நம் பாரத்தின் தற்போதைய முதல் குடிமகனும், சாதிக்க துடிக்கும் இன்றைய இளைஞர்களின் கனவு நாயகனும், வாழும் வழிகாட்டியுமாகி திரு. அப்துல் காலம் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் இருந்து அவரின் வைர வரிகள் சில
இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே, உங்களுடைய நம்பிக்கைகளும், கனவுகளும், இலட்சியங்களும் தர்க்கப்படும் போது அந்த சிதைவுகளிடையே தேடிப்பாருங்கள். இடிபபடுக்களுக்குள்ளே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும். பயணம் தொடர்வதற்கு...
*******
துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் இன்று ஹீரோக்கள், ஜீரோக்கள் என்ற ஒரே வித்தியாசம் உள்ளது. ஒரு பக்கம் இருநூறு முந்நூறு ஹீரோக்களின் ஆதிக்கம். இன்னொருபக்கம் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கும் 96 கோடி மக்கள்! இது மாற்றப்பட வேண்டிய நிலவரம்
*******
என்னைப் பொறுத்தவரை அறிவியல் மார்க்கம் என்பது மனதுக்குள் மெல்லத் தவழ்ந்து வரும் தென்றல் போன்றது. எனக்கு எப்போதுமே ஆன்மீக மேம்பாட்டிற்கும் தன்னிலை அறிதலுக்கும் அறிவியலும் ஒரு மார்க்கமாகத் தோன்றுகிறது.*******
பிரச்சினைகளுக்கு முடிவுகளை காண முடியாமல் எந்தக் காரியத்தையும் இழுத்துக்கொண்டே போவது நமது வாழ்க்கையாகிவிட்டது. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பது தான் பிரச்சனை. பிரச்சனையில் தான் உள்ளார்ந்த துணிச்சலையும் ஞானத்தையும் வெளிப்படுத்த முடியும்.*******
நீண்ட நாள் முழுவதும் கணத்திறகு கணம் நேர்மையாய், துணிவாய், உண்மையாய் உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்.*******
வெற்றிகரமான சாதனைக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம், ஆக்கப்பூர்வமான சிந்தனை, கற்பனைக் கண்ணோட்டம் மற்றும் நம்பிக்கை.*******
வாழ்க்கையில் சந்தோஷம், நிறைவு, வெற்றி எல்லாமே சரியான முடிவுகளை, வெற்றிகரமான முடிவுகளை தேர்ந்தெடுப்பதை பொறுத்தே கிடைக்கின்றன.*******
எப்படிப்பட்ட ஏழையாக இருந்தாலும் சரி புறக்கணிக்கப்பட்டவராக அல்லது எளியவராக இருந்தாலும் சரி, யாருக்கும் விரக்தி மனப்பான்மை வந்து விடக்கூடாது என்பதைத் தான் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.*******
வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி வெறுவதற்கான சிறந்த வழி என்பதை நினைவுப்படுத்திக் கொண்டேன். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான எல்லா ஆதாரங்களும் மனதுக்குள் மறைந்துள்ளன. உணர்வு நிலையில் உறைந்து கிடைக்கும் சிந்தனைகள் வெளிக்கிளர்ந்து செழித்தோங்கி நிஜமாவதற்கான வாய்ப்பு கிடைத்தால் வெற்றி மீது வெற்றி வந்து சேரும். இறைவன் நமது மனதிலும், ஆளுமைத் பணியிலும் அயரா வலிமையும், திறமையும் சேர்த்துப் படைத்திருக்கிறான். இந்த ஆற்றலை அடையாளம் கண்டு கொண்டு வெளிப்படுத்திக் கொள்வதற்கு கை கொடுக்கிறது பிரார்த்தனை.*******
41 comments:
Words from Experienced man. I would like to keep it in my mind and follow also. Thanks for this posting.
//வாழ்க்கையில் சந்தோஷம், நிறைவு, வெற்றி எல்லாமே சரியான முடிவுகளை, வெற்றிகரமான முடிவுகளை தேர்ந்தெடுப்பதை பொறுத்தே கிடைக்கின்றன.//
இங்கதானே பிரச்சினையே. இப்படி முடிவெடுக்க சரியான காலம் இளம் வயசு. அப்போ கோட்டை விட்டுறாங்க நம்ம மக்கள். நல்லாதான் சொல்லி இருக்காருங்க
நாகை சிவா . அகில உலக அப்துல் கலாம் ரசிகர் மன்ற தலைவரா? மறக்காம வாழ்த்து செய்தி போட்டுடிங்க! நமக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் கலாம் அவர்களை!
நல்ல பதிவு சிவா. அருமையான வரிகளை இங்கு எடுத்தாண்டு இருக்கிறீர்கள். நாட்டின் முதல் குடிமகனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் முதல் குடிமகனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அவரின் பிறந்த நாளுக்கு அவர் எழுதியவைகளையே மேற்கோள் காட்டியிருப்பது அருமை.
