Saturday, May 06, 2006

தமிழக காங்கிரஸ்காரர்களே!

தமிழக காங்கிரஸ் பெயரை கேட்டாலே சிறிது காலமாக பத்திக் கொண்டு வருகிறது. என்னை பொறுத்து வரை தமிழகத்தில் காங்கிரஸ்க்கு ஒட்டு கேட்டு வருகின்றவர்களை துரத்தி துரத்தி அடிக்க வேண்டும். எத்துனையோ கேடு கெட்ட அரசியல் கட்சி இருக்கும் போது இப் புனித தேசத்திற்கு சுகந்திரம் வாங்கி கொடுத்த காங்கிரஸ் மேல் மட்டும் ஏன் தனிப்பட்ட கோபம் எனக் கேட்கிறிர்களா? அதுக்கு காரணம் இருக்கின்றது...

சுகந்திரம் வாங்கி கொடுத்த கட்சினு இன்னும் எவ்வளவு காலத்துக்கு இதை சொல்லியே காலத்தை ஒட்டுவது? உங்களின் தவறான கொள்ளைகளால் தானே தம்மாதுண்டு நாடு முதற் கொண்டு நம்மளை எல்லாம் நம்மை சீண்டி பார்த்துக் கொண்டு இருக்கிறது. தமிழக தேர்தலை விட்டு பழங்கதை ஏன் எனக் கேட்பது புரிகிறது.

இந்தி மொழியை புறவழியில் தமிழகத்தில் நுழைக்க பார்த்து, திராவிட கட்சிகளை வளர விட்டதற்கும் அவர்கள் பிரச்சினை, ரகளை செய்த போது அவர்களை அடக்க தவறியதுக்கும் முதல் அடி. அன்னிகே ஒழுங்கா அவர்களை கவனித்து இருந்தால் இன்று தமிழகத்தில் இலவசம் என்ற பெயரில் தமிழனை பிச்சைக்காரனாக்க முயற்ச்சி செய்து கொண்டு இருக்க மாட்டார்கள். அதுக்காக இரண்டாவது அடி. இனி கூற போகும் காரணங்களுக்கு அடியோ அடி தான்.
இடைகுறிப்பு: மொழி போர் தியாகிகளை கொச்சைப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.

காவேரியில் சூப்ரிம் கோர்டே தண்ணீர் திறந்து விட சொல்லியும் கர்நாடக காங்கிரஸ் தலைமையில் ஆன அரசு தண்ணீர் தர மறுத்த போது நீங்கள் எல்லாம் XXX(முடியை) புடுங்கி கொண்டு இருந்தீர்களா? அப்ப கோர்ட்டு சொன்ன தீர்ப்பு தவறா? அப்புறம் ஏதுக்கு அந்த கருமம். அது முதல்ல இழுத்து முடுர வழி பாரு. இத கேட்டா இது இரு மாநிலங்கள் இடையான sensitive பிரச்சனை, எடுத்தோம் கவுத்தோம் என செய்ய முடியாது என சப்பை கட்டு
கட்டுவீர்க்கள். இன்னும் எத்தனை வருடம் தான் இதயே கூற போகின்றீர்கள்?

முல்லை பெரியார் அணையை உயர்த்த கூடாது என கேரளா சட்டசபையில் தீர்மானம் போடுகிறார்க்கள். இங்க இருக்குற ஒரு XXXனும் ஒரு வார்த்தை பேசலை. அதுக் கூட பரவாயில்லை, தமிழக அரசால் பயங்கரவாதி என கூறப்பட்ட ஒருவனை விடுதலை செய்யுமாறு தீர்மானம் போடுகிறார்கள், அதுக்காவது எவனாச்சும் வாய துரந்தானா. அதுவும் இல்லை.

