Thursday, June 03, 2010

ஆட்டம் தொடங்கியாச்சு - The Game is ON !

"கடுமையான" வேலைகளுக்கு நடுவில் பதிவுகள் படிக்கலாம் என்றால் பதிவரசியல், அரசவை கோமாளி என இம்சைகள் படுத்த, சினிமாவுக்கு போகலாம் என்றால் சுறா, சிங்கம், பெண் சிங்கம் என சுனாமியாய் சுழட்டி அடிக்க, கழுதை கிரிக்கெட்டாவது பாக்கலாம் என்றால் இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் சொதப்பல் ஆட்டத்தால் நொந்து நொடுல்ஸ் ஆகி, அந்து அவல் ஆகி இருக்கும் எனதருமை பதிவலக பெருமக்களே! அதை எல்லாம் சிறிது விட்டு தள்ளிட்டு மற்ற விளையாட்டுகளில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். பரபரப்பு, விறுவிறுப்பு, உற்சாகம், மகிழ்ச்சி, ஆரவாரம், உணர்ச்சி பிழம்பு, அழுகை என எதற்கும் பஞ்சம் இல்லாத சூட்டை கிளம்பும் ஆட்டங்களை ரசித்து மகிழுங்கள். இந்த மாதத்தில் (ஜுன்) பிரெஞ்ச் ஒபன் மற்றும் NBA போட்டிகள் தற்பொழுது நடைப்பெற்றுக் கொண்டு உள்ளது. விரைவில் கால்பந்து உலக கோப்பையும் தொடங்க உள்ளது.

NBA - The Finals (கூடைப்பந்து)

அமெரிக்காவில் மிக பிரலமான கூடைப்பந்து அணிகளுக்கு இடையே வருடத்துக்கு ஒரு முறை (கிட்டதட்ட வருடம் முழுவதுமே) நடைபெறும் NBA போட்டிகளின் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. (இன்னும் சில மணித்துளிகளில்) 30 அணிகளில், 1000 த்துக்கும் அதிகமான ஆட்டங்களில் பல சுற்றுகளில் விளையாடி இன்று கூடைப்பந்தில் முடிச்சூடா சக்கரவத்திகளாக திகழும் பாஸ்டன் செல்டீக்ஸ் (Boston Celtics) அணியும் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் (Los Angeles Lakers)இறுதி போட்டியில் மோத தயாராக உள்ளார்கள்.


இது வரை நடைபெற்ற 64 இறுதி ஆட்டங்களில் பாஸ்டன் 20 முறையும் லாஸ் ஏஞ்சல்ஸ் 30 முறையும் தகுதி பெற்று உள்ளனர். இதில் பாஸ்டன் 17 முறையும் லாஸ் ஏஞ்சல்ஸ் 15 முறை சாம்பியன் பட்டங்களை வென்று உள்ளனர். இவ்விரு அணிகளும் இது வரை 11 முறை இறுதி ஆட்டங்களில் மோதி உள்ளனர். அதில் பாஸ்டன் 9 முறையும் லாஸ் ஏஞ்சல்ஸ் 2 முறையும் வென்று உள்ளனர். கடைசியாக 2008 ம் ஆண்டு நடந்த இறுதி போட்டியில் பாஸ்டன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதே சமயம் கடந்த வருட சாம்பியன்ஸ் (நடப்பு) லாஸ் ஏஞ்சல்ஸ் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


2008 ம் ஆண்டு விட்டதை இந்த வருடம் சரி கட்ட வேண்டும் என்றும் கோப்பையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியோடு லாஸ் ஏஞ்சல்ஸ்ம், மீண்டும் 2008 யில் நடந்ததை நடத்திக் காட்ட பாஸ்டனும் சிலிர்ப்புடன் உள்ளது.

Lakers பலம் Kobe Bryant யின் ஒன் மேன் ஷோ தான். எந்த விதமான இக்கட்டான சூழ்நிலையிலும் எவ்விதமான தடுப்புகளையும் உடைத்து கவுன்ட் பண்ணுவதில் தற்காலத்தில் இவருக்கு நிகர் இவரு தான். 3 பாயிண்ட் போடுவதில் வல்லவரான Fisher மற்றும் ஏதிராளியை தடுப்பதில் சிறந்தவரான Ron Artest போன்றவர்களுடன் Odom & Gasol ம் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள். கூடவே இந்த சீசனில் இவர்களின் தடுப்பு ஆட்டத்தின் தரம் அதிகரித்து உள்ளது. இவர்களின் பலவீனம் பெரும்பாலும் Kobe Bryant யே நம்பி இருப்பது. பெயிண்ட் க்கு வெளியில் இருந்து பாயிண்ட்கள் அதிகம் எடுக்காமல் இருப்பது என்பதையும் கூறலாம்.

