Thursday, November 23, 2006

வலைப்பதிவர் சந்திப்பா?

இடம் -----------------------------------------------------------------
நேரம் ------------------------------------------------------------------
நாள் -------------------------------------------------------------------
தலைப்பு ---------------------------------------------------------------மக்கா, தலைப்பை பாத்துட்டு எல்லாரும் வரிஞ்சி கட்டிட்டு வராதீங்க..... ஒன்னும் பெரிசா விசயம் இல்லை. இன்னிக்கு வானம் தெளிவா இருந்தா, தலைநகரம் சென்று அங்கட்டு இருந்து அமீரகத்துக்கு(ஷார்ஜா) செல்லலாம் என்று இருக்கேன்.(24.11.06) அப்படி அங்குட்டு போனா ஒரு நாலு, அஞ்சு நாள் இருப்பேன்.(28.11.06). உலககெல்லாம் நம்ம வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்த்தி கொண்டு இருக்காங்க.... நாமளும் அதில் எல்லாம் எப்ப கலந்துக்குறதுனு ரொம்ப நாள் ஒரு டவுட் இருந்துச்சு. அந்த டவுட் இந்த தடவை கீளியர் பண்ணலாம் என்று முடிவு எடுத்துட்டேன். ஆம் நண்பர்களே, நாமா அங்க சந்திக்கலாம். ஆனா யாரு எல்லாம் அங்க இருக்கீங்கனு எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்த வரை தம்பி, முத்துக் குமரன் இருக்காங்க. நிலவு நண்பன் இன்னும் இந்தியாவில் தான் இருக்காரு.

அங்குட்டு இருக்கும் நண்பர்கள் ஏதும் சந்திப்பு ஏற்பாடு செய்தால் ஒகே. நமக்கு இடம் ஏதும் அங்கு தெரியாது. போன் நம்பரை மெயிலுக்கோ இல்லை பின்னூட்டத்துக்கோ அனுப்பினால் நோட் பண்ணி அங்குட்டு வந்து அழைக்கிறேன்.

அப்படியே ஒருவேளை எல்லாரும் சந்தித்தால் எந்த தலைப்பில் பேசலாம், சண்டை போடலாம் என்பதை எல்லாம் நீங்களே முடிவு எடுத்துக்கோங்க... நான் ஒரு ஒரமா உர்கார்ந்து வேடிக்கை பாக்குறேன், ஒரு டீ இல்லாட்டி காபி அதுவும் இல்லாட்டி வேற எதையாச்சும் குடித்துக் கொண்டே........

நீ எல்லாம் ஒரு ஜல்லி அடிக்கும், மொக்கை போடும் பதிவர், உன்னை எல்லாம் சந்திக்கனுமா அப்படினு ஒரு கேள்வி எழலாம், அதில் தவறும் கிடையாது. ஆனா இதையே எல்லாரும் சொல்லி எஸ்கேப் ஆகக்கூடும் என்பதும் எனக்கு தெரியும். அதுக்கு தான் ஒரு ஆளை ஏற்கனவே புடிச்சுப் போட்டாச்சு (ஐடியா கொடுத்த கப்பி, நீ நல்லா இரு). அப்படி மாட்டுனா அந்த நல்லவன் வேற யாரும் இல்ல நம்ம தம்பி தான். அவரை மட்டுமாச்சும் கண்டுக்கீனு வந்துடுவேன். தம்பி நீங்க சொன்ன "மேட்டரு" எல்லாம் ரெடி தானே...... அவரை மட்டும் சந்திதால் அது வலைப்பதிவர் சந்திப்பு ஆகி விடுமா என்று தெரியல, அதனால தான் தலைப்பில் ஒரு கேள்விக்குறி........

அப்பால வரட்டா...........

45 comments:

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

தம்பியை மட்டும் சந்தித்தாலும் வலைப்பதிவர் மீட்டிங் தான். என்ன அவருக்கு, 'ஜல்லியடிப்பது', 'ஜாட்டான்', 'உள்''வெளி' மற்ரும் 'மைய'குத்துக்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவே!
:-))))))

நாமக்கல் சிபி said...

//அவரை மட்டும் சந்திதால் அது வலைப்பதிவர் சந்திப்பு ஆகி விடுமா என்று தெரியல//

தனிமரம்(தான்) தோப்பாகாது

செந்தழல் ரவி said...

