பொருண்மை : ஒப்பிலக்கியம்
தலைப்பு - "கம்பனும் விசிஷ்டாத்வைதமும்"
கட்டுரையாளர் - முனைவர். செல்லக்கிருஷ்ணன்
அரங்கம் - ஒளவை அரங்கம்
இடம் - கோயம்புத்தூர்
நாள் - 27.06.2010
பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3
பகுதி - 4
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, October 11, 2010
4
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் தமிழ், நிகழ்வுகள், வாழ்த்து
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, October 07, 2010
0
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் தமிழ், நிகழ்வுகள், பெண்கள், வாழ்த்து
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Sunday, August 15, 2010
6
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
சொந்த ஊரை விட்டு பிரிந்து இருப்பதன் மூலம் சொந்தங்கள், நட்பு, உணவை மட்டும் இழப்பது இல்லை. அவ்வூரில் நடைபெறும் மதம் சார்ந்த நிகழ்வுகள், விழாக்கள் போன்ற பல அழகியல் விசயங்களையும் தவற விடுகிறோம். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களாலும், புகழ் பெற்ற மாதா கோவில்கள் மற்றும் தர்காகளால் சுழப்பட்ட ஊர் நாகப்பட்டினம்(நாகை). இதன் காரணமாக வருடத்தின் அனைத்து மாதங்களிலும் எங்காவது ஒரு விழா தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். மதங்கள் குறித்தும், அதில் செய்யப்படும் சடங்குகள், நிகழ்வுகள் போன்றவற்றின் மீது மாறுபட்ட கருத்துக்கள் பல சமயம் இருந்தாலும் அந்த விழாக்களில் இருக்கும் அழகு, தொண்மை, பழமை போன்ற விசயங்கள் என்னை எப்பொழுதும் கவர தவறியது இல்லை.
கடந்த முறை ஊருக்கு சென்று இருந்த போது காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலட்சி, நாகை நீலாயதாட்சி எனவும் சக்தி பீடங்களில் ஒன்றுமான நாகை அருள்மிகு காயாரோகனேஸ்வர உடனுறை ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் (24.06.2010) நடைப்பெற்றது. உற்ற தோழன் திருமணத்தின் காரணமாக அதில் கலந்துக் கொள்ள முடியவில்லை. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று மாலை நாகையில் இருந்து நாகூருக்கு 32 அடி விஸ்வரூப விநாயகரின் ஊர்வலம் மிக விமர்சையாக நடைப்பெறும். மேலும் இக்கோவிலில் 18 சித்தர்களின் ஒருவரான அழுகுணி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் ஆகும். இக்கோவிலில் உள்ள கால பைரவர், தலை திரும்பி இருக்கும் நந்தி என பல விசேஷங்களுக்கு உரியதாகும். இக்கோவிலை பற்றி பின்னொரு நாள் விரிவாக எழுத முயல்கிறேன்.
அதே நேரத்தில் நாகை ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் கோவிலில் வருடத்துக்கு ஒரு முறை நடைப்பெறும் வசந்த உற்சவமும் நடைப்பெற்று கொண்டு இருந்தது. இவ்விழாவினை முன்னிட்டு ஸ்ரீ செளந்தர்யவல்லித் தாயார் திருக்கோவிலின் உள்பிரகாரங்கள் வழியாக உலா வருவார்கள். படித்தாண்ட பத்தினி என்னும் சொல்லுக்கு ஏற்று கோவிலை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்பது ஐதீகம் என்று எண்ணுகிறேன். இவ்விழாவை முன்னிட்டு திருக்கோவிலின் பின்புற வாயில் திறக்கப்படும். அவ்வழியாகவும் தாயார் உலா வரும் போது தரிசிக்கலாம். அவ்வாயிலுக்கு அருகில் தாயார்க்கு விசேஷ ஆராதனைகளும், பூஜைகள் தினமும் நடைப்பெறும். ஊஞ்சல் வைபோகம் உள்ளிட்ட பல நிகழ்வுகளும் உண்டு. இவ்விழாவின் 10ம் நாள் அன்று திருத்தேர் கோவிலின் உள்ளேயே வடம் பிடிக்கப்படும். நிறைவு விழாவாக தாயாருக்கு திருகோவில் உள்ளே அமைந்து இருக்கும் திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைப்பெற்றது. முதல் முறையாக இத்தடவை தாயாருடன் திருநாகை அழகியார் என போற்றப்படும் எம்பெருமான் ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாளும் உடன் எழுந்து அருள் பாவித்தார்.
