைப்புகளை படித்தேன். நல்லா இருந்துச்சு, மற்றபடி நம்மளை ஏதுவும் பண்ணல, //

எதுவும் பண்ணலையா??என்ன பண்ணனும் சொல்லு..பண்ணிடுவோம் :D

நாகை சிவா said...

//ஏகப்பட்ட உள்குத்து இருக்கும் போல இருக்கே..//
பங்காளி நீ வேற எதாயாச்சும் கிளப்பி விடாத. இதுல எந்த உகு வும் கிடையாது.

//ஓட்டு எங்க போயி போடுவது சொன்னா போட்டுடுவேன்//
ஒட்டை தேன்கூட்டியில் போயி போடு, அப்பா நாலு ஆச்சு.
www.thenkoodu.com

//பொன்ஸுக்கு போட்டியா எப்படி எல்லாம் ஓட்டு கேட்குறாங்க//
அவங்க எல்லாம் யோசிச்சு கதை எழுதுபவர்கள். நான் எல்லாம் ஜல்லியடிக்கும் கோஷ்டி. அவங்களுக்கு போயி நான் போட்டியா?

//ஒரு பெரிய மந்திரி சபையே வெளியே இருக்கு போல//
நீ தான் அதில் உகு துறை அமைச்சர்.

உன்ன போன பதிவுக்கும் போன பதிவுக்கு எதிர்பார்த்தேன். வந்து என் பிரச்சனையை தீர்த்து வைப்பேனும். வரல சரி பரவாயில்ல விடு, நானே அத ஒரு மாதிரி சமாளிச்சுட்டேன்.

இராம் said...

//கப்பி, ராமை கூப்பிடுவதற்கு பதில் உன்ன கூப்பிட்டுட்டேன். மேல விழுந்து குதறி விடாத என்ன?//

எந்த ராமை....?

பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸுக்கு போட்டியா எப்படி எல்லாம் ஓட்டு கேட்குறாங்க பாருங்கப்பா //
தலைவா சந்தோஷு, நாங்க எல்லாம் பொதுவுல கோரிக்கை வைக்கிறவங்க.. அதிலும் எங்க பக்கத்துக்கு வந்து கதை படிச்சவங்க கிட்ட மட்டும் தான் வைக்கிறோம்.. எத்தனை தனி மடல் முன்னையும் பின்னையும் ஓடிகிட்டிருக்கு தெரியுமா?!! சரி சரி.. விடுங்க. அதெல்லாம் எதுக்கு..

ஒண்ணு பண்ணுங்க.. இந்த சமையல் ரிசர்ச் எல்லாம் யார் மேலயாவது அப்ளை பண்ணி இருப்பீங்க இல்ல? அதைத் தொகுத்து எழுதினா, நீங்களும் போட்டிக்கு அனுப்பத் தகுந்த படைப்பு ஒண்ணு எழுதலாம்.. எப்படி? ;)

பொன்ஸ்~~Poorna said...

//இல்லயே, நம்மல நீங்க கூப்பிடவில்லை. நம்ம பிரசன்ஸ் அங்கன இருக்காதே.....//
உங்க வருகைப் பதிவு இல்லைன்னு தானே தனியா ஒரு மடல் அனுப்பினேன்? அதுவும் வரலியா?

(சந்தோஷ், கண்டுக்காத,.. freeயா விடு நைனா! இது ஊர்ப் பாசத்துல நாகையாருக்கு மட்டும் அனுப்பின மடலு ;) )

//அப்ப உங்க ஒட்டு நமக்கு உண்டா. அப்ப சரி, மூனுனாச்சு.//
ரொம்ப நம்பாதீங்க.. நாங்கெல்லாம் ரெண்டு பக்கமும் வாங்கிட்டு மூண்றாவது அணிக்கு குத்தும் கேஸ்... எலீக்ஷன் அன்னிக்கு அப்ஸ்காண்டாகவும் வாய்ப்புகள் உள்ளன ;)

பொன்ஸ்~~Poorna said...

