Saturday, July 15, 2006

4 - சினிமா விமர்சனம்!

என்னடா இவனும் சினிமா விமர்சனத்தில் இறங்கிட்டானேனு பாக்காதீங்க, விதி யாரை விடுது. இந்த வாரத்தில் 4 ஆங்கில படமும், ஒரு இந்தி படமும் பார்க்கும்படி நேர்ந்தது. அதனால் யாம் பெற்ற இன்பம்(துன்பம்) பெறுக இவ்வையகம் என்று விமர்சனத்தில் இறங்கியாச்சு. பங்காளி சந்தோஷ் ஆங்கில படமா என்று அதிர்ச்சி அடையாதே. அதுல ஒரு பெரிய மேட்டரே இருக்கு. இந்த வாரம் ஆரம்பத்தில் மனித உரிமை துறையில் உள்ள இருவர் நம்ம துறைக்கு வந்தார்கள். அதுல ஒன்னு நம்ம ஆந்திராவை சேர்ந்தவர், இன்னவொன்னு அமெரிக்க பெண்மணி. சும்மா வெட்டிப்பேச்சு பேசிகிட்டு இருக்கும் போது பேச்சு அப்படியே பேச்சுவாக்குல சினிமா நோக்கி திரும்பிடுச்சு. அந்த அம்மணி சும்மா இல்லாம நீ அமெரிக்க படம் எல்லாம் பாப்பியானு கேட்க, நானும் ஒரு ஆர்வக் கோளாறால் என்ன இப்படி கேட்டீங்க, ஒரு படம் விட மாட்டமுல என பெரும்பேச்சு பேச போக, அப்ப பார்த்திலே உனக்கு பிடிச்ச படத்தை எல்லாம் சொல்லுனு கேட்டுச்சு. ஆஹா, தேடி போய் சொந்த செலவுல சூன்யத்த கேட்டு வாங்கிட்டோமேனு (நன்றி-வாத்தி இளவஞ்சி) மனதுக்குள் இஷ்ட தெய்வத்த எல்லாம் வேண்டிக்கிட்டு ஒரு நாலு அஞ்சு பேமஸ் ஆன படத்தின் பெயர எடுத்து விட்டேன். ஹும்... ஹும் எல்லாத்தையும் கேட்டுகிட்டு, என் கிட்ட நிறைய சி.டி. இருக்கு, வேணுமுனா சொல்லு தரறேன் சொல்ல, நம்மளே மொழிப் பெயர்ப்பாளர் வச்சுக்கிட்டு ஆங்கில படம் பாக்குற ஆளு, இந்த ஊருல மொழிப் பெயர்ப்பாளருக்கு எங்க போயி அலையுறது, இது என்னடா வம்பா போச்சுனு, இல்ல பரவாயில்ல இப்ப எல்லாம் நான் தமிழ் படம் மட்டும் தான் பாக்குறதுனு சொல்லி அப்படியே எஸ்கேப் ஆக பாத்தேன். விடுவானா நம்ம பக்கத்து மாநிலத்துக்காரன், Henry, (அந்த அம்மணி பெயருப்பா) இவனுக்கு ஆங்கிலப்படம்னா உசிருனு ஒரு பிட்ட போட்டுட்டான். அதுவும் அப்படியானு ஒரு ஆச்சரியக்குறிய வார்த்தையில போட்டுட்டு போயி ஒரு சி.டி. கொண்டு வந்து கொடுத்துட்டு சிவா, இதில் இருக்கும் படம் உனக்கு மிகவும் பிடிக்கும்னு சொல்லிட்டு, பாத்துட்டு உன் விமர்சனத்த சொல்லுனு சொல்லிட்டு போடுச்சு. சி.டி.ய பாத்தவுடன் மனசுக்குள் ஒரு சின்ன சந்தோஷம், அது டி.வி.டி. அப்ப சரி, சப்-டைட்டில எழுத்துக் கூட்டு படிச்சு இதில் இருக்கும் படத்துக்கு விமர்சனத்த சொல்லி தப்பிச்சுடலாம் நினைத்துக் கொண்டேன், அதுக்கும் ஒரு ஆப்பு இருப்பது தெரியாமல்......

அந்த டி.வி.டி.யில் இருந்த படங்கள் - தி ரிங்க், தி அதர்ஸ், ப்பனிக் ரூம், போன் பூத். இந்த படத்த எல்லாம் ஒரு வழியா தட்டுத் தடுமாறி பாத்து கதைய ஒரு மாதிரி புரிஞ்சுகிட்டத கிழ கொட்டுறேன்.

தி ரிங்க (The Ring) - இந்த படத்துக்கு அவ்வளவா பிரச்சனை இல்லங்க, ஏன்னா நம்ம "அரணி பரணி பாடி வரும் தாமிரபரணியின், தவப்புதல்வன்" சிங்கம் டுபுக்கு இந்த படத்தின் விமர்சனத்தை எழுதி விட்டார். இருந்தாலும் நான் பார்த்து புரிந்தது இங்கு - ஒரு டேப்(வீடியோ கேசட்) இருக்குப்பா, அத பாத்தவங்க எல்லாம் அத பார்த்த ஏழாவது நாள் இறந்து விடுகின்றார்கள். இறந்த ஒரு பெண்ணின் உறவினர், அதாம்ப்பா கதாநாயகி அந்த டேப்பை பாக்குறாங்க, அதப் பார்த்தவுடன் ஒரு போன் வருது, இன்னும் ஏழு நாள் தான் என்று. அதில் இருந்து ஒவ்வொரு நாளா ஏழு நாள் வரை கதைப் போகுது. இந்த ஏழு நாள்ல அவங்க என்னவெல்லாம் கண்டுப்பிடிக்கிறாங்க என்பது தான் கதை. நடுவில் இந்த டேப்பை அவங்க பையனும், நண்பரும் வேற பாத்து விடுகின்றார்கள். இந்த படத்தின் + பாயிண்டா ஒளிப்பதிவையும், ஒலிப்பதிவையும் சொல்லாம். இரண்டையும் வைத்து பார்ப்பவர்க்களை மிரட்டி உள்ளார்கள். படத்தின் கதாநாயகி அம்மணி நல்லா நடிச்சு இருக்குப்பா. கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம். இதுக்கு இன்னவொரு பார்ட்ட வேற வந்து உள்ளதாம். பார்த்தவர்கள் சொல்லாம்.

போன் பூத்(Phone Booth) - இந்த தலைப்பு தான் படத்தின் கதையே. ஆமாப்பா, ஒரு போன் பூத்க்குள்ளயே படத்த எடுத்து முடிச்சுட்டாங்க. கதாநாயகன்(கல்யாணம் ஆன) ஒரு ப்பளிக் போன் பூத்துக்கு வந்து தன் காதலிக்கு போன் பண்ணிட்டு திரும்பும் போது, போன் ரிங்க் அடிக்குது, இவர் போன எடுத்தா, போனில் ஒரு குரல் இவர் பெயர சொல்லி கூப்பிட்டுது, அது மட்டும் இல்லாமல் இவனின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்று விடாமல் கூறுகின்றது அந்த குரல். மேலும் அந்த குரல் தான் சொல்லும்படி அவன் செய்யாவிட்டால் அவனை கொன்று விடுவதாக மிரட்டுகிறது. இவன் மிரண்டு போயி யாரு என்னனு கேட்டுக் கொண்டு இருக்கும் போது, வெளியே ஒருவன் போன் பூத்தில் வெகு நேரமாக இவனே பேசிக் கொண்டு மற்றவர்களை(பொண்ணுங்கள) போன் பேச விட மாட்டேன் என்கின்றானே என்று சண்டைக்கு வருகின்றான். அவனை மறுமுனையில் இருக்கும் அந்த குரல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுகின்றது. சுற்றி இருக்கும் அனைவரும் கதாநாயகன் தான் கொலைச் செய்தான் என்று நினைக்கின்றார்கள். அந்த குரல் நீ போனை கட் செய்தால் உன்னையும் கொன்று விடுவேன் என்று மறுபடியும் மிரட்டுகின்றது. அதற்குள் போலிஸ் வர, கதாநாயகனின் மனைவி, காதலி, பத்திக்கையாளர்க்கள் எல்லாம் வந்து விடுகின்றார்கள். ஆனால் அந்த குரல் விடாமல் அவனை மிரட்டிக் கொண்டே இருக்கின்றது. கடைசியில் போலிஸின் உதவியுடன் அவன் எப்படி தப்பிக்கின்றான் என்பது தான் கதை. இந்த படத்தின் திரைக்கதையை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். ஒன்றரை மணி நேரக் கதையை ஒரு போன் பூத்தை சுற்றியும், இருவருக்கும் இடையான உரையாடலை கொண்டுமே போர் அடிக்காமல் படத்தை கொண்டு சென்று இருக்கின்றார்கள். படத்தின் கதாநாயகன் மிக அருமையாக அனைத்து விதமான உணர்ச்சிகளையும் காட்டி உள்ளார். அந்த குரல் உண்மையிலே மிரட்டும் குரல் தான். இது போன்று ஒரு படம் தமிழில் வர வேண்டும்.