அப்படங்கள் உங்கள் பார்வைக்கு. கடைசி மூன்று படங்கள் நண்பன் கே.பி. எடுத்தது. தாமதமாக சென்ற காரணத்தினால் சலனப்படம் எடுக்க முடியவில்லை.
ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் பற்றிய என்னுடைய பிற பதிவுகள்
திருநாகை அழகியார் - சிறு குறிப்பு
மட்டையடி உற்சவம்
திருக்கோவில் படங்கள்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, July 26, 2010
10
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் ஆன்மிகம், நாகை, புகைப்படம்
இலங்கையின் அணியின் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் உலகின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர். சில தினங்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தும் இருந்தார். 800 டெஸ்ட் விக்கெட்கள் என்னும் இலக்கை அடைய இன்னும் 8 விக்கெட்கள் இருந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் விடை பெறுவதாக அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த ஒரு போட்டியில் அவர் 8 விக்கெட் வீழ்த்தி சரித்திர சாதனைய நிகழ்த்துவாரா என்ற ஐயம் அனைவருக்குமே இருந்தது. அனைவரின் ஐயத்தையும் தவிடு போடி ஆக்கி இந்திய அணிக்கு ஏதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸ்ல் 5 விக்கெட்டும் இரண்டாம் இன்னிங்க்ஸ் 3 விக்கெட்டும் விழ்த்து 800 டெஸ்ட் விக்கெட்கள் என்ற சாதனையை அவர் புரிந்து உள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெறும் நாளும் தன் வாழ்நாள் சாதனையை நிகழ்த்திய நாளும் ஒன்றாக அமைந்தது சாலச் சிறப்பு. javascript:void(0)
1992 ம் ஆண்டு ஆஸ்ஸி எதிராக தன் கிரிக்கெட் வாழ்வை துவங்கியவர் கிட்டதட்ட 18 வருடங்களாக தன் மந்திர சுழற் பந்து வீச்சால் கிரிக்கெட் ரசிகர்களை ஆட்டி படைத்தார் என்றால் மிகையாகாது. அதிலும் கடைசி 12 வருடங்கள் அவர் கிரிக்கெட் வாழ்வின் உச்சம். விக்கெட் அறுவடை அருமையாக இருந்த காலம் அது. இலங்கை கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட் வரலாற்று பக்கங்களில் அவரின் பெயரை பதிய காலம் அது. டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் அல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் மிக அதிக விக்கெட்களை வீழ்த்தியவரும் முரளியே. மற்ற சுழற் பந்து வீச்சாளர்களை விட இவரின் பந்து வீசும் முறை சிறிது வித்தியாசமாக இருக்கும். இந்த முறையாகவே இவர் மிக கடுமையான விமர்சனங்களை சந்திதவர். பந்தை எறிகிறார் என்று பிரச்சனை எழுப்பட்டு பின் ஐ.சி.சி யால் இவர் பந்து வீசும் முறையில் எந்த தவறும் இல்லை என்று விடுவிக்கப்பட்டார். இருந்தும் ஆஸ்ஸி வீரர்கள், அம்பயர்கள், ரசிகர்கள் முதற்கொண்டு அந்நாட்டின் பிரதமர் கூட இவருடைய பந்து வீச்சை கடுமையாக சாடியே வந்தனர். இதற்கு இனவெறியே அடிப்படையே காரணம் என்ற ஒரு பேச்சும் உண்டு. அந்நாட்டில் பயணம் மேற்கொண்ட போது சில அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறியது. இதனால் முரளி ஆஸ்திரல்யா பயணம் மேற்கொள்ள மாட்டேன் என்று அங்கு விளையாடுவதை தவிர்த்து விட்டார்.
