Wednesday, March 03, 2010

வாழ்க சனநாயகம் - 8

இந்த வாரத்தில் மட்டும்.....

திவிவேதி

கல்கி பகவான்

ஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள்....


இவங்கள் வரிசையில் இன்னும் பலரை விரைவில் எதிர்பாக்கலாம்.

மதத்தின் போர்வையில் இவர்கள் இதை எல்லாம் செய்வதால் இவற்றை தோலுரித்து காட்டுவதில் தவறே இல்லை.

வீட்டில் இருக்கும் பெற்றோர்களை கூட மதிக்காத பல ஜென்மங்கள் இந்த மாதிரி ஆட்களின் காலில் போய் விழுவது தான் கொடுமை. எதை திண்ணா பித்தம் தெளியும் அலையுறாங்க. அரசியல் வியாதிகளை விட்டு விடுவோம். அவர்கள் எவன்/ள் காலில் வேணுமானாலும் விழுவார்கள். செக்கு மாட்டுக்கு சிவன் என்ன? செக்கு என்ன? அவர்களுக்கு காரியம் ஆனால் சரி.

இனிமேல் ஆச்சம் மனுசனை சக மனிதனாக மட்டும் பாருங்கள்...

பழமொழி:

துள்ளாதே துள்ளாதே குள்ளா, பக்கத்தில் பள்ளம் அடா !

கமெண்ட் :

இந்த ஆள் எப்படி மாட்டினான் இப்போ? - பின்ன அரச குடும்பத்து ஆட்களுக்கு வைக்கும் கட் அவுட் டை விட பெரிய அளவில் கட் அவுட் வைத்தால் பாத்துக்கிட்டு சும்மாவா இருப்பாங்க?

கேள்விகள் ?

1, நித்தியானந்தர்கள், தேவநாதன்கள் லீலைகள் போன்றவற்றை மட்டும் அடிக்கடி அட்டைப் படங்களாக போட்டு விளம்பரப்படுத்தி விற்பனை அதிகரித்து கொள்ளும் பத்திரிக்கைகள் (அதிலும் தேவநாதனுக்கு ப்லோஃ அப் எல்லாம் பண்ணுறாங்கப்பா), அவர்கள் துறையை சார்ந்தவர்கள் எரித்து கொள்ளப்பட்டத்தை பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லையே, அது ஏன்? அடிப்பாங்கனா?

2, இது போன்ற செய்திகளை படித்தவுடன் மக்கள் அல்லது அவர்களை பின்பற்றியவர்கள் உடனே திரண்டு போய் அவர்கள் உடமைகளை அடித்து நொறுக்குவது, செருப்பால் அடிப்பது, கோஷங்கள் எழுப்பது, நீதிமன்றங்கள் வரை சென்று அடிப்பது என்று செய்கிறார்களே, இதுக்கே இவ்வளவு செய்கிறவர்கள் தர்மபூரி மாணவர்கள், தினகரன் பத்திரிக்கை ஊழியர்களை எரித்தவர்கள் நீதிமன்றங்களுக்கு வரும் போது இதை எல்லாம் செய்வது இல்லையே. அது ஏன்? பயமா?.........

நல்லா இருங்கடே.... வாழ்க சனநாயகம்

4 comments:

KVR said...

ஒருத்தரும் பதில் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்குத் தோலுரிக்கணும்ங்கிறது எண்ணமில்ல. சென்சேஷனல் நியூஸ், அவ்வளவு தான்.

கவிதா | Kavitha said...

திரும்பின பக்கம் எல்லாம் நித்தி...மயமா இருக்கே... :) ...

கொதித்து கொதித்து எழு(து)வோம், இன்னும் ஒரு மாதத்தில், நித்தி சூப்பரா திரும்பி தொழிலை தொடங்கபோறார்.:) நம்ம மக்களும் கால் ல போய் விழத்தான் போறாங்க.. எல்லாருக்கும் பெரிய பே பே..கொடுக்க போறாங்க..!!

//பழமொழி:
துள்ளாதே துள்ளாதே குள்ளா, பக்கத்தில் பள்ளம் அடா !//

இது நீங்களே கண்டுபிடிச்சதா..? குள்ளமா இல்லாதவங்க துள்ளினா?! ம்ம் ம்ம் ம்ம்?!! (ஒவ்வொரு ம்ம்'கும் புருவத்தை உயர்த்தி படிக்கனும்)

//பின்ன அரச குடும்பத்து ஆட்களுக்கு வைக்கும் கட் அவுட் டை விட பெரிய அளவில் கட் அவுட் வைத்தால் பாத்துக்கிட்டு சும்மாவா இருப்பாங்க?//

என்னப்பா இது, நல்லது செய்தாலும் திட்டறீங்க..செய்யாட்டியும் திட்டறீங்க.. அரசை என்னத்தான் செய்ய சொல்றீங்க..?!!

ஹைலைட் செய்து கேட்டதற்கு -
இதே மாதிரி கொதித்து நீங்க பத்திக்கிட்டவங்க எல்லாருக்கும் பதிவு போட்டீங்களா? நிஜமா எனக்கு தெரியல அதான் கேட்டேன்.. போட்டு இருந்தீங்கன்னா லிங்க் கொடுங்க.. வேற எதுக்கு படிச்சு பாக்கத்தான்.

Raz said...

romba nal kalichi vanthu iruka... yethachum nallatha enna pathi pukalthu podama enna ithu ? mmmm?

ennamo po!

neways machi. call adi.

vasanth said...

ithula irukura kick athula kidayathu!!!