Wednesday, June 14, 2006

கலாமுக்கு ஒட்டு போடுவோம்!

MTV இன் யூத் ஐகான்-2006

திரு மணியன் அவர்கள் நம் மதிப்புக்குரிய ஜனாதிபதி. டாக்டர் அப்துல் கலாம் அவர்களை குறித்து ஒரு பதிவு இட்டு இருந்தார்கள். அந்த பதிவின் பின்னூட்டங்களை படிக்கும் போது திரு வவ்வால் அவர்களின் பின்னூட்ட மூலம் MTV இன் யூத் ஐகான்-2006 என்ற போட்டியை குறித்து அறிய முடிந்தது. அந்த போட்டியில் பரிந்துரைக்கப்பட்டு இருக்கும் நபர்கள்-

மகேந்திரசிங் தோணி - விளையாட்டு
ஜான் ஆபிரகாம் - சினிமா
விஜய் மல்லையா - தொழில்
அப்துல் கலாம் - அறிவியல்
அபகிஜீத் சாவந்து - இசை
நவஜோத் சித்து - தொலைக்காட்சி

இவர்களை குறித்து என் பார்வை

தோணி:
கிடைத்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்தி கொண்ட காரணத்திற்கு இவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் குறுகிய காலத்தில் கிரிக்கெட் உலகையே தன்னை நோக்க வைத்த பெருமை இவருக்கு உண்டு. இவரின் ஆரம்ப கால பேட்டிங்கை பார்த்த போது இவரை பின்ச் ஹிட்டராக மட்டும் தான் காண முடிந்தது. ஆனால் சமீபகாலமாக தான் ஒரு தேர்ந்த மட்டைவீச்சாளர் என நிருபித்து உள்ளார். இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளதால், பொருத்து இருந்து இவரை கவனிக்க வேண்டும்.

ஜான் ஆபிரகாம்:
பாலிவுட் கதாநாயகன். இன்றைய நவநாகரீக மங்கைகளின் கனவு நாயகன். ஆசியாவின் சிறந்த மாடல் என விருது வாங்கியவர். இதை தவிர சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.

மல்லையா:
சிறந்த தொழிலதிபர். எந்த துறையில் காலடி எடுத்து வைத்தாலும் அதில் வெற்றி காணும் வரை போராடும் குணம் கொண்டவர். தொழிலில் பல சாதனைகள் செய்து பெயர் பெற்றதை காட்டிலும், இவர் கொடுத்த விருந்துகளால் அடைந்த பிரபலம் அதிகம்.

அப்துல் கலாம்:
நம் நாட்டின் தற்பொதைய முதல் குடிமகன். சாதிக்க துடிக்கும் இன்றைய இளைஞர்களின் கனவு நாயகன். பல சாதனைகளை படைத்தவர், ஜனாதிபதி பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்ப் என்பன போன்ற பல மரபுகளை உடைத்து ஏறிந்தவர். விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், காமராஜர்க்கு பிறகு பொது வாழ்வில் என்னை கவர்ந்த சாதனை புருஷன். வாழும் வழிகாட்டி. இவரின் சில அரசியல் செயல்பாடுகளில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இன்றைய தேதியில் நம் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு இவரை தவிர எவரும் இல்லை.

அபிகிஜீத் சாவந்து:
இவரை பற்றி நான் கேள்வி பட்டது இல்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.

சித்து:
சிக்சர் சித்து என செல்லமாக அழைக்கப்பட்டவர், இன்று தன் வார்த்தைகளில் சிக்சர் அடித்துக் கொண்டு இருக்கிறார். இவர் பேச ஆரம்பித்தால் கண் கொட்டாமல் கேட்க தோன்றும். இவரின் பேச்சு Informative வாக இல்லா விட்டாலும் உணர்ச்சி மிகுந்தாக இருக்கும். இவரின் பேச்சில் தேசபக்தி(கிரிக்கெட்டில்) பொங்கி வழியும். இந்திய அணியை குறை கூறுவர்களை கிழி கிழி என கிழிப்பதில் இவரை மிஞ்வதற்கு ஆள் இல்லை. இவரின் கோபமும் பிரசித்தம்.

