Monday, July 26, 2010

தாயாருடன் திருநாகை அழகியார்

சொந்த ஊரை விட்டு பிரிந்து இருப்பதன் மூலம் சொந்தங்கள், நட்பு, உணவை மட்டும் இழப்பது இல்லை. அவ்வூரில் நடைபெறும் மதம் சார்ந்த நிகழ்வுகள், விழாக்கள் போன்ற பல அழகியல் விசயங்களையும் தவற விடுகிறோம். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களாலும், புகழ் பெற்ற மாதா கோவில்கள் மற்றும் தர்காகளால் சுழப்பட்ட ஊர் நாகப்பட்டினம்(நாகை). இதன் காரணமாக வருடத்தின் அனைத்து மாதங்களிலும் எங்காவது ஒரு விழா தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். மதங்கள் குறித்தும், அதில் செய்யப்படும் சடங்குகள், நிகழ்வுகள் போன்றவற்றின் மீது மாறுபட்ட கருத்துக்கள் பல சமயம் இருந்தாலும் அந்த விழாக்களில் இருக்கும் அழகு, தொண்மை, பழமை போன்ற விசயங்கள் என்னை எப்பொழுதும் கவர தவறியது இல்லை.

கடந்த முறை ஊருக்கு சென்று இருந்த போது காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலட்சி, நாகை நீலாயதாட்சி எனவும் சக்தி பீடங்களில் ஒன்றுமான நாகை அருள்மிகு காயாரோகனேஸ்வர உடனுறை ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் (24.06.2010) நடைப்பெற்றது. உற்ற தோழன் திருமணத்தின் காரணமாக அதில் கலந்துக் கொள்ள முடியவில்லை. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று மாலை நாகையில் இருந்து நாகூருக்கு 32 அடி விஸ்வரூப விநாயகரின் ஊர்வலம் மிக விமர்சையாக நடைப்பெறும். மேலும் இக்கோவிலில் 18 சித்தர்களின் ஒருவரான அழுகுணி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் ஆகும். இக்கோவிலில் உள்ள கால பைரவர், தலை திரும்பி இருக்கும் நந்தி என பல விசேஷங்களுக்கு உரியதாகும். இக்கோவிலை பற்றி பின்னொரு நாள் விரிவாக எழுத முயல்கிறேன்.

அதே நேரத்தில் நாகை ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் கோவிலில் வருடத்துக்கு ஒரு முறை நடைப்பெறும் வசந்த உற்சவமும் நடைப்பெற்று கொண்டு இருந்தது. இவ்விழாவினை முன்னிட்டு ஸ்ரீ செளந்தர்யவல்லித் தாயார் திருக்கோவிலின் உள்பிரகாரங்கள் வழியாக உலா வருவார்கள். படித்தாண்ட பத்தினி என்னும் சொல்லுக்கு ஏற்று கோவிலை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்பது ஐதீகம் என்று எண்ணுகிறேன். இவ்விழாவை முன்னிட்டு திருக்கோவிலின் பின்புற வாயில் திறக்கப்படும். அவ்வழியாகவும் தாயார் உலா வரும் போது தரிசிக்கலாம். அவ்வாயிலுக்கு அருகில் தாயார்க்கு விசேஷ ஆராதனைகளும், பூஜைகள் தினமும் நடைப்பெறும். ஊஞ்சல் வைபோகம் உள்ளிட்ட பல நிகழ்வுகளும் உண்டு. இவ்விழாவின் 10ம் நாள் அன்று திருத்தேர் கோவிலின் உள்ளேயே வடம் பிடிக்கப்படும். நிறைவு விழாவாக தாயாருக்கு திருகோவில் உள்ளே அமைந்து இருக்கும் திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைப்பெற்றது. முதல் முறையாக இத்தடவை தாயாருடன் திருநாகை அழகியார் என போற்றப்படும் எம்பெருமான் ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாளும் உடன் எழுந்து அருள் பாவித்தார்.

அப்படங்கள் உங்கள் பார்வைக்கு. கடைசி மூன்று படங்கள் நண்பன் கே.பி. எடுத்தது. தாமதமாக சென்ற காரணத்தினால் சலனப்படம் எடுக்க முடியவில்லை.

ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் பற்றிய என்னுடைய பிற பதிவுகள்

திருநாகை அழகியார் - சிறு குறிப்பு
மட்டையடி உற்சவம்
திருக்கோவில் படங்கள்

Friday, July 23, 2010

மாயாவி முரளி

இலங்கையின் அணியின் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் உலகின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர். சில தினங்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தும் இருந்தார். 800 டெஸ்ட் விக்கெட்கள் என்னும் இலக்கை அடைய இன்னும் 8 விக்கெட்கள் இருந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் விடை பெறுவதாக அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த ஒரு போட்டியில் அவர் 8 விக்கெட் வீழ்த்தி சரித்திர சாதனைய நிகழ்த்துவாரா என்ற ஐயம் அனைவருக்குமே இருந்தது. அனைவரின் ஐயத்தையும் தவிடு போடி ஆக்கி இந்திய அணிக்கு ஏதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸ்ல் 5 விக்கெட்டும் இரண்டாம் இன்னிங்க்ஸ் 3 விக்கெட்டும் விழ்த்து 800 டெஸ்ட் விக்கெட்கள் என்ற சாதனையை அவர் புரிந்து உள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெறும் நாளும் தன் வாழ்நாள் சாதனையை நிகழ்த்திய நாளும் ஒன்றாக அமைந்தது சாலச் சிறப்பு. javascript:void(0)

1992 ம் ஆண்டு ஆஸ்ஸி எதிராக தன் கிரிக்கெட் வாழ்வை துவங்கியவர் கிட்டதட்ட 18 வருடங்களாக தன் மந்திர சுழற் பந்து வீச்சால் கிரிக்கெட் ரசிகர்களை ஆட்டி படைத்தார் என்றால் மிகையாகாது. அதிலும் கடைசி 12 வருடங்கள் அவர் கிரிக்கெட் வாழ்வின் உச்சம். விக்கெட் அறுவடை அருமையாக இருந்த காலம் அது. இலங்கை கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட் வரலாற்று பக்கங்களில் அவரின் பெயரை பதிய காலம் அது. டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் அல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் மிக அதிக விக்கெட்களை வீழ்த்தியவரும் முரளியே.

மற்ற சுழற் பந்து வீச்சாளர்களை விட இவரின் பந்து வீசும் முறை சிறிது வித்தியாசமாக இருக்கும். இந்த முறையாகவே இவர் மிக கடுமையான விமர்சனங்களை சந்திதவர். பந்தை எறிகிறார் என்று பிரச்சனை எழுப்பட்டு பின் ஐ.சி.சி யால் இவர் பந்து வீசும் முறையில் எந்த தவறும் இல்லை என்று விடுவிக்கப்பட்டார். இருந்தும் ஆஸ்ஸி வீரர்கள், அம்பயர்கள், ரசிகர்கள் முதற்கொண்டு அந்நாட்டின் பிரதமர் கூட இவருடைய பந்து வீச்சை கடுமையாக சாடியே வந்தனர். இதற்கு இனவெறியே அடிப்படையே காரணம் என்ற ஒரு பேச்சும் உண்டு. அந்நாட்டில் பயணம் மேற்கொண்ட போது சில அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறியது. இதனால் முரளி ஆஸ்திரல்யா பயணம் மேற்கொள்ள மாட்டேன் என்று அங்கு விளையாடுவதை தவிர்த்து விட்டார்.

இது போன்ற விமர்சனங்கள் எழுந்த போது எல்லாம் பேச்சின் மூலம் பதில் கொடுப்பதை தவிர்த்து தன் மாய பந்து வீச்சின் மூலமே பதில் சொல்லியவர் முரளி. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் எல்லா அணிகளுக்கு ஏதிராகவும் 50 விக்கெட்களுக்கு மேல் எடுத்தவர் முரளி மட்டுமே. முரளி அதிகமாக சிறிய அணிகளான பங்காளதேஷ், ஜிம்பாவே ஆகிய அணிகளுக்கு ஏதிராக தான் அதிக விக்கெட் எடுத்து உள்ளார், அதனால் வார்னே தான் சிறந்த பந்து வீச்சாளர் என்று கூறுபவர்களும் உண்டு. ஆனால் அந்த இரு அணிகளுக்கு ஏதிரான எடுத்த விக்கெட்களை தவிர்த்து பார்த்தாலும் முரளி 624 விக்கெட்கள் எடுத்து உள்ளார். சராசரி - 25.33. இது வார்னே வின் மொத்த சராசரி விட குறைவு. இருந்தும் டெஸ்ட் கிரிக்கெட் சுழற்பந்து உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களான கும்ளே, வார்னே, முரளி இருந்த காலமே பொற்காலம் எனலாம். இவர்கள் மூவருமே உலகின் அதிக டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்கள் எடுத்தவர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார்கள்.