இது போன்ற விமர்சனங்கள் எழுந்த போது எல்லாம் பேச்சின் மூலம் பதில் கொடுப்பதை தவிர்த்து தன் மாய பந்து வீச்சின் மூலமே பதில் சொல்லியவர் முரளி. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் எல்லா அணிகளுக்கு ஏதிராகவும் 50 விக்கெட்களுக்கு மேல் எடுத்தவர் முரளி மட்டுமே. முரளி அதிகமாக சிறிய அணிகளான பங்காளதேஷ், ஜிம்பாவே ஆகிய அணிகளுக்கு ஏதிராக தான் அதிக விக்கெட் எடுத்து உள்ளார், அதனால் வார்னே தான் சிறந்த பந்து வீச்சாளர் என்று கூறுபவர்களும் உண்டு. ஆனால் அந்த இரு அணிகளுக்கு ஏதிரான எடுத்த விக்கெட்களை தவிர்த்து பார்த்தாலும் முரளி 624 விக்கெட்கள் எடுத்து உள்ளார். சராசரி - 25.33. இது வார்னே வின் மொத்த சராசரி விட குறைவு. இருந்தும் டெஸ்ட் கிரிக்கெட் சுழற்பந்து உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களான கும்ளே, வார்னே, முரளி இருந்த காலமே பொற்காலம் எனலாம். இவர்கள் மூவருமே உலகின் அதிக டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்கள் எடுத்தவர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார்கள்.
முரளி பல நாடுகளுக்கும் ஏதிராக விக்கெட் அறுவடை செய்து இருந்தாலும் ஆஸ்திரேல்யா மற்றும் இந்தியாவிற்கு ஏதிராக சிறிது தடுமாறி உள்ளார் என்பதும் உண்மையே. இந்த அணிகளுக்கு ஏதிரான சராசரி முறையே 36.07 & 32.32. இந்த இரு அணிகளுக்கு ஏதிராகவும் தென் ஆப்பிரிக்காவிற்க்கு ஏதிராகவும் அந்நாட்டிலே டெஸ்ட் தொடர்களை வென்றது இல்லை என்பது முரளி கிரிக்கெட் மைல்கல்லில் அவருக்கு இருக்கும் கரும்புள்ளிகள் என அவரே தெரிவித்து உள்ளார். இலங்கை உலக கோப்பை வெல்ல இவரும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. இவர் பந்து வீசும் போது இவரின் விழிகள் போகும் போக்கை பார்க்கவே பல ரசிகர் பட்டாளம் உண்டு. அம்பயரிடம் அப்பீல் பண்ணும் முறையும் பலரை கவர்ந்த ஒன்று தான். சிறந்த பவுலர் மட்டும் அல்லாது இலங்கை அணியின் மிக சிறந்த பீல்டர்களில் இவரும் ஒருவர். தன்னால் முடிந்த அனைத்ததையும் அணிக்காக கொடுக்க என்றுமே தவறியது இல்லை முரளி. சில சமயங்களில் மட்டைவீச்சில் இவர் அடித்த சிக்ஸ்ர்கள் அதற்கு உதாரணம்.
இந்தியாவிற்கு ஏதிரான போட்டி ஆனாலும் சரி பிற நாடுகளுக்கு எதிரான போட்டியானாலும் சரி முரளியின் பந்து வீச்சிற்காக பார்த்த போட்டிகள் அனேகம். பல சமயங்களில் நம் எதிர்பார்ப்பை தன் பந்த வீச்சின் மூலம் பூர்த்தியே செய்து வந்து உள்ளார் முரளி. இனி இவரை டெஸ்ட் போட்டிகளில் பார்க்க முடியாது என்பது வருத்தம் தான் என்றாலும் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே விடை பெறுவது ஒரு நல்ல வழிகாட்டுதலே. இருந்தும் இன்னும் சில காலம் ஒரு நாள் போட்டிகளிலும் நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாட உள்ளார் என்பது மகிழ்ச்சி அளிக்கும் விசயமே.கபில்தேவ் க்கு பிறகு நான் மிகவும் ரசித்த பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். கபில் 432 விக்கெட் எடுத்த போது எப்படி மகிழ்ந்தேனோ அதே அளவு மகிழ்ச்சி அவர் 800 விக்கெட் எடுத்த போதும் ஏற்பட்டது. அதற்கு அவர் ஒரு தமிழர் என்பதை விடவு நம் நாட்டின் மருமகன் என்பதை விடவும் மிக சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்ற காரணமே!
