Tuesday, November 07, 2006

நட்சத்திர வாரம்!

என்னடா இவன் போன வாரம் தானே தமிழ்மணம் நட்சத்திரமா இருந்தான், இப்ப என்ன நட்சத்திரம் வாரம் தலைப்பு போட்டு பதிவு போடுறானே தானே யோசிக்கிறீங்க. அது ஒன்னும் இல்லங்க. போன வாரம் அதாவது நட்சத்திர வாரத்தில் போட்ட பதிவுகளை பற்றி ஒரு பதிவு போடலாம் என்று எழுந்த எண்ணத்திலும், நன்றி கூவும் பொருட்டும் இந்த பதிவு.

பல நாட்களுக்கு முன்பே நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டதை நமக்கு தெரிவித்து இருந்தாலும் வழக்கம் போல கடைசி நேரத்தில் பாத்துக்கலாம் என்ற சோம்பேறித்தனத்தால் ஒரு பதிவு கூட எழுதி வைக்க வில்லை. எல்லா பதிவுகளுமே வழக்கம் போல சூட சூட டைப் பண்ணி போட்டது தான். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய தமிழ்மணத்திற்கும் என்னை நட்சத்திரமாக தேர்ந்து எடுத்த மதி கந்தசாமிக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

1.
மெய்யாலுமா - வழக்கம் போல ஜல்லியடித்த பதிவு. நட்சத்திர அறிமுக பதிவு அது. வராத பெருந்தலைகள் எல்லாம் வந்து நம்மளை வாழ்த்திட்டு போனாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஒரு சில நபர்கள் இதுக்கு மட்டும் தான் வந்தாங்க. அதுவும் கொஞ்சம் சந்தோஷமா இருந்துச்சு.

2.
உள்கட்டமைப்பு - தானியங்கி(அல்லது ப்ரீபேய்டு) மின்சாரத்தை பற்றிய பதிவு. பல நாள் பாத்தது தான் என்றாலும் அன்று தீடிரென்று இதை பதிவாக போடலாம், அதே சமயத்தில் இதை நம் நாட்டில் எந்த மாதிரி செயல்படுத்தலாம் என்று யோசித்து போட்டப்பட்ட பதிவு அது. பின்னூட்டங்களில் நல்ல கருத்து பரிமாற்றம் இருந்ததாக நம்ம குமரன் சொன்னது மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது.இருந்தாலும் இந்த பதிவின் முதல் வரியில் இருந்த ஒரு வரி சிலரை உறுத்தியதாக சொன்னார்கள். ஒருவர் சற்றே மேல் போய் கேப்டன் பட டயலாக் மாதிரி இருக்குனு சொல்லிட்டார். அந்த வரிகள் போடுவதற்கு காரணமாக இருந்தது பதிவு இது. இந்த பதிவை சமீபத்தில் தான் பார்க்க நேர்ந்தது. பார்த்தவுடன் அதை குறித்து பதிவு போடலாம் என்று இருந்தேன். பிறகு இது போல பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல், என்ன பிரச்சனை என்றே தெரியாமல் மொட்டை தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சு போடுவது இங்கு ஒன்றும் புதுசு இல்லை என்று விட்டு விட்டேன். பல வருடங்களுக்கு முன்பு எடுத்த படங்களை வைத்து இன்றைய நிலை, அங்கு இப்பொழுது என்ன நடக்கிறது என்பதை எல்லாம் தெரியாமல் சொல்ல வேண்டும் என்பதற்காக பல பின்னூட்டங்கள், அதிலும் குறிப்பிட்ட சில பின்னூட்டங்களை கண்ட பிறகு இந்த வரிகள் என் பதிவில் சேர்க்கப்பட்டது.

3.
சினிமா விமர்சனம் - நாம் பார்த்து கஷ்டப்பட்ட படங்களை பற்றிய பதிவு அது. என்னடா எப்ப பாத்தாலும் 4 படங்களுக்கு சேர்த்து விமர்சனம் எழுதுகிறேன் என்று தம்பி வருத்தப்பட்டார். மதுமிதா போடவில்லை என்று வெட்டி வருத்தப்பட்டார். இந்த பதிவு ரொம்பவே சுமார் என்று நம் நண்பர்கள் சொன்னாங்க. அது உண்மை தான் போல.... இந்த பதிவு போட்ட போது தமிழ்மணத்தில் வெளியீட முடியவில்லை.