தி அதர்ஸ்(The Others) - இது கொஞ்சம் வித்தியாசமான படம். கணவன் போரில் இறந்து விட்டான் என்று நம்பும் மனைவி தன் இரு குழந்தைகளுடன் ஒரு வீட்டில் வாழ்ந்து வருகின்றார். அந்த குழந்தைகளால் ஒரு விளக்கின் ஒளியை தவிர பிரகாசமான ஒளியை பாத்தால் இறந்து விடக்கூடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அதனால் வீடு முழுவதும் வெளிச்சம் உள்ளே வராதாவாறு தீரை சீலைக் கொண்டு மூடி வைத்து உள்ளார். அந்த வீட்டில் புதிகாக மூன்று வேலையாட்கள் சேருகின்றார்கள். அந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தை அடிக்கடி ஒரு சிலரை பார்ப்பதற்காக தன் தாயிடம் கூறுகின்றது. அதை நம்பாத தாய் ஒரு சமயத்தில் தானும் அதுப் போல உணர்க்கின்றாள். அவளுக்கு இந்த பேய், பிசாசுகளின் மேல் நம்பிக்கை இல்லாதால், இது வேற யாருடைய சதி என்று நினைக்கின்றாள். ஒரு நாள் தீடிரென்று வீட்டில் இருந்த அனைத்து திரைசீலைகளும் காணாமல் போகின்றது. தீரைச்சீலைகள் இல்லாததை கண்டு குழந்தைகள் அலற, ஒரு போர்வையால் அவர்க்களை போர்த்தி, வீட்டின் வேலைக்காரர்க்கள் மேல் சந்தேகப்பட்டு அவர்களை வேலையை விட்டு அனப்புகின்றாள். அன்று இரவு, அந்த வேலையாட்கள் மூவரும் வீட்டை நோக்கி வருகின்றார்கள், கதாநாயகி அவர்களை பிசாசுகள் என்று நினைத்து குழந்தைகளை ஒரு இடத்தில் ஒளிந்து கொள்ள கூறி விட்டு அவர்களை நோக்கி துப்பாக்கியால் சூடுகின்றாள், பின் வாசல் கதவை அடைத்து விட்டு, மாடிக்கு வருகின்றாள். அங்கு ஒரு ஐந்து நபர்கள் அமர்ந்து ஒரு முக்கியமான விசயத்தை குறித்து விவாதித்து கொண்டு இருக்கின்றார்கள். அது என்ன என்பது தான் சஸ்பென்ஸ். யாருமே ஊகிக்க முடியாத ஒரு கதை என்று சொல்லாம். அனைவருமே மிக அருமையாக நடித்து உள்ளார்கள். கொடுரமான பேய் முகம், ரத்தம் போன்றவைகள் இல்லாமல் படத்தை மிக அருமையாக நகர்த்தி இருக்கின்றார்கள். ஒளிப்பதிவை மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

ப்பனிக் ரூம் - Panic Room - ஒரு வீட்டிற்கு சமீபமாக விவாகரத்து பெற்ற ஒரு தாய் தன் மகளுடன் குடியேறுகின்றார். அன்று இரவே அந்த வீட்டில் இருக்கும் 22 மில்லியன் டாலர் மதிப்பு உள்ள பத்திரத்தை எடுப்பதற்கு மூன்று நபர்கள் வருகின்றார்கள். அவர்கள் வீட்டில் நுழைந்ததை அறிந்த தாய், தன் மகளுடன் சென்று ஒரு பாதுகாப்பான அறையில் ஒளிந்துக் கொள்கிறாள். அந்த அறையில் தான் அந்த பத்திரம் உள்ளது. அந்த அறை மிகுந்த பாதுக்காப்பான அறை, அந்த அறையில் நுழைவதற்கு அந்த நபர்கள் செய்யும் முயற்சிகளும், இடையில் அவர்கள்குள்ளே ஏற்படும் பிரச்சனை, இந்த நபர்களிடம் இருந்து தப்பிப்பதற்கு அந்த தாய் எடுக்கும் முயற்சிகள் என்று படத்தை மிகவும் விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கின்றார்கள். அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்று ஆவலை தூண்டும்படி இருப்பது இந்த படத்தின் திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி என்று கூறலாம். இதுவும் பார்க்க கூடிய ரகத்தை சேர்ந்த படம் தாங்க.

அம்புட்டுத் தாங்க,மேல சொன்ன ஆப்பு என்னனா, நான் பார்த்த நாலு படத்தில தி அதர்ஸ் படத்துக்கு மட்டும் தாங்க சப்-டைட்டில் இருந்தது. மற்ற படத்துக்கு இல்லங்க. ஏதோ தட்டுத் தடுமாறி ஒரு மாதிரி புரிஞ்சி நான் இந்த விமர்சனத்தை எழுதி இருக்கேன். எங்க எங்க தப்பு பண்ணி இருக்கேன் என்று இந்த படத்தை எல்லாம் (புரிஞ்சி) பாத்தவங்க, கொஞ்சம் கதைய சொல்லி இந்த தம்பியின் மானத்தை காப்பாத்துங்க செல்லங்களா....

115 comments:

கோவி.கண்ணன் said...

சிவா... நல்லா எழுதியிருக்கிறீர்கள்
நான் ஆங்கிலப்படம் என்றால் ஆக்சன் படம் மட்டும் பார்பேன் அல்லது ஹாரி பாட்டர், லார்ட் ஆப் ரிங் அந்த மாதிரிப்படங்கள்.

இல்லையின்னா அமெரிக்கா காரனுங்க அன்னாந்து பாத்துக்கிடே ஒடிகிட்டே இருப்பாங்களே இ ன் டி பென் டன்ஸ் டே மாதிரி படங்கள். இதுமாதிரி படங்களில் அமெரிக்கா காரங்க மேல பாத்துக்கிட்டே ஒடுவாங்க... சமீபத்தில் கூட டாம் குரூஸ் படம் அதுமாதிரி ஒன்னு வந்துச்சி

நாகை சிவா said...

ஹாரி பார்ட்டர் இதுவரை நான் பாக்கவில்லை. பாக்கும் எண்ணமும் இல்லை.
இண்டிபென் டன்ஸ் டே நல்ல படம்.
"The Rock" னு ஒரு படம் வந்துச்சு பாத்திங்களா...
இந்த மாதிரி படம் எல்லாம் பெரும்பாலும் இங்க இருக்கும் போதோ, பிளேனில் பறக்கும் போதோ பார்ப்பது அவ்வளவு தான். இந்தியாவில் இருந்தால் தமிழ் படம் மட்டும் தான்.

கோவி.கண்ணன் said...

//இந்த மாதிரி படம் எல்லாம் பெரும்பாலும் இங்க இருக்கும் போதோ, பிளேனில் பறக்கும் போதோ பார்ப்பது அவ்வளவு தான். இந்தியாவில் இருந்தால் தமிழ் படம் மட்டும் தான். //
பிளேனில் பெரும்பாலும் தமிழ்படங்கள் போடுவதால் ஆங்கிலப்படம் எப்போதாவது ஓசி டிக்கெட் கம்பெனி கொடுத்தால் பார்ப்போம்... சூப்பர் மேன் ரிட்டன் கூட அப்படி பார்த்ததுதான். நீங்கள் சொன்ன The Rack பார்க்கவில்லை. இங்கு ஆங்கிலப்படம் pirated மூன்றி வெள்ளிக்கு கிடைக்கும் ஆனால் பார்பது இல்லை. சமீபத்தில் திரையரங்கு சென்று பார்த்த தமிழ்
படம் இ அ இ பு தான்

Boston Bala said...

ஃபோன் பூத் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். இருக்கையில் இறுக்கமாகக் கட்டிப் போட்டு ரசிக்க வைத்தது.

Geetha Sambasivam said...

ஹையோ, உங்க ரேஞ்சே தனியாயிடுச்சே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கப்பி | Kappi said...

சிவா..நடக்கட்டும் நடக்கட்டும்..

'தி அதர்ஸ்' தவிர மற்ற மூன்றும் பார்த்திருக்கேன்..

நல்ல விறுவிறுப்பான படங்கள்..

Scary Movie 3 பாத்துட்டு 'தி ரிங்' மறுபடியும் பாருங்க..நல்லா காமெடியா இருக்கும்...

//தி அதர்ஸ் படத்துக்கு மட்டும் தாங்க சப்-டைட்டில் இருந்தது//

தலைவி படத்துல தலைவியைப் பார்த்துட்டுகிட்டே இருக்காம சப்-டைட்டிலை பார்த்துக் கொண்டிருந்ததற்கு என் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.. :D

நாகை சிவா said...

//இங்கு ஆங்கிலப்படம் pirated மூன்றி வெள்ளிக்கு கிடைக்கும் ஆனால் பார்பது இல்லை.//
ஒரு சில ஆங்கிலப்படம் தாங்க நல்லா இருக்கு, மத்தது எல்லாம் காதுல பூ சுத்துற மாதிரி தான் எடுக்குறாங்க.

// சமீபத்தில் திரையரங்கு சென்று பார்த்த தமிழ் படம் இ அ இ பு தான் //
ஹு... தல படம்ல., படம் எப்படி... தேறுதா....

நாகை சிவா said...

//ஃபோன் பூத் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். இருக்கையில் இறுக்கமாகக் கட்டிப் போட்டு ரசிக்க வைத்தது. //
வாங்க வாங்க பாலா, ஆஹா வராத ஆளு எல்லாம் நம்ம வீட்டான் ட வந்து இருக்காங்களே! அப்ப அடிக்கடி பீட்டர் விட வேண்டியது தான்....

உண்மை தான் பாலா,மிக அருமையான படம். இது போன்ற படங்கள் என்று தான் தமிழில் வருமோ....

நாகை சிவா said...

//ஹையோ, உங்க ரேஞ்சே தனியாயிடுச்சே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! //
கீதாக்கா, நீங்க பாட்டுக்கு ஏதாயாச்சும் கிளப்பி விடாதீங்க. நம்ம ரேஞ்சு எப்பவுமே லோக்கல் தான். புரியுதா
;)))))

நாகை சிவா said...

//Scary Movie 3 பாத்துட்டு 'தி ரிங்' மறுபடியும் பாருங்க..நல்லா காமெடியா இருக்கும்...//
நானும் இந்த மேட்டர கேள்விப்பட்டேன். சான்ஸ் கிடைத்தால் பாப்போம்.

//'தி அதர்ஸ்' தவிர மற்ற மூன்றும் பார்த்திருக்கேன்..//
வித்தியாசமான படம், கப்பி கண்டிப்பாக பாருங்கள். எதிர்பார்க்கவே முடியாத கிளைமேக்ஸ்.

