Monday, October 02, 2006

வந்துட்டுடோம்ல!

என் இனிய தமிழ் மக்களே! உங்களின் பாசத்திற்க்கும், அன்பிற்க்கும் உரிய நாகை சிவா பேசுகின்றேன். கடந்த ஒரு மாதம் காலமாக தமிழ் பதிவுலகில் என் கடமையை ஆற்ற முடியாமல் போனதற்கான காரணத்துடன் உங்கள் முன் வந்து உள்ளேன். சங்க திண்ணையில் அமர்ந்து களப்பணி ஆற்றி கொண்டு இருந்த இந்த சிறுவனை காலம் படுத்திப்பாட்டை வார்த்தைகளில் வடித்து உள்ளேன். உங்களை சற்றே ஆசுவாசுப்படுத்திக் கொண்டு படிக்க வாருங்கள்.

மிகவும் நல்லவிதமாக போய் கொண்டு இருந்த என் பதிவுலக வாழ்க்கையில் திடிரென்று ஒரு தொய்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இங்கன இருக்கும் சக அலுவலர்கள் எல்லாரும் சேர்ந்து கூட்டம் போட்டு சதி ஆலோசனை எல்லாம் பண்ணி, தலை நகரத்தில் இருப்பவர்களாலே முடியவில்லையாம் நீ வந்தா தான் முடியுமாம் என்று என்னை தலை நகரத்திற்கு அனுப்பி வைத்து விட்டார்கள். நான் கெஞ்சி பார்த்தேன், கதறி பார்த்தேன். என்னை விட்டு விடுங்கள் என்று, ஆனால் அந்த கல் நெஞ்காரர்கள் நான் கதறியதை கண்டுக் கொள்ளாமல் என்னை ஒரு சிறப்பு விமானத்தில் ஏற்றி தலை நகரத்திற்கு அனுப்பி விட்டார்கள். தலை நகரத்திற்கு செல்லும் போது தான் யோசித்து பார்த்தேன், நாம இம்புட்டு கெஞ்சியும், மிஞ்சியும் இவனுங்க ஏன் கண்டு கொள்ளவில்லை என்று, அப்புறம் தான் தெரிஞ்சது, நான் தமிழில் கதறி இருக்கேன். அதான் அந்த படுபாவி பயல்களுக்கு புரியல. என்ன கொடுமைய்யா இது? சரி ஆனது ஆச்சு தலைநகரத்தை ஒரு கை பார்த்து விடுவது என்று நானும் மனதை ஒருவாறு தேற்றிக் கொண்டு பயணம் செய்தேன்.

நாம போன நேரம் முடிய வேண்டிய வேலைகள் எல்லாம் சீக்கிரம் முடிந்து விட, ஆஹா இனிமேல் நாம் வழக்கம் போல தமிழ்ச் சேவை புரியலாம் என்று ரவுண்ட் நெக் டிசர்ட்டில் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டு நம்ம டூட்டி ஸ்டேஷனுக்கு வந்தால் வேற எவனையும் அனுப்பாமல் எங்க தலயே நேரா விமான நிலையம் வந்து ரொம்ப டயடா இருப்ப அதனால் நேரா வீட்டில் போயி ஓய்வு எடு என்று சொல்லி வீட்டில் விட்டார். ஆஹா இந்த ஆளும் திருந்திட்டானே என்று டபுள் மகிழ்ச்சியுடன் வீட்டில் ரெஸ்ட் எடுத்து அடுத்த நாள் ஆபிஸ்க்கு போனால் வச்சான்யா பெரிய ஆப்பா....


சிவா நாளைக்கு நீ அந்த செக்டாருக்கு போற, என்ன என்ன தேவையோ அத எடுத்துக்கோ. அங்க போன பிறகு உனக்கு என்ன வேணும் என்பதை சொல்லு நான் அனுப்பி வைக்குறேன் என்று ஒரு குண்டை போட்டான். அட பாவி மக்கா நான் M.O.P எல்லாம் தயார் பண்ணல, Security Clearance வாங்கல அப்புறம் எப்படினு அவனை மடக்க பார்த்தேன். எல்லாத்தையும் மிகவும் முக்கியமான பணி என்று போட்டு நான் தயார் பண்ணிட்டேன், நீ கிளம்ப வேண்டியது மட்டும் தான் பாக்கினு அவன் என்னய மடக்கிட்டான். சரி இதுக்கு மேல என்ன பண்ணுறது என்று என் விதியை நானே நொந்துக் கொண்டு அந்த இடத்திற்கு சென்று விட்ட எல்லா வேலையும் முடிச்சுட்டு வந்தேன். இப்படி அலுவல வேலைகள் நம்மளை ஒரு வழி பண்ணினா, அடுத்தது வேற என்ன, அதே தான். அது சும்மா இருக்குமா......

இது வரைக்கும் எந்த பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனை எல்லாத்தையும் ஏண்டா இவன்கிட்ட பிரச்சனை வச்சுக்கிட்டோம் என்று பீல் பண்ணும்படி பிரச்சனைகளை பிரிச்சு மேஞ்சுக்கிட்டு திரிச்சோம். அதான் எல்லா பிரச்சனை சேர்ந்து இவன எங்க அடிச்சா வலிக்கும் என்பதை தெரிந்து அங்கன அடிச்சு நம்மளை ரொம்பவே படுத்தி எடுத்து விட்டது. சரி வாழ்க்கை என்றால் இது எல்லாம் இருக்க தானே செய்யும். சரி அத்த விடுங்க.......

