வணக்கம் நண்பர்களே!
இது வரை நான் உருப்படியாக எந்த ஒரு பதிவும் எழுதவில்லை என சில நண்பர்கள் கூறினார்கள். அது உண்மையும் கூட. எனக்கு உருப்படியாக எந்த ஒரு விசயமும் எழுத தெரியாது என கூறினேன். அத தான் எங்களுக்கு தெரியுமே... அதனால் நான் வெளிநாடுகளில் கண்ட, கேட்டு தெரிந்து கொண்ட சில விசயங்களை எழுதும்மாறு கேட்டுக் கொண்டார்கள். அதிலும் திரு.அறுசுவை பாபு அண்ணன் மற்றும் சிலரும் சூடானை குறித்தும் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதும்படி தூண்டினார்கள். அவர்கள் எல்லாரும் என் அவ்வளவு நம்பிக்கை வைத்து இருப்பதை பார்த்தால் எனக்கு சற்று பயமாக தான் உள்ளது. சரி, ஆனது ஆச்சு, நம்மால் முடிந்த அளவு நமக்கு தெரிந்த விசயங்களை உங்களுடம் பகிர்ந்து கொள்ள முடிவு செய்து விட்டேன். அதனின் முதல் வெளிபாடு தான் பின்வரும் புகைப்படங்கள். கண்ணி வெடிகளை குறித்து யாரும் இதற்கு முன்பு வலைப்பதிவில் எழுதி உள்ளார்களா எனத் தெரியவில்லை. அப்படி யாரும் எழுதி இருந்தால் தெரிவிக்கவும்.
இவை அனைத்து தற்பொழுது என் அலுவலக வளாகத்தில் உள்ளவை. இந்த புகைப்படங்களை பற்றியும் அது எந்த வகைகளை சார்ந்தவை போன்ற எந்த விளக்கமும் இப்பொழுது கொடுக்கவில்லை. விரிவாக கண்ணி வெடிக்களை பற்றியும், அதன் வகைகளை பற்றியும், கண்ணி வெடிகள் இருக்கும் இடத்தில் தாங்கள் சிக்க கொண்டால் அந்த இடத்தில்(நேரத்தில்) என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்தும் படங்களுடன் விரிவாக பின்வரும் தொடர்க்களில் எழுதலாம் என்று உள்ளேன். இந்த பதிவை குறித்து உங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இடைக்குறிப்பு : கடைசி இரு புகைப்படங்களை காண தவறாதீர்கள்.(முக்கியமாக சங்கத்து சிங்கங்கள்)
*** இந்த கண்ணி வெடி இங்கு இருப்பதிலே எனக்கு மிகவும் பிடித்தது.
*** இது நம்ம தலக்கு மிகவும் பிடித்தது. சங்க அலுவல் விசயமாக என்னை சந்திக்க சூடான் வந்த போது கட்டதுரையின் ஆட்கள் அவர் மேல் இதை ஏவினார்கள். அதை இடது கையால் பிடித்து அதன் மேல் எச்சியை துப்பி, மேல இருந்த குமிழை வாயால் பிடிங்கி எரிந்தார். நான் கேட்டு கொண்டதற்கு இணங்க இதையும் என் அலுவலகத்தில் வைத்து விட்டு சென்றார்.
65 comments:
ஆர்வத்தோடு இந்தத் தொடரை எதிர்பார்க்கிறேன்...சீக்கிரம் எழுதுங்கள் !!
ஏதோ சொல்லறேன்னு சொல்லிட்டு இப்படி தலயோட வீர தீர பராக்ரமங்கல சொல்லிட்டீங்களே, வாழ்க தல புகழ், வளர்க தங்கள் பதிவு.:-)
வாங்க டுபுக்கு!
முதல் வாழ்த்தே, உங்களிடம் இருந்தா... மிக்க மகிழ்ச்சி.
தொடர்ந்து எழுதுகின்றேன். தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும். முதல் முறை வருகைக்கு நன்றி.
வாங்க நன்மனம்!
எது எப்படி இருந்தாலும் தலயை மறக்க முடியுமா??
அப்புறம், நன்மனம், எல்லாரும் கேட்குறாங்க... அந்த ஆறு பதிவ தான் போடுங்களேன்...