//தலைவி படத்துல தலைவியைப் பார்த்துட்டுகிட்டே இருக்காம சப்-டைட்டிலை பார்த்துக் கொண்டிருந்ததற்கு என் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.. //
நல்லா ஆளுய்யா நீ. நானே எழுத்துக் கூட்டி எப்படியாச்சும் படத்தோட கதை என்னனு தெரிஞ்சுக்கலாம்னு பாத்தா, அதுக்கு நீ கண்டனம் வேற தெரிவிக்கிற... இது கொஞ்சம் கூட நல்லா இல்ல. என்னோட முயற்சிய பாராட்ட மாட்டியா நீ.....

இலவசக்கொத்தனார் said...

//இந்த வாரத்தில் 4 ஆங்கில படமும், ஒரு இந்தி படமும் பார்க்கும்படி நேர்ந்தது. //

சங்கத்துல களப் பணி ஆற்றச் சொன்னா ஒரே வாரத்தில் 5 படமா? இரு வச்சுக்கறேன்.....

நாகை சிவா said...

//சங்கத்துல களப் பணி ஆற்றச் சொன்னா ஒரே வாரத்தில் 5 படமா? இரு வச்சுக்கறேன்..... //
கோவிக்காதீங்க கொத்ஸ், அப்ப கட் அடிச்சுட்டு போறது தான். நாளைக்கு ஞாயிறு அதுமா டபுள் ஷிப்ட் போட்டு களப் பணி ஆற்றிட்டா போச்சு.

அதுவும் இல்லாமல் 250 த தாண்டிட்டுடா, திறக்கவே அதிக நேரம் எடுத்துக்குது, அதான் மேட்டர்....

இராம்/Raam said...

Siva sorry for my english typing..
I am now in madurai.So i don't have tamil typing stuff.Enyway vaalka thamil... :-))))
I have seen this phonebooth movie.It's very excellent and nice movie.but we need some extra patience.Isn't...?

நாகை சிவா said...

ராம்,
தமிழில் தட்டச்சு செய்ய முடியாவிட்டாலும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து என்னை நெகிழ வச்சுட்டப்பா.... மதுரையில் எல்லாம் நலமா....

இருவரின் உரையாடலை வைத்தே படத்தை நகர்த்தி இருப்பதால் பொறுமை இழப்பது போல் தோண்றும் ஆனாலும் இது ஒரு நல்ல முயற்சி.

ALIF AHAMED said...

அந்த இந்தி படத்தை பத்தி ஒன்னுமே சொல்லலையே.......:)))

மனதின் ஓசை said...

//அது டி.வி.டி. அப்ப சரி, சப்-டைட்டில எழுத்துக் கூட்டு படிச்சு //

அய்ய்... நமக்கு ஒரு கூட்டாளி இங்க இருக்கார்...குட்..குட்..

//அதுக்கும் ஒரு ஆப்பு இருப்பது தெரியாமல்//
எப்படி இருக்கும்னு புரியுதுங்க....(நானும் ஒரு தடவ, சரி.. காசு அதிகம் போனலும் பரவா இல்ல... புரிஞ்சு பாக்கலாம்னு DVD வாடகைக்கு எடுத்திட்டு வந்து போட்டா....அதுல சப்டைட்டிலே இல்லை... ) :-)

phonebooth பாத்து இருக்கேன்... அதையே ஒரு தமிழ் படத்தில கொஞ்ஜம் (10 நிமிஷம்) உபயோகப்படுத்தி இருப்பங்க.. சரத்குமர் படம்னு நினைக்கிறேன்.. சரியா தெரியல...பேரும் ஞாபகம் இல்ல..
panic room TVல பாத்து இருக்கேன்.. கொஞ்ஜம் கொஞ்ஜம்..

மத்தது DVD கிடைச்சா பாத்துட்டு சொல்றேன்..

அப்புரம் போன வாரம்தான் Godfather DVD கிடைச்சுது...ரொம்ப நாளா பாக்கனும்னு நினைச்சிகிட்டு இருந்த படம்..பன்ச் டயலாக் நறைய இருக்கும் படம்..("I'll make him an offer which he cannot refuse"...என்ன offer தெரியுமா?
"either your sign or brain will be in the contract") சூப்பர் படம்...உண்மையிலேயெ அசந்துட்டேன்... எப்படியாவது அத எடுத்து பாத்திடுங்க..DVD with subtitles is a must:-).. பார்ட் 1, 2 - அருமையா இருக்குது..பார்ட் 3 சரி இல்லன்னு கேள்விபட்டேன்..

அப்புரம் எனக்கு பிடிச்ச சில படங்கள்.
Men of Honour.
A Beautiful Mind..
Meet the Parents.
Life is Beautiful.
(இந்த படத்து காமடிய ஒரு விஜய் படத்துல பக்கலாம்..ஆனா படம் பக்கா சோகப் படம்..)
அப்புரம் "Win with willy(dont know the name is correct)"ன்னு ஒரு படம்.. ஒரு நல்லவன் அரசியல்வாதி (நம்ம ஊர் அரசியல்வாதி மாதிரி) ஆகர கதை..super movie.. old B/W movie..

Broken Arrow
Air Force One
Rocky
நல்லா இருக்கும் பாருங்க..

நாகை சிவா said...

//two are not my kind of movies//
CT, அந்த இரண்டில் நீங்கள் The Others பார்க்கலாம். அது முற்றிலும் வித்தியாசமான படம்.

நாகை சிவா said...

//அந்த இந்தி படத்தை பத்தி ஒன்னுமே சொல்லலையே.......:)))
மின்னல் அது என்ன அந்த என்ற வார்த்தைக்கு ஒரு போல்ட் பண்ணி இருக்க.....
ஆங்கில படமாவது ஏதோ கொஞ்சம் புரிந்தது. அது வெறும் படம் தான். பாக்கனுமேனு பாத்தேன்.
படம் பெயர் - Taxi No 9211
நானா பட்டேகர், ஜான் ஆபிரகாம் நடிச்ச படம்.
வேணுமுனா சொல்லுங்க அந்த படத்தின் விமர்சனத்தையும் போட்டுடலாம்.
என்ன சொல்லுறீங்க

நாகை சிவா said...

//அய்ய்... நமக்கு ஒரு கூட்டாளி இங்க இருக்கார்...குட்..குட்..//
ஹமீது, நீயும் நம்ம செட்டு தானா, சந்தோஷமய்யா சந்தோஷம்.

என்னய்யா, நீ பாட்டுக்கு ஏகப்பட்ட படமா அடுக்கிட்டே போற.... இத எல்லாம் நான் இந்த ஜென்மத்தில் பார்க்க முடியும் தோணல....

God Father பார்க்கனும், பாட்டு எல்லாம் நல்லா இருக்கு. அது சரி நீ எந்த God Father சொல்லுற.....

மனதின் ஓசை said...

//என்னய்யா, நீ பாட்டுக்கு ஏகப்பட்ட படமா அடுக்கிட்டே போற.... இத எல்லாம் நான் இந்த ஜென்மத்தில் பார்க்க முடியும் தோணல....//

அதிகம் இல்ல ஜென்டில்மேன்... 3- 4 தான்..:-) எங்கயாவது எப்பயாவது கிடைக்கும்..(இந்த henry மாதிரி இன்னொரு ...ரி கிட்ட மாட்டாமலா போயிடுவீங்க?) பாருங்க.. நல்லா இருக்கும்... பாத்துட்டு சொல்லுங்க..

//God Father பார்க்கனும், பாட்டு எல்லாம் நல்லா இருக்கு. அது சரி நீ எந்த God Father சொல்லுற..... //

சிவா...சத்தியமா இத எதிர்பார்த்தேன்... பின்னூட்டம் போடறப்பவே "லொல்லு வாணாம் இது ஆங்கில Godfather.. 1970-ஸ் ல வந்ததுன்னு" சொல்லனும்னு நினைச்சேன்... மறந்துட்டேன்...


என்ன..பாக்க மாட்டீங்களா? offer வேனுமா? :-)

மனதின் ஓசை said...

போன பின்னூட்டத்துல மறுபடியும் ஒரு தப்பு பன்னிட்டேன்... அப்புரமா சொல்றேன்.. :-)

நாகை சிவா said...

//இதென்னடா கொடுமை? ஆப்பு வக்கற ஃபுல் ரைட்ஸ குத்தகைக்கு எடுத்துள்ள உங்களுக்கே ஆப்பா?//
ஆமாங்க வேதா, இப்ப அடிக்கடி ஆப்பு வாங்க வேண்டியது இருக்கு. இருந்தாலும் உங்கள மாதிரி பெரியவங்க ஆசிர்வாதத்தால் அதில் இருந்து தப்பித்து விடுகின்றேன்.

//செட் டாப் பாக்ஸ் வச்ச ஆப்பு எந்த ஆங்கில் சானலும் வராது.:( //
வேதா, நம்ம பதிவுக்கு இப்ப எல்லாம் அரசியல் பேசுவது கிடையாது. நீங்க ஆரம்பித்து வைக்காதீங்க. போலிஸ் வேற அடிக்கடி வந்து பயம் காட்டுறாங்க.

கோவி.கண்ணன் said...

//ஹு... தல படம்ல., படம் எப்படி... தேறுதா....//
என்னது தேறுதா ? வாருது... அம்புட்டு பணத்தையும் வாருதுங்க அப்பு... சூபரங்களே சுருண்டுடுவாக போல. ஆத்தி விசுலு என்ன , ஆட்டம் என்ன ... பய புள்ளைக்கு திஷ்டி சுத்தி போடனுமப்பு

நாகை சிவா said...

//இந்த henry மாதிரி இன்னொரு ...ரி கிட்ட மாட்டாமலா போயிடுவீங்க?)//
ஹி...ஹி... அப்படி எதாவது மாட்டானா தான் நாங்க ஆங்கில படம் பாப்போம்.....