நாம இல்லாம தமிழ்மணமே தவிர்ச்சு போயி இருக்கும் என்று வந்து பார்த்தா ஹுக்கும் ஒன்னும் இல்ல. அவ்வளவா யாரும் கண்டுக்கல, அதசரி நாம அப்படி என்னத்த எழுதி சாதிச்சுப்புட்டோம், நம்மள கண்டுக்குறதுக்குனு நானும் பெரிசா ஏதும் பீல் பண்ணல....... தமிழ்மணமத்தை ஒரு சுற்று சுற்றி வந்ததில் அப்படி ஒன்னும் சூடா இல்லை. நம்ம மக்கள் எல்லாம் திருந்தி விட்டார்கள் என்ன? திரு. பத்ரி அவர்களின் பதிவின் மூலம் "ஒரு மாலை, ஒரு தேநீர், ஒரு புத்தகம்", வித்லோகா புத்தகக்கடை மற்றும் அப்புசாமி - சீதாப்பாட்டி ஜோடியை காமிக்ஸ் வடிவில் கொண்டு வர எண்ணம் போன்றவைகளை படித்த போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துக்கள் பத்ரி மற்றும் கிழக்கு பதிப்பகம் டீம்.

நம்மள காணாம பின்னூட்டத்தில், தனி மெயிலில் நம்மளை விசாரித்து நம்மளை பாச மழையில் நனைய வச்ச நம்ம பங்காளி ஷாம், சங்க தலைவலி சீ தலைவி கீதா, சங்கத்து சிங்கங்கள் அதிலும் நம்ம போர்வாள் தேவ், சோக்கா ஒரு வார்த்தை யூஸ் பண்ணி இருந்தான்ய்யா, அத என்னாது , ஆங் "What's up Dude?".... நோட் பண்ணி வச்சுக்கிட்டேன். நாமளும் யார்கிட்டையாச்சும் யூஸ் பண்ணுவோம்ல. இது போக நம்மள பெஞ்ச் மேல ஏத்துவேன் என்ற மிரட்டிய பொற்கொடிக்கும், ராஜீக்கும், கோவி. கண்ணன் மற்ற எல்லாருக்கும் என் டாங்கஸ்.

நம்ம கப்பி பய நமக்கு நன்றி சொல்லி ஒரு பதிவு போட்டு இருக்காரு. தாங்க்ஸ்ப்பா. ஆனால் இந்த அண்ணனை நீயும் அந்த ராயல் ராமும் கண்டுல. பயபுள்ளைகளா உங்களை அப்புறமா டீல் பண்ணிக்குறேன். அப்புறம் நம்ம வேதாவும் நன்றி சொல்லி ஒரு பதிவு போட்டு உள்ளார்கள். ஆனா பாருங்க அதற்கு ஒரு பின்னூட்டம் கூட இல்லை. வந்த பின்னூட்டத்தை அவங்க வெளியீடவில்லையா, இல்ல பின்னூட்டமே வரவில்லைய்யா ஒன்னும் புரியல சாமி.

இது எல்லாம் போக நாம பதிவுலகிற்க்கு வராம இருந்த இந்த ஒரு மாத காலத்தில், என்னையை ரொம்பவே படுத்தி எடுத்த ஒரு பதிவரை பற்றி சொல்லாமல் இருந்தால் என் பிஞ்சு மனசு தாங்காது. அந்த பதிவர் நமக்கு மெயில் அனுப்புறாங்க பாருங்க, பண்ணாட்டு கம்பெனியில் வேலை பார்க்கும் நபர்களிடன் விவாகரத்து அதிகமாக உள்ளதாம் ஜாக்கிரதை என்று, ஏனுங்க ஒரு க.பி.கழகத்தை சேர்ந்தவனுக்கு அனுப்புற மெயிலாங்க அது. அது மட்டுமா நாங்க எல்லாம் சேர்ந்து மிகவும் அருமையான கவிதை என்று முடிவு கூறிய நம்ம வே.வி. நாயகியின் சில படங்களை அனுப்பி சுமாரான கவிதை என்று தலைப்பு கொடுத்து வெறுப்பேத்துறாங்க. அது போக கேட்பரீஸ் சாக்லெட் சாப்பிடாத, தண்ணி குடிக்காத என்று பல மெயில் அனுப்பி நம்மள ரொம்பவே தொல்லை பண்ணுறாங்கப்பா அவங்க. இந்த தொல்லையிலும் ஒரு நல்லது இருக்கு, எப்படியும் வாரத்தில் ஒரு தடவையாச்சும் சில பல நல்ல பிகர்களின் படங்களை அனுப்பி நம்மளை கூல் பண்ணி விடுகின்றார்கள். இது தொடர வேண்டும் என்ற காரணத்திற்க்காக அவர் பெயரை சொல்லாமல் விடுகின்றேன்.

ஆஹா ரொம்ப பெரிசா போயிக்கிட்டு இருக்கே, அதனால் இத்தோட முடிச்சிப்போம். ஆகவே மக்களே, மறுபடியும் உங்கள் நாகை சிவா ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாருங்கோ......... வழக்கம் போல் அடிச்சி ஆடப்படும்............

70 comments:

கப்பி பய said...

வா புலி வா...

உனக்காக தான் வெயிட்டிங்...

ஸ்டார்ட் ம்யூசிக்க்க்க்க்க்க்க்க்!!!!

இலவசக்கொத்தனார் said...

முதலில் இந்த ஜஸ்டிபஃய்ட் அலைன்மெண்டை மாத்துங்க.நெருப்பு நரியில் படிக்கவே முடியலை.

அப்புறம் நம்ம தம்பி தேவு வந்து விஷயமெல்லாம் சொன்னாரு. இந்த தடவை மன்னிச்சு விடறோம். அடுத்த தடவை முறையா லீவு சொல்லி ஓக்கே வாங்கிட்டுத்தான் போகணும். சரியா?