//அது ஆண் கொசு தான்னு எப்படிய்யா கண்டுபுடிச்ச????//
சிவா, காலைக் காட்டச் சொன்னதுல தப்பே இல்லை.. அதைப் பதிவுல போட்ட விதம் அத விட அருமை.. இப்போ போய் ஒருமுறை பார்த்துக்கிறேன்!!

நாகை சிவா said...

//எல்லாம் சரி..அது ஆண் கொசு தான்னு எப்படிய்யா கண்டுபுடிச்ச???//
கிளம்பிட்டான்யா, கிளம்பிட்டான். ரொம்ப நோண்டாத, அப்புறம் ஒரு ஆராய்ச்சி கட்டுரை கொசுவை பத்தி போட்டு விடுவேன்.

//உர்ர்ர்ர்ர்.....//
சரி., சரி.,

//எதுவும் பண்ணலையா??என்ன பண்ணனும் சொல்லு..பண்ணிடுவோம் :D //
பீல் ஆவலைனு சொல்ல வந்தேன். நீ ஏதுவும் இப்ப பண்ண வேணாம். தேவைப்பட்ட சொல்லி அனுப்புறேன். போதுமா.

நாகை சிவா said...

//எந்த ராமை....? //
அடுத்து நீ வேறயா. யப்பா அது நீ இல்லப்பா...
உகாண்டால ஒரு ராம் இருக்கார். அப்ப அப்ப வந்து இராமாயணம் சொல்லுவாரு. அவர் சொன்னேன். மதுரையில் இருந்து வந்தாச்சா?

நாகை சிவா said...

//எத்தனை தனி மடல் முன்னையும் பின்னையும் ஓடிகிட்டிருக்கு தெரியுமா?!! //
அப்படியெல்லாம் வேற நடக்குதா....
என்ன கொடுமை சார் இது.....

//சரி சரி.. விடுங்க. அதெல்லாம் எதுக்கு..//
இங்க பாருடா, சொல்லுரதையும் சொல்லிட்டு, இது வேறையா....

//நீங்களும் போட்டிக்கு அனுப்பத் தகுந்த படைப்பு ஒண்ணு எழுதலாம்.//
தகுந்த படைப்பா, வெற்றி பெரும் படைப்பாகவே அனுப்புலாம். பங்கு என்ன சொல்லுற?

நாகை சிவா said...

//உங்க வருகைப் பதிவு இல்லைன்னு தானே தனியா ஒரு மடல் அனுப்பினேன்? அதுவும் வரலியா? //
ஹிஹி. வரல. இறைவன் என் மேல் அடிக்கடி கருணை காட்டுவான் போல

//ரொம்ப நம்பாதீங்க.. நாங்கெல்லாம் ரெண்டு பக்கமும் வாங்கிட்டு மூண்றாவது அணிக்கு குத்தும் கேஸ்... எலீக்ஷன் அன்னிக்கு அப்ஸ்காண்டாகவும் வாய்ப்புகள் உள்ளன ;) //
சரி, நாங்க எல்லாம் இதுக்கு அஞ்ச மாட்டோம். நாங்க தோற்போம் என்று தெரிந்தே போட்டியில் கலந்து கொள்பவர்கள்.
தேர்தல் தான் அஞ்சு நாள் நடக்குதுல, அப்பறம் என்ன. ஜனநாயக கடமையை செய்ய தவறிய பொன்ஸ் என்று பதிவு போடப்படும் என்று உங்களை எச்சரிக்கின்றேன்.

// இது ஊர்ப் பாசத்துல நாகையாருக்கு மட்டும் அனுப்பின மடலு ;//
பாசத்துல அனுப்பியதால் பாசத்தில் வழுக்கி மடலு எங்கயோ போச்சு போல ;)

Syam said...

//ஒரு ஒட்டு நிச்சயமடி. அது நம்ம ஒட்டுத் தான்//

பங்கு உன் ஓட்ட போட முடியாது..வேனா கள்ள ஓட்டு போடலாம்...