//என்ன..பாக்க மாட்டீங்களா? offer வேனுமா? :-) //
புரியலையே நீங்க எந்த offer பத்தி பேசுறீங்க

மனதின் ஓசை said...

//புரியலையே நீங்க எந்த offer பத்தி பேசுறீங்க //
அதுதான் தப்பு பன்னிட்டேன்ன்னு சொன்னேன்..உஙக்ளுக்கு அந்த offer கொடுக்க முடியாதுதான்.. :-)

கப்பி | Kappi said...

சிவா..

நேற்று 'Los Otros'-உம் பாத்தாச்சு..

ஒரு பேய் படத்தில் இப்படி ஒரு பொயட்டிக்கான க்ளைமேக்ஸ்!!!

அதிலும் ஒரு வசனம் அப்படியே என் மனதில் நின்றுவிட்டது...

அந்த வேலை செய்யும் பெண் தலைவியிடம் சொல்லும் வசனம் :

"sometimes when you leave a place it is like its there with you all the time"

ஒரே ஃபீலிங்ஸ் தான் :((

நாகை சிவா said...

//போன பின்னூட்டத்துல மறுபடியும் ஒரு தப்பு பன்னிட்டேன்...//
என்னா அது, என்ன ஜென் டில் மேன் சொன்னதா????

இல்ல லொள்ளுக்கு லொல்லுனு சொல்லி இருக்கீங்க அதுவா?????

நாகை சிவா said...

//அம்புட்டு பணத்தையும் வாருதுங்க அப்பு... சூபரங்களே சுருண்டுடுவாக போல. ஆத்தி விசுலு என்ன , ஆட்டம் என்ன ... பய புள்ளைக்கு திஷ்டி சுத்தி போடனுமப்பு //
வாரட்டும், வாரட்டும்.
இருப்பது ஒரு சூப்பர் தான், அவரு சுருட்ட எல்லாம் முடியாது.
வேற யாரையாவது சுருட்ட சொல்லுங்க. இங்க வேலைக்கு ஆகாது.
சுத்தி போடுங்க, ரொம்ப நாளுக்கு அப்புறம்... சுத்துங்க் சுத்துங்க.

நாகை சிவா said...

//அதுதான் தப்பு பன்னிட்டேன்ன்னு சொன்னேன்..உஙக்ளுக்கு அந்த offer கொடுக்க முடியாதுதான்.. :-) //
என்ய்யா, நான் அப்படி என்ன தப்பு பண்ணினேன். அந்த offer வாங்க முடியாத அளவுக்கு....
பெரியவங்க, நீங்க சொன்னா திருத்திக்குறேன்....

Anonymous said...

ஆஹா நிறைய திகில் படங்கள சொல்லியிருக்கீங்க...Phone booth, The Others கண்டிப்பாய் பாக்கனும்னு தோனுது.

உங்களுக்கு கிடைச்ச மாதிரி எனக்கும் இரவல் கொடுக்கிறதுக்கு ஒரு அம்மணியத் தேடிக்கிட்டு இருக்கேன். :))

நாகை சிவா said...

//sometimes when you leave a place it is like its there with you all the time"

ஒரே ஃபீலிங்ஸ் தான் :(( //
பீல் பண்ணுனது போதும், என்ன பீல் பண்ணுன தமிழ சொல்லிட்டு போ...

அது சரி, நீ எப்படி, மொழி பெயர்ப்பாளர் வச்சி படம் பாப்பியா, இல்ல சப்-டைட்டில் தானா.....

நாகை சிவா said...

//...Phone booth, The Others கண்டிப்பாய் பாக்கனும்னு தோனுது.//
கண்டிப்பாக, மிஸ் பண்ணக் கூடாத படங்கள்.

//உங்களுக்கு கிடைச்ச மாதிரி எனக்கும் இரவல் கொடுக்கிறதுக்கு ஒரு அம்மணியத் தேடிக்கிட்டு இருக்கேன். :)) //
இது எல்லாம் ரொம்ப சொல்லிட்டேன். வீட்ல சரியா கண்டிப்பது இல்லனு நினைக்கிறேன். அம்பி, இத எல்லாம் பாக்க மாட்டியா, அண்ணிகிட்ட போட்டுக் குடுக்க மாட்டிய்யா

Syam said...

பங்காளி எங்கயோ போய்ட்ட...அது என்னமோ தெறியல இந்த சன் டிவி கனெக்சன் வாங்குனதும் வாங்குனேன்..இங்கிலீசு படம் பார்த்தே ரொம்ப நாளாச்சு(இல்லனா மட்டும் பார்த்தா புரிய போகுதா)...நீ சொல்றத பார்த்தா இந்த போன் பூத் நல்லா இருக்கும் போல இருக்கு...பார்க்கறேன்.. :-)

Syam said...

//அந்த இந்தி படத்தை பத்தி ஒன்னுமே சொல்லலையே.......:))) //

அதுக்கு subtitle போடலயோ :-)

நாகை சிவா said...

//பங்காளி எங்கயோ போய்ட்ட//
எங்கயும் போல இங்கன தான் இருக்கேன்.

//இல்லனா மட்டும் பார்த்தா புரிய போகுதா)...//
புரிந்தால் சரி....

//போன் பூத் நல்லா இருக்கும் போல இருக்கு...பார்க்கறேன்.. :-) //
பாரு பங்கு, நல்லா தான் இருக்கு.

நாகை சிவா said...

////அந்த இந்தி படத்தை பத்தி ஒன்னுமே சொல்லலையே.......:))) //

அதுக்கு subtitle போடலயோ :-) //
என்ன பங்கு, இப்படி கால வாருர...
சப்-டைட்டில் போடல, சுத்தி ஒரு 3 வட இந்தியர்கள் வர்கார்ந்து பார்த்தார்கள், அவர்கள் சிரிக்கும் போது நானும் சிரித்து, அவங்க உச் கொட்டும் போது நானும் கொட்டி ஒரு வழியா படத்த பார்த்துட்டேன்.
வேணுமுனா சொல்லு அந்த படத்தின் விமர்சனத்தையும் எழுதிடலாம்.

கப்பி | Kappi said...

//பீல் பண்ணுனது போதும், என்ன பீல் பண்ணுன தமிழ சொல்லிட்டு போ...//

யோவ்..ஏதோ நல்ல டயலாக்கா இருக்கு..ஆனா நமக்கு புரிய மாட்டேங்குதேன்ற பீலிங்குய்யா..

உன்கிட்ட சொன்னா யாருகிட்டயாவது கேட்டு சொல்லுவன்னு பாத்தா திரும்ப என்கிட்டயே அர்த்தம் கேக்கற..

//அது சரி, நீ எப்படி, மொழி பெயர்ப்பாளர் வச்சி படம் பாப்பியா, இல்ல சப்-டைட்டில் தானா..... //

இரண்டுமே இருந்தாதான் படம் பாக்கவே ஆரம்பிப்பேன்..ஹி ஹி ஹி..

நாகை சிவா said...

//இரண்டுமே இருந்தாதான் படம் பாக்கவே ஆரம்பிப்பேன்..ஹி ஹி ஹி.. //
நம்ம சாதிக்காரன் என்பதை அடிக்கடி நிருபிக்குற கப்பி.

//உன்கிட்ட சொன்னா யாருகிட்டயாவது கேட்டு சொல்லுவன்னு பாத்தா திரும்ப என்கிட்டயே அர்த்தம் கேக்கற..//
அம்புட்டு தானே கேட்டு சொல்லிட்டா போச்சு. ஆனா என்ன சொல்லுறேனோ அத நம்பனும், அப்புறம் வம்பு பண்ணக் கூடாது.

Nakkiran said...

நீங்கள் சொன்ன 4 படங்களும் பார்த்துள்ளேன்... நன்றாகத்தான் இருக்கும்...

நாகை சிவா said...

கப்பி, உனக்காக

sometimes - சில நேரம்
When - எப்ப
you - நீ
leave - விடுமுறை
a place - ஒரு இடம்
it --அது
is like - மாதிரி
its there - அது இங்க
with you - உன்னோட
all - எல்லாம்
the time - நேரம்

சேர்த்து எழுதுனா சரியா வரல, நீயே சேர்த்து படிச்சுக்கோ!

கப்பி | Kappi said...

தவறு..திருத்திக் கொள்ளுங்கள்!!!

//its there - அது இங்க//

there-னா "அங்க" தானே??

என்ன இப்படி ஏமாத்தப் பாக்கறீயளே??

இப்படி அழுகாச்சி ஆட்டம் ஆடக் கூடாது..தெரியலன்னா என்னை மாதிரி ஒத்துக்கனும்....

Syam said...

//அவர்கள் சிரிக்கும் போது நானும் சிரித்து, அவங்க உச் கொட்டும் போது நானும் கொட்டி ஒரு வழியா படத்த பார்த்துட்டேன்//

இப்பிடித்தேன் நான் இங்கிலீசு படம் பார்ப்பேன்...நீ அத இந்திக்கு யூஸ் பன்ற நடத்து பங்கு.. :-)

சீனு said...

//ஹு... தல படம்ல., படம் எப்படி... தேறுதா....//

தேறுதா-வா? இங்க நேத்து தேவியிலே பார்த்தேன். குடும்பம் குடும்பமா, குழந்தைகளோட வந்து பாத்துட்டு போறாங்க. உண்மையிலே இது ஒரு trend setter படம்.