நல்ல சந்திப்பாக அமைய வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

பாலபாரதி அண்ணன், நீங்க வருவீங்க தெரியும். ஆனா இம்புட்டு சீக்கிரம் வருவீங்க நினைக்கல. :-)

தம்பிக்கு நீங்க சொன்ன மேட்டரு எல்லாம் தெரியும் நினைக்குறேன். அப்படி இல்லாட்டி கத்துக் கொடுத்து விட வேண்டியது தான்.....

:-)

நாகை சிவா said...

//தனிமரம்(தான்) தோப்பாகாது //

சிபி அண்ணாத்த, உங்க பின்னூட்டத்தில் எந்த ஒரு உ.கு. இல்லனு நினைச்சு பதில் சொல்லுறேன்.

நமக்கு ஏதுக்கு தோப்பு எல்லாம், அத எல்லாம் நம்ம இளாவே பாத்துக்கட்டும். நாம எப்பவும் போல இப்படியே இருப்போம். (தனி மரமாக)

:-)))))))))))

நாகை சிவா said...

//நல்ல சந்திப்பாக அமைய வாழ்த்துக்கள் //

நன்றி ரவி. இது வரை வந்த பின்னூட்டத்தை பாத்தால் தம்பி மட்டும் தான் நினைக்குறேன்.

நாகை சிவா said...

அனாமி கூறியது


வாழ்த்துகளை எதிர்பாரது செயல்பட வாழ்த்துக்கள்....

தம்பி said...

நான் நெனச்சது சரியா போச்சு!

வாய்யா உன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும்(?????)


தம்பி

நாகை சிவா said...

அனாமி அண்ணன்,

உங்க கமெண்ட்ல கொஞ்சம் கை வைக்க வேண்டியதா ஆச்சு. வாழ்த்துக்கு நன்றி.......

தம்பி said...

//நீ எல்லாம் ஒரு ஜல்லி அடிக்கும், மொக்கை போடும் பதிவர், உன்னை எல்லாம் சந்திக்கனுமா அப்படினு ஒரு கேள்வி எழலாம்//

எனக்கு எந்த கேள்வியும் எழவில்லை புலி!

ஏனெனில்...

நாமெல்லா ஒரே இனமடா!!!!!

நாகை சிவா said...

//நான் நெனச்சது சரியா போச்சு!//

நீ நனைச்சது, காயப்போட்டது எல்லாம் சரி தான்.

சொன்ன மேட்டரு முக்கியம் அதை மறந்துடாத சொல்லிட்டேன் ;-)

உங்கள் நண்பன் said...

நாகை சிவா said...
//பாலபாரதி அண்ணன், நீங்க வருவீங்க தெரியும். ஆனா இம்புட்டு சீக்கிரம் வருவீங்க நினைக்கல. :-)//

:)))

நாகையாரே...!உங்களின் சந்திப்பு சிறப்பாக அமையவும் அதிகப்படியான நண்பர்களை சந்திக்கவும் வாழ்த்துக்கள்!!!


அன்புடன்...
சரவணன்.

தம்பி said...

//'ஜல்லியடிப்பது', 'ஜாட்டான்', 'உள்''வெளி' மற்ரும் 'மைய'குத்துக்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவே!
:-))))))//

ஆமாம் பாலபாரதி அண்ணே! சத்தியமா இதெல்லாம் தெரியாது. இதெல்லாம் கத்துக்க சென்னைல எதுனா சிறப்பு வகுப்பு இருக்கா?

நாகை சிவா said...

//எனக்கு எந்த கேள்வியும் எழவில்லை புலி!

ஏனெனில்...

நாமெல்லா ஒரே இனமடா!!!!! //

அது தெரிஞ்சு தானே தம்பி உன்னைய புடிச்சேன் :-)))))))))

சரி அது போகட்டும், நம்ம பாலபாரதி அண்ணன் சொன்ன "ஜாட்டான்" னா என்னனு தெரியுமா உனக்கு. தெரிஞ்சா எனக்கு சொல்லனும், சரியா

தம்பி said...

//நீ நனைச்சது, காயப்போட்டது எல்லாம் சரி தான்//

இந்த லொள்ளுக்கு ஒண்ணும் கொறச்சலில்ல..

யோவ் கெளம்புயா ப்ளைட்டுக்கு நேரமாச்சி!

இப்படியே உக்காந்து கயமை பண்ணிட்டு இருக்கலாம்னு பாக்குறியா!

நாகை சிவா said...

//ஆமாம் பாலபாரதி அண்ணே! சத்தியமா இதெல்லாம் தெரியாது. இதெல்லாம் கத்துக்க சென்னைல எதுனா சிறப்பு வகுப்பு இருக்கா? //

அடப்பாவி இது எல்லாம் உனக்கு தெரியாது. பதிவுலகில் நீயும் என்ன மாதிரி இன்னும் தவழும் குழந்தை தானா? சரி விடு, வேற யாரையாச்சும் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.