வழக்கமான களப்பணியை ஆற்ற ஆரம்பியுங்க என்ன.

நாமக்கல் சிபி said...

வாங்க!!! வாங்க!!!

ரொம்ப நாளா காணமேனு தமிழ்நாடே சே தமிழ்மணமே தெடிகிட்டு இருக்கு ;)

கப்பி பய said...

//நம்ம கப்பி பய நமக்கு நன்றி சொல்லி ஒரு பதிவு போட்டு இருக்காரு. தாங்க்ஸ்ப்பா. ஆனால் இந்த அண்ணனை நீயும் அந்த ராயல் ராமும் கண்டுல. பயபுள்ளைகளா உங்களை அப்புறமா டீல் பண்ணிக்குறேன்.//

தாங்க்ஸ்லாம் இருக்கட்டும்..ஆனா இப்படி அநியாயமா ஒரு பழியைத் தூக்கி போட்டுட்டியே புலி...நானும் ராயலும் உன்னை எண்ணி எண்ணி...தமிழ்மணம் பக்கம் உன்னைக் காணலைன்னதும் உன்னை சூடான் தலைநகரத்துக்கு பக்கத்துல எதுனா ஒரு டெலிபோன் டவர் உச்சில உக்கார விட்டுட்டாங்க போலிருக்குன்னு நினைச்சுக்கிட்டோம் ;)

நாகை சிவா said...

//கப்பி பய said...
வா புலி வா...

உனக்காக தான் வெயிட்டிங்...

ஸ்டார்ட் ம்யூசிக்க்க்க்க்க்க்க்க்!!!! //

எனக்காக தான் வெயிட்டிங்கா எதுக்கு?

இருந்தாலும் முதலில் வந்து நம்மள கூப்பிட்டதற்கு தாங்கஸ்ம்மா

நாகை சிவா said...

//முதலில் இந்த ஜஸ்டிபஃய்ட் அலைன்மெண்டை மாத்துங்க.நெருப்பு நரியில் படிக்கவே முடியலை. //

என்ன பிரச்சனை என்று தெரியல, சீக்கீரமே சரி பண்ணுறேன் கொத்துஸ்

//அடுத்த தடவை முறையா லீவு சொல்லி ஓக்கே வாங்கிட்டுத்தான் போகணும். சரியா? //

ஆகட்டும் ஆண்டவரே


//வழக்கமான களப்பணியை ஆற்ற ஆரம்பியுங்க என்ன.//

ஆமாம் ஆமாம் அதுக்கு தானே வந்து இருக்கோம். ஆற்ற ஆரம்பித்து விட வேண்டியது தான்.

கால்கரி சிவா said...

வாங்க சிவா, நானும் உங்களை கண்டுகிட்டு ஒரு வரி போடலாம் என என் பதிவில் டைப் செய்து பிறகு தவிர்த்துவிட்டேன்.

ஒரேடியாக கோஷ்டி சேர்க்கிறேமா என நினைப்பில் தான்.

வாங்க வாங்க உங்க சேவையை ஆரம்பிங்க

நாகை சிவா said...

//வாங்க!!! வாங்க!!!

ரொம்ப நாளா காணமேனு தமிழ்நாடே சே தமிழ்மணமே தெடிகிட்டு இருக்கு ;) //

மெய்யாலுமா வெட்டி.....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், பாசக்கார பயலுகப்பா நம்ம பசங்க

நாகை சிவா said...

//உன்னை எண்ணி எண்ணி...//

எத்தனை தடவை எண்ணுனீங்க.....

//உன்னை சூடான் தலைநகரத்துக்கு பக்கத்துல எதுனா ஒரு டெலிபோன் டவர் உச்சில உக்கார விட்டுட்டாங்க போலிருக்குன்னு நினைச்சுக்கிட்டோம் ;) //

யோவ், இன்னும் பட்டிக்காட்டான் மாதிரி தானுய்யா இருக்கீங்க. இன்னும் எவன்ய்யா டவர் எல்லாம் யூஸ் பண்ணுறான் டெலிபோனுக்கு....

பேட் இமாஜினேசன்.... பேட் பாய்ஸ்

நாகை சிவா said...

//வாங்க சிவா, நானும் உங்களை கண்டுகிட்டு ஒரு வரி போடலாம் என என் பதிவில் டைப் செய்து பிறகு தவிர்த்துவிட்டேன். //

சிவா அண்ணன் நீங்க சொன்னதே போதும் தலைவா. உங்களை பற்றி எனக்கு தெரியாதா என்ன?

அப்புறம் ஒரு மேட்டர். கடந்த 7ஆம் தேதி அன்று ஒரு பதிவு போடனும் என்று நினைத்து இருந்தேன். முடியவில்லை. மன்னிக்கவும். அடுத்த தடவை பார்த்துக் கொள்ளலாம். என்ன?

நாமக்கல் சிபி said...

// தலை நகரத்தில் இருப்பவர்களாலே முடியவில்லையாம் நீ வந்தா தான் முடியுமாம் என்று என்னை தலை நகரத்திற்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.//

தலைக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பை யாராலயும் மாத்த முடியாது

சந்தோஷ் aka Santhosh said...

வாப்பா புலி,
சொல்லாம கொள்ளாம போயிட்டா எப்படிப்பா. கொத்தனார் சொன்ன மாதிரி லீவு அப்லிகேசன் குடுத்துட்டுதான் இதுக்கு மேல போகணும்.

கொத்ஸ்,
இந்த மாதிரி புதுவகையான blog templateகளில் alignment மட்டுமல்லா வேறு எதையோ கூட மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். நான் என்னுடையதில் முயற்சி செய்தேன் முடியவில்லை. பார்க்கலாம்.

