Monday, October 23, 2006

தீபாவளி கொண்டாட்டம்!

இந்த தீபாவளிக்கு முன்பு வரை தீபாவளி அன்று ஊரில் இல்லாமல் இருந்தது இல்லை(தாத்தா மறைந்த வருடத்தை தவிர). இந்த வருடம் ஊருக்கு போக முடியாது என்று தெரிந்தவுடன் மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அப்புறம் சிலதை பெற சிலதை இழப்பது தானே வாழ்க்கை(தத்துவம் நல்லா இருக்குல) என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லி மனதை தேற்றிக் கொண்டேன். இதுக்கு நடுவில் நம் வீட்டிற்கு போன் பண்ணும் போது எல்லாம் புது துணி எடுத்துட்டியானு ஒரே குடைச்சல். நானும் புது துணி ஒன்னுக்கு தான் இங்க குறைச்சல்னு சொல்லிட்டேன். வியாழக்கிழமை அன்னிக்கு காலையில தலைநகரத்தில் இருக்கும் நம்ம பய போன் பண்ணி என்ன சிவா, இந்த தடவை தீபாவளிக்கு வீட்டுக்கு போக முடியாம போச்சேனு பீல் பண்ணி நம்மளையும் பீல் பண்ண வச்சுட்டான். டேய், பேசாம நீ இங்க வாடா நாம் எதாச்சும் பண்ணலாம் அவனை கூப்பிட்டேன், அது சரியா வராது நீங்க இங்க வாங்க நான் மத்த பசங்களையும் கூப்பிடுறேன் சொல்ல, இதுவும் நல்ல ஐடியாவே இருக்குனு உடனே கிளம்பியாச்சு. வியாழன் இரவு அங்க போயிட்டு அடுத்த நாள் சமைக்க வேண்டியது எல்லாம் வாங்கிட்டு, நல்லா சாப்பிட்டுட்டு தூங்கியாச்சு.

வெள்ளிக்கிழமை நாம எப்படி தீபாவளி கொண்டாடுவது என்று திட்டம் வகுக்கும் படலம் ஆரம்பித்தது. பசங்க ஆளுக்கு ஒன்னா சொல்லிக்கிட்டு இருந்தாங்க, நாம நாட்டாமை மாதிரி நடுவில் புகுந்து புது துணி எடுக்குறோம், சுழியம், வடை, பாயசத்துடன் செய்து சாப்பிடுறோம், மத்த பசங்களை போயி பாக்குறோம். இது இந்த நாட்டாமை தீர்ப்பு எவனும் தீர்ப்ப மாத்த சொல்லக்கூடாது, வண்டிய உடுங்கடா டிரஸ் எடுக்க போவோம் சொல்லிட்டேன். டிரஸ் எடுக்க போனா ஒரு கடை கூட இல்ல. என்னடானு பாத்தா நைட் எட்டு மணிக்கு மேல தான் திறப்பாங்க சொல்லிட்டானுங்க. சரினு மத்த தமிழ் பசங்களை பாக்கலாம் போயி எல்லா மக்களையும் பார்த்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம் என்பதை விட நல்லா சாப்பிட்டோம். அப்பால போயி டிரஸ் எடுத்துட்டு மறுபடியும் போய் மத்த பசங்களை பார்த்துட்டு தீபாவளிக்கு அவர் அவர்கள் ஊரில் அடித்த கூத்துக்களை எல்லாம் சொல்லி மகிழ்ந்தோம். வீட்டிற்கு வர மணி 2.30 ஆச்சு.

தீபாவளி அன்று நல்லா தூங்கிட்டு இருக்கும் போது அதிகாலையில்(7.20) இல்ல இல்ல நடு ராத்திரினு கூட சொல்லாம் நம்ம கைப்பேசி தூது வருமா தூது வருமா சவுண்டு விட எடுத்து பாத்தா வேற யாரு, இந்த புண்ணியவான பெற்ற மகான்கள் தான். அவங்கிட்ட வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொண்டு நம் பணியை தொடர முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கும் போது நம்ம பய வந்து ஒரு அதிமுக்கியமான கேள்விய கேட்டான். சிவா, தலைக்கு எண்ணெய் வைக்கனும், உன்கிட்ட நல்லெண்ணெய், அரப்பு, சீயக்காய் எல்லாம் வச்சு இருக்கியானு கேட்டான். டேய், நல்ல நாள் அதுமா என்ன கொலைக்காரனா ஆக்காம ஒடிப் போயிடுனு சொல்லிட்டு விட்ட பணிய தொடர போன சமயத்தில் வேற ஒருத்தன் காபியுடன் வந்தான். படுக்கை காபி கொடுக்கும், நீ வாழ்க உன் குடும்பம் வாழ்கனு சொல்லிட்டு காபி கொடுடா கேட்க போயி பல் தேய்ச்சுட்டு வாங்குறான். டேய் எங்க இருந்துடா வறீங்க நீங்க எல்லாம், போயி என்ன என்ன பண்ண சொன்னேனூ அத பண்ணுங்கடா சொல்லிட்டு காபிய குடிச்சு முடிச்சுட்டு சேம் ஜாப்பை தொடர போகலாம்னா வந்தான்ய்யா மறுபடியும் சிவா தலைக்கு எண்ணெய் வைக்கனும் என்பது சாஸ்த்திரம். அத பண்ணாட்டி அப்புறம் என்ன தீபாவளினு கேட்க சரி நம்ம பய ரொம்ப தான் பீல் பண்ணுறான் சொல்லிட்டு நீ ஒன்னு பண்ணு, சமையல் அறையில் இருக்கும் கார்ன் ஆயிலையோ இல்ல தேங்காய் எண்ணெய்யோ எடுத்து தேச்சுக்கோ எந்த எண்ணெயா இருந்தாலும் மனதில் இறைவனை நினைத்துட்டு தேச்சா அது நல்லெண்ணெய் தான் என்று ஒரு சூப்பர் தத்துவம் + ஐடியா கொடுத்தேன். அவன் தேங்காய் எண்ணெய எடுத்துக்கிட்டு வந்து கேட்டான் பாருங்க அடுத்து ஒரு கேள்வி, மாப்ஸ் நான் நிற்கிற இடத்தில் இருந்து கிழக்கு பக்கம் ஏதுனு சொல்லுனான். மவனே சொல்லிட்டு அடுத்த வார்த்தை சொல்லங்காட்டியும், நம்ம முகம் போன போக்கை பாத்துட்டு ஏதும் கேட்காம ஒடி போயிட்டான். ஒரு வழியா எல்லாரும் குளிச்சு முடிச்சுட்டு புது துணி எல்லாம் போட்டு சாமிக்கிட்ட ஒரு பேரம் நடத்தி முடிச்சுட்டு வந்து பாத்தா வடையையும் காணாம், சுழியத்தையும் காணாம். டேய் என்னங்கடா எதையும் காணாம் கேட்டா, நீ வடைக்கும், சுழியத்துக்கும் தேவையான எதையும் வாங்கல அப்புறம் எப்படினு நம்மளையே எதிர் கேள்வி கேட்குறானுங்க. சரி இது இப்ப வேலைக்கு ஆகாதுனு வச்ச தோசைய சாப்பிட்டுட்டு, ஒன்னும் பிரச்சனை இல்ல நாம அந்த வடை, சுழியம் மேட்டர கொஞ்ச நேரத்துக்கு போஸ்ட் போன் பண்ணிக்கலாம் என்று சொல்லிட்டு மற்ற பசங்களை பார்க்க போயிட்டு அப்படியே வடை, பாயாசம் வைப்பதுக்கு தேவையான மேட்டரையும் வாங்கி கொடுத்துட்டு நம்ம பசங்க கிட்ட எதை எப்படி செய்யனும் என்பதை சொல்லிட்டு நாம் எஸ் ஆயிட்டோம். நம் அலுவலக மக்களை பார்க்க. வெல்லம் கிடைக்கல அதுனால சுழியம் கேன்சல்.