ஒரு கொசுவ அடிச்சு பதிவு போட்டதும் இல்லாம அத தேன்கூட்டுக்கு வேற அனுப்பி இருக்க பாரு...தைரியந்தேன்... :-)

நாகை சிவா said...

//சிவா, காலைக் காட்டச் சொன்னதுல தப்பே இல்லை.. அதைப் பதிவுல போட்ட விதம் அத விட அருமை.. இப்போ போய் ஒருமுறை பார்த்துக்கிறேன்!! //
ஆமாங்க பொன்ஸ், நான் எப்பவுமே தப்பா சொல்ல மாட்டேன்.
அங்கன போயி நீங்க ஷுவை தான் பாக்க முடியும். நல்லா பாத்துங்க.

Syam said...

இதுவே போன மாசமா இருந்தா அந்த 10 கமெண்ட்டுக்கு ஆச பட்டு உனக்கு போட்டு இருப்பேன்..இப்போ தான் கடய இழுத்து மூடியாச்சே...சரி இருந்தாலும் பங்காளிய விட்டு குடுக்க முடியாது...போட்டுடரேன்... :-)

கப்பி பய said...

//சிவா, காலைக் காட்டச் சொன்னதுல தப்பே இல்லை.. அதைப் பதிவுல போட்ட விதம் அத விட அருமை.. இப்போ போய் ஒருமுறை பார்த்துக்கிறேன்!!
//

ரொம்பப் புகழாதீங்க பொன்ஸ்..ஹி ஹி ஹி...

//அங்கன போயி நீங்க ஷுவை தான் பாக்க முடியும். நல்லா பாத்துங்க. //
இன்னும் என் பாசத்தைப் புரிஞ்சுக்கல பாத்தியா நீ..

//. ரொம்ப நோண்டாத, அப்புறம் ஒரு ஆராய்ச்சி கட்டுரை கொசுவை பத்தி போட்டு விடுவேன்.
//
ஆமா..அந்த கன்னி வெடி மேட்டரே கிடப்புல போட்டாச்சா?? எங்கப்பா அது??

// நீ ஏதுவும் இப்ப பண்ண வேணாம். தேவைப்பட்ட சொல்லி அனுப்புறேன். போதுமா.
//

காத்துக்கிட்டு இருக்கேன்ண்ணே..

நாகை சிவா said...

//ஒரு கொசுவ அடிச்சு பதிவு //
ஐய்யயோ பங்கு அந்த கொலைய நான் செய்யல....

//தேன்கூட்டுக்கு வேற அனுப்பி இருக்க பாரு...தைரியந்தேன்..//
ஹிஹி.... இல்லயா பின்ன

//இப்போ தான் கடய இழுத்து மூடியாச்சே//
அதுனால என்ன கடய திறந்தவுடன் எல்லாத்துக்கும் சேர்த்து போட்டுட்டா போச்சு.

//பங்காளிய விட்டு குடுக்க முடியாது...போட்டுடரேன்... :-) //
இதான் பங்காளி வேணுங்குறது. தாங்கஸ்ம்மா,அப்படி இப்படினு ஒரு 5 ஒட்டை தேத்தியாச்சு. :))))

நாகை சிவா said...

//கன்னி வெடி மேட்டரே கிடப்புல போட்டாச்சா?? எங்கப்பா அது??//
நாளைக்கு விடுமுறைப்பா, கன்னி வெடி - 2 நாளைக்கு எழுது முயற்சி செய்து சீக்கிரமே போட்டு விடுகின்றேன்.

//இன்னும் என் பாசத்தைப் புரிஞ்சுக்கல பாத்தியா நீ..//
புரிஞ்சிகிட்டேன் நைனா, நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன்.//காத்துக்கிட்டு இருக்கேன்ண்ணே.. //
;)))))

//ரொம்பப் புகழாதீங்க பொன்ஸ்..ஹி ஹி ஹி...//
அது வஞ்சப் புகழ்ச்சி.....

துளசி கோபால் said...

