Wednesday, July 14, 2010

ICC யின் அரெஸ்ட் வாரண்ட்

ICC (International Criminal Court) சூடான் அதிபர் அல் பஷீர் க்கு ஏதிரான இரண்டாவது அரெஸ்ட் வாரண்ட் டை பிறப்பித்து உள்ளது. (12.07.2010) இந்த முறை டார்பூரில் நடைப்பெற்ற இனப் படுகொலைக்கு காரணியாக அமைந்தால் இவ்வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 


Pre-Trial Chamber I of the International Criminal Court (ICC) issued a second warrant of arrest against the President of Sudan, Omar Hassan Ahmad Al Bashir, considering that there are reasonable grounds to believe him responsible for three counts of genocide committed against the Fur, Masalit and Zaghawa ethnic groups, that include: genocide by killing, genocide by causing serious bodily or mental harm and genocide by deliberately inflicting on each target group conditions of life calculated to bring about the group's physical destruction.

இந்த வாரண்ட் முதலில் பிறப்பிக்கப்பட்ட வாரண்ட் க்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. அந்த வாரண்ட் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் அரெஸ்ட் வாரண்ட் டை குறித்த என் பதிவு இங்கு. கடந்த வருடம் மார்ச் மாதம் அந்த வாரண்ட் பிறபிக்கப்பட்ட போது இனப்படுகொலைக்கு போதிய ஆதாரம் இல்லை என தெரிவிக்கப்பட்ட இருந்தது. அதை எதிர்த்து கொண்டு வரப்பட்ட மேல் முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இப்பொழுது அந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டு இவ்வாரண்ட் டை பிறபித்து உள்ளது. 

இந்த இனப் படுகொலையில் இது வரை 3 லட்சம் மக்கள் உயிர் இழந்து உள்ளனர், 2.5 மில்லியன் மக்கள் உள்நாட்டிலே அகதி ஆகி உள்ளனர் என ஐ.நா. தெரிவிக்கிறது. வெறும் 10,000 நபர்கள் மட்டுமே இறந்தாக சூடான் அரசு தெரிவித்து வருகிறது. இந்த உத்தரவை உள் அரசியல் காரணங்கள் கொண்டது என சூடான் அரசு மறுத்து உள்ளது. மேலும் இம்முடிவை குறிதுது தங்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை, தாங்கள் சூடான் நாட்டின் வளர்ச்சியில் கவனம் கொள்வோம் எனவும் கூறி உள்ளனர்.  ஆனால் இது டார்பூர் மக்களுக்கும் மனித தன்மைக்கும் கிடைத்த வெற்றி என JEM Rebel அமைப்பு தெரிவித்து உள்ளது. மேலும் டார்பூர் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறி உள்ளது. 

இந்த அறிவிப்பை வழக்கம் போல் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளீட்ட நாடுகள் வரவேற்று உள்ளனர். சூடானின் நட்பு நாடுகளான சில அரபு நாடுகள் மற்றும் சில ஆப்பரிக்க நாடுகள் எதிர்த்து உள்ளனர். சீனா மற்றும் இந்தியா எந்த ஒரு கருத்தும் கூறாது என்றே எண்ணுகிறேன், எண்ணெய் காரணங்களுக்காக. சூடான் மக்கள் இது வரை எந்த ஒரு பெரிய எதிர்ப்பையோ ஆதரவையோ பதியவில்லை. டார்பூர் மக்கள் பலர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனாலும் இதனால் எந்த ஒரு பெரிய மாற்றத்த்தை தாங்கள் தற்சமயம் அடைய போது இல்லை என்ற அளவிலே உள்ளனர்.

இந்த வாரண்ட் டின் மூலம் சூடான் அதிபருக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது என்பது நிதர்சனம். போன வருடம் பிறப்பித்த அரெஸ்ட் வாரண்ட் க்கு பிறகு தன்னுடைய ஆளுமை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் 24 வருடங்களுக்கு பிறகு பொது தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற்றார் அல் பஷீர். அந்த தேர்தலில் பல முக்கிய எதிர் கட்சிகள் கலந்துக் கொள்ளவில்லை என்பதும் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வில்லை என பல நாடுகள் கருத்து தெரிவித்ததும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே அல் பஷீர் சூடானின் நட்பு நாடுகளுக்கு மட்டுமே சென்று வர முடிந்தது. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு வந்தால் இண்டர்போல் போலீஸ் கைது செய்யக் கூடும் என்ற பரவிய வதந்தியை அடுத்து தென் ஆப்பிக்கா செல்லாமல் தவிர்த்தார். விரைவில் உகாண்டாவில் நடைபெற இருக்கும் ஆப்பிரிக்க யூனியன் கூட்டத்திற்கு வந்தால் கைது செய்வோம் என உகாண்டா அரசு அறிவித்து உள்ளது. அதனால் தன் பிரநிதி யை தான் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் பஷீர். கத்தார் அரசு சூடான் அரசுடன் டார்பூர் பிரநிதிகள் கலந்துக் கொள்ளும் அமைதி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அதிலும் சில பல குழப்பங்கள், இன்னும் ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்படவில்லை. அண்டை நாடுகளான சாட் (Chad), லிபியா, எத்தோப்பியா, உகாண்டா போன்ற நாடுகளுடன் சூடானுக்கு நல்ல உறவு இல்லை. 

ஐ.நா. வும் அமெரிக்காவும் சூடான் அரசு இந்த அரெஸ்ட் வாரண்ட்டை கருத்தில் கொண்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சூடானை வலியுறுத்தி உள்ளது. ஐரோப்பிய யூனியனும் ICC ஆதரவாக தான் செயல்படும். அரபு லீக் மற்றும் ஆப்பரிக்க யூனியன்கள் தற்போது எதிர்த்து வந்தாலும் ஒரு கட்டத்தில் அவர்களும் பின்வாங்க கூடும். இதன் மூலம் அல் பஷீர் கண்டிப்பாக ஒரு நாள் விசாரணையை சந்தித்து தான் ஆக வேண்டும். ஆனால் அந்த நாள் அவர் பதவியில் இருக்கும் வரை வராது என்பதும் உண்மை. நீதி கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றாலும் தாமதிக்கப்பட்ட கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதி தான் என்பது என் கருத்து, ஆனால் மனதில் Better Late then Never என்ற வாசகமும் கடந்து செல்கின்றது. 

போர் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் இதே போன்ற ஒரு நிகழ்வு இலங்கை அதிபர் ராஜபக்சே வுக்கும் நாளை வரலாம். எந்த அளவுக்கு அவருக்கு வளர்ந்த (சக்தி வாய்ந்த) நாடுகளின் ஆதரவு இருக்கிறது என்பதை பொறுத்து அதற்கான காலம் நிர்ணயம் செய்யப்படும். அந்த நாளையும் எதிர் நோக்கி கொண்டு இருக்கிறேன். 

3 comments:

ILA (a) இளா said...

சூடான்ல என்னதான் பிரச்சினைன்னு ஒரு தொடர் போடுங்களேன்

நாகை சிவா said...

எழுதனும் இளா! ரொம்ப நாளாக யோசித்துக் கொண்டு இருப்பது தான்.

KC! said...

hello, actually oru sorry solladhan vandhen for mentioning who wants to be a citizen in india in my blog :) I didn't think of the Srilankans then.

Neenga ivvalo serious party-a? My impression earlier was based on VVS blog, this blog is a lot informative.