ஆனாலும் நம்ம பசங்க கெட்டிக்கார பசங்க, என்ன சொன்னமோ அதை கரேட்டா பண்ணி இருந்தாங்க, சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், பாயாசம் என்று சூப்பரா பண்ணி இருந்தானுங்க. வடை என்னடா ஆச்சுனு கேட்டா மிக்ஸ்சில மாவு ஒடிக்கிட்டு இருக்குனூங்க. சரினுட்டு சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிட்டு நம் நாட்டு மக்களுக்கு போன் பண்ண மறுபடியும் எஸ் ஆயிட்டேன். போன கொஞ்ச நேரத்தில் நம்ம பய போன் பண்ணி வடை போடுவதில் கொஞ்சம் சிக்கலா இருக்கு வந்து சீக்கிரம் தீர்த்து வைப்புனு கேட்க, சிக்கல் என்னும் ஊருக்கு பக்கத்தில் இருந்து வரும் நமக்கே சிக்கல் சவால் விடுவதானு போயி என்னனு கேட்டா, வடை தட்ட வர மாட்டேங்குதுனாங்க, ஒத்துங்கடா சொல்லிட்டு வீராப்பா நானும் வடைய தட்ட முயற்சி செய்து பார்த்தேன். ஒன்னும் சரியா வரல, சரி நம்ம அம்மாவுக்கு போன் பண்ணி என்ன பண்ணலாம் என்று கேட்போம் திங்க் பண்ணும் போதே வடைய போண்டா ஆக்கிட்டா என்னனு ஒரு சின்ன சின்னதா புடிச்சி போட்டா சூப்பர வந்துச்சு. சரி எல்லா மாவையும் அது மாதிரி போட்டு எடுத்தேன். வடைக்கு தேங்காய் சட்னி வச்சு சாப்பிட்டா சூப்பரா இருக்கும்னு பக்கத்தில் நின்னு வேடிக்கை பாத்துட்டு இருந்த பய சொல்ல, தேங்காய் இங்க கிடைக்காது இருந்தாலும் நீ சட்னிக்கு ஆசைப்பட்டுட்ட அதனால் வெங்காயம், தக்காளி எடுத்து வெட்டுனு அவனுக்கு ஒரு வேல கொடுத்து சட்னியும் ரெடி பண்ணியாச்சு.

நம்ம மற்ற பசங்களும் நம்ம வீட்டுக்கு வர அவங்களுக்கு வடை, பாயசம் கொடுக்க அதில் ஒருத்தன் வடை பார்த்துட்டு என்ன இது சிக்கன் 65 மாதிரி இருக்குனு கேட்டுட்டான். அவன் தலைய தட்டி சாப்பிட்டா வடை மாதிரி இருக்குல பேசமா சாப்பிட்டு கிளம்புனு சொல்லி போய் மற்ற பசங்களை பாக்க போயி இருந்தாம்.














சும்மா சொல்லக்கூடாது எல்லாம் பய புள்ளங்களும் பாச மழையில் நம்மள நணைய வச்சுட்டானுங்க. அதுவும் ஒரு வீட்டில் மத்தாப்பு வேற வச்சு இருந்தாங்க, அதை கொளுத்தி வெடி மேட்டரையும் சால்வ் பண்ணியாச்சு. அதன் பிறகு ஒரு மால் சென்று ஷாப்பிங் பண்ணிட்டு (பார்த்துட்டு இது தான் சரியா இருக்கும்) அங்க இருக்கும் பவுலிங், பில்லியட்ஸ் எல்லாம் நம்ம பசங்க விளையாட அதையும் வேடிக்கை பாத்துட்டு, ஐஸ்கீரிம் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு அதை சர்வ் பண்ணுன பொண்ண மறுபடியும் கூப்பிட்டு நீங்க கொடுத்த ஐஸ்கீரிம் சாப்பிட்டு தலைவலி வந்துடுச்சு அதனால் நல்லா காபியா ஒன்னு கொடுங்க சொல்லி வாங்கி குடிச்சுட்டு ஒரு வழியா 2 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். அப்புறம் எங்க தூங்குறது, பசங்களோடு மறுபடியும் கதை அடிச்சுட்டு, படம் பாத்துட்டு காலையில் 7 மணிக்கு செக் இன் போயி நின்னு நம்ம இடத்துக்கும் வந்து சேர்ந்தாச்சு.

