Sunday, August 15, 2010

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்INDIA IS MY PRIDE

தாய் மண்ணை போலொரு பூமியில்லை பாரதம் எங்களின் சுவாசமே

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்2006 யில் போட்ட பதிவு... எந்த ஒரு மாற்றம் இல்லாமல் இந்த வருடமும் (மாற்ற இதுவரை தேவை ஏற்படவில்லை - என்ளவில்)

எப்படி கிடைத்தது!!!

போராடி தான் பெற்றோமோ இல்லை
பிச்சையிட்டு தான் சென்றார்களோ


நம் எதிர்ப்பினை கண்டு தான் பின்வாங்கினார்களோ
அவ்வளவு தான் இங்கு கிடைத்தது என்று வேட்டையை முடித்து திரும்பினார்களோ


காந்தி ஒருவரால் தான் கிடைத்ததோ
இல்லை அனைவரின் கூட்டுக் முயற்சியால் தான் கிடைத்தோ

நெஞ்சை நிமித்தி தான் வாங்கினோமோ
இல்லை சுபாஷ்யை அடகு வைத்து வாங்கினோமோ

எப்படியோ வாங்கினோம்
இப்பொழுது நாம் சுகந்திரமானவர்கள்
எந்த முடிவையும் நாமளே எடுக்கும் திறமை உள்ளவர்கள்
உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு
மிக சிறந்த அறிவாளிகளை பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் கொண்டு உள்ள நாடு
எந்த நாட்டவராலும் நிரகாரிக்க முடியாது இளைஞர் படை கொண்ட நாடு.
அடுத்த நாட்டின் நிலங்களின் மேல் ஆசைப்படாத நாடு
தன் நிலத்தை அடுத்தவன் அபகரித்தாலும் பொறுத்துக் கொள்ளும் தியாக செம்மல் நாடு


உலகின் அனைத்து பிரச்சனைகளிலும் பெரும்பாலும் நடுநிலைமை வகிக்கும் நாடு
எத்தனை முறை குண்டு வைத்தாலும் அசராமல் சகஜ நிலைக்கும் வரும் நாடு
சரித்திரத்தை மிக சரியாக ஆட்சி பொறுப்பில் இருந்தவர்களால் பதிவு செய்த நாடு
தன் பொருட்களை அடுத்தவன் உரிமை கொள்ள முயலும் போது அதை தடுக்க மிக தீவிரமாக போராடும் நாடு
தன் நாட்டவர்களை கொன்றாலும் அவர்களுக்கு ஆயுதம் அளிக்கும் கொடை வள்ளல்
நம்மால் சுகந்திர அடைந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் மிரட்டலுக்கு தலை வணங்கும் பண்பு உள்ள நாடு.
தன் நாட்டில் இருந்து கொண்டே அடுத்த நாட்டிற்க்கு ஆதரவாகவும், தாய் நாட்டை பழித்து கூறுவதையும் சகித்துக் கொள்ளும் நாடு

தொலைக்காட்சியில் சிறப்பு காட்சிகளை கண்டு சுகந்திரத்தை போற்றும் நாடு

ஏது எப்படி இருந்தாலும் இது என் நாடு.
நான் பிறப்பதற்கு இந்த மண்ணில் இடம் கொடுத்து நாடு
இங்கு பிறந்தற்க்கு என்னை பெருமைப்பட வைத்த நாடு
மிக பழமையான பண்பாடு, கலாச்சாரம், மொழி, மதம், வரலாறு தந்த புண்ணிய நாடு.
எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், இன்னல்கள் வந்தாலும் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மீண்டும் இந்த சொர்க்க பூரியில் பிறக்க தான் ஆசை.
என் தாய் நாடே உன்னை மட்டும் நேசிக்கும் ஜென்மங்கள் இருக்கும் வரை உனக்கு என்றுமே சிறுமை நேராது. நாங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்றும் உன்னை நினைத்து இருப்போம். உன்னை அயலான் தூற்ற ஒரு போதும் விட மாட்டோம். உன் பிரச்சனைகளை கயலவதற்க்கு தயங்க மாட்டோம். விரைவில் உலகின் வல்லரசாக காண ஆசை. அது நிறைவேறும் காலம் தொலைவில் இல்லை. அது வரை வீழவும் மாட்டோம்.எல்லாருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!


ஒலி வடிவில்

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லுடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது

ஜெய்ஹிந்த்!!!

6 comments:

ராமலக்ஷ்மி said...

மிக நன்று.

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

mohana ravi said...


சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

mohana ravi said...//பிச்சையிட்டு தான் சென்றார்களோ//

இது சுதந்திரத்துக்காக் வியர்வை

சிந்தினவாளாய் தப்பா சொல்றாமாறி

நேக்கு தோணறது

pinkyrose said...

என்னாச்சு சிவா, பதிவெழுத நேரம் இல்லியா?

Rajkumar said...

உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் 

வித்யா said...

தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_06.html