Saturday, February 27, 2010

சிதறல்கள்

இந்த வருட ரயில்வே பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு பல திட்டங்கள் உள்ளதால் சிறந்த பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. திட்டங்கள் எல்லாம் சரி தான் ஆனால் அதை செயல்படுத்துவதில் தான் வேகத்தை காணாம். இந்த வருடம் மார்ச் மாதத்திற்குள் போன பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்ட புதிய ரயில், விரிவாக்கம் போன்றவை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்கள். இதற்கு மட்டும் இவ்வளவு கால தாமதம். ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் வரி மட்டும் உடனடியாக அமல்படுத்தப்பட்டது. என்னங்கடா நியாயம் இது.

*******

போன வருடம் எங்கள் ஊருக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு எர்ணாக்குளம் - திருச்சி விரைவு வண்டியை நாகூர் வரை நீட்டித்து இருந்தார்கள். இன்னும் வந்த பாடு இல்லை. மார்ச் இறுதி வரை பொறுத்து இருப்போம். இந்த வருடம் நாகூர் - காரைக்கால் ரெயில்வே திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் திட்டம் நிறைவேற இறைவனை பிராத்திப்பதை தவிர வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை. கூடிய மட்டும் சென்னைக்கு விரைந்து ரயிலை விட்டால் இந்த பகுதிக்கு வந்து போகும் பலரும் உங்களை வாழ்த்துவார்கள். கொஞ்சம் பாருங்கடா கண்ணா!

*******

போன வருடம் தனியார் வசமிடம் ரெயில்வே க்கு சொந்தமான இடங்களை லீஸ் க்கு விடுவதாக அறிவித்து இருந்தார்கள். இந்த வருடம் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்கிறார்கள். அதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் உண்டா? அப்படி இல்லை என்றால் போன வருடம் அறிவித்தப்படி லீஸ் க்கு விடப்பட்டதா? இந்த விபரங்களை எங்கு தெரிந்து கொள்வது. இணையத்தில் நான் தேடிய வரையில் எனக்கு ஏதும் கிட்ட வில்லை. விபரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

*******

இந்திய பட்ஜெட் டை பற்றி நேற்று நண்பர்களுடன் கலந்துரையாடும் போதும், பட்ஜெட் எல்லாம் எங்க நாட்டில் நல்லா தான் போடுவாங்க, அதில் 50 % ஆச்சும் குறித்த காலத்தில் நிறைவேற்றினால் எங்கள் நாட்டின் வளர்ச்சி நன்றாக இருக்கும், ஆனால் அது தான் நடப்பது இல்லை என்று சொன்னேன். நண்பர்கள் பலர், நீங்கள் எவ்வளவோ பரவாயில்லை திடமான அரசு என்று ஒன்று இருந்து, திட்டங்கள் போட்டு அதை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதை பற்றி கவலைப்பட்டு கொண்டு இருக்கின்றீர்கள். எங்கள் நிலைமை எல்லாம் படு மோசம் என்று சொன்னார்கள். சொன்னவர்கள் - பாகிஸ்தான், கென்யா, ஜிம்ப்பாவே. உண்மை !!! இக்கரைக்கு அக்கரை பச்சை!

*******

நேற்று மாலை வண்டியில் வரும் போது விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் ஒடிக் கொண்டு இருந்தது. ரூவாண்டன் நண்பன், இந்த பாடலுக்கு இசை ராமன் தானே என்று கேட்க, இல்லை எனக் கூறினேன். இல்லை இல்லை. இது அவன் இசை போல் தான் உள்ளது. A... R... R..A...M...A...N என்று உச்சரிக்க அப்பொழுது தான் எனக்கு புரிந்தது அவன் நம் ரஹ்மானை சொல்கின்றான் என்று. ரஹ்மானே தான் உனக்கு எப்படி தெரியும் என்றால் ஆஸ்கர், கிராமி அவார்ட்ஸ் வாங்கி இருக்கான், இவனை தெரியாதா எனக் கேட்க அப்பொழுது தான் அந்த விருதுகளுக்கு எந்த அளவு உலக அளவில் வீச்சு உள்ளது என்பதை அறிய முடிந்தது. பாடிக் கொண்டு இருந்த பாடல் - அன்பில் அவன். இந்த படத்தின் பாடல்களை காப்பி செய்து வாங்கி சென்றான். மற்ற படங்களை சி.டி. யில் போட்டு கேட்டு உள்ளான். (அவனை பொருத்தவரை ஆல்பம்) ஹும்ம்ம் Once again HATS OFF RAHMAN. சில பாடலகள் மட்டும் Close to Heart என்று சொல்ல முடியும், அது போல் இந்த படத்தில் வரும் மன்னிப்பாயா, அன்பில் அவன் இரண்டும் அந்த வகையில் உள்ளது.