//phonebooth பாத்து இருக்கேன்... அதையே ஒரு தமிழ் படத்தில கொஞ்ஜம் (10 நிமிஷம்) உபயோகப்படுத்தி இருப்பங்க.. சரத்குமர் படம்னு நினைக்கிறேன்.. சரியா தெரியல...பேரும் ஞாபகம் இல்ல..
//அது தமிழில் 'சாணக்யா'.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
இது போன்று ஒரு படம் தமிழில் வர வேண்டும்.
///

எனக்கும் இதே ஆசைதான் ஆனா தமிழ்ல இது மாதிரி படம் வந்தா மக்கள் ஏத்துப்பாங்களா? புரியாத புதிர், சாணக்யா( பழைய கமல் படம் ) என்று பல உதாரணங்களைச் சொல்லலாம். நமக்கு காதல், காமெடி தான் கரெக்டு. ஹாலிவுட் படத்துக்கு இருக்கும் மார்க்கெட் நமக்கு எப்பவுமே கிடைக்காது அது கிடைக்காத இது போன்ற படங்கள் எதிர்பார்க்க முடியாமான்னு தெரியல...

நாகை சிவா said...

//நீங்கள் சொன்ன 4 படங்களும் பார்த்துள்ளேன்... நன்றாகத்தான் இருக்கும்... //
வாங்க கீரரே! நீங்க வந்தை பாத்தவுடன் ஏதும் இந்த பதிவில் பொருட்குற்றம் கண்டுபிடித்து சொல்வீர்கள் என்று நினைத்தேன்.
ஏதும் இல்லையா?

நாகை சிவா said...

////its there - அது இங்க//

there-னா "அங்க" தானே??

என்ன இப்படி ஏமாத்தப் பாக்கறீயளே//
ஏலேய் கப்பி, கண்ணுல விளக்கெண்ணை ஊத்திக்கிட்டு பாத்தியா, கொஞ்சம் கூட அசர விட மாட்டேங்கிறேங்களே.

சரி, இத தவிர மத்தது எல்லாம் சரி தானே?

நாகை சிவா said...

//தேறுதா-வா? இங்க நேத்து தேவியிலே பார்த்தேன். குடும்பம் குடும்பமா, குழந்தைகளோட வந்து பாத்துட்டு போறாங்க. உண்மையிலே இது ஒரு trend setter படம்.//
ஆஹா, சந்தோஷமா இருக்கு. பார்க்கலாம் நம்ம தமிழ் திரைப்படத் துறை இந்த மாற்றத்தை எப்படி உள்வாங்கி கொள்கின்றார்கள் என்று...


//அது தமிழில் 'சாணக்யா'. //
அந்த படம் நானும் பாத்து இருக்கேன். ஆட்டோ டரைவரா இருப்பாரே அந்த படம் தானே. நல்ல காமெடி படங்க ;)

நாகை சிவா said...

//என்னது பெரியவங்களா?இப்படி எல்லாம் பேசி உங்க வயச குறைச்சுக்க முயற்சிப் பண்ணாதீங்கப்பு:)//
அட என்னங்க, உங்களோடயையும், அம்பி உடனும் பெரிய ரோதனையா போச்சு, வேணுமுனா உங்க இரண்டு பெயருக்கும் என்னோட Birth cer, ration card, பால் கார்டு.... எல்லாத்தையும் அனுப்புறேன், அத பாத்த பிறகாவது நான் சின்ன பையன் தான் என்பதை ஒத்துக்கோங்க.

////வேதா, நம்ம பதிவுக்கு இப்ப எல்லாம் அரசியல் பேசுவது கிடையாது//
இதுக்கே இப்படி சொல்டீங்க. அப்ப சங்கு தான் கவலப்படாதீங்க:) //
அது உள்குத்துக்கு சொன்னது. உங்களுக்கு புரியாது.
சங்கு பத்தி எல்லாம் நாம என்னிக்குமே கவலைப்பட்டது கிடையாது. ஏன்னா நாமளே இங்க பல பேருக்கு அத தானே செய்துக்கிட்டு இருக்கோம்.
;)

நாகை சிவா said...

//எனக்கும் இதே ஆசைதான் ஆனா தமிழ்ல இது மாதிரி படம் வந்தா மக்கள் ஏத்துப்பாங்களா? புரியாத புதிர், சாணக்யா( பழைய கமல் படம் ) என்று பல உதாரணங்களைச் சொல்லலாம்.//
நான் எல்லாரும் இது போல பண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. அப்ப அப்ப இது மாதிரி ஒரு சில படங்கள் வந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்று சொல்கின்றேன். அந்த திறமை நம் இயக்குனர்களிடம் உண்டு என்பது என் எண்ணம். பேசும் படம் ஒரு சிறந்த உதாரணம்.

// நமக்கு காதல், காமெடி தான் கரெக்டு.//
உண்மை தாங்க, நமக்கு எப்பவும் நம் உணவை போலவே ஒரு படத்தில் எல்லாமே இருக்க வேண்டும்.(கதம்பம்)

//ஹாலிவுட் படத்துக்கு இருக்கும் மார்க்கெட் நமக்கு எப்பவுமே கிடைக்காது அது கிடைக்காத இது போன்ற படங்கள் எதிர்பார்க்க முடியாமான்னு தெரியல... //
அந்த அளவுக்கு இல்லாட்டியும், நம் படங்கள் இப்பொழுது பெரும்பாலும் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அடைகின்றது. இதை நாம் உபயோகப்படுத்திக் கொண்டு தமிழ் சினிமா உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

மனதின் ஓசை said...

சிவா...புரியாத படத்த போட்டு 50+ வாங்கியாச்சா? :-) சீக்கிரம் 100 தொட வாழ்த்துக்கள்...

நாகை சிவா said...

//சிவா...புரியாத படத்த போட்டு 50+ வாங்கியாச்சா? :-)//
எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான். நம்மாள எதுக்கு ஆசைப்படுவது இல்ல. நடப்பது நடக்குட்டும்.
அம்புட்டுத் தான்

மனதின் ஓசை said...

//நம்மாள எதுக்கு ஆசைப்படுவது இல்ல//

இது தெரியாதா சிவா?..தனியா சொல்லனுமா என்ன? எல்லாம் நம்ம கை மீறி நடக்கிறதுதானே?

//நடப்பது நடக்குட்டும். //
:-)

நாகை சிவா said...

//தனியா சொல்லனுமா என்ன? எல்லாம் நம்ம கை மீறி நடக்கிறதுதானே? //
ஹி....ஹி....

//நடப்பது நடக்குட்டும்//
இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

ambi said...

//உங்களுக்கு கிடைச்ச மாதிரி எனக்கும் இரவல் கொடுக்கிறதுக்கு ஒரு அம்மணியத் தேடிக்கிட்டு இருக்கேன். //
he hee, DVD vanga mattum thane ammaniyaa thedareenga anna?

//அம்பி, இத எல்லாம் பாக்க மாட்டியா, அண்ணிகிட்ட போட்டுக் குடுக்க மாட்டிய்யா //
he hee, ethuku siva, nerlaye varaanga intha month endla, nallaa "narayana! narayana!" velai paathutaa pochuu.. :)

சீனு said...

//அந்த படம் நானும் பாத்து இருக்கேன். ஆட்டோ டரைவரா இருப்பாரே அந்த படம் தானே. நல்ல காமெடி படங்க ;)//
நீங்க வடிவேலு காமெடி சொல்லுரீங்களா? இல்ல மொத்த படமே காமெடீன்னு சொல்லுரீங்களா?

நாகை சிவா said...

//he hee, ethuku siva, nerlaye varaanga intha month endla, nallaa "narayana! narayana!" velai paathutaa pochuu.. :) //
பாத்து பதமா கவனிச்சு அனுப்பு அம்பி. சின்னப் பசங்க நாமலே அமைதியா இருக்கோம், வயசுல மூத்தவர் அவர் இது போல எல்லாம் செய்யலாமா?;)

பொன்ஸ்~~Poorna said...

நாலு படம் பார்த்ததுக்கு அறுபது பின்னூட்டமா? சிவா, உன் ரேஞ்சு இப்போ தாம்பா தனீஈஈஈஈஈ யாய்டுச்சு!!!
நம்ம எல்லாம் சப் டைட்டில் போட்டாக் கூட ஆங்கிலப் படம் பார்க்காத தமிழ் ஆர்வலராக்கும்.. எப்பவாச்சும் யாராவது நண்பர், "புரியாத இடத்துல நான் கதை சொல்றேன்ன்னு" சொன்னா மட்டும் தான் ஆங்கிலப் படத்துக்கு தலையாட்டுறதே.. அப்படி நான் பார்த்த ஆங்கிலப் படங்கள்: The Jurassic Park, Lost World, Congo, Day after Tomorrow, Troy, Gladiator, Harry Potter III அம்புட்டுட்தேன்..

ம்ம்ம்.. நடத்துங்க.. இந்திப் படம் என்னன்னு சொல்லவே இல்லையே? பின்னூட்டத்துல எங்காச்சும் சொல்லி இருந்தா, சாரி, படிக்கலை :)

சீக்கிரம் ஊருக்குப் போய் விஜய் டீவில இங்லீஸ் படம் பார்க்கணும்... ம்ம்ம்.

கதிர் said...

சிவா,

அஞ்சுல ஒண்ணுகூட பாக்கலியே. இனிமேல்தான் பார்க்கணும். 5 DVD பார்சல்ல அனுப்புங்க.

அன்புடன்
தம்பி

Anonymous said...

அய்யா...டி.வி.டி அம்மணிகிட்டேர்ந்து கடன் வாங்கிறது தப்பா?? இதுக்கெதுக்கு போட்டுக்குடுக்கச் சொல்றீங்க. நான் ரொம்ப நல்ல பையன்சார். இதுல அம்பிய வேற கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கிறீங்களே...நியாயமா? அவனே எப்ப எப்படி பத்தவைக்கலாம்ன்னு இருக்கான்...ஹூம்ம்

நாகை சிவா said...

//நீங்க வடிவேலு காமெடி சொல்லுரீங்களா? இல்ல மொத்த படமே காமெடீன்னு சொல்லுரீங்களா?//
ஹிஹி... இரண்டையும் தான்.
நான் சொல்வது சரி தானே?