4.
வண்ணக் கோலங்கள் - பல நாள் நான் எடுத்து புகைப்படங்களை பதிவாக போட வேண்டும் என்று எண்ணியதை தொடர்ந்து போட்ட பதிவு. பல நல்ல விமர்சனங்களை உள்வாங்கி கொண்டேன். நானே எதிர்பாக்காத அளவுக்கு பலர் வந்து இருந்தனர். இந்த துறையை பற்றி நல்ல அறிவுரைகளை வழங்கினார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னால் பிடிக்க முடியாத மின்னலை நம்ம கைப்புள்ள போட்டு அசத்தி விட்டார்.

5.
அறுசுவை - சரி நாமலும் ஒரு சமையல் பதிவு போடுவோமே என்று போட்ட பதிவு. நல்ல ரெஸ்பான்ஸ். அறுசுவையை பார்த்து நம்ம வெட்டி கேசரி செய்து சாப்பிட்டு இருக்கார். நல்லா இருந்தது என்று அவரு பக்கத்து வீட்டுக்காரங்களே சொன்னாங்களாம். ஆனா பாருங்க அவரு ஒரு சோதனை முயற்சியாக தான் அவங்களுக்கு முதலில் கொடுத்தார் என்று உண்மை எனக்கு மட்டும் தான் தெரியும். இது போல தம்பி கூட முயற்சி பண்ண போவதாக கேள்வி, பாக்கலாம். இதனால் நம் சமையல் குறிப்பு தொடர்ந்து வரும்.

6,
கண்ணி வெடி - 1 - தொடராக ஆரம்பித்தது. தொடர முடியாமல் போய் விட்டது. நான் நட்சத்திரமாக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த பதிவு என்று எண்ணுகிறேன். அதனால் தான் இதை ஒரு மீள்ப்பதிவாக போட்டேன். தொடர்ந்து எழுத உள்ளேன். இந்த பதிவு போட்ட தினத்தில் இருந்து பிளாக்கர் சொதப்ப தொடங்கி விட்டது. பின்னூட்டங்கள் போட முடியவில்லை என்று பல மெயில்கள். என்ன பிரச்சனை என்று பார்க்க கூட முடியாதப்படி வேலைப் பளு வேற.

7.
திருநாகை அழகியார் - ஆன்மிகம் இல்லாமல் நட்சத்திர வாரமா என்று எண்ணி போட்ட பதிவு இது. குறிப்பாக குமரன், எஸ்.கே, ஜி.ரா, தி.ரா.ச, கீதா போன்ற ஆன்மிக செம்மல்களை குறி வைத்து போட்ட பதிவு இது. குமரன் மற்றும் கீதா தான் உள்ளேன் ஐயா போட்டார்கள். மற்றவர்களுக்கு என்ன வேலையோ? தொடர்ந்து இது போல பதிவுகளும் அவ்வபோது தொடரும். குமரனுக்காவே பாசுரங்கள் போடப்படும். நம்ம ரவி ஒரு பாசுரம் போட்டு இருந்தார். அவருக்கு என் நன்றி. இந்த பதிவும் பிளாக்கர் சொதப்பி விட்டது. பதிவு போட்டு அது காணாமல் போய் மீண்டும் பதிவாக போடும்ப்படி ஆனது.

8.
திருநாகை பெருமாள் கோவில் படங்கள் - இந்த நாளில் வேற ஒரு பதிவு போடலாம் என்று இருந்த நான் திரு. குமார் அவர்கள் அனுப்பிய படங்களை பார்த்த பிறகு அதையே ஒரு பதிவாக போடலாம் என்று போட்ட பதிவு. எம் பெருமான் படமும், அக்கோவிலின் பிற படங்களை போட்டு இருந்தேன். இந்த பதிவு போட உதவியாக இருந்த குமார் மற்றும் பாபுவுக்கும் என் நன்றி.

