Saturday, June 10, 2006

ஹாய்... ஹாய்... ஹாய்...

ஒரு பத்து நாள் கடின வேலை பளுவின் காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை. அப்படி என்ன வேலைப்பளு என்கின்றீர்களா. இப்படி வந்து அந்த சோக கதைய கேளுங்க...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒன்னு இருக்குங்க, அதில் இருந்து சில நபர்கள்(Delegates - எல்லாம் ரொம்ப பெரிய கைங்க) நான் இருக்கும் இடத்துக்கு நேற்று வந்தார்கள், அவர்கள் வந்ததால் சில உபகரணங்களை நாங்கள் ஆற அமர இரு மாதங்களில் நிறுவ இருந்த வேலையை ஒரு வாரத்தில் நிறுவும்படி ஆகிவிட்டது. இந்த நொண்டி நொக்கு எடுப்பார்கள் என கேள்விப்பட்டு(பார்த்து இல்ல சாப்பிட்டோ) இருப்பீர்கள். அதே தான்....பொழப்பு நாறி போச்சு. வேற எதை பற்றியும் சிந்திக்க முடியாதபடி தொடர்ந்து வேலை, வேலை. தொடைதட்டியை(நன்றி - ஜொள்ளு பாண்டி) ஒரு வார காலமாக திறக்க கூடவில்லை. ஒரு வழியாக அனைத்து உபகரணங்களையும் வெற்றிகரமாக புதன் அன்று நிறுவி விட்டோம். அதை அனைத்தையும் பரிச்சோதனை பண்ணிவிட்டு அப்பாடா என வந்து வர்காந்தால், வர Delegates பாதுகாப்பு பத்தி பேசுவதற்கு இந்த மீட்டிங், அந்த மீட்டிங்க் சொல்லி இரண்டு நாள் அறுத்து எடுத்து விட்டார்கள். இந்த மீட்டிங்கில் Close Protection வந்தவனுங்க, Armured Vehicle சொல்லுறான், Convoy சொல்லுறான். இவங்க அடித்த கூத்தை பார்த்த போது நம்ம பிரதமர், முதல்வர் பாதுகாப்பு வீரர்கள் அடிக்கும் கூத்து தேவலாம். தீடிர் என்று வியாழன் இரவு மணல் புயல் வேற இருக்கும் என பயம் காட்டுனாங்க. ஒரு வழியா எந்த
பிரச்சனையும் இல்லாமல் அந்த Delegations பார்ட்டிகள் வந்தார்கள். வந்து என்ன பேசுனாங்க, என்ன நடந்தது என்று நான் இங்கு இப்ப கூற போவது இல்லை. சூடான் அனுபவங்கள் என்று ஒரு 10, 15 பதிவாவது பிற்காலத்தில் போட வேண்டாமா?(துளசியின் சிஷ்ய புள்ளையாக்கும்). வந்தவர்களை பத்திரமாக நேற்று மாலையே அனுப்பியாகி விட்டது. அதுனால அந்த மேட்டர பத்தி தெரிஞ்க்க விரும்புகின்றவர்கள், CNN, BBC பார்க்கவும். DPA(Darfur Peace Agreement) என கூறுவார்கள். அப்படியும் இல்லையென்றால் இந்த மாத கடைசியில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது. அதில் இந்த விசயம் தான் முக்கியமாக விவாதிக்கபட இருக்கின்றது,

சரி நம்ம மேட்டருக்கு வருவோம்....
வந்தவர்களை பத்திரமாக அனுப்பி வைத்த பிறகு வந்து பொறுமையாக நம்ம தொடைதட்டியை திறந்து ராக தேவன் மொட்டையின் பாடல்களை நுண்ணிய சத்ததில் ஒட விட்டு நம்ம மெயில் பாக்ஸ் திறந்தால் நூற்று கணக்கில் மெயில் குவிந்து கிடக்கு. நம்மளையும் மனுசனா மதிச்சு இவ்வளவு மெயில் வந்து இருக்கேனு அத்தனையும் படித்து பதில் போடுவதற்குள் நேற்றைய பொழுது முடிச்சி போச்சு. இடையில் ஒரு சிலரின் வலைப்பக்கத்தை பார்க்க மட்டும் முடிந்தது. இன்னிக்கு காலையில் வந்து நம்ம நாட்டு நிலைமையை தெரிந்து கொள்வோம் என தின நாளிதழ்கள் பக்கத்தை திறந்தால் தலை சுத்தி போச்சுங்க.... எவ்வளவு மேட்டர் நடந்து இருக்கு, இந்த பத்து நாள்ல....