நாகை சிவா said...

//எதுக்குங்க இவ்ளோ அனுப்பனும்? உங்க கிரெடிட் கார்ட் மட்டும் போதும்(பாலன்ஸ் இருக்கனும்) ஏன் அம்பி அது போதாது? //
நம்மகிட்ட கிரெடிட் கார்ட் கிடையாதுங்க. நைனா கிரெடிட் கார்ட் எல்லாம் வாங்க கூடாதுனு சொல்லிட்டார். கையில காசு இருந்தா செலவு பண்ணு, கடன் வாங்கி எல்லாம் செலவு பண்ண வேண்டாம் வேற சொன்னார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று நினைப்பவன் நான். அதை மீறுவேனா?

அது சரி, கிரெடிட் கார்டுல எதுக்கு பேலன்ஸ் இருக்கனும். தெளிவா தான இருக்கீங்க?

நாகை சிவா said...

//நம்ம எல்லாம் சப் டைட்டில் போட்டாக் கூட ஆங்கிலப் படம் பார்க்காத தமிழ் ஆர்வலராக்கும்.. //
நானும் அப்படி தாங்க, இங்கு பாக்கும்படி ஆனதுக்கு சூழ்நிலை தான் காரணம். :((

//புரியாத இடத்துல நான் கதை சொல்றேன்ன்னு" //
அது என்ன தனியா புரியாத இடத்தில், நமக்கு ஆரம்பத்தில் இருந்தே அப்படி தானே?

//இந்திப் படம் என்னன்னு சொல்லவே இல்லையே? பின்னூட்டத்துல எங்காச்சும் சொல்லி இருந்தா, சாரி, படிக்கலை :) //
ஆமாங்க, நீங்க ரொம்ப பிஸினு எனக்கு நல்லாவே தெரியும்.

//ஊருக்குப் போய் விஜய் டீவில இங்லீஸ் படம் பார்க்கணும்...//
ஹிஹி.... மீ டு. டப்பிங் தான் நமக்கு சரி.;)

நாகை சிவா said...

//அஞ்சுல ஒண்ணுகூட பாக்கலியே. இனிமேல்தான் பார்க்கணும். 5 DVD பார்சல்ல அனுப்புங்க.//
தம்பி அண்ணன், அட்ரஸ் சொல்லுங்க அண்ணன், அனுப்பி வைத்து விடுவோம்.

நாகை சிவா said...

//டி.வி.டி அம்மணிகிட்டேர்ந்து கடன் வாங்கிறது தப்பா?? //
தப்பே இல்ல ;)

//நான் ரொம்ப நல்ல பையன்சார்.//
ஊருல சொன்னாங்க.

பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.
அல்வாவுடன் திரும்பி வரவும். ;)

கதிர் said...

சிவா

//அஞ்சுல ஒண்ணுகூட பாக்கலியே. இனிமேல்தான் பார்க்கணும். 5 DVD பார்சல்ல அனுப்புங்க.//
//தம்பி அண்ணன், அட்ரஸ் சொல்லுங்க அண்ணன், அனுப்பி வைத்து விடுவோம். //


எழுதிக்குங்க

நம்பர் 6,
விவேகானந்தர் தெரு
துபாய் குறுக்கு சந்து
துபாய்.
பஸ்டாண்ட் பக்கத்திலங்கோ
பார்ஸல் சரியா அனுப்பிடுங்க சிவா
ஹி ஹி ஹி

அன்புடன்
தம்பி

நாகை சிவா said...

//பார்ஸல் சரியா அனுப்பிடுங்க சிவா//
அனுப்பிட்டேன் தம்பி அண்ணன்
:)))

நாகை சிவா said...

//அது ஒன்னும் இல்லீங்க சொற்குற்றம் ஆயிடுச்சு, //
பராவில்லை விடுங்க, பொது வாழ்வில் இது எல்லாம் சகஜம்.....

பொன்ஸ்~~Poorna said...

சிவா, இன்னும்மாஆ இது ஓடிகிட்டு இருக்கு?!!!!

கலக்கறீங்கய்யா.. இலவச கொத்தனாருக்கு அப்புறம் நீர் தான்.. கொத்தனாருக்கேத்த அஸிஸ்டன்ட் நீங்க தான்....

பொன்ஸ்~~Poorna said...

//நம்பர் 6,
விவேகானந்தர் தெரு
துபாய் குறுக்கு சந்து
துபாய்.
பஸ்டாண்ட் பக்கத்திலங்கோ
//
அந்த ஆப்பக் கடை மேல்மாடிய விட்டுட்டீங்க போலிருக்கு?!! ;)

மனதின் ஓசை said...

ம்ம்... இந்த பதிவு இன்னும் உயிரோடதான் இருக்குதா?

//பின்ன ஒரு சினிமா விமர்சனத்துக்கு இவ்ளோ பின்னூட்டம் வந்தா அதுல என் பின்னூட்டத்தை தேடி கண்டுப்பிடிச்சு படிக்கறதுக்குள்ள கொஞ்சம் கண்ண கட்டிடுச்சு, அதான்:)
//
உங்களுக்குமா வேதா?

சிவா ...
72 தானா? 100 அடிப்பீங்கன்னு பாத்தேன்....
ஏதோ என்னால் ஆன உதவி... எதுவும் சுவராஸ்யமா சொல்லி மெற்கொண்டு ஆக வேண்டியத பாருங்க...

ஆமா.. இந்த பின்னூட்ட போலிஸ், எழுத்துப்பிழை எல்லாம் இங்க வரலயா? வந்தா அதுனாலயே கொஞ்ஜம் count கூடும் இல்ல? :-)
:-)

மனதின் ஓசை said...

//அந்த ஆப்பக் கடை மேல்மாடிய விட்டுட்டீங்க போலிருக்கு?!! ;) //

அத பார்த்திபன் படத்துல சொல்லலியே?
:-)

நாகை சிவா said...

//72 தானா? 100 அடிப்பீங்கன்னு பாத்தேன்....//
அப்படியா சொல்லுறிங்க.
தனியா ஆடுவதற்கு கஷ்டமா இருக்கு. பாப்போம். நடப்பது நடக்கட்டும்.

//இந்த பின்னூட்ட போலிஸ், எழுத்துப்பிழை எல்லாம் இங்க வரலயா? //
அவங்க எல்லாம் இங்க வர மாட்டாங்க. அவங்க ரேஞ்சே வேற. பெரிய பெரிய ஆட்களை மட்டும் தான் கண்டுப்பாங்க.

நாகை சிவா said...

//சிவா, இன்னும்மாஆ இது ஓடிகிட்டு இருக்கு?!!!!//
இல்லங்க அடுத்த பதிவே போட்டாச்சு. பாக்க தான் ஆள் இல்லை.

நாகை சிவா said...

//அந்த ஆப்பக் கடை மேல்மாடிய விட்டுட்டீங்க போலிருக்கு?!! ;) //
அது இல்லாமலே போயிடும், தம்பி அங்கன ரொம்ப பேமஸ் ஆன ஆளு. கிடைத்து விட்டதுனு வந்து பதில் சொல்லுவார் பாருங்க

நாகை சிவா said...

//அத பார்த்திபன் படத்துல சொல்லலியே?
:-) //
ஒ... இந்த அட்ரஸ் பாத்திக்கும் தெரியுமா?

மனதின் ஓசை said...

//அவங்க ரேஞ்சே வேற. பெரிய பெரிய ஆட்களை மட்டும் தான் கண்டுப்பாங்க.//

சிவா. இப்படி ஆண்டவன் எல்லா தன்னடக்கத்தையும் மொத்தமா உங்களுக்கே கொடுத்திடானே...:-)

மனதின் ஓசை said...

//தனியா ஆடுவதற்கு கஷ்டமா இருக்கு. //

அதுதான் வந்துட்டோமில்ல....ஆடிடுவோம்...

//இல்லங்க அடுத்த பதிவே போட்டாச்சு. பாக்க தான் ஆள் இல்லை//

என்ன கொடுமை சார் இது..(யார் ஸ்டைல்ல படிக்கனும்னு சொல்லனுமா என்ன?)

தனி ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இல்லையெனில் blogspotஐ block பன்னிடுவோம்..
(அழித்திடுவோம் - னு சொல்லலாம்னு பாத்தா நம்மள தீவிரவாதின்னு சொல்லிடுவாங்களோன்னு பயமா இருக்கு)

நாகை சிவா said...

//இப்படி ஆண்டவன் எல்லா தன்னடக்கத்தையும் மொத்தமா உங்களுக்கே கொடுத்திடானே...:-)//
இந்த புகழ்ச்சி மாலையையும் தன்னடக்கத்துடன் ஏற்றுக் கொள்கின்றேன்.
:)

நாகை சிவா said...

//அதுதான் வந்துட்டோமில்ல....ஆடிடுவோம்...//
அப்படிய்யா சொல்லுறீங்க

//என்ன கொடுமை சார் இது..(யார் ஸ்டைல்ல படிக்கனும்னு சொல்லனுமா என்ன?)//
நம்ம தல படத்துல வந்த டயலாக், எப்படி தெரியாம இருக்கும்

//தனி ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இல்லையெனில் blogspotஐ block பன்னிடுவோம்..//
சும்மா இருய்யா, இல்லாட்டி இந்த blog யை block பண்ணுனது நாம தான் சொல்லிட போறாங்க

மனதின் ஓசை said...

பொன்ஸ்.. Troy படம் எப்படி இருந்துச்சு? எனக்கு பிடிச்ச படம் அது.. அதுல ஒரு சீன்..(எத சொல்றேன்னு தெரியும் இல்லயா..அண்ணன் தம்பிக்காக விதிமுறையை மீறி கொலை பண்றது)...அது நியாயமா? பாசமா? அழுகுனி ஆட்டமா? அத எப்படி வெணாலும் சொல்லலாம் இல்ல..... எனக்கு பிடிச்ச சீன் அது...