வாக்காளா பெருமக்களே சிறிதே சிந்தித்து பாருங்கள், சில மாதங்கள் முன்பு வரை கேரளா, கர்நாடகம், ஆந்திரா வில் இவர்கள் ஆட்சி தான், மத்தியிலும் இவர்கள் ஆட்சி தான். தமிழகத்தின் வாழ்வதாரா பிரச்சனையான காவேரி, கிருஷ்ணா, முல்லை பெரியார் அணை பிரச்சினைகளை தீர்த்து விட்டு வந்து ஒட்டு கேட்டு இருக்கலாமே. அப்படி செய்து இருந்தால் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனிதது ஆட்சியை பிடித்து இருக்கலாமே. அதை எல்லாம் செய்ய அவர்களுக்கு எங்கு நேரம் இருக்கிறது. தன் கட்சிகுள்ளே ஒருவன் காலை ஒருவன் வாருவதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை.

ஒரு கணம் யோசித்து பாருங்கள், இந்த கர்மவீரர்கள் என்னிக்காவது மக்கள் பிரச்சினைக்காக போரட்டம் நடத்தி, அதை நிறைவேத்த கூறி டில்லி சென்று இருக்கிறார்களா? இங்கு ஒருவர் மாநில தலைவர் ஆன மறுநிமிடம் அவரை மாற்ற சொல்லி 10 தலைவர்கள் டில்லிக்கு காவடி தூக்கிடு கிளம்பிடுவாங்க. இவங்க கட்சி ஆபிஸ்க்கு போனால் வேட்டியை உருவது, அடிதடி, உருட்டுகட்டை என தமிழ் சினிமாவை மிஞ்சுர காட்சிகள் எல்லாத்தையும் காணலாம். அது விடுங்க டில்லி இருந்து வர எவனாச்சும் அவன் கட்சி ஆபிஸ்க்கு போறானா? எல்லா பயலும் அறிவாலயத்துக்கு போறான்.
அங்கு போயி மக்கள் பிரச்சனையை பத்தியா பேசுறான், தன் பதவியை காப்பாத்திக்கவோ, காரியம் சாதிக்கவோ தானே போறான்.
மானியத்தை ஒழித்தால் தான் இந்தியாவை வரும்காலத்தில் காப்பாற்ற முடியும் என பாராளுமன்றத்தில் முழங்கி விட்டு தமிழகத்தில் அரிசி 2 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என்கிறார், இலவச டி,வி.யும் சாத்தியம் என் கிறார் ஒரு மத்திய அமைச்சர். நல்லாவே குத்துறிங்க, காதுல இரத்தம் சொட்ட சொட்ட................ ஐயா, மந்திரியாரே! மானியம் கூட தர வேண்டாம், பெட் ரொல், டீசல், கெரசின் விலையை உயர்த்தாமல் இருந்தாலே உங்களுக்கு புண்ணியமாக போகும்.
தமிழக காங்கிரஸ்காரர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!
தன்மானத்துடன் செயல் படுங்கள், தமிழக மக்களுக்கு தேவையானவற்றை செயல்படுத்த துவங்குகள். தண்ணீர் பிரச்சனையை கூடி பேசி முடிவுக்கு கொண்டு வாருங்கள். கூட்டணி வைத்து திராவிட கட்சிகளை மேலும் வளர்த்து விடாதீர்கள். இதை எல்லாம் செய்தால் கூடிய விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. உண்மையிலே திராவிட கட்சிகளை பார்த்து பார்த்து வெறுத்து உள்ளோம். வாய்ப்பை தவற விடாதீர்கள். ஆனால் இதை எல்லாம் செய்வீர்களா என்பது தான் மிக பெரிய ?

16 comments:

SK said...

இதில் ஒவ்வொரு வார்த்தையும் 'அக்ஷர லக்ஷம்' பெறும்!

அப்படியே வழி மொழிகிறேன்!

கழகங்களை வளர்த்து விட்டு,
பின்னே வேறு வழியின்றி
அவர்கள் கால் பிடித்து
பதவி சுகம் பேண நினைக்கும் இவர்களை
அப்படியே வைத்து வளம் சேர்க்க விழைகின்ற
கழகங்களையும், காங்கிரஸையும்
இந்தத் தேர்தலில்
தூக்கி எறிவோம்!