"கண்ணகி மீண்டும் கடற்கரையில் இடம் பிடித்து விட்டார்கள்."
எதுக்கும் அருகாட்சியகத்தில் ஒரு இடத்தை முன்பதிவு செய்து வைக்கவும்.

"கலைஞரின் டில்லி பயணத்தில் தமிழக காங்கிரஸாரின் கூட்டணி ஆட்சி கோரிக்கை மறுக்கப்பட்டது."
தமிழக காங்கிரஸாரின் கனவுக்கு கலைஞரின் ஸ்பேஷல் ஆப்பூ.

"மோட்ரொலோ கம்பெனி தமிழகத்தில் தொடங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி உள்ளது"
வாழ்த்துக்கள், இது போல பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும்.

"பெட்ரோல், டீசல் விலை உயர்வு"
இருந்தாலும் நாலு ரூபாய் அதிகம் தான் - கொஞ்சம் நாள் கழித்து ஒரு ரூபாய் குறைப்பார்களோ

"விலை உயர்வை எதிர்த்து காம்ரேட்கள் போரட்டத்தை அறிவித்து இருக்கின்றார்கள்"
வழக்கம் போல.......

"நம்ம ஜெ.ஜெவும் போராட்டம் நடத்து போகின்றாராம்."
எதிர்க்கட்சியாக இருந்தால் இது போல் எதாவது செய்து கொண்டு இருந்தால் தான் பேப்பர்ல பெயரு வரும்.

"கலாம் ஆதயாம் தரும் பதவி குறித்த சட்ட மசோதவை திருப்பி அனுப்பி விட்டார்."
மெய்யாலுமா.....இந்த மேட்டர்ல இந்து நாளிதழில் வந்து கார்ட்டூன் சூப்பருங்க. Hat's Up.

"கலாம் போர் விமானத்தை இயக்கி அதில் அரை மணி நேரம் பயணம் செய்து உள்ளார்"
அரசியல தவிர மற்ற எல்லாத்துளையும் அவர் என்றுமே சூப்பர் தானுங்க. கலாமுக்கு ஒரு சலாம்.

"ராகுல் மகாஜன் சிறையில் அடைப்பு."
என்ன தாங்க நடக்குது.... ஒன்னும் புரிய மாட்டேன் என்கிறது

"இந்திய கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ்வுடன் முதல் டெஸ்டை டரா செய்தது"
ஒரு விக்கெட்டை விழ்த்த முடியாதது பெருத்த அவமானம்.

"உலக கோப்பை கால்பந்து போட்டிகள் துவங்கியது."
சந்தோஷம், பிரேசில் மாட்சை மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும்.

கடைசியாக ஒன்றை சொல்லி முடித்துக் கொள்கின்றேன். எங்கள் அலுவலகத்தில் புதிய உபகரணங்கள் பல நிறுவி உள்ளோம். அத்துடன் அவற்றில் சில மாற்றங்களை செய்து உள்ளோம். தற்பொழுது எங்களின் V-SAT யை இத்தாலியில் இருக்கும் எங்களின் Logbase V-SATவுடன் இணைத்து உள்ளோம். அதனால் NeoCounter நிறுவி இருக்கும் நண்பர்கள் வலைப்பக்கத்திற்கு நான் வந்தால் இத்தாலி என்று காட்டும். இத்தாலி என்று காட்டினால் உங்கள் நாகை சிவா தான் சூடானில் இருந்து படித்து கொண்டு இருக்கின்றேன் என எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையில் இத்தாலியில் இருந்து வலைப்பதிவர் யாரும் உள்ளீர்களா???