முரளி பல நாடுகளுக்கும் ஏதிராக விக்கெட் அறுவடை செய்து இருந்தாலும் ஆஸ்திரேல்யா மற்றும் இந்தியாவிற்கு ஏதிராக சிறிது தடுமாறி உள்ளார் என்பதும் உண்மையே. இந்த அணிகளுக்கு ஏதிரான சராசரி முறையே 36.07 & 32.32. இந்த இரு அணிகளுக்கு ஏதிராகவும் தென் ஆப்பிரிக்காவிற்க்கு ஏதிராகவும் அந்நாட்டிலே டெஸ்ட் தொடர்களை வென்றது இல்லை என்பது முரளி கிரிக்கெட் மைல்கல்லில் அவருக்கு இருக்கும் கரும்புள்ளிகள் என அவரே தெரிவித்து உள்ளார்.

இலங்கை உலக கோப்பை வெல்ல இவரும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. இவர் பந்து வீசும் போது இவரின் விழிகள் போகும் போக்கை பார்க்கவே பல ரசிகர் பட்டாளம் உண்டு. அம்பயரிடம் அப்பீல் பண்ணும் முறையும் பலரை கவர்ந்த ஒன்று தான். சிறந்த பவுலர் மட்டும் அல்லாது இலங்கை அணியின் மிக சிறந்த பீல்டர்களில் இவரும் ஒருவர். தன்னால் முடிந்த அனைத்ததையும் அணிக்காக கொடுக்க என்றுமே தவறியது இல்லை முரளி. சில சமயங்களில் மட்டைவீச்சில் இவர் அடித்த சிக்ஸ்ர்கள் அதற்கு உதாரணம்.

இந்தியாவிற்கு ஏதிரான போட்டி ஆனாலும் சரி பிற நாடுகளுக்கு எதிரான போட்டியானாலும் சரி முரளியின் பந்து வீச்சிற்காக பார்த்த போட்டிகள் அனேகம். பல சமயங்களில் நம் எதிர்பார்ப்பை தன் பந்த வீச்சின் மூலம் பூர்த்தியே செய்து வந்து உள்ளார் முரளி. இனி இவரை டெஸ்ட் போட்டிகளில் பார்க்க முடியாது என்பது வருத்தம் தான் என்றாலும் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே விடை பெறுவது ஒரு நல்ல வழிகாட்டுதலே. இருந்தும் இன்னும் சில காலம் ஒரு நாள் போட்டிகளிலும் நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாட உள்ளார் என்பது மகிழ்ச்சி அளிக்கும் விசயமே.

கபில்தேவ் க்கு பிறகு நான் மிகவும் ரசித்த பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். கபில் 432 விக்கெட் எடுத்த போது எப்படி மகிழ்ந்தேனோ அதே அளவு மகிழ்ச்சி அவர் 800 விக்கெட் எடுத்த போதும் ஏற்பட்டது. அதற்கு அவர் ஒரு தமிழர் என்பதை விடவு நம் நாட்டின் மருமகன் என்பதை விடவும் மிக சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்ற காரணமே!

Murali - Its always pleasure to watch you and you never disappointed us. Thanks for your brilliant performance and wonderful show in World Cricket. We Salute You. HATS UP ! We Miss you.
சாதனை துளிகள் : நன்றி - விக்கிபீடியா

Muttiah Muralitharan holds a number of world records, and several firsts:

