Sunday, July 02, 2006

கவுத்துடாங்களே! கவுத்துடாங்களே!


வேற யாரு எல்லாம் நம்ம பிரேசில் கால்பந்தாட்ட அணி தான். படுபாவி பயல்க. இவங்க ஆட்டத்தை பார்த்து தூக்கம் கெட்டது தான் மிச்சம். ஆனாலும் சும்மா சொல்ல கூடாது, நேற்று நடந்த இரண்டு ஆட்டத்திலும் சூடு ரொம்பவே அதிகம். முதல் கால் இறுதி போட்டியில் இங்கிலாந்து மண்ணை கவ்வியது. அடுத்த கால் இறுதியில் பிரேசில் மண்ணை கவ்வியது. பிரான்ஸ்சின் ஜிடேன் உண்மையிலே ஒரு கலக்கு கலக்கி விட்டார். நம்ம பிரேசில் மக்களை பற்றி என்ன சொல்வது, ஒரு பய கூட நம்ம மானத்தை காப்பாற்றுப்படி ஆடவில்லை. அப்படி என்னத்த மானமுன் கேட்கின்றீர்களா, இந்த தடவை பிரேசிலுக்கு தான் கோப்பைனு நான் ரொம்பவே பெரும் பேச்சு பேசிகிட்டு இருந்தேன். இப்ப வாயை திறக்க முடியாதப்படி செய்து விட்டார்களே என்ற ஆதங்கம் தான். அதிலும் நம்ம கூட இருக்க ஒரு பய நேற்று என்னை ரொம்ப ஒவராவே கலாய்த்து விட்டான். அவனுக்கு பிரான்ஸ் அணியை பிடிக்காது, இருந்தாலும் நேற்றைய பிரேசில் எதிரான போட்டியில் பிரான்ஸ்க்கு சப்போட் பண்ணினான், ஏன் என்றால் போன போட்டியில் பிரேசில் காணாவை தோற்கடித்து விட்டதாம். அதனால் இந்த போட்டியில் பிரான்ஸ்க்கு சப்போட் பண்ணுறானாம்.பிரான்ஸ் வெற்றி பெற்றதும் பிரான்ஸ்யில் இருப்பவன் கூட இவன் கத்திய அளவுக்கு கத்தி இருக்கமாட்டார்க்கள். அஞ்சலி படத்தில் வரும் டயலாக் போல, பேசு சிவா, பேசு சிவா உயிர எடுத்துட்டான். என்னடா இவன் அலம்பலுக்கு அளவே இல்லாமல் போயிகிட்டு இருக்குதுனு நானும் பொறுமையாக இருந்தேன். போட்டியை பார்த்து முடித்த பிறகு வீட்டுக்கு செல்லும் போது அந்த நாதாரி முன் சீட்டில் வர்க்காந்தது. சீட் பெல்ட போடுடா என்று மரியாதையா தான் சொன்னேன். நம்ம தல கைப்பூ மாதிரி, நாங்க எல்லாம் என்னிக்கு சீட் பெல்ட் போட்டு இருக்கோம். நீ ரோட்ட பாத்து வண்டிய ஒட்டுனு கைப்பூ ஸ்டைலில் சொன்னான்.(எனக்கு அப்படி தான்
கேட்டது). அந்த பயல நானும் நேற்று காலையில் இருந்து நாலு, ஐந்து தடவை வண்டி ஒட்டும் போது எல்லாம் சீட் பெல்ட போடுனு சொல்லிகிட்டே இருந்தேன். பய புள்ள காலையில் இருந்து கேட்கல, ஆனால் இரவு ஏற்கனவே பிரேசில் தோற்றுவிட்டதே என்ற கடுப்பு வேற, மவனே நீ இதுவரைக்கு கைப்பூ பற்றி கேள்விபட்டதே இல்ல, நீயே அவரு வாய்ஸ்ல பேசும் போதும், பொழுதனைக்கும் அவருக்கு எப்படி ஆப்பு வைப்பதுனு யோசிகிட்டு திரியற எனக்கு எம்புட்டு இருக்குமுனு நினைச்சிகிட்டு உனக்கு வைக்கிறண்டி இன்னிக்கு ஆப்புனு, ஏதும் பேசமா வண்டிய ஒட்டினேன். பய நல்லா பவ்யமா சீட்ட பின்னுக்கு தள்ளி, காலை டாஸ்போட்டில் முட்டு கொடுத்து , கையை தலைக்கு பின்னாடி வைச்சிகிட்டு சுகமா வர்கார்ந்து இருந்தான். அதுல அப்ப அப்ப சீட்டி வேற. தீடிரென்று நம்ம மண்டைக்குள் ஒரு பல்பு எரிந்தது. கமல் போல் தலையில் இரண்டு கொம்பு வேற முளைத்தது.உடனே ஆக்ஸ்லேட்ரை மேல் ஏறி நிற்காத குறையாக மிதித்தேன். எல்லாம் அந்த ரோட்டியில் ஒரு பெரிய வேகத்தடை இருப்பது தெரிந்து தான். வேகத்தடைக்கு மிக அருகில் வந்து நச்சு என்று பிரேக்கை மிதித்தேன். பய புள்ள வண்டிக்குள்ளயே ஒரு சின்ன குடிக்கரணம் அடித்தான். அடிச்சு முடித்துட்டு என்னை பார்த்தான், நான் பாவமாக முகத்தை வைத்து கொண்டு அவனை பார்த்தேன், ஏதும் கேட்காமல் சீட் பெல்டை போட்டு கொண்டு புள்ள மாதிரி வர்க்கார்ந்து வந்தான். எனக்கு ஒரு சின்ன சந்தோஷம், அவ்வளவே! பய வீட்டுக்கு வந்தும் வாயை துரக்கலை.

