Monday, October 09, 2006

செல்லம்

நம்ம வெட்டிப்பயலின் இந்த பதிவை படித்தவுடன் நம்ம ஆளு ஞாபகம் வந்துச்சு.அடுத்து மணி என்கிற ஒரு பைரவர் புண்ணியத்தால் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும் நம்ம ராயல் ராமின் இந்த பதிவை படித்தவுடன் சரி நாமளும் நம்ம செல்லத்தை பற்றி ஒரு பதிவை போடலாம் என்று எண்ணத்தில் போட்ட பதிவு.படத்தில் இருக்கும் சார் பெயர் பிளாக்கி, செல்லமா கருப்பா. 6 வயசு ஆகுது. நம்ம வீட்டிலே எல்லாருக்கும் செல்லம்னா இவரு தான். அதிலும் நமக்கும் நம்ம தம்பிக்கும் இவரு ரொம்பவே செல்லம். சாரு ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தால் கூட அடுத்த நாள் சாப்பாடு அவருக்கு ஊட்டி விடப்படும். இதுவே நமக்கு வச்சுக்குங்க இஷ்டம்னா சாப்பிடு கஷ்டமா இருந்தா போயிக்கிட்டே இருனு சொல்லுவாங்க. அவரும் எங்க வீட்டில் உள்ள எல்லார் மேலயும் பிரியமா இருந்தாலும் நம்ம மேல ரொம்பவே பிரியமா இருப்பாரு. நாம என்ன சொன்னாலும் கேட்பாரு, இல்ல கேட்குற மாதிரி நடிப்பார். இப்பவும் ஒவ்வொரு தடவை வீட்டிற்கு போன் பண்ணும் அவரை விசாரிக்காமல் இருப்பது இல்லை.

இவருக்கு பிடித்தது : நாங்கள் எல்லாரும் வீட்டில் இருந்தால் ரொம்பவே குஷி ஆகி விடுவார். எல்லாரையும் வம்புக்கு இழுப்பார், வீட்டுக்குள் கன்னா பின்னாவென்று ஒடி எதையாவது தள்ளி விட்டு ஏக ரகளை பண்ணுவார். எங்களுடன் டூ வீலரில் முன்னாடி நின்றுக் கொண்டு போவது. அதுவும் நைட் எவ்வளவு லேட்டா வந்தாலும் நமக்காக காத்துக் கொண்டு இருப்பாரு, சில சமயம் நாம எஸ்கேப் ஆக பாத்தாலும் தொடைய பிராண்டி ஒரு மிகவும் பாவமான லுக் கொடுத்து நம்மளை பாவப்பட வைத்து ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு தான் விடுவார்.

இவருக்கு பிடிக்காது : குழந்தைகள், தயிர் சாதம், வீட்டில் இருந்து எந்த பொருளும் வெளியே போகக் கூடாது, அவர் விளையாட்டு பொருளை யாரும் எடுக்கக் கூடாது. இவரை யாரும் கட்ட போட சொல்லக் கூடாது, அவரை கைய நீட்டி தீட்டக் கூடாது, இவரை வீட்டில் விட்டு அனைவரும் ஒரே சமயத்தில் வெளியே போகக் கூடாது. மற்ற விலங்கினங்கள் வீட்டிற்குள் நுழையக் கூடாது.

இவரிடம் பிடித்தது : அவர் தட்டை தவிர மற்ற தட்டில் இருப்பதை நாம் சொல்லாமல் எதையும் எடுக்க மாட்டார். நானும் என் தம்பியும் வீட்டில் இருந்தால் மற்றவர்களை ரொம்பவே வம்பு பண்ணி எங்களிடம் வந்து பதுங்கி கொள்வார். ரொம்ப குஷி ஆகி விட்டால் அதன் வாலை கவ்விக் கொண்டு அசுர தனமாக தனக்கு தானே சுற்றிக் கொள்வார். ஏதாவது வில்லத்தனம் பண்ணி விட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி முகத்தை பாவமாக வைத்துக் கொள்வது.

இவரிடம் பிடிக்காதது : குழந்தைகளை கண்டால் பயங்கரமாக கோவப்படுவார். வீதியில் போகும் அனைவரையும் வம்புக்கு இழுப்பது, குரைப்பது. சமயம் கிடைக்கும் போது வீதிக்கு ஓடி அந்த தெருவையே ஒரு வழி பண்ணுவது, மற்ற உயிர் இனங்களை வம்புக்கு இழுப்பது. அதிலும் கன்னுக்குட்டி சைல இருக்குற மற்ற நாய்கள் மேல் எல்லாம் போய் பொத்து பொத்து விழும், இதை பிடிக்க போகும் நமக்கு சப்த நாடியும் அடங்கி போயிடும், ஆஹா நமக்கு இன்னிக்கு அரை கிலோ கறி போச்சுட்டானு நினைச்சுப்பேன். ஆனா பாருங்க, நம் ஆளு சைஸ்ல சிறிசா இருந்தாலும் நம்ம ஏரியாவில பெரிய தாதா போல, எல்லாம் துஷ்டனை கண்டால் தூர போ என்ற பழமொழிக்கு ஏற்ப எஸ்கேப் ஆயிடும். நமக்கும் அப்பாடானு இருக்கும்.

