Saturday, May 13, 2006

ஜெ.ஜெ - U TOO......

நம் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் நேற்றைய பேட்டி சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று ஆகும். 1989 ஆம் நடந்த சம்பவங்களை இன்றைக்கும் கூறுவது பொறுத்தமானதாக இல்லை. வயது ஏற ஏற பக்குவம் அடைந்து வருகின்றேன் என்று நீங்கள் கூறுவதை நாங்கள் நம்புவது போல, அவர்களுக்கும் வயது ஏறி பக்குவம் அடைந்து இருப்பார்கள் என்று நம்புங்கள். கலைஞர், சபைக்கு வருவதில்லை என்று மேடை தோறும் பேசி விட்டு இப்பொழது நீங்களும் அதையே செய்வது முறையாகாது. அவரை போல நீங்களும் வருகை பதிவேட்டில் கையெழுத்து இட்டு சம்பளம் பெறும் எண்ணத்தில் உள்ளீர்க்களா? இந்த முறை தான் சட்டசபையில் பலமான எதிர்க்கட்சி உள்ளது. இதில் நீங்கள் கலந்து கொண்டு புள்ளி விபரங்களுடன்
கூடிய உங்கள் வாத திறமையை உபயோகப்படுத்தினீர்கள் என்றால் பல நல்ல விசயங்கள் நடப்பதற்க்கும், தீய விசயங்கள் தடுப்பதற்க்கும் ஏதுவாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டு அரசியலையை ஒரு நாகரீகமான நிலைமைக்கு எடுத்து சென்ற பெருமையை பெறுவீர்கள். ஆனால் இதை தாங்கள் செய்ய போவதில்லை. நீங்கள் தான் அவர்களை தனிப்பட்ட எதிரிகளாக கருதுகின்றீர்களே!

கடைசியாக நீங்கள் சபைக்கு செல்லாவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் கூறியது போல் இந்த சட்டசபை ஒரு வருடத்தில் கவிழ்கிறதோ அல்லது ஐந்து வருடங்களை முழுமையாக பூர்த்தி செய்கின்றாகளோ அதை பற்றி கவலைப்பட வேண்டாம். இந்த ஆட்சியை கலைப்பதற்கோ, மாற்று அரசு அமைப்பதற்கோ தயவு செய்து முயச்சிக்க வேண்டாம். அந்த அசிங்களையும் தமிழகத்திற்கு தயவு செய்து அறிமுகபடுத்த முனைய வேண்டாம் என்பதே தமிழக மக்களாகிய எங்களின் வேண்டுக்கோள்.பொருமையாக இருந்து அடுத்த முறை ஆட்சி அமைக்க வாழ்த்துக்கள்.

இது என்ன தமிழ்நாட்டின் சாபமா? முதல்வராக இருந்தால் மட்டுமே சபைக்கு வருவேன் என நம் தலைவர்கள் கூறுவது. விஜயகாந்த் அது போல ஏதும் கூறவில்லை. அதுவரைக்கும் பரவாயில்லை. அப்படி வர மறுப்பவர்கள் தன் பதவியை ராஜினாமா செய்வது தான் முறையாக இருக்கும்.

22 comments:

Sivabalan said...

மிக நல்ல பதிவு!

நாகை சிவா said...

சிவபாலன்,
தங்கள் வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றி,

Sami said...

இன்னும் ஒன்றையும் கவனீத்தீர்களா,இன்று ஆட்சி பொறுப்பில் அமருபவர்கள்,காட்டுமிராண்டிகள் என்று கூறியது அவர் இன்னும் மாறவில்லை என்பதையே காட்டுகிறது.
இது மிகவும் வருத்தத்திற்கு உரியது.

சிங். செயகுமார். said...

கடந்த முறை ஜெ. பதவியேற்றபோது அன்பழகன் முன்னிலை வகித்தார். துரை முருகனும் பங்கேற்றார். இந்த நாகரீகம் அவர்களுக்கு பத்தாது!

சித்தார்த் said...

//கடைசியாக நீங்கள் சபைக்கு செல்லாவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் கூறியது போல் இந்த சட்டசபை ஒரு வருடத்தில் கவிழ்கிறதோ அல்லது ஐந்து வருடங்களை முழுமையாக பூர்த்தி செய்கின்றாகளோ அதை பற்றி கவலைப்பட வேண்டாம். இந்த ஆட்சியை கலைப்பதற்கோ, மாற்று அரசு அமைப்பதற்கோ தயவு செய்து முயச்சிக்க வேண்டாம்.//

Idly Vadai said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

சித்தார்த் said...

//கடைசியாக நீங்கள் சபைக்கு செல்லாவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் கூறியது போல் இந்த சட்டசபை ஒரு வருடத்தில் கவிழ்கிறதோ அல்லது ஐந்து வருடங்களை முழுமையாக பூர்த்தி செய்கின்றாகளோ அதை பற்றி கவலைப்பட வேண்டாம். இந்த ஆட்சியை கலைப்பதற்கோ, மாற்று அரசு அமைப்பதற்கோ தயவு செய்து முயச்சிக்க வேண்டாம்.//

எனது கவலையும் இது தான்.