நாகை சிவா said...

ஆத்திகவாதியே, உங்கள் வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றி. முரசு கொட்டுதா எனப் பார்ப்போம்.

Anonymous said...

aanaal..RAHUL GANDHI tamil naatukku vandha mattum ella vottum congressukku thaan ...lol

Anonymous said...

aanaal..RAHUL GANDHI tamil naatukku vandha mattum ella vottum congressukku thaan ...lol

சீனு said...

Congress men to another Congress men: Why Blood? ... Same blood.

ENNAR said...

//தண்ணீர் பிரச்சனையை கூடி பேசி முடிவுக்கு கொண்டு வாருங்கள்.//

நூறு ஆண்டுகள் முடிந்ததும் தண்ணீர் ஒப்பந்தத்தை ரெனிவல் செய்யாமல் தனக்குத் தேவையான வற்றைப் பெற்றுக்கொண்டவர்கள் உத்தமர்கள். தஞ்சை காங்கிரஸ் காரர்கள் வழக்கு தொடுத்தவர்(ஆர் வெட்கட்ரானின் சித்தப்பாவும் ஒருவர்) ஏமாளிகள்
காவிரி தண்ணீரை விற்றவர்கள் நல்லவர்கள் இதற்கு காங்கிரஸ் காரர்கள் என்ன செய்வார்கள் அந்த காங்கிரஸ்காரர் போட் திட்டத்தினால் இன்றும்நாம் சுகமாக இருக்கிறோம் எத்தனை நீர் தேக்கங்கள் எத்தனை தொழிற்சாலைகள் இந்த திராவிட கட்சிகள் வந்து என்ன செய்தன கண்ணகிக்கு சிலை ஒளவையாருக்கு சிலை பெரியாருக்கு சிலை அண்ணாவுக்கு சிலை எத்தனை இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது என்ன பேசுகிறீர்கள் காங்கிரஸ் காரர்களைப் பற்றி அன்று கருப்புக்கொடி ஏற்றியவர்கள் இன்று சுகபோகிகள் வேண்டாம் நான் நிறை ஏதாவது ஏடாகூடமாக உள்ளதையெல்லாம் டைப்பிடுவேன் வேண்டாம் நாளை பெருந்தலைவர் பிறந்த நாள்

பாவூரான் said...

காங்கிரசுக் காரர்களைத் திட்டி உசுப்பேத்தி காங்கிரசு ஆட்சிக்கு அடித்தளம் போடுறீராக்கும். என் கண்ணுக்கு உம்மைத் தவிர வேறொரு காங்கிரசுக்காரர் தெரியலே.

உண்மையில் எனக்கு காங்கிரசுக் காரருக்கும் திராவிட கட்சிக்காரருக்கும் வித்தியாசம் தெரியல.

எல்லாத்துக்கும் ( காங்கிரசுக்கும் சேர்த்து ) மக்கள் மாற்று தேடுறாங்க என்பது மட்டும் உண்மை. விசய காந்து வாங்கிய வாக்குகள் ,இததான் சொல்லுது

Nakkiran said...

உங்கள் க்ருத்துக்களை நான் வழிமொழிகிறேன்

நாகை சிவா said...

//Congress men to another Congress men: Why Blood? ... Same blood. //

உண்மை சீனு, Always same blood

நாகை சிவா said...

ENNAR!
நான் கூறியதில் ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு சண்டைக்கு வராதீர்கள். நான் கூறியதில் ஒரு வார்த்தை தவறு என்று சொல்லுங்கள். கண்டிப்பாக ஒரு வார்த்தைக் கூட தவறு கிடையாது. நான் திராவிட கட்சிகளுக்கு வக்காலத்து வாங்கவில்லை. என்னுடைய மற்ற பதிவுகளை படித்து பார்க்கவும். சுருக்கமாக சொன்னால் தற்போதைய நிலையில் எனக்கு எந்த கட்சியின் மீதும் மரியாதை கிடையாது.

