இன்று சட்டசபையில் தமிழ் மொழியை 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக்க சட்ட மசோதவை தாக்கல் செய்து அதை நிறைவேற்றி உள்ளார்கள். இது மிகவும் வரவேறக்கதக்கது. அதை குறித்த செய்தி குறிப்பு கிழே,
பகுதி 1 - தமிழ்(கட்டாயம்)
பகுதி 2 - ஆங்கிலம்(கட்டாயம்)
பகுதி 3 - கணிதம், அறிவியல், சமூக அறிவியல் முதலான பிற பாடங்கள்
பகுதி 4 - தமிழ் அல்லாத ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிராத மாணவர்கள் அவர்த்தம் தாய் மொழியை ஒரு விருப்ப பாடமாக கற்கலாம்.
அரசு ஆழ்ந்த பரிசீலனைக்கும், ஆய்வுக்கும் பின்பு இந்த ஆண்டில் இருந்து படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடங்களில் ஒன்றாக கற்பதற்கு வகை செய்வதற்கென இச்சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.
அனைத்து பள்ளிகளில் மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகளும், மாநில நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளி உள்பட அனைத்து தனியார் பள்ளிகளும், மாநில அரசு நிதி உதவி பெறாத சிறுபான்மையினர் பள்ளி உள்பட அனைத்து மழலையர், தொடக்கபள்ளி, மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் கீழ்த்திசைப் பள்ளிகளும் இதில் அடங்கும் என அந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவில் என் கருத்துகளை பதிவு செய்வதற்கு முன்பாகவே, ஆங்கிலம் வேண்டாமா, இந்தி தெரியாமல் தமிழ் நாட்டிலே முடங்க போகின்றாயா என பல பின்னூட்டங்கள் வந்து உள்ளது. அதற்கு பதில் அளிப்பதற்கு முன்பு, இந்த சட்ட பற்றி என் கருத்துகளையும் பிற கருத்துகளையும் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
முதலில் இந்த சட்டம் அமல்படுத்தியதற்கு முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் அவரின் அரசுக்கும் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றேன்.
அந்த சட்ட மசோதவுடன் பின்வருவனற்றையும் அமல்படுத்த வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
இதுவரை தமிழை முதல் பாடமாக படிக்காத மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது தான் முறையாக இருக்கும்(குறைந்தபட்சம் 9ஆம் மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு)
தமிழ் பாடத் திட்டத்தை எளிமை படுத்த வேண்டும்.
தமிழ் மொழியை படிப்பதற்கு ஒரு ஆர்வம் உண்டாக்கும் விதமாக இருக்க வேண்டும்.
பிற மொழிகளும் பயில வாய்ப்பு அளிக்க வேண்டும்.
தமிழ் மொழிகளில் ஆர்வம் ஏற்படும் வண்ணம் பல Work Shop நடத்த வேண்டும்.
பல போட்டிகள் நடத்தி அவர்களின் தமிழ் திறமையை வெளிக் கொண்டு வர வேண்டும்.
தமிழ் மணத்தில் தமிழ் படிப்பதை குறித்து, இந்தி தெரியாமல் இருப்பதற்கு வெட்கபட வேண்டும், இந்தி படிக்காதால் அவமானப்பட்டோம் என பல பதிவுகள் வந்து உள்ளது. இந்த பதிவின் மூலம் தமிழ் மற்றும் இந்தி குறித்த என் கருத்துகளை இந்த பதிவுல் பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன்.
தமிழ் மொழியை இங்கு கட்டாயமாகாமல் வேறு எங்கு கட்டாயம் ஆக்குவது.
ஆங்கில மொழியை இலக்கண தவறாக பேசினால் வெட்கபடும் நாம், தமிழ் இலக்கணம் கற்று கொள்ளாமால் இருப்பதற்கு என்றாவது வெட்கபட்டு, குறைந்தபட்சம் யோசித்து இருக்கின்றோமா?
இந்தி மொழி பயிலமால் இருப்பதற்கு வெட்கபட வேண்டிய அவசியம் இல்லை. என்னை பல நாட்டவர்கள் இந்தி தெரியாதா என கேட்டால், தெரியாது என வெட்கபடாமல் கூறுவேன். எதற்காக வெட்கபட வேண்டும். அது ஒன்றும் என் தாய்மொழி அல்லவே. என் தாய்மொழி தவிர மற்ற மொழிகளை கற்பதும், மறுப்பதும் என் தனிப்பட்ட விருப்பம். அதில் தலையீட யாருக்கும் எந்த ஒரு முகாந்திரம் கிடையாது.ஆனால் தாய் மொழி கற்காமல் வெறும் பேச்சு மொழியாக நிறுத்தி கொள்ளவது சரியல்ல.நம் பெற்ற தாயை மறுப்பதும், தாய் மொழியை கற்க மறுப்பதும் கிட்டதட்ட ஒன்று தான்.