இன்று காலை வண்டியை எடுக்கும் போது, பின் சீட்டில் போயி அமர்ந்து கொண்டான். என்னடா, எப்பவும் முன்னாடி தானே வர்க்காருவே, இன்னிக்கு என்ன, வந்து முன்னாடி வர்க்கார் என்று சொன்னேன். பய நம்மள கையேடுத்து கும்பிட்டு, நீ வண்டி ஒட்டும் போது நான் முன் சீட்டில் வர்க்காரவும் மாட்டேன், உன் கிட்ட இனிமேல் வாய் குடுக்கவும் மாட்டேன் சொல்லிட்டு, சீட் பெல்ட போடுகிட்டான். அப்பாடா இன்னிக்கு ஆபிஸ்ல இவனின் பெரும் பேச்சு தொல்லை இருக்காதுனு எனக்கு நிம்மதியா போச்சு, அதானே நமக்கும் வேணும் :)

71 comments:

தம்பி said...

தலைவா, நான் கூட ப்ரேசில் அணிக்குதான் கோப்பை என்று சவடால் பேசினேன்
கவுத்துட்டானுங்க.

நன்மனம் said...

பிரேசில் தோத்த துக்கத்துக்கு போட்ட பதிவ மாதிரி தெரியலயே!!!!

இதுக்கு மாதிரி தான் தெரியுது :-))

என்ன கலாசினா என்ன ஆகும்னு பாருங்க மக்களே

- ஏற்கனவே கண்ணி வெடி காமிச்சு ஒரு மறைமுக மிரட்டல்

- இப்ப பிரேசில சாக்கு வெச்சு நேரடி மிரட்டல்

புரொபைல்ல புலி....

:-))

கோவி.கண்ணன் said...

பிரேக்குல கூட ஆப்ப வெச்சிக்குட்டு ... ம் பாவம் சிவ உங்க பிரன்ட நென்ச்சா பரிதாபமாகத் தான் இருக்கு.

நாகை சிவா said...

அண்ணன், நன்மனம் என்ன நம்புங்க. இந்த பதிவு பிரேசில் தோத்து போன சோகத்தல போட்டது தான். நீங்க ஏதும் புரளிய கிளப்பி வீடாதீங்க....
அது சரி, உங்களை தல ஆறு போட கூப்பிட்டு இருக்காரு. அது இன்னும் பாக்கலையா????

நாகை சிவா said...

என்ன கண்ணன், எனக்காக சப்போட்டு பண்ணுவீங்கனு பார்த்தா அவனுக்கு சப்போட்டு பண்ணுறீங்க. :(
நம்ம எல்லாம் எப்படி பழகி இருக்கோம், ஒரே ஊரு வேற..
:((((

கோவி.கண்ணன் said...

//பார்த்தா அவனுக்கு சப்போட்டு பண்ணுறீங்க. :(
நம்ம எல்லாம் எப்படி பழகி இருக்கோம், ஒரே ஊரு வேற..//

நம்ம ஊரு ஆளுங்க எந்தப் பக்கம் ஞாயம் இருக்கோ அந்தப் பக்கம்தான் பேசுவாங்க ... ஊரு மானத்தை காப்பத்திட்டோம்ல :))))

கைப்புள்ள said...

