Tuesday, May 29, 2007

தேறுமா?

எகிறி குதித்தேன்...

ஒடும் மேகங்களே....


எங்கே செல்லும் இந்த பாதை...


ஈரமான ரோஜாவே...

என்னோடு சேர்ந்து ஆடுங்கள்...

Tuesday, May 15, 2007

+2 ரிசல்ட் & கல்லூரி வாசல்!

+2 பொது தேர்வுகள் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் வழக்கம் போல் மிக அதிக அளவில் மாணவிகள் 84% தேர்ச்சியும், மாணவர்கள் 77% தேர்ச்சியும், ஆக மொத்தமாக 81% தேர்ச்சி பெற்று உள்ளார்கள். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தமிழை முதல் பாடமாக எடுத்து படித்து மாநில அளவில் முதல் மூன்று இடங்களை ஆறு நபர்கள் பிடித்து உள்ளனர். அதில் ரம்யா(1182), ரூபிகா(1180) முதல் இரண்டு இடங்களையும், ஜெயமோகன், நிவேதிதா, இளவரசன், கீர்த்தனா ஆகிய நால்வரும் 1179 எடுத்து மூன்றாம் இடத்தை பகிர்ந்து உள்ளார்கள். இவர்களின் உயர்கல்வி செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்பதும் குறிப்பட்டதக்கது.

மாணவிகள் சாதனை என்று புகழ்ச்சி உரைகள் எழுந்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில்,

"பெண்கள் எல்லாம் தங்க மெடல் ஜெயித்து வந்தாங்க, பசங்களை தான் எங்க அவங்க படிக்க விட்டாங்க என்ற பாடல் வரிகள் பசுமையாக நினைவில் எழுந்த போதிலும்".,

"மீண்டும் ஒருமுறை மாணவ சமுதாயம் பெண்களுக்கு தங்கள் இடத்தை விட்டுக் கொடுத்து நம் பெருந்தன்மையை நிலை நிறுத்தியதை கண்டு உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கி வழிந்த போதிலும்".,

"மதிப்பெண்களால் மதிக்கப்படுவதில்லை மதி என்பது என் மதிக்கு தோன்றிய போதிலும்".,

"சாதனை புரிந்த மாணவிகளே உங்கள் சாதனைக்கு ஒரு சலாம், மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்."

வாழ்த்து சொல்லியாச்சு, அடுத்து புத்தி சொல்லனும் இல்லையா!

மாணவ, மாணவி கண்மணிகளே,அடிச்சு பிடிச்சு, மனப்பாடம் பண்ணியோ, புரிந்து படிச்சோ நல்லா மார்க எடுத்து வீட்டிர்கள், அப்படியே நல்ல பிரிவு, நல்ல கல்லூரியாகவும் பார்த்து சேர்ந்து விடுங்கள். இதுவரை ஒரு சில, பல கட்டுப்பாடுகளுடன் இருந்த நீங்கள் பலவகையான கட்டுபாடுகள் களைய வெற்ற கட்டிங்காளையாக கல்லூரி வாசலுக்கு செல்கின்றீர்கள். உங்கள் வீட்டிலும் இது வரை இழுத்து பிடித்து இருந்த கடிவாளத்தை கொஞ்சம் தனித்து பிடிப்பார்கள், சிலர் விட்டும் விடுவார்கள். ஏது எப்படியாக இருந்தாலும் நீங்கள் நீங்களாகவே மாறும் காலம் இது.

கல்லூரியில் பல விதமான பாடங்களுடன் வாழ்க்கை பாடங்களையும் அதில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். மிஸ் பண்ணிடாதீங்க. தேவையில்லாத பல விசயங்களை நோக்கி மனம் இழுக்கும், போகலாம் ஆனா அதில் மாட்டி மிஸ் ஆயிடாதீங்க. கல்லூரி வாழ்வை கண்டிப்பாக ஒவ்வொரு நொடியும் அனுபவிங்கள், அதே சமயத்தில் எதிர்காலத்தையும் கொஞ்சம் மனதில் வைச்சுகோங்க. உலகம் ரொம்ப வேகமா போயிக்கிட்டு இருக்கு, உசாரா இருந்துக்கோங்க. வாய்ப்புகளை விட்டால் மறுபடியும் வாய்ப்பது கடினம் அம்புட்டு தான் சொல்ல முடியும். தெரிஞ்சுக்கோ, புரிஞ்சுக்கோ, பாத்து இருந்துக்கோ....