இன்னும் பல ஆண்டுகள் நலமாக வாழ்ந்து நமக்கெல்லாம் வழிக்காட்ட ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்....
நாட்டின் முதல் குடிமகனின் பிறந்த நாளுக்கு மறக்காமல் பதிவிட்டு வாழ்த்தும் இனிய சிவாவுடன் நானும் இணைந்து இந்தியாவின் ஒளிமிக்க சுடரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.
//பிரச்சினைகளுக்கு முடிவுகளை காண முடியாமல் எந்தக் காரியத்தையும் இழுத்துக்கொண்டே போவது நமது வாழ்க்கையாகிவிட்டது.//
சிவா...!
மிக நல்ல கருத்து இது.
கலாம் நம் நாட்டுக்கு கிடைத்த விலைமதிப்பற்ற மாணிக்கம் !
திரு கலாம் அவர்களின் வைர வரிகளை நினைவூட்டியமைக்கு நன்றி.
அவர் நலமாக பல்லாண்டு வாழ்ந்து நமது இளைய சமுதாயத்திற்கு மேலும் தொண்டுகள் புரிய இறைவன் அருள்வானாக.
ஒளிச்சுடர் கலாமுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நாட்டின் முதல் குடிமகன் கலாம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...இன்னும் பல பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்து நம்மை வழி நடத்த ஆண்டவனை வேண்டுகிறேன்...
பங்கு சும்மா சொல்ல கூடாது...அடிச்சு தான் ஆடுற..அருமையான பதிவு அருமையான வாசகங்கள்....
வாழ்க கலாம்.வாழ்க நாடு.
கலாமின் வைரவரிகளை இட்டதற்கு நன்றி சிவா.
தலைமகனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! ஆசிரியர் பணி என்று சொல்லியுள்ளார்; என் கடன் பணி செய்து கிடப்பதே என்னும் கலாம், மேன்மேலும் பலருக்குத் தூண்டுசக்தியாய் ஒளிர, என் குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவரின் சார்பாக, பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும்!
//இறைவன் நமது மனதிலும், ஆளுமைத் பணியிலும் அயரா வலிமையும், திறமையும் சேர்த்துப் படைத்திருக்கிறான். இந்த ஆற்றலை அடையாளம் கண்டு கொண்டு வெளிப்படுத்திக் கொள்வதற்கு கை கொடுக்கிறது பிரார்த்தனை.//
இதை ஒரு ஆன்மீகத் தலைவர் சொல்வதற்கும் கலாம் சொல்வதற்கும் உள்ள வேறுபாடே தனி தான் !!!
Happy Birthday Sir!!!!
Long Live.
Ceylon Tamils
நம் குடியரசுத் தலைவரின் பிறந்த நாளில் அவர் சொல்லியிருக்கும் ஆக்கப்பூர்வமானக் கருத்துக்க்ளை உணர்வுபூர்வமாய் தொகுத்துப் பதிவிட்டிருக்கும் சிவாவிற்கு என் வாழ்த்துக்கள்.
குடியரசு தலைவர் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
வாழ்த்து சொல்லி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
//இங்கதானே பிரச்சினையே. இப்படி முடிவெடுக்க சரியான காலம் இளம் வயசு. அப்போ கோட்டை விட்டுறாங்க நம்ம மக்கள். நல்லாதான் சொல்லி இருக்காருங்க //
அது உண்மை தான் இளா, முக்கிய கால கட்டத்தில் (வாலிப வயசில்) சிற்றின்பங்களுக்கு பெரிய முக்கியத்துவத்தை பெரும்பாலும் கொடுத்து விடுகின்றோம். பலர் அதில் இருந்து தப்பி வருகின்றார்கள். சில அதிலே மாட்டிக் கொண்டு விடுகின்றார்கள், அது தான் வருத்தமான விசயம்.
//நாகை சிவா . அகில உலக அப்துல் கலாம் ரசிகர் மன்ற தலைவரா? மறக்காம வாழ்த்து செய்தி போட்டுடிங்க!//
இது வரைக்கும் இல்ல வவ்வால். இருந்தாலும் தவறு இல்லை என்று தோன்றுகிறது. ஒரு நல்லவன், வல்லவனுக்கு பின்னால் தைரியமாக செல்லலாம். :)
//பங்கு சும்மா சொல்ல கூடாது...அடிச்சு தான் ஆடுற..அருமையான பதிவு அருமையான வாசகங்கள்.... //
எல்லாம் உன் அசீர்வாதம் தான் பங்கு :)
//இதை ஒரு ஆன்மீகத் தலைவர் சொல்வதற்கும் கலாம் சொல்வதற்கும் உள்ள வேறுபாடே தனி தான் !!! //
உண்மை தான். கலாம் மதங்களை தாண்டி மதிக்கப்படும் ஒரு தலைவர்.
vaazhtha vayadillai :) vanangugiren!