முதல் தரமெல்லாம் இல்லீங்க... :))
http://www.desipundit.com/2006/06/23/kannivedi/
என்னங்க ஒரு குண்டு குவியலையே வெச்சுக்கிட்டு ஒன்னு வெச்சிருக்கேன்னு சொல்லிபுட்டிங்க...
இனி குண்டுகளைப் பற்றி (வைத்து) வெடிக்க போகிறேன் என்கிறீர்கள். நாகை புயலாக மாறப்போகிறீர்கள் ... ஆவாலாக உள்ளேன் படிப்பதற்கு...
அன்புடன்
கோவி.கண்ணன்
பாத்துங்க... நீங்க போற ரூட்டே சரியில்ல.. அமாஞ்சொல்லிட்டேன்..
திரு. டுபுக்கு அவர்களே!
எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. துளசி அவர்களின் பதிவின் மூலம் DESI PUNDIT பக்கத்திற்க்கு ஒரு முறை வந்தேன். அன்று நிலவு நண்பனின் தந்தை குறித்த ஒரு பதிவை பார்த்து, ஹம்... நம்ம பதிவு எல்லாம் இங்க வரதுக்கு வாய்ப்பே இல்லனு சத்தம் போடாமல் வந்து விட்டேன். இன்று உங்களால் என் பதிவு அங்கு உங்கள் கருத்துகளுடன் வெளியீடப்பட்டு இருப்பதை காணும் போது மிகவும் நெகிழ்வாக உள்ளது.
இந்த தொடரை கவனத்துடன் எழுத முயற்ச்சிக்கின்றேன். மீண்டும் ஒரு முறை நன்றி திரு. டுபுக்கு.
என் நண்பன் ஒருவன் என்னை அடிக்கடி கூறுவான், நீ சரியான டுபுக்கு என்று...அர்த்தம் கண்டு கொள்ள எல்லாம் ஆசைப்பட்டது இல்லை. உங்கள் வலைப்பதிவை பார்த்த பிறகு அர்த்தம் தெரிந்தது. அதுக்கும் ஒரு எக்ஸ்டரா நன்றிங்க...
அவ்வ்வ்வ்.....இப்போவே கண்ணக் கட்டுதே...
//இந்த கண்ணி வெடி இங்கு இருப்பதிலே எனக்கு மிகவும் பிடித்தது.
//
டூ மச்...த்ரீ மச்...
எதெல்லாம் புடிக்கனும்னு ஒரு விவஸ்தை இல்ல..
பாத்து பாஸு..இது ரத்த பூமி..பாத்து பக்குவமா எழுதுங்க...
// நாகை புயலாக மாறப்போகிறீர்கள் ... //
நாகை புயலா...... எனக்கு ஏன் நீங்க இப்படி குண்டு வைக்கிறீங்க??
//ஆவாலாக உள்ளேன் படிப்பதற்கு..//
பரவாயில்லை, நாம் எழுவதை படிப்பதற்கு நம்ம ஊர்ச்சனமாச்சும் கொஞ்சம் இருக்கு.
நன்றி கண்ணன்!
ஓ...கண்ணி வெடியா??
நான் ஏதோ கன்னி வெடி னு இல்ல நெனச்சுக்கிட்டேன்...
ம்ம்...இனிமே இங்க பின்னூட்டம் கூட பார்த்து எச்சரிக்கையாதான் போடனும் போலிருக்கே :))
அன்புடன்,
அருள்.
என்னங்க குப்பு, இப்படி பயம் காட்டுறீங்க....இப்படி எல்லாம் சொன்ன அப்புறம் ஷேர் மார்க்கெட் போல சர்னு கிழே இறங்கிடுவேன்... ஆமா சொல்லிட்டேன்
bayanggaramaana aaLaa irukkingga!
irukaRadhu vERa suudaan!
paaththungga!
[kaalaiyil thamizhth thatassu thagaraaRu seygiRadhu!]
பயங்கரமான ஆளா இருக்கிங்க!
இருக்கறது வேற சூடான்!
பாத்துங்க!
[காலையில் தமிழ்த் தட்டச்சு தகராறு சரியாகிவிட்டது!]