முதலில் தமிழர்கள் ஒருவருக்கு ஒருவர் பிற மொழிகளில் பேசுவதை தவிர்க்க வேண்டுகிறேன். இங்கு பீட்டர் விட்டு ஒன்றும் பெரிதாக சாதிக்க போவது ஒன்றும் இல்லை. போலி வேஷம் போடுவதை தவிர்க்க முயலுங்கள். அவர் அவர்களின் தாய் மொழி தான் அவர்களின் கலாச்சாரத்தின் முதல் வெளிப்பாடு. உங்கள் அடையாளங்களை தொலைத்து அடுத்தவர்களின் அடையாளத்தை மூகமுடியாக அணிய முயல்வது ஏன்?
இந்தி மொழி கற்காதால் நாங்க(தமிழ்மணத்தின் என் கருத்தோடு ஒத்து போகும் மற்ற வலைப்பதிவாளர்கள்) என்ன சிறுமைப்பட்டா விட்டோம். இந்தி தெரியாதா என ஏரளம் செய்பவர்களை கண்டு வெட்கப்படுவதை முதலில் நிறுத்துங்கள். எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.
ஒரு முறை ஆப்கானிஸ்தான் ஒருவன் என்னிடம் இந்தியில் கேள்விகள் கேட்க நான் ஆங்கிலத்தில் பதில் அளித்து கொண்டு இருந்தேன். நீ ஏன் இந்தியில் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாய் என வினவினான். எனக்கு இந்தி தெரியாது எனக் கூறினேன். இந்தியன் நீ உனக்கு இந்தி தெரியாதா என கேட்டான். உடனே அருகில் இருந்த வட இந்தியன், அவன் முழு இந்தியன் கிடையாது, அரை இந்தியன் எனக் கூறினான். நான் பொறுமையாக இந்தி பேசினால் தான் இந்தியன் என நீ நினைத்தால் நான் ஒன்றும் பண்ண முடியாது. அதும் இல்லாமல் மொழியின் அளவை பொறுத்து என் தேசப்பற்றை வரையுருக்கும் உன் அறியாமையை நினைத்து வேதனைப்படுக்கின்றேன் என கூறினேன். பிறகு அன்று முழுக்க என்னிடம் அவன் வாய் திறக்கவில்லை.
மற்றோரு முறை இன்னொருவன், இந்திய நண்பர்களுடன் நடந்த ஒரு கலந்துரையாடலின் போது இந்தி தெரியாத நீ எல்லாம் இந்தியாவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என ஆவேசமான கூறினான். அவனை விட ஆவேசமாக இந்திய ரூபாயில் இருந்து இந்தியை தவிர மற்ற மொழிகளை அல்லது குறைந்தப்பட்சம் தமிழ் மொழியை நீக்கி விடு அன்றே நான் உட்பட அனைத்து தமிழர்களும் இந்தியாவை விட்டு வெளியேற்கின்றோம் என கூறினேன். அவன் பதில் ஏதும் சொல்லி இருப்பான் என நினைக்கின்றீர்கள்.
இது போன்ற எண்ணில் அடங்கா பல சம்பவங்கள், இவை அனைத்துக்கு பிறகும் கூட நான் இந்தி தெரியாதற்கு வருத்தப்பட்டதில்லை. வருத்த பட போவதுமில்லை. எனக்கு இந்தி கற்று கொள்ளவதற்கு என்று தோணுகிறதோ, அன்று நான் இந்தி கட்டாயம் கற்று கொள்வேன். அது என் சொந்த விருப்பமாக தான் இருக்கும்.அடுத்தவர்களுக்காக இருக்காது.
என் அனுபவங்களை ஏனோ இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள தோணியது. அதனால் இந்த பதிவில் இதை பதிவு செய்தேன். இந்த சட்ட மசோதாவிற்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்க்கள் என்ற நம்பிக்கையுடன் முடிக்கின்றேன்.