என்ன தான் இந்த தடவை தீபாவளியை கொஞ்சம் மகிழ்ச்சியாக நண்பர்களுடன் கொண்டாடி இருந்தாலும், நம்ம ஊர்ல இல்லயே என்ற ஏக்கம் ஒரு ஒரமாக இருக்க தான் செய்தது.

65 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//நம்ம மற்ற பசங்களும் நம்ம வீட்டுக்கு வர அவங்களுக்கு வடை, பாயசம் கொடுக்க அதில் ஒருத்தன் வடை பார்த்துட்டு என்ன இது சிக்கன் 65 மாதிரி இருக்குனு கேட்டுட்டான்//

படத்தில் அப்படித்தான் இருக்கு !

தீபாவளி கலக்கலாக கொண்டாடியிருக்கிறீர்களே ! ஊரில் கொண்டாடாத குறை நீங்கிவிட்டதே !

நாகை சிவா said...

கண்ணன்,
நீங்களுமா....

உண்மை தான், இந்த தீபாவளி கொஞ்சம் கலகலப்பாக தான் சென்றது.

அங்கு எப்படி, சிங்கையில் ஒரு கலக்கு கலக்கி வீட்டீர்களா?

இலவசக்கொத்தனார் said...

யோவ் புளி, (சாரி சாம்பார், ரசமுன்னு படிச்ச உடனே புலி புளியாகிப் போச்சு)

அதான் கைவசம் கண்ணி வெடி அது இதுன்னு ஸ்டாக் இருக்குமே, அதுல ரெண்டு போட்டு கொண்டாடி இருக்க வேண்டியது தானே. பட்டாசு மேட்டர் ஒண்ணுதானே மிஸ்ஸிங்.

'சிலதை பெற சிலதை இழப்பது தானே வாழ்க்கை'

இதத்தான் எங்க ஊரு பக்கத்துல 'ஆம்லேட் சாப்பிடணமுன்னா முட்டை உடைஞ்சுதானே ஆகணமு'ன்னு சொல்லுவோம். நல்ல தத்துவந்தான் மக்கா.

நாகை சிவா said...

//அதான் கைவசம் கண்ணி வெடி அது இதுன்னு ஸ்டாக் இருக்குமே, அதுல ரெண்டு போட்டு கொண்டாடி இருக்க வேண்டியது தானே//

நான் தீபாவளிய எங்க வீட்டில் கொண்டாட முடியலனு பீல் பண்ணினா நீங்க மாமியார் வீட்டில் கொண்டாட ஐடியா கொடுக்குறீங்களே,,, இது நியாயமா கொத்துஸ்.....

//'ஆம்லேட் சாப்பிடணமுன்னா முட்டை உடைஞ்சுதானே ஆகணமு'ன்னு //

தானை தலைவனின் தத்துவம் நம்பர் # 12345. தேவ் நோட் பண்ணுப்பா....

நாமக்கல் சிபி said...

//நான் நிற்கிற இடத்தில் இருந்து கிழக்கு பக்கம் ஏதுனு சொல்லுனான். //
புலி,
சூரியன் காலைல எங்க இருக்கோ அது தான் கிழக்கு... இப்ப நான் இருக்குற திசைய பாத்து கும்பிட்டுக்கோனு டயலாக் அடிச்சிருக்க வேண்டியது தானே ;)

பராவாயில்லை... தீபாவளி அட்டகாசமா கொண்டாடியிருக்கீங்க ;)

கப்பி | Kappi said...

//. அப்புறம் சிலதை பெற சிலதை இழப்பது தானே வாழ்க்கை(தத்துவம் நல்லா இருக்குல) //

இந்த தத்துபித்துவத்தையெல்லாம் சொல்ற வேலையை மட்டும் நீ பாரு..அது நல்லாயில்ல..நல்லாயிருக்குன்னு நாங்க சொல்லிக்கறோம் ;))

//தேங்காய் எண்ணெய் நண்பன் //

எல்லாம் தேடி வந்து நமக்குன்னு சிக்குவாங்களோ? ;))

சிக்கனோ, பஜ்ஜியோ, வடையோ சாப்பிட நல்லாயிருந்துச்சா...அவ்வளவுதான்..அதுக்கு மேல எதுக்கு ஆராய்ச்சி ;))

தல சொன்ன மாதிரி நல்லபடியா கொண்டாடியிருக்கீங்க...என்ன அந்த கண்ணிவெடி ரெண்டு பத்த வச்சிருக்கலாம் ;)

கைப்புள்ள said...

யோவ் புலி கபூர்,
எங்கேயா வடையில ஓட்டையே காணோம்? தின்னுட்டியா?

கைப்புள்ள said...

யோவ் புலி கபூர்,
எங்கேயா வடையில ஓட்டையே காணோம்? தின்னுட்டியா?

கதிர் said...

சிவா,

வடை சுட தெரியாட்டா என்ன?
வடைய சாப்பிட தெரியும்ணு சொல்லிட்டு எஸ்
ஆயிறணும்.