ஐ...ஐ...இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் இங்கிலாந்து-போர்டுகல் மேட்ச் முடியறதுக்கு முன்னாடியே போய் தாச்சிக்கிட்டேன். ஹி...ஹி...

நம்ம சங்கத்துல நீ ஓட்டுற டிரைசைக்கிளைத் தானே வண்டி, கிளச், ஆக்சலரேட்டரு அது இதுன்னு சொல்றே?
:)

கப்பி பய said...

சிவா..
பயமுறுத்தறீங்களே...

ஒருத்தன் வாயை அடைக்கறேன்னு அவனுக்கு வாய்க்கரிசியே போட்டுடுவீங்க போல....

இதுல நேத்து எனக்கு சப்போர்ட்க்கு வரேன்னு வேற சொன்னீங்க....

கப்பி பய said...

ப்ரேசில் தோத்ததுல எனக்கும் சந்தோஷம் தான் :))))

நாகை சிவா said...

தம்பி அங்கேயும் SAME BLOOD தானா......
என்னத்த பண்ணுறது, அவன்களும் நம்ம இந்திய அணி மாதிரி ஆகி விட்டார்கள்.

நாகை சிவா said...

//ஒருத்தன் வாயை அடைக்கறேன்னு அவனுக்கு வாய்க்கரிசியே போட்டுடுவீங்க போல....//
சே.. சே.... அப்படி எல்லாம் பண்ணுவோமா. எல்லாம் பார்த்து பக்குவமா, எந்த ஒரு பெரிய அடியும் படாதுனு முடிவு பண்ணி அடிச்ச பிரேக் அது.

//இதுல நேத்து எனக்கு சப்போர்ட்க்கு வரேன்னு வேற சொன்னீங்க.... //
உன் நல்ல மனசுக்கு தான் அந்த சப்போட். உனக்கு இது மாதிரி பிரேக்ல எல்லாம் ஆப்பு வைக்க மாட்டேன். பயப்படாத.....

நாகை சிவா said...

//முன்னாடியே போய் தாச்சிக்கிட்டேன். ஹி...ஹி...//
பாக்காம தூங்கிபுட்டு, அதுக்கு இப்படி ஒரு சமாளிப்பா.......

//நம்ம சங்கத்துல நீ ஓட்டுற டிரைசைக்கிளைத் தானே வண்டி, கிளச், ஆக்சலரேட்டரு அது இதுன்னு சொல்றே?//
இப்படியா பப்ளிக்கா சங்கத்தில் நான் டிரை சைக்கிள் ஒட்டுவதை எல்லாம் சொல்லுறது.

இங்க இன்னும் அந்த அளவுக்கு நிலைமை வரல. அதுனால தப்பிச்சேன்.

Rams said...

இதைத்தான் வாயைக் குடுத்து புண்ணாக்கிக்கிறதுன்னு சொல்றாங்களா? ல்ல்ல்லைட்டா பாவமா இருக்கு...

Karthik Jayanth said...

சிவா,

தல Zizou ஆட்டம் எப்படி ? சந்தோஷ் பங்காளி கிட்ட சொன்னேன்.. இப்படியே விளையாண்டா கூடிய சிக்கிரத்துலயே ரீவிட் ஆகிடும்ன்னு..கேட்க மாட்டேன்னுட்டானே. எங்க நம்ம தேவ் ? அவனோட கருத்தையும் கேட்கணும் ;-)

வேதா said...

நம்ம இங்கிலாந்து அணி வாங்குனாங்களே, அது தாங்க பெரிய ஆப்பு, கடசி வரைக்கும் உக்காந்து அவங்க தோக்கற்த பாத்துட்டு சந்தோஷமா போய் தூங்கினேன்.

Syam said...

பிரேஸிலும் புட்டுக்குச்சு, அர்ஜெந்டீனாக்கும் ஆப்படிச்சுட்டாங்க...ஒரே பீலிங்ஸ்ஸா போச்சு...

Samudra said...

ஹைய்யா நம்மாளு ஜிடேன் ஜினடேன் கலக்கிபுட்டாரு!

நீங்கபுலம்பிகிட்டே இருங்க மக்களே...பிரான்ஸுக்கு தான் கப்!