33 comments:
Siva,
படிக்கறத்துக்கு ரொம்ப கஷ்டமா இருந்ததுங்க.
இந்த பதிவ தான் சொல்லறேன், ரொம்ப சின்ன சின்னதா எழுத்துக்கள்.:-(
செய்தியே புரியலை.. யூனிகோட்ல போடுங்க!!
கட்டாய தமிழ் வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனால் உலகம் சுற்றிய பிறகுமா புரியவில்லை ஆங்கிலமும் அவசியம் என்று?
கலைஞரை வாழ்த்தி பதிவு போடுகிறார் இல்லையா... அது தான் ரொம்ப சின்னதா போடுறார்....
நேற்று இரவு பதிவை பதிவு செய்யும் வரை சரியாக தான் இருந்தது. இன்று காலை வந்து பார்த்த பிறகு தான் பிளாக்கர் சொதப்பியது தெரிந்தது. இந்த பிரச்சனையை உடனடியாக சரி செய்யமுடியாதற்கு உங்கள் அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். இது போன்ற கவன குறைவு மறுபடியும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறேன்.
நன்மனம், உங்களை கஷ்டப்படுத்தியதற்கு வருந்துகிறேன்.
இப்பொழுது சரியாக உள்ளது.
பொன்ஸ்,
மன்னிக்கவும்.
யூனிக்கோடுல் தான் பதிவு செய்தேன். பிளாக்கர் சொதப்பி விட்டது.
பிளாக்கர் சொதப்பியதும் இல்லாமல் அதை சரி செய்வதற்க்கும் விட மாட்டேன் என்று பல மணி நேரம் பிரச்சனை செய்தது. அதை ஒரு வழியாக தாஜா செய்து சரிப்படுத்தினேன்.
//உலகம் சுற்றிய பிறகுமா புரியவில்லை ஆங்கிலமும் அவசியம் என்று?//
ஆங்கிலம் அவசியம் தானுங்க. ஆங்கிலம் இரண்டாவது கட்டாய பாடமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பதிவை மறுபடியும் படிக்கவும்.
அதுவும் இல்லாமல் உலகம் சுற்றி பிறகு தான் புரிந்தது, ஆங்கிலம் என்றால் கிலோ என்ன விலை என கேட்க கூடி நாடுகள் பல உள்ளன.
மடிப்பாக்கம்! என் மேல் நீங்க ஏற்கனவே அ.தி.மு.க அனுதாபி என முத்திரை குத்தி விட்டிர்க்கள். அதனால் நான் என்ன செய்தாலும் உங்களுக்கு தப்பாக தான் தெரியும்.
உங்கள் விருப்பம் ............. நடத்துங்கள்.
எது எப்படி இருந்தாலும், நம்ம வீட்டு பக்கம் வந்ததுக்கு நன்றி.
இல்லைங்க ஜெயகுமார்,
நல்லதை யாரு செய்தாலும் அதை வரவேற்பது தானுங்க முறை.
ஜெ. ஜெ. கூட இது வரை இதை எதிர்த்து எந்த கருத்தும் கூறவில்லை .அதனால் அவரும் இதை ஆதரிக்கிறார் என எடுத்துக் கொள்வோம்.
Hi Siva
Yes I too found it dificult to read in the morning, thought some thing wrong in my system.Thanks for fixing it.
"இங்கு பீட்டர் விட்டு ஒன்றும் பெரிதாக சாதிக்க போவது ஒன்றும் இல்லை"
Aruvala appadi podunga aiyya !!
.....என வெட்கபடாமல் கூறுவேன்.
You are growing up man !!
with best
CT
இது ஒரு நல்ல முற்ப்போக்கு சிந்தனை.
//இந்த சட்ட மசோதாவிற்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்க்கள் என்ற நம்பிக்கையுடன் முடிக்கின்றேன்.//
அந்த நம்பிக்கை வெற்றி பெற எண்ணும் மற்றோரு உள்ளம்.
CT!
என்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
மீண்டும் வருகை புரிந்தற்க்கு நன்றி நன்மனம்.
சிவா, இந்தப் பதிவில் மேலே கருத்துக் கூறியுள்ள ஜெயகுமார் போலி. உண்மையான ஜெயகுமாரின் Profile No. is 20967563. மேலதிக தவலுக்கு உண்மையான் ஜெயகுமாரின் இப்பதிவைப் சொடுக்கிப் படிக்கவும். மேலே உள்ள போலியின் பின்னூட்டங்களை அழித்தள் நல்லது.
