Friday, July 23, 2010

மாயாவி முரளி

இலங்கையின் அணியின் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் உலகின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர். சில தினங்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தும் இருந்தார். 800 டெஸ்ட் விக்கெட்கள் என்னும் இலக்கை அடைய இன்னும் 8 விக்கெட்கள் இருந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் விடை பெறுவதாக அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த ஒரு போட்டியில் அவர் 8 விக்கெட் வீழ்த்தி சரித்திர சாதனைய நிகழ்த்துவாரா என்ற ஐயம் அனைவருக்குமே இருந்தது. அனைவரின் ஐயத்தையும் தவிடு போடி ஆக்கி இந்திய அணிக்கு ஏதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸ்ல் 5 விக்கெட்டும் இரண்டாம் இன்னிங்க்ஸ் 3 விக்கெட்டும் விழ்த்து 800 டெஸ்ட் விக்கெட்கள் என்ற சாதனையை அவர் புரிந்து உள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெறும் நாளும் தன் வாழ்நாள் சாதனையை நிகழ்த்திய நாளும் ஒன்றாக அமைந்தது சாலச் சிறப்பு. javascript:void(0)

1992 ம் ஆண்டு ஆஸ்ஸி எதிராக தன் கிரிக்கெட் வாழ்வை துவங்கியவர் கிட்டதட்ட 18 வருடங்களாக தன் மந்திர சுழற் பந்து வீச்சால் கிரிக்கெட் ரசிகர்களை ஆட்டி படைத்தார் என்றால் மிகையாகாது. அதிலும் கடைசி 12 வருடங்கள் அவர் கிரிக்கெட் வாழ்வின் உச்சம். விக்கெட் அறுவடை அருமையாக இருந்த காலம் அது. இலங்கை கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட் வரலாற்று பக்கங்களில் அவரின் பெயரை பதிய காலம் அது. டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் அல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் மிக அதிக விக்கெட்களை வீழ்த்தியவரும் முரளியே.

மற்ற சுழற் பந்து வீச்சாளர்களை விட இவரின் பந்து வீசும் முறை சிறிது வித்தியாசமாக இருக்கும். இந்த முறையாகவே இவர் மிக கடுமையான விமர்சனங்களை சந்திதவர். பந்தை எறிகிறார் என்று பிரச்சனை எழுப்பட்டு பின் ஐ.சி.சி யால் இவர் பந்து வீசும் முறையில் எந்த தவறும் இல்லை என்று விடுவிக்கப்பட்டார். இருந்தும் ஆஸ்ஸி வீரர்கள், அம்பயர்கள், ரசிகர்கள் முதற்கொண்டு அந்நாட்டின் பிரதமர் கூட இவருடைய பந்து வீச்சை கடுமையாக சாடியே வந்தனர். இதற்கு இனவெறியே அடிப்படையே காரணம் என்ற ஒரு பேச்சும் உண்டு. அந்நாட்டில் பயணம் மேற்கொண்ட போது சில அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறியது. இதனால் முரளி ஆஸ்திரல்யா பயணம் மேற்கொள்ள மாட்டேன் என்று அங்கு விளையாடுவதை தவிர்த்து விட்டார்.

இது போன்ற விமர்சனங்கள் எழுந்த போது எல்லாம் பேச்சின் மூலம் பதில் கொடுப்பதை தவிர்த்து தன் மாய பந்து வீச்சின் மூலமே பதில் சொல்லியவர் முரளி. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் எல்லா அணிகளுக்கு ஏதிராகவும் 50 விக்கெட்களுக்கு மேல் எடுத்தவர் முரளி மட்டுமே. முரளி அதிகமாக சிறிய அணிகளான பங்காளதேஷ், ஜிம்பாவே ஆகிய அணிகளுக்கு ஏதிராக தான் அதிக விக்கெட் எடுத்து உள்ளார், அதனால் வார்னே தான் சிறந்த பந்து வீச்சாளர் என்று கூறுபவர்களும் உண்டு. ஆனால் அந்த இரு அணிகளுக்கு ஏதிரான எடுத்த விக்கெட்களை தவிர்த்து பார்த்தாலும் முரளி 624 விக்கெட்கள் எடுத்து உள்ளார். சராசரி - 25.33. இது வார்னே வின் மொத்த சராசரி விட குறைவு. இருந்தும் டெஸ்ட் கிரிக்கெட் சுழற்பந்து உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களான கும்ளே, வார்னே, முரளி இருந்த காலமே பொற்காலம் எனலாம். இவர்கள் மூவருமே உலகின் அதிக டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்கள் எடுத்தவர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார்கள்.