42 comments:

இத்தாலியன் said...

எனக்கு இத்தாலி தான்!

பொன்ஸ்~~Poorna said...

சூடானில் இருந்தாலும், இத்தாலி வழியாக இணையம் வந்து என்னோட யானையைப் பார்த்து மகிழ்ந்த நாகை சிவா.. உன்னோட பாசத்துக்கு முன்னாடி, அவ்வ்வ்வ்வ்வ்..

என்னைக் கேட்டா வாராவாரம் இது மாதிரி ஒரு செய்தித் தொகுப்பு போடலாம்..உங்க கமென்டோட.. நல்லா இருக்கு...:)

Anonymous said...

NEE THAMILANA UNNAKUU THEREEYUMMA
EELAATHIL TAMIL KULANTHAIKALI SRILANKAN RANUVAMMM KONDAATHUU

UNNAKUU CRICKET MUKEEYA news poointhuuu

மதி கந்தசாமி (Mathy) said...

நீங்கள் சூடானில் இருந்து பதிவெழுதுகிறீர்கள் என்று தெரிந்தபோது சந்தோஷமாக இருந்தது. நீங்கள் இருக்கும் இடத்து விதயங்களைப் பற்றி எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அப்படி எழுதுவதில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா?

இல்லையென்றால் விரிவாக ஒரு தொடர் எழுதலாமே?

தமிழ்நாட்டு விதயங்கள் எழுதுவதற்கு இங்கு நூற்றுக் கணக்கானவர்கள் இருக்கிறார்கள். உங்களைப்போன்று sensitive இடத்தில் இருப்பவர்கள் இங்கே practically யாருமில்லை (என்று நினைக்கிறேன்.)

கால்கரி சிவா said...

சிவா, அப்பப்ப வேலைகள் பார்பது நல்லதுதான். ஐ.நா ஆட்களைப் பிடித்து இந்த பக்கம் வந்து விடுங்கள் :)

வடுவூர் குமார் said...

நாகை தங்கங்களுக்கு என்று ஒரு Archive..
நன்றி ,இதைத்தவிர சொல்ல எதுவும் இல்லை.

நாகை சிவா said...

வாங்க இத்தாலியன்.....??????(இத்தாலியில் இருந்தால் இத்தாலியனா?)
உங்க சுட்டி வேலை செய்யவில்லை.

துளசி கோபால் said...

பெரிய இடத்துக்குப் பெரிய வேலைகள் எல்லாம் செஞ்சு முடிச்சுட்டீங்க.

வாழ்த்து(க்)கள்.

'சூடான் எழுத என்னத்துக்கு பிற்காலம் வேணும்? இக்காலத்துலேயே எழுதலாமே. நானும் போறதுக்கு முன்னாலே படிப்பேன்லெ?

நாகை சிவா said...

என்னங்க பண்ணுறது, நீங்க ஒடுற ஒட்டத்தின் சத்தம் சூடான் வரை கேட்குது. அதான் என்னவென்று பார்க்க வந்தேன்.
//ஒரு செய்தித் தொகுப்பு போடலாம்..உங்க கமென்டோட.. நல்லா இருக்கு...:)//
நீங்க நல்லா இருக்கு சொல்லுறீங்க, உங்க பின்னூட்டத்துக்கு அடுத்த வந்த அனாமி பின்னூட்டம் நான் ஒரு தமிழனா என கேள்வி கேட்கிறார். இருங்க முதலில் அவருக்கு பதில் சொல்லிட்டு வரேன், ரொம்ப கோபமா இருக்காரு போல.........

நாகை சிவா said...