ஏனுங்க, ஜெயக்குமார். ஏற்கனவே நான் அ.தி.மு.க அனுதாபினு மடிப்பாக்கம்(Lucky Look) சொல்லிகிட்டு இருக்காரு, இப்ப நீங்களுமா..........
உண்மையில் இப்பொழுது இருக்கும் எந்த ஒரு தமிழக அரசியல்வாதியையும் எனக்கு பிடிக்காது. தவறு செய்தால் இந்த பதிவில் சுட்டிக் காட்டுவேன். நன்மை செய்தால் இந்த பதிவில் வாழ்த்துவேன்.
அம்புட்டு தான் நம்ம வேலை இப்போதைக்கு..........
ஜெயகுமார், உங்கள் பெயரில் சில பின்னூட்டங்கள் என் பதிவில் வந்துள்ளது. உங்கள் படத்தை பார்த்து ஏமாந்து விட்டேன்.
அந்த பின்னூட்டங்களை இன்னும் நீக்கவில்லை. அநாகரிமாக எந்த ஒரு வார்த்தையும் அதில் இல்லை. ஒரு அனாமி தான் அதை சுட்டிக் காட்டினார். நீங்கள் கூறினால் உடனடியாக அழித்து விடுகின்றேன்.
சிவா,
என்னுடைய Profile No. is 20967563.
இதற்கு முன்னர், இந்த பதிவிற்கு என்னுடைய பெயரில் வந்த பிண்ணூட்டங்கள் என்னுடையது அல்ல போலியுனுடையது.
போலியுனுடைய Profile No. is 25330994.
இதற்கு முன்னர் இந்த பதிவிற்கு வந்த பிண்ணூட்டங்களை நான் வெளியிட்டதாக கருதி நீங்கள் வெளியிட்டு இருந்தால், தயவு செய்து நீக்கிவிடுங்கள்.
மற்றபடி கட்டாயத்தமிழை நான் ஆதரிக்கிறேன். இதை வலியுறுத்தி நான் ஏற்கனவே ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். அதைப்பற்றி திண்ணையிலும் எழுதியிருந்தேன். நான் திண்ணையில் எழுதிய அந்த பதிவு, லண்டனில் இருந்து வெளியாகும் "தமிழர் தகவல்" என்ற மாதப் பத்திரிக்கையிலும் வந்திருந்தது.
கலைஞர் இதற்கு முன்னர் நான்கு முறை முதல்வராக இருந்திருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் தோன்றாத எண்ணம் இப்போதுதான் அவருக்கு வந்திருக்கிறது.
தாமதமாக வந்தாலும் வரவேற்கிறேன்.
என்ன சிவா, இப்போது புரிந்ததா? ப்ளாக்கர் சொதப்பல் என்றால் என்ன என்று. அதனால் தான் நான் நிரந்தரத் தலைவலி, நீங்கள் வெறும் உறுப்பினர்.
ஜெயக்குமார், உங்கள் பெயரில் வந்த போலி பின்னூட்டங்கள் நீங்கள் கேட்டு கொண்டதுபடி நீக்கப்பட்டு விட்டது.
நல்லாவே புரிந்தது கீதா அவர்களே! இது இரண்டாவது முறை.
நான் இதில் அடிப்படை உறுப்பினராகவே இருக்க விரும்புகிறேன். நீங்களே தொடர்ந்து நிரந்தர தலைவலியாக இருங்கள்.
//ஜெயக்குமார், உங்கள் பெயரில் வந்த போலி பின்னூட்டங்கள் நீங்கள் கேட்டு கொண்டதுபடி நீக்கப்பட்டு விட்டது.//
மிக்க நன்றி சிவா!
நாகை சிவா, எனக்கு வயசு 16 கூட இல்லை. மனசு கேட்ட ஒரு கேள்வியிலே நான் பாதியா உடைஞ்சு போயிட்டேன் தெரியாதா? அதனாலே வயச்ய் இப்போ 8 தான். இப்போ கூட பாருங்க இந்த கமெண்டை க்லிக் செய்தேனா உன்னுடைய ப்ளாகே இல்லை என்று சொல்கிரது. இந்த மாதிரி ஒரு கணினியோட நான் என்னத்தைச் செய்ய. முதலில் நெருப்பு நரியில் இதை அடித்துவிட்டு வரவே இல்லை.எக்ஸ்ப்ளோரெரில் கேட்கவே வேண்டாம்.This page cannot be found. இது எப்படி இருக்கு?