முரளி பல நாடுகளுக்கும் ஏதிராக விக்கெட் அறுவடை செய்து இருந்தாலும் ஆஸ்திரேல்யா மற்றும் இந்தியாவிற்கு ஏதிராக சிறிது தடுமாறி உள்ளார் என்பதும் உண்மையே. இந்த அணிகளுக்கு ஏதிரான சராசரி முறையே 36.07 & 32.32. இந்த இரு அணிகளுக்கு ஏதிராகவும் தென் ஆப்பிரிக்காவிற்க்கு ஏதிராகவும் அந்நாட்டிலே டெஸ்ட் தொடர்களை வென்றது இல்லை என்பது முரளி கிரிக்கெட் மைல்கல்லில் அவருக்கு இருக்கும் கரும்புள்ளிகள் என அவரே தெரிவித்து உள்ளார்.

இலங்கை உலக கோப்பை வெல்ல இவரும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. இவர் பந்து வீசும் போது இவரின் விழிகள் போகும் போக்கை பார்க்கவே பல ரசிகர் பட்டாளம் உண்டு. அம்பயரிடம் அப்பீல் பண்ணும் முறையும் பலரை கவர்ந்த ஒன்று தான். சிறந்த பவுலர் மட்டும் அல்லாது இலங்கை அணியின் மிக சிறந்த பீல்டர்களில் இவரும் ஒருவர். தன்னால் முடிந்த அனைத்ததையும் அணிக்காக கொடுக்க என்றுமே தவறியது இல்லை முரளி. சில சமயங்களில் மட்டைவீச்சில் இவர் அடித்த சிக்ஸ்ர்கள் அதற்கு உதாரணம்.

இந்தியாவிற்கு ஏதிரான போட்டி ஆனாலும் சரி பிற நாடுகளுக்கு எதிரான போட்டியானாலும் சரி முரளியின் பந்து வீச்சிற்காக பார்த்த போட்டிகள் அனேகம். பல சமயங்களில் நம் எதிர்பார்ப்பை தன் பந்த வீச்சின் மூலம் பூர்த்தியே செய்து வந்து உள்ளார் முரளி. இனி இவரை டெஸ்ட் போட்டிகளில் பார்க்க முடியாது என்பது வருத்தம் தான் என்றாலும் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே விடை பெறுவது ஒரு நல்ல வழிகாட்டுதலே. இருந்தும் இன்னும் சில காலம் ஒரு நாள் போட்டிகளிலும் நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாட உள்ளார் என்பது மகிழ்ச்சி அளிக்கும் விசயமே.

கபில்தேவ் க்கு பிறகு நான் மிகவும் ரசித்த பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். கபில் 432 விக்கெட் எடுத்த போது எப்படி மகிழ்ந்தேனோ அதே அளவு மகிழ்ச்சி அவர் 800 விக்கெட் எடுத்த போதும் ஏற்பட்டது. அதற்கு அவர் ஒரு தமிழர் என்பதை விடவு நம் நாட்டின் மருமகன் என்பதை விடவும் மிக சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்ற காரணமே!

Murali - Its always pleasure to watch you and you never disappointed us. Thanks for your brilliant performance and wonderful show in World Cricket. We Salute You. HATS UP ! We Miss you.
சாதனை துளிகள் : நன்றி - விக்கிபீடியா

Muttiah Muralitharan holds a number of world records, and several firsts:

