Thursday, October 26, 2006

கவுண்டரின் லொள்ளு - 1

ஐயாம் சக்திவேல், எயித்து ஸ்டாண்ட்ர்ட், ராஜக்கபாளையம் உயர்நிலைப்பள்ளி.
ஐயாம் குண்டலக்கேசி, செண்ட் ஸ்டாண்ட்ர்ட், அவ்வையார் ஆரம்ப பாடசாலை..... இருப்பா டிகிரி சொல்ல விட மாட்டேங்குற

**********

அவன் சீவுறேன், சீவுறேன் சொல்லுறானே அது யார தெரியுமா
யார
நம்ம இரண்டு பெயர தான். இதான் லாஸ்ட் சான்ஸ், வா ஒடிப் போயிடலாம்
அட இதுக்கு எல்லாம் போயி பயந்துக்கிட்டு, அவன் அவன் காதலுக்காக உயிர விடுறான்
யப்பா உன் காதலுக்கு நீ உயிர விடுப்பா, கூட வந்த பாவத்துக்கு நான் ஏன் உயிர விடனும்
நீங்க தானா என் மாமா
யப்பா மண்ணுக்காக செத்தா ஒரு மரியாதை இருக்கும், பொண்ணுக்காக செத்தா ரொம்ப கேவலம்ப்பா
நான் பாத்துக்குறேன்
நீ தான் வரவன் போறவன எல்லாம் பாக்குறிய, ஒன்னும் செய்ய மாட்டீங்கிறீயே

மாப்புள, உன்க்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும்
அத எல்லாம் அப்புறம் சொல்லுங்க
மாப்புள, என் லைப்புல ஒரு இளந்தென்றல் கிராஸ் ஆயிடுச்சு
அது ஆகட்டும், நான் முதல இங்க
மாப்புள, என்ன ஒரு பொண்ணு லவ் பண்ணுறா
இந்த வயசிலா
அட எனக்கு என்ன இருநாறு, மூன்னூறா? உன்ன விட ஒரு இரண்டு வயசு கூட
மாம்ஸ்
சரி, சரி, காதல்ல இது எல்லாம் சகஜம்ப்பா
அத எல்லாம் இருக்கட்டும், என் ஜம்போ போயிடுச்சு
அது போகட்டும், நீ வா, வந்து என் செளத் இந்தியன் டயானாவ பாரு
எங்க உங்க டயானா
நான் இங்க தான் மாப்புள மீட் பண்ணுனேன்.
வாட் ஏ ப்பியுட்டி, யங் கேள், இவ தான் என் கனவு பன்னி சீ கன்னி
மாப், ஏய், இது தான் இவன்க்கிட்ட இருக்கும் கெட்ட பழக்கம், கூடவே ஒட்டிக்கிட்டு இருப்பான், தீடிருனு கிராஸ் ஆயி போயிடுவான்
ஹாய், ஐ கம்ய்யா

மாப்புள, என்ன பாதில உட்டுட்டு வந்துட்ட
நான் அது, ஜம்போ ஜம்போ
யோவ் எங்க ஜம்புறது
மாம்ஸ், எனக்கே ஒரு எப்பவோ ஒரு தடவை தான் ஐ லவ் யூ சொல்ல தைரியம் வருது. நீங்க நடுவுல வந்து டிஸ்டப் பண்ணுறீங்க
யோவ், எனக்கும் எப்பவோ ஒரு தடவை தான்ய்யா பொண்ணு கிடைக்குது, என் செளத் இந்தியன் டயானா வந்து ஒரு தடவை பாத்துட்டு வந்துடு, அப்புறம் என் லவ் நான் அவளுக்கு டெலிகேஸ்ட் பண்ணிக்குறேன்