இந்தக் காலத்துலே யாரையும் அவ்வளோ சுலபமா நம்ப முடியலை பாருங்க.
முதல்லெ 10 பின்னூட்டம் வரட்டும். 'எண்ணி'ப் பார்த்துட்டு ஓட்டைப் போட்டுறலாம்:-))))

கைப்புள்ள said...

யப்பா புலி!
ரொம்ப நன்றிப்பா தனி மயில் அனுப்பிச்சதுக்கு. கொசு மேட்டரை தேன்கூட்டுக்குக் கொண்டு போறியா...ஆனாலும் ஒனக்கு தில்லு தான். உசுரைக் குடுத்து மரணத்தைப் பத்தி கதை எழுதுனவங்க வயித்தெரிச்சலை எல்லாம் கொட்டிக்கப் போறே.
:)

கொசுவைப் பத்தி ஆராய்ச்சி கட்டுரை போடப் போறியா? போடு...போடு. அதுக்கு முன்னாடி எனக்குத் தெரிஞ்ச ஒரு மேட்டரு. மலேரியா பரவுறது ஃபீமேல் அனோபெலீஸ்ங்கிற கொசு கடிக்கிறதுனால(Anopheles culicifacies). நீ சொல்ற மன்னவன் எல்லாம் ஆபத்தில்லாத அப்பிராணி பசங்க. அம்மணி கடிச்சுதுன்னு வை ஸ்ட்ரெயிட்டா மலேரியா தான்.
:)

நெல்லை சிவா said...

படங்காட்டுறீங்க..நல்லாருக்கு! கடைசி படம்தான், பாவமா இருக்கு.

Raji said...

Siva,

nice write up. en vote ungalukku nichaiyama undu.
Engae podanumnu sollunga..

நாகை சிவா said...

//இந்தக் காலத்துலே யாரையும் அவ்வளோ சுலபமா நம்ப முடியலை பாருங்க.
முதல்லெ 10 பின்னூட்டம் வரட்டும். 'எண்ணி'ப் பார்த்துட்டு ஓட்டைப் போட்டுறலாம்:-)))) //
என்ன துளசியக்கா, உங்கள போயி ஏமாத்துவேனா, நீங்க ஒட்டு போட்டாலும் போட விட்டாலும் உங்களும் எப்பொழுதும் பின்னூட்டம் உண்டு.

நாகை சிவா said...

//கொசு மேட்டரை தேன்கூட்டுக்குக் கொண்டு போறியா...ஆனாலும் ஒனக்கு தில்லு தான்.//
ஆமாம், ஆமாம் உங்க சிஷ்ய புள்ள நான், பயமே நம்மள கண்டு பயப்பட வைக்காட்டி எப்படி ;)

//உசுரைக் குடுத்து மரணத்தைப் பத்தி கதை எழுதுனவங்க வயித்தெரிச்சலை எல்லாம் கொட்டிக்கப் போறே.//
ஏன் தல, உனக்கு இந்த கொசுவோட உசுரு பெரிசா தெரியலையா?....

கொசுவை பத்தி ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம் என்று நினைக்கின்றேன். நீ சொன்ன மேட்டரே போதும்....

நாகை சிவா said...

//படங்காட்டுறீங்க..நல்லாருக்கு! //
தாங்க்ஸ் நெல்லை சிவா

//கடைசி படம்தான், பாவமா இருக்கு//
ஆமாங்க எனக்கு பாவமா தாங்க, இப்படி அநியாயமா அடிச்சு கொன்னுட்டாங்க.
:(((

நாகை சிவா said...

//en vote ungalukku nichaiyama undu.
Engae podanumnu sollunga..//
ரொம்ப நன்றிங்க ராஜீ. நீங்கள் எல்லாம் இருக்கீங்க என்ற தைரியத்தில் தான் இந்த சேட்டை எல்லாம். ஒட்டு போடுவதற்கு கீழ உள்ள லிங்க பார்க்கவும்.

http://www.thenkoodu.com/survey/2006-07/

Thekkikattan said...