* The most Test wickets (800 wickets).
* The most One-Day International wickets (515 wickets as of 22 July 2010).
* The highest number of international wickets in Tests, ODIs and T20s combined (1320 wickets as of 22 July 2010).
* The most 5-wicket hauls in an innings at Test level (67).
* The most 10-wicket hauls in a match at Test level (22). He is the only player to take 10 wickets/match against every Test playing nation.
* Fastest to 350,[98] 400,[99] 450,[100] 500,[101] 550,[102] 600,[103] 650,[104] 700,[105] 750[106] and 800 Test wickets, in terms of matches played (indeed the only bowler to exceed 708 wickets).
* Only player to take 10 wickets in a Test in four consecutive matches. He has achieved this feat twice.
* Only player to take 50 or more wickets against every Test playing nation.
* Muralitharan and Jim Laker (England), are the only bowlers to have taken 9 wickets in a Test innings twice.
* 7 wickets in an innings against the most countries (5).
* Most Test wickets taken bowled (157),[110] stumped (41)[111] and caught & bowled (31).[112] Bowled by Muralitharan (b Muralitharan) is the most common dismissal in Test cricket (excluding run out).
* Most successful bowler/fielder (non-wicket keeper) combination – c. Mahela Jayawardene b. Muttiah Muralitharan (67).
* Most Man of the Series awards in Test cricket (11).
* One of only six bowlers who have dismissed all the eleven batsmen in a Test match. Jim Laker, Srinivasaraghavan Venkataraghavan, Geoff Dymock, Abdul Qadir and Waqar Younis are the others.
* Most Test wickets in a single ground. Muralitharan is the only bowler to capture 100-plus Test wickets at three venues, the Sinhalese Sports Club Ground in Colombo, the Asgiriya Stadium in Kandy and the Galle International Stadium in Galle.
* The only bowler to take 75 or more wickets in a calendar year on three occasions, achieving it in 2000, 2001 and 2006.
* Most ducks (dismissals for zero) ever in international cricket (Tests+ODI's+Twenty20): 59 ducks total.

Sunday, July 18, 2010

இந்திய ரூபாய் குறியீடு & இந்திய உலாவி

கடந்த வாரம் இந்திய அரசால் நமது ரூபாய் க்கு என்று புதிய குறியீட்டை ( ` ) அறிவித்து இருந்தார்கள். இன்னும் சில மாதங்களில் அந்த குறியீடு நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த குறியீட்டை வடிவமைத்தது ஒரு தமிழ் இளைஞர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த குறியீடு இந்தி எழுத்து போல் உள்ளது, கம்யூனிச சின்னம் போல் உள்ளது, ஆங்கில ஆர் எழுத்து போல் உள்ளது என பல குற்றசாட்டுகள் கிளம்பினாலும் எப்படியும் அந்த குறியீட்டை நாம் உபயோகப்படுத்தி தான் ஆகனும்.


தற்போது அந்த குறியீட்டை எப்படி பயன்படுத்துவது? தற்பொழது அதை நம் கீ-போர்ட் மூலம் பயன்படுத்த முடியாது. அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். அந்த குறையை போக்கும் வகையில் மங்களூரை சேர்ந்த Foradian Technologies என்ற நிறுவனம் Font மூலமாக அதை பயன்படுத்த ஏற்பாடு செய்து உள்ளார்கள். அதற்கு செய்ய வேண்டியது எல்லாம் - இந்த தளத்தில் சென்று Font யை தரையிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். பின் Control Panel சென்று Fonts யில் அதை Install செய்யவும்.

இந்த குறியீட்டை உபயோகப்படுத்த Word ல் சென்று Rupee Font யை தேர்ந்து எடுத்து TAB மேல் இருக்கும் கீ யை ( ` or ~ Key) அழுத்தினால் இந்த ( ` ) குறீயிடு நமக்கு கிடைக்கும்.

இந்த குறியீடு யூனிகோடு ல் சேர்க்கும் வரைக்கும் இதை பரவலாக பயன் படுத்த முடியாது என்பது தான் தற்போதைக்கு இதில் இருக்கும் குறை.


*******


சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட எபிக் பவுரசர் சில விசயங்களில் பட்டையை கிளப்புகிறது. நெருப்பு நரியின் பயன்பாடுகளை இந்தியப்படுத்தி உள்ளனர்.

