Tuesday, October 30, 2007

எல்லாம் ஒரு விளம்பரம் தான்~

கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் கவுண்டமணி கிட்ட எல்லாம் ஒரு விளம்பரம் தான் என்று சொல்லுவார், அதுக்கு அவரு உனக்கு ஏன் இந்த விளம்பரம் அப்படினு சொல்லுறத வச்சு விளம்பரத்தை அவ்வளவு சாதாரணமா எடுத்துக்க முடியாதுங்க. எந்த அளவுக்கு விளம்பரம் செய்யுறோமோ அந்த அளவுக்கு அதன் பலன் கிடைக்கும் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை. ஒரு விளம்பரத்தின் மூலம் மட்டுமே ஒரு பொருளை மக்களிடம் வெற்றி பெற வைத்து விட முடியுமா என்றால் முடியும் என்பது தான் என் பதில். ஆனால் அந்த வெற்றியை தக்க வைக்கும் அளவுக்கு கொஞ்சமாச்சும் சரக்கு இருக்கனும். (தரம் போன்ற இன்ன பிற அயிட்டங்கள்). சரி என்னத்துக்கு நாம் எப்படி டெக்னிகலா பேசிக்கிட்டு, அதை எல்லாம் பேச நிறைய பெயர் இருக்காங்க. நாம நம்ம கதைக்கு வருவோம்.

டிவியில் விளம்பரங்களுக்கு நடுவில் கிரிக்கெட் பாக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே நமக்கு விளம்பர படத்தின் மேல் ஒரு காதல் உண்டு. ஒரு ஒவரில் முதல் பந்தையும் கடைசி பந்தையும் முழுங்கி முழுங்கி விளம்பரங்கள் போட்டு நமக்கு அப்படி ஒரு காதலை வர வைத்த தூர்தர்சனுக்கு தான் நன்றி சொல்லனும். ஒரு ஒவருக்கும் அடுத்த ஒவருக்கும் இடையில் 4, 5 விளம்பரங்கள் போட்டு விடுவார்கள். அப்படி பார்த்து பார்த்து ஆரம்பிச்ச நம்ம காதல் ஒரு நிமிடத்திற்க்குள் சொல்ல வேண்டிய விசயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லும் இந்த கண்கட்டி வித்தை பார்த்து கிறங்கி காதல் கன்னாபின்னானு பெருகி போச்சு. அப்படி நான் ரசிச்ச சில விளம்பரங்களை பத்தி பேச தான் இந்த பதிவு.

இந்திய விளம்பரங்களை பற்றி மட்டும் இந்த பதிவுல பாப்போம்.

சமீபகாலமாக வரும் ஹைடெக் ஆன விளம்பரங்கள் நாம் இப்ப அடிக்கடி பாத்து கொண்டு இருப்பது தான். அதனால் சில காலங்களுக்கு முன்பு வந்த சில விளம்பரத்தை பார்ப்போம், அதுவும் போக இப்பொழுது வர விளம்பரங்களில் பல ஆண்களையும், பெண்களையும் செம கவர்ச்சி காட்டி எடுக்கப்படுது, அந்த நேரத்தில் வாய் பிளந்து பாத்தாலும்,சில காலம் கழித்து இந்த விளம்பரங்கள் எல்லாம் மனதில் இருக்குமா என்றால் சந்தேகம் தான்.

* விளம்பரத்திலே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஊருல இருக்குற அம்புட்டு பேர் வாயில் அந்த பெயர புரள வைத்த புள்ளிராஜா விளம்பரம் உண்மையிலே ஒரு சூப்பர் விளம்பரம் தாங்க... புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமானு அந்த ஒத்த வார்த்தை வச்சு பட்டைய கிளப்பிட்டாங்க நம்ம ஆளுங்க. பல விமர்சனத்துக்கு உள்ளான விளம்பரம் அது. இருந்த போதிலும் அனைவரையும் சென்ற அடைந்த விளம்பரத்தில் இதுவும் ஒன்னு.

* நீங்க எந்த காலேஜ், காலேஜ் ஜா நானா... மம்மி.. அப்படினு ஒரு விளம்பரம், மைசூர் சாண்டல் சோப்பா.. சரியா தெரியல... அது ஒரு அழகான கவிதை. இப்ப அதே விளம்பரம் மாதவனை வச்சு வருது போல, ரீமிக்ஸ் எடுப்படல.

* சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய், என்ன வெண்மையோ ஆஹா என்ன வெண்மையோ இருந்த ரீகல உஜாலா விளம்பரம் ஒரேடியா கவுத்துடுச்சு. நாங்க உஜாலாவுக்கு மாறிட்டோம், அப்ப நீங்கனு, கேட்டு கொக்கு ஏன் வெள்ளையா இருக்கு, அது உஜாலாவுக்கு மாறிடுச்சுனு நம்மிடைய காமெடி பண்ணும் அளவுக்கு உஜாலா விளம்பரம் இருந்துச்சு.