இவர்களில் நான் தேர்ந்து எடுத்தது திரு. அப்துல் கலாம் அவர்களை. இந்த போட்டியின் தலைப்புக்கு இவரை தேர்ந்து எடுப்பது தான் சரியாக இருக்கும். இதில் திரு. கலாம் அவர்கள் வெற்றி பெற்றால் அவரின் மணி மகுடத்தில் மேலும் ஒரு சிறகு. அவ்வளவு தான்.

பின் குறிப்பு:
விருப்பம் உள்ளவர்கள், இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். அந்த போட்டிக்கு போக - MTV இன் யூத் ஐகான்-2006

25 comments:

Geetha Sambasivam said...

எதிலே, புரியலியே? சிவா? என்ன ஆச்சு? ஆஃபீஸுலே நிஜமான வேலை பார்த்ததிலே ஏதோ ஆயிடுச்சுனு நினைக்கிறேன். இந்தப் பதிவுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை.

நாகை சிவா said...

என்ங்க கீதா! உங்களுக்கு என்ன புரியவில்லை.
இந்த பதிவு எதுக்கு கேட்கின்றீர்களா. M TVஒரு Music Channel இருக்குங்க. அதில் பெரும்பாலும் ஆங்கில பாடல்கள் போடுவார்கள். அந்த M TVபார்க்குற பழக்கத்தை எல்லாம் கல்லூரி காலத்தோடு விட்டாச்சுங்க. நம்ம வவ்வாலும் மணியனும் தான் இது மாதிரி ஒரு போட்டி அந்த சேனல் நடத்துவதாக சொன்னார்கள். சரி, நம்ம கலாமையும் ஒரு வேட்பாளராக அறிவித்து உள்ளார்களே என்று சென்று பார்த்தேன். அப்படியே என் ஒட்டையும் பதிவு செய்து விட்டு வந்தேன். சரி, நம்ம சக வலைபதிவாளர்களையும் ஒட்டு போட சொல்லாமே என்பதால் தான் இப்படி ஒரு பதிவு. என்ன காரணம் என்று புரியவில்லை, உங்களை தவிர வேறு எவரும் அவர்களின் கருத்தை இங்கு பதியவில்லை.

வவ்வால் said...

நன்றி நாகை சிவா!

நான் திரு.அப்துல்கலாம் பற்றி பதிவு போட்டபிறகு தான் இந்த M.tv . விளம்ப்பரம் பார்த்தேன் பின்னர் அதையே பின்னூட்டமாக போட்டேன்,தனியாகவே ஒரு பதிவாக போட்டு இருக்கலாம். இப்போ தானே பதிவு போட்டோம்னு விட்டுவிட்டேன் ,நீங்கள் தனிப்பதிவாக போட்டமைக்கு நன்றி. மணியன் அவர்களும் வாக்குபோட்டுள்ளார்கள் மேற்கொண்டு வேறு யாரும் பதில் அளிக்கவில்லை.

நீங்கள் கூட வெறும் M.TV யூத் ஐகான் - 2006 என்று வருவதால் மக்கள் சரியாக கவனிக்கவில்லை போலும் தலைப்பில் திரு கலாம் பெயரைக்கொண்டுவாருங்கள்.கூடுதல் ரெஸ்பான்ஸ் கிடைக்கலாம்!

Chellamuthu Kuppusamy said...

சித்து மாதிரி ஆளுங்களை எல்லாம் யூத்னு சொல்லிட்டீங்களே?

பொன்ஸ்~~Poorna said...