அது எல்லாம் முடியாது, என் ஜம்போ
ஹும் ஹும். இங்க பாரு, உன்னால என் காதல் வாழ்க்கை அழிஞ்சதுனு கெட்ட பெயருக்கு நீ ஆளாகாத, டேய் நிறுத்துடா என்ன பிரச்சனை நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கோம், இடையில லபக்கு லபக்குனு முழுங்கிட்டு இருக்கீயே. அது என்னடா ஒருத்தனுக்கு இவ்வளவு அப்பளம் தேவையா, கேளுடா
ஏய் இனிமே எந்த கல்யாணத்துக்கு போனாலும் சத்தியமா நான் சாப்பிட மாட்டேன்ய்யா
டேய் சாப்பிட மாட்டேனு சோத்த எங்கடா எடுத்துட்டு போற, வச்சுட்டு போடா
மாம்ஸ், இப்ப நான் என்ன தான் பண்ணனும்.
என் லவ் டெவலப் பண்னனும்
சரி வாங்க
வா

மாம்ஸ் மீட் மை டயானா
ஆ எங்அ
ஐய்யயோ, மாம்ஸ் என்னது இது. இத எல்லாம் அத்தையா ஏத்துக்க முடியாது
மாப்பிள, அதையும் இதையும் பேசி என் லவ்வ கெடுத்துடாத மாப்பிள. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பொண்ணு கிடைச்சி இருக்கு. லவ் பண்ணி இருக்கேன். ப்ளிஷ், எஸ்யூகிஸ் மீ. கொஞ்சம் வெயிட் பண்ணுய்யா, நான் ரொமான்ஸ் பண்ணிட்டு வந்துடுறேன். ஹாய் டய், டய், வெயிட், வெயிட்ய்யா..
ஹாய் டயா

ஹாய்
ஹாய் வாட்ஸ் யூவர் நேம்
மை நேம் இஸ் குண்டலக்கேசி, யூவர் நேம் ப்ளிஸ்
மந்தாயிகினி
ஸ்வீட் நேம்
15 வருஷமா இந்த காளைய அடக்கி கல்ல தூக்குறவர தான் நான் கல்யாணம் பண்ணிக்கனும் வைராக்கியமா இருந்தேன்.
இந்தன வருஷத்துக்கு அப்புறம் இன்னிக்கு தான் ஒரு பெரிய மாவீரன சந்திச்சு இருக்கேன்.
இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஐ லவ் யூ
ஐ த்ரீ லவ் யூ

மாப்பிள
யார்டா நாயே
மாப்பிள
யார்டா நீ
பொண்ணுடோ அண்ணன், மாப்பிள மாப்பிள என் தங்கச்சி தேடிக்கிட்டு இருந்த அந்த மாவீரன் நீங்க தானா. நீங்க யாரு என்னனு விபரமா சொன்னா, முறையா பேசி கல்யாணத்த முடிச்சிடலாம்
என்ன பத்தி எங்க ஊர்ல வந்து கேட்டு பாருடா
எந்த ஊரு
வெள்ளாங்க கோவில்டா
வெள்ளாங்க கோவிலா, எந்த குடும்பம்
வீரமுத்து கவுண்டர் குடும்பம்டா
ஆங், வீர முத்து கவுண்டர் குடும்பமா?

டேய் எதுக்குடா சட்டைய பிடிக்குற
கல்யாணத்த நிறுத்த வந்த பங்காளி வீட்டு பசங்க நீங்க தான்
யெஸ்டா, நோடா
டேய் நம்ம தேடிக்கிட்டு இருந்த பங்காளி வீட்டு பசங்க இங்க தான் இருக்காங்க, சீக்கிரம் வாங்கடா, கத்தி, கடப்பரை எல்லாம் எடுத்துட்டு வாங்கடா

ஐய்யோ, மாப்புள நாம தான் பங்காளி வீட்டு பசங்கனு இந்த பண்ணாடைகளுக்கு தெரிஞ்சு போச்சுப்பா
டேய் என்ன சிரிக்குற
மாப்புள ஏன்ய்யா ஒடுற
ஐய்யயோ, உன்க்கிட்ட உண்டான கெட்டப் பழக்கம் இதான்ய்யா. கரெக்டா லாக்கர்ல மாட்டி விட்டுட்டு எஸ்கேப் ஆயிடுவேய்யா. சரி நான் சமாளிக்குறேன்

கைய எடுடா,
எதுக்குடா
எடுடா சொல்லுறேன்
சொல்டா
சொல்றேன் டா
சொல்டா
சொல்றேன் டா, இப்ப புடிடா பாக்கலாம்
**********

46 comments:

மு.கார்த்திகேயன் said...