//சும்மா இருய்யா, இல்லாட்டி இந்த blog யை block பண்ணுனது நாம தான் சொல்லிட போறாங்க//

சொன்னலும் சொல்லுவாங்கப்பூ.. நாம வேற ஒன்னும் தெரியாத அப்பாவியா இருக்கமா... (எதும் சேம் சைடு கோல் போட்டுதாடப்பூ)... கூசாம பழிய பொட்டுவாங்க.. சாக்கிரதையாத்தான் இருக்கோனும்..

அதே நேரத்துல இதையெல்லாம் படிச்சும் கண்டுக்காம போற கோடானு கோடி பேருக்கும் என் கடுமையான கன்டனங்களை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். :-)

இராம்/Raam said...

சிவா,
என்னா செஞ்சுரிக்கு குறி வெச்சிருக்காபல தெரியுது.

ரவி said...

வாய்ப்பு இருக்கு ராம்...குண்டு வச்சாரு...இப்போ படம் காட்டுறாரு...

நாகை சிவா said...

//நாம வேற ஒன்னும் தெரியாத அப்பாவியா இருக்கமா... (எதும் சேம் சைடு கோல் போட்டுதாடப்பூ)//
நீங்க மட்டும் இத சொல்லாம இருந்து இருந்தால் கண்டிப்பாக ஒரு கோல் போட்டு இருப்பேன் ;)

//படிச்சும் கண்டுக்காம போற கோடானு கோடி பேருக்கும் என் கடுமையான கன்டனங்களை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். :-) //
ஏன்...ஏன் இப்படினு கேட்டேன். நான் பாட்டுக்கு சிவனே தானே இருந்தேன். நீனா வந்து ஆசைக் காட்டிட்டு இப்படி கவுக்குறியே.

அது சரி, அடுத்த பதிவு எப்ப போடலாம் என்று எண்ணம்.

நாகை சிவா said...

//என்னா செஞ்சுரிக்கு குறி வெச்சிருக்காபல தெரியுது. //
நமக்கு இந்த குறி வைக்குறது எல்லாம் தெரியாதுப்பு. ஏதோ ஹமீது ஆசைப்படுறாரு, பாப்போம் அவர் ஆசை நிறைவேறுதா என்று....

நாகை சிவா said...

//வாய்ப்பு இருக்கு ராம்.//
அப்படியா சொல்லுர ரவி, சரி பார்ப்போம்.

//குண்டு வச்சாரு...இப்போ படம் காட்டுறாரு... //
ஆமாமய்யா, குண்டு வச்சு நாளாச்சு, சீக்கிரம் அடுத்த குண்டு வைக்கனும்.

இராம்/Raam said...

//நமக்கு இந்த குறி வைக்குறது எல்லாம் தெரியாதுப்பு. ஏதோ ஹமீது ஆசைப்படுறாரு, பாப்போம் அவர் ஆசை நிறைவேறுதா என்று.... //

இப்பிடியே எல்லாத்துக்கும் பதிலே போட்டு தமிழ்மணத்திலே இருக்குற மாதிரி செஞ்சுப்புட்டு அப்புறம் என்ன அதல்லாம் தெரியாதுன்னு மலுப்பல் வேலை..
இனிமே நானும் இந்த மாதிரியே பண்ண போறேன்.... :-)

பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸ்.. troy படம் எப்படி இருந்துச்சு? எனக்கு பிடிச்ச படம் அது.. அதுல ஒரு சீன்..(எத சொல்றேன்னு தெரியும் இல்லயா..அண்ணன் தம்பிக்காக விதிமுறையை மீறி கொலை பண்றது)...அது நியாயமா? பாசமா? அழுகுனி ஆட்டமா? அத எப்படி வெணாலும் சொல்லலாம் இல்ல..... எனக்கு பிடிச்ச சீன் அது...
//
ட்ராய் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது மனதின் ஓசை.. அதைப் பார்த்துட்டு வந்து அந்த வாரம் முழுவதும் ஒடிஸி முதலான கிரேக்க இலக்கியம், மிதாலஜில(தமிழில் என்ன?) அப்படியே மூழ்கிப் போய்ட்டேன்..
அந்த அண்ணனா நடிச்ச எரிக் பானாவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிடுச்சு.. எனக்குப் பிடிச்ச காட்சின்னா, எரிக்கும் ப்ராட்பிட்டும் ஒத்தைக்கொத்தை சண்டை போடும் காட்சி தான்... (சண்டைன்னாலே எனக்குப் பிடிக்கும்.. கேட்கணுமா ;) :) )

அப்புறம் தன் குழந்தைக்காக எரிக் ஒரு மரக்குதிரை செய்வாரே... அது எனக்கு ரொம்ப பேவரிட்..

பொன்ஸ்~~Poorna said...

//இனிமே நானும் இந்த மாதிரியே பண்ண போறேன்.... :-) //
இப்போ தான் ஒரு வருத்தப் படாத வாலிபருக்கான அடையாளங்கள் ராமிடம் தெரிய ஆரம்பிக்கின்றன... வளர்க..

நாகை சிவா said...

//இப்பிடியே எல்லாத்துக்கும் பதிலே போட்டு தமிழ்மணத்திலே இருக்குற மாதிரி செஞ்சுப்புட்டு அப்புறம் என்ன அதல்லாம் தெரியாதுன்னு மலுப்பல் வேலை..//
யோவ் அது எல்லாம் இல்லையா. ஒரு பின்னூட்டத்துக்கு ஒரு பதில். அம்புட்டு தான். வேற ஏதும் கிடையாது. இதுல மழுப்புவதற்கு ஏதுவும் இல்லை.

இராம்/Raam said...

//யோவ் அது எல்லாம் இல்லையா. ஒரு பின்னூட்டத்துக்கு ஒரு பதில். அம்புட்டு தான். வேற ஏதும் கிடையாது. இதுல மழுப்புவதற்கு ஏதுவும் இல்லை.//

அப்பிடியா நைனா....
சரி இப்பயே 93னு வந்திருச்சு... நூறண்ட போயிரலாம்.கிழே கணக்கை பாரு மாமே...
இது என்னோட கேள்வி:-93
உன்னோட பதில்:-94
அப்புறம் என்னோட கேள்வி:-95
அதுக்கு ஒன்னோட பதில்:-96
அப்புறம் என்னோட கேள்வி:-96
அதுக்கு ஒன்னோட பதில்:-96
இங்கே என்னா நடக்குதுன்னு யாரவது ஒருத்தொருட கேள்வி :- 97
அதுக்கு ஒன்னோட பதில்:-98
அப்புறம் என்னோட கேள்வி:-99
அதுக்கு ஒன்னோட பதில்:-100

எப்பிடி நூறு வந்திருச்சா.இப்பிடிதான் வாழணும் வாழ்க்கையை... ஹூம்... :-)

நாகை சிவா said...

//ட்ராய் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது மனதின் ஓசை.. அதைப் பார்த்துட்டு வந்து அந்த வாரம் முழுவதும் ஒடிஸி முதலான கிரேக்க இலக்கியம், மிதாலஜில(தமிழில் என்ன?) அப்படியே மூழ்கிப் போய்ட்டேன்.. //
பொன்ஸ் என்னங்க பேசுறீங்க. ஒன்னும் விளங்க மாட்டேங்குது.

//சண்டைன்னாலே எனக்குப் பிடிக்கும்.. கேட்கணுமா//
அது தான் உலகறிந்த விசயம் ஆச்சே.
நீங்க வேற தனியா சொல்லனுமா என்ன?

நாகை சிவா said...

//வருத்தப் படாத வாலிபருக்கான அடையாளங்கள் ராமிடம் தெரிய ஆரம்பிக்கின்றன... வளர்க.. //
ராம், பாத்தல, அப்படியே வருத்தப்படாம உன்னயே நல்லா டெவலப் பண்ணிக்கிட்டு சீக்கிரம் வந்து வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தில் சேருமாறு உன்ன அன்புடன் அழைக்கின்றேன்.

பொன்ஸ், சிட்டுக்குருவி வந்து கை குடுத்தீங்க. சினிமாவுக்கு நீங்க தான் கை கொடுக்குறீங்க. கூடிய சீக்கிரத்தில் தனி பதிவு நிச்சயம்.

நாகை சிவா said...

//இப்பிடிதான் வாழணும் வாழ்க்கையை... ஹூம்... :-)//
வாழ்க்கை வாழ்வதற்கு தானே. இருக்கும் வரை சந்தோஷ்மா இருந்து போக வேண்டியது தான்.
வாழு வாழ விடு. அம்புட்டுத் தான்.

//அப்பிடியா நைனா....சரி இப்பயே 93னு வந்திருச்சு..//
இல்ல நைனா, இத்தோட 98 ஆச்சு, இன்னும் ஒரு பின்னூட்டம் போட்டனு வையி அத வைச்சி 100 அடிச்சுடுவேன். நீ போடாட்டியும் நம்ம மக்கள் யாராச்சும் வருவாங்க. சோ நோ வொரிஸ் ;)

இராம்/Raam said...

//இப்போ தான் ஒரு வருத்தப் படாத வாலிபருக்கான அடையாளங்கள் ராமிடம் தெரிய ஆரம்பிக்கின்றன... வளர்க.. //

தாங்ஸ் பொன்ஸ்... உங்களை மாதிரி வயசான ஆளுங்கட்டு இருந்து வாழ்த்து வந்ததுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருப்பேன் போல....

சிவாக்கிட்டே இல்லை ஆனா... :-)

இராம்/Raam said...

//இன்னும் ஒரு பின்னூட்டம் போட்டனு வையி அத வைச்சி 100 அடிச்சுடுவேன்//

இல்லை அதுவும் நான்தான் நூறாடிக்க போறேன்.