அப்ப என் கட்டுரைக்-கதையை படிக்கலன்னு சொல்ல வாறீரு அப்படித்தானே... வுமக்காகத்தானெ ஓய் அந்த மரணக் கதையை கொஞ்சம் நவரசத்தோட எழுதினேன்...

சரி சரி கொசுவுக்கு எல்லம் விட்டா காரியம் பண்ணுவீர் போலிருக்குது... :-)

அப்படியே கையோட யு.என் லெ சொல்லி "கொசுக்களின் தினம்" அப்படின்னு நமக்கு அவைகளை அடிச்சு கொல்றதுக்கு ஒரு நாள் லீவு கொடுக்கச் சொல்லி சிபரி பண்ணுவோய்... ;-))

பொன்ஸ்~~Poorna said...

ஆகா.. என்னய்யா சிவா, கொசுவுக்கு இப்படி ஆதரவு கூடுது?!!!

பேசாம, உங்களுக்கு ஓட்டு போடுறவங்க, அப்படியே எனக்கும் ஒண்ணு குத்தணும்னு.. ஹி ஹி.. கொஞ்சம் சங்கத்துக்காக இதுகூட கேட்க மாட்டீங்களா ;) ?

கொசு, யானை, எறும்பு பற்றி எல்லாம் கைப்புவைப் பேச விட்டீங்கன்னா, அனிமல் ப்ளேனட், நேட் ஜியோ எல்லாத்தையும் கலந்து கட்டி ஒரு ஆராய்ச்சி கட்டுரையே கொடுத்திடுவாரு.. :)))))))

நாகை சிவா said...

//அப்ப என் கட்டுரைக்-கதையை படிக்கலன்னு சொல்ல வாறீரு அப்படித்தானே... வுமக்காகத்தானெ ஓய் அந்த மரணக் கதையை கொஞ்சம் நவரசத்தோட எழுதினேன்...//
நீங்க சொன்னதுக்கு அப்பறம் போயி படித்தேன். நல்லா தான் இருக்கு. அது சரி அதுல எங்க நவரசம் இருக்கு. ஒ... நவரசம் இருப்பதாக நாங்கள் நினைச்சுகிட்டு படிக்கனுமா....

//சரி சரி கொசுவுக்கு எல்லம் விட்டா காரியம் பண்ணுவீர் போலிருக்குது..//
அதுவும் ஒரு உசுரு தானுங்க. அத எரிக்கலாம இல்ல புகைக்கலாம?

//"கொசுக்களின் தினம்"//
இது மேட்டரு.... கொசு அடிக்கும் தினம் ஒன்றை அறிவிக்கும் படி உடனடியாக அன்னனுக்கு ஒரு கடிதம் எழுதி விடுவோம். ஏது ஏதுக்குகோ தினம் கொண்டாடுறாங்க, இதுக்கு ஒரு தினம் கண்டிப்பாக ஒதுக்கிய ஆக வேண்டும்.

கீதா சாம்பசிவம் said...

Grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr.இந்த மொக்கைப் பதிவுக்கு இத்தனைப் பின்னூட்டமாஆஆஆஆஆஆஆஆஆஆ? நானும், சூடான், உகாண்டா, எதியோப்பியால தான் இருக்கேன். :-)

நாகை சிவா said...

//என்னய்யா சிவா, கொசுவுக்கு இப்படி ஆதரவு கூடுது?!!!//
நம்ம ஊருல கொசு தொல்லை அதிகமல, அதான் இம்புட்டு கூட்டம் ;)

//உங்களுக்கு ஓட்டு போடுறவங்க, அப்படியே எனக்கும் ஒண்ணு குத்தணும்னு.. ஹி ஹி.. கொஞ்சம் சங்கத்துக்காக இதுகூட கேட்க மாட்டீங்களா ;) ? //
அட என்னங்க இப்படி கேட்டுடீங்க, இது கூட செய்யாமலா.