ஏப்பு இத போய் பெரிதாக எண்ண வேண்டாம்னு சொல்லீடீகளே...இதுவரைக்கு கன்னி (figures) தான் பார்த்து இருக்கோம்..கன்னி வெடி பத்தி அருமையான பதிவு சீக்கிரம் தொடருங்கள்.... :-)
அப்படியே கிளெமோர் குண்டு பற்றியும் எழுதுங்க...
கன்னிவெடியிலேயே எனக்கு பிடித்தது அதுதான்...
எப்படி இயக்குவது என்று ஒரு பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் இருக்கு...தனிமடலில் கேட்டா அனுப்புறேன்...
கடைசியில் சங்கத்து மேட்டரை இந்த பதிவுலயும் கோத்துட்டீங்க...
தலை கைப்பு எப்பவும் எடுத்துவிடுற டயலாக்கு...
தனியா போனா தகறாறு...
தன்னி(கன்னி)யோட போனா அது வரலாறு...
ஹுக்கும்....
//நான் ஏதோ கன்னி வெடி னு இல்ல நெனச்சுக்கிட்டேன்...//
அருள் பொழுதனைக்கும் கன்னி ஞாபகம் தானா???
கண்ணி பத்தி ஒரு கவிதை எழுதுவது.........
//டூ மச்...த்ரீ மச்...
எதெல்லாம் புடிக்கனும்னு ஒரு விவஸ்தை இல்ல..//
இதுல என்னங்க தப்பு. இத்தனை படம் போட்டு இருக்கேன். இதுல ஒரு படம் கூடவா உங்களுக்கு பிடிக்கல. நம்ம ரவியை பாருங்க...அவருக்கு பிடித்த குண்டை பத்தியும் எழுத சொல்லுறார். நீங்க என்னடானா........
//பாத்து பாஸு..இது ரத்த பூமி..பாத்து பக்குவமா எழுதுங்க..//
என்னதது சங்கத்து டயலாக் மாதிரி இருக்கு.... சரி சரி, பக்குவமா எழுதிடுவோம். நீங்க மறக்காம வந்து எட்டி பாத்துடு போங்க....
//பயங்கரமான ஆளா இருக்கிங்க!//
உங்களை விடவா....
//பாத்துங்க!//
முருகனின் அருள் இருக்கும் போது என்ன கவலை...
தட்டச்சு தகராறு செய்தாலும் அதை மூன்று நிமிடத்தில் சரி பண்ணிட்டு வந்து பின்னூட்டம் இட்டு என்னை கண்கலங்க வைச்சிட்டீங்க....
//ஏப்பு இத போய் பெரிதாக எண்ண வேண்டாம்னு சொல்லீடீகளே...//
என்ன அப்பு, நீங்க இப்படி சொல்லாமா? நீங்க யாரு, ஏவுகனை வைச்சி கில்லி ஆடுன ஆளு.. இது எல்லாம் உனக்கு சப்ப மேட்டரு.... என்ன நான் சொல்வது சரிதானே
என்ன என்ன அசினும் வேணாமா..... அப்புறம் உன் இஷ்டம்....
ரவி, வர வர உன் இம்சை அதிகமாகிட்டே போகுது. கொஞ்சம் விழிக்கவும் செய்(புரியுதல)
அப்புறம் மத்த பதிவுல போயி கொளுத்துறது சரியில்லை.
தனி அஞ்சல் கிடைத்ததா?
நாம் எல்லாம் வாழும் வரலாறுகள் தானே!
கூட்டாளி,
படத்த பார்த்தா ரத்த பூமி மாதிரி இருக்கு.. பார்த்து பக்குவமா இரு பங்காளி :-)
Land mines இத தானே கண்ணி வெடின்னு சொல்லுறது? எதுக்கு இந்த பேரு வந்தது.
***
//*** இந்த கண்ணி வெடி இங்கு இருப்பதிலே எனக்கு மிகவும் பிடித்தது.
இந்த வார்த்தையையும் பதிவோட தலைப்பையும் சேர்த்து வைத்து பார்த்தா எனக்கு ஒண்ணு தோணுது.. சொந்த பொருள் மேல இவ்வள்வு பாசமா அவ்வ்வ்வ்வ்.
