Thursday, May 25, 2006

மது..... போட்டாச்சு! போட்டாச்சு!


நம்ம மதுமிதா ஏதோ நூல் ஆய்வு செய்கின்றாராம். அது போல நூல் ஆய்வு எல்லாம் நமக்கு வேலைக்கு ஆவாது, அவருக்கு இந்த பதிவு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருந்தாலே சந்தோஷம். வாழ்த்துக்கள் மதுமிதா!!!


வலை பதிவர் பெயர் : நாகை சிவா
வலைப்பூ பெயர் : ஏதோ சொல்கிறேன்!!!
சுட்டி(URL) : http://tsivaram.blogspot.com
ஊர் : அல் - பஷர், தார்ப்பூர் - இப்பொழுது வாசம் புரிவது(சொந்த ஊர் - மும்மதத்தின் சங்கமம் ஆன நாகப்பட்டிணம்)
நாடு : சூடான் - இப்பொழுது வாசம் புரிவது(சொந்த நாடு - புண்ணிய பூமி பாரதம்.
வலைப்பூ அறிமுகம் செய்தவர் : நண்பர் பாபு அவர்களின் வலை பக்கத்தின் மூலம் பத்ரியின் வலைப்பதிவுகள்
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம் : 01-02-2006
இது எத்தனையாவது பதிவு : 23
இப்பதிவின் சுட்டி : http://tsivaram.blogspot.com/2006/05/blog-post_25.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள் :எல்லாம் ஒரு மனதின் வடிக்காலுக்கு தான், அதுவும் இல்லாமல் தமிழில் எழுத வேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்றவும் கூட..
சந்தித்த அனுபவங்கள் : இது வரை சுகமே...... இனிமேலும் சுகமே!
கற்றவை : அனேகம்...
எழுத்தில் கிடைத்த சுகந்திரம் : மனதில் தோன்றுவது, மனதை பாதிப்பது என எதை பற்றி வேணுமாலும் எழுவதற்கு முடிகின்றது.
இனி செய்ய நினைப்பவை : சொல்லி செய்யாமல் இருப்பதற்கு பதில், சொல்லாமல் செய்ய ஆசைப்படுகின்றேன்.
உங்களை பற்றிய முழுமையான குறிப்பு : நாகையில் பிறந்து, வளர்ந்து, படித்து, சென்னையில் சில காலம் தொழில்நுட்பத்தையும், வாழ்க்கையையும் கற்று, ஒரு சில நல்லது, கெட்டதில் சொந்தகளையும் நண்பர்களையும் புரிந்து, கடந்து வருடம் முதல் 110 கோடி இந்தியர்களின் சார்பாக ஒரு சில இந்தியர்களில் நானும் ஒருவனாக ஐ.நா.விற்கு வேலை செய்து கொண்டு இருக்கின்றேன்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றை சேர்க்கலாம் : ஒன்றை மட்டும் கூற வேண்டுமா, அப்ப நன்றி தான் சொல்லனும்.....
வலைப்பதிவில் நுழைவதற்கு காரணமாக இருந்த பாபு அண்ணனுக்கும்,எழுவதற்கு ஆர்வமுட்டிய பத்ரிக்கும், முதல் பின்னூட்டம் இட்டு வரவேற்ற ரஜினி ராம்கிக்கும், பின்னூட்டங்கள் திரட்டுவதற்கு உதவி இதுவரை என் பதிவில் பின்னூட்டம் இடாத மாயவரத்தானுக்கும், புதிதாக வருபவர்களை வரவேற்று பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தியும், 13 மணி நேரம் ஆறி போன மசால் வடைக்கு ஒரு பதிவு போட்டு இப்படியும் பதிவுகள் போடலாம் என ஐடியா கொடுக்கும் துளசியக்காவுக்கும், வருத்த படாத வாலிபர்கள் சங்கம் நாகை மாவட்ட பதவி கொடுத்து கெளரவபடுத்திய தல கைப்புள்ளகும், மற்ற சங்க உறுப்பினர்களுக்கும், அவரின் பதிவில் பின்னூட்டம் இட்டால் தேடி வந்து பின்னூட்டம் விடும் கீதா சாம்பசிவம், மதுரை சால்னா ருசிப்பதற்கு கனடா கால்கரிக்கு கூப்பிடும் கால்கரி சிவா, நன்றாக எழுதி கொண்டு இருக்கும் போது திடீர் என்று நாய், பூனை, ஆந்தை பற்றி எல்லாம் கவிதை எழுதி என்னை குழப்பிய முகமூடி & குசும்பணாருக்கும், சுடானில் என் தனிமையை தவிர்க்க உதவிய, உதவும் இட்லி வடை, முத்து(தமிழினி), குழலி, தேவ், கோவி கண்ணன், பாஸ்டன் பாலா, சிங். ஜெயகுமார், செந்தழல் ரவி, அனுசுயா, சண்முகி, நிலவு நண்பன், உஷா, அருட்பெருங்கோ, குப்புசாமி செல்லமுத்து, தெக்கிகாட்டான், பாலபாரதி மற்ற அனைத்து தமிழ் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் நன்றி. நான் கிறுக்குவதையும் படித்து பெருமைப்படும் திரு,வேணு,செல்லஜனிக்கும், உற்ற நண்பர்களுக்கும் மற்ற அனைத்து நல்லூருக்கும், இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த மதுமிதாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