எங்கடா வெட்டிப்பயல் பதிவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லனு பாக்குறீங்களா, அது வேற ஒன்னும் இல்ல நாம சென்னையில் இருந்து வாரம் வாரம் ஊருக்கு போகும் போது அவருக்காக அவருக்காவே மட்டும்
"டைகர் பிஸ்கேட்" வாங்கி கொண்டு போவது வழக்கம். சில சமயங்களில் மறந்தாலும் கூட வீட்டிற்கு நுழைந்தவுடன் அவரை பார்த்தவுடன் மீண்டும் கடைக்கு உடனடியாக சென்று அவருக்கு வாங்கி கொடுப்பது வழக்கம். நம்ம ஆளும் டைகர் பிஸ்கேட்டை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்.

65 comments:

இராம் said...

//அடுத்து மணி என்கிற ஒரு பைரவர் புண்ணியத்தால் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும் நம்ம ராயல் ராமின் இந்த பதிவை படித்தவுடன் சரி நாமளும் நம்ம செல்லத்தை பற்றி ஒரு பதிவை போடலாம் என்று எண்ணத்தில் போட்ட பதிவு.//

என்னோட டோட்டல் இமேஜ் Gone... போயே போச்சு..

புலி வந்தாலும் வந்தே... இப்பிடியே அதுக்காக... :-))))

நாகை சிவா said...

//என்னோட டோட்டல் இமேஜ் Gone... போயே போச்சு..//

அது எல்லாம் என்னிக்கு நமக்கு இருந்து இருக்கு, வருத்தப்பட, ப்ரீயா விடு மாமு ;)

சரி நம்ம செல்லம் எப்படி இருக்கு, அத பத்தி ஒன்னும் சொல்லாம போயிட்ட?

இராம் said...

//அது எல்லாம் என்னிக்கு நமக்கு இருந்து இருக்கு, வருத்தப்பட, ப்ரீயா விடு மாமு ;)//

ஹி ஹி இனமில்லே.....

//சரி நம்ம செல்லம் எப்படி இருக்கு, அத பத்தி ஒன்னும் சொல்லாம போயிட்ட? //

அதுக்கு என்ன அதுப்பாட்டுக்கு நல்லவே இருக்கு....

Syam said...

பிளாக்கி சூப்பரா கீராருபா...கொள்ளை அயகு... :-)

//நாம என்ன சொன்னாலும் கேட்பாரு, இல்ல கேட்குற மாதிரி நடிப்பார//

இது எல்லாம் நம்ம கிட்ட இருந்து கத்துகிட்டது தான... :-)

Syam said...

//நம்ம ஆளும் டைகர் பிஸ்கேட்டை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார//

இப்போ என்ன சொல்ல வர...இதுக்கும் வெட்டிக்கும் என்ன சம்பந்தம் :-)

கப்பி பய said...

ப்ளாக்கியைப் பற்றி ப்லாக்கிய புலி,
இப்ப டார்கெட் யாரு?? வெட்டியா ராயலா?? :))

நாகை சிவா said...

//ஹி ஹி இனமில்லே.....//

எப்படி பார்த்தாலும் நீ நம்ம பய தான் என்பதை அடிக்கடி நிருபிக்குற ;)

//அதுக்கு என்ன அதுப்பாட்டுக்கு நல்லவே இருக்கு.... //

:)

நாகை சிவா said...

//பிளாக்கி சூப்பரா கீராருபா...கொள்ளை அயகு... :-)//

டாங்க்ஸ் பங்கு!

//இது எல்லாம் நம்ம கிட்ட இருந்து கத்துகிட்டது தான... :-) //

ஆமாம் பின்ன நம்ம வளர்ப்பு நம்மள மாதிரி தானே இருக்கும். ;)

நாகை சிவா said...

////நம்ம ஆளும் டைகர் பிஸ்கேட்டை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார//

இப்போ என்ன சொல்ல வர...இதுக்கும் வெட்டிக்கும் என்ன சம்பந்தம் :-) //

என்ன பங்கு நீ, விடிய விடிய கத கேட்டுட்டு சூர்யாவுக்கு ஜோதிகா அக்கானு சொல்லுற.....