*******

ரசித்தவை:

வா ங் கி க் கொ ள் வே ன்

by நெல்லை கண்ணன்

இருக்கின்ற விருதெல்லாம் எனக்கே தாரும்
எனை விட்டால் இதற்கெல்லாம் யார் தான் உள்ளார்
படுப்பதற்கு விருது எழுந்து நின்று
பார்ப்பதற்கு ஒரு விருது நாட்டை நன்கு
கெடுப்பதற்கு விருது மேலும் என்னவெல்லாம்
கிளர்ச்சி தரும் விருதுகளோ அவற்றையெல்லாம்
தடுப்பதற்கு யார் உள்ளார் யாரும் இல்லை
தந்து கொண்டே இரும் நானும் வாங்கிக் கொள்வேன்


9 comments:

கீதா சாம்பசிவம் said...

சூடானுக்குத் திரும்பியாச்சா??? பெண்புலியுடனா??? தனியாவா?? ம்ம்ம்ம்ம்ம் எதிர்பாராமல் வந்து உங்களைத் திகைக்க வைக்க நினைச்சு, நாங்களே திகைப்போடு திரும்பிட்டோம். :(

சந்தோஷ் = Santhosh said...

//போன வருடம் தனியார் வசமிடம் ரெயில்வே க்கு சொந்தமான இடங்களை லீஸ் க்கு விடுவதாக அறிவித்து இருந்தார்கள். இந்த வருடம் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்கிறார்கள். அதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் உண்டா? அப்படி இல்லை என்றால் போன வருடம் அறிவித்தப்படி லீஸ் க்கு விடப்பட்டதா? இந்த விபரங்களை எங்கு தெரிந்து கொள்வது. இணையத்தில் நான் தேடிய வரையில் எனக்கு ஏதும் கிட்ட வில்லை. விபரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.//
புலி ஒரு RTI மனு போடு.. இதை ஆன்லைன் ல கூட செய்யலாம்..

Porkodi (பொற்கொடி) said...

adade.. vanga puli vanga! kalyana vazhkai epdi irukku, sudan ippo epdi iruku, idha ellam sollama, railway pathi post podaringa.. ungala enna panlam??

Porkodi (பொற்கொடி) said...

கல்யாணம் முடிந்து ப்லாக் பக்கம் வர நேரம் ஒதுக்கிய பெரிய மனது கொண்ட அண்ணன் சிவா அவர்களுக்கு தாரைத் தப்பட்டைகள் கிழிந்து தொங்குமாறு வரவேற்பு அளிக்கும்படி கேட்டுக் கொ'ல்'கிறேன்.

கோபிநாத் said...

வா ராசா வா...;)

கோபிநாத் said...

\\ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் வரி மட்டும் உடனடியாக அமல்படுத்தப்பட்டது. என்னங்கடா நியாயம் இது.
\\

ம்ம்ம்...நீ கேட்குற கேள்வியே நியாயம் இல்லைன்னு தோணுது.

ஆயில்யன் said...

பாஸ் எங்க ஊருல எப்ப ரயிலு ஓடும்?
ஒரு காலத்துல ஓடிக்கிட்டிருந்துச்சு :((

சிதறல்கள் - பொறுக்கி எடுத்துக்கிட்டோம் ஆனா ஒவ்வொண்ணும் டெரரான கல் வீச்சு!

கடைசி நெல்லைகண்ணன் கவிதை நச் (யாரு மண்டையில விழுந்துச்சோ!)

:)

கவிதா | Kavitha said...

// இன்னும் வந்த பாடு இல்லை. மார்ச் இறுதி வரை பொறுத்து இருப்போம். //

2 மாதம் முன், அந்த பக்கம் இருக்கும் கோயிலுக்கு செல்ல கேட்டபோது எங்க அண்ணன் மார்ச் மாதம் முதலே ரயில் போகும் அப்ப போகலாம் னு சொல்லி இருந்தாங்க.. Hope work would be completed soon.

// விபரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.//

தெரிந்து என்ன செய்ய போறீங்க? இதை செய்யல, அதை செய்யலன்னு இப்படி இன்னொரு போஸ்ட் எழுத போறீங்களா? இல்ல உங்க பொது அறிவை வளத்துக்க போறீங்களா? இதை தவிர வேற ஏதாச்சும் செய்யறதா இருந்தா சொல்லுங்க.. விபரம் எப்படியாது விசாரித்து சொல்றோம்.

//இக்கரைக்கு அக்கரை பச்சை!//

சோ, நம்மை மாதிரியே இப்படி எப்பவும் பேசி, கருத்து சொல்றவங்க அங்கயும் இருக்காங்க..

// நம் ரஹ்மானை//

ஐ லவ் திஸ்.. :)

//ரசித்தவை://

ஏனோ இதை படித்தவுடன், நீங்கள் ப்ளாக்'கில் வாங்கிய விருதுகளும், அதற்கான உங்கள் (விவேக், டாக்டர் விஜய் வரிசையில்) பதிவும் நினைவுக்கு வந்தது. அதைவிட நீங்கள் தமிழ்மணத்தில் ஸ்டார் ஆனது... இன்னமும்..... :)

//வா ராசா வா...;)//

Repeattuu....!! Do write more dude.. ! Nice collections..!

கவிதா | Kavitha said...

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//

ஸ்ஸ்ஸ்ஸ்... என்ன ஆச்சி புலிக்கு?!!