மனதின் ஓசை said...

//என்ன கலாசினா என்ன ஆகும்னு பாருங்க மக்களே//

சத்தியமா இதுக்கு தான் இந்த பதிவு...வெற எடுக்கும் இல்லன்னு தோனுது...
யப்பா.. சிவா.. எதும் பிரச்சினை இருந்தா பேசி தீத்துக்கலாம்.. இல்ல இல்ல.. பேசி முடிச்சிக்கலாம்.. ஆ.. அதுவும் இல்ல.., எப்படி தான்யா சொல்றது.. பேசிக்கலாம்.. சரியா?

நான் ஆசப்பட்ட எந்த டீமும் ஜெயிக்கல... அர்ஜென்டினா, இங்கிலாந்து, பிரேசில் எல்லாம் ஆப்பு வாங்கிடுச்சு. இத்தாலி தோக்கனும்னு நினைச்சேன்.. அதுவும் நடக்கல...:-(
மிச்சம் இருக்கர டீம்ல ஜெர்மனி ஜெயிக்கனும்னு நினைக்கிறேன்.. பக்கலாம்..நம்ம ராசிதான் நல்ல ராசி ஆச்சே...

மின்னுது மின்னல் said...

ஆரம்பதிலிருந்தே பிரேஸில் சொதப்போ சொதப்பிக்கிட்டே வந்தது.

இப்ப பிரான்ஸ் ஆப்பு வச்சதும் அந்த ஆப்பயே திருப்பி ப்பிரேக்கில வைக்கிற நல்லா....

கைப்புள்ள மாதிரி அப்பாவி உனக்கு கிடைச்சிகிட்டே இருக்கானுங்க ம் ம் நல்லாயிறிடே :::))) ... :::((( ??

நாகை சிவா said...

//இதைத்தான் வாயைக் குடுத்து புண்ணாக்கிக்கிறதுன்னு சொல்றாங்களா?//
கரெட்டா சொல்லிட்ட ராம்.

// ல்ல்ல்லைட்டா பாவமா இருக்கு..//
என் மேல தான :))

நாகை சிவா said...

//எங்க நம்ம தேவ் ? அவனோட கருத்தையும் கேட்கணும் ;-) //
அவன் வர மாட்டான், வரவே மாட்டான். எப்படி அவர் தான் தனியா பதிவு எல்லாம் போட்டாரே. எல்லாரும் இத மறந்த பிறகு தான் பதிவு பக்கமே எட்டி பாப்பாரு.

நாகை சிவா said...

//நம்ம இங்கிலாந்து அணி வாங்குனாங்களே, அது தாங்க பெரிய ஆப்பு, கடசி வரைக்கும் உக்காந்து அவங்க தோக்கற்த பாத்துட்டு சந்தோஷமா போய் தூங்கினேன். //
அப்படி என்னங்க உங்களுக்கு இங்கிலாந்து மேல கடுப்பு. அந்த கொடுத்த ஒரு ரெட் கார்ட் தப்புனு எனக்கு தோனுது, நீங்க என்ன நினைக்கிறீங்க.......

நாகை சிவா said...

//பிரேஸிலும் புட்டுக்குச்சு, அர்ஜெந்டீனாக்கும் ஆப்படிச்சுட்டாங்க...ஒரே பீலிங்ஸ்ஸா போச்சு... //
என்ன பண்றது ஷாம், பேசாம ஒரு ஆப் அடிச்சி ஆப் ஆகிடுங்க......

நாகை சிவா said...

//ஹைய்யா நம்மாளு ஜிடேன் ஜினடேன் கலக்கிபுட்டாரு!

நீங்கபுலம்பிகிட்டே இருங்க மக்களே...பிரான்ஸுக்கு தான் கப்!//
இப்போதைக்கு பிரான்ஸ்க்கு தான் வாய்ப்பு பிரகாசமா இருக்கு. பிரான்ஸ் ஜெயித்தால் இங்க இருக்குற, பிரஞ்ச் அம்மணி வேற பார்ட்டி தரேன் சொல்லி இருக்கு. அதுக்காவது பிரான்ஸ் ஜெயிக்க வேண்டும்.

நாகை சிவா said...

//யப்பா.. சிவா.. எதும் பிரச்சினை இருந்தா பேசி தீத்துக்கலாம்.. இல்ல இல்ல.. பேசி முடிச்சிக்கலாம்.. ஆ.. அதுவும் இல்ல.., எப்படி தான்யா சொல்றது.. பேசிக்கலாம்.. சரியா?//
சரி......