அய்யோ மாப்பி.. உங்க போஸ்டை படிச்சு நான் விழுந்து விழுந்து சிரிச்சேன் மாப்பி.. கவுண்டரோட கோயம்புத்தூர் லொள்ளை யாராலும் பீட் பண்ண முடியாது..அதுவும் சத்யராஜ் கூட சேர்ந்துட்டா ரெண்டு பேர் லொள்ளையும் தாங்க முடியாது..

மொத காமெடி குங்கும பொட்டு கவுண்டர்.. மத்ததெல்லாம் உனக்காக எல்லாம் உனக்காக தானே மாப்பி

Queen said...

Gounder jokes thaan classic. Ethanai Vivek, vadivelu vathalum, Gounder Gounder thaan. Thanks for this recap after a very long time. Its been ages since i saw/heard any gounder jokes.

நாகை சிவா said...

ஆமாம் மாப்பி, எல்லாம் ரொம்ப சீரியஸ் எழுதிக்கிட்டு இருக்காங்க. அது போக நமக்கும் இங்க டென்ஷன் ரொம்ப அதிகம். நேற்று இரவு இந்த படம் பார்த்தேன்.அதான் உடனே போட்டு விட்டேன்.

இரண்டுமே உனக்காக எல்லாம் உனக்காக படத்தில் இருந்து தான்.
குங்கும பொட்டு கவுண்டர் காமெடி, " புத்தி சொல்லுறாராம்".

செந்தழல் ரவி said...

அதைவிட...சத்தியராஜும் கவுண்டரும் சேர்ந்து....உக்கார்ந்த இடத்திலேயே, டான்ஸ் செய்வாங்களே...!!!!!

தவில்காரங்கரை விதவிதமா வாசிக்க சொல்லி...

அப்பா..அல்டிமேட் காமெடி...

நாகை சிவா said...

//Gounder jokes thaan classic//

கண்டிப்பாக.... அதிலும் செந்திலும் கவுண்டர் அடித்த கூத்து கொஞ்சமா நஞ்சமா.....

//Its been ages since i saw/heard any gounder jokes. //

நமக்கும் அப்படி தாங்க, ரொம்ப நாள் கழிச்சு இந்த படம் பார்த்தேன். உடனே போட்டாச்சு :)

நாகை சிவா said...

//அதைவிட...சத்தியராஜும் கவுண்டரும் சேர்ந்து....உக்கார்ந்த இடத்திலேயே, டான்ஸ் செய்வாங்களே...!!!!!//

ஆமாங்க ரவி, அந்த படம் மாமன் மகள். அதில் தான் இந்த ஒடி போங்க நாயே மேட்டர ஆரம்பிப்பாரு...

அந்த படமே செம கலக்கல் தான், அதிலும் தண்ணி அடிச்சுட்டு சத்தியராஜ் முகத்தை பாவமா வச்சுக்கிட்டு கேட்பாருங்க ஒரு கேள்வி, நான் வேணுமுனா படிச்சு ஒரு டாக்டராவோ, வக்கீலவோ ஆயிடவானு... சூப்பரப்பு :)

இராம் said...

புலி,

சிரிச்சு சிரிச்சு இப்போ வயிறு வலியே வந்திருச்சுப்பா.... :-)

நாமக்கல் சிபி said...

கவுண்டருக்கு நிகர் கவுண்டரே...

Take that 25 roopies காமெடி பாத்துருக்கீங்களா???

You tubeல பாருங்க... சூப்பரா இருக்கும்...

தம்பி said...

புலி!

ஷார் புலி ஷார்
எங்க காமெடிய எங்களுக்கு தெரியாம உங்க வலைபூவில போட்டுகிட்டா எப்படி?
ஷ்ட்டபடிகிட்ட ரைட்ஸ் இருக்கு எங்ககிட்ட!

அட என்ன மாப்ள இவன்கிட்ட எல்லாம் பேசிக்கிட்டு நிக்கிற...

நாளைக்கு ஒரு பிளைட்டு புக் பண்ணி அந்தாளு மேல கேசு போட்டுடலாம்!

நாகை சிவா said...