* காபினா நரசுஸ் காபி தான் பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு

* சூ.. சூ... அந்த சுகர் பாய்ய வர சொல்லு (ப்ரூ)

மேல சொன்ன விளம்பரங்கள் எல்லாம் எந்த ஒரு பெரிய விசுவல் கான்சாப்ட்டும் இல்லாம வெறும் வார்த்தைகளை வைத்து ஹிட்டான விளம்பரங்கள். இது போல ஏகப்பட்ட விளம்பரங்கள் இருக்கு. சில சமயம் மொக்கையான சில வார்த்தைகளை வச்சுக்குட ஹிட் குடுத்து இருக்காங்க. உ.தா. குளிக்காத (ஏதோ ஒரு சோப் விளம்பரம்), இது எல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்.

அந்த விளம்பரங்கள் எல்லாம் ஒரு வகைனா, விஸ்வல் மூலமும் அழகான ஒரு கவிதையை நம் முன் கொண்டு வருவது இன்னொரு வகை. எனக்கு பிடித்தவையும் கூட. இந்த வகையில் ஏகப்பட்ட அழகான விளம்பரங்கள் இருக்கு. பஜாஜ், ஹட்ச், ஏர்டெல், நெஸ்கபே, டைட்டன், கேட்பரீஸ், பெச்சி, கோக் போன்ற நிறுவனங்களில் விளம்பரங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதுமையாக வரும். ரூம் போட்டு யோசிச்சா கூட இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா என்று திணறும் அளவுக்கு இருக்கும் அவர்களின் சில விளம்பரம். ஒவ்வொரு நிறுவனத்தின் விளம்பரங்களை வைத்தே ஒவ்வொரு பதிவு போடலாம்.

பதிவின் நீளத்தை கருதி அவற்றை விரிவாக பேசாமல் எனக்கு மிகவும் பிடித்த சில விளம்பரங்கள் கீழே இணைத்து உள்ளேன். கண்டு மகிழுங்கள். உங்கள் கருத்தையும் உங்களை கவர்ந்த சில விளம்பரங்கள் பற்றியும் பின்னூட்டங்களின் கூறுங்கள். கடைசியாக உள்ள வீடியோ காட்சியை காணத் தவறாதீர்கள்.
Bajaj Avenger


என்னிடம்(தம்பி) உள்ள வண்டி. வண்டி வாங்க முடிவு செய்த பிறகு தான் இந்த விளம்பரம் பார்த்தேன். இசை, வார்த்தைகள், காட்சி படம் ஆக்கிய விதம் என அனைத்தும் என்னை கவர்ந்தது. அதிலும் ஐ பார்கேவ் மை பார்பர் என்ற வரியும் காட்சியும் சூப்பர். நமக்கும் அது போல ஒரு வெட்டு உண்டு, கழுத்தில்.

Airtel


சொல்ல ஒன்றும் இல்லை. இது அனுபவிக்க வேண்டிய விளம்பரம். Express Yourself என்ற வார்த்தைகளை அழகாக புரிய வைத்த விளம்பரம். நானும் ஏர்டெல் கஸ்டமர் தான். :)

Hamara Bajaj


நமது கலாசாரத்தை அழகாக காட்டிய விளம்பரம் இது. ஆல் டைம் பேவரைட் ல ஒன்னு.

Cadburys DiaryMilk


இந்த விளம்பரத்தை பத்தி என்ன சொல்லுறது, மெலிதாக பூக்கும் புன்சிரிப்பை தவிர்த்து. கையில் மருதாணி, பஸ்யில் போகும் காதலிக்கு சாக்லெட் கொடுக்கும் விளம்பரங்கள் அந்த வகையை சார்ந்தது தான்.

Bajaj Caliber


வண்டியின் செயல்பாடு அந்த அளவுக்கு இல்லாட்டியும், இந்த விளம்பரம் சிம்பிளி சூப்பர். காட்சி அந்த அளவுக்கு தெளிவாக இல்லை. இருந்தாலும் பார்க்கலாம். இதே போல ஒரு நாள் நம்ம தம்பி(கதிர்) வண்டி எடுத்துட்டு போய் பாவனாவுக்கு நாய் குட்டி பரிசாக கொடுக்காமல் இருந்தா சரி தான்.

Respect your National Anthem, Respect your Nation


இந்த விளம்பரத்தை பார்த்து சத்தியமா எழுந்து நின்று விட்டேன். நீங்கள் எப்படி?

Monday, October 22, 2007

ஏன் இப்படி?அவர்களா அப்படி?
இவர்களா இப்படி?
என்ற கேள்விகளில்
மூழ்கி "நான் எப்படி"
என திகைத்தேன்

அவர்கள் அப்படி தான்!
இவர்கள் இப்படி தான்!
என்ற பதிலில்
கரை ஏறினால்
"நான் எப்படியோ "
இருக்கலாம்
என தெளிந்தேன்.

நன்றி : ஏன் இப்படித்துவம்

Wednesday, October 10, 2007

கண்ணுக்கு விருந்து!

 
Posted by Picasa


 
Posted by Picasa


 


 


 
Posted by Picasa


 
Posted by Picasa


 
Posted by Picasa


 
Posted by Picasa


 
Posted by Picasa


 
Posted by Picasa


 
Posted by Picasa


 
Posted by Picasa


 
Posted by Picasa