அந்த பதிவை பார்த்தால் நம்ம செல்லத்தை பற்றி ஞாபகம் வந்துச்சு, அம்புட்டு தான். நீயா ஏதும் கற்பனை பண்ணிக்காத......

நாகை சிவா said...

//ப்ளாக்கியைப் பற்றி ப்லாக்கிய புலி,
இப்ப டார்கெட் யாரு?? வெட்டியா ராயலா?? :)) //

நான் ஏனுப்பா அவங்களை டார்கெட் பண்ண போறேன். நான் வெனே தானே இருக்கேன், ஏன் இப்படி கிளப்பி விடுற......

Syam said...

//என்ன பங்கு நீ, விடிய விடிய கத கேட்டுட்டு சூர்யாவுக்கு ஜோதிகா அக்கானு சொல்லுற//

அந்த டைகர் பிஸ்கட் பதிவு நானும் படிச்சேன்..நான் கேட்டது பிளாக்கிய ஏன் வெட்டி கூட கம்பேர் பன்னனுதான் :-)

வடுவூர் குமார் said...

ஏங்க சிவா,உங்க கருப்பா எந்த தேர்வு எழுதப்போகுது,டைகர் பிஸ்கட் சாப்பிட்டு?
வெட்டிப்பயல பழிவாங்கிட்டீங்களே!!
:-))

வேதா said...

யாரையோ வம்புக்கு இழுக்கற மாதிரி இருக்கு:) விளக்கம் கேட்டா அப்புறம் சூரியாவுக்கு ஜோதிகா அக்காவா? தனுஷுக்கு ஐஸ்வர்யா தங்கச்சியான்னு கேட்டு டார்ச்சர் பண்ணுவீங்க:0 எதுக்கு வம்பு? ஹிஹி எப்பவும் போல வம்பில்லாத ஒரே கமெண்ட் 'நல்ல பதிவு':)

இராம் said...

அடபாவி புலி,

உன்னை சூடான்'லே வெயில் சுட்டெரிக்க.... டைகர் பிஸ்கெட்க்கு இந்த உ.கு வச்சிருந்தியா. பெங்களூருலே நைட்லே சோறு கிடைக்கலைன்னா புலிப்பொறைய தான் தின்பேன்னு வெ.ப பதிவிலே போயிச் சொல்லியிருந்தேன். இப்போதாண்டி புரியுது உன்னோட சேட்டை..... :-(

மனதின் ஓசை said...

சாரி தல..
நமக்கு இந்த மாதிரி செல்லத்த எல்லாம் பார்த்தா பயம்தான்.. பக்கத்துல கூட போக மாட்டேன்.


ஆமா.. நிறைய உள்குத்து வேற இருக்குது போல.. பின்னுட்டம் படிச்சாதான் புரியுது... டேஞ்சரான ஆசாமிய்யா நீ..

//வீதியில் போகும் அனைவரையும் வம்புக்கு இழுப்பது, குரைப்பது. சமயம் கிடைக்கும் போது வீதிக்கு ஓடி அந்த தெருவையே ஒரு வழி பண்ணுவது, மற்ற உயிர் இனங்களை வம்புக்கு இழுப்பது. அதிலும் கன்னுக்குட்டி சைல இருக்குற மற்ற நாய்கள் மேல் எல்லாம் போய் பொத்து பொத்து விழும்//

தல.. இதுல ஏதும் உள்குத்து இருக்க்ற மாதிரி தெரியுது... யார சொல்ற?
:-)

தேவ் | Dev said...

அப்போ உங்க வீட்டுல்ல நீ செல்லம் இல்லையா?

நாகை சிவா said...

//அந்த டைகர் பிஸ்கட் பதிவு நானும் படிச்சேன்..நான் கேட்டது பிளாக்கிய ஏன் வெட்டி கூட கம்பேர் பன்னனுதான் :-) //

நான் எப்ப வெட்டிய என் செல்லத்துடன் கம்பெர் பண்ணினேன். பங்கு எங்களுக்குள் பிரச்சனை உருவாகப் பாக்காத சொல்லிட்டேன்...

நாகை சிவா said...

//ஏங்க சிவா,உங்க கருப்பா எந்த தேர்வு எழுதப்போகுது,டைகர் பிஸ்கட் சாப்பிட்டு?
வெட்டிப்பயல பழிவாங்கிட்டீங்களே!!
:-)) //

என்ன குமார் அண்ணன், என்னயே நீங்களும் நம்மள சந்தேகப்பட்டு வீட்டீர்கள். வெட்டி எப்படி பாத்தாலும் நம்ம பய. அவரை போய் பழி வாங்குவோமா?

நாகை சிவா said...