செல்வன் said...

நாகை மண்ணுதித்த நற்றமிழ் நாயகன்,சூடான் வென்ற சூடாமணி,ஆப்பிரிக்கா கண்ட அருந்தவப்புதல்வன், தலைநகரம் வென்ற தாண்டவக்கோன் எங்கள் நாகை சிவா இல்லாமல் இந்த 1 மாதமும் தமிழ்மணம் களை இழந்து அழுது வடிந்தது.

முகப்பில் நாகையாரின் பதிவு வந்ததும் தமிழ்மணமே மீண்டும் பொலிவு பெற்று சூரியனை கண்ட சூரிய காந்தி போல், ஜோதிகாவை கண்ட சூர்யா போல், மிளிர்கிறதே?இது என்ன மாயம்?இது என்ன விந்தை?

வருக,வருக...இனி தொடர்ந்து கலக்குக,,,கலக்குக...

செல்வன் said...

//முதலில் இந்த ஜஸ்டிபஃய்ட் அலைன்மெண்டை மாத்துங்க.நெருப்பு நரியில் படிக்கவே முடியலை. //

நெருப்பு கிட்ட நரியை கொண்டு போனா படிக்கவா முடியும்?கடிச்சு கொதறிடாது?

அதுக்கு தான் நம்ம பில்கேட்சோட IE இணைய உலாவியை பயன்படுத்தணும்கிறது:-))

SK said...

முக்கியமான விஷயமா போயிருக்கறதாவும், தொந்தரவு பண்ணினா தொலைச்சுப்புடுவாங்கன்னும் ஒரு தகவல் வந்துது. அதனால மெயில் அனுப்பலை.
கோவிச்சுக்கு வேணாம்.
அதான் வந்துட்டீங்கள்ல!
இனிமே கலக்கல்தான்!
நம்ம வேலை கூட கொஞ்சம் பாக்கி இருக்கு சாமியோவ்!

Syam said...

பங்கு வா வா....இந்த பிளாக் உலகத்த எடுத்து நிறுத்த வா...
சங்கத்துல தலைக்கு ஆப்பு வெய்க்க வா..
ஆகா புலி பாஞ்சுருச்சு...எல்லோரும் சாக்கரதயா இருங்க....

Syam said...

தலைநகரம் போறதுக்கு ஆபிஸ்ல இருந்து காசு குடுத்து அனுப்பறாங்களா...கொடுத்து வெச்சவங்கையா...நாங்க எல்லாம் காசு குடுத்து பார்த்தோம் அந்த படத்த :-)

வெற்றி said...

நாகை சிவா,
சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் தமிழ்மணத்திற்கு நீங்கள் வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. உங்களின் நகைச்சுவை கலந்த பதிவுகளையும், பின்னூட்டங்களையும் பல முறை படித்துச் சுவைத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.

வேதா said...

என்னப்பா இப்படி தலைமறைவாகிட்டீங்க? உங்களை காணாம நம்ம தலைவி தலைவலியாலே துடிச்சு போய்ட்டாங்க(தலைவலிக்கே தலைவலி வந்தா நம்ம நிலைமை என்னாறது) எனக்கு போன் மேல போன் போட்டு புலி எங்கயோ புல் மேய போயிடுச்சுபோல ஆளையே காணோம்னு கேட்டாங்க, நான் தான் சமாதானப்படுத்தினேன், புலி உங்க சார்பா காபி ஆற்ற சீசீ களப்பணி ஆற்ற போயிருக்கும்னு:)

//வந்த பின்னூட்டத்தை அவங்க வெளியீடவில்லையா, இல்ல பின்னூட்டமே வரவில்லைய்யா ஒன்னும் புரியல சாமி.//

யோவ் நீங்க என் பதிவைப் படிச்ச லட்சணம் அப்படி:) அந்த பதிவுக்கு இங்க லிங்க் கொடுத்துருக்கேன் பாருங்க

Janani said...

Vanga Annnathe... Romba naala post missing nu parthen.. There he comes with a bang...:-)

கைப்புள்ள said...

அட பாவி!
என்ன பத்தி ஒரு வார்த்தை கூட நீ சொல்லலை. உன்னையை காணுமேன்னு என்னிக்குமே கூகிள் டாக்ல ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டுக்காத நானு "புலியைப் பாத்தீங்களா?"னு மெசேஜ் போட்டு வச்சிருந்தேன்யா. வேணா கப்பியைக் கேட்டுப் பாரு. அதை எங்க மேனேஜர் வேற பாத்துட்டு வேலை நேரத்துல புலியைத் தான் தேடிக்கிட்டு ஒக்காந்திருக்கியான்னு கேள்வி வேற கேட்டுப்புட்டாருய்யா. என் அப்ரைசலுக்கு நானே சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிட்டு உன்னைய காடு மலை எல்லாம் தேடுனா ஒரு டேங்ஸ் கூட இல்லியே உங்கிட்டேருந்து...சே!

இந்த மாதிரி நீ நன்றி மறந்ததுக்கு நான் மொதல்ல நெனச்ச மாதிரி யாராவது சூடான் சுந்தரி உன் கலரையும் அழகையும் கண்டு மயங்கி உன்னை தன் மணாளனா ஏத்துக்கிட்டுருக்கலாம் போல.

நாகை சிவா said...

//தலைக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பை யாராலயும் மாத்த முடியாது //

ஆமாம், ஆமாம், நமக்கு தலைக்கும் இருக்கும் தொடர்பு யாராலையும் பிரிக்க முடியாத அளவுக்கு Fevi Quick போட்டு ஒட்டிய தொடர்பு இல்லையா.

நாகை சிவா said...