வாங்க... அனாமி. உங்கள் கேள்வியும் கோபமும் நியாயமானது தான்.
ஈழத்தில் என்ன நடக்குகின்றது என்று நன்றாகவே தெரியும்.
நான் தமிழனா என கேள்வி எழுப்பி உள்ளீர்கள். நீங்கள் தற்சமயம் எங்கு உள்ளீர்கள் என தெரியவில்லை. ஈழத்தில் இருந்து அகதிகளாக(இந்த வார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை) தமிழகத்திற்கு வருபவர்களை எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அரவணைத்து கொள்கின்றோமே அதற்கு தான் இந்த கேள்வியா... உங்களுகாக பலவிதமான உதவிகளை(இதில் அனைத்தும் அடங்கும்) செய்தோம், செய்து கொண்டும் இருக்கின்றோம், அதற்கும் சேர்த்து தான் இந்த கேள்வியா. நல்ல கேள்வி, நான் தமிழனா இல்லையா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டாம்.
ஐயா அனாமி, உங்களுக்கு நான் கிரிக்கெட் பார்ப்பது பிடிக்கவில்லை என்பதற்காக நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்த முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாகை சிவா said...

வணக்கம் மதி கந்தசாமி!
முதல் முறையாக வந்து உள்ளீர்கள். வருகைக்கு நன்றி.
சூடான் குறித்து எழுதுவதற்கு பல விசயங்கள் உள்ளது. தலைநகரத்தை பற்றி எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. நான் இருக்கும் இடம் தான் சூடானின் மிகவும் சர்ச்சை உள்ளான பகுதி. இந்த இடத்தை பற்றி தான் எழுதலாம் என்று இருக்கின்றேன்.ஆனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதால் இப்பொழுது ஆரம்பிக்க முடியாது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிக்கப்படும். அதன் பிறகு கண்டிப்பாக இங்கு இருக்கும் நிலவரம் குறித்து விரிவாக எழுதுகின்றேன்.

உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

நாகை சிவா said...

//சிவா, அப்பப்ப வேலைகள் பார்பது நல்லதுதான்//
அண்ணாத்த இந்த மதுர லந்து தானே வேணாங்குறது.
நமக்கு களப்பணியில் தான் ஆர்வம் ஜாஸ்தி. எதிர்க்காலத்தில் பார்க்கலாம் அந்த பக்கம் வரலாமா என்று.

நாகை சிவா said...

என்னங்க வடவூர் குமார்.
நம்ம வலைப்பக்கத்தில் சொல்வதற்கு ஒன்றுமே இல்லையா.
அம்புட்டு மோசமாகவா இருக்கு...........
நம்ம வீட்டுக்கு முதல்தடவையாக வந்து உள்ளீர்க்கள். நன்றி.

நாகை சிவா said...

ஏங்க துளசியக்கா, எப்ப பாத்தாலும் போறதுக்கு முன்னால போறதுக்கு முன்னாலனு சொல்லிகிட்டே இருக்கீங்க.......இது கொஞ்சம் கூட நல்லா இல்லை.

நீங்களே சொல்லீட்டிங்க அப்புறம் என்ன எழுதி விட வேண்டியது தான். நான் மதி கந்தசாமி அவர்களிடம் கூறியது போல. இருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம். இங்கு இருக்கும் நிலைமையை பற்றி எழுதினால் Boringa இருக்காது. ஏன் என்றால் Very Dry Subject From Very Dry Place.

நாகை சிவா said...

போலி டோண்டு,
நீங்கள் அனுப்பிய இரு பின்னூட்டங்களை வெளியீட முடியாதற்கு வருந்துகிறேன்.
அது என்னங்க, முதல் பின்னூட்டம் இட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்து அடுத்த பின்னூட்டம் இடுகின்றீர்க்கள்.

கீதா சாம்பசிவம் said...

சிவா,
இடம் மாறி எல்லாம் வரலை. சரியாத்தான் வந்திருக்கீங்க. அதனால் என்ன? இதுவும் தெரிஞ்சுக்குங்க. எனக்கு 16 தான்னு ஒத்துக்கிட்டதுக்கு உங்களுக்கும், மாயவரத்தாருக்கும் நன்றி. விசேஷம் என்னன்னா, இன்னிக்கு என்னோட நட்சத்திரப் பிறந்த நாள். அதுலே நீங்க இரண்டு பேரும் இந்த மாதிரி வாழ்த்தறீங்க.

கீதா சாம்பசிவம் said...