ENJOY EVERYTHING
OVER DO NOTHING

டிஸ்கி:

1, புத்தி சொல்லுறாராம், அப்படினு தோணும், தோணனும். இல்லாட்டி எங்கயோ தப்புனு அர்த்தம். நாங்க ஏதோ அடிச்சு பிடிச்சு வந்துட்டோம், இதுக்கே நுரை தள்ளிடுச்சு. அப்ப இன்னும் 5, 6 வருசம் கழித்து எப்படி இருக்கும் பாத்துக்கோங்க.

2, எப்படிப்பா எம்புட்டு மார்க் எடுத்து இருக்கீங்க, நினைச்சு பாத்தாலே தலைய சுத்துது. அதிலும் ஒரு திருச்சி பொண்ணு 1200 க்கு 1190 எடுத்து இருக்கு. எப்படிய்யா இது எல்லாம்... பங்கு, உனக்கு ஏதும் புலப்படுதா? நாம இதை எல்லாம் நினைச்சு பாத்தோமா?

Monday, May 14, 2007

ஏன் இந்த வயிற்றெரிச்சல்!

யப்பா, இங்கிலாந்துல டோனி பிளேர்னு ஒரு பிரதமர் தன் பதவியில் இருந்து ஒய்வு பெற போகிறேன் என்று அறிவித்து விட்டாராம். அதுக்கு அந்த நாட்டில் கூட இம்புட்டு கலவரம் இருக்காது, ஆனா நம்ம நாட்டுல என்னமா சவுண்ட் விடுறாங்கப்பா நம் மக்கள். டோனி பிளேயர் நமக்கு தரும் பாடங்கள்னு ஒருத்தர் வயிற்றெரிச்சல் பதிவு போடுறார். இன்னும் ஒருத்தர் அநியாயத்துக்கு பொங்கி பிளேர் நீ எல்லாம் அரசியவாதியானு ஒரு பதிவு போடுறார். என்னங்கப்பா ஆச்சு, ஏன் இந்த ஆர்பாட்டம். இது போல் நம் நாட்டில் நடக்கும் காலம் என்னாளோ அப்படிங்குற புலம்பல் எல்லாம் எதுக்கு என்பது தான் என் கேள்வியே?

அப்படியே நம் நாட்டில் ஒருத்தர் போறேன் என்று சொல்லி விட்டால் நாம் போக விட்டு விடுவோமா சொல்லுங்க.

அதுவும் அப்படியே போறார் என்றாலும் அவர் குடும்பத்தில் இருந்து தான் அவருக்கு மாற்று அல்லது துணைக்கு வர வேண்டும் என்ற உரிமையை வலுக்கட்டாயமாக தந்தவர்கள் நாம்.

இந்திரா இருக்கும் போது சஞ்சயை உள்ளே இழத்தோம். இந்திரா போன பிறகு இந்திய தேசத்தை ராஜீவ் தவிர வேற யாருலாம் காப்பாற்ற முடியாது என்று எடுத்து சொல்லி அவரை கொண்டு வந்தோம். அவரும் போன பிறகு வரவே மாட்டேன் என அடம் பிடித்த சோனியாவிடம் கெஞ்சி கதறி இத்தாலியின் புதல்வியே உன் புகுந்த வீடனான இந்தியாயின் ஒரே பாராம்பரிய கட்சியை உன்னை தவிர வேற யாராலும் காப்பாற்ற முடியாது, உன் சேவை அக்கட்சிக்கும், இந்நாட்டுக்கு தேவை அவரையும் இழுத்து பின் ராகுல், அவ்வப்போது பிரியங்காவை இழுக்க முயற்சி செய்து, இன்னும் சில நாட்கள் கழித்து பிரியாங்காவின் குழந்தையையும் கட்சிக்கு கொண்டு வந்து சிறுவர் அணி அமைக்க முயற்சி செய்தாலும் செய்வோம்.

இன்னொரு கட்சியை எடுத்தால் வாஜ்பாய், அத்வானியை விட்டால் கட்சியே இல்லை என்று கூறி இன்னும் அவர்களை பிடித்து வைத்துக் கொண்டு இருக்கிறது. இருக்கிற மூட்டு வலியை கூட கவனிக்க நேரம் இல்லாமல் ஒட்டு சேகரிக்க போய்க்கிட்டு இருக்கிறார் வாஜ்பாய். அவரு வந்தா தான் சில ஒட்டாவது போடுவோம் என்று கூறியவர்கள் நாம்.

அட அத அங்க விடுங்கப்பா, இங்குட்டு வருவோம், அ.தி.மு.க. விட்டு விடுவோம், அது ஒரு அரசியல் கட்சி என்ற கோட்பாட்டுக்கே பல சமயத்தில் வராத கட்சி அது, அது ஏதோ ஒரு தனியார் நிறுவனம் போல தான் நடந்துக் கொண்டு இருக்கு.