//வாப்பா புலி,
சொல்லாம கொள்ளாம போயிட்டா எப்படிப்பா. //

தப்பு தான் பங்காளி, ஏதோ அறியா சிறுவன் தெரியாமல் செய்த இந்த தவறை பெரியவங்க நீங்க தான் மன்னிக்கனும்.

//இந்த மாதிரி புதுவகையான blog templateகளில் alignment மட்டுமல்லா வேறு எதையோ கூட மாற்ற வேண்டும் //

ஆமாம் பங்காளி, நான் இந்த பதிவை JUSTIFY ALIGNMENT கொடுக்கவில்லை. தானாகவே வருது, இருந்தாலும் நம்ம கொத்துஸ் சொன்னதுக்காச்சும் அத சரி பண்ணனும்.

ILA(a)இளா said...

உனக்காக தான் வெயிட்டிங்...

ஸ்டார்ட் ம்யூசிக்க்க்க்க்க்க்க்க்

நிலவு நண்பன் said...

கொடுமைடா சாமி... :)

மனதின் ஓசை said...

வந்துட்டியா? வா வா வா..

புலி ஏதோ வெட்டைக்கு போயிருக்கு.. மான் எதும் சிக்கினதும் வந்துடும்னு சொன்னங்க. ஏதும் கிடச்சுதா?

//வழக்கம் போல் அடிச்சி ஆடப்படும்............//

யார?

நாகை சிவா said...

//நாகை மண்ணுதித்த நற்றமிழ் நாயகன்,சூடான் வென்ற சூடாமணி,ஆப்பிரிக்கா கண்ட அருந்தவப்புதல்வன், தலைநகரம் வென்ற தாண்டவக்கோன் எங்கள் நாகை சிவா //

ஏண்ணன் செல்வண்ணன் நீங்களுமா?
தேர்வு எல்லாம் முடிந்து விட்டதா?

//முகப்பில் நாகையாரின் பதிவு வந்ததும் தமிழ்மணமே மீண்டும் பொலிவு பெற்று சூரியனை கண்ட சூரிய காந்தி போல், //

இருந்தாலும் இது ரொம்ப அதிகமா படுதே, சே சே இருக்காது செல்வன் ரொம்ப நல்லவர் ஆச்சே.....

//ஜோதிகாவை கண்ட சூர்யா போல், மிளிர்கிறதே?//

சூர்யா மட்டுமா மிளிர்ந்தார், நாங்களும் தான், ஆனா இப்ப இல்ல. நாம் பண்பாடு தெரிந்த பண்பாளர்கள் இல்லையா?

நாகை சிவா said...

//நெருப்பு கிட்ட நரியை கொண்டு போனா படிக்கவா முடியும்?கடிச்சு கொதறிடாது?

அதுக்கு தான் நம்ம பில்கேட்சோட IE இணைய உலாவியை பயன்படுத்தணும்கிறது:-)) //

நல்லா கேளுங்க செல்வன், எல்லாருக்கும் ஒரு வழினா, நம்ம கொத்துஸ்க்கு மட்டும் எப்பவுமே தனி வழி தான். அவர தட்டிக் கேட்பதற்கு இங்கு யாரும் இல்ல, அதான்

நாகை சிவா said...

//முக்கியமான விஷயமா போயிருக்கறதாவும், தொந்தரவு பண்ணினா தொலைச்சுப்புடுவாங்கன்னும் ஒரு தகவல் வந்துது. அதனால மெயில் அனுப்பலை//

யாருங்க அந்த புண்ணியவான்?

//நம்ம வேலை கூட கொஞ்சம் பாக்கி இருக்கு சாமியோவ்! //

மன்னிக்கனும் எஸ்.கே., சொன்ன சொல்லை காப்பாற்ற முடியமால போயி விட்டது. சீக்கிரமே முடித்து விடுவோம்.

தேவ் | Dev said...

//நாம இம்புட்டு கெஞ்சியும், மிஞ்சியும் இவனுங்க ஏன் கண்டு கொள்ளவில்லை என்று, அப்புறம் தான் தெரிஞ்சது, நான் தமிழில் கதறி இருக்கேன். //
ஒரு வேளை நீ கதறுனதுக்குப் பதிலா ஒரு புலியா குதறியிருந்தீன்னா உன்னியா லூஸ்ல்ல விட்டு இருப்பாங்களோ என்னவோ.. எப்படியோ மறுபடியும் வந்துட்டீயே செல்லம் அது போதும்ய்யா

நாகை சிவா said...

//பங்கு வா வா....இந்த பிளாக் உலகத்த எடுத்து நிறுத்த வா...//

எடுத்து நிறுத்திய ஆகனுமா, சரி ஆசைப்படுற எடுத்து என் கையில் கொடு நிறுத்தி வைக்குறேன்.

//சங்கத்துல தலைக்கு ஆப்பு வெய்க்க வா..//

கண்டிப்பாக விரைவில் சங்கத்தில் எதிர்பார்க்கவும் ;)

நாகை சிவா said...

//தலைநகரம் போறதுக்கு ஆபிஸ்ல இருந்து காசு குடுத்து அனுப்பறாங்களா...கொடுத்து வெச்சவங்கையா...//

நான் சீரியஸா பதிவு போட்டா அதில் நீ காமெடி பண்ணுற, சரி விடு நம்ம பய தான நீயும். அந்த படம் நான் இன்னும் பாக்கல.

//நாங்க எல்லாம் காசு குடுத்து பார்த்தோம் அந்த படத்த :-) //

ஏன் பொய் சொல்லுற, எந்த படத்த நீ காசு கொடுத்து பார்த்து இருக்க. எல்லா திருட்டு வி.சி.டி. இல்லாட்டி தரையிறக்கம் பண்ணி தான பாக்க, அப்புறம் ஏன் இந்த நல்லவன் வேசம் உனக்கு, இது நல்லாவ இருக்கு.