//யாரையோ வம்புக்கு இழுக்கற மாதிரி இருக்கு:)//

அட அது எல்லாம் இல்லீங்க வேதா,

//ஹிஹி எப்பவும் போல வம்பில்லாத ஒரே கமெண்ட் 'நல்ல பதிவு':) //

அப்பாடா நீங்க ஒரு ஆளு ஆச்சும் சொன்னீங்களே நல்ல பதிவுனு அது போதும். :)

நாகை சிவா said...

//உன்னை சூடான்'லே வெயில் சுட்டெரிக்க.... //

என்ன இது சின்னபுள்ளத்தனமா?

//டைகர் பிஸ்கெட்க்கு இந்த உ.கு வச்சிருந்தியா. //

நான் எங்கய்யா வச்சேன்.

//பெங்களூருலே நைட்லே சோறு கிடைக்கலைன்னா புலிப்பொறைய தான் தின்பேன்னு வெ.ப பதிவிலே போயிச் சொல்லியிருந்தேன். //

பொறைனு உன்ன எவன் சொல்ல சொன்னது?

//இப்போதாண்டி புரியுது உன்னோட சேட்டை..... :-( //

அட ராமா? இப்பவாச்சும் புரிஞ்சுசே, ஆமாம் என்ன புரிஞ்ச்சு சொல்லு?

நாகை சிவா said...

//சாரி தல..
நமக்கு இந்த மாதிரி செல்லத்த எல்லாம் பார்த்தா பயம்தான்.. பக்கத்துல கூட போக மாட்டேன். //

ஹமீது, உண்மைய சொல்ல போன இவைகளுடன் விளையாடும் போது மனசு ரொம்ப லேசா ஆயிடும். அது பழகி பார்த்தால் தான் தெரியும்.

//ஆமா.. நிறைய உள்குத்து வேற இருக்குது போல.. பின்னுட்டம் படிச்சாதான் புரியுது... டேஞ்சரான ஆசாமிய்யா நீ..//

யூ டூ .....

//தல.. இதுல ஏதும் உள்குத்து இருக்க்ற மாதிரி தெரியுது... யார சொல்ற?//

சத்தியமா இதுல ஏதும் இல்லையா, எல்லாத்தையும் நோண்டி நோண்டி பாக்குறீங்கய்யா நீங்க....

நாகை சிவா said...

//அப்போ உங்க வீட்டுல்ல நீ செல்லம் இல்லையா? //

நானும் செல்லம் தான், இருந்தாலும் நம்ம செல்லத்துக்கு இருக்குற மரியாதை நமக்கு இல்ல ;)

இராம் said...

//அட ராமா? இப்பவாச்சும் புரிஞ்சுசே, ஆமாம் என்ன புரிஞ்ச்சு சொல்லு? //

அட என்னத்தைச் சொல்லனிமின்னு சொல்லுறே... இப்போதைக்கு லொள் லொள்'ன்னுதான் குரைக்க முடியும் நீ கம்பேர் பண்ணி பதிவுப் போட்டதில்லே.... :-)))

ஜொள்ளுப்பாண்டி said...

அட சிவ உங்க வீட்டு புஜ்ஜு குட்டியா இவங்க ?? ரொம்ப அழகுப்பா.துக்கிவச்சு கொஞ்சணும் போல இருக்கே :))

நாகை சிவா said...

//அட என்னத்தைச் சொல்லனிமின்னு சொல்லுறே... இப்போதைக்கு லொள் லொள்'ன்னுதான் குரைக்க முடியும் நீ கம்பேர் பண்ணி பதிவுப் போட்டதில்லே.... :-))) //

நான் எப்ப உன்ன என் செல்லத்துடன் கம்பெர் பண்ணினேன். சே..சே.. அது மாதிரி எல்லாம் பண்ண மாட்டேன். செல்லத்துக்குனு ஒரு மரியாதை இல்ல

நாகை சிவா said...

//அட சிவ உங்க வீட்டு புஜ்ஜு குட்டியா இவங்க ?? ரொம்ப அழகுப்பா.துக்கிவச்சு கொஞ்சணும் போல இருக்கே :)) //

ஆமாம் அண்ணன், தாரளமாக வந்து கொஞ்சுன, ஆனா கொஞ்சம் ஜாக்கிரதை கோவக்கார பயல். :0)

கப்பி பய said...

//நான் ஏனுப்பா அவங்களை டார்கெட் பண்ண போறேன். நான் வெனே தானே இருக்கேன், ஏன் இப்படி கிளப்பி விடுற...... //

--பைரவர் புண்ணியத்தால் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும் நம்ம ராயல் ராமின் --

--அவருக்காக அவருக்காவே மட்டும் "டைகர் பிஸ்கேட்" வாங்கி கொண்டு போவது வழக்கம். --

அப்ப இதெல்லாம் என்னது?? செல்லம்ன்னு வெல்லம் மாதிரி தலைப்பு வச்சுட்டு இப்படி அநியாயத்துக்கு அப்பாவிகளை வம்புக்கிழுத்தா பார்த்துட்டு சும்மா இருப்போமா???
நல்லா சிரிப்போம்ல :))))))))

ambi said...