நாகை சிவா said...

//இந்த லொள்ளுக்கு ஒண்ணும் கொறச்சலில்ல..//

ஹி...ஹி....

//யோவ் கெளம்புயா ப்ளைட்டுக்கு நேரமாச்சி!//

இரண்டு மணிக்கு தான் செக் இன்

//இப்படியே உக்காந்து கயமை பண்ணிட்டு இருக்கலாம்னு பாக்குறியா! //

நான் என்னய்யா கயமை பண்ணினே இப்ப... இல்ல இத பண்ணுறதுக்கு நான் என்ன க.க.யா?

தம்பி said...

//சொன்ன மேட்டரு முக்கியம் அதை மறந்துடாத சொல்லிட்டேன் ;-) //

ஓ அந்த குறுக்கு சந்து மேட்டரா?

கண்டிப்பா அந்த விவேகானந்தர் தெரு, குறுக்கு சந்து, மற்றும் வலைப்பூவில் அதிக இடம்பிடித்த இடங்களான சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடிக்கு கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்.

Leo Suresh said...

புலி,
வாங்க வாங்க, அப்படியே நம்மளையும் கண்டுகினுபோலாம்,தம்பிக்கு அருகில் இருக்கிறேன்.

லியோ சுரேஷ்

நாகை சிவா said...

//நாகையாரே...!உங்களின் சந்திப்பு சிறப்பாக அமையவும் அதிகப்படியான நண்பர்களை சந்திக்கவும் வாழ்த்துக்கள்!!!//

ரொம்ப நன்றி உங்கள், எங்கள் நண்பா சரா அவர்களே :-)

நாகை சிவா said...

//சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடிக்கு கண்டிப்பாக அழைத்து செல்கிறேன். //

அது எல்லாம் வேற உனக்கு தெரியுமா... அப்ப நீயும்.... சே... சே... இருக்காது.....

நான் ஒரு பச்ச மண்..... என்று நீ நேத்து சொன்ன பொய்யை இன்னும் நம்புறேன்.

நாகை சிவா said...

//புலி,
வாங்க வாங்க, அப்படியே நம்மளையும் கண்டுகினுபோலாம்,தம்பிக்கு அருகில் இருக்கிறேன்.

லியோ சுரேஷ் //

அப்படியா லிலோ சுரேஷ், கண்டிப்பா பாத்து விடலாம். நம்ம பினாத்தால் சுரேஷ் அங்குட்டு தான் இருக்காரா?

யோவ் தம்பி, இன்னும் ஒரு ஆள் மாட்டிக்கிச்சு.....

தம்பி said...

//யோவ் தம்பி, இன்னும் ஒரு ஆள் மாட்டிக்கிச்சு..... //

இப்பதான் போன் பண்ணாரு.

அப்படியே இங்கிருந்து இந்தியாவா? இல்ல மறுபடியும் புலி கூண்டுக்குள்ள போக போகுதா?

இராம் said...

சூடான புலிப் பாண்டி அவர்களுக்கு,

உங்களின் பயணமும்,சந்திப்பும் இனிதே நடைப்பெற என்னுடைய வாழ்த்துக்கள்!

நாகை சிவா said...

தம்பி,

மறுக்கா சூடான் தான். :-(

இந்தியா போவதாக இருந்தால் அங்குட்டு வந்து உம்ம முகத்தையெல்லாம் பாத்துக்கிட்டா இருப்பேன். நல்ல ஆளுய்யா நீர்

நாகை சிவா said...

வாய்யா ராயலு,

மதுர போயிட்டு எப்ப வந்த.... வுட்ல எல்லாம் சுகம் தானே....

//சூடான புலிப் பாண்டி அவர்களுக்கு,

உங்களின் பயணமும்,சந்திப்பும் இனிதே நடைப்பெற என்னுடைய வாழ்த்துக்கள்! //

நன்றிய்யா, அப்பால நான் மட்டும் தான் போறேன் பாண்டி வரல

உங்கள் நண்பன் said...

உலக தமிழ்வலைப்பதிவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்க்கும், தமிழ்மணத்தில் தயாரான போண்டா, இட்லிவடை, முருக்கு சுடுவது எப்படி போன்ற மிகமுக்கியமான விவாதங்களை சமர்ப்பிபதற்க்கும் இன்று ஷார்ஷா செல்லும் அன்பு அண்ணன் புலிப்பாண்டி"சிவா" அவர்களை வாழ்த்தி அனுப்பி வைக்கின்றோம்!