//பொற்கொடி said...
vaazhtha vayadillai :) vanangugiren! //
வாங்க பொற்கொடி,
உடம்பு எல்லாம் சரியாடுச்சா?
வாழ்த்துக்களுக்கு நன்றி
//எல்லாம் உன் அசீர்வாதம் தான் பங்கு//
போட்டியே ஒரு போடு..ஸ்ட்ரெய்ட்டா வெளி குத்தாவே :-)
டாக்டர் அப்துல் கலாம், அவர்களுக்கு என்னுடைய மன்மார்ந்த வாழ்த்துக்கள்!
தொடரட்டும் அவரது கல்விச் சேவை!!!
வணக்கத்துடன்,
இந்தியன்.
வாங்க இந்தியன், முதல் தடவையாக வந்து இருக்கீங்க போல, அடிக்கடி வந்து போங்க.....
HmmmmA great personality. But I felt he lacked a word of power in the government.A persident's rights and his powers aren't used well by many of them.
உண்மை தான் ஜனனி. அவரின் அரசியல் செயல்பாடுகளில் கருத்து வேறுபாடு இருந்தாலும், இந்திய தேசத்திறக்காக சிந்தித்து தன் வாழ்வையும் அர்பணித்து கொண்ட கலாம் மேல் என்றுமே ஒரு மரியாதை உண்டு எனக்கு.
உங்க மேற்கோள்களை எல்லாம் ரொம்ப நல்ல தேர்ந்தெடுத்திருக்கீங்க. நான் இப்போ தான் 'அக்னி சிறகுகள்' படிக்க ஆரம்பிச்சிருக்கேன். ரொம்ப அருமையான கருத்துக்கள் உள்ள புத்தகம்.
உங்க மேற்கோள்களை எல்லாம் ரொம்ப நல்ல தேர்ந்தெடுத்திருக்கீங்க. நான் இப்போ தான் 'அக்னி சிறகுகள்' படிக்க ஆரம்பிச்சிருக்கேன். ரொம்ப அருமையான கருத்துக்கள் உள்ள புத்தகம்.
நன்றி மகாராணி!
முதல் வருகை. தொடர்ந்து வருமை புரியவும். :)
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் பங்காளி :-)
Naanellam cinemannu thiriyara neraththula ippadi oru post pottu pattayai kilappeetenga siva..
abdulkalam sir, happy birthday..
Neenga innum romba naal needuzhi vaazhanum, intha naadu sirakka
Siva, thanks for reminding me abdulkalam oh his birthday
siva, padikkanumnu vaanginen, agni sirakukal bookai.. padichchittu tharrennu vaangittu ponaaan en friend..kadasi varai tharave illai
appo miss pannina vishayaththai eppo un blogla padichchu manasu nimmathiyaachchu siva..thanks
இனிய தீபாவளி வாழ்த்துக்கள
புதுசா கட open பன்னியிருக்கேன். நேரம் கெடச்சா நம்ம கடப்பக்கம் வந்துட்டு போ்கனும் :)
http://findarun.blogspot.com/2006/10/blog-post_19.html
புலி என்ன அடிக்கடி பதுங்குது? கொஞ்ச நாளா ஆளே காணோம்?
தீபாவளி வாழ்த்த சொன்ன பங்கு ஷாமுக்கும், வேதாவுக்கு என் நன்றிகள். :)
//Naanellam cinemannu thiriyara neraththula ippadi oru post pottu pattayai kilappeetenga siva..//
நான் போட்டா என்ன நீங்க போட்டா என்ன கார்த்திக். யாரும் போடல, அத தான் சரி நாம் போடலாம் என்று தான். :)
//siva, padikkanumnu vaanginen, agni sirakukal bookai.. padichchittu tharrennu vaangittu ponaaan en friend..kadasi varai tharave illai//
பரவாயில்லை கார்த்திக், வேற புக் வாங்கி படிங்க. 200 ரூபாய், ஆங்கில பதிவு. நான் வாங்கி என் நண்பருக்கு அன்பளிப்பு கொடுத்தேன். நான் படிச்சது எல்லாம் தமிழில் தான் :)
//புதுசா கட open பன்னியிருக்கேன். நேரம் கெடச்சா நம்ம கடப்பக்கம் வந்துட்டு போ்கனும் :)//
சொல்லிட்டிங்கள அருண், சும்மா கட புகுந்து வாழ்த்திடுவோம். :)
//புலி என்ன அடிக்கடி பதுங்குது? கொஞ்ச நாளா ஆளே காணோம்? //
புலி கொஞ்சம் வடை தேடி ஒதுங்குனுச்சு. இப்ப வந்தாச்சு. :)
//நீங்க அடுத்த பதிவு போடறதுக்குள்ள கலாமோட அடுத்த பிறந்தநாளே வந்துடும் போலிருக்கு:) //
சே...சே... அப்படி எல்லாம் இல்லங்க வேதா, வருசத்துக்கு ஒரு தடவை தான் பிறந்த நாள் வரும்...
:)))))
Post a Comment