Murali - Its always pleasure to watch you and you never disappointed us. Thanks for your brilliant performance and wonderful show in World Cricket. We Salute You. HATS UP ! We Miss you.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Friday, July 23, 2010
9
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் இலங்கை, கிரிக்கெட், விளையாட்டு
கடந்த வாரம் இந்திய அரசால் நமது ரூபாய் க்கு என்று புதிய குறியீட்டை ( ` ) அறிவித்து இருந்தார்கள். இன்னும் சில மாதங்களில் அந்த குறியீடு நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த குறியீட்டை வடிவமைத்தது ஒரு தமிழ் இளைஞர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த குறியீடு இந்தி எழுத்து போல் உள்ளது, கம்யூனிச சின்னம் போல் உள்ளது, ஆங்கில ஆர் எழுத்து போல் உள்ளது என பல குற்றசாட்டுகள் கிளம்பினாலும் எப்படியும் அந்த குறியீட்டை நாம் உபயோகப்படுத்தி தான் ஆகனும்.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Sunday, July 18, 2010
5
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
ICC (International Criminal Court) சூடான் அதிபர் அல் பஷீர் க்கு ஏதிரான இரண்டாவது அரெஸ்ட் வாரண்ட் டை பிறப்பித்து உள்ளது. (12.07.2010) இந்த முறை டார்பூரில் நடைப்பெற்ற இனப் படுகொலைக்கு காரணியாக அமைந்தால் இவ்வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
Pre-Trial Chamber I of the International Criminal Court (ICC) issued a second warrant of arrest against the President of Sudan, Omar Hassan Ahmad Al Bashir, considering that there are reasonable grounds to believe him responsible for three counts of genocide committed against the Fur, Masalit and Zaghawa ethnic groups, that include: genocide by killing, genocide by causing serious bodily or mental harm and genocide by deliberately inflicting on each target group conditions of life calculated to bring about the group's physical destruction.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Wednesday, July 14, 2010
3
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் Genocide, ICC, ஆப்பிரிக்கா, ஐ.நா., சூடான்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Friday, June 11, 2010
16
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் அனுபவம்
35 ஆயிரம் பேர் உயிர் இழக்கவும், 5 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பல விதமான பாதிப்புகளுக்கு ஆள்படவும் காரணமாக இருந்த போபால் விஷ வாயு சம்பவத்தின் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி உள்ளது.
"எட்டு குற்றவாளிகள் மீதான குற்றங்கள் ஐ.பி.சி. 304(2), 336, 337 மற்றும் 338 பிரிவுகளின் கீழ் உறுதி செய்யப்பட்டு, அனைவருக்கும் இரண்டு வருடம் சிறை தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பெயில் மனுவை அளித்த குற்றவாளிகளுக்கு ஜம்மென்று ஜாமீனும் கிடைத்தது. 'பெரும் சேதம் விளைவிக்கக்கூடிய வகையில் கவனக் குறைவாக செயல்பட்டது' என்பதுதான் குற்றவாளிகள் மீதான தண்டனைக்கான சாராம்சம்!
இந்திய உயிர்களின் பாதுகாப்பை துச்சமாக மதித்து, அமெரிக்காவில் இதே போன்ற தங்களின் தொழிற்சாலைகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல், இத்தனை ஆயிரம் குடும்பங்களின் எதிர்காலத்தில் விஷத்தைப் பாய்ச்சிய வாரன் ஆண்டர்சன் பற்றி தீர்ப்பில் எதுவுமே இல்லை!" - ஜு.வி
இங்கு நீதி, மலிவு விலையில் கிடைக்கும் என போர்ட் வைக்காத குறை தான் ! - வாழ்க சனநாயகம்!