//ஆஹா நமக்கு இன்னிக்கு அரை கிலோ கறி போச்சுட்டானு நினைச்சுப்பேன்.//
ha haaa. கூடிய விரைவில் அந்த பொன்னாள் வரும் புலி! (சும்மா! சும்மா! சுனா பான சிங்கம் லே நீய்!)
:)

Syam said...

அது சரி வெட்டி இந்த பக்கமே காணோமே...வெட்டி அட்டெண்டன்ஸ் பிளீஸ் :-)

நாகை சிவா said...

//--பைரவர் புண்ணியத்தால் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும் நம்ம ராயல் ராமின் --//

கப்பி, இது இல்லனு உங்க ராயல நெஞ்ச தொட்டு சொல்ல சொல்லு....

//--அவருக்காக அவருக்காவே மட்டும் "டைகர் பிஸ்கேட்" வாங்கி கொண்டு போவது வழக்கம். --//

யோவ், வீட்டில் வளர்க்கும் என் செல்லத்துக்குனு பிஸ்கேட் வாங்க கூடாதய்யா, என்னய்யா இது வம்பா இருக்கு....

//இப்படி அநியாயத்துக்கு அப்பாவிகளை வம்புக்கிழுத்தா பார்த்துட்டு சும்மா இருப்போமா???//

இம்புட்டு நேரம் கேள்வி கேட்ட நானும் பொறுமையா பதில் சொன்னேன், ஆனா இது எல்லாம் ரொம்பவே ஒவரு சொல்லிட்டேன். யாருய்யா அப்பாவி, வெட்டியும், ராமும் அப்பாவியா? கூவுறதுக்கு ஒரு அளவு வேணாம், அப்பாவியாம் அப்பாவி.....

நாகை சிவா said...

//கூடிய விரைவில் அந்த பொன்னாள் வரும் புலி! (சும்மா! சும்மா! சுனா பான சிங்கம் லே நீய்!)//

ஏனய்யா இப்படி கொலை வெறி புடிச்சு அலையுறீங்க நீங்க எல்லாம்.
ஆனா நம்ம செல்லம் தான் நம்ம ஏரியா தாதா ஆச்சே.... ஹிஹி

நாகை சிவா said...

//அது சரி வெட்டி இந்த பக்கமே காணோமே...வெட்டி அட்டெண்டன்ஸ் பிளீஸ் :-) //

இதுக்கு வெட்டி தான் பதில் சொல்லனும். வருவாரு வருவாரு... வெட்டி வருவீங்கள....

கைப்புள்ள said...

இப்போதைக்கு உள்ளேன் ஐயா.

நாகை சிவா said...

//இப்போதைக்கு உள்ளேன் ஐயா. //

தல, ஏன் இந்த அடக்கம், பணிவு எல்லாம். ஏதும் பெரிசா கவுக்க ப்ளான் போடுறீயா?

இராம் said...

//கப்பி, இது இல்லனு உங்க ராயல நெஞ்ச தொட்டு சொல்ல சொல்லு....//

//யாருய்யா அப்பாவி, வெட்டியும், ராமும் அப்பாவியா? கூவுறதுக்கு ஒரு அளவு வேணாம், அப்பாவியாம் அப்பாவி.....//

உன்னைச் சொல்லி குற்றமில்லை!!! என்னைச் சொல்லி குற்றமில்லை!!!
காலம் செய்த குற்றம் புலி!!!
காலம் செய்த குற்றம் புலி!!!

கப்பி பய said...

// யாருய்யா அப்பாவி, வெட்டியும், ராமும் அப்பாவியா? கூவுறதுக்கு ஒரு அளவு வேணாம், அப்பாவியாம் அப்பாவி..... //

பேய் ஆவின்னு பயப்படற ராயல் அப்பாவிதான்..

காலேஜ்ல வாங்கி சாப்பிட்ட டைகர் பிஸ்கட் பத்தி சொல்லி பீல் பண்ண வச்ச வெட்டி அப்பாவி தான்...

கப்பி பய said...

//உன்னைச் சொல்லி குற்றமில்லை!!! என்னைச் சொல்லி குற்றமில்லை!!!
காலம் செய்த குற்றம் புலி!!!
காலம் செய்த குற்றம் புலி!!! //

முதல் வரில இருக்க காலம் பேர் மணி...
இரண்டாவது வரில இருக்க காலம் பேர் புலி... ;)

நாமக்கல் சிபி said...