ஆமா இந்த விளையாட்டுல ராஜஸ்தான்ல ஒட்டககறி சாப்பிடுற தலய வேற இழுத்துட்ட. ஓ இன்டர்நேசனல் ஆப்புக்கு பிளான் பண்ணுறயா :D
//பார்த்து பக்குவமா இரு பங்காளி //
சரி பங்காளி!
//எதுக்கு இந்த பேரு வந்தது. //
இதை குறித்தும் ஒரு ஆராய்ச்சி பண்ணிட வேண்டியது தான்.
//இந்த வார்த்தையையும் பதிவோட தலைப்பையும் சேர்த்து வைத்து பார்த்தா எனக்கு ஒண்ணு தோணுது.// என்னாது....????
//இன்டர்நேசனல் ஆப்புக்கு பிளான் பண்ணுறயா//
சே...சே... உன்ன மாதிரி என்னையும் நினைச்சட பாத்தியா பங்காளி. உன்னை மாதிரி நான் எனக்கு மட்டும் தான் என்று சொல்லவில்லை. இதை பாத்த பிறகாவது அடுத்த தடவை உன் பதிவின் தலைப்பை பாத்து வையி....... :-))))))
//என்னதது சங்கத்து டயலாக் மாதிரி இருக்கு.... //
அதுவா வருதே!!!!
அது அப்படி தான். தானாகவே வந்துரும்.
அதுவும் நல்லதுக்கு தான்.
என்ன நான் சொல்லுறது...
என்னங்க, என்னென்னவோ சொல்றீங்க..ஜாக்கிரதையா இருக்கனும் போல..
//அப்படியே கிளெமோர் குண்டு பற்றியும் எழுதுங்க...//
//கன்னி வெடி பத்தி அருமையான பதிவு சீக்கிரம் தொடருங்கள்.... :-) //
இதெல்லாம் பாண்டிகிட்ட தள்ளி விட்டுடுங்க..
படமென்னவோ நல்லா இருக்கு.. கண்ணி வெடி எல்லாம் எழுதும் போது கொஞ்சம் சீரியஸா எழுதினா பெட்டரா இருக்கும் :)
அட என்னங்க...செண்டி ஆகிட்டீங்க...
நீங்க நல்லா எழுதியிருந்தீங்க நான் லிங்க் கொடுத்தேன். அவ்வளவு தான்
நான் தான் நன்றி சொல்லனும். திரு.டுபுக்கா...நல்ல காமடி பண்ணுறீங்க
(உங்க சங்கத்துல எல்லாரும் ரொம்ப உணர்ச்சிவசப் படுறீங்களேய்யா...உங்க தலை என்னை பேசவே விட மாட்டேங்கிறார்...இதென்ன சங்கத்து டெக்னிக்கா?? :)) )
நாகை சிவா, (இது என்னோட குரல்)
கை சிவா)
சிவா ) இது மூணும் எதிரொலி.
வா )
என்னைப்போய் பெரியவங்க லிஸ்ட்லயா? அக்கிரமம், அநியாயம், அடாவடி, பச்சை, சிவப்பு, கறுப்பு, மஞ்சள், நீலம் எல்லாக் கலர்லயும் துரோகம். நான் என்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்றுறுறுறும் பதினாறுதான்
அப்புறம் உங்க ஊருக்கு வந்து வெளிப்பாளையத்திலே தங்கிக் கோவில் எல்லாம் பார்த்து விட்டு வேளாங்கண்ணி, நாகூர் எல்லாம் போயிட்டு வந்தாச்சு எப்போவோ. உங்களுக்கு 60 வயசு ஆச்சுல்ல அப்பத்தான்னு நினைக்கிறேன். அப்புறம் உங்க ப்ளாகிலும் இதே பின்னூட்டம் போடுறதுக்கு ஒண்ணும் objection இல்லையே?
நிஜமாவே கண்ணிவெடிதானா? அதிலும் ஏதாவது உள்,வெளி,நடு,பக்கக் குத்து இருக்கா? சங்க ஆட்களைப் பார்க்க அழைத்து இருக்கிறதாலே சந்தேகமா இருக்கு.
ஏங்க நீங்க எதோ ஐநா சபைக்கு வேலைன்னு சொன்னீங்க. இந்த வேலைதானா?:-)
பார்த்துங்க. வெடிச்சிறப்போகுது.