//புலி,

சிரிச்சு சிரிச்சு இப்போ வயிறு வலியே வந்திருச்சுப்பா.... :-) //

அது எல்லாம் சரி, வயிற்று வலிக்கு என்க்கிட்ட காசு கேட்க கூடாது சொல்லிட்டேன்.

தம்பி said...

//சிரிச்சு சிரிச்சு இப்போ வயிறு வலியே வந்திருச்சுப்பா.... :-)//

அது ஒன்னுமில்ல தீவாளி பலவாரம் எக்ஸ்ட்ராவா சாப்பிட்டா அப்படிதான் வயித்த வலிக்கும்.

Syam said...

பங்காளி சூப்பரு...இது எல்லாம் எப்போ பார்த்தாலும் சிரிப்ப அடக்க முடியாது.... :-)

Syam said...

//அட எனக்கு என்ன இருநாறு, மூன்னூறா? உன்ன விட ஒரு இரண்டு வயசு கூட
மாம்ஸ்//

இது எல்லாம் கவுண்டருக்கே உண்டான பஞ்ச் :-)

Syam said...

//டேய் சாப்பிட மாட்டேனு சோத்த எங்கடா எடுத்துட்டு போற, வச்சுட்டு போடா//

இதுவும்...அப்புறம் சோத்துல கல்லுனு செங்கல்ல காட்டுவேறே அதுவும் செம காமுடி :-)

நாகை சிவா said...

//Take that 25 roopies காமெடி பாத்துருக்கீங்களா???

You tubeல பாருங்க... சூப்பரா இருக்கும்... //

இது என்ன படம் வெட்டி, கண்டிப்பா பார்த்து இருப்பேன் நினைக்குறேன். You tube போயி பாக்குறேன்

நாகை சிவா said...

//ஷார் புலி ஷார்
எங்க காமெடிய எங்களுக்கு தெரியாம உங்க வலைபூவில போட்டுகிட்டா எப்படி?
ஷ்ட்டபடிகிட்ட ரைட்ஸ் இருக்கு எங்ககிட்ட!//

என்னது உங்க காமெடியா, இது எல்லாம் அதிகம். நம்ம காமெடினு சொல்லுங்க.....

//நாளைக்கு ஒரு பிளைட்டு புக் பண்ணி அந்தாளு மேல கேசு போட்டுடலாம்! //

எதுக்குய்யா கேசு போட பிளைட்டு புக் பண்ணுற?

நாகை சிவா said...

//அது ஒன்னுமில்ல தீவாளி பலவாரம் எக்ஸ்ட்ராவா சாப்பிட்டா அப்படிதான் வயித்த வலிக்கும். //

அதுவும் நமக்கு கொடுக்காம சாப்பிட்டா இன்னும் வலிக்க தானே செய்யும்.

இராம் said...

//அது ஒன்னுமில்ல தீவாளி பலவாரம் எக்ஸ்ட்ராவா சாப்பிட்டா அப்படிதான் வயித்த வலிக்கும்.//

வூ இஸ் தே டிஸ்டர்பன்ஸ்.... :-)))

இராம் said...

//அதுவும் நமக்கு கொடுக்காம சாப்பிட்டா இன்னும் வலிக்க தானே செய்யும்.//

ம் ஆமாமய்யா நாங்கதானே போண்டா சுட்டு சாப்பிட்டோம்... அதே போட்டோ வேறே எடுத்து வேற போட்டமில்லே.... :-)))

நாகை சிவா said...

//இது எல்லாம் கவுண்டருக்கே உண்டான பஞ்ச் :-) //

ஆமாம் பங்கு, கவுண்டர் டைமிங்கே டைங்கிங் தான் :)

//இதுவும்...அப்புறம் சோத்துல கல்லுனு செங்கல்ல காட்டுவேறே அதுவும் செம காமுடி :-) //

அதும் இருக்கு அடுத்து போட்டு விடுவோம். :)

நாகை சிவா said...

//வூ இஸ் தே டிஸ்டர்பன்ஸ்.... :-))) //

தம்பி, உங்கள பார்த்து என்ன வார்த்த கேட்டுப்புட்டான் நம்ம ராயலு. நீங்க நம்ம ஊரில் ஒரு நியாயஸ்தன், மானஸ்தன், தர்மஸ்தன், உங்கள் பார்த்து இந்த கேள்வி கேட்டுப்புட்டானே இந்த ராயலு.......