ஜெர்மனியா, பார்க்கலாம். Home Crowd அது ஒன்னு தான் அவர்களுக்கு சாதகமாக இருக்கு. வேற ஏதும் இல்லை.

நாகை சிவா said...

//கைப்புள்ள மாதிரி அப்பாவி உனக்கு கிடைச்சிகிட்டே இருக்கானுங்க ம் ம் நல்லாயிறிடே :::))) //
நமக்கும் வாழ்க்கை போர் அடிக்காம போகனுமுல......அதான் அப்ப அப்ப இது மாதிரி சின்னதா....

SK said...

அன்றைய தினம் அருமையாக ஆடியவர்கள் வென்றிருக்கிறார்கள்!

அதுவும், அந்த 3 பேர், ஆன்றி, ஃஜிடேன், கபேரியோ என்னவோ ஒரு பெயர், ஆட்டம் சூப்பரோ சூப்பர்!

fரான்ஸ் தான் ஜெயிக்கும் fஐனலில் என என் பையன் அடித்துச் சொல்கிறான்!

Shuba said...

பய புள்ள வண்டிக்குள்ளயே ஒரு சின்ன குடிக்கரணம் அடித்தான்...........ithellam ungalukke niyaayamaa?

Karthik Jayanth said...

//Home Crowd அது ஒன்னு தான் அவர்களுக்கு சாதகமாக இருக்கு. வேற

இல்ல மாப்பி..In germany team ballock அமைச்சி கொடுக்குறவன். இந்த Klose இருக்குறானே அவன் கன்வர்ட்டர். நம்ம பத்தி Zizou சொல்லவே வேணாம். நம்ம அண்ணன் henry சூப்பர் கன்வர்ட்டர். கொஞ்சம் மிட்பில்ட்டும் பண்ணுவான்.. பிரான்ஸ் டிபென்ஸ் பத்தி சொல்லவே வேணாம். பார்க்கலாம்.

இன்னும் ஜெர்மனி, பிரான்ஸ் இது வரை விளையான்ட மேட்ச் எல்லாத்தையும் பார்த்து ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்குறேன்.

நாகை சிவா said...

//அன்றைய தினம் அருமையாக ஆடியவர்கள் வென்றிருக்கிறார்கள்!//
உண்மை தான் எஸ்.கே., இருந்தாலும் நமக்கு ரொம்ப பிடித்தவர்கள் தோற்று விட்டார்களே என்று ஒரு சின்ன வருத்தம் தான்.

//ப்ரான்ஸ் தான் ஜெயிக்கும் பைனலில் என என் பையன் அடித்துச் சொல்கிறான்! //
இப்படி தான் நாங்களும் பிரேசில் ஜெயிக்கும் என்று அடித்து சொன்னோம். ஹ்ம் பாக்கலாம். பிரான்ஸ் ஜெயித்தால் எங்களுக்கு ஒரு நன்மை உள்ளது. ஜெயிக்க வேண்டும்.

நாகை சிவா said...

//பய புள்ள வண்டிக்குள்ளயே ஒரு சின்ன குடிக்கரணம் அடித்தான்...........ithellam ungalukke niyaayamaa? //

நியாயம் இல்ல தான், அவன் பெரிய குட்டிக் கரணம் அடிப்பான் நினைத்தேன். சின்னதா போட்டுடான். அடுத்த தடவை பாத்துக்கலாம்.

அதுவும் பாருங்க, அவன் முழுசா குட்டிக் கரணம் அடிக்கலை. தவளை மாதிரி கவிழ்ந்து கிடந்து அதன் பிறகு ஒரு சுத்து சுத்தி எழுந்தான்.

Syam said...

//பேசாம ஒரு ஆப் அடிச்சி ஆப் ஆகிடுங்க//

இதெல்லாம் சொல்லித்தேன் தெறியனுமா அது எல்லாம் அடிச்சாச்சு :-)

வேதா said...

இங்கிலாந்து மேல ஒரு கடுப்பும் இல்லீங்கோ, எங்க வீட்டுல எல்லோரும் இங்கிலாந்துக்கு ஆதரவு, யாராவது ஒருத்தராவது எதிர்கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டாமோ? அதனால தான். அப்புறம் இந்த ரெட் கார்ட் கொடுத்தது பத்தி நிறைய காண்ட்ரோவர்ஸி இருக்கு.

