இரு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. 80 வயதான ஒரு பெண்மணி பாலியல் பலாத்தாரத்துக்கு ஆளானார் என்று. சூடானில் டார்பூரில் அல்-பசர் என்ற இடத்தில் இந்த கொடுமை நடந்து உள்ளது. அந்த கொடுங்செயல் செய்தவன் யாரு என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை. உள்நாட்டிலே அகதியாக IDP(Internally Displaced Persons) முகாமில் வாழ்ந்து வருவதே மிக கொடுமையான விசயம், அதில் இது போன்று வன்முறைகளும் நடப்பது மிக மிக கொடுமையான விசயம். வக்கிரத்தின் உச்சம். அந்த மாதிரி ஆட்களை பிடித்து வயிற்றுக்கு கீழே சுடனும்.
போர்க்களங்களில் மட்டும் இல்லை எங்குமே மனிதம் மரித்து தான் போய் உள்ளது.
******
இந்திய பிரிமியர் லீக் (IPL) தென் ஆப்பிரிக்காவில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நமது கிரிக்கெட் வாரியத்துக்கு தான் தான் கிரிக்கெட் உலகின் கடவுள் என்ற நினைப்பு எப்போதுமே உண்டு. அந்த அளவு புகழும், அதிகாரமும் இருந்ததால் அப்படி ஒரு நினைப்பு. அந்த அளவுக்கு வளர்த்து விட்டது நம் மீடியாவும், ரசிகர்களும் தான். இதை பழம் தின்பது அவர்கள் தானே, அதான் அப்படி. ஐ.சி.சி. கண்களில் விரலை விட்டு ஆட்டியது. ICL க்கு அங்கீகாரம் அளிக்க எவ்வளவு முயற்சி செய்தும் ஏதுவும் நடக்கவில்லை, இவர்களிடம். பணமும், அதிகாரமும் இருந்த திமிரில் என்ன செய்கிறோம் என்றே உணராமல் இந்திய அரசாங்கத்திடமே மல்லு கட்டுகிறது. அதற்கு அரசியல் சாயமும் பூசியது. இது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நல்லதே இல்லை. காலம் வரும் போது ஆப்படிக்க படுவார்கள் என்பது நிச்சயம். IPL ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெறாமல் போவதற்கு பாதுகாப்புமின்மை என்ற காரணத்தை எல்லா மீடியாவும் முன் வைத்து கொண்டு இருக்கிறது. சுத்த அபத்தமாக இருக்கிறது. சிதம்பரத்தின் விளக்கம் திருப்தி அளிக்கும் விதமாகவே உள்ளது.
தேர்தல் திருவிழாவில் IPL திருவிழா இங்கு நடந்து இருந்தால் காணாமல் போய் இருக்கும். *******
கச்சத்தீவை பிரச்சனையை மறுபடியும் நம்ம அரசியல்வாதிகள் கையில் எடுத்துட்டாங்க. தாரை வார்த்து கொடுத்துட்டீங்க னு ஒரு அறிக்கையும், 10 வருடத்தில் நீ என்ன கிழிச்சுனு, கொடுக்கும் போது கொடுக்க கூடாது என்று போதிய எதிர்ப்பை பதிவு செய்தாச்சு, அப்புறம் என்ன னு ஒரு அறிக்கையுமா.... ஐயா சாமிகளா, போதும்ய்யா உங்க வேஷம் எல்லாம். ஒவ்வொரு தடவை தேர்தல் நேரத்திலும் நாகையில் பிரச்சாரம் செய்யப்படும் முக்கிய விசயங்களில் கச்சத்தீவை மீட்போம் என்ற வாக்குறுதி இருக்கும். கேட்டு கேட்டு புளிச்சு போச்சு. ஈழ பிரச்சனை விட்டு கொஞ்சம் மேலே ஏறி வந்து இருக்கீங்க, தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் கொஞ்சம் மேலே ஏறி கிருஷ்ணா, காவேரி, பாலாறு னு வருவீங்க. நல்ல முன்னேற்றம் தான். தொடருங்க... கேட்டு தொலைக்க தான் நாங்க இருக்கோம்ல.
உங்களால் முடி்ந்தால் அங்க போகும் மீனவர்களை சுட்டு கொல்லாமல், அடித்து துன்புறுத்தாமல் இந்தியாவிடமே திருப்பி ஒப்படைப்பதுக்கு என்ன முயற்சி எடுக்க முடியுமோ அதை செய்ங்க.
*******
போன வாரத்தில் ஒரே ஒரு படம் தான் பார்க்க முடிந்தது. வேலை பொளந்து கட்டிடுச்சு.
When a Stranger Calls (2006) - பள்ளியில் படிக்கும் ஒரு பெண் பேபி ஸிட்டராக (Baby-Sitter) இரவு நேரத்தில் ஒரு வீட்டிற்கு செல்ல, அங்கு அனானி அழைப்பு வருகிறது. அதை வைத்து படத்தை கொண்டு செல்கிறார்கள், தொடர் கொலை செய்யும் ஒரு கொலைக்காரன் அந்த வீட்டின் உள்ளே இருந்தே அந்த பெண்ணை மிரட்டுகிறான் என்று தெரிய வரும் போது பரபரப்பு ஜிவ்வுனு ஏறுது. வெறும் பிண்ணனி இசை மற்றும் ஒளிப்பதிவு(எடிட்டிங்) வைத்து ஒரு சிறந்த ஹாரர் படம் தர முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம். அந்த படத்தில் இடம் பெற்று உள்ள வீடு அற்புதமாக இருந்தது.
*******
ஈழம் இனப்படுகொலை பிரச்சனை ICC க்கு எடுத்து சென்று உள்ளார்கள். தக்க விபரம் கிடைத்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நீண்ட இரவுக்கு பின் ஒரு விடியல் இருந்தே தீரும். நம்புவோமாக.*******
பள்ளி காலத்து தோழியை அதன் பிறகு சந்திக்காமல் பின்னொரு நாள் இணையத்தின் மூலம் சந்தித்து, இப்போ பதிவுலகிலும் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. ஆனா கவுஜையா (மட்டுமே) எழுதி தள்ளுறா, வாழ்த்தி வரவேற்கிறேன், அப்படியே நீங்களும் உங்க ஆதரவை கொடுங்க. பதிவு -
சுயம் உணர்தல்வருக! வருக! நல்லாட்சி தருக சீ.. நல்பதிவு இடுக*******