நாகை சிவா said...

//ம் ஆமாமய்யா நாங்கதானே போண்டா சுட்டு சாப்பிட்டோம்... அதே போட்டோ வேறே எடுத்து வேற போட்டமில்லே.... :-))) //

இங்க பாரு ராம், மறுபடி மறுபடியும் வடைய போண்டானு சொல்லாத... சொன்னா கேளு ஒவரு பேச்சு உடம்புக்கு ஆகாது...

நாமக்கல் சிபி said...

//இது என்ன படம் வெட்டி, கண்டிப்பா பார்த்து இருப்பேன் நினைக்குறேன். You tube போயி பாக்குறேன்//
படம் பேரு நியாபகமில்லை. நம்ம டவுசர் புகழ் ராமராஜன் படம்... ஆனால் கவுண்டர்தான் மெயின் ;)

கவுண்டர் போலீஸா இருப்பாரு... செந்தில் ஆட்டோ டிரைவர் :-)

Bloody Pickpocket கூட இந்த படத்துல தான்...

youtubela koundamaniனு பாரு புலி இருக்கும் ;)

நாகை சிவா said...

//கவுண்டர் போலீஸா இருப்பாரு... செந்தில் ஆட்டோ டிரைவர் :-)//

ஆங், ஞாபகம் இருக்கு வெட்டி, லஞ்சம் வாங்காமல் இருக்க சொல்வது தானே. அதுவும் சூப்பர் தான். அந்த படத்தில் தான் இந்த பெட்டி மேட்டரு. (தீ பெட்டி)

நாமக்கல் சிபி said...

//ஆங், ஞாபகம் இருக்கு வெட்டி, லஞ்சம் வாங்காமல் இருக்க சொல்வது தானே. அதுவும் சூப்பர் தான். அந்த படத்தில் தான் இந்த பெட்டி மேட்டரு. (தீ பெட்டி) //

அதே! அதே!!

அதுல நான் சொன்ன சீனை பாத்துட்டு சொல்லு எப்படினு... நாங்க அதை அடிக்கடி பார்ப்போம் ;)

நாகை சிவா said...

//அதுல நான் சொன்ன சீனை பாத்துட்டு சொல்லு எப்படினு... நாங்க அதை அடிக்கடி பார்ப்போம் ;) //

உத்தரவு சாமி :)

தம்பி said...

//தம்பி, உங்கள பார்த்து என்ன வார்த்த கேட்டுப்புட்டான் நம்ம ராயலு. நீங்க நம்ம ஊரில் ஒரு நியாயஸ்தன், மானஸ்தன், தர்மஸ்தன், உங்கள் பார்த்து இந்த கேள்வி கேட்டுப்புட்டானே இந்த ராயலு.......//

யாருயா இந்த மாதிரி புரளிய கிளப்பி விட்டு வேடிக்க பாக்கறது?.

சந்துல சிந்து பாடலாம் ஏன்.. பைரவி கூட பாடலாம்... ஆனா அணுகுண்டு மட்டும் வீசக்கூடாது.

பக்கா வில்லனுக்கும் நல்லவன் நான். :))

வேதா said...

சிரிக்க வச்சுட்டியே சிவா(பத்த வச்சுட்டியே பரட்டை ஸ்டைலில் படிக்கவும்:)
சத்யராஜ் கவுண்டமணி கூட்டணி கலக்கல் கூட்டணி:) அதுவும் ஒரு படத்துல சைதை தமிழரசின்னு பானுப்ரியா வருவாங்க, அதுல ப்ளீச்சிங் வாங்கிட்டு வந்து பல் தேய்க்க சொல்லுவாங்க மனோரமா, அதுல எல்லா காமெடியும் கலக்கலா இருக்கும்:)

சீனு said...

Gud.

நாமக்கல் சிபி said...

:))))

தம்பி said...

//youtubela koundamaniனு பாரு புலி இருக்கும் ;)//

அது எப்படி youtubela koundamaniனு
பாத்தா புலி இருக்கும்?

நியாயமா கவுண்டர்தான இருக்கனும். :)

சத்யராஜ் said...