நாகை சிவா said...

//சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் தமிழ்மணத்திற்கு நீங்கள் வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.//

ரொம்ப நன்றி வெற்றி, நான் மீண்டும் வந்தற்கு காரணமே உங்களை போன்ற நண்பர்களின் அன்பிற்காக தான்.

சரவணன் said...

வாங்க! வாங்க!

நாகை சிவா said...

//என்னப்பா இப்படி தலைமறைவாகிட்டீங்க? //

இம்புட்டு நாளா கேட்காம இப்ப கேட்குறீங்க. அது சரி இப்பவாச்சும் கேட்டீங்களே.....

//எனக்கு போன் மேல போன் போட்டு புலி எங்கயோ புல் மேய போயிடுச்சுபோல ஆளையே காணோம்னு கேட்டாங்க, //

எங்க புலி எங்கயாச்சும் புல் மேய போகுமா, அதும் இல்லாம் "புல்" எல்லாம் நமக்கு பிடிக்காது. இன்னும் குழந்தை தான நானு ;). அதும் இல்லாம அவங்க அப்படி கேட்டு இருக்க மாட்டாங்களே, எதுக்கும் அவங்களை கிராஸ் செக் பண்ணுறேன்.

//யோவ் நீங்க என் பதிவைப் படிச்ச லட்சணம் அப்படி:) அந்த பதிவுக்கு இங்க லிங்க் கொடுத்துருக்கேன் பாருங்க//

நீங்க கொடுத்த லிங்க் பாத்தேன். அதுக்கு பின்னூட்டம் வராத மேட்டரு, இதுக்கு ஏன் வரல என்பது தானே மேட்டரே....

நாகை சிவா said...

//Vanga Annnathe... Romba naala post missing nu parthen.. There he comes with a bang...:-) //

வந்துட்டுடேன் வந்துட்டுடேன்.... இனிமேல் தொடர்ந்து பதிவுகள் வரும், தவறாமல் வருமை புரியவும்.

வடுவூர் குமார் said...

நேத்தி ஒரு மெயில் குடுக்கலாம் என்று நினைத்து மறந்தேன்.
பரவாயில்லை அதான் திருப்பி வந்துட்டீங்கள்ள,கலக்குங்க!!

நாகை சிவா said...

//என்ன பத்தி ஒரு வார்த்தை கூட நீ சொல்லலை. //

என்ன தல, இப்படி பிரிச்சி பேசிட்ட நீ. நீ வேற நான் வேறு என்று நான் என்றுமே நினைத்தது இல்ல. அப்படிப்பட்ட என்கிட்ட இப்படி ஒரு கேள்வி கேட்க உனக்கு எப்படி மனசு வந்தது.

//என்னிக்குமே கூகிள் டாக்ல ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டுக்காத நானு "புலியைப் பாத்தீங்களா?"னு மெசேஜ் போட்டு வச்சிருந்தேன்யா. //

நீ போட்ட மெசேஜ்க்கு இன்னிக்கு சாய்ந்திரம் என்ன சாய்ந்திரம் இப்பவே நானும் மெசேஜ் போடுறேன் தங்கம்.

கப்பி, நீங்களும் அவரும் நடத்திய சதி வேலய பத்தி எல்லாம் சொன்னாப்புல. நல்லவேல ஏதும் செய்யல. அது வரைக்கும் சந்தோஷம்.

//சூடான் சுந்தரி உன் கலரையும் அழகையும் கண்டு மயங்கி உன்னை தன் மணாளனா ஏத்துக்கிட்டுருக்கலாம் போல.//

ஒரு சின்ன பையனை இப்படி எல்லாம் சொல்லி வெறுப்பேத்தாத. இதுக்கு எல்லாம் கூடிய விரைவில் நீ பதில் சொல்லியே ஆகனும், சொல்லிட்டேன்.

நாகை சிவா said...

//உனக்காக தான் வெயிட்டிங்...

ஸ்டார்ட் ம்யூசிக்க்க்க்க்க்க்க்க் //

எனக்காக தான் வெயிட்டிங்கா.....
இதுல ஏதோ உள்குத்து இருக்கும் போல இருக்கே..... விவ் அண்ணாத்த கவுத்துடாதீங்க....

தம்பி said...

சிவா,

என்னடா தமிழ்மணத்திலயும், சங்கத்து பக்கமும் ஏதோ கொறையுதேன்னு நினச்சிகிட்டு இருந்தேன் நீங்கதானா அது?

வாய்யா வந்து கலக்கு!

ஆப்புகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!!!

வேதா said...

கேட்டா தான் அக்கறைன்னு நினைப்பா? அது சரி உண்மையாகவே கீதா மேடத்தோட போன்ல பேசின போது உங்களை பத்தி பேசினோம் என்னடா ஆளா காணுமேன்னு. சே நல்லதுக்கே காலம் இல்லை:(

இராம் said...

புலி,

என்னாப்பா இப்பிடி பீல் பண்ணிருக்கே... உனக்கு ரெண்டு மயில் அனுப்புனேன். நீ கொஞ்சம் வேலையா இருக்கேன், அதுக்கு "நான் பிஸியா இருக்கேன்.அப்புறமா உன்னை contact பண்ணுறேன்" சொல்லி ரிப்ளை பண்ணினே.... இங்கே வந்து ஓரே பீலீங்ஸ் ஆப் நாகர்கோவிலா அடிச்சு தாக்கி வச்சிருக்கே.

நாகை சிவா said...

//நிலவு நண்பன் said...
கொடுமைடா சாமி... :) //

என்ன நண்பா, நான் திரும்ப வந்தது உனக்கு அவ்வளவு கொடுமையா படுதா?