மக்கா,
மூனு நாள் ஊருல இல்லனா கூடி கும்மியடிச்சிடுவீங்க போல இருக்கே!!!

புலி,
பிளாக்கி சூப்பர்...

அதுவும் நம்மல மாதிரிதான் டைகர் பிஸ்கெட் சாப்பிடுதா??? வெரி குட்...

ஏம்பா எங்க வீட்டு பக்கத்து வீட்டு நாய் கூடதான் சிக்கன் சாப்பிடும், தயிர் சாதம் சாப்பிடும்... அதுக்காக சிக்கன், தயிர் சாதம் சாப்பிட்டா நாயா???

அதுவும் இல்லாமா நாய் எந்த விதத்துல கேட்டு போச்சு???.

எவ்வளவு அழகா இருக்கு... எவ்வளவு பாசமா விளையாடும் தெரியுமா???

அவரே பிளாக்கிய பாக்க முடியாத ஃபீலிங்ல எழுதியிருக்காரு... இதுல உள்குத்து, வெளிகுத்துனு அவரை கலாய்க்கறீங்களே!!!

நாமக்கல் சிபி said...

//இதுக்கு வெட்டி தான் பதில் சொல்லனும். வருவாரு வருவாரு... வெட்டி வருவீங்கள.... //
வராம போயிடுவோமா???

மூனு நாளா கலர் பாக்க போயிருந்தோம்பா!!! I mean Fall Color :-)

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...
// யாருய்யா அப்பாவி, வெட்டியும், ராமும் அப்பாவியா? கூவுறதுக்கு ஒரு அளவு வேணாம், அப்பாவியாம் அப்பாவி..... //

பேய் ஆவின்னு பயப்படற ராயல் அப்பாவிதான்..

காலேஜ்ல வாங்கி சாப்பிட்ட டைகர் பிஸ்கட் பத்தி சொல்லி பீல் பண்ண வச்ச வெட்டி அப்பாவி தான்...
//
கப்பி,
யூ ஆர் மை பெஸ்ட் பிரெண்ட் :-)

நாமக்கல் சிபி said...

//யாருய்யா அப்பாவி, வெட்டியும், ராமும் அப்பாவியா? கூவுறதுக்கு ஒரு அளவு வேணாம், அப்பாவியாம் அப்பாவி.....
//
புலி,
இதப்படிக்காம அவசரப்பட்டு உனக்கு சப்போர்ட் பண்ணிட்டனே!!!

நாகை சிவா said...

//உன்னைச் சொல்லி குற்றமில்லை!!! என்னைச் சொல்லி குற்றமில்லை!!!
காலம் செய்த குற்றம் புலி!!!
காலம் செய்த குற்றம் புலி!!! //

ஏன் இந்த படம் ஒட்டுற, சரி ஒட்டுறது ஒட்டுற ராசா பாட்டு அழகில இருந்து ஒட்டி இருக்கலாமல....

நானும், கப்பி, தல எல்லாம் சந்தோஷப்படுவோம்ல

நாகை சிவா said...

//பேய் ஆவின்னு பயப்படற ராயல் அப்பாவிதான்..

காலேஜ்ல வாங்கி சாப்பிட்ட டைகர் பிஸ்கட் பத்தி சொல்லி பீல் பண்ண வச்ச வெட்டி அப்பாவி தான்... //

கப்பி, நான் அவங்கள கலாய்க்குறேன் என்று சொல்லிவிட்டு நீயும் நம்ம பங்கும் போட்டு அவங்கள் கன்னா பின்னா பின்னி பெடல் எடுத்துக்கிட்டு இருக்கீங்க...... அது மாதிரி தானே இதுவும்.....:)))

நாகை சிவா said...

//முதல் வரில இருக்க காலம் பேர் மணி...
இரண்டாவது வரில இருக்க காலம் பேர் புலி... ;) //

மறுபடியுமா கப்பி, யோவ் ராம் இப்ப தெரிஞ்சுக்க யாரு நல்லவன், யாரு யோக்கியன் என்று....

அநாவசியமா ஒரு நல்லவன சந்தேகப்படாத.....

நாகை சிவா said...

//மூனு நாள் ஊருல இல்லனா கூடி கும்மியடிச்சிடுவீங்க போல இருக்கே!!//

நல்லா கேளு, வெட்டி.....ஒத்த ஆளா கஷ்டப்பட்டேன், இப்ப நீ வந்துட்டல அது போதும் எனக்கு ;)

//பிளாக்கி சூப்பர்...//

தாங்க்ஸ் நண்பா

//எவ்வளவு அழகா இருக்கு... எவ்வளவு பாசமா விளையாடும் தெரியுமா??? //

ஆமாம்ப்பா

//அவரே பிளாக்கிய பாக்க முடியாத ஃபீலிங்ல எழுதியிருக்காரு... இதுல உள்குத்து, வெளிகுத்துனு அவரை கலாய்க்கறீங்களே!!! //

மத்தவங்கள விட நீ என்ன புரிஞ்சுக்கிட்ட பாரு அது போதும் எனக்கு :)

நாகை சிவா said...