இதுனால சகலமானவர்களுக்கும் சொல்வது என்னவென்றால் எனக்கு ஒட்டுப் போட்ட, போட இருக்கும் என் ரசிகப் பெருமக்கள்(கண்டுக்காத) அனைவரும் நம் சங்கத்து பெருமக்கள் விவசாயி இளா அவர்களுக்கும், ஆற்றலரசி பொன்ஸ் அவர்களுக்கும் உங்கள் பொன்னான வாக்கை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

இளாவின் தலைப்பு - காலதேவனை வேண்டியப்படி
பொன்ஸின் தலைப்பு - சந்திரா அத்தை

நாகை சிவா said...

//Grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr.இந்த மொக்கைப் பதிவுக்கு இத்தனைப் பின்னூட்டமாஆஆஆஆஆஆஆஆஆஆ?//
இது மொக்க பதிவா, இது உங்களுக்கே அநியாயமா தெரியல. ஒரு கொசுவின் மரணத்தை பத்தி எம்புட்டு பீல் பண்ணிகிட்டு இருக்கோம். நீங்க என்னடானா....

சரி அது போகட்டும் மறக்காம ஒட்ட போட்டுங்க.....
10 பின்னூட்டம்ங்க 10 பின்னூட்டம், போனஸ் இன்னும் நிறைய பின்னூட்டம் வேண்டும் என்றாலு கொடுக்குறேன். ஒ,கே வா

Shuba said...

oru kosu pathi ungallaa than ivlo elutha mudiyum kandippa ottu podaren!

ILA(a)இளா said...

ஏற்கனவே எருமைகன்னுகுட்டி, யானை, கொசு அப்படின்னு மிருகம், பூச்சி பதிவு விழுதே கம்ன்னு சங்கத்தை மிருக ஆராய்ச்சி சங்கம்னு மாத்திபுடலாமா?

CT said...

Beautiful pictures siva.Sure I will vote (Kalla vote kuda podalam)

Brahman kuda oru P.C Sriram than unnai padaitha thaley !!!

--CT

நாகை சிவா said...

//oru kosu pathi ungallaa than ivlo elutha mudiyum kandippa ottu podaren! //
நீங்க எல்லாம் இருக்கீங்க, அப்படிங்க தைரியம் தான். மறக்காமல் உங்கள் பொன்னான வாக்கை எனக்கும் எங்க சங்கத்து சிங்களுக்கும் போடவும்.
தாங்கஸ் சுபா :)))

நாகை சிவா said...

//ஏற்கனவே எருமைகன்னுகுட்டி, யானை, கொசு அப்படின்னு மிருகம், பூச்சி பதிவு விழுதே கம்ன்னு சங்கத்தை மிருக ஆராய்ச்சி சங்கம்னு மாத்திபுடலாமா? //
ஹிஹி. கோவிக்காதீங்க விவ். ஏதோ அப்ப அப்ப நம்ம சொந்தங்களை பத்தி எழுறது தான். அதுக்காக சங்கத்து பெயர எல்லாம் மாத்த வேண்டாம். மக்களே இந்த மிருக ஆராய்ச்சி கொஞ்சம் நாளைக்கு முட்ட கட்டி வைங்கப்பா.

நாகை சிவா said...

//Beautiful pictures siva.Sure I will vote(Kalla vote kuda podalam//
நன்றி CT. கள்ள வோட்டு எல்லாம் வேணாம். நம்ம எல்லாம் நியாயஸ்தர்கள். அதை என்றுமே கடைப்பிடிப்போம். ;)

பி.சி. ஸ்ரீராம் மேல் உங்களுக்கு அப்படி என்ன கோவம். ஏதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.

பொன்ஸ்~~Poorna said...

இந்தப் பதிவிலயும் பஞ்ச் லைன் கண்டு பிடிச்சி எழுதினார் பாருங்க இளவஞ்சி.. அவரை எப்படிப் பாராட்டுறதுன்னு தான் யோசிச்சிகிட்டே இருக்கேன்:)

Syam said...