நாகை சிவா said...

//புலி ஏதோ வெட்டைக்கு போயிருக்கு.. மான் எதும் சிக்கினதும் வந்துடும்னு சொன்னங்க. ஏதும் கிடச்சுதா? //

மான் மட்டுமா, ஏகப்பட்டது கிடைத்தது. உனக்கும் வேண்டும் என்றால் சொல்லு, பிரிச்சு கொடுத்து விடுவோம்.


//யார? //

இது தெரியாதா. சங்கத்து சிங்கங்கள் யார அடிச்சி விளையாடுவோம் என்பதை தெரியாம நீயும் இம்புட்டு நாளா இங்க அலஞ்சிக்கிட்டு இருக்க

நாகை சிவா said...

//ஒரு வேளை நீ கதறுனதுக்குப் பதிலா ஒரு புலியா குதறியிருந்தீன்னா உன்னியா லூஸ்ல்ல விட்டு இருப்பாங்களோ என்னவோ..//

அட நீ வேறண்ணன், எமகாத பயலுக அவனுங்க. குதறி இருந்தேன் வை, என்னைய பொட்டிய தூக்க வச்சு இருப்பானுங்க.......

// எப்படியோ மறுபடியும் வந்துட்டீயே செல்லம் அது போதும்ய்யா //

ரொம்ப தாங்க்ஸ்ண்ணன்

நாகை சிவா said...

நன்றி சரவணன்.

நீங்களும் மாயவரம் மாபியாவா? உங்கள இது வரைக்கு நான் கண்டுகிட்டது கிடையாதே. சீக்கிரமே கண்டுக்குறேன்.

நாகை சிவா said...

//நேத்தி ஒரு மெயில் குடுக்கலாம் என்று நினைத்து மறந்தேன்.
பரவாயில்லை அதான் திருப்பி வந்துட்டீங்கள்ள,கலக்குங்க!! //

குமார் அண்ணன், நீங்க சொன்னதுக்கே கண் எல்லாம் கலங்குது. வந்தாச்சு கலக்கி விடுவோம்.

நாகை சிவா said...

//என்னடா தமிழ்மணத்திலயும், சங்கத்து பக்கமும் ஏதோ கொறையுதேன்னு நினச்சிகிட்டு இருந்தேன் நீங்கதானா அது?//

அடியேனே தான் அது.

ஆப்புகள் எத்தனை விதமாக இருந்தாலும் அதை அப்படியே திருப்பி கைப்பூக்கு வைப்பது தானே அழகு.

நாகை சிவா said...

//கேட்டா தான் அக்கறைன்னு நினைப்பா? //

கோவித்து கொள்ளாதீங்க...தமாசு

//மேடத்தோட போன்ல பேசின போது உங்களை பத்தி பேசினோம் என்னடா ஆளா காணுமேன்னு. சே நல்லதுக்கே காலம் இல்லை:( //

அப்படியா.... அது சரி, அவங்க எங்க, இன்னும் காணாம்.

நாகை சிவா said...

//இங்கே வந்து ஓரே பீலீங்ஸ் ஆப் நாகர்கோவிலா அடிச்சு தாக்கி வச்சிருக்கே. //

நைனா, முதல ஊர் பெயர ஒழுங்கா தெரிஞ்சுக்கோ. நாகப்பட்டினம் வேற, நாகர் கோவில் வேற. அது சேர மண்டலம். நாங்க சோழ மண்டலம். புரியுதா பாண்டிய மண்டலம்.

நீ அனுப்புன மயில் எல்லாம் நான் ஊருக்கு போறதுக்கு முன்னால. அத பிறகு என்ன ஆச்சு......

golmaalgopal said...

vaanga vaanga....romba naalaa unga pdhivugala ellam padichittrukken...ippo dhaan phasht timeah comment pannaren... :)

appappo eti paarpadhundu...yenga pudhu padhivu onnum kaanamenu...idhan vishayama...??

பொற்கொடி said...

vedha ninga onnum kavalai padadinga, inda sudan puliyoda vandavalatha thandavalathula ethiduvom.. SUDAN PULI STAND UP ON THE BENCH!:)

தி. ரா. ச.(T.R.C.) said...

புலியைக்காணோம்னு நான் காட்டுலேயும் நாட்டுலேயும் தேடி சரின்னு சொல்லி சிங்கையிலும் தேடினா எனக்கு மயக்கம் வராத குறையா நம்ப வீட்டுகே வந்து நம்மளை குசலம் விசாரிக்க வந்திடிச்சி.நன்றி புலி அண்ணே. ஆனா நம்ப சுத்த சைவம் இங்கே ஆடுகிடைக்காது.பாவம் ஒரு 15 வயசு பொண்ணு தான் உங்களைக்காணோம்னு தவிச்சுகிட்டு இருந்தாங்க பதிவுலெ ஏதொ சங்கடமாம்.

சரவணன் said...

// நீங்களும் மாயவரம் மாபியாவா? //
ஆகா... சிவா என்ன பயமுடுத்திறிங்க... :-))))

நாகை சிவா said...

//vaanga vaanga....romba naalaa unga pdhivugala ellam padichittrukken...ippo dhaan phasht timeah comment pannaren... :)//

வாங்கண்ணா, ரொம்ப சந்தோஷம் அப்ப அப்ப எட்டி பார்த்தற்க்கு, இனிமே அடிக்கடி வாங்க.

உங்க பெயரு தான் கொஞ்சம் இடிக்குது. சரி பரவாயில்ல, நாம் கொஞ்சம் தள்ளி நின்னக்க வேண்டியது தான், இல்லாட்டி கொஞ்சம் தள்ளி வச்சுட வேண்டியது தான். என்ன நான் சொல்லுறது....