தம்பி "நல்லா" கவனிச்சு அனுப்பு!(தம்பி நல்லா என்ற வார்த்தைக்கு அர்த்தம் உனக்கு சொல்லத் தேவையில்லை):))))


அன்புடன்...
சரவணன்.

நாகை சிவா said...

சரா,

அம்புட்டு உ.கு வச்சு ஒரு பின்னூட்டம் போட்டு இருக்க....

சரி விடு. நான் பாத்துக்குறேன்.....

//தம்பி "நல்லா" கவனிச்சு அனுப்பு!//

நானும் தம்பிக்கிட்ட இதையே தான் சொல்லுறேன். "நல்லா" கவனிச்சு அனுப்பு என்று... பாக்கலாம்... :-)

தம்பி said...

நண்பர் சராவின் வேண்டுகோலுக்கிணங்க அண்ணன் அஞ்சா நஞ்சன் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) புலிப்பாண்டி அவர்கள் பாலைவனத்தில் "பூ" மிதிப்பதற்கு இசைந்துள்ளார்.

தக்க சமயத்தில் ஆலோசனை வழங்கிய சராவுக்கு நன்றிகள் கோடி (காசா பணமா அள்ளி வுடு)

நாகை சிவா said...

தம்பி,

பூ தானே மிதிச்சுட்டா போச்சு....

காந்த கன்னிகளையும், மியூஸிக்கையும் ரெடிப் பண்ணு.....

:-))))))))

முத்துகுமரன் said...

வருக வருக.

புளி(லி) கொழம்பு சாம்பிட்டு ரெம்பநாளாச்சி. தொலைபேசி எண் தனிமடலில்...

கப்பி பய said...

வலைப்பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள்!!!

சந்திப்பு நடக்குதோ இல்லையோ...போற காரியத்தை ஒழுங்கா முடிச்சுட்டு வாங்க ;)

சந்தோஷ் aka Santhosh said...

ஷார்ஜா செல்லும் சூடான் நாட்டு சிங்கமே உன் பயணம் வழக்கம் போல் வெற்றி பெற வாழ்த்துக்கள். இட்லிவடையாருக்கு சொல்லிட்டியா? பதிவர் கூட்டம் லைவ்வா ரிலே ஆகா ஏற்பாடு பண்ணிடுவாரு (யப்பா அடிக்க கிளம்பிடாதிங்கப்பா சும்மா தமாசுக்கு..)

கால்கரி சிவா said...

சிவா, வாழ்த்துகள்.

பேரைப் பார்த்து சிம்ரன் ஆப்ப கடைக்குள் போய்டாதீங்க. டப்பா டேஸ்டு.

ஒரு ஆளைப் பார்த்தாலும் அது மாபெரும் சந்திப்புதான்.

நாங்கெல்லாம் என்ன பண்றது ஒருத்தர் இந்த பக்கம் வந்தாலே 5 பதிவு போட்டு கலக்கினோமில்லே..

தேவ் | Dev said...

Go Vaa...Puli...Go..Vaa

நாமக்கல் சிபி said...

புலி,
ரொம்ப தன்னடக்கம்தான் உனக்கு...

தம்பி,
வருங்கால ஐ.நா சபையின் நாயகன் புலியை நல்லா கவனிச்சு அனுப்பு :-)

Anonymous said...

test

CT said...

Hi siva
Looks like you are visiting with all publicity. Hope you will get a very good welcome !!
Have a nice stay pal.

with best
CT

Anonymous said...

TEST

Anonymous said...

[TEST]

Syam said...

என்ன பங்காளி சந்திப்பு எல்லாம் முடிஞ்சுதா...நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல...இல்லனா எங்க ஊர் பய ஒருத்தன் அங்கன தான் விவேகானந்தர் குறுக்கு தெரு பக்கம் திரியரான் நீ அவன பாத்திட்டு வந்துருக்கலாம்... :-)

Syam said...

சந்திப்பு எப்படி போச்சு...எந்த எந்த பாருக்கு எல்லாம் போனீங்கனு கொஞ்சம் விரிவா ஒரு பதிவு போடு பங்காளி :-)

Bharathi said...

Hi sivaraman.how are you?
long time since saw u in blogger.

Anonymous said...

உங்கள் சந்திப்பு நலமே அமைய வாழ்த்துக்கள்!

தம்பி said...

உசுரோட இருக்கியா?