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, June 10, 2010
5
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் வாழ்க சனநாயகம்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Wednesday, June 09, 2010
8
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் கண்டனம், கிரிக்கெட், விளையாட்டு
"கடுமையான" வேலைகளுக்கு நடுவில் பதிவுகள் படிக்கலாம் என்றால் பதிவரசியல், அரசவை கோமாளி என இம்சைகள் படுத்த, சினிமாவுக்கு போகலாம் என்றால் சுறா, சிங்கம், பெண் சிங்கம் என சுனாமியாய் சுழட்டி அடிக்க, கழுதை கிரிக்கெட்டாவது பாக்கலாம் என்றால் இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் சொதப்பல் ஆட்டத்தால் நொந்து நொடுல்ஸ் ஆகி, அந்து அவல் ஆகி இருக்கும் எனதருமை பதிவலக பெருமக்களே! அதை எல்லாம் சிறிது விட்டு தள்ளிட்டு மற்ற விளையாட்டுகளில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். பரபரப்பு, விறுவிறுப்பு, உற்சாகம், மகிழ்ச்சி, ஆரவாரம், உணர்ச்சி பிழம்பு, அழுகை என எதற்கும் பஞ்சம் இல்லாத சூட்டை கிளம்பும் ஆட்டங்களை ரசித்து மகிழுங்கள். இந்த மாதத்தில் (ஜுன்) பிரெஞ்ச் ஒபன் மற்றும் NBA போட்டிகள் தற்பொழுது நடைப்பெற்றுக் கொண்டு உள்ளது. விரைவில் கால்பந்து உலக கோப்பையும் தொடங்க உள்ளது.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, June 03, 2010
11
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் NBA, கூடைப்பந்து, விளையாட்டு
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Wednesday, April 14, 2010
5
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
பொங்கல் அன்று நாகை ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் கோவில் சென்ற போது நாளை மாலை மட்டையடி உற்சவம் உள்ளது தவறாமல் வந்து விடுங்கள் என்று கூற, ஏதோ ஒரு பதிவில் இதை பற்றி படித்தும், இது ஸ்ரீரங்கத்தில் மட்டும் தான் நடைபெறும் என்று நினைத்துக் கொண்டு இருந்ததும் ஞாபகத்தில் வந்தது. வீட்டில் இதை பற்றி கேட்கும் போது இவ்வளவு நாளாக இங்கு இருக்கிறாய், இது கூடவா தெரியாது என்று நம் அறியாமையை பதம் பார்த்த காரணத்தால் அதன் புராண கதையை கேட்க முடியாமல் போயிற்று. சரி எப்படியும் நாளை மாலை இந்த உற்சவத்தை தவறாமல் கண்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
இதை பற்றிய புராணக் கதை மிக தெளிவாக அறியாத காரணத்தால் எனக்கு தெரிந்தவற்றை மட்டும் இங்கு. துலக்க நாச்சியார் காண நம்பெருமாள் சென்ற காரணத்தால் கோவம் கொண்டு தாயார் மீண்டும் வீட்டின் உள்ளே அனுமதிக்க மறுப்பதே இந்த மட்டையடி உற்சவத்தின் சாரம்சம். வாழை மட்டை கொண்டு அடிக்கப்படுகிறது. அழ்வார் வந்து சாமாதனம் செய்வதாகவும் தெரிகிறது.
மாலை நான் சிறிது தாமாதமாக சென்ற காரணத்தால் முழுமையாக காண முடியவில்லை. படங்களும் சரியாக அமையவில்லை. சலனப்படம் சிறிதே எடுக்க முடிந்தது.
நம்பெருமாள் துலக்க நாச்சியாரை காண செல்லும் புகைப்படம்
கோவிலுக்குள் செல்ல முயலும் புகைப்படம்
மட்டையடி கொடுத்து வாயில் மூடப்படும் புகைப்படம்
தாயாரும், நம்பெருமாள் இணைந்து காட்சி கொடுக்கும் புகைப்படம்
மேலே உள்ள படத்தில் மட்டையடி உற்சவத்தை பற்றிய புராண கதையை கோவில் பட்டாச்சாரியார்கள் விளக்கும் காட்சியையும் காணலாம்.
சலனப்படம்
புராணங்கள் எப்படி இருந்தாலும், இந்த உற்சவத்தை கோவில் அங்கத்தினர்கள் நடத்திய பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது, அத்தனை அழகு. ஒரு ஒழுங்குடன், மிகவும் நேர்த்தியாக அமைந்தது இருந்தது. திருநாகை அழகியாருக்கு நடந்த இந்த உற்சவம் ஒரு அழகியல் நிகழ்வு என்பதால் தான் இந்த பதிவு.
ஸ்ரீரங்க மட்டையடி உற்சவத்தை பற்றி மாதவிபந்தலில் வந்த பதிவு.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Friday, March 05, 2010
7
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் அனுபவம், ஆன்மிகம், நாகை, நிகழ்வுகள்
ஏற்கனவே உணவு பஞ்சத்தாலும், உள்நாட்டு பிரச்சனைகளாலும், தொடர்ந்து அடித்த கடும் புயலாலும் (Hurricane) அவதிப்பட்டு வந்த ஹைத்தி, எட்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்டு கடுமையான பூகம்பத்தால் மிகவும் நிலைகுலைந்து போய் உள்ளது. என்னுடன் வேலை நண்பர்களின் நிலை அறியவே சில நாட்கள் பிடித்தது. இன்னுமும் அவர்கள் தங்க இடம் இல்லாமல் அலுவலக வளாகத்தில் தான் தங்கி வருகிறார்கள். எனக்கு கிடைத்த தகவல்படி ஒரே ஒரு இந்தியர் (என்னுடைய பழைய கம்பெனியில் தற்பொழுது வேலை செய்தவராம்) இடிபாடுகளில் சிக்கி இறந்து உள்ளார். வடமாநிலத்தை சேர்ந்தவர் அவர். அவர் குடும்பத்திற்கு உதவி தொகை அளிக்க மற்ற நண்பர்கள் முயன்று கொண்டு உள்ளார்கள். அதே போல் இங்கு இருந்தும் ஹைத்திக்கு பணம் திரட்டி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள். திரட்டும் பணி கிட்டதட்ட முடிந்து விட்டது, விரைவில் அனுப்பட்டும்.