42 comments:

தேவ் | Dev said...

பாசக்காரர் அய்யா நீர்.. என் பெயரையும் என் பதிவின் சுட்டியையும் உம் பதிவில் குறிப்பிட்ட உம் அன்பிற்கு தலை வணங்குகிறேன் ராசா...

சூடான்ல்லயும் நம்ம வரு.வா.ச கிளை ஒண்ணு ஓபன் பண்ணி பட்டயக் கிளப்புங்க

மதுமிதா said...

நன்றி நாகை சிவா

இந்தப் பதிவின் சுட்டியை
(எனக்கு அளித்த அதே சுட்டி தான்)
இப்பதிவிற்கான சுட்டி: என்று
கொடுத்து விடுங்கள்

மஞ்சூர் ராசா said...

முடிந்தவரை எல்லாவற்றையும் எழுதிவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

நாகை சிவா said...

என்ன தேவ்! இதுக்கு எல்லாம் தலை வணங்குகின்றேன் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு.

வ.வா.சங்க கிளை சூடானில் ஆரம்பிப்பதில் எந்த பிரச்சைனையும் இல்லை. ஆனா ஒரே நேரத்தில் இரு இடத்தில் பதவியில் இருப்பது கொள்கைக்கு புறமாக இருக்கும். நம் சங்கத்தை கட்டி காப்பாத்த கூடிய ஒரு நபர் சூடானில் கிடைத்தவுடன் சூடானிலும் பட்டய கிளப்ப வேண்டியது தான்...............

நாகை சிவா said...

தேவ்! இது வேற இருக்கா? சீக்கிரமே அங்கு வந்து சேர்ந்து விடுகின்றேன். அழைப்பிற்கு நன்றி.

கைப்புள்ள said...

//வருத்த படாத வாலிபர்கள் சங்கம் நாகை மாவட்ட பதவி கொடுத்து கெளரவபடுத்திய தல கைப்புள்ளகும்//

பெரிய வார்த்தை எல்லாம் சொல்லப்பிடாது...அதுவும் பப்ளிக்கா...அப்புறம் நான் தன்னடக்கமா இருக்குற மாதிரி நடிக்க வேண்டி வரும்.
:)-

நாகை சிவா said...

மறுபடியும் மது...... போட்டாச்சு! போட்டாச்சு!!!!

நாகை சிவா said...

வாங்க மஞ்சூர் ராஜா! முதல் தடவையாக வந்து இருக்கீங்க. நன்றி.