அபிஜீத் சாவந்தும் ஜான் அபிரகாம் மாதிரிதான். இந்தியன் ஐடியல் என்று சமீபத்தில் சோனியோ Zee-யோ ஒரு போட்டி நடத்தினார்கள். நமது விஜய் டீவியின் "நீங்களும் பாடலாம்" மாதிரி. அதில் பல சுற்றுகள் தாண்டி வென்றவர் இவர்.

இப்போ இன்னும் பாப்புலர் ஆகி ஆல்பம் எல்லாம் செய்கிறார். கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை விட இவரைத் தூக்கி வைக்க வேறு எந்தக் காரணமும் இல்லை.

என் வோட்டு யாருக்கு என்று யோசித்துச் சொல்கிறேன். கலாம் நல்ல தலைவர் தான்.. ஆனால், என்னோட எவர்க்ரீன் favourite சித்துவை விட்டுக் கொடுக்க முடியுமா?!!

நாகை சிவா said...

வவ்வால்!
நீங்க கூறியது போல தலைப்பை மாற்றி உள்ளேன். பார்க்கலாம்.
அப்புறம் உங்கள் பதிவில் பண்ணவும். அநாகரீக பின்னூட்டங்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நாகை சிவா said...

என்னங்க குப்பு, நான் எப்ப சித்துவை யூத் என்று கூறினேன். நல்லா படிங்க அப்பு.
பொன்ஸின் எவர்க்கீரின் பேவரைட் பத்தி தப்பா சொல்லி இருக்கீங்க. யானையை உங்க மேல ஏவி விட போறாங்க. பாத்து பத்திரமாக இருங்க.

நாகை சிவா said...

பொன்ஸ், நீங்க சொன்ன விசயம் எல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும். யூத் ஐகான் ஆகும் அளவுக்கு ஏதும் செய்தார என்பதற்காக கேட்டேன். எனினும் தகவலுக்கு நன்றி.
உங்க எவர்க்கீரின் பேவரைட் சித்துவை பற்றி என் கருத்துகளை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே???
//என் வோட்டு யாருக்கு என்று யோசித்துச் சொல்கிறேன்.//
அது எல்லாம் வேற செய்வீர்க்களா! எப்படிங்க எனக்கும் கொஞ்சம் சொல்லி குடுங்களேன். நம்ம பசங்க சொல்லுவாங்க, யோசிப்பது எல்லாம் மூளை உள்ளவர்கள் செய்வது என்று. அது தான் கேட்டேன்.

வவ்வால் said...

தலைப்பை மாத்தின பிறகு தான் குப்புசாமி, பொன்ஸ் போன்ற பிரபலம் எல்லம் வராங்க பாருங்க நாகை சிவா :-))

பொன்ஸ் சித்து தான் உங்க எவெர்கிரீன் பேவரைட்டா :-))

இந்தியன் பேட்ஸ் எல்லாம் சீட்டுக்கட்டு, சைக்கிள் ஸ்டாண்ட் போலனு சொல்லுவார் ,அவர் விளையாண்ட காலத்தில அவர் எப்படினு மறந்துட்டு :-))

காவஸ்கர்,சித்து, ரவி ஷாஸ்த்ரி எல்லாம் சிலதை பேசும் போது எரிச்சலாகவும்,சிரிப்பாவும் வரும்

some examples from their commentry and truth about the real personality:

sidhu: when the pitch is not conducive for stroke making just hang in there and take some blow on your body , and wait for right time(like this condition normally sidhu used to throw away his wicket )

gavaskar:just stick to basics and rotate the strike , keep the score board ticking( he made 36 not out in 60 full overs :-)) )

shastri: running between the wicket is important and maintaine a good run rate( he himself a poor runner between the wickt and used to consume more balls :-))

பொன்ஸ்~~Poorna said...