போன வாரத்தில் என்னால் முடிந்த அளவு நன்றாக செய்த திருப்தி உள்ளது. மொத்ததில் எனக்கு நம்ம ராமநாதன் சொன்ன மாதிரி, நல்ல அவியலாகப்பட்டது. அது சரியா தவறானு நீங்க தான் சொல்லனும்.

இது போக எனக்கு வழக்கம் போல பின்னூட்டங்கள் மூலம் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. அதிலும் சிலர் ரொம்பவே பாச மழையில் நனைய வைத்து விட்டார்கள். நான் நட்சத்திரம் ஆனதற்கு என்னை விட அதிகம் மகிழ்ந்த சங்கப் பெருமக்களுக்கும், நண்பர்களுக்கும், கூகிள் டாக்ல மெசெஜ் போட்டு கலக்கி அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள். இது போக என்னை தனியாக மெயிலில் அழைத்து வாழ்த்து கூறிய அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி.

கடைசியாக நம்ம ராயல் ராம். இவரு தான் நம்மை தாரை தப்பட்டையுடன் வரவேற்றார். நன்றி சொல்லி ஒரு பதிவு போட சொன்னதும் அவரு தான். அவருக்கு என் அன்பு கலந்த பண்பு கலந்த மரியாதை கலந்த இன்னும் என்ன என்ன கலக்கனுமோ எல்லாத்தையும் கலந்த நன்றிகள். ராயல் இது போதும்ல... ரொம்ப கூவுனா நல்லா இருக்காது.

27 comments:

கோவி.கண்ணன் [GK] said...

சிவா,

ப்ளாக்கை விட்டு தூரப் போனதால் உடனடியாக எல்லாவற்றையும் படிக்க முடியவில்லை !

பொறுமையாக படித்துவிட்டு பின்னூட்டம் போடுவேன் !

நாகை சிவா said...

//ப்ளாக்கை விட்டு தூரப் போனதால் உடனடியாக எல்லாவற்றையும் படிக்க முடியவில்லை !//

எங்க போனீங்க கண்ணன், எனக்கு புரியல. ஏன் தூர போகனும். இரண்டு மூன்று பதிவுக்கு வந்தீர்கள்....

இராம்/Raam said...

//போன வாரத்தில் என்னால் முடிந்த அளவு நன்றாக செய்த திருப்தி உள்ளது.//

புலி,

உண்மைதாப்பா நல்லா இருத்துச்சு எல்லா பதிவுமே!!!!

//மொத்ததில் எனக்கு நம்ம ராமநாதன் சொன்ன மாதிரி, நல்ல அவியலாகப்பட்டது. அது சரியா தவறானு நீங்க தான் சொல்லனும்.//

ஆமால்லே!!!!

கதிர் said...

நன்றி ஒனக்கு வார்த்தையில்லை எனக்கு நாந்தான் அலுவுரேன்
லாலாலா லாலா லாலாலா...

இராம்/Raam said...

//கடைசியாக நம்ம ராயல் ராம். இவரு தான் நம்மை தாரை தப்பட்டையுடன் வரவேற்றார். நன்றி சொல்லி ஒரு பதிவு போட சொன்னதும் அவரு தான். அவருக்கு என் அன்பு கலந்த பண்பு கலந்த மரியாதை கலந்த இன்னும் என்ன என்ன கலக்கனுமோ எல்லாத்தையும் கலந்த நன்றிகள்.//


ரொம்ப நன்றிப்பா என்னை விளம்பரப்படுத்தி விட்டதுக்கு!!!!

//ராயல் இது போதும்ல... ரொம்ப கூவுனா நல்லா இருக்காது.//

என்னையே இழுந்து வச்சு லந்து பண்ணிறதிலே உனக்கு அப்பிடி ஒரு ஆனந்தம்..... :(

Syam said...

பங்காளி..ஒரு வாரம் கலக்கிபுட்ட...அதிலும் ரீகேப் மாதிரி இன்னும் ஒரு பதிவு போட்டு சூப்பர் போ :-)

Syam said...

சரி இனிமேல் எங்க பிளாக்குக்கெல்லாம் ரெகுலரா அட்டெண்டன்ஸ் குடுக்கனும்... :-)

கப்பி | Kappi said...

ஆம்..அருமையான அவியல் வாரம்தான் புலி ;)

எப்பவும் போல உங்க ஸ்டைல்ல பதிவுகள் போட்டு கலக்கிட்டீங்க!

வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி said...

புலி,
நீ சொன்ன மாதிரி அட்டகாசமான அவியலா இருந்துச்சு...

//மதுமிதா போடவில்லை என்று வெட்டி வருத்தப்பட்டார்//
வருத்தமெல்லாம் இல்லை புலி... உங்கிட்ட எத்தனை தடவை சொல்றது... எல்லா படத்துலையும் ஹீரோயின் போட்டுட்டு அதுக்கு மட்டும் போடலைனா என்ன அர்த்தம்னு கேட்டேன் ;)

//அறுசுவையை பார்த்து நம்ம வெட்டி கேசரி செய்து சாப்பிட்டு இருக்கார். நல்லா இருந்தது என்று அவரு பக்கத்து வீட்டுக்காரங்களே சொன்னாங்களாம். ஆனா பாருங்க அவரு ஒரு சோதனை முயற்சியாக தான் அவங்களுக்கு முதலில் கொடுத்தார் என்று உண்மை எனக்கு மட்டும் தான் தெரியும//
நான் ஏற்கனவே கேசரி செஞ்சிருக்கேன் புலி... ஆனா சக்கரை ஒண்ணுக்கு ஒண்ணா இல்லை ஒண்ணுக்கு ரெண்டானு ஒரு சந்தேகம்...

சரினு உன் அருசுவை பதிவு ஞாபகத்துக்கு வந்து அந்த சைட் போயி பாத்து கரெக்டா பண்ணிட்டேன்...

ரொம்ப நல்லா இரூந்துதுனு என்கிட்ட ரெசிபி கேட்டாங்கனா பாத்துக்கோ ;)

மு.கார்த்திகேயன் said...

ஆஹா மாப்பி.. எப்படியா.. பதிவு போடுறதுக்கு ஒண்ணுமே இல்லைன்னு இந்த வாரத்துல போட்டதையே மறுபடியும் ஒரு பதிவா போட்டுட்டா.. நடத்துப்பா நடத்து..

குமரன் (Kumaran) said...

நன்றி நவிலல் நன்று நன்று நாகையாரே (ஆகா. எத்தனை ந இந்த ஒரு வார்த்தையில்?) :-)

ஆன்மிகச் செம்மல்களில் இளையவர் இரவிசங்கரை சேர்க்காமல் விட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் பெயரை நீங்கள் சேர்த்தால் தான் உங்கள் பெயரும் ஆன்மிகச் செம்மல்கள் சங்கத்தில் சேர்க்கப்படும் என்பதை மிக்க பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். :-)

நாகை சிவா said...

//ஆன்மிகச் செம்மல்களில் இளையவர் இரவிசங்கரை சேர்க்காமல் விட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். //

ரவியை இளைவர் என்பதால் சேர்க்காமல் அவர் பெயரை தனியாக போட்டேன். ரவி விருப்பபட்டால் அவரையும் சேர்த்து விடுவோம். இதுக்கு எல்லாம் போய் வன்மையா கண்டிக்கனுமா, மென்மையா சொன்னாலே போதுமே.....:-))))

நாகை சிவா said...

//நன்றி ஒனக்கு வார்த்தையில்லை எனக்கு நாந்தான் அலுவுரேன்
லாலாலா லாலா லாலாலா... //

தம்பிண்ணன், இதுக்கு எல்லாம் போய் அழுவலாமா? அது என்ன உங்க அழுகை கூட எஸ்.ஏ.ராஜ்குமார் மியுஸ்சிக் மாதிரி ராகத்தோடு இருக்கு ;-)

நாகை சிவா said...

//ரொம்ப நன்றிப்பா என்னை விளம்பரப்படுத்தி விட்டதுக்கு!!!!//

ராயலு விடுப்பா.. இதுக்கு எல்லாம் போய்.....

//என்னையே இழுந்து வச்சு லந்து பண்ணிறதிலே உனக்கு அப்பிடி ஒரு ஆனந்தம்..... :( //

இதுக்கு எனக்கு என்னப்பா ஆனந்தம். உன்னை பற்றி பெருமையா தானே கூறி இருக்கேன். அப்புறம் லந்து னு எதுக்கு சொல்லுற....