நாகை சிவா said...

//இன்னும் ஜெர்மனி, பிரான்ஸ் இது வரை விளையான்ட மேட்ச் எல்லாத்தையும் பார்த்து ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்குறேன். //
பங்காளி இந்த ஆராய்ச்சி நீ விடவே மாட்டியா......
ஹம், முதல் இன்றைய போட்டிய பார்க்கலாம். அப்பறமா பேசிக்கலாம்...

நாகை சிவா said...

//இதெல்லாம் சொல்லித்தேன் தெறியனுமா அது எல்லாம் அடிச்சாச்சு :-) //
அப்ப சரி

நாகை சிவா said...

//இங்கிலாந்து மேல ஒரு கடுப்பும் இல்லீங்கோ, எங்க வீட்டுல எல்லோரும் இங்கிலாந்துக்கு ஆதரவு, யாராவது ஒருத்தராவது எதிர்கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டாமோ?//
இத பாருடா,
இது மாதிரி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க. அப்ப உங்களுக்கும் ஒரு ஆப்பு வைக்கனும் போல :))))

வேதா said...

//அப்ப உங்களுக்கும் ஒரு ஆப்பு வைக்கனும் போல :)))) //
கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க............:)

மு.கார்த்திகேயன் said...

amanga..intha brazil ippadi kavupangannu naan ninaikave illai.. romba mosam

நாகை சிவா said...

வாங்க கார்த்திக்,
சரி, அந்த சோகத்தை விடுங்க, நேத்து இத்தாலி, ஜெர்மனிக்கு வைத்த ஆப்பை பாத்தீங்களா.........

நாகை சிவா said...
This comment has been removed by a blog administrator.
நாகை சிவா said...

//கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க............:) //
ஆமாம், ஆமாம்......

அது சரி, நேத்து யாருக்கு சப்போட்டு பண்ணுனீங்க....

மின்னுது மின்னல் said...

கப்பு போர்ச்சுகலுக்குதான் டவுட்டேயில்ல எனக்கு ....!!!!!!!!!


(இன்னைக்கு ஜெயிக்குமா ????பாக்கலாம்..:)

நாகை சிவா said...

என்னத்த சொல்ல மின்னல், பார்ப்போம் எவன் ஜெயிக்குறான் என்று.....

மின்னுது மின்னல் said...

என்னத்த சொல்ல........


:::((((((

::::(((((

செல்வன் said...

பின் சீட்டில் அவர் உட்கார நீங்கள் வண்டி ஓட்டினால் அவர் உங்கள் முதலாளி என நினைக்கப்போகிறார்கள் சிவா.நண்பரை வேறு விதமாக கவனிக்கவும்:-)))

பிரான்ஸ் இன்னைக்கு ஜெயிச்சுடுச்சு.பைனலில் நான் இத்தாலிக்கு தான் ஆதரவு அளிப்பேன்.

பாலசந்தர் கணேசன். said...

அன்றைய ஆட்டத்தை பிரேசில் மிகவும் எளிதாக எடுத்து கொண்டதோ!!! பிரான்சு மிக நன்றாக ஒன்றும் ஆடவில்லை,ஆனால் பிரேசில் மிகவும் தடுமாறியது. அதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்க தான் செய்தன. ஆனால் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியதோடு, அதன் பின்னர் பந்தை தன் காலடியில் அதிக நேரம் வைத்திருந்தது. ஆட்டம் முழுவதுமே , பிரான்சின் கையில்(காலில்) தான் பந்து இருந்தது. இப்போதோ பிரான்சு இறுதியில் புகுந்து விட்டது. கோப்பை இத்தாலிக்கு

நாகை சிவா said...

//கப்பு போர்ச்சுகலுக்குதான் டவுட்டேயில்ல எனக்கு ....!!!!!!!//
//என்னத்த சொல்ல........
:::((((((
::::(((((//
வச்சானா ஆப்பு, கொடுத்தான சூப்பு....
என்ன மின்னல், பேச்சே காணாம்....

நாகை சிவா said...

//பின் சீட்டில் அவர் உட்கார நீங்கள் வண்டி ஓட்டினால் அவர் உங்கள் முதலாளி என நினைக்கப்போகிறார்கள் சிவா//
இந்த பஞ்சாயத்தே இங்க கிடையாது. SRSG யை தவிர அவன் அவன் வண்டியை அவன் தான் ஒட்டனும்.