பொன்ஸ்~~Poorna said...

என்ன சிவா.. இதுக்குப் போய் பீல் பண்ணலாமா.. எல்லாம் ஒரு கொடுக்கல் வாங்கல் தானே..

ஆனா,.. நான் எப்போவுமே எதிர்பார்ப்பில்லாம இருந்துக்குவேன்.. (இன்னுமொரு பங்கு ;) ) நூறுக்கு வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

//உங்களை மாதிரி வயசான ஆளுங்கட்டு இருந்து வாழ்த்து வந்ததுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருப்பேன் போல....//
அடியே உனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைனு நினைக்கிறேன். யானை காலில் தான் உன் வாழ்வு முடியனும் இருந்தா அத யாரால மாத்த முடியும்.

//சிவாக்கிட்டே இல்லை ஆனா..:-)//
புரியுற மாதிரி சொல்லுமா

நாகை சிவா said...

//இல்லை அதுவும் நான்தான் நூறாடிக்க போறேன். //
சந்தோஷம், உன் ஆசையை நான் ஏன் தடுக்க போறேன்.
நல்லா இரு

நாகை சிவா said...

//நான் எப்போவுமே எதிர்பார்ப்பில்லாம இருந்துக்குவேன்//
எதுக்கு இந்த உள்குத்து. நான் அங்கனவே சொல்லிட்டேனே. எதிர்பார்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்கின்றேன் என்று....

நீங்க வாழ்த்து சொன்ன நேரம், அமோகமாக அமைந்து விட்டது.
நன்றி எல்லாம் கிடையாது.....

மனதின் ஓசை said...

என்ன சிவா.. தூங்கிகிட்டு இருந்த நேரத்துல நூறு அடிச்சாச்சு போல இருக்கு.. வாழ்த்துக்கள்... எத்தனையாவது நூறு இது?

////(எதும் சேம் சைடு கோல் போட்டுதாடப்பூ)//
நீங்க மட்டும் இத சொல்லாம இருந்து இருந்தால் கண்டிப்பாக ஒரு கோல் போட்டு இருப்பேன் ;)//
உங்ககிட்ட எல்லாம் கை கொடுத்தாலும் கவனமா இருக்கனும்னு தெரியாதா என்ன?


//நீனா வந்து ஆசைக் காட்டிட்டு இப்படி கவுக்குறியே.//
நானா? கவுக்கறதா? சீ சீ.. உதவி தாங்க..... பாத்தீங்க இல்ல.. பயந்து போய் எல்லாரும் பின்னூட்டம் போட்டுட்டாங்க...:-)

மனதின் ஓசை said...

//அது சரி, அடுத்த பதிவு எப்ப போடலாம் என்று எண்ணம். //
நல்ல கேள்வி...பாக்கலாம்.. என் பொண்டாட்டி ஒரு வாரம் ஊருக்கு அனுப்ப சொல்றா..நிம்மதியா இருந்துட்டு வரேன்னு டயலாக் வேற..(இது உள்குத்தா, வெளிகுத்தா?)..அப்ப உக்காந்து மொத்தமா 4 - 5 பதிவு பொட்டுட வேண்டியதுதான்... -எங்க, எங்க ஓடறீங்க..இங்க வாங்க... ஹல்ல்லோஓஓஓஓ..

மனதின் ஓசை said...

//அது சரி, அடுத்த பதிவு எப்ப போடலாம் என்று எண்ணம். //
நல்ல கேள்வி...பாக்கலாம்.. என் பொண்டாட்டி ஒரு வாரம் ஊருக்கு அனுப்ப சொல்றா..நிம்மதியா இருந்துட்டு வரேன்னு டயலாக் வேற..(இது உள்குத்தா, வெளிகுத்தா?)..அப்ப உக்காந்து மொத்தமா 4 - 5 பதிவு பொட்டுட வேண்டியதுதான்... -எங்க, எங்க ஓடறீங்க..இங்க வாங்க... ஹல்ல்லோஓஓஓஓ..

மனதின் ஓசை said...

//(சண்டைன்னாலே எனக்குப் பிடிக்கும்.. கேட்கணுமா ;) :) )//

:-) நான் கேட்டனா?...

//பொன்ஸ் என்னங்க பேசுறீங்க. ஒன்னும் விளங்க மாட்டேங்குது.//

எனக்கும்தான்... ரொம்ப பேசறாங்க..படத்த பார்த்தமா.. விமர்சனம் எழுதி நூறுக்கு மேல பின்னூட்டம் வாங்கினமான்னு இல்லாம அது என்ன எலக்கியம் படிக்கிறது எல்லாம்.. சே சே..தப்பு.... தப்பு...

மனதின் ஓசை said...

//வாழு வாழ விடு. அம்புட்டுத் தான்.//
அப்படி இல்ல..
1.கலச்சிக்கோ...கலாய்க்க விடு...
2.(பின்னுட்டம்) போடு... (பதிலுக்கு) போட விடு..(புரியுதில்ல?)

//எல்லாம் ஒரு கொடுக்கல் வாங்கல் தானே.. //
இது இன்னும் தெளிவு..

இராம்/Raam said...

//அடியே உனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைனு நினைக்கிறேன். யானை காலில் தான் உன் வாழ்வு முடியனும் இருந்தா அத யாரால மாத்த முடியும்.//

சரிதான் விதி யாரை விட்டது.

நாகை சிவா said...

//தூங்கிகிட்டு இருந்த நேரத்துல நூறு அடிச்சாச்சு போல இருக்கு.. வாழ்த்துக்கள்... எத்தனையாவது நூறு இது?//
அதுக்கு தாங்க எப்பவும் விழித்து இருக்கனும் என்று சொல்லுறது.
இது இரண்டாவது நூறு.

//பயந்து போய் எல்லாரும் பின்னூட்டம் போட்டுட்டாங்க...:-)//
இது எல்லாம் பயந்து போட்ட பின்னூட்டம் இல்லங்க, பாசத்தில் போட்ட பின்னூட்டங்கள். நம்ம மேல அம்புட்டு பேருக்கும் அப்படி ஒரு பாசம்.

நாகை சிவா said...

//பொண்டாட்டி ஒரு வாரம் ஊருக்கு அனுப்ப சொல்றா..நிம்மதியா இருந்துட்டு வரேன்னு டயலாக் வேற..(இது உள்குத்தா, வெளிகுத்தா?)..//
இது உள்குத்தும் கிடையாது, வெளிகுத்து கிடையாது. நேர் குத்து. ஒன்னும் பண்ண முடியாது வாங்கி வந்த வரம் அப்படி.

எத்தன பதிவு வேணுமுனாலும் போடுங்க ஹமீது. கலக்கிடலாம்.

நாகை சிவா said...

/அது என்ன எலக்கியம் படிக்கிறது எல்லாம்.. சே சே..தப்பு.... தப்பு. //
அதான, அந்த தப்ப எல்லாம் நாம செய்வது கிடையாது. நீங்களும் செய்யாதீங்க ஹமீது.

நாகை சிவா said...

//சரிதான் விதி யாரை விட்டது. //
யாரை விடுடோதோ விடலயோ, உன்னை கண்டிப்பா விடாது.
வெயிட் பார் ஆப்பு

இராம்/Raam said...

//இது எல்லாம் பயந்து போட்ட பின்னூட்டம் இல்லங்க, பாசத்தில் போட்ட பின்னூட்டங்கள். நம்ம மேல அம்புட்டு பேருக்கும் அப்படி ஒரு பாசம்.//

செல்லம்,அழகுகண்ணே,அறிவுகொழுந்தேபுச்சு,சிவாகண்ணு பாசமா கூப்பிடதான் ஆசையாதான் இருக்கு.

ஙொங்யாலே உன்னோட நாரதர் வேலைய நினைச்சுதான் ஒரு பீலீங்...
எப்பிடியோ இ.கொ ரேஞ்சுக்கு முன்னேறியாச்சு... :-))))
நல்ல இரு மாப்பு, ஆனா வச்சுடாதே யாருக்கும் ஆப்பு...

நாகை சிவா said...

//ஙொங்யாலே உன்னோட நாரதர் வேலைய நினைச்சுதான் ஒரு பீலீங்...//
அப்படி என்ன பெரிசா ஒனக்கு நான் ஆப்பு வைச்சுட்டேன். சும்மா ஒரு தடவை உன் பதிவில் இருந்து ரவி இங்கன வந்து பாரு கூவினேன். அம்புட்டுத் தான். இன்னும் போக வேண்டியது எம்பட்டோ இருக்கு கண்ணா.

//எப்பிடியோ இ.கொ ரேஞ்சுக்கு முன்னேறியாச்சு... :-))))//
யோவ், எனக்கு நீ இப்ப ஆப்பு வைக்க பாக்குற பாரு. அவரு யாரு, அவரு ரேஞ்ச் என்ன. என்ன போயி அவரோட கம்பெர் பண்ணிகிட்டு. சீ சீ. அது எல்லாம் தப்பு.

சதுக்க பூதம் said...

சிவா, ஒரு change க்கு Constant Gardener என்ற படத்தை பாருங்களேன்(இதுக்கு முன்னாடி பாக்காட்டீனா)

நாகை சிவா said...
This comment has been removed by a blog administrator.
நாகை சிவா said...

வாங்க சதுக்க பூதம், நீங்க சொன்ன படம் இன்னும் பாக்கல, நாம் ரொமன்ஸ்ச தவிர எல்லா வகையான ஆங்கில படமும் பார்ப்பது உண்டுங்க. தலைப்பை வைத்து இது காமெடி வகையை சார்ந்தாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. சி.டி. கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கின்றேன்.

சதுக்க பூதம் said...

Comedy or Romance இல்லைங்க சிவா.அதை பார்த்தா அப்புறம் அந்த படத்தை வாழ்க்கையில மறக்க மாட்டிங்கள்