பா.ம.க வை எடுத்துக்கிட்டால் தன் குடும்பத்தார் யாரும் பதவிக்கு வர மாட்டார்கள் என்று கூறிய கொள்கை வேந்தன் அய்யா ராம்தாஸ் அவர்களை தொல்லை பண்ணி, பாட்டாளிகள் எல்லாம் கண்ணீர் விட்டு கதறி தேர்தலில் போட்டியிடா விட்டாலும் உங்கள் மகன் தான் மத்திய மந்திரி பதவியை ஏற்க வேண்டும், இல்லாவிட்டால் பாட்டாளிகள் வர்க்கம் உச்ச ஆணியில் ஏறவே முடியாது என்று சொல்லி அண்புமணியை பதவி ஏற்க வைத்து அவர் கொள்கைக்கே உல வைத்தோம்.

தி.மு.க. - இந்த கட்சி, டோனி ப்ளேர் எல்லாம் ஜுஜூப்பி என ஆக்க வைத்த கட்சி. எனக்கு தெரிந்த வரை 1977 கட்சி தலைவர் பதவி அப்பாலிக்கா, 1993 ம் ஆண்டே அரசியலுக்கு முழுக்கு போடுகிறேன் என கூறிய தியாக செம்மலின் வார்த்தைகளை கேட்டு நாம் எல்லாம் கண்ணீர் விட்டு கதறி அழுது அவரை சமாதனப்படுத்தினோம். 2001 ல இது தான் என் கடைசி தேர்தல் என்ற சொன்னவரை செய்றகுழு, பொது குழு எல்லாம் போட்டு கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும் கூறி 2006ல் தேர்தலிலும் நிற்க வைத்து அவரை முதல்வர் ஆக்கி அழகு பார்த்தோம். அது போல மாறன் என்ற ராஜதந்திர இடத்தை நிரப்ப அவரின் வாரிசால் மட்டுமே முடியும் என்று முடிவு எடுத்து வழுக்கட்டாயமாக தயாநிதி மாறனை அரசியலுக்கு இழுத்து மத்திய மந்திரி ஆக்கினோம். (ரத்த பாசமா, சொந்த பாசமா என்ற பந்தயத்தில் ரத்தம் தான் ஜெயித்தது வேற கதைங்கோ)

சரி அடுத்து கட்சியை திறமையான வாரிசிடம் ஒப்படைக்கலாம் என்று இருக்கும் போது கேவலம் ஒரு சர்வேயை காட்டி, நாமே வழியக்க போய் கொடுத்து அழகு பார்த்த மந்திரி பதவியை பிடுங்க வைத்து விட்டோம். அதை அவரின் மகளிர் வாரிசுக்கு கொடுத்து அழகு பார்க்க வேண்டும் என நேற்று என்னுடன் சாட்டிய ஒரு நல்லவன் கூறினான், அவன் கூறிய காரணம் நாம் என்றுமே ரத்த சொந்ததுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொன்னான், நல்ல விசயம் விரைவில் அதை செய்து அழகு பார்க்க வேண்டும்.

இதில் இருந்து என்ன தெரியுது, நம் தலைவர்களின் விரும்பம் இல்லாமல் தான் இது போன்ற முள் கீரிடங்களை சுமர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்களை அந்த கீரிடத்தை கழட்டவோ அல்லது கழுட்டிய கீரிடத்தை அவர்கள் குடும்பத்தை தவிர வேற யாருக்கும் போக விடாமல் தடுத்துக் கொண்டு, யாரரோ ஒரு டோனி பிளேர் செய்து புட்டார், அது போல் இங்கு நடக்குமா என்று நீலிக் கண்ணீர் வடிப்பது நியாயமாகுமா?

நம் நாட்டில் ஜோதி பாசு என்ற முன்னாள் முதல்வர் பதவி போதும் என்று போனாரே, அவரை உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ( கண்ணுக்கு தெரிந்து அவர் ஒருத்தர் தான் இருக்கார், அட அவரும் பிரதமர் பதவிக்காக விட்டாரா, சே அப்படி எல்லாம் இல்லப்பா, பதவிக்கு ஆசைப்படாதவர்கள் கம்யூனிஸ்ட்க்கள், என்ன வேணாம்னு சொல்லுறீயா, சரி விடு)