போட்டாச்சு...போட்டாச்சு... தல ஸ்டைல்ல படி பங்கு... :-)

நாகை சிவா said...

//இந்தப் பதிவிலயும் பஞ்ச் லைன் கண்டு பிடிச்சி எழுதினார் பாருங்க இளவஞ்சி.. அவரை எப்படிப் பாராட்டுறதுன்னு தான் யோசிச்சிகிட்டே இருக்கேன்:) //
நானும் இது மாதிரி தான் ரொம்ப யோசித்தேன். உண்மையிலே பெரிய ஆள் தாங்க அவரு. தனித்துவமானவர் ;)))
நல்ல மனுஷன், நல்லா இருக்கட்டும்.

நாகை சிவா said...

//போட்டாச்சு...போட்டாச்சு... தல ஸ்டைல்ல படி பங்கு... :-) //
பங்கு, நீ வாழ்க! உன் குலம் வாழ்க!
உன் கொற்றம் வாழ்க! உன் அருமை புதல்வன் எழில் எழிலோடு வாழ்க!

நம்ம சங்கத்து மக்கள் எல்லாத்துக்கும் தானே போட்ட?

கோவி.கண்ணன் said...

ஒரு கொசுவை வைத்து கோட்டை !
அசுத்துறிங்க சிவா... :))))
இந்த பாராட்டில் உகு இல்லை
:)))

நாகை சிவா said...

//ஒரு கொசுவை வைத்து கோட்டை !
அசுத்துறிங்க சிவா... :))))//
அண்ணாத்த நீங்க எந்த கோட்டையை சொல்லுறீங்க. விளங்கலையே....

நீங்க என்னிக்கும் உகு வில் இறங்க மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். எல்லாம் நேகு தான்.

வேதா said...

ஆஹா உங்க லொள்ளு தாங்க முடியலப்பா:) ஒரு கொசுவின் மரணத்தை ஒரு வீரமரண ரேஞ்சுக்கு எழுதியிருக்கீங்க:)

நாகை சிவா said...

எங்க வேதா, உங்களுக்கு எல்லாம் இதயம் என்று உள்ளதா இல்லை. ஒரு மரணத்தை பத்தி எம்புட்டு கஷ்டப்பட்டு பீல் பண்ணி இருக்கேன். அத போய் லொள்ளு சொல்லி லொள்ளு பண்ணுறீங்க.
சரி ஒட்டு போட்டீங்களா, 10 பின்னூட்டங்க 10 பின்னூட்டம். உங்களுக்கும் போனஸ்சும் உண்டு.....

கீதா சாம்பசிவம் said...

சிவா,
என்னோட பதிவில் விளையாட்டுக்கு உங்கள் பேரையும் இழுத்து இருப்பதில் உங்களுக்கு ஏதாவது வருத்தம் இருந்தால் மன்னிக்கவும். சும்மா காமெடிக்குத்தான்,.No hard feelings please.
Geetha Sambasivam.

நாகை சிவா said...

//No hard feelings please.//
No Formalities Please.

நீங்க என்ன வச்சு என்ன காமெடி வேண்டும் என்றாலும் பண்ணலாம், எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. நான் ஏதுவும் தவறாகவும் எடுத்துக் கொள்ள மாட்டேன். சங்கத்தின் நிரந்திர தலைவலிக்காக இதைக் கூட பொறுத்துக் கொள்ளாட்டி எப்படி? ;)

செல்வன் said...

ஹா ஹா...

10 பின்னூட்டம் தந்தால் போதாது.இலவச டிவியும்,அரிசியும் தரணும்.அப்பதான் ஓட்டு:-)))

நாகை சிவா said...

"டாலர்" செல்வன், தாங்கள் இது போன்று இலவச அரிசிக்கும், டிவிக்கும் ஆசைப்படலாம்.
இது முதல் போட்டி, அதனால் 10 பின்னூட்டம் தான். உங்களுக்கு எப்பொழுதும் வரும் பின்னூட்டங்கள் இல்லாமல்.