வலைப்பதிவர் மீட்டிங்ல மட்டுமே யூஸ் பண்ற
வஸ்துவ செஞ்சு தீபாவளிய கொண்டாடி இருக்கீங்க. :)

இங்கு வலைப்பதிவர் மாநாட்டுக்கு தேவையான
போண்டாக்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும்
ஆர்டரின் பேரில் செய்துதரப்படும்னு ஒரு போர்டு
போட்டுடுங்க புலியாரே! :)))

இப்போல்லாம் அதிகமா மாநாடு நடக்குதாம்!!

அருமையா தீபாவளி கொண்டாடியதற்கு வாழ்த்துக்கள்!

நாகை சிவா said...

//யோவ் புலி கபூர்,
எங்கேயா வடையில ஓட்டையே காணோம்? தின்னுட்டியா? //

யோவ் அதான் வடை தட்டவே வரலனு சொல்லி தானே அத போண்டா மாதிரி போட்டோம். அப்புறம் என்ன கேள்வி....

நாகை சிவா said...

//சூரியன் காலைல எங்க இருக்கோ அது தான் கிழக்கு...//

வெட்டி இது எல்லாம் அதிகம் சொல்லிட்டேன். அது கூடவா தெரியாது எங்களுக்கு. ப்ளாட்டு வெளிய போய் அவனே பாத்துக்கிட்டா எனக்கு என்ன வந்துச்சு. அதக் கூட செய்யாம தொல்லை கொடுத்துச்சு அந்த ஜந்து.

//இப்ப நான் இருக்குற திசைய பாத்து கும்பிட்டுக்கோனு டயலாக் அடிச்சிருக்க வேண்டியது தானே ;)//

இது சூப்பர். அவன்க்கிட்ட ஏற்கனவே இந்த டயலாக் அடிச்சுட்டேன். தீபாவளி அன்னிக்கு என் காலில் விழ்ந்து ஆசிர்வாதம் வாங்கிகோ அப்ப தான் நான் தீபாவளி காசு தருவேன் என்று....

நாகை சிவா said...

//இந்த தத்துபித்துவத்தையெல்லாம் சொல்ற வேலையை மட்டும் நீ பாரு..அது நல்லாயில்ல..நல்லாயிருக்குன்னு நாங்க சொல்லிக்கறோம் ;))//

சரி, நீயே சொல்லு, நல்லா இருக்கா இல்லயா?


//எல்லாம் தேடி வந்து நமக்குன்னு சிக்குவாங்களோ? ;))//

இனம் இனத்தோடு தானே சேரும் அப்படினு நான் பீல் பண்ணுவது இல்ல இப்பவெல்லாம்.

//சிக்கனோ, பஜ்ஜியோ, வடையோ சாப்பிட நல்லாயிருந்துச்சா...அவ்வளவுதான்..அதுக்கு மேல எதுக்கு ஆராய்ச்சி ;))//

அதானே... என் இனம்டா நீ :)

//என்ன அந்த கண்ணிவெடி ரெண்டு பத்த வச்சிருக்கலாம் ;) //

கப்பி......... வேணாம் .... அப்புறம் நான் .........

நாகை சிவா said...

//இங்கு வலைப்பதிவர் மாநாட்டுக்கு தேவையான
போண்டாக்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும்
ஆர்டரின் பேரில் செய்துதரப்படும்னு ஒரு போர்டு
போட்டுடுங்க புலியாரே! :)))//

போட்டு விடலாம் தம்பிண்ணன். வளைகுடா கிளைக்கு தம்பி அவர்களை அணுகவும் என்பதையும் சேர்த்து போட்டு விடலாம்....

//வலைப்பதிவர் மீட்டிங்ல மட்டுமே யூஸ் பண்ற
வஸ்துவ செஞ்சு தீபாவளிய கொண்டாடி இருக்கீங்க. :)//

வலைபதிவர் மீட்டிங் க்கு மட்டும் என்று கன்பார்மே பண்ணிட்டீங்களா?

நாமக்கல் சிபி said...

//வெட்டி இது எல்லாம் அதிகம் சொல்லிட்டேன். அது கூடவா தெரியாது எங்களுக்கு. //
புலி வழக்கம் போல தப்பா புரிஞ்சிக்கிட்ட பாத்தியா???

நான் சொன்னது... நீ அந்த பையண்ட்ட சொல்ல வேண்டிய டயலாக்...

வடையெல்லாம் பொண்டா மாதிரி சுடற உனக்கு கிழக்கிலதான் சூரியன் வரும்னு தெரியாதா என்ன? ;)

Santhosh said...

புலி,
நல்லாத்தான் கொண்டாடி இருக்கீரு தீபாவளியை. உனக்கு மத்தாப்பு வெடிக்கிறதை பாக்குற பாக்கியமாவது கிடைச்சதே இங்கன பட்டாசை பாக்க கூட முடியலை.

Unknown said...

நாகையாரே

கலக்கலா தான் தீபாவளி கொண்டாடி இருக்கிறீர்கள்.

இங்கே தீபாவளி அன்னிக்கு ஊரில் இருக்கும் அத்தனை பழைய நண்பர்களுக்கும் தேடி, தேடி போனில் வாழ்த்து சொன்னேன். சாயந்திரமா கல்லூரியில் புட்பால் அணிக்கு பட்டாசு வெடித்து வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். தீபாவளி மூட் வந்துருச்சு.

நியூஜெர்சி மாதிரி இடத்தில் ஏகப்பட்ட இந்தியர்கள். அங்கே இருந்திருந்தா இந்தியா மாதிரியே தீபாவளியை கோலாகலமா கொண்டாடி இருக்கலாம் என்கிறார்கள்

Anonymous said...

:) Wow you had a great Deepawali :)
Enakkum athu chick65 poala thaan irukku, but naan athai solla matten.paavam ungala en veruppeththanum :P

கைப்புள்ள said...

//யோவ் அதான் வடை தட்டவே வரலனு சொல்லி தானே அத போண்டா மாதிரி போட்டோம். அப்புறம் என்ன கேள்வி....//

அப்புறம் என்ன ஃபிராடுத் தனம் வடைன்னு. நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு...தீபாவளிக்கு போண்டா சாப்புட்டோம்னு.

Unknown said...

வடைப் போட்டோ நல்லா இருக்குய்யா... ஆமா இந்த வடைக்கு நேம் என்னங்க புலிக்குட்டி?

எப்படியோ தீபாவளியை ஒரு வழி பண்ணிட்டீங்க... கூட இருந்து தீபாவளியைப் பார்த்த பிலீங் பதிவில்ல கொண்டு வந்துட்டீங்க புலிக்குட்டி

நாகை சிவா said...

//புலி வழக்கம் போல தப்பா புரிஞ்சிக்கிட்ட பாத்தியா???
நான் சொன்னது... நீ அந்த பையண்ட்ட சொல்ல வேண்டிய டயலாக்...//

வெட்டி, சாரி கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.....

//வடையெல்லாம் பொண்டா மாதிரி சுடற உனக்கு கிழக்கிலதான் சூரியன் வரும்னு தெரியாதா என்ன? ;) //

ஏன் இப்படி சபைல வச்சி அசிங்கப்படுத்துற.... :(

நாகை சிவா said...

//உனக்கு மத்தாப்பு வெடிக்கிறதை பாக்குற பாக்கியமாவது கிடைச்சதே இங்கன பட்டாசை பாக்க கூட முடியலை. //

என்ன பங்கு சொல்லுற, அங்கன சும்மா கலக்கலா கொண்டாடலாம் என்று நினைத்து இருந்தேனே?

நாகை சிவா said...

//இங்கே தீபாவளி அன்னிக்கு ஊரில் இருக்கும் அத்தனை பழைய நண்பர்களுக்கும் தேடி, தேடி போனில் வாழ்த்து சொன்னேன். //

நல்ல விசயம் செல்வன். பண்டிகை திருநாளில் வாழ்த்து சொல்வது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். :)

//சாயந்திரமா கல்லூரியில் புட்பால் அணிக்கு பட்டாசு வெடித்து வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். தீபாவளி மூட் வந்துருச்சு.//

அங்கயும் நிலைமை அப்படி தானா? நாம் தான் இப்படி பாத்தா, எல்லாம் அப்படி தானா?

Geetha Sambasivam said...

உங்களாலே மறக்கமுடியாத தீபாவளின்னு நினைக்கிறேன். என்னடா கொஞ்ச நாளா புலி பதுங்குதுன்னு பார்த்தா இந்த வடைக்குத் தானா? நான் என்னமோன்னு இல்ல நினைச்சேன்.

நாகை சிவா said...

//Enakkum athu chick65 poala thaan irukku, but naan athai solla matten.paavam ungala en veruppeththanum :P //

சொல்லுறதையும் சொல்லிட்டு அப்புறம் என்ன வெறுப்பேத்த வேணாம் ஒரு டயலாக் வேற.... ம் நடத்துங்க....

நாகை சிவா said...

//அப்புறம் என்ன ஃபிராடுத் தனம் வடைன்னு. நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு...தீபாவளிக்கு போண்டா சாப்புட்டோம்னு. //

யோவ் எதுய்யா பிராடு தனம், வடை சைஸ் தான் மாறி இருக்கு, டேஸ்ட் எல்லாம் வடை மாதிரி தான் இருந்தது. அப்புறம் என்ன....

போண்டா தீபாவளி அன்னிக்கு சாப்பிடல, நாங்க உண்மைய மட்டும் தான் சொல்வோம். செய்து சாப்பிட்டு என்னைக்கு சாப்பிட்டேன் என்று சொல்லுறேன்....

வீட்ல அம்மா செய்து போடுவதை 4 நாள் சாப்பிட்டுக்கிட்டு இருக்குற மிதப்பில் கண்டப்படி பேசிக்கிட்டு திரியாத, இரண்டு நாள்ல மறுபடியும் காட்டுக்குள் போகனும் சொல்லிட்டேன்...

நாகை சிவா said...

//கூட இருந்து தீபாவளியைப் பார்த்த பிலீங் பதிவில்ல கொண்டு வந்துட்டீங்க புலிக்குட்டி //

ரொம்ப தாங்கஸ் போர்வாள்!

//வடைப் போட்டோ நல்லா இருக்குய்யா... ஆமா இந்த வடைக்கு நேம் என்னங்க புலிக்குட்டி?//

ஏதும் காமெடி இல்லயே...
ஒத்த வடை என்று சொல்லாம் இல்ல உளுந்து வடை என்றும் சொல்லாம்.

நாகை சிவா said...

//குடும்பத்தோடு கொண்டாட முடியாவிட்டாலும் நண்பர்களோடு சேர்ந்து வெகு அமர்க்களமாக கொண்டாடிவிட்டீர்கள், அதுவும் ஒரு நல்ல அனுபவம் தானே:) //

நல்ல அனுபவம் என்பதை மறுப்பதற்கு இல்லை. இருந்தாலும் நம்ம ஊரில் கிடைக்கும் ஒரு சில விசயங்கள் மிஸ்சிங்.....

பொட்டு வைத்த முகம், பூ வைத்த கூந்தல், ஏரியா ஏரியாவா போயி வெடி வைத்து அடிக்கும் ரகளை, பள்ளி, கல்லூரி நண்பர்கள் போன்ற பல விசயங்கள் இந்த வருடம் மிஸ்சிங்.

கதிர் said...

சும்மா சொல்லக்கூடாது போண்டாவ இப்படி பொன்னிறமா வறுத்தெடுக்க ஒரு பக்குவம் வேணும்யா! அது உங்கிட்ட இருக்கு. அதவிட போண்டா போடற கை போட்டாவும் அழகா புடிக்கும்னு அடிச்சு சொல்லுதய்யா அந்த புகைப்படம். டாப் ஆங்கிள்ல இருந்து எடுத்துருக்கே.

நல்லா இருக்கு, எல்லாமே நல்லா இருக்கு!

உந்தன்
கைப்பக்குவத்தில்
போண்டாவும்
குலோப்
ஜாமூன்
ஆனதே !!!!

கவித! கவித!!

//வலைப்பதிவர் மீட்டிங்ல மட்டுமே யூஸ் பண்ற
வஸ்துவ செஞ்சு தீபாவளிய கொண்டாடி இருக்கீங்க. :)//

//வலைபதிவர் மீட்டிங் க்கு மட்டும் என்று கன்பார்மே பண்ணிட்டீங்களா?//

அட இதுகூட தெரியாதா புலி!

ஹய்யோ!! ஹய்யோ!!!

வல்லிசிம்ஹன் said...

சிவா, ஊரில இருக்கிற எல்லோரும் உங்களை நினைத்து இருப்பார்கள்.
இது போல் நண்பர்கள் கூடி நல்ல பொழுதாகக் கழித்ததே
இனிமை.
வரும் தீபாவளி ஊருக்கு வந்து விடுவீர்கள்.

Queen said...

உங்க தீபாவளி கதையை கேட்கும் போது பொறாமையா இருக்கு சிவா. ஜாலியா கொண்டாடி இருக்கீங்க. இதை படிக்கிறப்போ hostel ல்ல இருக்கும் போது celebrate பண்ணினதெல்லாம் ஞாபகம் வருது.

Syam said...

அட அட அட சும்மா பூந்து வெளயாடி இருக்கீங்க போல இருக்கு தீவாளிக்கு...அந்த வடை பார்க்க எப்படி இருந்தாலும் நாக்குல ஜொள்ளு ஊருதுபா :-)

Syam said...

//என்ன தான் இந்த தடவை தீபாவளியை கொஞ்சம் மகிழ்ச்சியாக நண்பர்களுடன் கொண்டாடி இருந்தாலும், நம்ம ஊர்ல இல்லயே என்ற ஏக்கம் ஒரு ஒரமாக இருக்க தான் செய்தது//

சொன்னியே ஒரு வார்த்தை...நூத்துக்கு நூறு சரி... :-)

Arunkumar said...

enakkum inda diwali nanbargaloda thaan... iduvum oru thani experience.

neenga vera enga oora nyabaga paduthuneenga... :(

vadayo bondavo bajjiyo, oru parcel anuppi vainga !!!

approm, anda sooriyan udikkira matter... anda payanukke overaa therla?

நாகை சிவா said...

//உங்களாலே மறக்கமுடியாத தீபாவளின்னு நினைக்கிறேன்.//

கண்டிப்பாக கீதாக்கா ....

//என்னடா கொஞ்ச நாளா புலி பதுங்குதுன்னு பார்த்தா இந்த வடைக்குத் தானா? //

புலி புல்ல தான் திங்க கூடாது. வடை சாப்பிடலாம்ல அதான்.

நாகை சிவா said...

//சும்மா சொல்லக்கூடாது போண்டாவ இப்படி பொன்னிறமா வறுத்தெடுக்க ஒரு பக்குவம் வேணும்யா! அது உங்கிட்ட இருக்கு. அதவிட போண்டா போடற கை போட்டாவும் அழகா புடிக்கும்னு அடிச்சு சொல்லுதய்யா அந்த புகைப்படம்.//

என்ன தம்பிண்ணன், ஏதோ ஒரு முடிவுல இருக்கிற மாதிரி தெரியுது.... நான் உங்க தம்பி போல... :))

//உந்தன்
கைப்பக்குவத்தில்
போண்டாவும்
குலோப்
ஜாமூன்
ஆனதே !!!!//

நம்ம கைப்பக்குவத்தில் ஏதுவும் அந்த பெயருக்கு தகுந்த மாதிரி வராது. மாறி தான் வரும். :)

அப்பால நம்ம தம்பி கவுஜ சொல்லி இருக்காரு. வந்து திறனாய்வு செய்பவர்கள் செய்யலாம்....

//அட இதுகூட தெரியாதா புலி!

ஹய்யோ!! ஹய்யோ!!! //

என்ன பண்ணுறது தம்பிண்ணன். நாம தான் இன்னும் யாரையும் மீட் பண்ணல :)

நாகை சிவா said...

//சிவா, ஊரில இருக்கிற எல்லோரும் உங்களை நினைத்து இருப்பார்கள்.//

கண்டிப்பாக ....


//வரும் தீபாவளி ஊருக்கு வந்து விடுவீர்கள். //

என்னது வரும் தீபாவளிக்காக, இப்பவே முடிவு பண்ணிட்டேன். என்ன ஆனாலும் சரி பொங்கலுக்கு ஊரில் தான் என்று.

rv said...

ஊருக்கே வராமல் வடை சுட்டு தீபாவளியா? நல்லாத்தான் இருக்கு.

வாழ்த்துகள்! அடுத்த வருஷத்துக்கு அட்வான்ஸுன்னு வச்சுக்கோங்க.

பொங்கலப்போ பார்ப்போம். :))

கதிர் said...

//என்னது வரும் தீபாவளிக்காக, இப்பவே முடிவு பண்ணிட்டேன். என்ன ஆனாலும் சரி பொங்கலுக்கு ஊரில் தான் என்று. //

பொங்கலை ஊரில் பொங்க போகும் அண்ணன் புலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

நாகை சிவா said...

//உங்க தீபாவளி கதையை கேட்கும் போது பொறாமையா இருக்கு சிவா.//

இது எல்லாம் ஒவரா தெரியல உங்களுக்கு. பொறாமை படுற அளவுக்காக நாங்க கொண்டாடி இருக்கோம்.

//இதை படிக்கிறப்போ hostel ல்ல இருக்கும் போது celebrate பண்ணினதெல்லாம் ஞாபகம் வருது. //

தீபாவளி எல்லாம் கல்லூரியில் இரண்டு மூன்று நாளுக்கு கொண்டாடி விடுவோம். லீவு நாளுக்கு முன்னாடியே எங்க சேட்டை ஆரம்பிப்பதால் லீவு முன் கூட்டியே கொடுத்து விடுவார்கள். :)
/

நாகை சிவா said...

//அந்த வடை பார்க்க எப்படி இருந்தாலும் நாக்குல ஜொள்ளு ஊருதுபா :-) //

ஏன் பங்கு அந்த அளவுக்கா காய்ஞ்சி கிடக்குற. அண்ணி சமையல் அம்புட்டு சூப்பரோ!

நாகை சிவா said...

//சொன்னியே ஒரு வார்த்தை...நூத்துக்கு நூறு சரி... :-) //

ஆமாம் பங்கு, பீலிங்ஸ் ஆப் இந்தியா வா போச்சு. :-(

நாகை சிவா said...

//vadayo bondavo bajjiyo, oru parcel anuppi vainga !!!//

அனுப்பிட்டா போச்சு :)

//approm, anda sooriyan udikkira matter... anda payanukke overaa therla? //

என்ன பண்ணுறது, நம்ம கூட சேர பசங்க வேற எப்படி இருப்பாங்க... எல்லாம் ஒரே இனமா தானே இருக்கும் :)

நாகை சிவா said...

//ஊருக்கே வராமல் வடை சுட்டு தீபாவளியா? நல்லாத்தான் இருக்கு.//

ஹி ஹி... தாங்கஸ் ராம்ஸ் :)

//வாழ்த்துகள்! அடுத்த வருஷத்துக்கு அட்வான்ஸுன்னு வச்சுக்கோங்க.//

ஒகேங்கண்ணா...

//பொங்கலப்போ பார்ப்போம். :)) //

உத்தரவு சாமி :)

நாகை சிவா said...

//பொங்கலை ஊரில் பொங்க போகும் அண்ணன் புலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! //

நான் பொங்கல் பொங்குவது இருக்கட்டும். இது என்ன நடுவில் அண்ணன் என்று ஒரு வார்த்தை... இது சரியா, இது நியாயமா? இது தர்மமா? இது உங்களுகே அடுக்காமா

சொல்லுங்க தம்பிண்ணன்

மு.கார்த்திகேயன் said...

மாப்பி, அப்படி இப்படின்னு வீட்ல இருந்த மாதிரியே தீவாளி கொண்டாடியாச்சு.. படத்தை பாத்தால் சாப்பிடனும்ணு தோணுது.. நல்லா இருந்ததா, மாப்பி?

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா... என் பங்கையும் சேர்த்து கொண்டாடினது நீங்க தானா? ஹூம்ம்ம்ம்ம்... வடை எல்லாம் போட்டு இப்போவே தங்கமணி மனம் குளிர வைப்பது எப்படினு தெரிஞ்சுக்கறீங்க.. வெரி குட் :)

அப்புறம் என்னது இது, இப்படி எல்லாம் சொல்லலாமா, இத்தன நாளா இருந்து இது கூட தெரியாதா? கீதா அக்காவ உங்களுக்கு? பிச்சிப்புடுவேன் பிச்சு :)

ambi said...

superrru! puli nee vadai seyya innumaa kathukala? naan ellam eppavoo learned. poori kattai adi vaanganum!nu un thalaila ezhuthi irunthaa yaarala maatha mudiyum..? :)

Geetha Sambasivam said...

புலி, என்ன நம்ம வீட்டுப் பக்கமே காணோம்? வந்து உறுமிட்டுப் போங்க, இவங்களுக்கெல்லாம் ஒரு பயம் இருக்கும், ரொம்ப அலட்டல் தாங்கலை!

Deekshanya said...

alaga eluthi irukinga..next diwali/pongaluku oorku poi jamaichudalam okaya.. nalla pulla illa, alalaam koodathu. vadai elam samatha senju saptirukinga :) gud boy!

Syam said...

//அண்ணி சமையல் அம்புட்டு சூப்பரோ//

ஏன் ஏன்னு கேட்கறேன்...இத வேற என் வாயால சொல்லி இப்போ கிடைக்கறதும் கிடைக்காம போறதுக்கா :-)

நாகை சிவா said...

//படத்தை பாத்தால் சாப்பிடனும்ணு தோணுது.. நல்லா இருந்ததா, மாப்பி?//

என்ன மாப்பி கேள்வி இது? நம்ம செஞ்சா நல்லா இல்லாமலா இருக்கும். சூப்பரா இருந்துச்சு :)

நாகை சிவா said...

//வடை எல்லாம் போட்டு இப்போவே தங்கமணி மனம் குளிர வைப்பது எப்படினு தெரிஞ்சுக்கறீங்க.. வெரி குட் :)//

தங்கமணிய குளிர வைக்க இல்லங்க. நாம நல்ல சாப்பாடு சாப்பிடனும் தான். :)))))

//கீதா அக்காவ உங்களுக்கு? பிச்சிப்புடுவேன் பிச்சு :) //

என்னங்க வர வர எல்லாரும் நம்மள மிரட்டுறீங்க. அவங்க ஒரு மாதிரி மிரட்டுனா நீங்க ஒரு மாதிரி மிரட்டுறீங்க, என்ன தான் பண்ணுறது நான். :(

நாகை சிவா said...

//puli nee vadai seyya innumaa kathukala? naan ellam eppavoo learned. //

என்ன பண்ணுறது. ஊரில் இருந்த வரைக்கும் ஒன்னும் கத்துகல. இப்ப தான் எல்லாம்....

//poori kattai adi vaanganum!nu un thalaila ezhuthi irunthaa yaarala maatha mudiyum..? :) //

என்னப்பா இப்படி பயமுத்துற...., சரி விட அதுக்கு இன்னும் ஏகப்பட்ட வருஷம் இருக்கு.

நாகை சிவா said...

//வந்து உறுமிட்டுப் போங்க, இவங்களுக்கெல்லாம் ஒரு பயம் இருக்கும், ரொம்ப அலட்டல் தாங்கலை! //

வரேன், வரேன்.... உடனே வரேன்
:)))

நாகை சிவா said...

//alaga eluthi irukinga..//

தாங்க்ஸ்ங்க....:))))

//next diwali/pongaluku oorku poi jamaichudalam okaya.. nalla pulla illa, alalaam koodathu.//

அழ கூடாது அழ கூடாது சொல்லியே எல்லாரும் அழ வச்சுடுவிங்க போல... கண்டிப்பாக பொங்கலுக்கு ஊரில் தாங்க.

கதிர் said...

//என்ன பண்ணுறது தம்பிண்ணன். நாம தான் இன்னும் யாரையும் மீட் பண்ணல :)//

நான் மட்டும் மாசத்துக்கு நாலு மீட்டிங் அட்டெண்ட் பண்றனா என்ன?
ரெண்டு வலைப்பதிவர் மாநாடு பத்தின பதிவுகள் படிச்சாவே போதும், அதில அந்த போண்டா பத்தின ஒரு பாரா இல்லாம இருக்கவே இருக்காது, ஒரு வேல அந்த ஏரியாவிலயே போண்டா கிடைக்கலன்னா, இங்கு போண்டாவே கிடைக்கலன்னாச்சும் ரெண்டு வரி இருக்கும் மாநாடு குறித்த பதிவுகள்ல.
அந்த மாதிரி பதிவுகள் எல்லாம் நம்மள மாதிரி புது ஆளுங்களுக்கு ஒரு கைடு மாதிரி.

Queen said...

Siva, If it's too tough for you to call me Queen, you can call me Malar. And to be frank, that's not my real name, but it's a name i like.

பழூர் கார்த்தி said...

அப்ப நீங்களும் தீவாளிக்கு ஊருக்கு போலயா... நம்ம கேசுதான் :-)))

நான் நம்ம மாதிரி மக்களுக்காகத்தான் இந்த மாதிரி ஒரு கவிதை எழுதி ப்ளாக்ல வச்சேன், ஹூம்... இதெயெல்லாம் யாரு பாக்குறா ???

***

புத்தம்புது ஆடைகள்,
விதவிதமான திண்பண்டங்கள்,
வீடுகொள்ளா உறவினர்கள்,
பயமுறுத்தும் அதே சமயத்தில்
ஆர்வமூட்டும் வெடிகள்,
வானொலி செய்திகளில் வரும்
பிரபலங்களின் வாழ்த்துகள்,
தெருமுழுக்க சிதறி கிடக்கும்
பட்டாசு காகிதங்கள்,
காற்றில் மிதந்து வரும்
வெடிவாசனையுடன் கூடிய புகை,
பரவசமூட்டும் பண்டிகை
கொண்டாடங்கள்...
இவையனைத்தும் இல்லாமல்
மடிக்கணினியில் உலாவும் இணையம்,
கைத்தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள்,
தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சிகள்,
அடுக்குமாடி அண்டைவீட்டாரின் 'ஹேப்பி திவாளி',
மெக்டொனால்ட்ஸின் பிஸ்ஸா
என்று கழியும் எங்களுக்கு
இத்தீபாவளி திருநாள்....
இருந்தாலும் அடுத்த தீபாவளியை
எதிர்நோக்கி ஆர்வமாய் காத்திருப்போம் !!!!

இராம்/Raam said...

புலி,

நானெல்லாம் எங்க ஊருலே தீவாளி கொண்டாடினேனே....!!

நாகை சிவா said...

// ஒரு வேல அந்த ஏரியாவிலயே போண்டா கிடைக்கலன்னா, இங்கு போண்டாவே கிடைக்கலன்னாச்சும் ரெண்டு வரி இருக்கும் மாநாடு குறித்த பதிவுகள்ல. //

தம்பிண்ணன், விடாம எல்லா பதிவும் படிப்பீங்க போல. இருந்தாலும் உங்களுக்கு ஆபிஸ்ல மருந்துக்கு கூட வேலை இருக்காதா?

நாகை சிவா said...

//Siva, If it's too tough for you to call me Queen, you can call me Malar. And to be frank, that's not my real name, but it's a name i like. //

பரவாயில்லங்க, உண்மையான பெயரு தான் சொல்லனும் என்று இல்லை. எனக்கு குவீன் என்ற சொல்ல ஒரு மாதிரி இருந்தது. மலர் ஒகே தான். :)

நாகை சிவா said...

//நான் நம்ம மாதிரி மக்களுக்காகத்தான் இந்த மாதிரி ஒரு கவிதை எழுதி ப்ளாக்ல வச்சேன், ஹூம்... இதெயெல்லாம் யாரு பாக்குறா ???//

சோ.பை. கவுஜ சூப்பர். சாரிங்க வேல பசில சீ பிஸில பாக்க முடியல. இனிமே தவறாம பாத்து விடுவோம்.

நாகை சிவா said...

//புலி,

நானெல்லாம் எங்க ஊருலே தீவாளி கொண்டாடினேனே....!! //

ஆடாதடா, ஆடாதடா மனிதா. ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா.....

Janani said...

What an amazing way to spend Diwali... Unga vadai parka nalla thaan irukku... he hee

நாகை சிவா said...

//What an amazing way to spend Diwali... Unga vadai parka nalla thaan irukku... he hee //

பரவாயில்ல நீங்களாச்சும் இத வடைனு ஒத்துக்கீட்டீங்களே....உங்க தீபாவளி எப்படி போச்சு :)