இப்ப கலாம் தனக்கு மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி பதவி வேண்டாம் என்று சொல்லுறார். விடுறோமா நாம், இல்ல இல்ல அவர் தான் மீண்டும் ஒரு முறை வர வேண்டும் என அரசியல்வாதிகள் தவிர அம்புட்டு ஜனம் சேர்ந்து கூக்குரல் எழுப்பிக்கிட்டு இருக்கோம். ஏன்னா அவரை விட்டா வேற ஒரு நல்லவர், வல்லவர் கிடைக்க மாட்டார்ல. அதனால் அவர ஒத்துக்க வைக்க பாப்போம், மசியலை என்றால் கலாம் குடும்பத்தில் இருந்து அவர் மாமனையோ, மச்சானையோ பிடிச்சு ஜனாதிபதி ஆக்கி நம் பற்றை நிருப்பிப்போம். என்ன நான் சொல்லுறது?

என்னய்யா பிரச்சனை, எங்கய்யா பிரச்சனை நம்மக்கிட்ட ஒருவருக்கு மாற்று நம்மாள கண்டுப்பிடிக்க முடியவே முடியாது. நாம் ஒரு கம்பெனியில் வேலை பாக்குறோம், நாம் வேற வேலைக்கு போய் விடுகிறோம், அதுக்காக அந்த கம்பெனி கண்ணீர் விட்டு கதறுகின்றதா, இல்ல உங்க வீட்டில் இருந்து வேற யாரையாவது இங்கு வேலைக்கு அமர்த்தி விட்டு நீங்க போங்கள் என்று சொல்கிறாதா? முதலில் போகாத, இம்புட்டு தரேன், அம்புட்டு தரேன் சொல்லும், மசிஞ்சா பாக்கும் அப்பாலிக்கா சரி தான் போடா னு அடுத்த ஆளை போட்டு அது பாட்டுக்கு வேலை யை பாத்துக்கிட்டு இருக்கும். அது போல நாம் என்று கண்ணீர் விட்டு கதறுவதை நிறுத்துகிறோமோ அன்று தான் உருப்புடுவோம்.

டிஸ்கி (கண்டிப்பா போடனுமாம்)

1, நான் இதுவரை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே ஒட்டு போட்ட தமிழன்(அதுவும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தான்)

2, இது ஏசி அறையில் இருந்து எழுதப்பட்டது இல்லை. (வூட்ல ஏசி இல்லப்பா)

3, சூடானில் வர்கார்ந்துக்கிட்டு "வெட்டி" நியாயம் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது இல்லை.

4, ப்ளயர் செய்தை எல்லாம் நம் நாட்டில் இருப்பவர்கள் எல்லாரும் செய்ய வேண்டும் என வயிற்றெரிச்சல் பிடித்த பதிவர்கள் எழுதிய பதிவை படித்தால் எழுதப்பட்ட நெஞ்சரிச்சல் பதிவு இது.

Thursday, May 10, 2007

சுட்டிப்பயலுக்கு பிறந்தநாள்!

ஒரு ஊரில் பிறந்து
ஒரு ஊரில்
வளர்ந்தவனே!

ஒரு ஊரில்
படித்து
ஒரு நாட்டில் வேலை பார்ப்பவனே!

நாளை பிறந்த நாள் காணும்
திருகோவிலூர் மைந்தனே!

கள்ளக்குறிச்சியின்
செல்ல புதல்வ்னே!

தலைவன் வழி வந்தவனே!
நாளைய சரித்திரத்தின் நாயகனே!

ப்ளாக்கர் மூலம்
கிடைத்த தோழனே!

சங்கத்ததின் சொத்தே!
எங்களின் முத்தே!

சங்கத்தின் அங்கமே!
எங்களின் சொந்தமே!

பழகவதற்கு இனியவனே!
பார்ப்பதற்கும் கனியவனே!

அமெரிக்காவில் மையம்
கொண்டு இருக்கும் சிங்கமே!

விரைவில் இந்தியா
வர இருக்கும் தங்கமே!

பெயரில் மட்டும்

நீ வெட்டி

ஆனால் என்றும்
எதிலும்
நீ சுட்டி!

இன்று போல
என்றும்
இல்லை இல்லை

இதை விட பல மடங்கு
மேலே உயர்வடைந்து
வாழ வாழ்த்துகிறேன்

கால் நூற்றாண்டை
கடக்கும் இந்த
பொன்னாளில்

நீ

பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்து ஆண்டு
பலகோடி நூறாண்டு
எல்லாம் வளமும்
பெற்று வளமுடன் வாழ
வாழ்த்தும் அன்பு தம்பி(கள்)

சிவா, ஜி, கப்பி, கதிர், தேவ், ஷாம், கோபி, தொல்ஸ் மற்றும் சங்கத்து சிங்கங்கள்.