உலகின் பல பகுதிகளில் இருந்து நிவாரணம் ஹைத்தி நாட்டிற்கு குவிந்த போதிலும் இன்னும் நிலைமை மோசமாக தான் உள்ளது அங்கு. ஐ.நா.வும், அதன் துணை அமைப்புகளும், பல தொண்டு நிறுவனங்களும் துரிதமாக செயல்பட்டதால் இடிபாடுகளில் சிக்கி இருந்த பலரின் உயிர்கள் காக்கப்பட்டது. போதுமான மருத்துவமனை வசதிகள் இல்லாதது தான் மிக பெரிய இடராக அங்கு இப்பொழுது நிலவி வருகிறது.
ஐ.நா, ஹைத்தி அரசு, உலக வங்கி, ஐரோப்பிய அமைப்பு ஆகியவற்றின் உதவியோடு மறுகட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இது வரை கிட்டதட்ட 40 % மக்கள் (5 லட்சம்) தற்காலிக குடியிருப்புகள் பெற்று உள்ளார்கள். இன்னும் 2.5 லட்சம் தார்பாய்கள் மற்றும் 25000 டெண்ட் வழங்குவதற்காக பணிகள் நடந்துக் கொண்டு இருக்கின்றது. கிட்டதட்ட 15 லட்சம் மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு கொண்டு இருக்கின்றது.
விரைவில் மழை காலம் நெருங்குவதால் அதற்கு முன்பு தற்காலிக குடியிருப்புகளை அமைக்கப்பட வேண்டும் என்பது தான் தற்பொழுது இருக்கும் சவால். இது வரை தொற்று நோய்கள் ஏதுவும் பெரும் அளவில் பரவாமல் இருப்பது ஒரு வரம்.
ஹைத்தியில் இருந்த அலுவலக தலைமையகம், பூகம்பத்திற்கு முன்பு
பூகம்பத்திற்கு பின்பு
We are the World 25 - Haiti
25 வருடங்களுக்கு முன்பு மைக்கேல் ஜாக்சனால் ஆப்பிக்க நாடுகளுக்காக நிதி திரட்ட நடத்தப்பட்ட We are the World பாடல் மீண்டும் 80 இசை கலைஞர்களால் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதை ரீக்கார்ட் செய்து உள்ளார்கள். ஹைத்தி நிவாரண நிதிக்காக இதை செய்து உள்ளார்கள். இதில் நம் ரஹ்மானின் பங்களிப்பு உண்டு. அந்த பாடல்....
மனம் இருப்பவர்கள் ஹைத்தி மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யலாம். WFP மூலம் உதவ விரும்புவர்கள் இந்த சுட்டியை தொடரவும். WHO மூலம் உதவு இந்த சுட்டியை தொடரவும்.
வசந்தம் விரைவில் வீசட்டும்.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, March 04, 2010
2
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் ஐ.நா., நிகழ்வுகள், பூகம்பம், ஹைத்தி
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Wednesday, March 03, 2010
4
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் வாழ்க சனநாயகம்
இந்த வருட ரயில்வே பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு பல திட்டங்கள் உள்ளதால் சிறந்த பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. திட்டங்கள் எல்லாம் சரி தான் ஆனால் அதை செயல்படுத்துவதில் தான் வேகத்தை காணாம். இந்த வருடம் மார்ச் மாதத்திற்குள் போன பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்ட புதிய ரயில், விரிவாக்கம் போன்றவை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்கள். இதற்கு மட்டும் இவ்வளவு கால தாமதம். ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் வரி மட்டும் உடனடியாக அமல்படுத்தப்பட்டது. என்னங்கடா நியாயம் இது.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Saturday, February 27, 2010
9
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா