வேட்டையாடு விளையாடு :

ஏற்கனவே நம் மக்கள் இந்த படத்தை பிரித்து மேய்ந்தால், இதை பற்றி பேசவே பயமா இருக்கு. அதனால் நான் கப்சிப். இருந்தாலும் ஒரு சின்ன மேட்டரு அத மட்டும் சொல்லிக்குறேனுங்கோ. யோவ் படம் எடுக்கும், டைரக்ட் பண்ணும் புண்ணியாவன்களே முகர்ஜி போன்ற ஒரு அழகான கவிதையை எல்லாம் ஒரு பாட்டோட காலி பண்ணுவதை நிறுத்துங்கய்யா ப்ளிஸ். வலிக்குது ரொம்பவே வலிக்குது......
நாளை :
ரிச்சர்ட், நட்ராஜ், மதுமிதா, நாசர் மற்றும் பலர் நடித்து உள்ளார்கள். கதை ரொம்பவே சிம்பள் தாங்க. ஜஸ்டின்(ரிச்சர்ட்), நட்டு(நட்ராஜ்) இருவரும் சிறு வயதில் இருந்து நண்பர்கள். அவர்கள் அந்த ஊரின் தாதாவான நாயரிடம்(நாசர்) வளர்கின்றார்கள். நாசருக்காக எதையும் செய்கின்றார்கள். நாசரை இன்னொரு தாதாவின் (தணிகை - காதல் தண்டபாணி)

மூன்று ஆண்டுகள் சிறையில் கழித்து வெளியே வரும் ஜஸ்டின் நட்டுவுடன் சேர்ந்து மீண்டும் அடியாள் தொழிலுக்கு போகாமல் ஒதுங்கி வாழ்கின்றார்கள். இதுக்கு நடுவில் ஜஸ்டினுக்கு மதுமிதா மேல் காதல். இவர் ஜெயிலில் இருந்து வெளியே வரும் வரை இவருக்காக காத்து இருக்கின்றார். இந்த சமயத்தில் ஒரு போலீஸ் கமிஷனர்(போஸ்) எண்டரி குடுக்குறார். எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவேன் அப்படினு அடிக்கடி டயலாக் பேசுகிறார். தணிகை ஆட்களுக்கு ஜஸ்டின் தம்பியுடன் மணல் கடத்தும் விசயத்தில் தகராறு வருகின்றது. இடையில் தாதா வாழ்வில் தனிமை ஏற்பட்டு நாசர் போய் சேர்ந்து விடுகின்றார். போலீஸ் கமிஷனரின் வார்த்தையை கேட்டு தணிகையின் ஆள் ஆதி ஜஸ்டினுக்கு குறி வைத்து குறி தவறாமல் மதுமிதாவை சுட்டு விடுகின்றார். உடனே கோவம் கொண்டு எழும் ஜஸ்டினும், நட்டுவும் எல்லாரையும் கொன்று தாங்களும் இறந்து போகின்றார்கள். படம் அம்புட்டு தான்.
தாதா கதை தான் என்றாலும் இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாக தான் உள்ளது. நல்ல திரைக்கதையமைப்பு. ஆரம்பத்தில் இருந்து சலிப்பு ஏற்படாத வண்ணம் படத்தை எடுத்து சென்று உள்ளார்கள். காமெடி டிராக் என்று தனித்து இல்லாமல் படத்தின் வசனத்தோடு இழைந்து வரும் மாதிரி உள்ளது நல்ல விசயம். எதை பற்றியும் கவலைப்படாத நண்பர்களாக ரிச்சடும், நட்ராஜ்ம் அருமையாக நடித்து உள்ளார்கள். சென்னை செந்தமிழ் தான் படம் முழுவதும். அதிலும் நட்டுவின் வசனங்கள் அருமை. லோக்கால சொல்லனும் என்றால் நல்லா கலாய்ச்சி இருக்காரு. இவர்கள் இளவரசுயிடம் ஐடியா கேட்கும் இடம், பொண்ணு பாக்க சொல்லி மாமா என்று சொல்லுவதும், தண்ணி அடிச்சு அலும்பு பண்ணுவதுமாக ரகளை பண்ணி உள்ளார்கள். இதில் நட்டு அடிக்கடி ஜஸ்டினிடன் "நீ சொன்னா சரி தான் மச்சி" போன்ற வசனங்கள் காட்சிக்கு இயல்பாக பொருந்தி வருகின்றது.
ரிச்சட்டு இப்ப தான் உருப்படியாக ஒரு படம் பண்ணி இருக்கார். நட்ராஜ் அறிமுகம் என்று சொல்கின்றார்கள். ஆனால் ரொம்பவே இயல்பான நடிப்பு. நல்ல எதிர்காலம் உள்ளது. நாசர் நாயராக வழக்கம் போல வாழ்ந்து உள்ளார். மற்ற அனைவருமே சரியாக அவர் அவர் கதாபாத்திரங்களில் பொருந்தி உள்ளார்கள். ஆதி என்று நாசரிடம் அடியாளாக இருக்கும் நபர் நல்ல ஒரு சகுனி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மதுமிதாவ பத்தி என்ன சொல்லுறது. அம்மணி பாக்க நல்லாவே இருக்காங்க. பவுடர மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணி அடிக்கலாம்.
கார்த்தி ராஜா இசை, மற்ற தாதா படங்களை போல் காது வலிக்கும் பிண்ணனி இசை இல்லாமல் இருப்பது ரொம்பவே நல்ல விசயம். இரண்டு, மூன்று பாடல்கள் கேட்கும்படி உள்ளது. அறிமுக இயக்குனர் உதயபானு, அவர் மேல் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார். மொத்ததில் இந்த படம் ஒரு தடவையாச்சும் பார்க்கலாம்.
தூத்துக்குடி :
இதுவும் ஒரு தாதா கூட்டத்தை பற்றிய படம் தான். தயாரிப்பாளர், டைரக்டர், ஹீரோ எல்லாம் ஒருவரே போல, ஹரி குமார்

இந்த படத்தில் குறிபிட்ட சொல்ல வேண்டிய விசயம் ஒன்னு, படம் முழுவதும் அனைத்து கதாபாத்திரங்களும் தூத்துக்குடி லோக்கல் தமிழ் (நெல்லை தமிழ்) தான் பேசுகின்றார்கள். கேட்க நல்லா தான் இருக்கு. ஹீரோ ஹரி முகத்தில் எந்த ரியாக்சனும் காட்டாமல் நடித்து உள்ளார். தாதா லிங்கமாக ரஹ்மான் நடித்து உள்ளார். அவருக்கு அந்த பாத்திரம் கனச்சிதமாக பொருந்தி உள்ளது. அவரின் வசன உச்சரிப்பும் நல்லா இருக்கு. ஹீரோயினாக கார்த்திகா என்ற ஒரு புது முகம். தாவணி எல்லாம் போட்டு வந்து நம் மனம் கவர்கிறார். அம்புட்டு தான். அவர் படித்து ஆசிரியையாக வேலை பார்த்தாலும் ஒரு ரவடி தனக்கு செய்யும் உதவியை கண்டும், ஒரு முத்தத்துக்கும் அவரை மணக்கிறார். தமிழ் சினிமா வழக்கப்படி கடைசியில் உயிரையும் விடுகிறார்.
மற்றபடி குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் மஹாவின் நண்பராக வரும் ஒருவர் நடிப்பை சொல்லாம். வக்கீலாக வரும் நடிகரும் ஒகே. அவ்வளவு தான். இசை பிரவின் மணி - கருவா பையா என்ற பாட்டு ஹிட்னு சொன்னாங்க. சில தடவை கேட்டுப்பாத்தால் தான் தெரியும். உங்களுக்கு சிடியோ டிக்கட்டோ கிடைத்தால் வேற வேலை ஏதும் இல்லா விட்டால் இந்த படத்தை பாக்க யோசிக்கலாம்.
ஆச்சார்யா :
இதுவும் அடுத்து ஒரு தாதா கூட்டத்தை பற்றிய படம் தாங்க. பிராமண குடும்பத்தில் பிறந்த விக்னேஷ் சிறு வயதிலே பெற்றோர்களை இழந்து சமூகத்தால் வஞ்சிக்கபட்டு ஒன்றும் இல்லாமல் பிழைப்பு தேடி சென்னை வருகின்றார். இரவு பஸ் ஸ்டாப்பில் தன் பையை தவற விட்டதுடன் இல்லாமல் போலீஸாரால் சந்தேக கேஸில்

ஒரு தியேட்டர் விற்கும் பிரச்சனையில் இன்னொரு தாதாவுக்கும், மாயாக்காவுக்கும் சண்டை வருகிறது. தேவர் தீர்த்து வைக்கும் முன்பே பிரச்சனை முற்றி விடுகிறது. அந்த தாதாவால் மாயாக்கா கொல்லப்படுகின்றார். இதனால் வெகுண்ட சாமி அந்த தாதாவை கொல்கிறார். இதை தொடர்ந்து அது மிக பெரிய கேங் வாராக மாறுகின்றது. போலீஸ் கமிஷ்னராக(சரண்ராஜ்) வருபவர் தேவரிடம் சென்று நீங்கள் ஒதுங்கி கொள்ளுங்கள், நாங்கள் மற்றவர்களை பிடித்தோ கொன்றோ விடுகின்றோம் என்று சொல்ல தேவரும் ஒத்துக் கொள்கின்றார். இதனால் ஆத்திரம் அடையும் சாமி மற்றும் பிற தாதாக்கள் அப்ரூவராக மாறி தேவரை சிறையில் அடைக்க முயற்சி செய்கின்றார்கள். அதில் சாமி வெற்றியும் பெறுகின்றார். இதுக்கு நடுவில் சாமி ஒரு பொண்ணை காதலிக்கிறார். அந்த பொண்ணுக்கு போலீஸ் வேலை வாங்கி தருகிறார். இந்த படத்திலும் அந்த பொண்ணை கடைசியில் போட்டு தள்ளி விடுகின்றார்கள். யோவ்... உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாது. அது ஏன்னய்யா ஒரு பொண்ணை இப்படி அநியாயமா எல்லா படத்தில் கொலை செய்து விடுகின்றீர்கள். இதுக்கு ஒரு முடிவு கட்டுங்கய்யா.
இந்த படத்தில் ஒரே ஆறுதல் கஞ்சா கருப்பின் காமெடி. நாசரை இந்த படத்தில் வீண் அடித்து உள்ளார்கள். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக உள்ளது. ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படத்தை சும்மா சப்னு முடித்து உள்ளார்கள். மற்றப்படி சொல்ல ஒன்றும் இல்லை. இயக்குனர், பாலாவிடம் பயின்றவர் என்று சொன்னார்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். இசை ஸ்ரீகாந்த் தேவா... சொன்னா தான் தெரியுது. இந்த படத்தை காலத்தின் கட்டாயத்தால் காண நேர்ந்தால் என் பரிதாப நிலையை நீங்களே புரிஞ்சுப்பீங்க.