இதுகேவா, இன்னும் நிறைய பெயர் இருக்காங்க, அவசரத்தில் ஞாபகத்துக்கு வரவில்லை. அதுவும் இல்லாமல் இப்ப தான எழுத ஆரம்பித்து இருக்கேன், ஆர்வகோளார்ல கொஞ்சம் அதிகமா உணர்ச்சிவசபடுவது சகஜம் தான, போக போக திருத்தி கொள்கின்றேன்.

மாயவரத்தான்... said...

பதிவோட தலைப்பை மாத்தி தொலையுமய்யா.. பக்கத்துல காரைக்காலிலே போய் முழு பாட்டிலை 'போட்டுட்டு' வந்த மாதிரி இருக்குது.

(அப்பாடா. நெஜமாவே இதானா என்னோட முதல் பின்னூட்டம் இங்கே?!)

செந்தழல் ரவி said...

என்னுடைய பேரும் குறிப்பிட்டு சொன்னது சூப்பருங்கோவ்...

வானத்துல பறக்க வச்சிட்டீங்க போங்க..

ரவி

நாகை சிவா said...

தல!
என்னா தல! இப்படி சொல்லிபுட்ட!
அவன் அவன் பதவிகாக நாயா பேயா அலையுறான்.......நீனா கூப்பிட்டு பதவி கொடுத்து கவுரபடுத்தி இருக்க, உன்ன பத்தி இது கூட சொல்லாட்டி எப்படி?
இதுவே இந்நேரம் இந்தியாவில் இருக்குற வேற எவனுக்காச்சும் கொடுத்து இருந்தால் உனக்கு சுவரோட்டி(வரட்டி இல்ல, போஸ்டர்) ஒட்டி, மாலை மரியாதை எல்லாம் பண்ணி இருப்பான். நீ இதுபோல விளம்பரத்தை எல்லாம் விரும்ப மாட்டாய் என்பதால் தான் தன்னடக்கமாக பதிவில் போட்டேன். இதையும் தடுத்தா எப்படி தல. அப்புறம் எப்படி உன் பெயர் உலகம் பூரா பரவும்.

கால்கரி சிவா said...

சால்னா சாப்பிட்ட நாகை சிவாவிற்க்கு வாழ்த்துகள்

சிங். செயகுமார். said...

போட்டாச்சா? அப்டி போடுங்க அருவாள!

சிங். செயகுமார். said...

போட்டாச்சா? அப்டி போடுங்க அருவாள!

பொன்ஸ்~~Poorna said...

என்னங்க சிவா, என்பேரை விட்டுட்டீரு?!! இதுவரை பின்னூட்டம் போடாத வ.வா.சங்கத்தின் மகளிரணியைச் சேர்ந்த பொன்ஸுக்கும்ன்னு நானே சொல்லிக்கிற மாதிரி பண்ணிட்டீங்களே?!! :))

Simulation said...

This may be intersting to you.

http://simulationpadaippugal.blogspot.com/2005/08/blog-post_112455867257461652.html

- simulation

அனுசுயா said...

நன்றி சிவா என் வலைப்பக்கத்தையும் பெரிய பெரிய வலைப்பதிவாளர்களுடன் சேர்த்து எழுதியதற்கு.

துளசி கோபால் said...

13மணி நேரமாகியும் ஊசாமல்( கூசாமல்) இருந்த மசால்வடைக்கு இப்படி ஒரு புகழ் வருமுன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலையேப்பா
சிவா

நாகை சிவா said...

ஆமாங்க மாயவரத்தாரே! இது தான் முதல் பின்னூட்டம்.

//பதிவோட தலைப்பை மாத்தி தொலையுமய்யா.. பக்கத்துல காரைக்காலிலே போய் முழு பாட்டிலை 'போட்டுட்டு' வந்த மாதிரி இருக்குது.//

இருக்கும், இருக்கும், காரைக்காலுக்கு பக்கத்தில் தானே இருக்கீர் அப்படி தான் இருக்கும். அடிக்கடி போயி வருவீரோ????

நாகை சிவா said...