//மூனு நாளா கலர் பாக்க போயிருந்தோம்பா!!! I mean Fall Color :-) //

பாத்த கலரு கொஞ்சம் படமா காட்டுனா நாங்க எல்லாம் சந்தோஷப்படுவோம்ல.... (I also mean Fall Color :-) //

நாகை சிவா said...

//புலி,
இதப்படிக்காம அவசரப்பட்டு உனக்கு சப்போர்ட் பண்ணிட்டனே!!! //

வெட்டி, அந்த அப்பாவி மேட்டரையும் இந்த டைகர் பிஸ்கெட் மேட்டரையும் கன்பூஸ் பண்ணிக்காத அது வேற இது வேற....

நம்ம சங்கத்து சிங்கங்கள் கொள்ள கலகம் என்னும் தீ முட்டி குளிர் காய நினைக்கும் கயவர்களுக்கு நாம் இடம் கொடுக்க கூடாது. அம்புட்டு தான் சொல்வேன்.

கப்பி பய said...

//கப்பி, நான் அவங்கள கலாய்க்குறேன் என்று சொல்லிவிட்டு நீயும் நம்ம பங்கும் போட்டு அவங்கள் கன்னா பின்னா பின்னி பெடல் எடுத்துக்கிட்டு இருக்கீங்க...... அது மாதிரி தானே இதுவும்.....:)))
//

இந்த மாதிரி கேள்வி கேட்டா நீங்க பதிவு போட்டு கலாய்ச்சதை அவங்க மறந்துடுவாங்களா?? நான் அவங்க மேல பாசமா சொன்னதைக்கூட கலாய்க்கறேன்னு சொல்வதில் இருந்தே நீங்க ஒரு முடிவோடதான் இருக்கீங்கன்னு தெரியுது ;)

//மறுபடியுமா கப்பி, யோவ் ராம் இப்ப தெரிஞ்சுக்க யாரு நல்லவன், யாரு யோக்கியன் என்று....

அநாவசியமா ஒரு நல்லவன சந்தேகப்படாத.....
//

அந்த நல்லவன் பேரு கப்பி! ;))

நாமக்கல் சிபி said...

//நாகை சிவா said...
//புலி,
இதப்படிக்காம அவசரப்பட்டு உனக்கு சப்போர்ட் பண்ணிட்டனே!!! //

வெட்டி, அந்த அப்பாவி மேட்டரையும் இந்த டைகர் பிஸ்கெட் மேட்டரையும் கன்பூஸ் பண்ணிக்காத அது வேற இது வேற....

//
அது வேற இது வேறன்னு நானும் ஒத்துக்கறேன்...

மக்கா இதோட நானும் புலியும் சமாதானமாயிட்டோம்... எல்லாம் அடுத்த வீடு பாருங்க :-)

நாமக்கல் சிபி said...

//நாகை சிவா said...
//மூனு நாளா கலர் பாக்க போயிருந்தோம்பா!!! I mean Fall Color :-) //

பாத்த கலரு கொஞ்சம் படமா காட்டுனா நாங்க எல்லாம் சந்தோஷப்படுவோம்ல.... (I also mean Fall Color :-) //
//
புலி,
அடுத்த பதிவு அதுதான்...
ஆபிஸ்ல இருக்கேன்... வீட்டுக்கு போயி போட்டுடறேன் :-)

கீதா சாம்பசிவம் said...

superoo super, just remind me of our Mothi's Days. Fine post, and a good one too.

நாகை சிவா said...

/நீங்க ஒரு முடிவோடதான் இருக்கீங்கன்னு தெரியுது ;)//

கப்பி அந்த முடிவு என்னனு சொன்னா, எனக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்ல

//அந்த நல்லவன் பேரு கப்பி! ;)) //

உனக்கு இந்த விளம்பரம், நல்லா தான் இருந்த.....

நாகை சிவா said...

//அது வேற இது வேறன்னு நானும் ஒத்துக்கறேன்...

மக்கா இதோட நானும் புலியும் சமாதானமாயிட்டோம்... எல்லாம் அடுத்த வீடு பாருங்க :-) //

ஆங்.. இது மேட்டரு, சரி சரி எல்லாம் கலைச்சு போ., ஒருத்தன் மாட்டிட கூடாதே, கூடி நின்னு கும்மி அடிச்சுடுவீங்களே....