* The most Test wickets (800 wickets).
* The most One-Day International wickets (515 wickets as of 22 July 2010).
* The highest number of international wickets in Tests, ODIs and T20s combined (1320 wickets as of 22 July 2010).
* The most 5-wicket hauls in an innings at Test level (67).
* The most 10-wicket hauls in a match at Test level (22). He is the only player to take 10 wickets/match against every Test playing nation.
* Fastest to 350,[98] 400,[99] 450,[100] 500,[101] 550,[102] 600,[103] 650,[104] 700,[105] 750[106] and 800 Test wickets, in terms of matches played (indeed the only bowler to exceed 708 wickets).
* Only player to take 10 wickets in a Test in four consecutive matches. He has achieved this feat twice.
* Only player to take 50 or more wickets against every Test playing nation.
* Muralitharan and Jim Laker (England), are the only bowlers to have taken 9 wickets in a Test innings twice.
* 7 wickets in an innings against the most countries (5).
* Most Test wickets taken bowled (157),[110] stumped (41)[111] and caught & bowled (31).[112] Bowled by Muralitharan (b Muralitharan) is the most common dismissal in Test cricket (excluding run out).
* Most successful bowler/fielder (non-wicket keeper) combination – c. Mahela Jayawardene b. Muttiah Muralitharan (67).
* Most Man of the Series awards in Test cricket (11).
* One of only six bowlers who have dismissed all the eleven batsmen in a Test match. Jim Laker, Srinivasaraghavan Venkataraghavan, Geoff Dymock, Abdul Qadir and Waqar Younis are the others.
* Most Test wickets in a single ground. Muralitharan is the only bowler to capture 100-plus Test wickets at three venues, the Sinhalese Sports Club Ground in Colombo, the Asgiriya Stadium in Kandy and the Galle International Stadium in Galle.
* The only bowler to take 75 or more wickets in a calendar year on three occasions, achieving it in 2000, 2001 and 2006.
* Most ducks (dismissals for zero) ever in international cricket (Tests+ODI's+Twenty20): 59 ducks total.

9 comments:

வித்யா said...

நல்ல தொகுப்பு.

SIVA said...

எனக்குத் தெரிந்த வரையில் களத்தில் மிக நாகரீகமாக நடந்துகொள்பவர்களில் இவரும் ஒருவர். சச்சின் மாதிரி..

வல்லிசிம்ஹன் said...

சிவா,வெகு நாட்கள் கழித்து உங்களைப் பார்க்கிறேன். கிரிக்கெட் பார்ப்பதில்லை கடந்த சில வருடங்களாக:)
ஆனால் முரளிதரன் பிடிக்கும். ஒரு திறமைசாலி.திறந்த முகம் கொண்டவர்.
நீங்கள் தொகுத்திருக்கும் அழகு பிரமிக்க வைக்கிறது.

manjoorraja said...

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் ஒரு அருமையான பதிவு. முரளிக்கு நல்லதொரு பிரிவுபச்சார பதிவு. வாழ்த்துகள் நண்பரே.

கோபிநாத் said...

கலக்கல் சகா...கடைசியில சொல்லியிருப்பது மிக நன்று ;)

நானும் முரளியின் ரசிகன் என்ற முறையில் அவருக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-))

இதை பார்த்துருக்கியா...இல்லைன்னா பாரு

http://www.tubetamil.com/view_video.php?viewkey=0b3ea745831dcabdbccd

நாகை சிவா said...

@ நன்றி வித்யா @ சிவா

@ வல்லி - ஆம், ரொம்ப நாள் தான் ஆச்சு.. ஆனால் உங்களை தொடர்ந்து கூகிள் ரீடரில் பார்த்தும் படித்தும் கொண்டு தான் இருக்கிறேன்.

@ மஞ்சூர் ராஜா - :)) நீங்கள் சொல்வது உண்மை தான்!

@ கோபி - சகா... நல்ல நிகழ்ச்சி அது. பகிர்ந்தமைக்கு நன்றி :)

அபி அப்பா said...

புலி சார்! ரொம்ப நாள் பின்னே அருமையான தொகுப்பு பதிவு. எனக்கு மிகவும் பிடித்தமான முரளியின் பிரிவுபசார பதிவு நல்லா இருக்கு.

pinkyrose said...

பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும் பதிவு.. எனக்கு க்ரிக்க்ட் ம்ம்ம் நோ இண்ட்ரஸ்ட்...
இருந்தாலும் கட்டுரை நன்றாக இருக்கு!

நாகை சிவா said...

@ தொல்ஸ் & ரோஸ் - நன்றிங்கோ!