இதில் கவர கூடிய ஒரு சிறப்பு அம்சமாக பிரைவேட் ஃபரவ்சிங் இருக்கிறது. அதை ஆக்டிவ் செய்தால் எந்த ஒரு தகவலையும் சேமித்து வைத்துக் கொள்ளாது. எனக்கு பிடித்த அம்சங்கள் இந்த பவரசரில் இருந்தப்படியே பல செய்தி நிறுவனங்களில் தலைப்பு செய்திகளை படித்துக் கொள்ளலாம். அதே போல் இந்திய மொழிகளில் சுலபமாக தட்டச்சு செய்யும் வசதியும் அதை அப்படியே காப்பி செய்து கொள்ளவும் முடிகிறது. இதில் இருக்கும் ஸ்கீன்ஸ் படு கலக்கல். மனிதர்கள், விலங்குங்கள், கலாசாரம், இசை என பல விதமான தலைப்புகளில் பல தீம்ஸ் கொடுத்து உள்ளார்கள். தீவிர சினிமா ரசிகர்களுக்கு சினிமா சம்பந்தப்பட்ட தீம்ஸ் ம் அரசியல் தொண்டர்களையும் கவரும் வண்ணம் அவர்கள் சார்ந்த கட்சிகளை பற்றிய தீம்ஸ் ம் உள்ளது. நம் தமிழ்நாட்டை பற்றியும் பல விதமான தீம்ஸ் கள் உள்ளனர். இந்த தீம்ஸ் களில் விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இளையராஜா போன்றவர்கள் விடுபட்ட போனது சற்றே நெருடல் எனக்கு.இன்னும் பல பல ஆப்ஷன்ங்கள் உள்ளனர். ஒவ்வொன்றையும் முயற்சி பாருங்கள். நம்ம தீம் வழக்கம் போல் புலி தான் :)

இந்த உலாவியை தரையிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.

பழகி பாருங்க, பிடிச்சா வச்சுங்கோங்க, இல்லனா தூக்கிடுங்க :)

Wednesday, July 14, 2010

ICC யின் அரெஸ்ட் வாரண்ட்

ICC (International Criminal Court) சூடான் அதிபர் அல் பஷீர் க்கு ஏதிரான இரண்டாவது அரெஸ்ட் வாரண்ட் டை பிறப்பித்து உள்ளது. (12.07.2010) இந்த முறை டார்பூரில் நடைப்பெற்ற இனப் படுகொலைக்கு காரணியாக அமைந்தால் இவ்வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 


Pre-Trial Chamber I of the International Criminal Court (ICC) issued a second warrant of arrest against the President of Sudan, Omar Hassan Ahmad Al Bashir, considering that there are reasonable grounds to believe him responsible for three counts of genocide committed against the Fur, Masalit and Zaghawa ethnic groups, that include: genocide by killing, genocide by causing serious bodily or mental harm and genocide by deliberately inflicting on each target group conditions of life calculated to bring about the group's physical destruction.

இந்த வாரண்ட் முதலில் பிறப்பிக்கப்பட்ட வாரண்ட் க்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. அந்த வாரண்ட் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் அரெஸ்ட் வாரண்ட் டை குறித்த என் பதிவு இங்கு. கடந்த வருடம் மார்ச் மாதம் அந்த வாரண்ட் பிறபிக்கப்பட்ட போது இனப்படுகொலைக்கு போதிய ஆதாரம் இல்லை என தெரிவிக்கப்பட்ட இருந்தது. அதை எதிர்த்து கொண்டு வரப்பட்ட மேல் முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இப்பொழுது அந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டு இவ்வாரண்ட் டை பிறபித்து உள்ளது. 

இந்த இனப் படுகொலையில் இது வரை 3 லட்சம் மக்கள் உயிர் இழந்து உள்ளனர், 2.5 மில்லியன் மக்கள் உள்நாட்டிலே அகதி ஆகி உள்ளனர் என ஐ.நா. தெரிவிக்கிறது. வெறும் 10,000 நபர்கள் மட்டுமே இறந்தாக சூடான் அரசு தெரிவித்து வருகிறது. இந்த உத்தரவை உள் அரசியல் காரணங்கள் கொண்டது என சூடான் அரசு மறுத்து உள்ளது. மேலும் இம்முடிவை குறிதுது தங்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை, தாங்கள் சூடான் நாட்டின் வளர்ச்சியில் கவனம் கொள்வோம் எனவும் கூறி உள்ளனர்.  ஆனால் இது டார்பூர் மக்களுக்கும் மனித தன்மைக்கும் கிடைத்த வெற்றி என JEM Rebel அமைப்பு தெரிவித்து உள்ளது. மேலும் டார்பூர் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறி உள்ளது. 

