Friday, May 26, 2006

தவறு யாரு மீது?

இன்று சட்டபேரவையில் நடந்த நிகழ்வுகள் மிகுந்த வருத்துக்குறியது மற்றும் கண்டிக்கதக்கது. அ.தி.மு.க பலமான எதிர்கட்சி தான், அதுக்காக பலத்தை இப்படி காட்ட கூடாது. திருந்தவே மாட்டார்களா நம் மக்கள் பிரநிதிகள்?????????? தவறு யாரு மீது??

தவறான புள்ளி விபரத்தை தந்த பீட்டர் அல்போன்ஸ் மீதா?
அதை இடைமறித்து பேசிய அன்பழகன் மீதா?
உர்கார்ந்து கொண்டு நல்லா ஜால்ரா அடிக்கீறிங்க என கூறிய ஜெயகுமார் மீதா?
மைண்ட் யுவர் பிசின்ஸ் என கூறிய பீட்டர் அல்போன்ஸ் மீதா?
மைக்கை பிடுங்கி அடித்த கலைராஜன் மீதா?
முதல்வரை நோக்கி பாய்ந்த சேகர் பாபு மீதா?

சே. சே. இவங்க யாரு மீதும் தவறு கிடையாது.........
இவர்கள் அனைவரையும் ஒட்டு போட்டு தேர்ந்து எடுத்து தொகுதிக்கு(தமிழகத்திற்கு) ஏதாவது நண்மை செய்யவார்கள் என எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கின்றோம் பாருங்க, நம்ம மேல தாங்க எல்லா தப்பும்.
தவறு செய்து விட்டோம். தண்டனையாக இவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்து தான் ஆக வேண்டும்.

வல்லமை தாராயோ சிவசக்தி...............

22 comments:

Chellamuthu Kuppusamy said...

செய்தி கேள்விப் பட்டேன் சிவா. ஓட்டுப் போட்ட நமக்குத்தான் அசிங்கமா இருக்கு. அவங்களுக்கு இல்லை.

சிங். செயகுமார். said...

:)

நாகை சிவா said...

உண்மை தான். அசிங்கம்னா என்னு கேட்டாலும் கேட்பார்க்கள்

நாகை சிவா said...

புஷ்வனத்தாரே! என்ன சிரிப்பு வேண்டி கடக்குது உங்களுக்கு! நொந்து போயி இருக்கோம் ஐயா!!!!!!

நாகை சிவா said...

சதயம்.....
நான் அப்படி நினைக்கவில்லை. அவருக்கு போதிய அளவு முதிர்ச்சி உள்ளது. அதற்கும் இதற்கும் சம்ந்தம் இல்லை.
இது மிக குறைவா........

நியோ / neo said...

இன்னும் அம்மாவுக்கு போடறாங்கப்பா ஜிங்ஜக்! வாழ்க! வளர்க! ;)

நாகை சிவா said...

NEO!
:-))))))))

நாகை சிவா said...
This comment has been removed by a blog administrator.
நாகை சிவா said...

போலி காசி!
நீங்க அனுப்பின பின்னாட்டங்களை இங்கு வெளியிட முடியாதற்கு வருந்துகிறேன்.
நீங்க கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. மன்னிக்கவும்.

நாகை சிவா said...
This comment has been removed by a blog administrator.
நாகை சிவா said...

அனாமி ஜெயக்குமார், மன்னிக்கவும். உங்கள் பின்னூட்டங்களையும் வெளியிட முடியாது

Unknown said...

:)))

Chellamuthu Kuppusamy said...

புஸ்பவனத்தார் இங்கே யாருங்க? ஒரு வேளை என்னைத் தான் சொல்றீங்களோன்னு நினைத்தேன்.

நாகை சிவா said...

நன்றி தேவ்!

நாகை சிவா said...

நம்ம சிங். செயகுமார் தாங்க. அவர இப்படியே கூப்பிடு பழகிடுச்சு. இனிமே இப்படி கூப்பிடாமல் இருக்க முயல்கின்றேன்.

VSK said...

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

சென்றமுறை சட்டசபையில், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் உள்ளே வராமலே ஐந்து வருடம் ஓட்டினார்.
அவரது தி.மு.க. தொண்டர்களும், தன்னிச்சையாய் நடந்து கொண்டனர்!

அதே தவறு இந்த அ.தி.மு.கவினராலும் செய்யப்படுவதை உணர்ந்த தலைமை சட்டசபைக்கு வர முடிவு செய்திருப்பது, சிறிது நம்பிக்கையூட்டுகிறது!

தி.மு.க. தலைமையும் அடக்கி வாசித்திருக்கிறர்கள்![தங்களின் சிறுபான்மைப் பலத்தை உணர்ந்து கொண்டு!]

பார்க்கலாம்!

VSK said...

இங்கு நான் சொல்லியதற்கு ஒரு சிறு விளக்கம்!

தி.மு.க.== திருத்தவே முடியாத கழகம்
அ.தி.மு.க.== அறவே திருத்த முடியாத கழகம்

:))

நாகை சிவா said...

S.K.! அருமையாக விளக்கம் கொடுத்து உள்ளீர்க்கள். எங்க ஊர்ல சொல்லுவாங்க, கழகம் பல சமயத்தில் கலகமாக இருக்கின்றது என்று. அது உண்மை தான்.
கடக்கி வாசிப்பது தொடருமா என்பது இன்று தெரியும்.
வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றி.

நாகை சிவா said...

CTP.S
நீங்கள் கேட்டு கொண்டது போல் உங்கள் பின்னூட்டங்களை ப்பளிச் செய்யவில்லை. நீங்க கூறியது உண்மை தான். கண்டிப்பாக ஒரு நாள் அது நிறைவேறும்.
என்னை பற்றிய உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

Anonymous said...

Hi Pal
you are on my radar.I guess there was a miss communication....Here goes my review

Very good post.Feelings of a true partriotic citizen !!.Politicians need a big shift in their attitude.

with best
CT

நாகை சிவா said...

CT!
I am so glad to know, that i am in ur radar. There is no miscommunication.
The attitude of those people will definately change one day.
Again thanks for ur comments.
Can i post ur comment or not???

Anonymous said...

Please Go ahead and post PAL
with best
CT