Celtics பலம் அவர்களின் முன் வரிசை வீரர்கள் தான். Garnett, Pierce, Allen, Rondo என பட்டையை கிளப்பும் தரமான வீரர்கள். அதிலும் இந்த சீசனில் Rondo வின் ஆட்டத்தில் அனல் பறக்குகிறது. இவர்களின் பலமே தடுப்பு ஆட்டம் மற்றும் அனைவருமே ஸ்கோர் செய்வதுமே. அதிலும் & அபாயகரமானவர்கள். பலவீனம் என்றால் பெஞ்ச் ஆட்டக்காரர்கள் யாரும் பெரிதாக இதுவரை ஸ்கோர் பண்ணவில்லை.

கடந்த முறை (2008) யில் தடுப்பு ஆட்டங்களில் மூலமும், பெயிண்ட் ஏரியாவிற்குள் நுழைய விடாமலும் Kobe Bryant க்கு அவர் சக வீரர்களிடம் இருந்து உதவி கிடைக்க விடாமல் தடுத்துமே Celtics சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்கள். இந்த வருடமும் கண்டிப்பாக அதே பாணி ஆட்டத்தை தான் விளையாடுவார்கள். ஆனால் இந்த முறை Fisher & Artest சில பாயிண்ட்கள் எடுத்து Kobe Bryant க்கு உதவி செய்தால் ஆட்டத்தின் போக்கே மாறும்.

மொத்தத்தில் பாஸ்டன் அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக தெரிந்தாலும், எதையும் சாதித்துக் காட்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் அவ்வளவு சுலபமாக கோப்பையை விட்டுத் தர மாட்டார்கள். இந்த முறை எப்படியும் 7 ஆட்டங்களும் (Best of 7) நடைபெறும் என்று நினைக்கிறேன். Celtics யின் ஆட்ட யுத்தியும், Garnett டின் காட்டுமிராண்டித்தன ஆட்டமும் என்னை கவர்ந்தாலும் Kobe Bryant க்காக லாஸ் ஏஞ்சல்ஸ் Lakers வெற்றி பெற வேண்டும் என எதிர்பாக்குகிறேன்.

ஏது எப்படி இருந்தாலும் வேகம், விவேகம், விறுவிறுப்பு க்கு எந்த விதமான பஞ்சமும் கண்டிப்பாக இருக்காது. அதுக்கு நான் கியாரண்டி. தவற விடாமல் கண்டுக் களியுங்கள்.

THE GAME IS ON !

Image Courtesy : NBA.com

11 comments:

ILA(@)இளா said...

>புலி களம் இறங்கிடுச்சுடோய்ய்

Radha Sriram said...

எங்க "ப்லாக் மாம்பா" களம் இறங்கியாச்சுனா யாராலையும் ஒண்ணும் செய்ய முடியாது..:):)

கோபிநாத் said...

ம்ம்ம்...நடத்து ராசா ;))

நாகை சிவா said...

எதிர்பார்த்தது போலவே Kobe Bryant யின் சிறப்பான ஆட்டத்தால் முதல் கேம்மை 102 க்கு 89 என்ற அளவில் Boston Celtics வீழ்த்தி 1-0 என்று முன்னணி வகிக்கிறது Los Angeles Lakers அணி.

FINAL :

BOS : 21 20 23 25 - 89
LAL : 26 24 34 18 - 102

நாகை சிவா said...

மக்கா! நீங்க காமெடி பண்ண நான் தான் சிக்கினேனா இன்று ? :)))))

நாகை சிவா said...

இரண்டாவது ஆட்டத்தில் Boston அணியின் Allen எட்டு 3 points உடன் 32 பாயிண்ட் எடுத்து Boston அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

BOS : 29 25 18 31 - 103
LAL : 22 26 24 22 - 94

Series Tied 1 - 1

Li. said...

நான் பிளேசர்ஸ் பசங்களை நம்பி நம்பி வீணாப் போய்டேங்க. நம்ம சித்தப்பு ஊரு.. போர்ட்லேன்ட் .. அந்த பாசம்.. :-/

நாகை சிவா said...

Li!

உங்க சித்தப்பு ஊரு மன்னார்குடி னு கேள்விப்பட்டேன்.. மாறிட்டாரா?

Blazers எல்லாம் Play offs வரைக்கும் தான் எப்பவுமே வரும். குடும்ப பாசத்தை விட்டு மாறி வாங்க ;)

நாகை சிவா said...

Los Angeles leads series 2-1

FINAL
LAL : 26 26 15 24 - 91
BOS : 17 23 21 23 - 84

ஆட்டம் சூடு பிடிச்சாச்சு :)

நாகை சிவா said...

Game 4:

Celtics 96, Lakers 89

Series Tied 2 - 2

நாகை சிவா said...

Game 5:

Celtics 92, Lakers 86

Boston lead series 3-2