நேற்று பிரான்ஸ் ஆட்டத்தை பார்த்தேன். பைனலில் பிரான்ஸ் ஜெயித்தால் ஒரு ட்ரீட் கிடைக்கும். அதனால் பிரான்ஸ்க்கு தான் சப்போட்டு.

நாகை சிவா said...

//கோப்பை இத்தாலிக்கு //
:)

//பிரேசில் மிகவும் எளிதாக எடுத்து கொண்டதோ!!! //
அது தாங்க எனக்கும் புரியவில்லை. அதுக்குனு ஒருத்தர் கூடவாக நல்லா ஆடாமல் இருப்பார்கள்.

மின்னுது மின்னல் said...

##
வச்சானா ஆப்பு, கொடுத்தான சூப்பு....
என்ன மின்னல், பேச்சே காணாம்....
##

என்னத்த சொல்ல........

இந்தாங்க "50"

நாகை சிவா said...

எஸ்.கே.., சந்தோஷ்!

"Better Luck Next time".
பிரான்ஸ் மண்ண கவ்விடுச்சு.
எனக்கும் ட்ரீட் கோவிந்தா ஆயிடுச்சு.

நாகை சிவா said...

பாலசந்தர் கணேசன், $செல்வன்
வாழ்த்துக்கள்!
இத்தாலி கோப்பையை வென்று விட்டது.

பிரான்ஸ் தோற்றதில் பெரிய ட்ரீட் மிஸ் ஆனாலும், இத்தாலியில் ஒரு சின்ன ட்ரீட் கிடைத்தது.

நாகை சிவா said...

//என்னத்த சொல்ல........

இந்தாங்க "50" //
பரவாயில்லை மின்னல் அந்த 50 வச்சி நீங்களே என் பெயர சொல்லி ஏதாவது வாங்கி சாப்பிடுங்க...
நமக்குள்ள என்ன இருக்கு. ப்ரீயா விடுங்க

சந்தோஷ் aka Santhosh said...

சிவா,
விடு வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்.. எம்முட்டு நாள் தான் நாம்ளே கப்பை வெச்சிகிறது அது நல்லா இருக்காது கொஞ்ச நாளைக்கு அடுத்தவங்களும் வெச்சிகிடட்டும்(இப்படி தான் ரூம்ல டயலாம் விட்டு வச்சி இருக்கேன்.)

கோவி.கண்ணன் said...

//போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டம்//

போற்றூவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் 'கண்ணனுக்கே'

- பாதி பழமொழியை 'வெட்டிப்பயல்' பதிவில் எழுதிவிட்டு வந்துவிடீர்கள்

நாகை சிவா said...

//எம்முட்டு நாள் தான் நாம்ளே கப்பை வெச்சிகிறது அது நல்லா இருக்காது கொஞ்ச நாளைக்கு அடுத்தவங்களும் வெச்சிகிடட்டும்//
இதே டயலாக் தான் இங்கேயும் ரொம்ப நாளா ஒடுது(பிரேசில் தோத்ததுக்கு அப்புறம்)
இருந்தாலும் பைனல பிரான்ஸ் ஜெயிச்சு இருக்கனனும். என்ன சொல்லுறீங்க சந்தோஷ்.

நாகை சிவா said...

//போற்றூவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் 'கண்ணனுக்கே'

- பாதி பழமொழியை 'வெட்டிப்பயல்' பதிவில் எழுதிவிட்டு வந்துவிடீர்கள் //

விட மாட்டீங்களா, சரி அங்கன போயி முழுசாவே சொல்லிடுறேன். அதுக்கு முன்னாடி இங்கயும் சொல்லிடுறேன்.

"போற்றூவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கோவி. 'கண்ணனுக்கே'"

நாமக்கல் சிபி said...

"புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்த புண்ணியம் (கோவி)கண்ணனுக்கே"...

இதை விட்டுட்டீங்க!!!

நாகை சிவா said...

//"புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்த புண்ணியம் (கோவி)கண்ணனுக்கே"...

இதை விட்டுட்டீங்க!!! //
கண்ணன்! இதையும் எடுத்துங்க.

SK said...

"[கோவி]கண்ணனே காட்டினான்
[கோவி] கண்னனே தாக்கினான்
[கோவி] கண்ணனே கொலை செய்கின்றான்"

இது என்ன பாவம் பண்ணிச்சு!
விளையாட்டுல இதையும் சேத்துக்கங்க!