காமராஜர் மேல் எனக்கு மிகவும் மரியாதையும், மதிப்பும் உண்டு, அவரை போல ஒருவர் நம் தமிழ்நாட்டில் பிறந்தது நமக்கும் எல்லாம் பெருமை.
நான் சந்திக்க விரும்பிய நபர்களில் அவரும் ஒருவர்.அதை என் பதிவிலும் குறிப்பிட்டு உள்ளேன்.
http://tsivaram.blogspot.com/2006/06/blog-post_17.html
ஆனால் அவரை பற்றி எடுத்த படத்தை எத்தனை காங்கிராஸ்காரர்கள் பார்த்து இருப்பார்கள் என்று நினைக்கின்றீர்கள். நான் சென்னையில் வேலை பார்த்த போது என் அலுவலகம் காமராஜர் பவனுக்கு மிக அருகில் தான் இருந்தது. நானும் பார்த்து இருக்கேன், இவர்கள் அடிக்கும் கூத்துகளை எல்லாம்.

நீங்கள் மேற்கொண்டு என்ன சொல்ல விரும்பினாலும் தாரளமாக சொல்லலாம்.

நீங்கள் என்னை பற்றி ஒரு மாதிரி சொல்கின்றீகள், உங்களுக்கு அடுத்து வந்தவர், நான் காங்கிரஸ்காரன் என்று முத்திரை முத்தி இருக்கிறார்.

நாகை சிவா said...

//உண்மையில் எனக்கு காங்கிரசுக் காரருக்கும் திராவிட கட்சிக்காரருக்கும் வித்தியாசம் தெரியல.//
உண்மை தான், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்து வைத்து அவர்களும் திராவிட கட்சிகள் நிலைமைக்கு வந்து விட்டார்கள்.

நாகை சிவா said...

//உங்கள் க்ருத்துக்களை நான் வழிமொழிகிறேன் //
நன்றி நக்கீரரே!

sivagnanamji(#16342789) said...

"உண்மை சுடும்"அல்லவா?
சொற்களில் கடுமை இருக்கக்கூடும்;அனால் பிரத்தியட்ச நிலை இதுதான்
பலரின் ஆதங்கத்தை நன்றாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்

ENNAR said...

சிவா
தங்கள் ஆதங்கம்!! எனக்குப் தெரிகிறது என்ன செய்ய தமிழகத்தின் தலையெழுத்து அப்படி.
தான் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இந்த நாட்டையே விற்க முற்படும் திராவிட கட்சிகள் முன் தான் மட்டும் தனியாக (மைரிட்டியாக) நின்று காப்பாற்ற முயற்சிக்கும் காங்கிரஸ் தலைகுனிகிறது.
சோனியா ராஜினாமா செய்தார் கலைஞர் பேரன் செய்தாரா? லால்பதூர் சாஸ்த்திரி செய்தார் கலைஞர் செய்தாரா? ஜெயா செய்தாரா?

நாகை சிவா said...

//பலரின் ஆதங்கத்தை நன்றாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் //
வாங்க சிவஞானம்ஜி. உங்க கருத்துகளுக்கு நன்றி.

நாகை சிவா said...

//தங்கள் ஆதங்கம்!! எனக்குப் தெரிகிறது என்ன செய்ய தமிழகத்தின் தலையெழுத்து அப்படி.//
அதை மாற்றுவதற்கு காங்கிரஸ்க்கு தான் தற்சமயம் வாய்ப்பு உள்ளது என்பதால் தான் இந்த பதிவே. 1996யில் ஒரு முறை வாய்ப்பை இழந்தார்கள். இந்த முறையும் போய் விட்டது. மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைத்தால் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது என் ஆவல்.