//நம்ம பசங்க சொல்லுவாங்க, யோசிப்பது எல்லாம் மூளை உள்ளவர்கள் செய்வது என்று. அது தான் கேட்டேன். //
நாகை(நக்கல்) சிவா, உங்க நண்பர்களுக்கு இல்லைன்னா? யாருக்குமே இருக்காதா?!! சரி சரி.. ரொம்ப துருவாதீங்க.. ஏதோ இருக்கும் கொஞ்சம் நஞ்சம் மூளைல யாரை எடுக்கலாம்னு யோசிப்போம்..

குப்பு சொல்வது போல், யூத் ஐகான் போட்டிக்கு கொஞ்சம் யூத்தா நிற்க வச்சிருக்கலாம்.. (இப்போ நானெல்லாம் இல்லை ? ம்ஹும்.. யாருக்குத் தெரியுது நம்ம பெருமை ?:( )

நாகை சிவா said...

இல்லைங்க வவ்வால்!
குப்பு வழக்கம் போல நம் வலைப்பக்கத்துக்கு வந்து இருக்கார்(தலைப்பை மாற்றுவதற்கு முன்பே). பொன்ஸ் போன்ற பிரபலங்கள் தான் தலைப்பை மாற்றிய பிறகு வருகின்றார்க்கள்.

நாகை சிவா said...

Pons!
Time akiduchu. Nallaiku pathil solluren

பொன்ஸ்~~Poorna said...

டைம் எடுத்து யோசிச்சு எல்லாம் பதில் போடப் போறீங்களா?!!! புலி பதுங்குவது...?!!!

வவ்வால், புள்ளிவிவரத்தோட பாயாதீங்க. சித்து மாதிரி கமென்டேடர் ஆகணும்னா சொல்லிகிட்டு இருக்கேன்? அதோட இல்லாம, ஒரு தப்பைப் பண்ணினவங்களால தான் அது மாதிரி செய்யக் கூடாதுன்னு சரியான அட்வைஸ் கொடுக்க முடியும் ;)(மாமியார் உடைச்சா..!!:) )

அப்புறம், இந்த தலைப்பு மாற்றிய விவகாரம் இப்போ தான் பார்த்தேன். உண்மையாவே MTV தலைப்புக்கு இந்தப் பக்கம் வரணும்னு தோணலை.. சம்பந்தமில்லாத தலைப்புன்னு விட்டுட்டேன். கலாமைக் கூட அப்படி விட்டிருப்பேன்.. ஆனா ஓட்டுன்னு சொன்னதும், சரி நம்ம ஓட்டையும் ஒருத்தர் கேட்கிறாங்களேன்னு தான் வந்தேன் :)

சிந்து said...

படித்தேன் சுவைத்தேன் நன்று தொடரட்டும் வாழ்த்துக்கள்.

ILA (a) இளா said...

போட்டாச்சு போட்டாச்சு.(வோட்டுதான்) நாட்டு நிலைமைய நல்லா யோசிக்கிறீங்க

ILA (a) இளா said...

//ம்ஹும்.. யாருக்குத் தெரியுது நம்ம பெருமை ?:( ) //
தெரிஞ்சுதாங்க வோட்டு போட போனேன். உங்க பேர் அங்க இல்லியே.

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்!

ஹெ .. ஹெ .. ஹெ அவங்க எல்லாம் ட்வ் கு உள்ள இருந்து பேசுவாங்க நாங்க எல்லாம் ட்வ் பொட்டிகு வெளியில இருந்து புள்ளி விவரம் பேசுற புலிகள் அதான் கொஞ்சம் எடுத்துவிட்டேன்.

M.tv யா என்று பார்த்திட்டு சிலர் வராமா போய்டுவாங்கனு நான் சொன்னா போலவே நடந்து இருக்கே, நான் எப்படி பட்ட தீர்க்கதரிசி பாருங்க :-)) (இதுக்கு யாராவது மாலை மரியாதை எல்லாம் பண்ணனும்னு அவசியம் இல்லை சும்மா தன்னடக்கதோட சொல்லிகிறேன்!)