நாகை சிவா said...

//vedha ninga onnum kavalai padadinga, inda sudan puliyoda vandavalatha thandavalathula ethiduvom.. SUDAN PULI STAND UP ON THE BENCH!:) //

அவங்க கவலைப்பட்டாங்க உங்களுக்கு யாரு சொன்னது,

தண்டவாளம் வேல தான் நம்ம லாலு பாத்துக்கிட்டு இருக்காரே, அப்புறம் நீங்க வேறயா, ஒழுங்கா இருக்குற வேலய பாருங்க.

பெஞ்சா, இது எல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன். வர வர எல்லாரும் மிரட்டுறாங்கப்பா...

நாகை சிவா said...

//ஒரு 15 வயசு பொண்ணு தான் உங்களைக்காணோம்னு தவிச்சுகிட்டு இருந்தாங்க பதிவுலெ ஏதொ சங்கடமாம். //

சரி பண்ணியாச்சு. இன்னும் அவங்கிட்ட சொல்ல......... சின்ன பொண்ணுல அதான் எது சொன்னாலும் புரிய மாட்டேங்குது அவங்களுக்கு :)

//புலியைக்காணோம்னு நான் காட்டுலேயும் நாட்டுலேயும் தேடி சரின்னு சொல்லி சிங்கையிலும் தேடினா எனக்கு மயக்கம் வராத குறையா நம்ப வீட்டுகே வந்து நம்மளை குசலம் விசாரிக்க வந்திடிச்சி.//

தேடினது எல்லாம் சரி தான், ஆனால் நம்பள விட்டுட்டு ஐப்பெரும் கூட்டம் நடத்தியது சரியா?

நாகை சிவா said...

//// நீங்களும் மாயவரம் மாபியாவா? //
ஆகா... சிவா என்ன பயமுடுத்திறிங்க... :-)))) //

ஆஹா அண்ணாத்த, நீங்க பயப்பட கூடாது, மத்தவங்க தான் நம்மள பார்த்து பயப்படனும். ;)

மு.கார்த்திகேயன் said...

ரொம்ப நாளா ஆளை காணலையேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது..
எப்படியோ..மறுபடியும் ஐக்கியமாயிட்டீங்களே..அதும் போதும் சிவா

Gopalan Ramasubbu said...

வாங்க தலைவா. புலி பதுங்கினது பாயரதுக்குதான்னு நினைச்சுட்டு இருந்தேன். பார்ப்போம் என்ன செய்யறீங்கன்னு:)

Anonymous said...

//உங்க பெயரு தான் கொஞ்சம் இடிக்குது. சரி பரவாயில்ல, நாம் கொஞ்சம் தள்ளி நின்னக்க வேண்டியது தான், இல்லாட்டி கொஞ்சம் தள்ளி வச்சுட வேண்டியது தான். என்ன நான் சொல்லுறது.... //

naa unga thambi maadhiri...awvvvvvvvvvvvvvv neengale ippdi sollalaamaa??? *kaneer thara tharaiya kottings*

CT said...

Welcome back Pal
-CT

வேதா said...

ஹலோ எஜுஸ்மீ வீட்டுல யாருப்பா?என்னாச்சு புலி மறுபடியும் பதுங்கிடுச்சா?

கீதா சாம்பசிவம் said...

புலி, நான் ஒண்ணும் என்னோட வேலைக்காக உங்களைத் தேடலை. நிஜமான கவலையில் தேடினேன். ஏன்னா உங்க வேலை அப்படி, எனக்கும் ஓரளவு தெரியும். இப்போ மறுபடி காணாமல் போயிட்டீங்க. உங்க பதிவை அன்னிக்குப் பார்த்துட்டுப் போயிட்டேன். பின்னூட்டம் விடலை. வேறே வேலை வந்துடுச்சு. அப்புறம் மறந்துட்டேன். அதான் விஷயம். ஏன் இன்னும் தலை மறைவு?

நாகை சிவா said...

//ரொம்ப நாளா ஆளை காணலையேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது..
எப்படியோ..மறுபடியும் ஐக்கியமாயிட்டீங்களே..அதும் போதும் சிவா //

ரொம்ப நன்றி கார்த்திக், என்ன படம் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு.

நாகை சிவா said...

//வாங்க தலைவா. புலி பதுங்கினது பாயரதுக்குதான்னு நினைச்சுட்டு இருந்தேன். பார்ப்போம் என்ன செய்யறீங்கன்னு:)//

பொருத்து இருந்து பாருங்கள் ;)

நாகை சிவா said...

//naa unga thambi maadhiri...awvvvvvvvvvvvvvv neengale ippdi sollalaamaa??? *kaneer thara tharaiya kottings* //

கொட்டுற தண்ணிய கொஞ்சம் டெல்டா மாவட்டங்கள் பக்கம் திருப்பி விடுங்க. ஜனம் எல்லாம் உங்கள வாழ்த்தும்.

நாகை சிவா said...

//Welcome back Pal
-CT //

ரொம்ப நன்றி சி.டி.

நல்லா இருக்கீங்களா?

நாகை சிவா said...

//ஹலோ எஜுஸ்மீ வீட்டுல யாருப்பா?என்னாச்சு புலி மறுபடியும் பதுங்கிடுச்சா? //

இல்ல இல்ல இந்த தடவை இல்லவே இல்ல.

நாகை சிவா said...

//ஏன் இன்னும் தலை மறைவு? //

உங்களை பற்றி தெரியாதா கீதாக்கா!
தலைமறைவு எல்லாம் இல்ல, இங்கன தான் இருக்கேன். இருக்கேன். இருக்கேனுங்கோ.....