Now you will get confirmed why I am Permanent Headache to Va.Vaa.Sa.
Understand?
//இந்தி மொழி பயிலமால் இருப்பதற்கு வெட்கபட வேண்டிய அவசியம் இல்லை. என்னை பல நாட்டவர்கள் இந்தி தெரியாதா என கேட்டால், தெரியாது என வெட்கபடாமல் கூறுவேன். எதற்காக வெட்கபட வேண்டும். அது ஒன்றும் என் தாய்மொழி அல்லவே.//
இந்த பதிவிற்கு உங்களுக்கு ஒரு 'சபாஸ்' போடனும்னு ஆசை. சபாஸ் இந்தி சொல்லா இருக்கிறதால 'ஓ' போடுகிறேன். நாகை சிவாவிற்கு ஒரு பெரிய ஓ
பாத்துங்க கீதா, வேற யாராச்சும் கேள்வி கேட்டு எட்டை நாலு ஆக்கிட போறாங்க......
I UNDERSTOOD that.........
வாங்க கண்ணன், பயணம் எல்லாம் நல்லபடியாக அமைந்ததா....... தனி மடல் இட வேண்டும் என்று இருந்தேன், முடியவில்லை.
//நாகை சிவாவிற்கு ஒரு பெரிய ஓ //
நீங்க போட்ட ஓ சுடான் வரைக்கும் கேட்குது. நன்றி.
பேசப்படும் செய்தி குறித்து பலரும் பல பதிவுகளிலும் முன்னூட்டம் பின்னூட்டம் எனப் பேசித் தீர்த்து விட்டதால், "இதுக்கு மேல எனத்தப் போய் சொல்றது"ன்னு இருக்குங்க சிவா.
-குப்புசாமி செல்லமுத்து
வாங்க சிவா,
நீங்க நல்லெண்ணாத்தூது சங்கம் சார்பா போயிருக்கிறதா சொன்னாங்க. ஐ.நா. அனுப்பி வைச்சதாமே? தூது எல்லாம் முடிஞ்சதா? சங்கத் தலைமையை சூடான்ல ஒத்துக்கிட்டங்களா? மெதுவாப் படிங்க. படிச்சுட்டுப் பின்னூட்டம் இடுங்க.
Oru mozhiyai karpathu enpathu oruvarudaya adipadai urimai. Athil valukattayamaha thinippadhu enna niyayam??
Kettal Tamil nattil irukka viruppam endraal katruthan aaha vendum enru solladheergal.
ஏப்பா, அனாமி. தமிழ் மொழியை தமிழ்நாட்டில் பிறந்த, தமிழை தாய்மொழியாக கொண்ட ஒருவரை படிக்க சொல்வது அவர்க்களின் தனிமனித உரிமையை பாதிக்கும் விசயமா? இது என்னங்கடா புது கதையா இருக்குது.
உங்களை கட்டாயமாக இந்தி படிக்கவும், தெலுங்கு படிக்கவும் என கட்டாயபடுத்தினாலும், ஆங்கிலம் படிக்கவும், இந்தி படிக்கவும் கூடாது என கட்டாயபடுத்தினால் தான் அது அவர்க்களின் தனிப்பட்ட உரிமை பறிக்கும் விசயம். புரியும் என நினைக்கின்றேன். புரியாவிட்டால் விரிவாக தனிமடல் இடவும் தயாராக இருக்கின்றேன்.
நீங்க ஏதும் சொல்லாட்டியும் நீங்க வந்தே போதும் குப்புசாமி செல்லமுத்து.
ஆமாம் நீங்க என்ன சாதாரண ஆளா என்ன, பங்கு வணிகத்தின் முக்கிய புள்ளி ஆச்சே.
சும்மா தமாசுக்கு தான். தப்பா எடுத்துக் கொள்ளாதீர்கள்.
உண்மை தாங்க கீதா. ஐ.நா. தான் அனுப்பி வைத்து உள்ளது.
பல வேலை பளு இருந்தாலும் நம்ம தலயின் புகழை உலகம் முழுவதும் பரப்புவதை நிறுத்த முடியுமா. சூடானின் தலைமை பதவியை தற்சமயம் நான் பொறுப்பு எடுத்து பார்த்துக் கொண்டு இருந்தாலும், நமக்கு நாகை மாவட்ட பதவி தாங்க பெருமை.அது தாங்க நிரந்திரம்.
Post a Comment