பொது தேர்தலில் நிற்கும் போது, எல்லாருக்கும் ஒரு மாருதி கார், 4 பிட்ஸா வாரத்துக்கும் என்று வாக்குறுதி கொடுத்து, ஜெயித்து அதை நிறைவேத்திட்டா போச்சு.

மாருதி காருக்கு பெட்ரோல் போட யாரு காசு தருவார்கள் என்று எதிர்க்கட்சி மாதிரி யாரும் இங்கு கேள்வி கேட்க கூடாது, சொல்லிட்டேன்.

Syam said...

//நம்ம சங்கத்து மக்கள் எல்லாத்துக்கும் தானே போட்ட? //

ஆமா ஆமா..ஏதோ பங்காளி பாசத்துக்காக உனக்கும் போட்டேன்,நல்ல கதைக்கும் போடனும்ல...
:-)

நாகை சிவா said...

//ஏதோ பங்காளி பாசத்துக்காக உனக்கும் போட்டேன்,நல்ல கதைக்கும் போடனும்ல... //
அப்ப என் கதையை உனக்கு நல்ல கதையா தெரியலயையா?
சரி, நம்மள மேல பாசமாவது வச்சு இருக்கியே, அது போதும்!

மனதின் ஓசை said...

அந்த பதினேழு பேருக்கும் என் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

Ramya said...

ஐ! புதுசா இருக்கே.உஙலுக்கு எஙப்பா கொசு கடி பத்தி தெரிய போகுது?என்ன கேட்டால் கவிதை என்ன,கொசு கடி பத்தி கதையே எழுதுவேன்.

இராம் said...

//அந்த பதினேழு பேருக்கும் என் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. //

இதை நானும் வழிமொழிகிறேன்.

நாகை சிவா said...

//அந்த பதினேழு பேருக்கும் என் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. //
அடப்பாவி அப்ப நீ ஒட்டு போடலயா?
;(
இது கொஞ்சம் கூட நல்லா இல்ல.

நாகை சிவா said...

//ஐ! புதுசா இருக்கே.உஙலுக்கு எஙப்பா கொசு கடி பத்தி தெரிய போகுது?என்ன கேட்டால் கவிதை என்ன,கொசு கடி பத்தி கதையே எழுதுவேன். //
எங்க ரம்யா, நமக்கு இந்தியா தாங்க. அதுவும் சிங்கார சென்னையில் நாலு வருடம் இருந்து இருக்கேன். எனக்கு தெரியாதா?

நீங்க கதை எழுதும் ஐடியா இருக்கா. அப்ப வாங்க வாங்க வந்து நம்ம ஜோதியில் ஐக்கியம் ஆகி விடுங்க. கொசுவை வைத்து ஒரு புரட்சியே பண்ணி விடுவோம்.

நாகை சிவா said...

//இதை நானும் வழிமொழிகிறேன். //
அட பாவி மக்கா, ராம் நீயுமா.

கண்டிப்பாக இது என் வெற்றி தடுப்பதற்கு எதிர்கட்சிகள் செயத சதி தான்.

மனதின் ஓசை said...

//அடப்பாவி அப்ப நீ ஒட்டு போடலயா?
;(
இது கொஞ்சம் கூட நல்லா இல்ல.//

அதையெத்தான் நானும் சொல்றேன்... :-)

அட நீ வேற..வோட்டு போடற கடைசி தெதிய கவனிக்காம விட்டுட்டேன் :-(

மனதின் ஓசை said...

100 வேணுமா?

நாகை சிவா said...

//அட நீ வேற..வோட்டு போடற கடைசி தெதிய கவனிக்காம விட்டுட்டேன் :-( //
கவனிக்காம விட்டியா, இல்ல கவனித்தும் கவனிக்காத மாதிரி இருந்தியா?

நாகை சிவா said...

//100 வேணுமா//
இப்படியா ப்பளிக்கா கேட்பது ;(

வேணாம் தங்கம், நீ கேட்டதே 200 அடித்த மாதிரி இருக்கு
;))))