உங்களுக்கு ஓட்டு போடும் எண்ணம் இருக்கா ? இன்னும் ஓட்டுபோடுற வயசே வரலைனு சொல்விங்கனு பார்த்தேன் :-))

நாகை சிவா said...

//உங்க நண்பர்களுக்கு இல்லைன்னா? யாருக்குமே இருக்காதா?!! //
என்னங்க பண்ணுறது பொன்ஸ், நம்ம சேர்க்கை எல்லாம் அப்படி தான் இருக்குது. ரொம்ப யோசிகாதீங்க. அவ்வளவு தான் சொல்ல முடியும்.

//நானெல்லாம் இல்லை ? ம்ஹும்.. யாருக்குத் தெரியுது நம்ம பெருமை ?:( )//
பாருங்க உங்க பெருமை நம்ம இளாவுக்கு தெரிந்து இருக்கு. நீங்கள் எல்லாம் கலந்துக்குற அளவுக்கு அது ஒன்னும் பெரிய போட்டி இல்லைங்க. (சீ..சீ அந்த பழம் புளிக்கும்)

//டைம் எடுத்து யோசிச்சு எல்லாம் பதில் போடப் போறீங்களா?!!! புலி பதுங்குவது...?!!!//
நமக்கு அந்த பழக்கம் எல்லாம் கிடையாதுங்க. வீட்டுக்கு செல்வதற்கு நேரமானதால் தான் பதில் அளிக்க முடியவில்லை. பதுங்க எல்லாம் இல்லை.

நாகை சிவா said...

வாங்க சிந்து. முதல்முறையாக வந்து உள்ளீர்க்கள். நல்வரவாகட்டும்.
கவிதையில் பொளந்து கட்டுறீங்க. வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

//நாட்டு நிலைமைய நல்லா யோசிக்கிறீங்க //
ஹி..... ஹி...... நன்றிங்க இளா! இதுல உள்குத்து ஏதும் இல்லை என்று எண்ணுகின்றேன்.

நாகை சிவா said...

//மாலை மரியாதை எல்லாம் பண்ணனும்னு அவசியம் இல்லை// என்னங்க வவ்வால் , இப்படி சொல்லீட்டிங்க. நான் வேற 6 அடிக்கு ரோஜா பூ மாலைக்கு வேற ஆர்டர் கொடுத்து விட்டேன். எப்பா அந்த ஆர்டர் போயி முதல்ல கேன்சல் பண்ணுப்பா.
அதுக்குனு இருந்தாலும் இப்புட்டு தன்னடக்கமாக இருக்க கூடாது அப்பு.

மு.கார்த்திகேயன் said...

அப்துல் கலாமை தவிர வேற யாரையும் அந்த பட்டியலில் தேர்ந்தேடுக்க முடியாது.. உண்மையிலே உருப்படியான பதிவு.. முதல் முறை உங்கள் பிளாக்கில்..

மணியன் said...

நன்றி நாகை சிவா, பதிவுக்கும் இணைப்பு கொடுத்ததிற்கும்.
//M.tv யா என்று பார்த்திட்டு சிலர் வராமா போய்டுவாங்கனு நான் சொன்னா போலவே நடந்து இருக்கே, நான் எப்படி பட்ட தீர்க்கதரிசி பாருங்க :-))//

தமிழ்மணத்தில் MTVக்கு அவ்வளவு அலர்ஜியா ?

நாகை சிவா said...

வாங்க கார்த்திகேயன்,
என்னங்க் பண்ணுறது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். சட்டியை நிரப்ப முயற்சி செய்கின்றேன்.உங்க கருத்துக்கு நன்றிங்க.

நாகை சிவா said...

வாங்க மணியன், எதுக்கு நன்றி எல்லாம்.

//தமிழ்மணத்தில் MTVக்கு அவ்வளவு அலர்ஜியா ?//
அது தான் எனக்கும் தெரியவில்லை. நம் மக்கள் யாரும் M TV பார்ப்பது இல்லையா?