மா சிவகுமார் said...

சிவா,

சரியாகச் சொன்னீர்கள். 61 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, முதல்வராக இருந்தபோது காட்டிய வாய் சாமர்த்தியம் எல்லாவற்றையும் இப்போது எதிர்க் கட்சித் தலைவராக காட்டுவதுதான் வாக்களித்த மக்களுக்கு அவர் செய்யும் கைம்மாறாக இருக்க வேண்டும். கண்கொத்திப் பாம்பாக இருந்து, புதிய அரசின் நடவடிக்கைகளை ஆக்கபூர்வமாக கண்காணிப்பதுதான் அவரது பணியாக இருக்க வேண்டும்.

நாகை சிவா said...

உண்மை தான் சாமி, அவர்கள் இன்னும் மாறவில்லை

Muthu said...

சிவா,
என்னத்த சொல்வது?. "நடக்கவே முடியாமல் இருந்த சென்னா ரெட்டி கையைப் பிடித்து இழுத்த அறிக்கையை விட, இது எவ்வளவோ பரவாயில்லை". இது ஒரு சந்தேகம் மட்டும்தானே :-D.

Anonymous said...

வருந்தாத உள்ளங்கள் வாழ்ந்தென்ன பாபம்.திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்.

அன்புடன்
துபாய் ராஜா.

நாகை சிவா said...

சிங்! பதவியெற்ப்பு விழாவில் அ.தி.மு.க. சார்பில் யாரும் பங்கேற்கவில்லை போல!

நாகை சிவா said...

ஆஹா! இட்லி வடையாரே, வருக, வருக. தமிழ்மணத்தின் இந்த வார நட்சித்திரமாக நன்றாகவே ஜொலிக்கின்றீர்க்கள்.வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றி

நாகை சிவா said...

நன்றி சித்தார்த்

நன்றி மா சிவக்குமார்

நாகை சிவா said...

உண்மை தான் முத்து. வருகைக்கு நன்றி

நன்றி அனாமி. திருந்தியாக வேண்டும், நாடு வளம் பெற....

Dharumi said...

தலைப்பு தவறாக இல்லையா?
that's jaya! - சரியாக இருக்குமோ?

நாகை சிவா said...

கலைஞரை போல் செயல்பட்டதால் இந்த தலைப்பை வைத்தேன்.
அவரின் தற்போதைய பேட்டிகளை கானும் போது நீங்கள் சொல்லும் தலைப்பு சரியாக தான் உள்ளது.

திரு said...

செல்வி.ஜெயாவிடம் வேறு எதை எதிர்பார்க்க? தொடர்ந்து குதிரை வாங்க வெள்ளை குர்தாகாரர் இப்போ கிளம்பியிருப்பார்.

கால்கரி சிவா said...

இந்தியாவின் கோமாளி அரசியல்வாதியென பலவாறு கிண்டல் செய்யப்பட்ட லாலு பிரசாத் யாதவ் எதிர்க் கட்சியினர் பதவியேற்பு விழாவில் பங்கேற்று அரசியல் நாகரீகத்தைக் காத்தார்.

நம் பகுத்தறிவு பாசறையில் பயின்ற கலைஞர்களும், அறிஞர்களும், புரட்சி தலைவர் தலைவிகளும் அறிவில் சிறந்த தமிழர்களுக்குக் கற்றுத் தரும் நாகரீகம் இதுதான்.

இதை பகுத்தறிந்து தமிழர்களும் புளகாங்கிதம் அடைவர்

நாகை சிவா said...

திரு! யாரை சொல்லுறிங்க, வை.கோ வையா? எனக்கு என்னமோ இதுல நம்பிக்கை இல்லை. அவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காமல் இருந்தால் கண்டிப்பாக அவர் கட்சி உடைந்து இருக்கும் என்பது என் கணிப்பு. தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து இருந்தால் அதிக இடத்தை கைப்பற்றி இருக்க முடியும் என்பதும் உண்மை. சரியான இக்கட்டில் அந்தசமயம் அவர் மாட்டிக் கொண்டார்.
வருகைக்கு நன்றி

நாகை சிவா said...

வருக! வருக. கால்கரி சிவா அவர்களே.
நம்ம வீட்டிற்கு விஜயம் செய்தற்கு மிக்க நன்றி.
தங்கள் கருத்தை அப்படியே வழிமொழிகின்றேன். லாலு கூட தன் பணியை சரியாக செய்ய துவங்கிவிட்டார்(ரயில்வேயில்). நம் மக்கள் என்று தான் திருந்த போகின்றார்களோ???

ஜெயக்குமார் said...

அம்மா தான் சட்டசபைக்கு ஒரு நாள் போனாங்களே. அவங்க ஒரு நாள் போனாலே 5 வருஷம் போனா மாதிரி. அந்த ஒரு நாளையே வெச்சி 5 வருஷத்துக்கும் புகழ்ந்து தள்ளிட மாட்டோம்.