நான் வேணா படிச்சி ஒரு டாக்டராவோ, ஒரு வக்கீலாவோ ஆயிடட்டுமா மாம்ஸ்!

சத்யராஜ் said...

நான் வேணா படிச்சி ஒரு டாக்டராவோ, ஒரு வக்கீலாவோ ஆயிடட்டுமா மாம்ஸ்!

கப்பி பய said...

:))))

கவுண்டரின் லொள்ளைப் போட்டதுக்கு ரொம்ப டேங்க்ஸ் புலி மண்டையர் :)

Janani said...

Romba naaluku appurama intha jokes... Good ones.

நாகை சிவா said...

//சந்துல சிந்து பாடலாம் ஏன்.. பைரவி கூட பாடலாம்... ஆனா அணுகுண்டு மட்டும் வீசக்கூடாது.//

என்ன பண்ணுறது தம்பி அண்ணன், நம்ம தொழில் அப்படி ஆகி போச்சு....

நாகை சிவா said...

//சத்யராஜ் கவுண்டமணி கூட்டணி கலக்கல் கூட்டணி:) அதுவும் ஒரு படத்துல சைதை தமிழரசின்னு பானுப்ரியா வருவாங்க, அதுல ப்ளீச்சிங் வாங்கிட்டு வந்து பல் தேய்க்க சொல்லுவாங்க மனோரமா,//

அந்த படத்தில் இன்னும் ஒரு காமெடி இருக்கு வேதா, காதுல பூ வைக்க சொன்னதுக்கு வாழைப்பூவை எடுத்து காதுல வச்சுக்கிட்டு பெரிய அராஜகம் பண்ணுவாங்க.

நாகை சிவா said...

/அது எப்படி youtubela koundamaniனு
பாத்தா புலி இருக்கும்?

நியாயமா கவுண்டர்தான இருக்கனும். :)//

தம்பிண்ணன், உங்களுக்கும் வெட்டிக்கும் இருக்குற பிரச்சனையில் என்னை பலிகடா ஆக்காதீங்க சொல்லிட்டேன்.

நாகை சிவா said...

//Gud. //

என்ன சீனு. ரொம்ப நாள் கழிச்சு நம்ம பதிவு பக்கம் வந்து இருக்கீங்க போல

நாகை சிவா said...

//:)))) //

என்ன தளபதியாரே. ஆளே காணாம் ரொம்ப நாளா?

நாகை சிவா said...

//நான் வேணா படிச்சி ஒரு டாக்டராவோ, ஒரு வக்கீலாவோ ஆயிடட்டுமா மாம்ஸ்! //

அய்யோட சாமி, மறுபடியுமா :)))

நாகை சிவா said...

//கவுண்டரின் லொள்ளைப் போட்டதுக்கு ரொம்ப டேங்க்ஸ் புலி மண்டையர் :) //

கப்பி ரொம்ப மரியாதை குடுக்குறியே..... கவுக்க போறியா?

நாகை சிவா said...

//Romba naaluku appurama intha jokes... Good ones. //

ஆமாம் ஜனனி, நானும் ரொம்ப நாள் கழித்து இப்ப தான் சிடி கிடைத்து இந்த படத்தை பார்த்தேன்.

தம்பி said...

//தம்பிண்ணன், உங்களுக்கும் வெட்டிக்கும் இருக்குற பிரச்சனையில் என்னை பலிகடா ஆக்காதீங்க சொல்லிட்டேன்.//

பிரச்சினையா?

எங்களுக்குள்ளயா?

இது என்ன புதுசா இருக்கு!!

ஏம்பா இந்த கொலவெறி?

ஒரு மண்ணின் மைந்தர்கள் நாங்கள். எங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லை.

நாகை சிவா said...

//ஒரு மண்ணின் மைந்தர்கள் நாங்கள். எங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லை.//

அப்படியா, மெய்யாலுமா.... ஏதோ பெரியவங்க சொல்லுறீங்க நான் கேட்குறேன் சாமி....

ambi said...

sema comedy. i started thinking of these films immed.

//தவில்காரங்கரை விதவிதமா வாசிக்க சொல்லி...
//
yeeh, that is ultimate one.