அப்பாடி, ஒரே பாராட்டு மழையா இருக்கே! நானும் அந்த ஜோதிலே கலந்துக்கறேன். பாராட்டுக்கள், வெற்றிகரமாக ஐ.நா.வின் பணிகளை முடித்துக் கொடுத்ததற்கு. ஆஃபீஸ்லே வேலையும் பார்ப்பீங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்.

நாகை சிவா said...

நட்சித்திர பிறந்த நாள் கானும் சங்கத்தின் நிரந்திர தலைவலிக்கு வாழ்த்த வயது இல்லாமல் வணங்கி மகிழ்கின்றேன்.

நாகை சிவா said...

ப்ளாக்கர் சொதப்பினாலும் தனி மெயிலில் வந்து வரவேற்கும் கச்சேரி தேவ், உன் பாசத்தை நினைத்தால் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
உன் பாசத்துக்கு தலை வணங்குகிறேன் தோழா....

நாகை சிவா said...

//ஆஃபீஸ்லே வேலையும் பார்ப்பீங்கனு தெரிஞ்சுக்கிட்டேன். //
கீதா!
இந்த உள்குத்து, வெளிக்குத்து வேலை தானே வேணாங்குறது.

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி

Karthik Jayanth said...

சங்கத்து சிங்கமே சிவா (எலக்சன் போனாலும் இந்த பழக்கம் எப்ப போகும்ன்னு தெரியல)

நல்லாத்தான் அலசி இருக்கப்பு.. இப்படியே வார வாரம் பண்ணுன நல்லா இருக்கும்.. நம்ம நாட்டுல என்ன நடக்குதுன்னு உன்னோட பிலாக் பாத்தே தெரிஞ்சிகிடுவேன்.

Venkataramani said...

நாகை சிவா, one-click பயன்படுத்துவதற்கு நன்றி. ஆனால் நீங்கள் part 1ஐ தவறான இடத்தில் சேர்த்துள்ளதால் உங்கள் பக்கம் சரியாக காண்பிக்கப்படவில்லை. முதல் கமெண்டுடன் நின்றுபோய் error காண்பிக்கிறது. இதை IEல் பார்க்கவும்.
http://tsivaram.blogspot.com/2006/06/blog-post.html

காரணம் என்னவென்றால் நீங்கள் தேன்கூடு மறுமொழி திரட்டிக்கான பகுதியில் part 1ஐ சேர்த்துள்ளீர்கள். என் பயனர் கையேட்டில் இதுபற்றி விவரித்துள்ளேன்.

http://anniyalogam.com/oneclickguide.htm
படித்துவிட்டு தயவுசெய்து மாற்றிவிடுங்கள்.

ALIF AHAMED said...

http://thirupoondi.blogspot.com/2006/04/thirupoondi-map.html

see here nearest you

BY

ALIF AHAMED

CT said...

Hey Pal
we missed you. Nice consolidation of news in the form of Head lines with critics..
Yup we are waiting to see something about sudan and operations of UN.....
with best
CT

நாகை சிவா said...

வாங்க கார்த்தி, முதல் தடவையா நம்ம வீட்டுக்கு வந்து இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். வர வர நானே வாரத்துக்கு ஒரு தடவை தான் செய்தி தாள் படிக்குற மாதிரி இருக்கு.
நீங்க சொன்ன மாதிரி செய்வதற்கு முயற்சிக்கிறேன்.

நாகை சிவா said...

நன்றிங்க ரமணி, விரைவில் சரிபடுத்தி விடுகின்றேன். தவறை சுட்டி காட்டியதற்க்கும், மென் பொருளுக்கும் மிக்க நன்றி.

நாகை சிவா said...

வாங்க அலிப்!
திருப்பூண்டியா நீங்க, அடிக்கடி வந்து இருக்கோம் அப்பு.
நாகப்பட்டினத்தில் இருந்து அப்படியே கிளம்பி திருப்பூண்டி, திருத்துறைபூண்டி, பட்டுக்கோட்டை வரைக்கும் நம்ம கால்படாத இடமும் இல்லை. டீ குடிக்காத கடையும் இல்லை. எல்லாம் சுந்தரராமன் பேருந்தால் தான்.ஹம்... அது ஒரு பொற்காலம்......
நம்ம வீட்டிற்க்கு வந்ததை குறித்து மிக்க மகிழ்ச்சி.
விரிவாக விரைவில் பேசலாம்.