இதுல என்னங்க இருக்கு ரவி!
வானத்துல பறக்குறப்ப பாத்துங்க, ஆப்பிக்க நாடுகள் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

கால்கரி சிவா அண்ணா!
இன்னும் சாப்பிடல, கூடிய விரைவில் வந்துருவோமுல!
குறைந்தபட்சம் மதுரையில், அதிகபட்சம் கால்கரியில்..........

நாகை சிவா said...

புஷ்பவனத்தாரே!
என்ன கேட்டுகிறிங்கனு புரியல்லையே????
அருவாள பத்தி எல்லாம் இங்க பேசாதீங்க....
நான் அகிம்சைவாதிங்க....

நாகை சிவா said...

அச்சோ! கோச்சுகாதீங்க மகளிரணி தலைவியாரே!
நீங்க புதரகத்துக்கு(America)போயிவிட்டிர்கள், அதனால வலைபதிவு பக்கம் சில காலம் வர மாட்டீங்கனு வந்த வதந்திய நம்பி உங்க பெயர விட்டுடேன்.

உண்மையில் அவசரத்தில் சில பெயர்கள் விடுபட்டு விட்டன. தவறுக்கு வருந்துகிறேன். என் வலை பக்கம் முகப்பில், ரசிப்பவை என்பதற்கு கீழ் பொன்ஸ் பக்கங்கள் என்பது இருக்கும், நீங்கள் பார்த்து இல்லையா?

நாகை சிவா said...

Simulation!
உங்கள் பக்கத்தை படித்தேன். அருமையாக எழுதியுள்ளீர்க்கள். ஆனால் தலைநகரத்தை பற்றி மட்டும் எழுதியுள்ளீர்க்கள். சூடானை குறித்து விரிவாக என் பக்கத்தில் விரைவில்........
உங்கள் வருகைக்கு நன்றி.

நாகை சிவா said...

வாங்க அனு!
அது என்னங்க பெரிய வலைப்பதிவாளர், சின்ன வலைப்பதிவாளர், பிரிச்சி பாத்துக்கிட்டு.
என்னை பொருத்தவரை இவர்கள் அனைவரும் என் தனிமை தவிர்க்க உதவும், சந்ததோஷபடுத்தும், சிந்திக்க வைக்கும் நண்பர்கள். ஏன் முகம் தெரியாத சொந்தங்கள் எனவும் கூறலாம்.

நாகை சிவா said...

பூவுடன் சேர்ந்த நாரும் மணப்பது போல்,
துளசியக்காவின் பதிவில்(வாயில்) விழுந்த மசால் வடைக்கு இவ்வளவு புகழ் கிடைப்பதில் என்ன ஆச்சரியம்.

பொன்ஸ்~~Poorna said...

//என் வலை பக்கம் முகப்பில், ரசிப்பவை என்பதற்கு கீழ் பொன்ஸ் பக்கங்கள் என்பது இருக்கும்//
ஐயோ.. புல்லரிக்குதுய்யா.. (இங்க நிறைய புல்/புதர் இருப்பதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை). சங்க மக்கள் எல்லாம் இப்படி ஓவரா பாசத்தைக் காட்டினா என்ன சொல்றதுன்னு தெரியலையே!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்!!!

நாகை சிவா said...

சரி, சரி. நான் இப்ப என்ன சொல்லிட்டேன். விடுங்க. நீங்க சங்கத்து மகளிரணினு தெரியுரதுத்துக்கு முன்னாலே உங்க பெயர போட்டாச்சு. சரி, இப்ப சங்கத்து மக்கானு தெரிந்த பிறகு எடுக்க முடியுமா. சங்கத்து சிங்கள் தனியா உங்கள் அனைவரையும் போட்டு விடுவோம். நேரம் தான் அமைய மாட்டங்குது.

அருட்பெருங்கோ said...

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நாந்தான் கலங்குறேன்...

---அருள்---

கீதா சாம்பசிவம் said...

தம்பி, நாகைத் தம்பி, நீங்க ஆதரிக்கலேனா நான் என்ன பண்ணுவேன் வயசு என்னமோ 16 தான். தப்பில்லை. இதோ உங்க வீட்டுக்கு உடனே வர்ரேன். வீட்டிலே கொஞ்சம் பிசியா அதான் ஜாஸ்தி கவனிக்க முடியலே.