நாகை சிவா said...

//புலி,
அடுத்த பதிவு அதுதான்...
ஆபிஸ்ல இருக்கேன்... வீட்டுக்கு போயி போட்டுடறேன் :-) //

அதுக்காக காத்துக் கிடக்கிறோம் வெட்டி, போடு போடு

நாகை சிவா said...

//superoo super, just remind me of our Mothi's Days. Fine post, and a good one too. //

என்ன கீதாக்கா, பீட்டர் வுட்டு இருக்கீங்க. சரி யாருச்சும் தெரிஞ்சவங்கள கேட்டு புரிஞ்சுக்குறேன். எப்படி இருந்தாலும் நீங்க நல்லா தான் சொல்லி இருப்பீங்க. அதுக்கு ஒரு தாங்க்ஸ் உங்களுக்கு

மு.கார்த்திகேயன் said...

//ஏதாவது வில்லத்தனம் பண்ணி விட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி முகத்தை பாவமாக வைத்துக் கொள்வது.//

சிவா...உங்களை மாதிரின்னு ஒரு வரில சொல்லக்கூடாதா

துளசி கோபால் said...

அட இந்தச் செல்லம் நம்ம செல்லமா? இப்பத்தான் கவனிச்சேன்.
கப்புராஜா சூப்பரா இருக்கார்.

ஆமாம் எதுக்கு ரெட்டைச் சங்கிலி?

இப்பெல்லாம் ரெட்டைப்பட்டைச்செயின்தான் பேஷனாமெ? அப்படியா?

நாகை சிவா said...

/சிவா...உங்களை மாதிரின்னு ஒரு வரில சொல்லக்கூடாதா //

யோவ், கார்த்திக் இது எல்லாம் ரொம்ப சொல்லிட்டேன்.....

நாகை சிவா said...

//ஆமாம் எதுக்கு ரெட்டைச் சங்கிலி?//

ஒரு சங்கிலி தான், நீல கலரில் இருப்பது வாக்கிங் ரோப், வெளியில் போயிட்டு வந்து அப்படியே கழட்டாமல் விட்டு இருப்பார்கள்.

//இப்பெல்லாம் ரெட்டைப்பட்டைச்செயின்தான் பேஷனாமெ? அப்படியா? //

சரியா தெரியல, ஆனா ஏகப்பட்டது இருக்கு. மனுசுனுக்கு கூட அம்புட்டு பெல்ட் இருக்காது. ஏகப்பட்டது வச்சு இருக்காங்க. நம்ம பயலுக்கு கழுத்தில் போடுவதற்கு ஒரு சங்கலி பார்த்தேன். அத போட்டா நம்ம பய வெயிட் தாங்கமா கீழ விழுந்து விடுவான் போல இருக்கு. அந்த சங்கிலி போடுவதற்காகவே ஒரு லேபர் டாக் வாங்கலாம் என்று இருக்கேன்....:)

கால்கரி சிவா said...

ப்ளாக்கி சூப்பர் சிவா, இந்த பசங்க இப்படிதான் நம்மிடம் அன்பை காட்டி அடிமை படுத்திடுவாங்க

செல்வன் said...

நாகையாரே

நாங்களும் ஒரு நாய் வளர்த்தோம்.ஹ்ம்ம்...அனியாயமா கார்ப்பரேஷன் காரன் புடிச்சுட்டு போயிட்டான்.அன்னையிலிருந்து நாய் வளர்ப்பதில்லைன்னு முடிவு பண்ணிட்டோம். இப்ப நினைச்சாலும் சோகமா இருக்கு

நாகை சிவா said...

//ப்ளாக்கி சூப்பர் சிவா, இந்த பசங்க இப்படிதான் நம்மிடம் அன்பை காட்டி அடிமை படுத்திடுவாங்க //

உண்மை தான் சிவா அண்ணன், அநியாயத்துக்கு அன்பை காட்டுவார்கள், எந்த ஓரு பிரதி பலனும் எதிர்பாக்காமல்.

நாகை சிவா said...

//அன்னையிலிருந்து நாய் வளர்ப்பதில்லைன்னு முடிவு பண்ணிட்டோம். இப்ப நினைச்சாலும் சோகமா இருக்கு //

இது மிகவும் வருத்தமான செய்தி தான் செல்வன். ஆனால் எங்களால் இது போன்ற நாய்கள் இல்லாமல் இருக்க முடியாது என்று தான் தோன்றுகிறது.

Anonymous said...

So cute...you are lucky to have him :)

நாகை சிவா said...

நன்றி தூயா!

உங்க பெயர் ரொம்பவே வித்தியாசமா இருக்கு. :)