//ஆமால்லே!!!! //

என்ன தூத்துக்குடி படம் பாத்துட்ட போல...

நாகை சிவா said...

/பதிவுகள் எல்லாமே நன்றாக இருந்தன. நட்சத்திரப் பதிவுகளுக்குப் பாராட்டுகள்.

வைசா //

மிக்க நன்றி வைசா!

நாகை சிவா said...

//அதிலும் ரீகேப் மாதிரி இன்னும் ஒரு பதிவு போட்டு சூப்பர் போ :-) //

நீங்க எல்லாம் ஒரு கை கொடுத்தது நான் கலக்க ஒரு காரணம் பங்கு.

//சரி இனிமேல் எங்க பிளாக்குக்கெல்லாம் ரெகுலரா அட்டெண்டன்ஸ் குடுக்கனும்... :-) //

இதை எல்லாம் சொல்லனுமா, நானாவே வர மாட்டேனா என்ன? :-)

நாகை சிவா said...

//எப்பவும் போல உங்க ஸ்டைல்ல பதிவுகள் போட்டு கலக்கிட்டீங்க!//

அப்படியா, எனக்குனு ஒரு ஸ்டைல் இருக்குனு நீ சொல்லி தான் எனக்கே தெரியுது. அதை கொஞ்சம் விளக்கமா சொல்லேன்.

நாகை சிவா said...

//எல்லா படத்துலையும் ஹீரோயின் போட்டுட்டு அதுக்கு மட்டும் போடலைனா என்ன அர்த்தம்னு கேட்டேன் ;)//

அதை மட்டும் நொண்டி நொண்டி கேட்டதால் அப்படி நினைச்சுட்டேன்ப்பா...

//ரொம்ப நல்லா இரூந்துதுனு என்கிட்ட ரெசிபி கேட்டாங்கனா பாத்துக்கோ ;) //

இதை தான் நேரக் கொடுமைனு சொல்லுவாங்களோ....

நாகை சிவா said...

//ஆஹா மாப்பி.. எப்படியா.. பதிவு போடுறதுக்கு ஒண்ணுமே இல்லைன்னு இந்த வாரத்துல போட்டதையே மறுபடியும் ஒரு பதிவா போட்டுட்டா.. நடத்துப்பா நடத்து.. //

மாப்பி, பதிவு போட ஏகப்பட்ட மேட்டரு இருக்கு. நேரம் இல்லனு வேணுமுனா ஒத்துக்குறேன். நம்ம ராயல் சொன்னாப்புல, சரி போட்டாச்சு....

Queen said...

Nice recap for me since i missed reading your blogs for the past 10 days. Thanks Siva.

Sivabalan said...

உங்கள் நடசத்திர வார பதிவுகள் அனைத்தும் நன்றாக இருந்தன. பாராட்டுகள்.

நாமக்கல் சிபி said...

//இதை தான் நேரக் கொடுமைனு சொல்லுவாங்களோ....
//

புலி,
நீ போண்டா படம் போட்டுட்டு வடைனு சொன்னத நான் நம்பல.. அந்த மாதிரி இதை நீ நம்பியே ஆகனும்...

வேணும்னா நீ பாஸ்டன் வா... உனக்கு செய்து தரேன் ;)

Geetha Sambasivam said...

என்ன புலி, மறுபடி பதுங்கி ஆச்சா? உங்க பங்காளியும் வரதில்லை, இரண்டு பேரும் பேசி வச்சிக்கிட்டீங்களா?
வேலைப்பளு அதிகமோ?

Porkodi (பொற்கொடி) said...

puli ennayya nadakudu inga?!

ambi said...

super puli. kalakitta po! work load ejamaan, regularaa vara mudiyalai. will try to turn up in future.

Raji said...

Hai Siva,
long time! eppadi irukeenga? hope all is well in your part of the world

Syam said...

//உங்க பங்காளியும் வரதில்லை, இரண்டு பேரும் பேசி வச்சிக்கிட்டீங்களா//

கீதாக்கா, உங்க ஜன்னல் தான் வேலை செய்யலனு நினைச்சோம்...நான் வந்து 4 கமெண்ட் போட்டுருக்கேன் :-)