இந்த அறிவிப்பை வழக்கம் போல் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளீட்ட நாடுகள் வரவேற்று உள்ளனர். சூடானின் நட்பு நாடுகளான சில அரபு நாடுகள் மற்றும் சில ஆப்பரிக்க நாடுகள் எதிர்த்து உள்ளனர். சீனா மற்றும் இந்தியா எந்த ஒரு கருத்தும் கூறாது என்றே எண்ணுகிறேன், எண்ணெய் காரணங்களுக்காக. சூடான் மக்கள் இது வரை எந்த ஒரு பெரிய எதிர்ப்பையோ ஆதரவையோ பதியவில்லை. டார்பூர் மக்கள் பலர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனாலும் இதனால் எந்த ஒரு பெரிய மாற்றத்த்தை தாங்கள் தற்சமயம் அடைய போது இல்லை என்ற அளவிலே உள்ளனர்.

இந்த வாரண்ட் டின் மூலம் சூடான் அதிபருக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது என்பது நிதர்சனம். போன வருடம் பிறப்பித்த அரெஸ்ட் வாரண்ட் க்கு பிறகு தன்னுடைய ஆளுமை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் 24 வருடங்களுக்கு பிறகு பொது தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற்றார் அல் பஷீர். அந்த தேர்தலில் பல முக்கிய எதிர் கட்சிகள் கலந்துக் கொள்ளவில்லை என்பதும் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வில்லை என பல நாடுகள் கருத்து தெரிவித்ததும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே அல் பஷீர் சூடானின் நட்பு நாடுகளுக்கு மட்டுமே சென்று வர முடிந்தது. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு வந்தால் இண்டர்போல் போலீஸ் கைது செய்யக் கூடும் என்ற பரவிய வதந்தியை அடுத்து தென் ஆப்பிக்கா செல்லாமல் தவிர்த்தார். விரைவில் உகாண்டாவில் நடைபெற இருக்கும் ஆப்பிரிக்க யூனியன் கூட்டத்திற்கு வந்தால் கைது செய்வோம் என உகாண்டா அரசு அறிவித்து உள்ளது. அதனால் தன் பிரநிதி யை தான் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் பஷீர். கத்தார் அரசு சூடான் அரசுடன் டார்பூர் பிரநிதிகள் கலந்துக் கொள்ளும் அமைதி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அதிலும் சில பல குழப்பங்கள், இன்னும் ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்படவில்லை. அண்டை நாடுகளான சாட் (Chad), லிபியா, எத்தோப்பியா, உகாண்டா போன்ற நாடுகளுடன் சூடானுக்கு நல்ல உறவு இல்லை. 

ஐ.நா. வும் அமெரிக்காவும் சூடான் அரசு இந்த அரெஸ்ட் வாரண்ட்டை கருத்தில் கொண்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சூடானை வலியுறுத்தி உள்ளது. ஐரோப்பிய யூனியனும் ICC ஆதரவாக தான் செயல்படும். அரபு லீக் மற்றும் ஆப்பரிக்க யூனியன்கள் தற்போது எதிர்த்து வந்தாலும் ஒரு கட்டத்தில் அவர்களும் பின்வாங்க கூடும். இதன் மூலம் அல் பஷீர் கண்டிப்பாக ஒரு நாள் விசாரணையை சந்தித்து தான் ஆக வேண்டும். ஆனால் அந்த நாள் அவர் பதவியில் இருக்கும் வரை வராது என்பதும் உண்மை. நீதி கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றாலும் தாமதிக்கப்பட்ட கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதி தான் என்பது என் கருத்து, ஆனால் மனதில் Better Late then Never என்ற வாசகமும் கடந்து செல்கின்றது. 

போர் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் இதே போன்ற ஒரு நிகழ்வு இலங்கை அதிபர் ராஜபக்சே வுக்கும் நாளை வரலாம். எந்த அளவுக்கு அவருக்கு வளர்ந்த (சக்தி வாய்ந்த) நாடுகளின் ஆதரவு இருக்கிறது என்பதை பொறுத்து அதற்கான காலம் நிர்ணயம் செய்யப்படும். அந்த நாளையும் எதிர் நோக்கி கொண்டு இருக்கிறேன்.