வாங்க மனதின் ஒசை.
பாண்டியை எங்க வம்புக்கு இழுக்குறீங்க... பாவம் விடுங்க... அவரு பாட்டுக்கு எங்கையாச்சும் ஜொள்ளிகிட்டு இருப்பாரு.....
//கொஞ்சம் சீரியஸா எழுதினா பெட்டரா இருக்கும்//
அப்படியா சொல்லுறீங்க...
இல்ல இது Very Subject from Very dry Place இருக்கேனு தான் கொஞ்சம் அது மாதிரி கலந்து விட்டேன். சரி நீங்க சொன்ன மாதிரியே எழுதிடுவோம்
//...நல்ல காமடி பண்ணுறீங்க//
யாரு நாங்க காமெடி பண்ணுறோம். அதுவும் உங்கிட்ட....
//இதென்ன சங்கத்து டெக்னிக்கா?? :)) ) //
ஆகா, இப்படி ஒரு டெக்னிக் இருக்கா...............
//உங்க ப்ளாகிலும் இதே பின்னூட்டம் போடுறதுக்கு ஒண்ணும் objection இல்லையே? //
No Objection.
//நிஜமாவே கண்ணிவெடிதானா? //
எங்க புகைப்படம் எல்லாம் போட்டு இருக்கேன். நிஜமானு கேட்குறீங்க...
//அதிலும் ஏதாவது உள்,வெளி,நடு,பக்கக் குத்து இருக்கா?//
இதில் எந்த ஒரு குத்தும் கிடையாது. அதுவும் இல்லாமல் எனக்கு அது எல்லாம் தெரியாது...
//இந்த வேலைதானா?:-)//
நமக்கு இந்த வேலை செய்யும் குடுப்பினை இல்லைங்க....
//பார்த்துங்க. வெடிச்சிறப்போகுது. //
என்னங்க இப்படி சொல்லுறிங்க... நீங்க எல்லாம் சொன்னீங்க தான் இதில் இறங்கினேன். இப்ப என்னடான வெடிச்சிறபோகுதுனு பயம் காட்டுறீங்களே!
அப்பு இதுல எல்லாம் வெடிச்ச குண்டா இருக்கே,
வெடிக்காத குண்டா இருந்தா தல வர்ர வழியில் வைக்கிறது....o
(ஒரு செஞ்சுக்குதான் எத்தனை நாளைக்குதான் ஆப்பா வைக்கிறது)
நானும் உங்க ஊர் தாங்கோ....ஹி ஹி ஹி
கண்ணி வெடி தொடரா? எழுதுங்க, எழுதுங்க.. i too got training from Indian Navy. so write it in detail.
நமீதா படம் போட்டு, இது தான் கண்ணி வெடினு நக்கல் விடாம இருந்தா சரி. :)
siva,
Topic scared me.. Interesting to know you guys are collecting all this stuff....
Looking forward to seeing more toward this end.
with best
CT
//வெடிக்காத குண்டா இருந்தா தல வர்ர வழியில் வைக்கிறது....//
இப்படி எல்லாம் பேசப்படாது....
//நானும் உங்க ஊர் தாங்கோ..//
அப்படியா மிக்க மகிழ்ச்சி, நாகையை தானா, இல்ல பக்கத்திலா?
வாங்க அம்பி! முதன்முறையாக வந்து உள்ளீர்க்கள். நன்றி. ரொம்ப விரிவாக எல்லாம் எழுத போவதில்லை. கண்ணி வெடிகளின் வகைகள், அவற்றின் பாதிப்புகள், கண்ணி வெடியில் சிக்கி கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து தான் எழுத உள்ளேன். இந்தியன் நேவியில் வேலை செய்தவரா தாங்கள்????
//நமீதா படம் போட்டு, இது தான் கண்ணி வெடினு நக்கல் விடாம இருந்தா சரி. :) //
சே...சே.. அது மாதிரி எல்லாம் செய்வோமா...இது நம்ம பாண்டி செய்ற வேலை.
நன்றி CT. உங்கள் வார்த்தைகளை நிறைவேத்த முயற்சிகின்றேன்.