:)))

சந்தோஷ் aka Santhosh said...

//இருந்தாலும் பைனல பிரான்ஸ் ஜெயிச்சு இருக்கனனும். என்ன சொல்லுறீங்க சந்தோஷ்.
//
அட நீ வேற சிவா இத்தாலி என்ன ஆட்டம் ஆடினாங்க 55% பந்து இத்தாலி ஆளுங்க கிட்ட இல்ல இருந்ததாம். (55% பந்தை மட்டும் வச்சிகிட்டு அவங்க என்ன பண்ணாங்கன்னு கேட்கக்கூடாது..)

கோவி.கண்ணன் said...

நான் பேச நினைப்பதெல்லாம் அவர்களே பேசினால் எப்படி ?
கண்ணன் வந்தான் ..மாய கண்ணன் வந்தான்...

sk பேரவச்சி நான் கலாய்த்த வுடன் இதுதான் சந்தர்பம் என்று இங்கு வந்துவிட்டார்... :)))

கோவி.கண்ணன் said...

சிவா,
ஊரில் இருந்த சிட்டுக் குருவி மட்டும்தான் ஞாபகம் வருகிறதா ? சூடானில் ஓனான் ஏதும் இல்லையா .. ஒரு படம் எடுத்துப் போடுங்க ... ஒனானை பார்த்து நாளாச்சு

நாகை சிவா said...

//இது என்ன பாவம் பண்ணிச்சு!
விளையாட்டுல இதையும் சேத்துக்கங்க!//
கண்டிப்பாக எஸ்.கே., இதையும் ஆட்டத்துக்கு சேர்த்துகிட்டா போச்சு.
கண்ணன், இதுவும் உங்களுக்கு தான்...

நாகை சிவா said...

//நான் பேச நினைப்பதெல்லாம் அவர்களே பேசினால் எப்படி ?//
யாரு பேசினால் என்ன கண்ணன், உங்க புகழ் பரவினாலே போதும் எனக்கு.

//sk பேரவச்சி நான் கலாய்த்த வுடன் இதுதான் சந்தர்பம் என்று இங்கு வந்துவிட்டார்... :))) //
ஓ.... அதான் மேட்டரா.....
விடுங்க கண்ணன், எங்க போயிட போறார் அவரு... அங்க சுத்தி, இங்க சுத்தி உங்க(நம்ம)கிட்ட மாட்டி தானே ஆகனும்.

நாகை சிவா said...

//(55% பந்தை மட்டும் வச்சிகிட்டு அவங்க என்ன பண்ணாங்கன்னு கேட்கக்கூடாது..) //
நான் ஏன் அத எல்லாம் கேட்க போறேன். எப்படியோ டகால்டி வேலப் பாத்து கோப்பைய வாங்கிட்டான்ங்க. இருந்தாலும் பங்காளி பைனல்ல பிரான்ஸ் ஜெயிச்சி இருக்கனும்.

செந்தழல் ரவி said...

அடிவாங்குனது கைப்புள்ள...அதனால கைப்புள்ளைக்கு தான் கப்பு..

நாகை சிவா said...

//சூடானில் ஓனான் ஏதும் இல்லையா .. ஒரு படம் எடுத்துப் போடுங்க ... ஒனானை பார்த்து நாளாச்சு /
ஒனானா, தேடி பார்க்குறேன், அதுக்கு ஏதுவும் பாட்டு இருக்கா?

கோவி.கண்ணன் said...

ஏங்க இல்லை ? உப்புக்கருவாடு பாட்டுல் ... 'ஒடகர பக்கம் ஒன்னான் புடிப்போமா' என்று வைரமுத்து எழுதியிருக்கிறாரே !:))

நாகை சிவா said...

//'ஒடகர பக்கம் ஒன்னான் புடிப்போமா' என்று வைரமுத்து எழுதியிருக்கிறாரே !:))//
அப்ப சரி, ஒணானை பாத்தவுடன் போட்டு விடுவோம்.

நாகை சிவா said...

//அடிவாங்குனது கைப்புள்ள...அதனால கைப்புள்ளைக்கு தான் கப்பு.. //
ரவி, எவன் ஜெயித்தாலும், தோற்றாலும் நம்ம தல கைப்புள்ளைக்கு தான் கப்பு(ஆப்பு)