நாகை சிவா said...

நன்றி CT,
கூடிய விரைவில் சூடானை குறித்தும் ஐ.நா.வை குறித்தும் விரிவாக எழுதுகின்றேன்.

ILA(a)இளா said...

இந்த மாதிரியே வாரா வாரம் ஒரு பதிவு போடுங்க, நாளிதழ் படிக்கிற வேலையாவது குறையும்

நாகை சிவா said...

ரமணி, நீங்கள் கூறிய படி, தவறை சரி செய்து விட்டேன்.
உங்கள் உதவிக்கு நன்றி.
இதை உங்களிடமே செக் பண்ணுகின்றேன்.
சிரமத்திற்கு மன்னிக்கவும்.

நாகை சிவா said...

ஏனுங்க ரமணி, one click notification ன கிளிக் பண்ணினால் அதன் window அடுத்த பக்கத்தில் திறக்குமாறு செய்ய முடியுமா? அவ்வாறு இருந்தால் மிகவும் எளிதாக இருக்கும்.

Venkataramani said...

சிவா, புது ்சன்னலில் திறக்குமாறு செய்ய முயல்கிறேன். நல்ல யோசனை.

Venkataramani said...

அப்புறம் ஒரு விஷயம். நீங்கள் notification அனுப்பாமல் இருந்தால், உங்களுடைய இந்த ்யோசனை எனக்கு தெரியாமலே போயிருக்கும். இதைத்தான் டென்னிஸ் கோர்ட் அது இது என்று விளக்கியிருந்தேன்.

Venkataramani said...

சிவா, நீங்க சொன்னமாதிரி one-click புது window காமிக்கறமாதிரி செஞ்சுட்டேன். வேலைசெய்யுதான்னு பாத்து சொல்லுங்க.

நாகை சிவா said...

அருமையாக வேலை செய்கின்றது தோழரே!
மிக்க நன்றி.

ஏமாளி said...

50க்கும் மேலே கமெண்டு இருக்குதேன்னு இந்தப் பதிவ ஓப்பன் பண்ணி பாத்தேன். அதுலே 20 பதிவை அண்ணன் நாகை சிவாவே போட்டிருக்கிறாரு. அண்ணாத்தே இந்த மாதிரி எல்லாம் ஊரை ஏமாத்தலாமா?

ஜொள்ளுப்பாண்டி said...

//தொடைதட்டியை(நன்றி - ஜொள்ளு பாண்டி) ஒரு வார காலமாக திறக்க கூடவில்லை.//

என்ன சிவாண்ணே இதுக்குக்கேல்லாம் கூட ரெபரென்ஸ் போடனுமா ?? :( நம்ம பேரை இப்படியெல்லாம் பிரபலப்படுத்துறீங்களே !!! :)) ம்ம்ம்ம் நடத்துங்கண்ணா !!

செந்தழல் ரவி said...

சூடானிலிருந்து சூடாக - அப்படின்னு போட்டுடலாமா ??

செந்தழல் ரவி said...

அடடா...ஏமாளி....அதிக பின்னூட்டம் இருந்தாதான் பார்ப்பீரா...நீங்க ஏமாந்தா நாங்க என்ன பன்னுறது தலைவா...

நாகை சிவா said...

என்ன பாண்டி, நன்றி மறத்தல் நன்று அன்று இல்லையா. அதான்.
அதுவும் இல்லாமல், எல்லாம் ஒரு பாசத்துல தானா வரதுதான்.

நாகை சிவா said...

ஏனுங்க ஏமாளி, இன்னும் 50 எல்லாம் தாண்டவில்லை. வர பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வது தவறா...

நாகை சிவா said...

வாங்க ரவி, நீங்களாச்சும் சப்போட்டுக்கு வந்தீங்களே. அது வரைக்கும் சந்தோஷம்.