//என்னப்பு போட்டுத் தாக்குற//
வாப்பு, ஒரு வழியா நம்ம வீட்டுக்கு வந்து சேந்துட்ட. சந்தோஷம்.
தொடர்ந்து தாக்கிடுவோம்.
//உன்னை மாதிரி நான் எனக்கு மட்டும் தான் என்று சொல்லவில்லை. இதை பாத்த பிறகாவது அடுத்த தடவை உன் பதிவின் தலைப்பை பாத்து வையி....... :-))))))
பங்காளி நீ சொல்லுற மேட்டர் கண்ணி வெடி.. இதுல கூட்டம் இருந்தா பரவாயில்லை.. என்னோட மேட்டர் கன்னி வெடி.. இதுல எல்லாம் கூட்டம் சேர்க்ககூடாது :D
கண்ணி வெடி பற்றி எழுதுவதோடல்லாமல் கன்னி வெடியை பற்றியும் படத்தோட எழுதுங்கள் (போடுங்கள்). :-)
//என்னோட மேட்டர் கன்னி வெடி.. இதுல எல்லாம் கூட்டம் சேர்க்ககூடாது :D //
அப்படியா சொல்லற, சரி விடு கழுதை. வேற எதாவது வரும் பாத்துக்கலாம்.
நாகை சிவா
நான் எழுத நினைத்ததை பலரும் எழுதிட்டாங்க.
தொடருங்கள்.
ஆனால் எவ்வளவு பேர் காலை காவு வாங்குகிறது என்று எண்ணும் போது கண்ணில் நீர்.
ரொம்ப நன்றி உங்க கமெண்ட் படிச்சதும்
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது....உங்க போஸ்ட்ஸ் இன்னும் படிக்கல ...ஆனா முதல் பொஸ்ட் பாத்து கொஞ்சம் பயந்துட்டேன்!Sorry tamila type adikka time illla nidaanama comment podaren!
மொத பதிவு போட்டுருக்கேன் வாங்கப்பு !!
வந்து ஆப்பு வச்சிட்டு போங்க !!!
//கன்னி வெடியை பற்றியும் படத்தோட எழுதுங்கள் (போடுங்கள்). :-) //
குறும்பன், அதுக்கு நம்ம பங்காளிங்க கார்த்திக்கும், பாண்டியும் இருக்காங்க. அவங்க பக்கத்துக்கு ஒரு விசிட் அடிச்சி பாருங்க. சும்மா அசந்துடுவீங்க
உண்மை தான் குமார், பல பேர்களின் வாழ்வை முடக்கி வீட்டில் வர்கார வைத்து விட்டது. சில புகைப்படங்கள் உள்ளது, அதையும் போடலாம் என்று இருக்கின்றேன்
வாங்க சுபா!
நீங்க பயப்படுற அளவுக்கு எல்லாம் நம்ம ப்ளாக்ல எதும் இருக்காது. இப்ப தான் தவழ ஆரம்பிச்சு இருக்கேன்.
//மொத பதிவு போட்டுருக்கேன் வாங்கப்பு !!//
வந்து பாத்தச்சாச்சு அப்பு
என் நண்பர் ஒருவர் பிக் பேரில் வேலை செய்கிறார். அடிக்கை சூடான் சென்று வருவார். அவர் சூடான் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். உங்க பிளாக் நல்லா இருக்கு. அடிக்கடி வருவேன்.
இராம்ஸ்
//சங்க அலுவல் விசயமாக என்னை சந்திக்க சூடான் வந்த போது கட்டதுரையின் ஆட்கள் அவர் மேல் இதை ஏவினார்கள். அதை இடது கையால் பிடித்து அதன் மேல் எச்சியை துப்பி, மேல இருந்த குமிழை வாயால் பிடிங்கி எரிந்தார். நான் கேட்டு கொண்டதற்கு இணங்க இதையும் என் அலுவலகத்தில் வைத்து விட்டு சென்றார்.//
அடப்பாவி! உன்னை நல்லவன்னு நம்பி நம்ம கேச்சு புடிச்சு வெளாடுன டப்பாசைப் பத்தி ப்ளாக்ல எளுத சொன்னா இப்படி வெங்காய வெடி, ஊசி வெடி படத்தைப் போட்டு மானத்தை வாங்கிட்டியே. அவமானம்...அவமானம்.