கீதா சாம்பசிவம் said...

இந்தப் பதிவை முன்னாலே பார்க்கலை. நானும் சங்கத்திலே நிரந்தரத் தலைவலிங்க. நம்ம கைப்புள்ளயைக் கேட்டுப் பாருங்க. எனக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம், போட்டி எல்லாம் வச்சுக் கடைசியிலே கல்கண்டு அவரே எடுத்துக்கிட்டாரே தெரியாதா?

நிலவு நண்பன் said...

//சுடானில் என் தனிமையை தவிர்க்க உதவிய, , ... நிலவு நண்பன், //

.. நன்றி

இப்படி பாசக்காரனா இருக்கீங்களேப்பா..
:)

பொன்ஸ்~~Poorna said...

அதானே சிவா, கீதாக்கா நெட்டில் இருக்கும் வரை (இரண்டு மணி நேரமோ ஒரு மணி நேரமோ,) அவங்க தான் தலைவி.. நம்ம வெறும் கொ.ப.செ.தான்..

(ஆனா இந்த பிரதமர்/ஜனாதிபதி மாதிரி, அதிகாரம் யார்கிட்ட இருக்கு என்பது வ.வா.சவில் இருக்கும், இல்லாத எல்லாருக்கும் தெரிஞ்ச உண்மை :-D )

நாகை சிவா said...

ஒன்னும் அவரசமில்லை கீதா அக்கா, பொருமையாவே வாங்க, வயசு ஏறிகிட்டே போகுதுல, அதனால் நிதானமாகவே வாங்க. எப்ப வந்தாலும் வரவேறக காத்து கொண்டு இருக்கிறேன்.

நாகை சிவா said...

நன்றி எல்லாம் சொல்ல வேண்டாம் அருள்! அடிக்கடி நம்ம வீட்டு பக்கம் வந்து போங்க.....
நிறைய தமிழ் சினிமா பாப்பிர்க்களோ?

நாகை சிவா said...

கீதா அக்கா!
அப்புறம் அரை சதம் இந்த உலகத்தில் அடித்து இருக்கீங்க. அதுக்கு கல்கண்டு கூட கூடுக்காட்டி எப்படிங்க??? அதுக்காக நீங்க என்ன கண்டுக்காம வீட்டுட கூடாது. இந்தியா வரும்போது வடை பாயசத்துடன்(பாசத்துடன்) ஒரு ஸ்பேஷல் கவனிப்பு கவனித்து விட வேண்டும்.

நாகை சிவா said...
This comment has been removed by a blog administrator.
நாகை சிவா said...

ஞானியாரே!
எல்லாம் தமிழ் பாசம் தாங்க..........
இதுக்கு போயி சல்யூட் எல்லாம் அடிச்சுகிட்டு.
ஒ....... நீங்க எப்பவுமே சல்யூட் அடிச்சிகிட்டு இருப்பீங்கள அத மறந்துட்டேன்!!!!

பொன்ஸ்~~Poorna said...

How many ever times i see in thamizmanam, this topic is truly odd :)

paavam madu :))

நாகை சிவா said...

பொன்ஸ்,
கீதாக்கா சங்கத்தின் நிரந்திர தலைவலினு அவங்களே சொல்லி இருக்காங்க.
No Comments from my side (:-)

அப்புறம், உண்மையில் அதிகாரம் யாருகிட்ட இருக்கு?????
பிரதமர், ஜனாதிபதி அதிகாரம் எல்லாம் டில்லி மேடத்துக்கு கிட்ட இருக்குற மாதிரி இங்கேயும் நடக்குதா?

நாகை சிவா said...

என்ன சொல்லவறீங்க பொன்ஸ்!
U mean funny (or) Un matched (or) curious (or) peculiar.
நமக்கு ஆங்கிலம் கொஞ்சம் தகராறு. அதான்.........

பொன்ஸ்~~Poorna said...

U mean funny (or) Un matched (or) curious (or) peculiar.
-- everything :)