சரி...பரவால்ல. சின்னப் பில்ல...எதோ ஆஸ்பட்டு எளுதிட்டே...அடுத்த தரமாச்சும் தலயோட புகளுக்கும் சங்கத்து மேன்மைக்கும் பங்கம் வராம பாத்து பக்குவமா நடந்துக்க. சரியா?
தலையை நிஜமாலுமே மாட்டி வெச்சு ஆப்பு வெச்சிடுவீர் போல இருக்கே!
வாங்க ராம்ஸ், உங்க நண்பர் எதுவும் நல்லவிதமா சொல்லி இருக்காரா....
//உங்க பிளாக் நல்லா இருக்கு. அடிக்கடி வருவேன்.//
அது என் பாக்கியம். நன்றி.
//தலயோட புகளுக்கும் சங்கத்து மேன்மைக்கும் பங்கம் வராம பாத்து பக்குவமா நடந்துக்க. சரியா? //
இனிமேல் பாத்து பக்குவமா நடந்துக்குறேன் தல..........
(மனதுக்குள், இது உனக்கு வெங்காய வெடி, ஊசி வெடியா போச்சா.... உன்ன இண்டர்நேஷனல் பிகராக்கலாம் பாத்தா இன்னும் நீ லோக்கலாவே இருக்கியே)
வாங்க சிபியாரே! முதல்ல தடவையா நம்ம வீட்டாண்ட வந்து இருக்கீங்க.
//தலையை நிஜமாலுமே மாட்டி வெச்சு ஆப்பு வெச்சிடுவீர் போல இருக்கே//
நானும் அதுக்கு தான் முயற்சி பண்ணுறேன். ஒன்னும் தொதா மாட்ட மாட்டேன் என் கிறது.
ஐயா புலிக்குட்டி துங்குனது போதும் எந்திறிச்சு மூஞ்சி கழுவிட்டு அடுத்த போஸ்ட்ட போடுங்க
எத்தினி நாளைக்கு தான் வந்து வந்து எட்டி பார்த்துட்டு சும்மா போறது :-)
ஷாம் அண்ணன், கோவிச்சுக்காதீங்க அண்ணன், வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு. அதுதான். நாளைக்கு விடுமுறை, நாளை கண்டிப்பாக போட்டு விடுகின்றேன்.
//
எத்தினி நாளைக்கு தான் வந்து வந்து எட்டி பார்த்துட்டு சும்மா போறது :-)
//
நானுந்தேன் ஒவ்வொரு பிளாக்கா டெய்லி ஏறி எறங்குறேன்..நாளைக்கு போட்டுடுவிகள்ல ?
இன்னிக்கே போட்டு விடுகின்றேன் மின்னல்.
ஒத்த குண்டு வச்சிருக்கேன்னு சொன்னியேன்னு ஒரு எட்டு பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன் வகை வகையா வச்சி விளையாட்டுக் காட்டுற? ஆமா சூடான்ல்ல நீ என்னய்யா பண்ணுற? உண்மையத் தான் சொல்லணும்.... அதுவும் ஒரு இரண்டு அடி விலகி நின்னு சொல்லு கேட்டுக்கிறோம்...
பயம்ன்னு நீ தப்பா நினைக்கப் பிடாது எட்ட இருந்து எந்த குண்டு வந்தாலும் ஆ கேட்ச்ன்னு பிடிச்சு விளையாடி பழக்கம்.. கிட்ட இருந்தா வச்சிக்கிறது இல்ல அதான்...
//பயம்ன்னு நீ தப்பா நினைக்கப் பிடாது //
எனக்கு தெரியாதா தேவ் உங்களை பத்தி, அந்த பயமே உங்களை கண்டு பயப்படும்.
2 அடி தள்ளி நின்னாலும் ஆபத்து தான். நூறு அடி தள்ளி நின்னாலும் ஆபத்து தான். அம்புட்டு பயங்கரமானது அது. ஊருக்கு வரும் போது உங்களுக்கு ஒன்னு பரிசா தரலாமுனு இருக்கேன். எது பிடித்து இருக்குனு பாத்து சொல்லுங்க....
Post a Comment